Jump to content

வடக்கு மாணவி ஆஷிகா பளுதூக்கல் போட்டியில் தேசிய சாதனை


Recommended Posts

வடக்கு மாணவி ஆஷிகா பளுதூக்கல் போட்டியில் தேசிய சாதனை

 

Weiterempfehl(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான  பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 

jaffna_213.jpg

இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம்ப தினமான நேற்றைய தினம் பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்னெச், க்ளீன் அண்ட் ஜேர்க் மற்றும் ஒட்டுமொத்த எடை ஆகியவற்றிலேயே ஆஷிகா புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டினார்.

ஸ்னெச் முறையில் 76 கிலோ கிராம் எடையையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 97 கிலோ கிராம் எடையையும் தூக்கிய ஆஷிகா, மொத்தமாக 173 கிலோ கிராம் எடையைத் தூக்கினார். இதன் மூலம் கடந்த வருடம் (ஸ்னெச் 74 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 96 கி.கி. மொத்தம் 170 கி.கி.) நிலைநாட்டிய தனது சொந்த தேசிய சாதனையை ஆஷிகா புதுப்பித்தார். 

அத்துடன் இந்த மூன்று சாதனைகளும் கனிஷ்ட தேசிய மற்றும் இளையோர் தேசிய பிரிவுகளிலும் புதிய தேசிய சாதனைகளாகப் பதிவாகியுள்ளன.

பெண்களுக்கான 58 கிலோ கிராம் எடைப் பிரிவு பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் பிரதாபன் நிலோஜினி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் (ஸ்னெச் 53 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 67 கி.கி.) மொத்தமாக 120 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

90 கிலோ கிராம் மற்றம் அதற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் வட மாகாணத்தின் மேரி லக்ஷிகா வெண்கலப் பதக்கம் வென்றார். 

இவர் (ஸ்னெச் 44 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 56 கி.கி.) மொத்தமாக 100 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

 

லக்ஷிகா

36087091_10209747254552822_3159277170119

ஆஷிகா

36087979_10209747254752827_2419676040742

நிலோஜினி

35971462_10209747254992833_4001739630910

http://www.virakesari.lk/article/35451

Link to comment
Share on other sites

தேசியமட்டப் பளுதூக்கலில் -வெறும் ஒன்­பது நாள்­க­ளில் -ஆசிகா மற்­றொரு சாதனை!!

image-0-02-03-474176dc67f15bb0b9529cf7b3
 
 
 
 

தேசி­யச் சாத­னை­யொன்­றைப் பதி­வு­செய்து வெறும் ஒன்­பது நாள்­க­ளுக்­குள் மற்­றொரு சாத­னை­யைப் பதி­வு­செய்­தார் வி.ஆசிகா.

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­கல் தொடர் திரு­கோ­ண­ மலை அக்­கி­ர­போதி தேசிய கல்­லூ­ரி­யில் நடை­பெற்று வரு­கின்­றது.

நேற்று நடை­பெற்ற 20 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்­கான பளு­தூக்­க­லில் 63 கிலோ எடைப் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த விஜ­ய­பாஸ்­கர் ஆசிகா 178 கிலோ பளுவை தூக்கி தனது சாத­னையை தானே முறி­ய­டித்து புதிய சாத­னையை பதிவு செய்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

 

இவர் கடந்த 21ஆம் திகதி நடை­பெற்ற திறந்த வய­துப் பிரி­வி­ன­ருக்­கான பளு­தூக்­க­லில் சினெச் முறை­யில் 76 கிலோ பளு கிளின் அன்ட் ஜக் முறை­யில் 97 கிலோ பளு என ஒட்டு மொத்­த­மாக 173 கிலோ பளுவை தூக்கி தேசி­யச் சாதனை படைத்­தி­ருந்­தார்.

ஆனால் நேற்று நடை­பெற்ற இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் சினெச் முறை­யில் 77 கிலோ பளு கிளின் அன்ட் ஜக் முறை­யில் 101 கிலோ பளு என ஒட்­டு­மொத்­தமா 178 கிலோ பளு­வைத் தூக்கி ஒன்­பது நாள்­க­ளுக்­குள் மீண்­டும் புதிய சாத­னை­யைப் பதிவு செய்­தார்.

அத்­து­டன் அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­க­ளில் சிறந்த பளு­தூக்­கல் வீராங்­க­னை­யா­க­வும் தெரி­வா­கி­னார்.

http://newuthayan.com/story/10/தேசியமட்டப்-பளுதூக்கலில்-வெறும்-ஒன்­பது-நாள்­க­ளில்-ஆசிகா-மற்­றொரு-சாதனை.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.