• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மதங்களின் பெயரில் இடம்பெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி மதவாததை தூண்டுபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக வடக்கு கிழக்கில் மதவாத ரீதியான கருத்து மோதல்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்லின மக்களும் பல சமயத்தவர்களும் வாழும் இந்த நாட்டில் தனித்துவமும் சகிப்புத்தன்மையுடனும் வாழும்போதுதான் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கமுடியும். அதைவிடுத்து மதத்தின் பெயரிலோ இனத்தின் பெயரிலோ மேலாதிக்கத்தையோ வன்முறைகளையோ பிரயோகிக்கும் மனப்பாங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக நாம் வாழும் நாட்டிலேயே இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படும் தமிழர்களாகிய நாம் எமக்குள் மதங்களின் பெயரால் மோதிக்கொள்வது எம்மை மேலும் பலவீனப்படுத்திவிடும்.பல்வேறு மதங்களை பின்பற்றும் நாம் எமது சமயத்தை சரியாக பின்பற்றி மதத்தின் சித்தாந்தங்களை சரியாக கற்றுக்கொண்டால் பிறிதொரு மதத்தை ஆக்கிரமிக்கவோ வன்முறைகளை பிரயோகிக்கவோ முற்பட மாட்டோம். நாடு தீர்க்கமான பொது தேர்தல் ஒன்றை சந்திக்கவுள்ள நிலையில் சில அரசியல் வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடும் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கோ அல்லது சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளோ நாம் சிக்கிவிடமால் தமிழினம் எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாகவும் சாதி, மதங்களை கடந்து இனத்தின் விடுதலைபற்றி சிந்திக்ககூடியவர்களாகவும் மாற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/76275
    • -செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில், 22 பேர்  வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 05 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மணலாறு பிரதேச செயலக பிரிவில் 02 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 05 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மாந்தை கிழக்கு பிரதேச செயலக  பிரிவில் 04 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்  முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து 6 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிவராசா சிவறஞ்சன் 304 வாக்குகளாலும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தெய்வேந்திரம் திருநீபன் 215 வாக்குகளாலும், ஒட்டுசுட்டான் நமசிவாயம் டிலக்சன் 285 வாக்குகளாலும்  துணுக்காய் கணேசலிங்கம் வினுஜன் 270 வாக்குகளாலும், மாந்தை கிழக்கு பத்மநாதன் சயந்தன் 199 வாக்குகளாலும், வெலிஓயா பிரதேசத்தில் கீன்கென்ட முடியா செலகே 127 வாக்குகளாலும்  இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். http://www.tamilmirror.lk/வன்னி/மலலததவல-6-இளஞரகள-நடளமனற-உறபபனரகளகத-தரவ/72-245925
    • (செ.தேன்மொழி) நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்காகவா உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் காலத்திலே நல்லாட்சி அரசாங்கத்திக் எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதாமானது உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை குண்டுத்தாக்குதலாகும். எதிர்தரப்பினர் ஐக்கிய தேசியக் முன்னணி மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.இது எமது கட்சிக்கு மாத்திரமன்றி , எமது ஜனாதிபதி வேட்பாளருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளிவரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் நல்லாட்சி அரசாங்கத்தை இலக்கு வைத்துத்தானா இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது ,நாட்டில் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்ததாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். இவ்வாறு தாக்குதல் தொடர்பில் முன்னரே தகவல் கிடைக்கப் பெற்றபோதிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது இருந்தமைக்கு காரணம் என்ன? ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியாக செயற்பட்டார். பாதுகாப்பு அமைச்சும் அவரிடமே இருந்தது. இதேவேளை பாதுகாப்பு சபையின் கூட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எவருக்கும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்திருக்கவில்லை. அடிப்படைவாதிகள் எனக்கூறப்படும் சஹ்ரான் தலைமையிலான குழுவினர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலே வளர்ந்து வந்துள்ளனர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. இதனை அரசதரப்பு அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , சஹ்ரானை கைது செய்ய முற்படும் போது அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யதிட்டமிட்டுள்ளதாகக் கூறி அவரை கைது செய்தனர். இந்த நாலக்க சில்வா தொடர்பில் முறைப்பாடளித்த நாமல்குமார என்ற நபர் ஜனாதிபதி செயலகத்திலே ஊதியம் பெற்றுவந்துள்ளார். இவருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்குமான தொடர்பு என்ன? ஏன் அவருக்கு இவ்வாறு ஊதியம் அளிக்கப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமாத்திரமன்றி தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு இந்த நாட்டில் முஹ்லீம் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. இதனால் இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் வேண்டும். இவற்றை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் சஹ்ரானை நல்லாட்சியை தோல்வியடைய செய்வதற்காக பயன்படுத்தியுள்ளார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான 5 மாத இடவெளியிலே தாக்குதல்களும் இடம்பெற்றன. எனவே இது ஒரு சூழ்ச்சிகர செயலாக இருக்கலாம் என்றே நாங்கள் கருதுகின்றோம். https://www.virakesari.lk/article/76283
    • மீண்டும் புதினக் கதையுடன் வந்தமைக்கு நன்றி 😀
    • ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.