Jump to content

தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்

 
 

 

p44a_1529451713.jpg‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம்.

‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர்  செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’

‘‘ஏன்?’’

‘‘முரண்பட்ட தீர்ப்பு வந்து, மூன்றாவது நீதிபதிக்கு விவகாரம் போனதும், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நொந்துபோய் விட்டார்கள். ‘இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போகுமோ’ என அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அப்போதுகூட தினகரன் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது எனக் கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன்.’’

p44_1529451733.jpg

‘‘ஆமாம். நீர் சொன்னதைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம்.’’

‘‘தினகரனின் இந்த ரியாக்‌ஷனால், தங்க தமிழ்ச்செல்வன் கடுப்பாகிவிட்டாராம். ‘வழக்கு இழுத்துக்கொண்டே போவதில் இவருக்குத் துளிகூட வருத்தம் இல்லை. தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நமக்கெல்லாம் பதவி வந்துவிடக் கூடாது என்பதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார். அப்படிப் பதவி வந்தால், நம்மில் பலரும் எடப்பாடி பக்கம் போய்விடுவோம் என அவர் பயப்படுகிறார்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கமென்ட் அடித்தார். தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் தினகரன் பேசியபோது, ‘18 பேரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாரே தவிர, தீர்ப்பை அதிகம் கண்டிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களைச் சந்தித்து, ‘நான் வழக்கிலிருந்து வாபஸ் பெறப் போகிறேன்’ என்று அறிவித்தார். அது மட்டுமல்ல... தீர்ப்புக்கு முதல் நாள்தான் ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் மேல் முறையீடு செய்ய மாட்டேன்’ என்று வேறு அவர் சொல்லியிருந்தார். இதெல்லாம் தினகரனை எரிச்சலில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டார் தினகரன்.’’

‘‘அப்போதுதான் வாக்குவாதம் ஏற்பட்டதா?’’

‘‘ஆமாம். ‘நான் ஒன்று சொன்னால், நீங்கள் வேறு ஏதாவது பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள். இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்? எங்கள் அணியில் பிரச்னை இல்லை என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது? தீர்ப்பை விமர்சித்துப் பேசினால் பிரச்னையாகும், ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியாதா?’ என்று தினகரன் கோபமாகக் கேட்டாராம். ‘நீங்கள் விமர்சனம் செய்திருந்தால், நான் ஏன் பேசப்போகிறேன்?’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பதிலுக்குக் கேட்டாராம். ‘வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என ஏன் பேசினீர்கள்?’ என்று தினகரன் கேட்க, உடனே தங்க தமிழ்ச்செல்வன், ‘நீங்கள் ஆர்.கே.நகர்... ஆர்.கே.நகர் என உங்கள் தொகுதிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். எனக்கு ஓட்டு போட்ட ஆண்டிபட்டி மக்களுக்காக நான் பேசக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். ‘நீங்க இப்போ அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ இல்லை. உங்களைத் தகுதிநீக்கம் செய்துட்டாங்க என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க’ என்று குத்தலாகச் சொல்லியிருக்கிறார் தினகரன்.’’

p44aaa_1529451770.jpg

‘‘அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னாராம்?’’

‘‘இரண்டு ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் அவர். ‘ஆரம்பத்தில் உங்கள் பக்கம் 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தோம். முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் கடிதம் கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்னபோது, தோப்பு வெங்கடாசலம் விலகிப் போனார். ‘இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் எம்.எல்.ஏ பதவி போய்விடும்’ என்று எங்கள் எல்லோரையும் எச்சரித்தார். பதவி போய்விடும் என்று தெரிந்தேதான் நாங்கள் அந்தக் கடிதத்தைக் கொடுத்தோம்’ என்று சத்தமாக தினகரனைப் பார்த்துச் சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன்.’’

‘‘அவர் சொன்ன இன்னொரு சம்பவம் என்ன?’’

‘‘ஜக்கையன் விவகாரம்தான் அது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தது 19 பேர். அதன்பின், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் போய் விளக்கம் அளித்து, தகுதிநீக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். அவரைக் குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘நாம யார் பக்கம் இருக்கிறோம் என்பது ரெண்டாவது விஷயம். ஆனால், பதவியில் இருக்கணும். இப்போதைக்கு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து, நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கப் பாருங்க’ என எங்கள் 18 பேரிடமும் ஜக்கையன் மன்றாடினார். அதையெல்லாம் செய்யாமல் தான், பதவியை இழந்து உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று தினகரனிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.’’

‘‘அப்படியானால் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் பக்கமிருந்து விலகுவாரா?’’

‘‘தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரனைப் பிடிக்கவில்லை; தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி ஆகிய இருவரையும் பிடிக்கவில்லை. ‘இவர்கள் போனால் பரவாயில்லை என்ற மனநிலைக்கு தினகரன் வந்துவிட்டார். ஆனால், இன்னும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களையும் தங்க தமிழ்ச்செல்வன் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு போனால் என்ன செய்வது என்பதுதான் தினகரனின் கவலை. அதற்கு ஏற்றார் போல, தங்க தமிழ்ச்செல்வனுடன் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால்தான், தன் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் மக்கள் கருத்து கேட்பது போல தினகரன் பேசிவருகிறார்’ என்கிறார்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘இந்த இருவர்மீது மட்டும் தினகரனுக்கு ஏன் கோபம்?’’

‘‘தினகரன் அணியில் இருக்கும் மற்ற யாரும் பெங்களூரு சிறைக்குத் தனியாகப் போய் சசிகலாவைப் பார்க்க முடியாது. ஆனால், இவர்களால் அது முடியும்!’’

‘‘புரிகிறது. தங்க தமிழ்ச்செல்வன் இனி தனி ரூட்டில் போவாரா?’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடத்துக்கு அவரால் போகமுடியாது. அ.தி.மு.க-வில் பிரச்னை வந்தபோது, பல மாவட்டங்களில் இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகங்கள் எடப்பாடி அணியின் வசம் வந்துவிட்டன. ஆனால், தேனி மாவட்ட அலுவலகம் மட்டும் இன்னமும் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நினைத்த நேரத்தில் செல்போனில் பேச முடிகிற மிகச் சிலரில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர். ‘ஐந்து பேரையாவது சேர்த்துக்கொண்டு வந்துவிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு எடப்பாடி ஆசை காட்டியிருக்கிறார். அதனால்தான், அவர் ஏதேதோ பேசி குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார். தகுதிநீக்க வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அவரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி’ என்று தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘துரோகம் செய்ய மாட்டேன் என்று சசிகலாவிடம் சிறையில் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன். அதை மீற மாட்டேன்’ என தங்க தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.’’

‘‘ஆண்டிபட்டி தொகுதியில் அவர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாரே?’’

p44c_1529451826.jpg

‘‘ஆமாம். கட்சிக்காரர்கள் புடை சூழ, டிராக்டர் வண்டியில் நின்றுகொண்டு பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘நான் வழக்கை வாபஸ் வாங்கி, பதவியை ராஜினாமா செய்யலாமா?’ என அவர் கேட்டதும், பலரும் ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்றனர். ‘சரி, பின்னர் இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘சந்திக்கலாம், சந்திக்கலாம்’ என்றனர். ‘நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் கண்டிப்பதற்காகவே இதைச் செய்கிறேன். வழக்கறிஞர் குழுவிடம் பேசி, இறுதி முடிவு எடுத்த பின்னர், இதேபோல் உங்களிடம் வந்து எனது முடிவைச் சொல்வேன்’ என்று சொல்லி முடித்தார். தங்க தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ‘சுமார் ஒரு வருடமாக என் தொகுதி, எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை, சாலை இல்லை, பல இடங்களில் சரியாக மின்சாரம் இல்லை. தொகுதி மக்கள் வந்து சொல்லும்போது, மனசு வலிக்கிறது. என் தொகுதி மக்களை நினைத்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். இடைத்தேர்தல் வரட்டும் நாங்கள் யார் என்று காட்டுகிறோம்’ என்று நிருபர்களிடம் சொன்னார் அவர். அது மட்டுமல்ல, ‘18 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தித்தால் அனைவரும் வெற்றி பெறுவார்கள்’ என்றும் சொன்னார்.’’

‘‘திவாகரன் சத்தமே காணோமே?’’

‘‘மன்னார்குடியில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய திவாகரன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேருடன் டெல்லி சென்றார். கட்சிப் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காகத்தான் சென்றதாகச் சொல்லப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லியிலேயே முகாமிட்டார் திவாகரன். ஜூன் 16-ம் தேதி சென்னை வந்தார். தன் ஆதரவாளர்களிடம், ‘நாம் நினைத்தது நடக்க ஆரம்பித்திருக்கிறது. தங்க தமிழ்செல்வன் தினகரனுக்கு எதிராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சிலர் அவரைப் பின்தொடர்வார்கள். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் குறித்த வழக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். தினகரனின் கோட்டையில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.’’

p44e_1529451804.jpg

‘‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே?’’

‘‘ஆமாம். ‘என் பதவியைக் காப்பாற்றுங்கள்’ என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் முதல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை செல்லத்துரை உதவி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாருமே சாதகமான பதில் தரவில்லை. இந்நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் ஜூன் 16-ம் தேதி மதுரை வந்தார். அவர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. உயர் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கைகள் செல்லத்துரையைக் கலங்க வைத்துள்ளது. ‘இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நிறைய இழந்துள்ளேன். திடீரென்று கழற்றி விடுகிறார்கள்’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். முன்பு துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு இதே நிலை ஏற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பெரிய வழக்கறிஞரை நியமித்தார். ஆனால், செல்லத்துரைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்யும் நிலையில் இப்போது உயர்கல்வித் துறை இல்லை. ‘எங்களைச் சிக்க வைத்ததற்குத்தான் இப்போது செல்லத்துரை இப்போது அனுபவிக்கிறார்’ என்று சிறையில் இருக்கும் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கூறி வருகிறார்களாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி


p44d_1529451850.jpgdot_1529451872.jpg தமிழக பெண் வி.ஐ.பி ஒருவரின் திடீர் திருமணம், பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதையும்மீறி கைகோத்தனர். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே  மணவாழ்க்கை கசந்துவிட்டதாம். வீட்டுக்கு எதிரே இருந்த தோட்டத்தில் கடந்த வாரம் வாக்கிங் போனபோது, தம்பதிக்குள் காரசார வாக்குவாதம். ஒரு கட்டத்தில் வி.ஐ.பி மனைவி, கணவரைச் சாத்தி எடுத்துவிட்டாராம். புதுக் கணவர், இதுவரை வீடு திரும்பவில்லை. யார் மனசுல யாரோ.

dot_1529451872.jpgகடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கக் காரணமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்து, அவர்களைக் களையெடுத்து வருகிறார் ஸ்டாலின். இப்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பதவிகளில் கைவைக்கப் போகிறாராம். ‘அவர்களின் உறுப்பினர் கார்டையே புதுப்பிக்காமல், விரட்டி விடப் போகிறார்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!

dot_1529451872.jpg18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறார்கள் தினகரன் அணியினர். ‘இந்தத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப் போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த       கே.சுப்பிரமணியத்திடம் இதுபற்றி தினகரன் டீம் பேசியிருக்கிறது.

dot_1529451872.jpgகடந்த வருட எம்.பி.பி.எஸ் அட்மிஷனில், வெளி மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் சிலர், தமிழகத்தில் வசிப்பதாக போலியாக நேட்டிவிட்டி சான்றிதழ் வாங்கி இடம்பிடித்தனர். இது சர்ச்சையாகி, நான்கு மாணவர்கள் சிக்கினர். ஆனால், அதேபோல இந்த வருடமும் நேட்டிவிட்டி சான்றிதழ் கேட்டு தாசில்தார் அலுவலகங்களைச் சில புரோக்கர்கள் வட்டமடித்துவருகிறார்கள்.


மீண்டும் நிற்க முடியாது!

ழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக, சட்ட நிபுணர்கள் சிலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருக் கிறார். ‘‘வழக்கை வாபஸ் பெற்றாலும், இப்போதுள்ள சட்டமன்றத்தின் ஆயுள்காலம் முடியும்வரை நீங்கள் ஏற்கெனவே ஜெயித்த தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது என்று கருதுகிறோம். ஒருவேளை போட்டியிட்டால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கும் இழுக்கும். எனவே, வேறு ஒருவரைத்தான் ஆண்டிபட்டியில் நிறுத்தவேண்டிவரும்’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதைப் பற்றியும் யோசித்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

தினகரனின் வலதுகரமான பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘‘வழக்கை வாபஸ் வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்தால், சபாநாயகர் அவரது வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகிவிடும். சபாநாயகரின் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் சபாநாயகரை ஜெயிக்கவிடக்கூடாது. நீதிமன்றத்தில் ஜெயித்த பிறகு சட்டசபைக்குள் வெற்றிகரமாக நுழையவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார்.

மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விமலா எடுக்கும் முடிவில் இவர்களின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.