Jump to content

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை

 
 
f5.jpg?itok=FJYkQZjm

செல்வநாயகம் ரவிசாந்

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.

திருவாசக அரண்மனையின் மூலவராகத் சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் கவின் மிளிரக் காட்சி தருகின்றன.

சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கர் தேர் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த தேருக்கு மேலாகச் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தேரின் முன்பாக கருங்கல்லான பெரிய நந்தி அமைந்துள்ளது.22col----2220180618_183145144928006_5972

திருவாசக அரண்மனைக்குச் செல்லும் அனைத்து அடியவர்களதும் கண்கள் முதலில் கண்டு வழிபடும் வகையில் இந்தத் தெய்வீகக் காட்சிகள் அமைந்துள்ளன.

சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இரு மருங்கிலும் மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658 திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.

அதுமாத்திரமன்றி கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி சிவலிங்கங்களுக்கு அடியவர்கள் தங்களின் கரங்களால் அபிஷேகம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் மூன்றடி உயரமும், இரண்டரை அடி விட்டமும் கொண்டவை.

கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு செதுக்கியுள்ளார்.இந்தத் திருப்பணி முழுவதும் நிறைவேறுவதற்குச் சுமார் ஒன்றரை வருட காலங்கள் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரான புருசோத்தமனும் அவரது குழுவினரும் திருவாசக அரண்மனை வளாகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள 21 அடி உயரத்திலான கருங்கற் தேர், சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் சிற்பங்களையும் நிறுவியுள்ளார்.

யாழ்.ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் குழுவினர் திருவாசக அரண்மனைக் கட்டடத்துக்கான நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சிவபூமி-திருவாசக அரண்மனை

அமைவதற்கு வித்திட்ட காரணி

 

 
 

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவெண்ணாமலை கோயில் வீதியில் இடம்பெற்ற திருமுறை மாநாட்டில் பங்கெடுத்துச் சிறப்புரையாற்றிவிட்டுத் திரும்பிய போது சித்தரொருவரைச் சந்தித்தார். அவர் கலாநிதி ஆறு. திருமுருகனை நோக்கி 'ஈழத்தில் திருவாசகத்தைக் காப்பாற்றுங்கள்... திருவாசகம் உங்களைக் காப்பாற்றும்' எனக் கூறினார்.

அத்துடன் திருவாசகத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடங்கு...எல்லாம் நன்றாக நிறைவேறும் எனவும் குறிப்பிட்ட சித்தர் கூறினார். சித்தரின் கூற்றைத் தெய்வ வாக்காகக் கருதிய கலாநிதி ஆறு.திருமுருகனின் எண்ணத்தில் ஒளிபெற்றதே இந்தத் திருவாசக அரண்மனை.

திருவாசக அரண்மனை உருவாகுவதற்கு உதவியோர்

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழும் தெல்லிப்பழையைச் சேர்ந்த இதய வைத்திய நிபுணர் மனமோகன் மற்றும் அவரது பாரியாரான வைத்தியகலாநிதி- சிவகெளரி ஆகியோர் திருவாசக அரண்மனை நிர்மாணிப்பதற்கான நிலத்தையும், நிதியையும் வழங்கியுள்ளனர்.

புலம்பெயர்ந்து அமெரிக்கா நாட்டில் வாழும் அராலியைச் சேர்ந்த பொறியியலாளரான அரவிந்தன் கைலாசபிள்ளை குடும்பத்தினர் கருங்கற் தேர் நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கியுள்ளதுடன், கருங்கல்லில் திருவாசகம் முழுவதையும் பதிப்பிப்பதற்கு இதய வைத்திய நிபுணர் மனமோகனின் பெரும் நிதிப் பங்களிப்புடன் இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் நிதியுதவி மற்றும் கலாநிதி- ஆறு. திருமுருகன் வெளிநாடுகளுக்குச் சொற்பொழிவு ஆற்றுவதற்குச் சென்ற போது கிடைத்த நிதி அன்பளிப்புக்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.

சிவபூமி- திருவாசக அரண்மனைக்குச் சிறப்புச் சேர்த்துள்ள விடயங்கள்

திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிபெயர்ப்புக்கள் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நிலையத்தில் திருவாசகம் தொடர்பாக வெளிவந்த அனைத்து நூல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

திருவாசக ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் தங்கி நின்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கேற்ற விடுதியறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாசக அரண்மனைத் திறப்பு விழாUntitled-1.jpg

யாழ்ப்பாணம் நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமி- திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04 மணிக்குத் திறப்பு விழாக் காண்கிறது. மேலும் இந்த வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை திங்கட்கிழமை காலை-09.45 மணி முதல் முற்பகல-10.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறும்.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் பக்திச் சுவை நனி சொட்டும் வகையில் மாணிக்கவாசக சுவாமிகளால் இயற்றப்பட்டது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு.

இவ்வாறான பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்கள் திருவாசகத்திற்கு வழங்கிவரும் உயர் கெளரவத்திற்குத் தக்க சான்று என்றால் அது மிகையில்லை.

http://www.vaaramanjari.lk/2018/06/24/பத்திகள்/யாழ்ப்பாணத்தில்-சிவபூமி-திருவாசக-அரண்மனை

Link to post
Share on other sites

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

 

 

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என உணர்ச்சி வயப்பட்டு பல தடவைகள் நாங்கள் பேசுவதுண்டு.

உண்மைதான் தமிழனாக நாம் தலைநிமிர பல காரணங்களை பட்டியலிட முடியும். குறிப்பாக உலகின் சில மொழிகளை ஒவ்வாரு அடைமொழி கொடுத்து சிறப்பாக அழைப்பார்கள். உதாரணமாக ஆங்கிலத்தை சர்வதேச மொழி எனவும் பிரெஞ்சு மொழியை காதலின் மொழி எனவும் அழைக்கும் போது தமிழை பக்தியின் மொழி என அழைப்பார்கள்.

அந்த உயர்ந்த இடத்தை தமிழுக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை திருவாசகத்துக்குரியது. அதையும் தாண்டி தமிழ் செம்மொழி அந்தஸ்துப் பெற காரணமானவை தமிழின் நீண்ட பாரம்பரிய தொடர்ச்சியான மரபுசார் இலக்கியங்கள்.

அவற்றுள் இன மத மொழி கடந்து உலகின் அத்தனை மனிதர்களையும் ஈர்த்த பெருமை இரண்டு இலக்கியங்களுக்கு உண்டு. ஒன்று உலகப் பொதுமறை திருக்குறள். மற்றையது தேனினும் இனிய திருவாசகம். திருவாசகச் சிந்தனைகள் என்பது மதம் கடந்த பக்தியின் மார்க்கத்துக்கு வழி செய்வன.

அதனாலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற பல கிறிஸ்தவ மதகுருமார்கூட ஆராதிக்கும் நூலாக திருவாசகம் திகழ்கின்றது. பல தேவாலயங்களில் திருவாசகப் பாடல்கள் சில பிரார்த்தனையுடன் பாடப்படுவதை இன்றும் காணலாம். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை ஒரு குற்றம் எனக் கருதி கிறிஸ்தவப் பாதிரியாரான போப் அடிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சைவ சமயத்தின் ஒரு நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமை பெரும் சிக்கலை உருவாக்கியது. வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, 'போப் அவர்கள் மொழிபெயர்த்த நூலை முழுமையாக வாசிக்காது தீர்ப்புக் கூற முடியாது' என வழக்கை ஒத்திவைத்தார்.

தீர்ப்பு வழங்கும் நாளில் நீதிமன்றுக்கு வந்த நீதிபதி எல்லோரும் எழுந்து நிற்க நேரே போப் பாதிரியாரிடம் சென்று அவரை வீழ்ந்து வணங்கினார். இப்படி ஒரு நூலைப் படித்து சுவைத்து மொழிபெயர்த்த பின்னரும் சைவ சமயத்துக்கு மதம் மாறாது இருக்கின்றீர் எனின் தாங்களே உண்மை கிறிஸ்தவன் என மெச்சி வழக்கில் இருந்து அவரை விடுவித்தார். இப்படி திருவாசகம் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

தமிழின் இருப்புக்கும் சைவத்தின் நிலைபேறுக்கும் சவாலான காலம் தற்போது நிலவுவதாக பலரும் அச்சப்படுகின்றோம். இந்த அச்சம் எமக்குத் தேவையற்றது. இயற்கை நீதியையும் நியதியையும் புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்களுக்கு இவ் அச்சம் ஒருபோதும் வருவதில்லை. காரணம் காலம் என்பது மிகப்பெரும் நீதிபதி. அது தக்க தீர்மானங்களை அவ்வப்போது எடுத்துக் கொள்ளும். அதன் தீர்மானத்தின் வழி ஒரு விடயத்தை தலைமுறை கடந்தும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டால் அந்த விடயத்தை எவர் நினைத்தாலும் எத்தகைய பலம் கொண்டும் அழித்து விட முடியாது.

இவ்வாறு காலம் பாதுகாத்த விடயங்கள் பலவுண்டு. தமிழ்மொழி என்பது காலம் பாதுகாத்த அரும் பொக்கிசம். அல்லாது போனால் காலத்துக்கு காலம் நடைபெற்ற அந்நியர்களின் படையெடுப்பால் தொடர் பயன்பாடற்றுப் போன தமிழ் மொழியும் அடக்கி அமுக்கப்பட்ட சைவநெறியும் மீண்டும் முனைப்புப் பெற்று இன்னும் பல்வகைச் சிறப்போடும் தனித்துவத்தோடும் இன்று வரை உலகப் பரப்பு எங்கணும் வியாபித்திருக்காது. ஒரு கணம் சிந்தியுங்கள்.

உலகத்தின் ஆதிக்க சக்தியாக கருதப்படும் கிறிஸ்தவ மதத்தின் பிதாமகர் யேசு போதித்த மார்க்கம் இன்று வரை உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால் யேசு பேசிய அவரது தாய்மொழி 'ஹிப்ரு' இன்று உலகில் வழக்கத்தில் இல்லை. ஏன் தேவபாசையாக உயர் அந்தஸ்த்தில் வைத்து போற்றப்பட்ட வடமொழி சமஸ்கிருதம் இன்று வெறுமனே வழிபாட்டுக்குரிய மொழியாக மட்டுமே இருக்கின்றது.

பேச்சு வழக்கிழந்து போகின்றது. அறிவியில் சிந்தனைகளின் ஆரம்ப ஊற்றாக இருந்த இலத்தீன் மொழி இன்று தன் பலத்தை ஆங்கில மேலாதிக்கத்தால் தொலைத்திருக்கின்றது. இப்படி ஒரு காலத்தில் உலகையாண்ட பல மொழிகள் காணாமல் போன போகின்ற வரலாறுகளை ஞாபகப்படுத்தமுடியும். ஆனால் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் காலம் கடந்தும் இன்றும் காலவோட்டத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு இயல் இசை நாடகம் எனும் முத்தமிழோடு இன்று அறிவியல் தமிழையும் இணைத்துக்கொண்டு இணையமொழியாக என்றும் இளைய மொழியாக தன் இருப்பை உறுதிசெய்துள்ளது.

இன்னும் ஒரு கோணத்தில் சிந்தித்தால் அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆகும். அதற்குப் பின்பே நூல்கள் அச்சு வாகனம் ஏறின. இருந்தும் தமிழின் நீண்ட தொடர்ச்சியான இலக்கியப் பாரம்பரியமிக்க நூல்கள் சற்று சிதைந்து தொலைந்தாலும் கணிசமானளவு காலம் கடந்தும் எங்கள் கைகளுக்கு கிடைத்திருக்கின்றது என்றால் அது காலம் நம் தமிழை காத்ததன்மையினால் அல்லவா? எனவே காலம் தமிழைப் பாதுகாக்கும் தீர்மானத்தை எப்போதோ எடுத்துவிட்டது. அந்த தீர்மானத்தை அது ஒருபோதும் ரத்துச் செய்யாது.

கைவிடவும் மாட்டாது. மாறாக தீர்மானத்தை வலுவாக்கும் காரணிகளை, விடயங்களை தன் இயற்கை வல்லமை கொண்டு தன்னால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் வழி காலத்துக்கு காலம் ஆற்றியவண்ணமிருக்கும். அப்படி காலத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவரான கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் சிந்தனையில் செல்லும் திசையாவும் வெல்லும் அவரது சொல்லுக்கு கட்டுப்படும் கொடைவள்ளல்களின் காருண்யத்தில் காலம் தீர்மானித்த ஒரு விடயம் தான் நாவற்குழி திருவாசக அரண்மனை.

அதனையும் நாவற்குழியில் அமைக்கவேண்டும் என காலம் தீர்மானித்த சூட்சுமம் சற்று ஆழமாகச் சிந்திப்பின் மனதுக்கு ஆறுதல் தரும். யாழ்பாணத்தின் நுழைவாயிலில் நுழைய 'எத்தனிப்பவர்களுக்கும்' உள்வருவோருக்கும் யாழ்ப்பாணம் தமிழின் நிலம் சைவத்தின் தேட்டம் என்பதை உணர்த்தும் காலச் சின்னமாக திருவாசக அரண்மனை என்றும் நிலைக்கும். மதம் கடந்து நாம் தமிழர்கள் என தலைநிமிர வைக்கும் மையப்புள்ளியாக திருவாசகம் எம்மை இயக்கட்டும்.

தமிழர்களாய் நாம் ஒற்றுமைப்பட வேண்டிய காலத்தில் பல்வேறு அடிப்படைகளில் நாம் சிதறுண்டு போகாதிருக்க காலம் நமக்கு காட்டும் சகுனமாக திருவாசக அரண்மனை திகழ்கின்றது. எனவே காலத்தீர்மானத்தை கவனம்கொள்வோமாக..

ரத்னசிங்கம் சர்வேஸ்வரா

Image0

Image1

Image2

https://www.ibctamil.com/srilanka/80/102328

 

 

 

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட -திரு­வா­சக அரண்­மனை!!

20180624_163529-750x430.jpg
 
 

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.

விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை கொண்ட, 11 மொழி­க­ளில் மொழி பெயர்க்­கப்­பட்ட திரு­வா­ச­கப் பாடல்­களை உள்­ள­டக்­கிய அரண்­மனை விருந்­தி­னர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டது.

வாச­கம் பொறிக்­கப்­பட்ட அர­ணின் ஒவ்­வொரு தூண்­க­ளின் இடை வெளி­யி­லும் நான்கு சிவ­லிங்­கம் மற்­றும் நான்கு மணி­கள் வீதம் 108 சிவ­லிங்­க­மும் 108 மணி­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தட்­சணா மூர்த்­திக்கு அமைக்­கப்­பட்ட ஆல­யத்­தின் வழி­பாட்டை தொடர்ந்து 21 அடி­யில் தங்க முலாம் பூசப்­பட்ட பாம்­புச் சிவ­லிங்­கம் இருக்­கும், கருங்­கல்­லில் அமைக்­கப்­பட்ட தேர் திறந்து வைக்­கப்­பட்­டது.

 

அரண்­மனை உரு­வாக்­கு­வ­தற்கு பல­வ­ழி­க­ளும் பாடு­பட்ட சிற்­பக்­க­லை­ஞர், கட்­ட­டக் கலை­ஞர், செப்பு வேலை கலை­ஞர், கருங்­கல் வேலைப்­பா­டுக் கலை­ஞர்­கள் பொன்­னாடை போர்த்தி பதக்­கம் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.

கருங்­கற்­க­ளால் பொறிக்­கப்­கப்­பட்ட எழுத்து வேலை­களை செய்­த­வர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் பெயர்­களை கருங்­கல்­லில் பெயர் பொறிக்­கும் இளை­ஞன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. திரு­வா­சக அரண்­மனை நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நூலை சிவ­பூமி அறக்­கட்­ட­ளை­யின் பொரு­ளா­ளர் குக­தா­சன் வழங்கி வைக்க நல்லை ஆதீன முதல்­வர் பெற்­றுக்­கொண்­டார்.

நிகழ்­வில் விருந்­தி­னர்­க­ளாக ஆஸ்­தி­ரே­லியா மருத்­துவ நிபு­ணர் கலா­நிதி மன­மோ­கன் மருத்­துவ கலா­நிதி சிவ­கௌரி தம்­ப­தி­யி­னர், கொழும்பு மனித நேய அறக்­கட்­டளை தலை­வர் அபி­ராமி கயி­லா­ச­பிள்ளை, கம்­ப­வா­ரிதி இ.ஜெய­ராஜ், சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக் கழக பேரா­சி­யர் தி.பால­சந்­தர் தேசி­கர் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

20180624_160436-300x169.jpg

http://newuthayan.com/story/10/நாவற்­கு­ழி­யில்-கருங்­கற்­க­ளால்-அமைக்­கப்­பட்ட-திரு­வா­சக-அரண்­மனை.html

Edited by நவீனன்
Link to post
Share on other sites
 • 3 weeks later...

 

புதுப்பொலிவுடன் சிவபூமி திருவாசக அரண்மனை திறப்பு விழா!! | நாவற்குழி யாழ்ப்பாணம்

Link to post
Share on other sites

திருவாசக அரண்மனை 

 

கடவுளால் அமைக்கப்பட்டதொரு கற்கோயில்.

THIRU-3.jpg?resize=800%2C534

 

வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து – என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்று திருவாசகத்தின் பெருமை பற்றிப் பாடியிருக்கிறார் வள்ளலார்.

ஆங்கில அறிஞர் G.U . போப்பின் ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப்பை மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது.தனது முதுமைக் காலத்தில் பிரித்தனியாவுக்குத் திரும்பிச் சென்ற போப் தனது நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது திருவாசகத்தைப் பற்றியும் விவரித்திருக்கிறார்.திருவாசகத்தின் பால் கவரப்பட்ட அவரது நண்பரே திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும் என போப்பை ஊக்குவித்தவர். ஆனாலும் முதலில் போப் அதற்கு உடன்படவில்லை. “அது பாரிய பணியென்றும், நீண்ட காலமாகலாம். அதுவரை நான் உயிரோடு இருப்பேனோ! என்று எனக்குத் தெரியாது என்று கூறி” – தனது முதுமையையும், தள்ளாமையையும் காரணம் காட்டி மறுத்திருக்கிறார். ஆனால் அவரது நண்பர் விடவில்லை. “ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொண்டால் போதும். உற்சாகம் வந்துவிடும். முதுமை காணாமற் போய்விடும்.வாழ்வு நீண்டுவிடும்.இதை அற்புதமாய் செய்து முடிக்க உன்னால்தான் முடியும். அதற்குரிய பக்குவம் உன்னிடம் உண்டு.நிட்சயம் அந்தப் பணியை நிறைவேற்றுவாய்” – என்று சொல்லிக் கொடுத்த ஊக்கத்தால் போப் அவர்கள் தனது எண்பதாவது வயதில் அப் பணியை நிறைவேற்றி இருக்கிறார். இவர் 1837இல் தமிழைப் படிக்கத் தொடங்கியவர் 1900 இல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “என்னுள் இருக்கின்ற ஆழமான உணர்ச்சிகளே இத்தகைய இலக்கியப் பணிகளை எனக்கு நெருக்கமடையச் செய்திருக்கின்றன” என்று குறிப்பிட்ட போப் அவர்கள் – தான் இவ்வுலகை விட்டுச் சென்ற 88 வயதில் 1908 இற்கு முன்னர் அவர் எழுதிய குறிப்பொன்றில் – “ எனது கல்லறையை எழுப்ப செலவாகின்ற தொகையில் ஒரு பகுதியை தமிழரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். அத்துடன் எனது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்” என்ற குறிப்பும் இடம்பெற வேண்டும்” – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி உலகறிந்த திருவாசகத்திற்கு யாழில் ஒரு அரண்மனையை அமைத்திருக்கின்றனர் சைவர்கள். “பல எலிகள் ஒன்று சேர்ந்தால் புற்றெடுக்காது” – என்ற வாசகத்தைப் பொய்ப்பிக்கின்ற வகையில் உலகளாவிய ரீதியில் வாழுகின்ற பல சைவத் தமிழ் பெருமக்கள் ஒன்றிணைந்து இக் கைங்கிரியத்தைச் செய்து முடித்திருக்கின்றனர். அதை முன்னின்று நடத்திச் சென்ற செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனை நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் சந்தித்தேன்.சிவபூமி அறக்கட்டளையினூடாக இன்னொரு பணியையும் முன்னெடுத்திருக்கிறார் அவர்.திருவாசக அரண்மனை என்ற முன்னெடுப்பு ஒரு காலத்தின் கட்டாயம் என்பது பல தமிழ் இலக்கியவாதிகளுடைய கருத்தாக அமைகிறது.

வணக்கம். வழமையாக இது போன்ற கைங்கரியங்கள் “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்ற திருவாசக அடிகளின் உட் கருத்தை அடியொற்றியே நடைபெறுவதா கத்தான் நான் அறிந்திருக்கிறேன்.எனவே இத் திருவாசக அரண்மனையைக் கட்ட வேண்டும் என்ற உந்து சக்திக்குப் பின்புலமாக என்ன உண்டு?என்ன நடைபெற்றது? இறை காட்சி கொடுத்துச் சொன்னதாக… ஏதாவது சம்பவம் இடம் பெற்றதா?

THIRU-1.jpg?resize=800%2C534

ஆம்.அது போன்ற ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.2016 இல் தமிழ் நாட்டு ஓதுவார் சங்கத்தால் நடத்தப்பட்ட திருமந்திர மாநாட்டில் சிறப்புரையாற்றச் சென்றிருந்தேன்.திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு வீதியிலே உள்ள மண்டபத்தில் இரண்டு நாட்களாக அம்மாநாடு நடைபெற்றது.இரண்டு நாட்களும் நான் உரையாற்றினேன்.இரண்டாவது நாள் நான் உரையாற்றிவிட்டு உணவுக்காக வெளியே வந்தவேளை அங்கு காணப்பட்ட படிகளில் ஒன்றில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.அவர் என்னைச் சைகை காட்டி அழைத்தார்.அழுக்கு வேட்டி, நீர் காணாத சரீரம் என அவர் புறத்தோற்றம் என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது.இருந்தும் என்னை மீறிய ஒரு சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு அவர் அருகே சென்று உட்கார்ந்து கொண்டேன்.திருவாசகத்தைப் பற்றியும், திருமந்திரத்தைப் பற்றியும் பேசத்தொடங்கினார். நான் அன்று அங்கு பேசிய வரிகளைச் சொல்லி மீதி வரிகளையும் தான் சொல்லி, சைவத் தமிழர்களின் போற்றத் தக்க பொக்கிஷங்களில் முதன்மையானது திருவாசகம் என்றும் குறிப்பாக ஈழத் தமிழர் திருவாசகத்தை நேசிப்பது தனக்கு மிக மகிழ்சியைத் தருகிறதுஎன்றும் அத்துடன், “நான் இன்னொன்றையும் கேள்விபட்டிருக்கிறேன். அங்கோ பாடசாலைகளிலே சிவபுராணத்தைப் பாடுகின்றனராம். கோயில்களிலோ திருவாசக முற்றோதல் நிழ்கிறதாம்.எழுத்தறிவில்லாத காலத்திலேயே பாமரமக்கள் கேள்வி ஞானத்தினால் திருவாசகத்தைக் கற்றுச் சிறப்புறப்பாடி வந்திருக்கின்றனராம். ஒருவரின் மரண வீட்டிலும் திருப்பொற் சுண்ணம் எனும் திருவாசகத் தேனைப் பாடியே ஈமக்கிரியைகள் நடைபெறுகின்றனவாம்.எனவே யாழ்ப்பாணம் ஒரு புண்ணிய பூமி ” என்றும் சொன்னார்.அவற்றைக் கேட்டதும் என் மெய்சிலிர்த்தது.

அத்துடன் அவர் விடவில்லை. திருவாசகம் ஒரு தத்துவவியல் என்றும் மேலை நாட்டவர் தற்போது மேலை நாட்டுத் தத்துவவியல் என்றும் தென் கிழக்குத் தேசத் தத்துவவியல் என்றும் இரண்டாகப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால் தத்துவத்திற்குக் கடவுளையும், தத்துவத்திற்கு வார்த்தைகளையும் சொன்ன ஒரு உயர்ந்த சமயம் சைவம். எனவே சைவசமயத்தில் ஏராளமான தத்துவ நூல்கள் உண்டு. அவற்றுள் திருவாசகம் ஒரு ஒப்பற்ற தத்துவ நூல். எனவே இந்தத் திருவாசகத்தை இலங்கை மண்ணிலே அழியாது காப்பாற்ற வேண்டும்.இதுவரை காலமும் அழியாது பாதுகாத்துவரும் திருவாசகத்தை அடுத்த சந்ததிக்குக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம் உண்டு.எனவே அதற்காகச் சில காரியங்களை நீ செய்ய வேண்டும் என்று அந்தப் பெரியவர் சொன்னார். உடனே அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.அழியாது அவற்றைக் பாதுகாக்க வேண்டும் என்றார்.உடனே நான் சொன்னேன் “யாழ்ப்பாணத்தில் இரண்டு பெரியவர்கள் திருவாசகத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.பலர் அதனை அச்சில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார்கள்- என்றேன். அதற்கு அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் “ நான் நூல் பதிப்பதைச் சொல்லவில்லை.மன்னர்கள் பல முயற்சிகளைச் செய்தார்கள். கருங்கல்லிலே கோயில்களைக் கட்டினார்கள்.கருங்கல்லிலே எழுத்துக்களையும் பதித்திருக்கிறார்கள்.அது போல திருவாசகத்தைக் கல்லிலே பதிக்க வேண்டும்.இயற்கை அனர்த்தத்தினாலோ பிற இன்னல்களினாலோ திருவாகசம் அழியாது அந்த மண்ணிலே நிலையாக இருக்க வழி செய் என்றார். கருங்கல்லிலே பதிக்கச் சொல்லுகிறீர்களே, யாழ்ப்பாணத்திலே கருங்கற்கள் இல்லையே.என்றேன். அதற்கு அவர் பதில் சொல்கிறபோது ,தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்குத் தஞ்சையிலே கருங்கற்கள் கிடைக்கவில்லை.ஆனால் அவன் 216அடி விமானத்தை மக்கள் இன்றைக்கும் வியக்கின்றவகையில் வேறொரு இடத்திலிருந்து கற்களைக் கொண்டு வந்து கட்டினான்.ராஜராஜனின் அரண்மனை இன்று இல்லை. அவனின் சமாதி இல்லை.ஆனால் அவன் கட்டிய அந்தக் கற்கோவில் இன்றும் அழியாது காப்பாற்றப்பட்டு இருக்கிறது.எனவே திருவாசகத்தைக் கல்லில் பதிக்க முயற்சி செய்.அது காப்பாற்றப்படும்.முயற்சிக்குப் பலனுண்டு – என்றார்.அவரிடம் விடை பெற்ற அந்தக் கணத்திலேயே திருவாகச அரண்மனை என்ற விடயம் என்னுள் முளைவிடத் தொடங்கிவிட்டது.ஆனால் ஊருக்குத் திரும்பிய சமயந்தொட்டுப் பலரிடம் இந்த விடயத்தைச் சொன்னதும் எவரும் இதைக் கட்டி முடிக்கலாம் என்று சொல்லவில்லை.எதிர்மறைக் கருத்துக்களையே சொன்னார்கள். எவரும் ஆர்வம் காட்டவில்லை.“தற்போது பல வழிகளிலே திருவாசகம் இன்ர நெற்றில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.எனவே இது அவசியமற்ற விடயம்” என்று காரணத்தைச் சொன்னார்கள்.இருந்தும் என்னுள் இந்த முயற்சி சுடர்விடத் தொடங்கியது.

THIRU-4.jpg?resize=800%2C534

ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்ற இக் காலகட்டத்தில், பல லட்சங்களை அல்ல, பல கோடி பெறுமதியான பொருட் செலவில் இக் கைங்கரியம் நடைபெற்றிருக்கிறது. பலபேர் ஒத்து நின்றாலும் இதை முதலில் நீங்கள் உங்களது மனக் காட்சியிலே வடித்த பின்னரே நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாக அறிந்தோம்.இது எப்படிச் சாத்தியமாயிற்று?

2015 இல் அவுஸ்திரேலியாவுக்குச் சொற்பொழிவுக்காகச் சென்றபோது, எனது சொற்பொழிவைக் கேட்பதற்கு வருகின்ற வைத்திய கலாநிதி வயிரமுத்து மனமோகன் மற்றும் அவர் பாரியார் திருமதி.சிவகௌரி மனமோகன் ஒரு நாள் என்னைச் சந்தித்தபோது, தங்களுக்குரிய 10 பரப்புக் காணி ஒன்று நாவற்குழி A9 பாதையில் உண்டென்றும் தாம் அதைச் சிவ பூமி அறக்கட்டளைக்கு எழுதப் போவமதாகவும் அதில் தென்னந் தோட்டத்தை அமைத்தால் நலம் என்று சொல்லியிருந்தனர்.ஆம் என்று கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். பின்பு நான் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வந்த வேளை அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் ப. நீலகண்டன் அவர்கள் விபுலானந்தர் விழாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.வைத்திய கலாநிதி வ. மனமோகன் கொடுக்கச் சொன்னதாக உறுதிகளைக் கொண்டு வந்து தந்தார். அவை சிவ பூமி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டிருந்தது.தான் அவுஸ்திரேலியா சென்ற சமயம் அதைத் தன்னிடம் தந்து சிவபூமி அறக்கட்டளைக்கு மாற்றுவதற்கான தத்துவத்தையும் தந்ததாகச் சொன்னார். காணி கிடைத்ததும் மீண்டும் திருவாசக அரண்மனைக்கான முயற்சிகள் மனதில் சுடர்விடத் தொடங்கிவிட்டன.

சித்தர் சொன்னது தொடக்கம் ஆரம்பித்த திருவாசக அரண்மனை என்ற ஆர்வம் என்னைத் துரத்திக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் தெரியும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆரம்பித்த சிவ பூமி அறக்கட்டளையின் மூலம் கோண்டாவிலில் மற்றும் கிளிநொச்சியில் இரு மனவிருத்தி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலைகள், முதியோருக்கான முதியோர் இல்லம், கீரிமலையில் ஒரு யாத்தீரிகர் மடம், குப்பிளானில் ஆச்சிரமம் இவற்றுடன் திருகோணமலையிலும் ஒரு யாத்தீரிகர் மடத்துடன் மன விருத்தி குன்றியோருக்கான பாடசாலை என்று பல தருமப் பணிகளை முன்னெடுத்து வருகிறேன். இவற்றை நிருவகிக்கச் சிரமமிருக்கின்றதொரு நிலை காணப்படுகின்றபோது திருவாசக அரண்மனை என்ற விடயம் சாத்தியமாகுமா?என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். இருந்தும் எனது எண்ணங்களை வரைபடமாகக் கீறிக் கையில் வைத்துக் கொண்டேன்.அந்த நேரத்திலே மீண்டும் அவுஸ்திரேலியா விலுள்ள அபயகரம் என்ற அறக்கட்டளை என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். அங்கு போனபோது சிட்னி முருகன் ஆலயத்தில் மூன்று நாள் சொற்பொழிவு நிகழ்த்தச் சந்தர்பம் கிடைத்தது. அங்கே எனது பேச்கைச் கேட்க வைத்தியர் மனமோகனும் அவரது பாரியார் சகிதம் வந்திருந்தார்.வழமை போல ஒரு இராப்போசன விருந்துக்கு அழைத்தனர். போய் உணவருந்திக் கொண்டிருந்த வேளை “அந்த நாவற்குழி நிலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று கேட்டனர். கையில் வைத்திருந்த வரைபடத்தைக் காட்டிப் பல லட்சம் செலவாகும் என்ற விடயத்தைச் சொன்னபோது, தாங்கள் அப் பணியை முன்னெடுப்பதாக மகிழ்சியோடு சொன்னார்கள்.நாடு திரும்பியதும், உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஊரெழுவைச் சேர்ந்த கனகரட்ணம் சண்முகநாதன் என்பவரிடம் கட்டுமானப் பணியைக் கொடுத்தேன். அவர் அதனை முழுமைபடுத்தித் தந்து இருக்கிறார்.

THIRU-5.jpg?resize=800%2C534

அங்கு காணப்படுகின்ற கருங்கற்களில் பதித்த திருவாசகம் மிகவும் அருமையாகக் காணப்படுகிறது.எழுத்துக்கள் அச்சிட்டதைப் போலவும், ஒரேமாதிரியானவையாக வும் எப்படி கைகளால் செதுக்க முடிந்தது.அதற்குப் பல சிரமங்களை எதிர் நோக்கியதாகப் பேசிக் கொண்டனர். அதைப் பற்றி உங்கள் அனுபவம்..?

இதற்காகப் பல பேரைச் சென்று சந்திக்க வேண்டி இருந்தது. பலர் மறுத்துவிட்டார்கள். ஒருவர் தான் கணனி மூலம் செய்து தருவதாகச் சொல்லி 3X2 அடிக்கு ரூபா.50 ஆயிரம் செலவாகுமென்று ஒரு கல்லைப் பதித்துத் தந்தார். அது எனக்குத் திருப்தியாக இல்லை.இன்னொருவர் ஒரு கல்லைப் பதித்துத் தருவதாகச் சொல்லிச் செய்த கல்லில் முதல் நாலு அடிகளில் மூன்று பிழைகள் காணப்பட்டன.ஆனால் நான் முயற்சியை விடவில்லை. ஒரு நாள் மட்டக்களப்பு மயிலம்பாவையிலுள்ள காமாட்சி கோயிலுக்குத் தரிசனத்திற்காகச் சென்றபோது அங்குள்ளவர்களிடம் இது பற்றி விசாரித்தேன். அங்கு நின்ற அன்பர் முகுந்தன் என்னிடம் ஒரு தொலைபேசி இலக்கத்தைத் தந்து ஆனந்தன் வினோத் என்ற இளைஞன் கிளிநொச்சி விவேகானந்த நகரில் இருப்பதாகச் சொல்லி அவர் தான் மாவீரர் மயானத்திலிருந்த கற்கள் அத்தனைக்கும் பெயர்களையும்வெட்டிக் கொடுத்தவர் , அவரைச் சென்று பாக்குமாறு சொன்னார். அவரை அழைத்தேன்.மாதிரிக்கு ஒன்றை வெட்டிக் கொடுத்தார். ககைவிரல்களினால் உளி கொண்டு எந்த வித அச்சுப் பிழைகளின்றிச் செதுக்கியவை. மிகவும் அச்சிட்டதைப்போன்றிருந்தது.அவரை ஒப்பம் செய்தேன்.கொழும்பிலும் நாவலப்பிட்டியிலும் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அங்குலத் தடிப்பான கருங்கற்களில் பாடல்கள் பதிவு பெற்றிருக்கிறது.மொத்தம் 22 இளைஞர்கள் பல மாதம் தங்கியிருந்து திருவாசகத்திலுள்ள மொத்தம் 658 பாடல்களையும் செதுக்கி உதவியிருக்கிறார்கள். இதைவிட திருவாசகத்தின் பதினொரு மொழிபெயர்ப்புக்கள் டிஜிரல் மூலம் அச்சிட்டு அங்கே தொங்கவிடப் பட்டிருக்கின்றன.ஆனால் இதுவரை மொத்தம் இருபத்தியொரு மொழிகளிலே திருவாசகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் சீன மொழியில் இற்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது.அதற்கு முன்னர் தங்கோல் என்ற தாய்லாந்து மொழியில் மொழிபெயர்ப்பாகிவிட்டதாம்.இதைவிட இறைவன் குருவடிவிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டதனால் குருவுக்கு அங்கே கோயில் அமைத்திருக்கின்நோம். இதைவிட இருபத்தியொரு அடியிலான கருங்கல்லாலான ரதம் ஒன்றையும் அமைத்து அதில் பஞ்சலோகத்திலான சிவலிங்கம் ஒன்றையும், மணிவாசகரையும் பிரதிஷ்டை செய்திருக்கின்நோம்.இதை திருமதி. அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் அமைத்துக் தந்திருக்கிறார். அரண்மனை வளாகத்தில் 108 சிவலிங்கங்களும் அவை ஒவ்வொன்றிற்கு மேலாக ஒவ்வொரு மணி என்று 108 மணிகளையும் அமைத்திருக்கிறோம்.இதைவிட கல்வி சார்ந்த நடவடிக்கையாக திருவாசகம் சார்ந்த அனைத்து விடயங்களும் அடங்கிய ஒரு ஆராய்ச்சி நூல் நிலையத்தை அமைத்திருக்கிறோம். திருவாசகத்தை, திருமுறைகளை மற்றும் சைவ சித்தாந்த நடவடிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றது எனது கருத்து. அத்துடன் கருங்கல் எழுத்து வடிவங்கள், சிற்பங்கள், இரதம் என்பன பற்றிய ஆய்வாளர்களுக்கும் இது ஒரு பொருத்தமான களமாகலாம் – என்கிறார் ஆறு திருமுருகன்.சைவ அடையாளங்கள் மறைக்கப்படுகின்ற காலகட்டத்தில் காலத்தின் தேவை கருதி கடவுளால் அமைக்கபட்ட அரண்மனை இது என்றும் கருதலாமோ?

THIRU-6.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/88340/

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உள்ளது. அளவுக்கு அதிகமாக மதங்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடை.  தமிழர்களின் முன்னேற்றத்துற்கு தடையாக இருப்பது இந்த அளவுக்கு அதிகமாக கோவில்களுடன் பொன்னான நேரத்தை விரயம் செய்யும் மனப்பாங்கு தான்.

பொதுவாக உலக வரலாற்றில் யுத்தங்களின் பின்னரான காலம் மக்கள் சிந்தனைகளை நவீனமயப்படுத்தி பதிய பாய்ச்சலுக்கும்  முன்னேற்றத்திற்கும் ஏற்றவாறு மாறுவது வழக்கம். முதலாம், இரண்டாம் உலக போர் களின் பின்னர்  இது ஐரோப்பாவில் நடந்தது. ஆனால் தமிழர்களை பொறுத்தளவில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. யுத்தமுடிவில் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் சமூக பொருளாதார விடயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து  கோவில்களை புனரமைத்து போன நூற்றாண்டுலேயே தூக்கி எறிந்திருக்க வேண்டிய மூடப்பழக்கங்களை கலாச்சாரம் என்ற போர்வையில் ஊக்குவிக்குகும் முட்டாள்தனமாக எமது படித்தவர்கள் கூட ஈடுபடுகிறார்கள். 

சமீபத்தில் ஒரு  தமிழ்த்தொலைக்காட்சிக் காணொளி பார்ததேன். வன்னி மன்னர்களும் தமிழ் பக்த கோடிகளும் போற்றி பாதுகாத்த வற்றாப்பளை அம்மன் கோவிலை போத்துக்க்கேயர்கள்  இடிக்க வந்த போது ஆலய முன்றலில் நின்ற பன்னிச்சை மரம் அம்மன் அருளால் தனது  காய்களை போத்துககேயர்களை நோக்கி வீசி எறிந்து கோவிலை இடிக்க விடாமல் தடுத்த வற்றாப்பளை அம்மன் என்று அம்பாள் புகழ்  பாடியிருந்தார்கள்.தன் கோவிலை ஆக்கிரமிக்க விடாமல் காப்பாற்றிய அம்பாளால் கோவிலை பராமரித்த வன்னி மன்னர்களையும் பக்தர்களையும் போத்துக்கேய ஆக்கிரமிப்பில் இருந்து ஏன் காப்பாற்ற முயலவில்லை எற்று கல்விச்சமூகம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எந்த தமிழ் கல்வியாளரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.  இப்படிப்பட்ட அடி முட்டாள்த் தனமான கதைகளை தமிழ்ப்படித்த ஆசிரியர் சமுதாயம் கூட  இந்த 21 ம் நூற்றாண்டிலும் பரப்பிவருவது  கவலைக்குரியது. 

எம்முன்னோர்களின் பெருமைகளை போற்றி பாதுகாப்பது நல்லதுதான் அதற்காக எம்முன்னோர்கள் எனபதற்காக அவர்களின் முட்டாள்த்தனங்களையும்  முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தமிழ படித்த அதிமேதாவிகளின் பொருள் நேரவிரயம் எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்ககப் போவதில்லை. 

இதற்கு செலவிட்ட பணத்தைக் கொண்டு மக்கள் ரிலாக்கசாக தமது நேரத்தை செலவிட தமக்கு பிடித்த உடற்பயிற்சி மற்றும் இளைய தலைமுறையின் விளையாட்டை திறனை ஊக்குவிக்க அதற்கேற்ற வசதிகளுடன்  ஒரு அழகான கடற்கரை ஓரத்தை அமைத்திருந்தாலும் மக்களின் மன உள வள வளரச்சிக்கு உதவி இருக்கும்.  தாம் வசிக்கும் முன்னேற்றமான நாடுகளில் இவற்றைப் பார்ததும் அதைப்பற்றி  சிந்திக்காது கோவில்களுக்கு வாரி இறைத்து பணத்தை விரயமாக்கும் தமிழப்படித்தவர்களுக்கு நிகர் இந்த பரந்த உலகில அவர்களே தான். 

Edited by tulpen
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எம்முன்னோர்களின் பெருமைகளை போற்றி பாதுகாப்பது நல்லதுதான் அதற்காக எம்முன்னோர்கள் எனபதற்காக அவர்களின் முட்டாள்த்தனங்களையும்  முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தமிழ படித்த அதிமேதாவிகளின் பொருள் நேரவிரயம் எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்ககப் போவதில்லை. 

 மக்கள் தமக்கு ஆர்வமுள்ள விடயங்களுக்கே பொருளுதவி செய்வதும் அந்த விடயங்களை முன்னெடுக்க கடின முயற்சி செய்வதும் மனித இயற்கை. திருவாசகங்கள் சைவ தமிழ் மக்களுக்கு முக்கியமானவை.  அவற்றிற்கு வரலாற்றில் நிலைத்து நிற்கத்தக்க ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் வைத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. 

எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்கக விருப்பமானவர்கள் அதை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இப்படி செய்திகளில் வருமளவுக்கு இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்களின் ஆற்றலோ அன்பளிப்புகளோ இல்லை. அதற்காக திருவாசகத்துக்கு அரண்மனை கட்டியவர்களை குறைசொல்வது நியாயம் இல்லாதது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

 மக்கள் தமக்கு ஆர்வமுள்ள விடயங்களுக்கே பொருளுதவி செய்வதும் அந்த விடயங்களை முன்னெடுக்க கடின முயற்சி செய்வதும் மனித இயற்கை. திருவாசகங்கள் சைவ தமிழ் மக்களுக்கு முக்கியமானவை.  அவற்றிற்கு வரலாற்றில் நிலைத்து நிற்கத்தக்க ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் வைத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. 

எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்கக விருப்பமானவர்கள் அதை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இப்படி செய்திகளில் வருமளவுக்கு இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்களின் ஆற்றலோ அன்பளிப்புகளோ இல்லை. அதற்காக திருவாசகத்துக்கு அரண்மனை கட்டியவர்களை குறைசொல்வது நியாயம் இல்லாதது.

திருவாசக அரண்மனை என்று குறிப்பாக இதனை  நான் குற்றம் சாட்டவில்லை. எமது மக்களின் பொதுவான மனப்பாங்கையே குறிப்பிட்டேன். தாமே ஒன்றிணைந்து தீர்க்க முடியுமான பல பிரச்சனைகள்  இருக்க தமது நேரத்தையும் பணத்தையும் கோவில்களுக்கு வாரி இறைத்துவிட்டு நாடு சிங்கப்பூர ஆகும் என்று மூடத்தனமாக கனவு காணும் மனப்பாங்கு வரவேற்க்க தக்கதல்ல. கலதோன்றி மண் தோன்றாகாலத்து தமிழர்கள் கற்கால மனிதர்களாகவே வாழ வேண்டியதுதான். மக்களின் மதவிடயங்களிலான அதீத ஆரவமே தவறானது என்பதே எனது வாதம். மேற்கில் மத்திய காலத்தில் கிறிஸ்தவ மத ஆளுமை முழுமையாக இருந்த காலங்களில் மக்கள் மூடபழக்களில மூழகி இருந்ததை வரலறு கூறுகிறது. பின்னர  15 ம் நூற்றாண்டின் பின்னர் அமிலிருந்து விடுபட்டு  ஏற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புக்களினூடான வளரச்சியே இன்றைய உலக முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது. 

தங்களையும்  தமது தலைமுறையையும் அடிமைகளாக நடத்தும் எந்த  அந்நிய அரசாயினும்  அல்லது சொந்த அரசாயினும் தமது ஊர் கோவில் மணிமண்டபம் கட்ட உதவி செய்து விட்டால் அதைக் கண்டு புள காங்கிதம் அடைந்து அந்த அடிமைத்தனத்து ஏற்றுகொள்ளும் மன நிலையிலேயே தமிழர்கள் வாழ்கிறார்கள்.  

வரலாற்று கலத்தில் இருந்து  இதை தான் நடக்கிறது. அக்கால சோழ மன்னரகள் கூட  உழைக்கும்ம மக்களின் பணத்தை எடுத்து கோவில் கட்டவே பணத்தை நாசமாக்கினார்கள்.இலங்கை அரசு கூட இந்து கலாச்சார அமைச்சு ஒன்றை உருவாக்கி தோழர் டக்லஸ் மூலம் அதைத்தான் செய்தார்கள். 

கல்வி அறிவு என்பது மக்களின்நவீன சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். மூடத்தனத்தை வளர்கக உதவக்கூடது.

Edited by tulpen
 • Thanks 1
Link to post
Share on other sites
 • 8 months later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பஞ்சாபிகளையும் தமிழரையும் இரும்பு கரம் கொண்டு அடக்க போய் ரெண்டு தலைமுறை தலைவர்கள் தூக்கப்பட்டார்கள். அது முப்பது வருடங்கள் கழித்து இப்ப இந்த நிலைமைக்கு வந்திருக்கு.  சில்லுக்கு ஆணி கழட்டினாலும் வண்டில் கொஞ்ச தூரம் ஓடி போய் தான் கவிழும். Congress Party in India Needs Leadership Change       by N.S.Venkataraman  It is now well realized by discerning people all over India , who are not involved in  politics ,that Indian democracy is suffering to some extent due to  lack of  principled  and credible  opposition party in the parliament. The absence of such AN opposition party in India today is a matter of concern. Unfortunately, most of the opposition parties in India are essentially regional outfits  and most of them are  family  controlled  parties and have little presence in several states. The Communist  and Marxist Communist parties  have virtually reduced themselves to the level of  regional outfits , as the leadership has not moved with the time and modified  traditional communist philosophy , which has outlived it’s purpose.  Due to advancement in science and technology and industrial practices and changed type of growth  and management practices  in the commercial and industrial sector, now  new type of conflicts have arisen in the country between the organized class and unorganized class. Even airline pilots , employees in software companies, and those employed in  commercial banks etc. are claiming trade union rights or organizing themselves in the trade union pattern. In such circumstances, the communist parties in India remain confused , as  the organized class of people  who cannot be  considered by any stretch of imagination as an oppressed and suppressed class are members of trade unions under the control of the Communist parties.   Obviously, the communist parties have lost their sense of identity.   The only country which claims itself to be a communist country namely  China is liberally adopting capitalist policies. Many people think  that communism as a political philosophy  has lost it’s sheen all over the world. With both the communist parties out of reckoning as national parties, the only political party left now in the national scene is Indian  National Congress. It does not call for much analysis and deliberation to conclude that  the Congress party is now facing a crisis of confidence and leadership. No one knows today as to what Congress party stands for,  as it has aligned  itself with Shiv Sena in Maharashtra  to form government, though Shiv Sena was branded as a non secular  and communal party by the Congress party earlier.  Has Shiv Sena become a secular party overnight  for the present leadership of the Congress party ? The main allegation against the Congress party successfully made by BJP is that Congress is a dynastic party and essentially controlled by one family.  Many believe this to be true and a fact. By and large,  the general public is convinced that  Congress party leadership is concerned   largely  about the welfare of one family, which is an anachronistic approach  for a political party in a democratic country. The dynastic character of Congress leadership has thrown Rahul Gandhi  into the  leadership position of Congress,  with no justification except that he hails from a particular family, which appears to “own” the Congress party.   By his conduct and speeches, Rahul Gandhi has clearly created an impression that he has no particular attributes  to lead a national party.  His hugging the Prime Minister in the parliament when the parliament session was on and  then sarcastically  winking his  eyes, to be seen by several members of parliament,  has made many people suspect that he could be lacking maturity. Along with Rahul Gandhi’s image, the image of the Congress party has also taken a beating, as he was imposed  as President of Congress party. It is in the national interest and in the interest of Indian democracy that the Congress party should be revived and should be enabled to function as  a principled  and forward looking party and get back it’s credentials.   Obviously,  Congress  party cannot be revived without the effective leadership of the  party being vested in the hands of a senior  and tested person in the  party,  who is not from Gandhi family and who will not be a blind loyalist of the family.  He should have the courage of conviction to stand by the principle of the party, so that the party men will get a sense of purpose. Looking into the present structure and  style of functioning of Congress party, even as Rahul   Gandhi says that he is not interested in the  position of the President of the party, he is practically functioning as de facto President of the party . Iit seems that the Gandhi family will never give up the control of the party, whatever may be the cost.  This situation calls for some sort of determined and dignified rebellion in the Congress party  ,that would inevitably make the Gandhi family realize that their period of lordship over the Congress party is now clearly over. The obvious alternate leader who has the stature to become the president of the Congress party is Ghulam Nabi Azad.   He started as youth congress leader and has always conducted himself with decorum and dignity , whether he has been in the government or outside.  He has refrained from making obnoxious and abusive remarks against the members of the opposition parties unlike many other leaders in the Congress party today.   He has the image of dignity personified. He looks far taller than any other leader in the Congress party today, When Prime Minister Modi praised him in Rajya Sabha , it was a well deserved praise. There is absolutely no reason to think that it is a “political praise”  and Ghulam Nabi Azad responded to the Prime Minister’s praise with dignity , which reflects on the quality and standard of this political leader. India has seen in the past lofty scenes like Jawaharlal Nehru and Rajaji  praising each other on occasions , though they were in the opposition  camps   after independence. The consensus feeling  in the country appears to be that Ghulam Nabi Azad can raise the  standards of politics in India to a more dignified  and lofty level  and raise the   respect  for the Congress party in the country today. A matured political leader like Ghulam  Nabi Azad  can be critical of the ruling party even without using abusive language .By way of contrast, Rahul Gandhi called the Prime Minister a thief,  which  Ghulam  Nabi Azad would never do.  http://www.srilankaguardian.org/2021/03/congress-party-in-india-needs.html?m=1
  • சிங்களம் அடிச்சு பிடிச்சு மறைந்த புலியை 11 வருடங்கள் கழித்து திரும்பவும் அடித்து நொறுக்குகிறது.  சுதந்திர ஊடகம் போல் நாடகம் வேறு! Sri Lanka: Gen. Shavendra Silva Talks to Lanka Courier - Read Now        While the name Lanka Courier may not be familiar to all, its first ever documentary titled “Truth behind Dare” has sent shockwaves and captivated viewers around the world. On data assimilated by the editors of the magazine, within 24 hours of the documentary being aired on February 23rd, nearly 2 million views were recorded, making it a thumping record for a documentary of this nature, done on a very small scale with zero budget.   It begs the question as to why the documentary is so widely shared, forwarded and talked about in many political and non-political circles. The answer is simple. The documentary, a collection of never before seen footage brought to light the type of atrocities and the extent that these inhumane activities were carried out by the Liberation of Tamil Tigers Eelam (LTTE). The documentary spoke to the hearts of the Diaspora and Tamils alike, because it revealed, in raw and uncensored manner, the acts that the LTTE is most proud off, which is sanctimoniously endorsed by those sympathizing with the terrorist group. The video since its launch has been produced in Sinhala, Tamil, Hindi, French, Chinese, German and many more languages.  Lanka Courier on its crusade to expose the truth, in its second edition which was published today reveals information pertaining to the last and final phase of the war against the LTTE which had been hidden from public domain. Rubawathy Keetheeswaran, the District Secretary of Kilinochchi, was the first witness after a bloody protracted war. She talks to Lanka Courier on what it was like to work in a ghost town and receive the first influx of innocent civilians who had fled for their lives. She reminisces of the missing children and talks candidly to Tamils living here and abroad.  Chief of Defence Staff and Army Commander General Shavendra Silva in an exclusive interview with Lanka Courier opens up about his upbringing and what was it that led him to be where he is today. Despite being served a travel ban, after risking his life in one of the most daring humanitarian operations, he talks candidly about the war, the army and his duty.  Meanwhile, the Director General of Health Services Dr. Asela Gunawardena calls on the general public to heed to health warnings. He clears the air on the misconceptions regarding immunization and why it remains important for Sri Lankans to take the jab.  While Sri Lanka continues to be debated before the United Nations Human Rights Council, questions have arisen regarding the global body’s commitment to human rights. The Security Council couldn’t even call for a ceasefire in conflict zones due to the prevailing pandemic. Has the UN failed in its mission? Dr. Thomas G. Weiss, a Presidential Professor at the City University of New York’s Graduate Center and Director of the Ralph Bunche Institute for International Studies talks of the UN’s relevance in today’s world talks to Lanka Courier.   In this second issue Lanka Courier continues to shed light on the President’s novel program “Discussion with the Village”, following the President as he embarks on every visit. The articles put locations on the map that had been largely ignored prior to the President’s visit, bringing to life the people of each village and their stories that make them unique.  Lanka Courier is a non-profit and volunteer-based media initiative with a mandate to disseminate accurate information on national issues in Sri Lanka while paying attention mutual benefits and mutual sensitivity in regional and global context. Lanka Courier edited by Nilantha Ilangamuwa and Rukshana Rizwie and designed by Dhammika Rajapaksha with multimedia by L.A.V. Lakshman Dias.  The digital edition of the magazine is online on www.lankacourier.org. We welcome all our readers’ opinion, suggestions, and any form of feedback to improve this new endeavour. Readers can be contacted Lanka Courier editorial team at lankacourier@gmail.com. http://www.srilankaguardian.org/2021/03/sri-lanka-gen-shavendra-silva-talks-to.html?m=1  
  • நானும் தான் ? பாவ‌ம் பெடிய‌ன் , கொஞ்ச‌ ப‌ந்த‌ பின்ன‌னி வீர‌ர்க‌ள் த‌ட்டி கொடுத்து இருந்தா சுந்த‌ர் ச‌த‌ம் அடிச்சு இருப்பார் ,  இதோட‌ சுந்த‌ர் அடிச்ச‌ மூன்றாவ‌து அரை ச‌த‌ம் ? சுந்த‌ர் ப‌ந்து வீச்சிலும் க‌வ‌ண்ம் செலுத்த‌னும் அப்ப‌ தான் ந‌ல்ல‌ ஆல்ர‌வுண்ட‌ரா வ‌ருவார் ? அஸ்வினுக்கு முத‌ல் சுந்த‌ர‌ இற‌க்கி இருக்க‌னும் வ‌ட் ப‌ண்ண ? த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டு அன்மைக்கால‌மாய் ம‌கிழ்ச்சி அளிக்குது சுவை அண்ண‌  ஆட‌த் தெரியாத‌வ‌லுக்கு மேடை ச‌ரி இல்லை என்ற‌ க‌தை தான் இது ? இங்லாந் அணியில் இந்த‌னை ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இருக்கின‌ம் ? 20ஓவ‌ர் விளையாட்டு இல்லை 5நாள் விளையாட்டு , 5 நாள் விளையாட்டுக்கு மிக‌வும் பொறுமை தேவை ? இந்த‌ டெஸ் விளையாட்டில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் எல்லாரும் அடிச்சு விளையாட‌ கூடிய‌வை இது ஜ‌ந்து நாள் விளையாட்டு என்ற‌த‌ ம‌ற‌ந்து விளையாடின‌ம் ? சுந்த‌ர் அவுட் ஆகாம‌ 96 ஓட்ட‌ம் எடுத்தார் அது எப்ப‌டி ? மைதான‌ பிச்சை குறை சொல்வ‌த‌ ஏற்று கொள்ள‌ முடியாது ? நான் இந்தியா அணிய‌ ஆத‌ரிக்கிற‌வ‌ன் கிடையாது , த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடும் போது விளையாட்டை பார்ப்ப‌து உண்டு ? 
  • தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்! http://sankathi24.com/sites/default/files/images/news/cover/Parani%20and%20Jeya.png தமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்களின் வேதாந்தமாக நந்திக்கடல் கோட்பாடு கட்டவிழ்வது பற்றிய திடுக்கிடும் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.   தமிழீழ தேசியத் தலைவரால் தேசத்தின் குரல் என்ற அதியுயர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளருமாகிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை மிகக் கேவலமாக நிந்தித்து நந்திக்கடல் கோட்பாட்டின் பிதாமகன் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் ஆங்கில இணையத்தளம் ஒன்றின் ஆசிரியரான ஜெயச்சந்திரன் கோபிநாத் என்பவர் 22.01.2015 அன்று கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.   http://sankathi24.com/sites/default/files/inline-images/Jeya1_0.JPGஜெயச்சந்திரன் கோபிநாத்   ஜெயச்சந்திரன் கோபிநாத் அவர்களின் கட்டுரையில் இருந்த வரலாற்றுத் திரிபுகளையும், பொய்களையும் அம்பலப்படுத்தி அக்காலப் பகுதியில் வெளிவந்த ஈழமுரசு பத்திரிகையில் அதன் பத்தி எழுத்தாளரான கலாநிதி சேரமான் என்பவர் எதிர்வினைக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.   இந்நிலையில் ஈழமுரசின் குறித்த பத்தி எழுத்தாளரை கொலை செய்ய வேண்டும் என்ற தொனியில் (அகற்ற வேண்டும்) ஜெயச்சந்திரன் கோபிநாத் என்ற பரமார்த்த குருவின் பிரதம சீடரான பரணி கிருஸ்ணரஜனி என்பவர் தெரிவித்த கருத்துக்களைக் கொண்ட ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.   http://sankathi24.com/sites/default/files/inline-images/93255984_154300762781041_4992153243917221888_o.jpgபரணி கிருஸ்ணரஜனி   இதே ஒலிப்பதிவில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைத் ‘துரோகி’ என்று குறித்த பரமார்த்த குருவின் பிரதம சீடரான பரணி கிருஸ்ணரஜனி என்பவர் வசைபாடியுள்ளார்.   கொடிய நோய் தன்னை வதைத்த பொழுதும் தமிழீழ தேச விடுதலைக்காக இருபத்தேழு ஆண்டுகள் அரும்பணியாற்றித் தமிழீழ தேசத்திற்கு அனைத்துலக அரங்கில் பெருமை சேர்த்தவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்.   இதற்காகத் தமிழீழ தேசியத் தலைவரால் தேசத்தின் குரல் என்று மதிப்பளிக்கப்பட்ட அப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனிதனை நந்திக்கடல் சித்தாந்தம் பேசிக் கொள்ளும் பரணி கிருஸ்ணரஜனி என்ற சாதாரண நபர் துரோகி என விளித்திருப்பது தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   இது இவ்விதம் இருக்க நந்திக்கடல் கோட்பாடு பற்றிக் குறித்த பரமார்த்த குருவின் பிரதம சீடர் இணைந்து வெளியிட்ட நூல் ஒன்றில், ‘இலங்கையில் இடம்பெற்ற போராட்டம் நெடுகிலும் அதில் சம்பந்தப்பட்டிருந்த இரு தரப்புக்களுமே மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கும் மதிப்பளிக்கத் தவறியிருந்தன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது (பக்கங்கள் 272-273). அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கும் மதிப்பளிக்கவில்லை என்று நந்திக்கடல் கோட்பாட்டின் வேதாந்திகள் என்று கூறிக்கொள்வோர் தமிழீழ விடுதலைப் புலிகளை மிக மோசமாகக் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.   அது போதாதென்று, தனித்துவமான தேசிய இனமாக விளங்கும் தமிழீழ மக்களைத் ‘தமிழ் சிறுபான்மையினர்’ என்று குறித்த நூல் இழிவுபடுத்தியுள்ளது (பக்கம் 272). தனியரசு அமைக்கும் உரிமை அனைத்துலக சட்டங்களின் கீழ் தேசிய இனங்களுக்கு மட்டுமே உண்டு. அவ்வுரிமை சிறுபான்மையினருக்குக் கிடையாது. அப்படியிருக்கும் பொழுது தமிழீழ மக்களை சிறுபான்மையினர் என்று விளித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் தனியரசு அமைக்கும் உரிமையை நந்திக்கடல் கோட்பாடு மறுதலிப்பது பட்டவர்த்தனமாகியுள்ளது.   http://sankathi24.com/sites/default/files/inline-images/5987e6d9-08e2-4e85-a1f5-63012be508c6.JPG http://sankathi24.com/sites/default/files/inline-images/84eb3d07-4437-4103-8d95-f69ab7133817.JPG   நந்திக்கடல் வேதாந்தம் பேசும் வஞ்சகர்களின் புலித்தோல் கழன்று அவர்களின் நரித்தோற்றம் வெளிவந்திருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை கீழே இணைத்துள்ளோம். அத்தோடு குறித்த கும்பலின் பரமார்த்த குருவான ஜெயச்சந்திரன் கோபிநாத் என்பவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையாக ஈழமுரசில் 2015 தை மாத இறுதியில் கலாநிதி சேரமான் எழுதிய கட்டுரையையும் மீள்பிரசுரம் செய்கின்றோம்.   'தேசத்தின் குரல் மீதான வசைபாடலா? தேசியத் தலைவர் மீதான சேறுபூசலா? - கலாநிதி சேரமான் மைத்திரிபால சிறீசேனவின் தலைமையிலான சிங்கள அரசாங்கத்தில் பங்காளியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்வதன் பின்னணியில் 2013ஆம் ஆண்டில் மங்கள சமரவீரவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கும் மத்தியில் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடே அடிப்படையாக அமைந்தது என்ற தகவலை நோர்வேயில் இருந்து வெளிவரும் தமிழ்நெற் எனப்படும் ஆங்கில இணையம் வெளியிட்டுள்ளது.     ஆங்கில மொழியில் சிங்கள அரசு முன்னெடுத்து வந்த பரப்புரைகளை முறியடித்துத் தனியரசுக்கான தமிழீழ தேசத்தின் நியாயங்களை உலக ஊடகப் பரப்பில் முன்னிறுத்தும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தால் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தமிழ்நெற் இணையத்தளமாகும். அன்று தொட்டு 2009 மே 18 வரை இவ் இணையம் இயங்குவதற்கான நிதியுதவிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் வழங்கப்பட்டன.     தமிழீழ தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இயங்கிய அக்காலப்பகுதியில் சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட இனவழிப்பு யுத்தத்தால் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய உண்மைத் தகவல்களையும், யுத்த கள நிலவரங்கள் பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிவித்தல்களையும் ஆங்கில மொழியில் வெளிக்கொணர்ந்த ஒரேயொரு தமிழ் ஊடகம் என்ற தனிப்பெருமை அன்று தமிழ்நெற் இணையத்தளத்திற்கு இருந்தது.     அந்த வகையில் மங்கள சமரவீரவிற்கும், மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனுக்கும் இடையில் 2013ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இரகசிய இணக்கப்பாடு பற்றிய தகவல்களை இன்றைய சூழமைவில் தமிழ்நெற் இணையத்தளம் வெளிக்கொணர்ந்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்றே. ஆனால் அத்தோடு மட்டும் தமிழ்நெற் இணையம் நின்றிருந்தால் இக்கட்டுரையை நாம் எழுத வேண்டிய தேவை எழுந்திருக்காது.     மாறாக தகவல்களை வெளிக்கொணருதல் என்ற பணிக்கு அப்பால் சென்று மங்கள-சுமந்திரன் இணக்கப்பாடு பற்றிய அதே கட்டுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளராக விளங்கியவருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையை தமிழ்நெற் இணையம் மேற்கொண்டிருப்பதுதான் நூதனமாக உள்ளது.     தமிழீழ மக்களின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த ஒரு அரசியல் போராளி பாலா அண்ணை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிதாமகன் என்றும், மூத்த தலைமகன் என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர் பாலா அண்ணை. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் சரி, உலகத் தமிழர்களின் இதயங்களிலும் சரி தனக்கேயென தனித்துவமான இடத்தைப் பதித்திருப்பவர் பாலா அண்ணை. அந்த மாவீரனின் தேசியப் பணிக்கு மதிப்பளித்தே அவருக்கு தேசத்தின் குரல் என்ற அதியுயர் விருதைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.     தமிழீழ தேசிய விடுதலைக்காக வாழ்ந்து மடிந்த ஒவ்வொரு தமிழரையும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஏதோ ஒரு வழியில் கௌரவித்திருக்கின்றார். போராளிகளும், துணைப்படைப் போராளிகளும் மாவீரர்களாக இராணுவப் பட்டங்களுடனும் (பிரிகேடியர், கேணல், லெப்.கேணல். மேஜர், கப்டன், லெப்ரினன்ட், 2ஆம் லெப்ரினன்ட், வீரவேங்கை), தமிழ்த் தேசியத் உணர்வாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும், மாமனிதர்களாகவும் தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.     ஆனால் இவர்களில் பாலா அண்ணையைத் தவிர எவருமே தேசத்தின் பெயரால் கௌரவிக்கப்படவில்லை. ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு அரசியல் போராளி தேசத்தின் குரலாக கௌரவிக்கப்படுவது என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. தென்னாசிய வரலாற்றில் தேசத்தின் குரல் என்ற பட்டம் முதன் முதலாக மகாத்மா காந்தி அவர்களுக்கே அளிக்கப்பட்டது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் தலைமையில் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சமகாலத்தில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தவர் காந்தியடிகள். இந்திய தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகளுக்கு அவரது மரணத்தின் பின் தேசத்தின் குரல் என்ற உயர் பட்டம் அளிக்கப்பட்டது.     அப்படிப்பட்ட ஒரு உயர் விருதையே பாலா அண்ணைக்கும் தமிழீழ தேசத்தின் தந்தையாக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கினார். அதாவது தேசத்தின் தந்தையாக விளங்கும் தனக்கு மட்டுமே உரித்தான உயர் விருதை, தனது மதியுரைஞருக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வழங்கியது என்பது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாலா அண்ணை வகித்த கனதியான பாத்திரத்திற்கான சான்றாகவே கொள்ளப்பட வேண்டும்.     இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரால் கௌரவிக்கப்பட்ட ஒரு மாவீரன் மீது தமிழ்நெற் இணையம் சேறு பூசியிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு, தமிழீழ தேசியத் தலைவரை மறைமுகமாக இழிவுபடுத்தும் கீழ்த்தரமான செய்கையாகவுமே கொள்ளப்பட வேண்டும்.     சரி, அப்படி என்னதான் பாலா அண்ணையைப் பற்றி தமிழ்நெற் இணையத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எண்ணக்கூடும். தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரையை அப்படியே முழுமையாகத் தமிழாக்கம் செய்து வரிக்கு வரி தருவது இப்பத்தியில் சாத்தியம் இல்லை. ஆனாலும் அக்கட்டுரையின் சாராம்சம் இதுதான்: எரிக் சுல்கைமும், மிலிந்த மொரகொடவும் இணைந்து தயாரித்த ‘ஒஸ்லோ பிரகடனத்தில்’ 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் அன்ரன் பாலசிங்கமும் கையொப்பமிட்டனர். இப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட உள்ளக சுயநிர்ணய உரிமை, சம~;டித் தீர்வை ஆராய்தல் ஆகியவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எதிர்த்தார். இதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பாத்திரத்தில் இருந்து பாலசிங்கம் இடைநிறுத்தப்பட்டார். இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தீர்வு யோசனை தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டு, ‘ஒஸ்லோ பிரகடனத்தை’ போரும் சமாதானமும் என்ற தனது நூலில் பாலசிங்கம் நிராகரித்ததை அடுத்தே அவரை மீண்டும் 2006ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமது தலைமைப் பேச்சுவார்த்தையாளராகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் நியமித்தது. அன்று பாலசிங்கம் தவறிழைத்த பொழுது அதனைத் திருத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு உறுதியான தலைமையும், உள்ளகப் பொறிமுறையும் இருந்தது. ஆனால் இன்று சம்பந்தன்-சுமந்திரன் போன்றவர்கள் தவறிழைக்கும் பொழுது அதனைத் தமிழ்ப் பொதுமக்களின் ஒன்றுபட்ட திரட்சியால்தான் திருத்த முடியும்.     இதுதான் தமிழ்நெற் இணையம் வெளியிட்டுள்ள கட்டுரையில் பாலா அண்ணை மீது சேறு பூசி எழுதப்பட்டுள்ள கருத்தின் சாராம்சமாகும்.     2010ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழத் தனியரசுக்கான பொது வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற பொழுது தமிழ்த் தேசிய அமைப்புக்களால் செயற்பாட்டாளர்களுக்கான பட்டறைகள் நடாத்தப்பட்டன. இவ்வாறான பட்டறைகளில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்நெற் இணையத்தின் நிர்வாகியான ஜெயச்சந்திரன் என்பவர், ‘பாலா அண்ணை கொள்கையில் இருந்து சறுக்கி விட்டார். அதனைப் பின்னர் தலைவர் திருத்திக் கொண்டார்’ என்று கூறினார். இதற்கு அன்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் கடுமையான ஆட்சேபனை வெளியிட்டனர். ஆனாலும் இவ்வாறான நச்சுக் கருத்தைப் பரப்பும் நடவடிக்கைகளை தமிழ்நெற் ஜெயச்சந்திரன் கைவிடவில்லை. பாலா அண்ணை தொடர்பாக தமிழ்நெற் ஜெயச்சந்திரன் பரப்பிய நச்சுக்கருத்துக்கள் 2012ஆம் ஆண்டில் சில ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இளையோர் அமைப்பு இருகூறாகப் பிளவுபடுவதற்கும் வழிகோலியது.     இவ்வாறான பின்புலத்திலேயே பாலா அண்ணை மீது சேறு பூசும் கட்டுரையை தற்பொழுது தமிழ்நெற் இணையம் வெளியிட்டிருக்கின்றது.     தமிழ்நெற் இணையம் கூறுவது போன்று உண்மையில் கொள்கையில் இருந்து பாலா அண்ணை சறுக்கினாரா? அதன் பின்னர் இதுவிடயத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தலையிட்டு பாலா அண்ணையை தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பணியில் இருந்து இடைநிறுத்தினாரா?     இதற்கு 2002ஆம் ஆண்டு நோக்கி நாம் சற்று பின்செல்வது நல்லது.     2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் தமிழீழத்தை பாலா அண்ணை சென்றடைந்தார். அங்கு பாலா அண்ணை பிரசன்னமாகியிருக்க மூத்த தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தலைவர் குறிப்பிட்டார்: ‘நாங்கள் இப்பொழுது அரசியல் களத்தில் இராசதந்திர யுத்தம் ஒன்றை நடத்தப் போகின்றோம். அந்த யுத்தத்திற்கு பாலா அண்ணைதான் தளபதியாக இருப்பார்.’     அதனைத் தொடர்ந்து நுட்பமாக வகுக்கப்பட்ட மூலோபாயத்தின் அடிப்படையில் செப்ரம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கியது. அப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவிற்கு பாலா அண்ணை தலைமை தாங்கினார். ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மூலோபாயம் பின்வருமாறு அமைந்திருந்தது:     (1) பேச்சுவார்த்தைகள் மூலம் போர்நிறுத்தச் சூழலை மேம்படுத்தித் தமிழீழ மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கண்டு, மக்களின் வாழ்வில் இயல்புநிலையைத் தோற்றுவிப்பது.     (2) தனது தேர்தல் பரப்புரைகளில் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்த இடைக்கால நிர்வாகத்தைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக் கொள்வது.     (3) அமைதி வழியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள பற்றுறுதியை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் உலக சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவது.     (4) அமைதி வழியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள இனவாதமும், அதனைத் தாங்கிப் பிடிக்கும் அரச இயந்திரமும் தடையாக நின்றால் அதனை அம்பலப்படுத்தி, சிறீலங்கா அரசை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்துவதும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதும்.     (5) பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து மீண்டும் யுத்தம் வெடிக்கும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழ தாயகத்தை விடுவிப்பதற்கு ஏதுவான அனைத்துலக புறச்சூழலை தோற்றுவிப்பது.     அன்று சிங்கள தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் நிறைவேற்று அதிகாரத்தைக் காரணம் காட்டி இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதற்கு முதலாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பின்னடித்தது. அத்தோடு, இடைக்கால நிர்வாக ஒழுங்கிற்கு மாற்றீடாக உப குழுக்களை அமைக்கும் புதிய திட்டத்தையும் முன்வைத்தது. முதலில் அதனை ஏற்கத் தயங்கிய தமிழீழ தேசியத் தலைவர், பின்னர் அமைதிப் பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள பற்றுறுதியை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் இடைக்கால நிர்வாக அமைப்பிற்குப் பதிலாக உப குழுக்களை நிறுவும் திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்தார்.   இருந்த பொழுதும் நிரந்தரத் தீர்வு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் குறையவில்லை. அதாவது சமாதானத்தின் மீதான தமது பற்றுறுதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிசெய்வதாயின் அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வெளியிட வேண்டும் என்பதே அன்று உலக நாடுகளின் கருத்தாக இருந்தது. இந்நிலையில் 2002ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு தலைவர் அவர்கள் தீர்மானித்தார். அதன்படி பின்வருமாறு தனது உரையில் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்:     ‘‘தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கத் தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை. உள்ளான (உள்ளக) சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது. சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத் திட்டத்தைச் சாதகமாகப் பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டுப் பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’’     தலைவர் அவர்கள் முன்வைத்த பிரதேச சுயாட்சித் திட்டத்தை பரிசீலிக்கும் நிலைப்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுத்தே சமஸ்டித் தீர்வை ஆராய்வதற்கு ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் பாலா அண்ணை இணக்கம் தெரிவித்தார். இது பாலா அண்ணையால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட ஓர் முடிவன்று.   தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அரசியல் தத்துவார்த்த வடிவம் கொடுத்து 1979ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சித்தாந்த கோட்பாடுகளையும், தமிழீழ சுதந்திர சாசனம், திம்புக் கோட்பாடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் (சோசலிசத் தமிழீழம்) ஆகியவற்றை எழுதியவர் என்ற வகையிலும், 1987ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் வெளியிட்ட சுதுமலைப் பிரகடனம் முதல் மகிந்த ராஜபக்சவிற்குத் தலைவர் அவர்கள் காலக்கெடு விதித்த 2005ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரை வரையான தலைவரின் கொள்கைப் பிரகடன உரைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் என்ற வகையிலும், பாலா அண்ணைக்கு தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும், அவரது உரைகளுக்கு வியாக்கியானம் அளிப்பதற்கும் முழு அதிகாரமும் தலைவரால் அளிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் 1999ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை இலண்டனில் நடைபெற்ற ஒவ்வொரு மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளுக்கு பாலா அண்ணை விளக்கம் அளித்து வந்தார்.     இங்கு நாம் ஒரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் சம~;டித் தீர்வை ஆராய்வதற்கு பாலா அண்ணை இணங்கினாரே தவிர, சமஸ்டித் தீர்வை ஏற்பதற்கு இணங்கவில்லை. அதாவது எவ்வாறு தனது மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையில் பிரதேச சுயாட்சித் திட்டத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கான சமிக்ஞையை தமிழீழ தேசியத் தலைவர் வெளியிட்டாரோ, அதேபோன்றே சம~;டித் தீர்வை ஆராய்வதற்கு ஒஸ்லோவில் பாலா அண்ணை இணங்கினார். ஆனால் ஒரு யோசனையை ஆராய இணங்குவதற்கும், ஒரு யோசனையை ஏற்றுக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாத ‘ஆய்வாளர்கள்’ சிலர், ஏதோ தமிழீழ் தனியரசுக் கோரிக்கையைக் கைவிட்டு சம~;டித் தீர்வுக்கு பாலா அண்ணை இணங்கியது போன்று அன்று பிதற்றிக் கொண்டார்கள். இதைத்தான் இப்பொழுது பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நெற் இணையமும் செய்ய முற்படுகிறது.   தவிர ஒஸ்லோ இணக்கப்பாடு பற்றி ஏறத்தாள ஒரு வாரத்திற்குப் பின்னர் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற புலம்பெயர் மக்களைச் சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது கருத்துரைத்த பாலா அண்ணை, ‘நாங்கள் தமிழீழ தனியரசு கோரிப் போராடினோம். இப்பொழுது தமிழீழ சம~;டி அரசை ஆராய்ந்து பார்க்க இணங்கியிருக்கிறோம். அவ்வளவுதான்’ என்று மக்கள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி பின்னர் 2004ஆம் ஆண்டு தான் வெளியிட்ட போரும் சமாதானமும் நூலில் பாலா அண்ணை மேலும் விபரமாக எழுதியிருந்தார்.     அடுத்தது ‘ஒஸ்லோ பிரகடனத்தில்’ கையொப்பமிட்டதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பொறுப்பில் இருந்து பாலா அண்ணை நீக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டிலேயே மீண்டும் அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார் என்று தமிழ்நெற் இணையம் கூறும் புதுக்கதை.   சமஸ்டித் தீர்வை ஆராயும் இணக்கப்பாடு 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் 06.01.2003 முதல் 09.01.2003 வரை தாய்லாந்திலும், 07.02.2003 முதல் 08.02.2003 வரை ஜேர்மனியிலும், 18.03.2003 முதல் 21.03.2003 வரை ஜப்பானிலும் நடைபெற்ற நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பாலா அண்ணையே கலந்து கொண்டார்.   இதனைத் தொடர்ந்து வோசிங்டன் உதவி வழங்கு மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பொழுது சமாதானப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தும் முடிவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற வகையில் 21.04.2003 அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலம் பாலா அண்ணையே அறிவித்தார். இதன் பின்னர் 11.05.2003 அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வன்னியில் இருந்து பாலா அண்ணை இலண்டன் திரும்பிய பின்னர் 17.05.2003 அன்று அப்போதைய நோர்வீஜிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் விதார் கெல்கிசன் அவர்களால் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இடைக்கால நிர்வாகத்திற்கான இரண்டு பக்க வரைவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு 23.05.2003 அன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற வகையில் அத்திட்டத்தை நிராகரித்து பாலா அண்ணையே இலண்டனில் இருந்து பதில் கடிதம் அனுப்பினார்.   இதேபோன்று 28.05.2003 அன்று ரணில் விக்கிரமசிங்கவால் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்ட பொழுது அதனை நிராகரித்து பாலா அண்ணையே பதில் கடிதம் எழுதினார். அதில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிட்டிருந்தார்:     ‘‘உங்களது யோசனைகளை ஆழமாகப் பரிசீலனை செய்து பார்த்த போது எமக்கு ஒரு புறம் ஏமாற்றமும் மறுபுறம் ஆச்சரியமும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைமை தெரிவித்த யோசனைக்கு அமைவாக ஒரு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் திட்டத்தை நீங்கள் முன்வைக்கவில்லை. மாறாக, மிகவும் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்களைக் கொண்டதாக, அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அமைப்பையே நீங்கள் சிபாரிசு செய்துள்ளீர்கள். அதிலும் விடுதலைப் புலிகளுக்கான பங்கு தெளிவாக நிர்ணயிக்கப்படவில்லை. வேண்டுமென்றே, அவ்விடயம் தெளிவற்றதாக விடப்பட்டிருக்கிறது. நாங்கள் கோரியதும், நீங்கள் கொடுத்ததும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட யோசனைத் திட்டங்களாகும். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பை முன்மொழிந்ததன் மூலம் நாம் கோரிய இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நீங்கள் நிராகரித்து விட்டதாகவே நாம் கருதுவோம். உங்களது அரசியலமைப்புக்குள் தஞ்சம் எடுத்துள்ள நீங்கள், தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால ஒழுங்கைத்தானும் வழங்குவதற்கு மறுக்கின்றீர்கள். நாட்டின் சட்டம், ஒழுங்கிற்கு அமையவே உங்களது அரசாங்கம் செயற்பட முடியுமென நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். பழிவாங்கத் துடிக்கும் ஜனாதிபதியின் பகைமை ஒரு புறமும், நெகிழ்த்த முடியாத இறுக்கமான அரசியல் யாப்பு மறுபுறமுமாக, இரண்டுக்கும் நடுவில் சிக்குண்டு தொங்கும் வலுவிழந்த உங்களது அரசாங்கத்தின் நிலைமையை நாம் நன்கறிவோம். அரசியல் அமைப்பே உறுதி தளர்ந்து ஆட்டம் காணும் நிலையில் இருக்கும் போது, உங்களது நிர்வாகமும் அதிகாரமற்றதாக இயலாத நிலையில் இருக்கும் போது, தமிழரின் இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வோ அன்றி நிரந்தரத் தீர்வோ காண்பது முடியாத காரியம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அரசியலமைப்பு முட்டுக் கட்டைகளைக் காரணமாகக் காட்டி உங்களது அரசாங்கம் எதையுமே செய்ய முடியாதென முடங்கிப் போனால் துன்பங்களைச் சுமந்து நிற்கும் எமது மக்கள் எவ்வளவு காலத்திற்குப் பொறுமை காப்பது? எமது மக்களுக்கு உரித்தான அரசியல் உரிமைகளை மறுப்பதில் சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஒன்றோடு ஒன்று பொருதி, வெறித்தனமாகப் போராடி வந்த வேளை, எமது மக்கள் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகப் பொறுத்திருக்கவில்லையா?’’     இதனைத் தொடர்ந்து 01.06.2003 அன்று இடைக்கால நிர்வாகம் பற்றி ரணில் விக்கிரமசிங்க எழுதிய பிறிதொரு கடிதத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற வகையில் 04.06.2003 அன்று மீண்டும் பாலா அண்ணையே பதிலளித்திருந்தார்.   இதன் பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பாலா அண்ணை ஓய்வெடுத்துக் கொண்ட பொழுது, இடைக்கால நிர்வாக அதிகார சபைக்கான திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் தமிழீழ தேசியத் தலைவர் ஒப்படைத்தார். ஆனாலும் அப்பொழுதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பாலா அண்ணையே விளங்கினார்.     எனவே ‘ஒஸ்லோ பிரகடனம்’ வெளிவந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பொறுப்பில் இருந்து பாலா அண்ணை இடைநிறுத்தப்பட்டார் என்று தமிழ்நெற் அவிழ்த்து விட்டிருக்கும் கதை உண்மைக்குப் புறம்பான ஒன்று. அதாவது ஒஸ்லோ இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட 02.12.2002 இற்குப் பின்னர் ஏறத்தாள ஆறு மாதங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பல பணிகளை பாலா அண்ணை புரிந்துள்ளார். அத்தோடு 2003ஆம் ஆண்டின் இறுதியில் இலண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரைக்கு பாலா அண்ணையே விளக்கவுரை ஆற்றியதோடு, 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி விட்டு சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பாலா அண்ணையே விளங்கினார்.     இதற்காக 07.05.2004 அன்று வன்னிக்குப் பயணம் செய்த பாலா அண்ணை, 11.05.2004 அன்று தமிழீழ தேசியத் தலைவருக்கும், அன்றைய நோர்வீஜிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீற்றர்சன் அவர்களுக்கும் மத்தியில் நடைபெற்ற சந்திப்பில் தலைவரோடு உடனிருந்தார்.     இந்த உண்மைகளை எல்லாம் மூடிமறைத்து, உண்மைக்குப் புறம்பான புரளியை இப்பொழுது தமிழ்நெற் கிளப்பியுள்ளது.     இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஒஸ்லோ இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர் சம~;டித் தீர்வு பற்றி ஆராய்வதற்காகத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அரசியல் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இருபத்தொரு பேரைக் கொண்ட இக்குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளும், புலம்பெயர் தேசங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 30.03.2003 அன்று வன்னியில் இருந்து புறப்பட்ட இக்குழு, நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சம~;டி, நல்லாட்சி ஆகிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தது.     இவையெல்லாம் வரலாற்றில் பதிவாகிய விடயங்கள். இவற்றையெல்லாம் மூடிமறைத்து முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செய்கையாக தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையை இப்பொழுது தமிழ்நெற் இணையம் செய்துள்ளது. 2009 மே 18இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையில் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் நிதியுதவியில் இணங்கிய தமிழ்நெற் இணையம், அப்பொழுது பாலா அண்ணை மீது வசைபாடவில்லை. அதற்கான துணிவும் அன்று தமிழ்நெற் இணையத்திற்கு இருந்ததில்லை.     ஆனால் இப்பொழுது, அதுவும் கேட்பதற்கு எவரும் இல்லை என்ற துணிவில், உண்மைகளை திரிவுபடுத்தி பாலா அண்ணைக்கு துரோகப் பட்டம் கட்டித் தமிழ்நெற் இணையம் வசைபாடியிருப்பதானது தமிழீழ தேசியத் தலைவர் மீதான சேறு பூசலாகவே கொள்ளப்பட வேண்டும். http://sankathi24.com/news/taecaiyata-talaaivaraaiyauma-maavaiirarakalaaiyauma-nainataikakauma-nanataikakatala  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.