• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Ahasthiyan

ஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த #மருத்துவர் #தமிழன் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன்

Recommended Posts

ஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த 
#மருத்துவர் #தமிழன் 
திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் ,
உயரிகாரிகளையும் கண்கலங்கவைத்தார்!

யேர்மனி கம்பர்க் நகரில் பணிபுரியும் இருதய சத்திரசிகிச்சை நிபுணரும் வைத்தியகலாநிதியும், எழுத்தாளருமான திரு உமேஸ் அருணகிரிநாதன். இவர் தனது 12வயதில் இலங்கையைவிட்டு யேர்மனிக்கு வந்துள்ளார்;

தமிழர் பிரச்சனை உலகத்தலைவர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்கு தனது தாயக இடப்பெயர்வும் அதன்வலிகளையும் ஜேர்மானிய அரசுக்கு புத்தக வடிவிலும் , அதை அவர்களையே முன்னிருத்தி எடுத்துச் சொன்ன அந்த அகதியாகி, மருத்துவர் 
பல ஜெர்மனிய உயரதிகாரிகளையும் கண்கலங்க வைத்தார் ,

பாஷை விளங்கவில்லை, ஆனால் அவரின் பேச்சை மிகவும் ரசித்தேன். தெளிவான, கூர்மையான பேச்சு. எத்தனை தடவைகள் வேணுமானாலும் கேட்கலாம்.
13 நிமிடங்கள் எல்லோரும் அமைதியாக கேக்கிறார்கள் 
வாழ்த்துக்கள் சகோதரா.

 • Like 6
 • Thanks 4

Share this post

Link to post
Share on other sites

தமிழனை  வியக்க வைக்கும்,  நெஞ்சம்  உருகிய..... காணொளி.?

Share this post

Link to post
Share on other sites

ஜேர்மனியில் தற்போது  நிலவும் அகதிகள் பிரச்சனைகளுக்கு மத்தியில் இரு பெரும் அரசியல்வாதிகள் எழுந்து நின்று உமேஷ்வரனுக்கு வரவேற்பளித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அகஸ்தியன்! செய்திக்கு நன்றி tw_thumbsup:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

படித்து பட்டம் பெற்றவுடன் 
எதோ தாம்தான் உலகிலேயே யாரும் செய்யாததை 
செய்துமுடிக்க மாதிரி காலுக்கு மேல் கால் போட்டு வாழும் 
யாழ்ப்பாண தமிழர்கள் மத்தியில் இப்படியும் சில 
நல்ல ஜீவன்கள் உதாரணத்துக்கு என்றாலும் இருக்கிறார்கள் 
என்பது மட்டுமே மகிழ்ச்சி! 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

உமேஷ்வரன் அருணகிரிநாதன் , வாழ்த்துக்கள்! தொடருங்கள்

Share this post

Link to post
Share on other sites

எல்லாரும் அவர் நல்லாப் பேசுறார் வல்லவராப் பேசுறார் என்றீங்களே.. அவர் என்னத்தைப் பேசுறார் என்று மட்டும் சொல்லுறீங்களே இல்லையே..???! ?

இது எப்படி இருக்கென்னா.. எங்கடை ஆக்கள்.. வெளிநாட்டில இருந்து ஊருக்குப் போய்.. வேலை வேலை என்று சொல்லுவினம்.. ஆனால் என்ன வேலை என்று சொல்லமாட்டினம். அதுமாதிரிக் கிடக்குது. 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

எல்லைகள் கடந்த, எங்கள் அடுத்த தலைமுறையின் தலைநிமிர்வு

நன்றி,நீங்கள் எம்முடன் இருப்பதற்கும்
வாழ்த்துக்கள், இதுபோல் பல சிகரங்கள் தொடுவதற்கும்.

ஆஞ்சலா மார்கஸ் என்றால் சும்மவில்லை அவர் உலகின் அதிவலிமையான தலைவர், அவர் உங்களுக்காக இருக்கையைவிட்டு எழுவது முழு ஐரோப்பாவும் உங்களுக்காக எழுந்திருப்பது போலாகும்.

Share this post

Link to post
Share on other sites

சொல்லி என்னத்தை செய்ய? 

இவர் முன்னல் இருக்கும் வெள்ளைக்காரா துரைகளே ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து அப்பாவி த‌மிழர்களை அழிக்க காரணமாக இருந்தார்கள். 

Share this post

Link to post
Share on other sites

ஜேர்மன் மொழியில் இருந்தாலும் உரையை முழுமையாகப் பார்த்தேன். மிகவும் தன்னம்பிக்கையுடனும், எதுவித தடுமாற்றமும் இல்லாமலும் வழங்கப்பட்ட வசீகரமான பேச்சு.  தமிழன் என்ற வகையில் பெருமைப்படுகின்றேன்.

இவர் ஜேர்மனிக்கு வந்த வழியும் நான் பிரித்தானியாவுக்கு வந்த வழியும் ஒன்றுதான் என்று நினைக்கின்றேன். ஆபிரிக்க நாடுகளான Togo, Ghana,  Benin, Nigeria ஆகியவை உரையில் வந்தன. நானும் 88 நாட்கள் இந்த நாடுகளில் சுற்றியிருக்கின்றேன்?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

எல்லாரும் அவர் நல்லாப் பேசுறார் வல்லவராப் பேசுறார் என்றீங்களே.. அவர் என்னத்தைப் பேசுறார் என்று மட்டும் சொல்லுறீங்களே இல்லையே..???! ?

இது எப்படி இருக்கென்னா.. எங்கடை ஆக்கள்.. வெளிநாட்டில இருந்து ஊருக்குப் போய்.. வேலை வேலை என்று சொல்லுவினம்.. ஆனால் என்ன வேலை என்று சொல்லமாட்டினம். அதுமாதிரிக் கிடக்குது. 

அவர் பேசியது தமிழில் ......

அனைவருக்கும் வணக்கம். நீங்கள் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்சசி
பிறந்தது  ஐந்து பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பம்
அந்தக்கால நினைவுகள், கோயில் குளங்கள் தாத்தா பாட்டி எனச் சென்று கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஐந்து வயதில் யுத்தம் ஆரம்பமாகியது.
வீட்டை இழந்து நாட்டிலேயே அகதியாகை ஒரு  நாள் ஒரு வீடு என அலைந்து நாடு இரவில் பதுங்கு குழிகளில் உறங்கமுடியாமல் தவித்து இருந்த காலங்கள் என் மனத்தைத் தொட்டுச் செல்கின்றன.

எனது ஆறு வயதில் எனது சகோதரிக்கு ஏற்பட்ட வருத்தம்
யுத்தம் காரணமாக மருத்துவம் இல்லாம இறந்தார்,
எனது பெற்றோர்கள் தனது மற்றைய பிள்ளைகளையும் யுத்தத்திலோ நோயினாலோ இழக்க விரும்பாமல் ....எனது அம்மா என்னைக் கேட்டார் மகனே நீ ஜெர்மனி செல்கின்றாயா என்று.
அதற்கு நான் கேட்டது அங்கு பாடசாலை செல்ல முடியுமா என்பதே அதற்கு அவர் ஆம் என்றதால் நானும் சம்மதித்தேன்.
எனக்குப் பதிமூன்று வயதில் தங்கள் காணியை வீட்டை வித்து ஜெர்மனிக்கு அனுப்பினார்கள். வடக்கிலிருந்து கொழும்பு செல்ல மூன்று நாட்கள். பின்னர் கொழும்பிலே அம்மா சென்று வா மகனே  என்று சொன்னபோது தான் எனக்குப் புரிந்தது அம்மா என்னுடன் வரவில்லை நான் தனியாகத்தான் செல்கின்றேன் என. அழ ஆரம்பித்தேன், அம்மாவின் ஆறுதல் அழுகையைக் கட்டுப்படுத்தவில்லை.
ஆனால் ஏஜென்சிக்காரன் அழுதால் உன்னை ஜெர்மன் கூட்டிச் செல்ல மாட்டேன் என்று பயமுறுத்திய படியால் அழுகையை அடக்கிக் கொண்டேன்.  
ஆபிரிக்க நாடுகள் எல்லாம் சுற்றி தரகர் என்னை இறுதியில் ஸ்பெயின் வழியாக ஜெர்மனிக்கு அழைத்து வந்தார்.குழந்தைகள் காப்பகம் பின்னர் எனது மாமா ஆதரவுடன் கம்பேர்க்கில் பாடசாலை சென்று மொழி படித்து பாடசாலையில் திறமைசாலியாக வளர்ந்தேன்

அப்போது அகதி அந்தஸ்து வழக்கில் நாட்டை விட்டுச் செல்லுமாறு தீர்ப்பு வந்தது. பல மாடிக் கட்டடத்திலிருந்து கிழே குதிக்க முயற்சி செய்யும் நிலையில்...... எனது தாயை நினைத்தேன்.
அன்று அவர் விமான நிலையத்தில் என்னை வழியனுப்பும் பொது கூறிய அந்த மூன்று விடயங்கள்....... மது புகைத்தல் என்பவனற்றைத் தவிர்...... படித்து மறுத்தவராகி என்னை வந்து பார்.

 மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தற்கொலை முயற்சியைக் கைவிட்டுப் பாடசாலை சென்று எனது நிலையைக் கூறினேன்
பாடசாலையில் அனைவரும் எனக்காக உதவினார்கள்
ஆசிரியர் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் இன்றும் எனது கடமைப்பாட்டு உள்ளது
உயர்தரம் கல்வி பயின்று பல்கலைக் கழகம் சென்றேன்.2006  இல் "தனிமையில் தஞ்சம் தேடல்" என்ற புத்தகத்தை எழுதினேன்.அதற்காக பல் தேடல்களை செய்திருந்தேன். எனது நாட்டு மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டும் ன்பதற்காக எழுதினேன்.

2008மருத்துவரானேன்.

அதற்கான சகல ஆதரவையும் எனது வகுப்பு ஆசிரியர் பெற்றோரின் இடத்தில்  இருந்து தந்தார். இன்று வைத்தியராகை உங்கள் முன்னே நிற்கின்றேன்.
இடைக்காலத்தில் சாப்பாட்டுக்கு கடையில் கோப்பை கழுவினேன்.
பெர்கர் கடையில் பெர்கர் வித்தேன் . இருதய நோய் வாய்ப்பட்டவர்களைப் பராமரித்தேன்
எனது அடுத்த நோக்கமாக இருந்தது இறத்தய நிபுணராக வேண்டும் என்பதே
அதையும் சாதித்து இன்று உங்கள் முன் நிற்கின்றே.
வாழ்க்கையில் முன்னேற நாங்கள் சிலவேளைகளில் எங்களை உயர்ந்தவர்களாக நினைக்க வேண்டும். தேவையான நேரத்தில் தேவையானவர்களுடன் பேச வேண்டும்.
ஒருவருடன் ஒருவர் ஒத்துழைக்க வேண்டும்.
ஆனால் மற்றவர்கள் தன்னைப்பற்றிப் பேச இடம் கொடுக்கலாகாது.
அந்த நேரம் உண்து தோல்விக்கான நேரமாகிவிடும்.

இப்போது வடக்கு ஜெர்மனில் இருந்து தெற்கு ஜெர்மனிக்குச் சென்றுள்ளேன்.
நான் எப்போதும் என்னை மற்றவர்கள் பாலியல் ரீதியாகவோ   நிற அடிப்படையிலோ இன அடிப்படையிலோ  துன்பறுத்த . அனுமதிப்பதில்லை.

இந்த நாட்டில் என்னை அந்நியனாக நினைப்பதில்லை.
யாரவது என்னை நீ ஒரு அந்நியன் என்று கூறினால் வருந்துவதில்லை.
ஏனென்றால் இது இந்த நாடு எனது புதிய வீடு என்றே நான் நினைக்கின்றேன்.
அப்படி என்னை யாராவது அந்நியனாக நினைத்தால் அதைத் தவறாகவும் நினைப்பதில்லை.
எனது நாட்டில் வெள்ளையர் ஒருவர் தன்னை இலங்கைக்குíயான் என்று கூறிக்கொள்வது எப்படி மற்றவர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகின்றதோ அப்படித்தான் இந்த நாட்டிலும் இருக்கும். ஆனால் அவர்கள் நீ எந்த நாடு என்று கேட்பது உன்னை அந்நியப்படுத்துவதற்கல்ல அவர்களுக்கு அது ஒரு புதினம் அது தான் காரணம். ஒரு வீதத்திற்கு குறைந்தவர்கள் உன்னை அந்நியப்படுத்துவதற்காக அப்படிக் கேட்பார்கள்-இன்னும் இருப்பது முப்பது வருடங்களில் இந்த நிலை மாறிவிடும். இன்று அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் எப்படி அமெரிக்கர்களாக இருக்கின்றானோ அப்படியே ஜெர்மனியிலும் இருக்கும்.
அடுத்து இந்த நாட்டைத் தேடி வருபவர்களுடன் பேச வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
அதை நான் செய்ய விரும்புகின்றேன். என்னைப்போலவே அடுத்து வரும் காலங்களில் அவர்களும் தங்களை நினைத்து பூரிப்படைவார்கள்   
நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன்.

முடிந்தளவில்.... அவசரமாக எழுதியுள்ளேன்.... பிழைகள் இருக்கலாம்.
மன்னித்துக்கொள்ளவும்.

Edited by வாத்தியார்
 • Like 12
 • Thanks 8

Share this post

Link to post
Share on other sites

மொழியாக்கத்திற்கு நன்றி வாத்தியார். 

Share this post

Link to post
Share on other sites

நன்றி வாத்தியார்.

Share this post

Link to post
Share on other sites

வாத்தியார் நீங்க பெயரில் மட்டுமல்ல செயலிலும் வாத்தியார் தான். நன்றி.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, வாத்தியார் said:

நன்றி வாத்தியார். உங்கள் நேரத்தை செலவு செய்து இந்த மொழியாக்கத்தை சுருக்கமாக வழங்கியமைக்கு. ?

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, nedukkalapoovan said:

நன்றி வாத்தியார். உங்கள் நேரத்தை செலவு செய்து இந்த மொழியாக்கத்தை சுருக்கமாக வழங்கியமைக்கு. ?

 நன்றியோடை பக்கெண்டு வெளிக்கிட்டு போறீங்கள்....ஏதாவது நாலு வசனம் சொல்லிப்போட்டு போறது.:cool:

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

இவர் சின்னனில் தான்  எப்படி குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அகதியாக்க   பட்டதை  தான் சொல்கிறார் ...எங்கட பிரச்சனையைப்  பற்றி எங்கே கதைக்கிறார் (யார் நான் நெடுக்கரின் அக்கா )

 • Haha 3

Share this post

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் உமேஷ்வரன் , நன்றி வாத்தியார் ....!

பகிர்வுக்கு நன்றி அகஸ்தியன்......! tw_blush:

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, ரதி said:

இவர் சின்னனில் தான்  எப்படி குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அகதியாக்க   பட்டதை  தான் சொல்கிறார் ...எங்கட பிரச்சனையைப்  பற்றி எங்கே கதைக்கிறார் (யார் நான் நெடுக்கரின் அக்கா )

இன்றும் சிறீலங்கா / பிரச்சனைகள் எங்கு இருக்கென்று தெரியாதவர்களுக்கு இந்த மேடைப்பேச்சும்  எமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லும் என்றொரு நப்பாசை இருக்கின்றது.

எனக்கு தெரிந்து இவர் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  அகதி விடயத்தை மட்டும் முக்கியமாக கதைப்பார்.  ஆனால் இவர் எங்கும் தமிழர் பிரச்சனை என்று இறுக்கமாக கதைத்ததாகவும் தெரியவில்லை.

அப்படி கதைத்திருந்தாலும் இப்படியான பிரபல்ய மேடைகளுக்கு வந்திருக்கவும் முடியாது.

தானொரு டாக்குத்தர் எண்டும் பாராமல் கழுத்திலை மஞ்சள் நூல் கட்டியிருக்கிறார் பாத்தியளே???? :grin:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்  உமேஷ்வரன் . நன்றி வாத்தியார் .

Share this post

Link to post
Share on other sites
On 6/24/2018 at 3:59 AM, குமாரசாமி said:

 நன்றியோடை பக்கெண்டு வெளிக்கிட்டு போறீங்கள்....ஏதாவது நாலு வசனம் சொல்லிப்போட்டு போறது.:cool:

ஏதாவது குறை கண்டு பிடிச்சிட்டு வருவார் 

வாத்தியாருக்கு நன்றி 

Share this post

Link to post
Share on other sites

வருகின்ற சனிக்கிழமை... திரு.  உமேஷ்வரனின்  பேட்டியை காணத் தவறாதீர்கள். 

Share this post

Link to post
Share on other sites

உங்கடை பிள்ளையள்... எதை, படிக்க விரும்பீனமோ.... அதை, படிக்க விடுங்கோ....   
மருத்துவ  கலாநிதி  (2  x டாக்டர்) திரு. உமேஸ் அருணகிரிநாதன்.

Share this post

Link to post
Share on other sites