Jump to content

ஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த #மருத்துவர் #தமிழன் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது 13 வது வயதில், தாய் நாட்டை விட்டு அகதியாய் தஞ்சம் புகுந்து... 
ஜேர்மனில் வசித்து வரும் ஒரு ஈழத் தமிழனின் இன்றைய நிலை.
திறமைக்கு பாராட்டுகள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியின் இறுதியில்  அவர் தன்னுடைய புத்தகம் ஒன்றை இருவருக்கும் பரிசளிக்கின்றார்.
அந்த புத்தகம் அவரின் வாழ்க்கை வரலாறு. ஜேர்மன் மொழியில் "Der fremde Deutsche" என்று வெளிவந்திருக்கின்றது. தமிழில் "ஜெர்மனிய அந்நியன்" என்று பொருள்படும்.

பல்லாயிரம் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அதிபர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தாலும், அவருக்கு சிகிச்சை அளிப்பது தன்னுடைய தொழில் அறம் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பிரச்சனை பற்றி அவர் வாய்திறப்பதில்லை என்ற கருத்திற்காக இதனை இங்கே எழுதுகின்றேன்.

இந்த புத்தகத்தில் மிகவும் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. தமிழ் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பார்க்கும் போது, இதுவரை யாரும் அவரை பற்றியோ அல்லது அவரின் புத்தகத்தை பற்றியோ ஆராய்ந்து எழுதியதாக தெரியவில்லை.

அவர் ஆண்கள் மீது கொண்ட காதலை பற்றி இந்த புத்தகத்தில் ஆழமாக  பேசப்படுகின்றது. ஆண்கள் மீது மட்டுமே ஈர்ப்புகொண்டவர். அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள், அவமானங்கள் பற்றி பேசுவது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக நான் பார்க்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஊர்க்காவலன்.

செய்திகளின் தலைப்புக்கு அங்கால் போகாமலேயே செய்திகளை அறிய முனைவதும், காணொளிகளில் சில வினாடிகளைப் பார்த்தே முழுமையாக அறிய முனைவதும், வாசிப்புப் பழக்கம் என்பதே தேவையில்லை என்று ஒதுங்குவதுமாக இருந்தால் எப்படி இவரின் சுயசரிதையை படிக்க முடியும்?

 

Link to comment
Share on other sites

411y1UP0-FL._SX331_BO1,204,203,200_.jpg

 

Umeswaran Arunagirinathan: Allein auf der Flucht

Umeswaran Arunagirinathan: Allein auf der Flucht, Buch

உமேஷ்வரன் அருணகிரிநாதன் எழுதிய புத்தகங்கள்

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் உண்மையான மொழிபெயர்ப்புக்கு. bbcதமிழ் நஞ்சை விதைக்குது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலமாக களத்திற்கு வரமுடியவில்லை
அனைவருக்கும் நன்றிகள்
எப்போதுமே எல்லோரும் அவரவர்கள்  அவர்களாகவே இருக்க விரும்புவார்கள்.
அது அவர்களது விருப்பம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.