Jump to content

அரை நிமிடக் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கத் தெரிந்தவள்

85_ABB528-_DC35-4_DDE-8483-134581_FDBA7_

நீண்ட நாட்களுக்குப்பின்  சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில்  தளர்வு தெரிந்தது.

சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார்கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால்  அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.

“ எப்பிடி இருக்கிறீங்கள்?”

“என்னத்தைச் சொல்ல....”  சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.

ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.

“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்

“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்

“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்

“அதென்ன கையிலை பூங்கொத்து?”

“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது? தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை  காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா? என்ன பிரச்சினை? உடனை வாங்கோ எண்டியினம்

கொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்

 

கவி அருணாசலம்

29.06.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஊர்ல சில அலுவலகங்களில் கெதியாய் வேலை முடிக்க இரண்டு சிகரெட் குடுக்க வேண்டும். இந்த நாடுகளில் ஒரு பூங்கொத்து அந்த வேலையை செய்து விடுகிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

கேட்டுவைப்பது எதுக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே

0_EBFD4_D1-3_DFC-4_AA7-_AA69-_FAE536_A2_

 

ஹம்தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக்  காணவில்லை

“நாளைக்கு ‘ஹம்முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லைஎன்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு  என்ன நடந்திருக்கும்வீட்டில் பிரச்சினையாநீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா? ஏதாவது சுகயீனமா? என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்

அன்று வேலை இடத்தில்  அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.

மதிய இடைவேளையில்  அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால்  மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது?”

“ஏதோ கடவுள் குற்றம் போலை

“ஏன்? அப்பிடி என்ன?”

“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற  நகைகளை விட்டிட்டு  அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்

“ஹம்மிலை நடந்ததோ?”

“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்

“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசேஉன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.

“தேருக்குப் போனால்  சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து

“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்கவிதா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்

கவி அருணாசலம்

05.07.2018

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி ரீச்சரை..வாசிச்சுக்....கருத்தெழுதவேனும் எண்டு நினைச்சு....ஒரு கிழமை போட்டுது!

அதுக்கிடையில...கோகிலாவும் வந்திட்டா!

இரண்டுமே அருமையான கதைகள் தான்!

எனது நேரடியான அனுபவம் ஒண்டையும் எழுதினால் ....நல்லம் போல கிடக்குது!

அது யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு!

மரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்!

சுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன!

சிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்!

பெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்!

அவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்!

இருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது!

அப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது!

இரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்!

எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்!

அட செத்த வீட்டில்...கூட நகை போட்டுத் தான்...வரவேண்டும் என்ற உண்மை....அப்போது தான் எனக்கு உரைத்தது!

கதைகளுக்கு நன்றி....கவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

நகைத் திருட்டு இல்லை எண்டால் து திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. ங்களிட்டை இல்லாத காசேஉன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் ருவார்.

திருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும்  ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

திருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும்  ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.

ஒரு குழு......பொம்பிளை பாக்கவெண்டே வரும்!

அந்தக் குழுவைத் தேடித் தேடிய......இன்ஸ்பெக்ரர் ராசையா....தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கதைகளுமே... வெளி நாட்டில் நடக்கும், நிகழ்வுகளை ஒட்டி எழுதப் பட்டிருந்தமையால்,
என்னை மிகவும் கவர்ந்து இருந்தது. ✔️

சரஸ்வதி ரீச்சர்,   காலையில் இருந்து இரவு வரை. பூ  வியாபாரம் செய்கின்றவர்.
அவரை  ஏன்...  ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான  காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

ஹம்  அம்மன் கோவிலில்.... ஒவ்வொரு வருடமும் நகைத் திருட்டு  நடப்பதாக செய்திகள் தவறாமல் வந்தாலும்,
நம்மவர்கள்   மீண்டும், மீண்டும்  நகைகளை போட்டு... திருடர்களை வாழ வைக்கின்றார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

கேட்டுவைப்பது எதுக்கும் நல்லது.

 Bildergebnis für milka  schokolade geschenkbox    Bildergebnis für milka  schokolade geschenkbox

சொக்கலேற் கொடுங்கள்...  ஈழப்பிரியன். :grin:

Ãhnliches Foto

நான்  வேலை செய்யிற  இடத்தில், மாம்பழம் கொடுத்தே... 
எனது  சம்பளத்தை உயர்த்தி... உச்சிக்கு ? கொண்டு போய் விட்டனான்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 5:34 PM, ஈழப்பிரியன் said:

 

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

 

அதிகமாக டொக்டர்களின் வரவேற்பறையில் இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் டொக்டர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே பூங்கொத்தோடு ஆண்கள் போனால் பலன் ஒன்றுக்கு இரண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம்  ஈழப்பிரியன்.?

 

On 7/6/2018 at 1:10 AM, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு!

மரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்!

சுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன!

சிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்!

பெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்!

அவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்!

இருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது!

அப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது!

இரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்!

 எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்!

 

நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதுகூட அரை நிமிடக் கதைதான். இதுபோன்ற உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்  புங்கையூரான்.??

 
On 7/6/2018 at 5:11 AM, தமிழ் சிறி said:

வரை  ஏன்...  ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான  காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

இதுக்கு ஒரு  ஆராய்ச்சி தேவையா தமிழ்சிறி? ஒன்றில் நாட்டில் அவர்  ஆசிரியையாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் இங்குதானே தமிழாலயம் பள்ளிக் கூடங்கள் நிறைய இருக்கின்றன அதில் படிப்பிப்பவராக (அல்லது படிப்பித்தவராக) இருக்கலாம்

உங்கள் நகரத்தில் பூக்கடை வைத்திருக்கும் தமிழ் ரீச்சர் யாராவது இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் எல்லாம் அந்த மாதிரி இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

F96_BC607-4_B88-4_B6_F-_AA4_A-_CE34_BF99

நேரம் நல்ல நேரம்

குமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

 “பென்சன் எடுத்தாப் போலை  எப்பிடி நேரம் போகுதண்ணை?”

 “வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது

 “இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு  ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா  இருக்குமெல்லே

 “உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான்.  “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே?”  

 நான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்குகொழுத்த பண்டிஎண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல்கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.

 அவன் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கைஇவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுதுஎண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கினான். ”இப்ப என்ன எழுதுறாய்எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான்  எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும்  ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு  வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.  

எனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.

கவி அருணாசலம் 

12.07.2018

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவோ சண்டையும் வேறு யாரோடையோ காருக்காகவா?

தேவையில்லாமல் சண்டை பிடித்து கார்காரனுக்கு மூன்று ரிக்கற்.வாழ்க குமாரசாமி குடும்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அருமையான சிரிப்புக் கதை. :grin:
கதையின் முடிவில்  வைத்த திருப்பம்... யாரும் எதிர் பாராதது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நாயகன் ....உண்மையில் குமாரசாமி அண்ணையாய் இருந்திருந்தால்...அந்தத் துண்டை நிச்சயம் எடுத்துக்கொண்டு போய்....பஸ்ஸுக்குள் வைச்சாவது வாசிச்சிருப்பார்!

இல்லாவிட்டால் அவருக்கு நிச்சயம் இரவுக்கு....நித்திரை வந்திருக்க மாட்டாது!

கார்க்காரனும்...வீட்டுக்குத் துண்டு தபாலில் வரும்வரையாவது...விசில் அடிச்சுக் கொண்டு காரோட்டி இருக்கலாம்!

கதை அருமை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி வைத்து எழுதும் அரை நிமிடக் கதைகள் அனைத்தும் சுவை......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்து கதை சொல்லுஎன்று ஏகாம்பரம் மாஸ்ரர் எங்களுக்கு பாடசாலையில் வகுப்பெடுத்திருக்கிறார்.

அந்த நினைவில் இங்கே நான் ஒரு படம் பார்த்து கதை சொல்கிறேன்.

இது ஒரு பழைய கதை தான். செவி வழி கேட்ட கதை. இங்கே கொஞ்சம் வைச்சு கிச்சு அந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அதி முக்கியமாக புதுமணலூர் என்ற இடத்தை நானே உருவாக்கி இருக்கிறேன்

95_CE2_B8_E-_CD5_B-4_F72-8_B6_A-68644487

புகையிலை பயிர்ச் செய்கையில் கணபதிக்கு அந்த வருசம் நல்ல விளைச்சல். இவ்வளவு புகையிலையையும் காலிக்கு கொண்டு போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் இவருக்கு ஆசையை கிளப்பி விட புகையிலை எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு கணபதி கொழும்புக்குப் பயணமானார்.

கொழும்பில் வந்து இறங்கிய பின்னர்தான், காலிக்கு இன்னும் ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று கணபதி அறிந்து கொண்டார்.

தனியாக நின்று அல்லாடிக் கொண்டிருந்த கணபதியின் நிலை அறிந்து அவருக்கு உதவுவதற்காக சோதி என்பவர் வந்து சேர்ந்தார்.

“கொழும்புக்கு புதுசு போலை. எங்கை போகோணும்?” சோதியின் அன்பான விசாரிப்பில் கணபதி மயங்கிப் போனார்

புகையிலையை காலிக்கு கொண்டு போய் விற்று பணம் பார்க்க இருக்கும் தன்னுடைய விருப்பத்தை சோதியிடம்  சொன்னார்.

“அப்பிடியா? நான் ஒரு புகையிலை புறோக்கர்தான்

“அப்ப நல்லதா போச்சுது

“என்ரை ஊர் புதுமணலூர். சின்னனிலை இருந்தே இங்கைதான் இருக்கிறேன். எனக்கு காலியிலையும் வியாபாரிகளை எல்லாம் நல்லாத் தெரியும். வேணுமெண்டால் சொல்லுங்கோ. நான் உங்களை அங்கை கூட்டிக் கொண்டு போறன். நல்ல விலைக்கும்  புகையிலையை வித்துத்தாறன்

“நல்லதாப்போச்சு. அந்த கதிர்காமக் கந்தன் தான் உங்களை என்னட்டை அனுப்பி வைச்சிருக்கிறான்

“ மனுசனுக்கு மனுசன் உதவி செய்யாட்டில் அது என்ன பிறப்பு. நீங்கள் கதிர்காமக் கந்தனை கும்பிடுற ஆள் போலக் கிடக்கு. அவரைப் போய்ப் பாக்க ஆசை இருக்கே ?”

“ஆசை இருக்குக்குத்தான். முதலிலை புகையிலையை விப்பம். பிறகு போய்க் கதிர்காமத்தானை பார்ப்பம்” 

“புகையிலை வித்திட்டு காசோடை கோயில், குளமெண்டு  அலையிறதும் நல்லாயிருக்காது”.                                     

“நீங்கள் சொல்லுறது சரி. புகையிலையை என்ன செய்யிறது?” 

“அது ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அங்கை கொண்டு போய் வைக்கலாம். நானும் உங்களோடை கதிர்காமம் வாறன்பிறகு காலியிலை புகையிலையையும் வித்துத்தாறன். நீங்கள் பாத்து ஏதாவது எனக்கு செய்யுங்கோ” 

சோதியின் பேச்சும், பழகும் தன்மையும் கணபதிக்கு பிடித்துப் போயிற்று. சோதி சொன்ன இடத்தில் புகையிலைப் பொதிகளை வைத்து விட்டு இருவரும் கதிர்காமம் பயணமானார்கள்.

“கதிர்காமம் வந்திட்டு மாணிக்க கங்கையிலை குளிக்காமல் போனால் நல்லா இருக்காது. நான் அடிக்கடி வந்து போறதாலை மாணிக்க கங்கையிலை இந்த முறை இல்லாட்டிலும் அடுத்தமுறை குளிச்சிக் கொள்ளுவன். நீங்கள் எப்போதாவதுதானே கங்கையிலை குளிக்க முடியும். போய்க் குளியுங்கோ. நான் கரையிலை இருந்து உங்கடை உடைமைகளை பாக்கிறன்

தனது ஆடைகளைக் களைந்து கணபதி மாணிக்க கங்கையில் இறங்கி மூழ்கி எழுந்தால் கரையில் சோதியை காணவில்லை கழட்டி வைத்த உடுப்புகள், கடிகாரம், பணம் எதுவும்  வைத்த இடத்தில் இல்லை. கணபதி சுற்று முற்றும் பார்த்து சோதி என்று உரத்த குரலில் பலமுறை அழைத்தும்  பலனில்லை .

மாணிக்க கங்கையில்  நின்றபடியே அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் முருகன் கோமணத்துடன்  இருக்கும் சிலைதான் கணபதிக்கு தெரிந்தது. கணபதி  சற்று குனிந்து தன்னிலையைப் பார்த்தார். அவரும் முருகனைப் போலவே கோமணத்துடன் நின்றது புரிந்தது

கணபதியின் வாய் அவரை அறியாமலே முருகனைப் பார்த்து கேட்டது," முருகா, நீயுமா புதுமணலூர்காரனை நம்பி புகையிலை விக்க வந்தனீ?

கவி அருணாசலம்

25.07.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு......புங்குடுதீவைப் புது மணலூர் எண்டு மாத்தினது இன்னும் நல்லாயிருக்குது!

கணபதி....சோதிக்குப் போயிலையை வித்ததும் உண்மை!

சோதியிடம் காசைக் கறக்க முடியாமல்.....சோதியைத் தேடி ஊர் ஊராக அலைந்ததும் உண்மை!

கடைசியா....நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் படிக்கு.....சோதி கதிர்காமம் பயணித்ததும்  உண்மை!

கணபதி....சோதியைத் தேடிக் கதிர்காமம் போனதும் உண்மை!

மாணிக்க கங்கையில்.....கொஞ்சம் தண்ணீர் ஓடியதும் உண்மை!

மாணிக்க கங்கையில்....கணபதி...இறங்கிக் குளித்ததும் உண்மை!

ஆனால் வேட்டியக் களவெடுத்தது மட்டும் சோதி இல்லை!

முருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை!

 

பாடம்:     போயிலையை  நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை! அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மைக்கதையை மெருகேற்றி விளாசிவிட்டிருக்கிறார் நம்ம அருணாச்சலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

விசுகர்... கடித்துக் குதறி விட்டுடுவார் என்று, கவியருக்கு... பயம் வரத்தானே... செய்யும்  ஈழப்பிரியன். :grin:
கதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது  கவி அருணாசலம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

முருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை!

  

பாடம்:     போயிலையை  நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை! அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே!

புங்கையூரான், உங்களுக்கு பெரிய மனது. நன்றி!

 
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

 

பயம் என்று இல்லை. ஆனாலும் அடி தாங்கும் உடம்பு எனக்கில்லைத்தான்

17 hours ago, தமிழ் சிறி said:

கதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது  கவி அருணாசலம். ?

படத்தை சுட்டது  “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான்ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப்  புகையிலைக் கதைதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavi arunasalam said:

படத்தை சுட்டது  “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான்ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப்  புகையிலைக் கதைதான்.

 

அவர், குனிந்து பார்த்ததை  எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.
அதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட  உங்கள்  திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.

என்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 1:00 AM, தமிழ் சிறி said:

ன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ?  :grin:

என்னையும் விசுகரையும் எதுக்கு கோத்துவிட இப்பிடி துடிச்சுக் கொண்டு நிக்கிறீங்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 1:00 AM, தமிழ் சிறி said:

 

அவர், குனிந்து பார்த்ததை  எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.
அதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட  உங்கள்  திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.

என்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ? :grin:

 

On 7/27/2018 at 3:56 AM, ஈழப்பிரியன் said:

என்ன கவி அருணா புங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

 தாயகமென்றாலும்

ஊர்  என்றாலும் 

கண்டபடி எழுதினால்  நாம் வருவோம் 

 

அவரே  பெயரை  மாற்றி  எழுதியிருக்கிறார்

அத்துடன்

மேலே புங்கையண்ணா  தெளிவாக  எழுதியபின்..

நான்  ம(றை)டக்க  விரும்பவில்லை:grin:

 

ஆனாலும் கதைப்படி அவருக்கும் முருகனுக்கும் கச்சை  இருந்தது

எழுதியவருக்கு அதுவும் புடுங்கப்படும் என்ற  பயம் இருந்திருப்பது வரவேற்கத்தக்கது:D:

புங்கையண்ணா இது சார்ந்து அடக்கி  வாசித்திருப்பது அவரின் பெயரை காப்பாத்தாது:grin:

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.