Jump to content

பிரித்தானியாவின் தள்ளாடும் துணிக்கடைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for m & s

உலகின் மிகச் சிறந்த பிராண்ட் துணிக்கடை பிரித்தானியாவின் Marks and Spencer. 

Image result for m & s

காசு அல்லது எங்கள் சொந்த கடன் மட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என இறுமாப்பில் இருந்த ஒரு நிறுவனம்.

இன்று சந்தையில் உள்ள அனைத்து கடன் மட்டைகளையும் ஏற்றுக் கொண்டாலும் வியாபாரம் ஏறவில்லை.

முதலில் வெளிநாடுகளில் உள்ள கிளைகளை மூடிய இந்த நிறுவனம் இப்போது பிரித்தானியாவினுள் 300 கிளைகளை மூடுகின்றது.

BHS (British Hme Store) என்னும் இன்னுமொரு நிறுவனம் இழுத்து பூட்டி சில பல வருடங்கள் ஆகின்றன. இதன் உரிமையாளரான பிலிப் கிறீன் என்ற பெரும் பணக்காரர், வருவது தெரிந்து, லாவகமாக வகையில், பாக்கெட் கிழியாமல் இழுத்து மூடி விட்டார்.

Image result for bhs

Debenham எனும் இன்னுமொரு நிறுவனமோ தள்ளாடுகின்றது. எப்போது இழுத்து மூடுவார்களோ தெரியவில்லை. 

Image result for debenhams

எல்லோருக்கும் முதலில் கதவை இழுத்துப் பூட்டிய நிறுவனம் woolworth எனும் பழமையான நிறுவனம். இவர்கள் துணியுடன் பல வித வேறு பொருட்களையும் வியாபாரம் செய்தார்கள்.

toysRus எனும் இன்னோரு நிறுவனம் வீழ்த்தும் தனிக்கதை.

ஏன் இப்படி .... பிரித்தானிய மக்கள் துணி வாங்கி அணிவதை குறைத்து சிக்கனமாக வாழத் தொடக்கி விட்டார்களா என யோசிக்கலாம்.

ஒன்றன் பின் ஒன்றாக விழுவதன் கரணம் என்ன? அதெப்படி??  உண்மையில் இவர்களுக்கு வந்திருக்க வேண்டிய வியாபாரம் எங்கே போனது?

பலருக்கு Eastman Kodak புகைப்பட சுருள் நினைவிருக்கும். 36 பிரதிகள் எடுக்கக் கூடிய சுருள் £6.99 என கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது அந்தக் கொம்பனி. முடி சூடா மன்னனாக புகைப்பட சுருள் துறையில் இருக்கும் நம்மை அடித்து வீழ்த்தி முன்னேற, இனி ஒரு கொம்பனி வர முடியாது என இறுமாப்புடன் இருந்தது Eastman Kodak நிறுவனம்.

டிஜிட்டல் கேமரா குறித்த ஆய்வுகள் நடக்கின்றன. நாமும் எதாவது செய்ய வேண்டுமே என நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் குரல் எழுந்த போது, அதெல்லாம் வேலைக்காவது..... உங்களுக்கு உரிய, தரப்படட வேலையை மட்டும் செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள் என உத்தரவு வந்தது.

கடைசியில் டிஜிட்டல் கேமரா, வந்து அத்திபாரத்தினை அசைத்த போது, நேரம் கடந்து  போய் இருந்தது. Eastman Kodak டிஜிட்டல் கேமரா என அவசர அவசரமா ஏதோ ஒன்றை சந்தைக்கு கொண்டு வந்த போது.... ரயில் கிளப்பி போய் பல மணி நேரமாகி விட்ட கதை. 

Eastman Kodak கம்பெனி, கடைசியில்  இழுத்து மூடப் பட்டது.

பிரித்தானியாவின் இந்த மாதிரி துணி வியாபார நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் அந்த நிறுவங்களின் அடிமடடங்களில் இருந்து மேல வந்த 65 வயதுக்கு மேலானவர்கள்.

அவர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களின் போக்கு பிடிபடவில்லை. அது குறித்து எரிச்சல் தான் படுகிறார்கள். அதை எப்படி பயன்படுத்துவது என திட்டம் போடுவது இல்லை.

ASOS.com நிறுவனம் 2000 ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இணைய தள துணிக்கடை. 18 ஆண்டுகளில் பெரு வளர்ச்சி. வியாபாரம் £2 பில்லியன். முக்கியமாக லாபமோ இதில் அதிகளவு வீதம். காரணம், ரியல் எஸ்டேட் அதாவது ஷோ ரூம்கள் வாடகை, சம்பளம், வரி, தண்ணி, லைட், ஹீட் எதுவுமே இல்லை.

Image result for asos

Boohoo.com நிறுவனம் 2006 ல் தொடங்கியது. கடந்த வருடம் £260மில்லியன்... இந்த வருடம் £580மில்லியன் வியாபாரம். பெரு வளர்ச்சி.

Image result for boohoo

Shopdirect.co.uk நிறுவனம் ஆரம்பித்தது 2005. 2016 வியாபாரம் £1.86 பில்லியன். 2018ல் £2பில்லினை நெருங்குகிறது. தமது வியாபாரத்தின் 62% மொபைல் போன் மூலம் வருவதாக சொல்கின்றனர்.

Image result for very.co.uk

இன்னும் பல....

அவர்களின் தோல்விக்கும், இவர்களின் வெற்றிக்கும் காரணம் என்ன?

தொழில் நுட்பத்தினை ஒரு புறம் வைத்து விட்டு பார்த்தால் ஒரு சாதாரண வணிகவியல் உண்மை புலப்படுகின்றது.

அதாவது செலவினைக் குறைத்து, விலையினைக் குறைத்தால் மக்கள் தேடி வருவார்கள். அதனுடன் தொழில் நுட்பமும் மேலதிகமாக சேரும் போது பலன் இரட்டிப்பாகின்றது.

சிறந்த பிராண்ட் என்று அதிக விலை கொடுக்க எல்லா தர மக்களும் தயாராக வில்லை.  உதாரணமாக இலங்கையில்,  M&S நிறுவனத்துக்கு உடைகள் தயாரிக்கும் நிறுவனம், அதே தரத்தில், வேறு நிறுவனத்துக்கும் வேறு பிராண்டில் தயாரிக்க தயார். 

ஒரே தரம்... வேறு வேறு விலை. இரண்டாவது பிராண்ட் காரர்... ஒன்லைன் வியாபாரியாக இருந்தால் செலவு குறைவு... ஆகவே குறைந்த விலைக்கு வியாபாரம் செய்ய, மக்கள் மொய்க்கின்றனர்.

இப்போது இந்த நிலைப்பாட்டினை புரிந்து கொண்டு பல பழமையான  நிறுவனங்கள்  பாதையை மாத்தி ஓட வெளிக்கிட முயன்றாலும், மேல சொன்ன Eastman Kodak நிறுவன கதி தான் உண்டாக்கப் போகின்றது.

முக்கியமான ஒரு செய்தி....

வங்கிக்கிளைகள் வேகமாக மூடப் படுகின்றன. இந்த துணிக் கடை கிளைகளும் மூடப் படுகின்றன. இந்த மூடப் படும் கடைகள் குறைந்த விலையில், முதல் 6 மாத வாடகை இலலை என்ற தூண்டிலுடன் சந்தைக்கு வரும். இவையினை வாங்கி... கடைகள் ஆக்கி... இவ்வளவு செய்யுது.... நாலுபேர் கேட்டு அடிபடுகினம். கெதியா கதைச்சு டபக்கெண்டு எடுத்து வியாபாரத்தினை பாருங்கோவன் என்று புரோக்கர்மார் கனபேர் திரியினம். தெரிந்தவர்கள், ஓடித் திரிந்தால், மிகவும் கவனமாய் இருக்க சொல்லுங்கோ.

** யாழுக்காக சொந்த ஆக்கம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிக்கடை மட்டுமா..

Image result for comet shop

 

Image result for phone4u

Image result for games shop

 

Image result for dixon shop

image.jpeg.409ec1ecb8a9125e9a215eb93e03de00.jpeg

 

Image result for maplin

இப்படி இன்னோரென்ன.. கடைகள்.. காணாமல் போய்விட்டன.. கடந்த 10 ஆண்டுகளுக்குள். 

பெரிய பெரிய ஜாம்பவான் கடைகள் எல்லாம் இழுத்து மூடப்பட.. பவுன் கடைகள் முளைத்துக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது..

Image result for poundworld

அவையும் இழுத்து மூட வேண்டிய நிலைக்கு போயுள்ளன.

இதற்கு முக்கிய காரணம்.. தளம்பல் நிலையில் உள்ள பவுன்டின் பெறுமதி..

ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பின்னான பிரிட்டன் பற்றிய முதலீட்டாளர்களின் பயம் அல்லது தயக்கம்..

அதிகரித்துச் செல்லும் விலைவாசியை சமாளிக்க மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்...

மற்றும்.. இணைய வர்த்தகத்தை நாடும் மக்கள்...

என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஆனால்.. இது நடக்கும் என்பது 2008 க்கு முன்னே எதிர்வு கூறப்பட்டது தான். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் விரல்நுனியில் உள்ள ஸ்மார்ட்ஃபோனினூடாக சில நொடிகளில் வேண்டியவற்றை வாங்கக்கூடிய நிலை வந்துள்ளதால்தான் பெரிய department stores தள்ளாடுவதற்குக் காரணம். 

ஆனாலும் சில online brands இப்பெரும் நிறுவனங்களின் கிளைகளாகவும் உள்ளன.

இன்னும் குறுகிய காலத்தில் எமக்கான ஆடைகளை நாமே வடிவமைக்க அவற்றினைத் தயாரித்துத் தரும் தொழிலுட்பம் வரும்போது மேலும் பாரிய மாற்றங்கள் வரும்.

பெரிய அங்காடிகளை விட பல்வேறு பொழுதுபோக்குகளையும் experiences களையும் தரக்கூடிய shopping mall களையே மக்கள் விரும்பிகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழுத்து மூடுவதாக கடந்த மாதம் அறிவித்தது, House of Fraser!

John Lewis நிறுவனம் தான் இன்றைய தேதிக்கு, கிளைகள், இணையத்தளம் இரண்டிலும் நல்லா செய்யும் பழைய நிறுவனம்.

Link to comment
Share on other sites

 

தரகர் (3 ம் நபர்) இல்லாமல் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போது அதன் பெறுமதியை குறைக்க முடியும். இணையம் மூலம் பொருட் கள் வாங்கும் போது இப்படி நிறுவனத்துக்கான வாட கை தொடக்கம் வேலை செய்யும் ஆட்களின் சம்பளம், மின்சார கட்டணம் இன்னும் பல கட்டணங்களை செலுத்துவதால் மேற்படி நிறுவனங்கள் தமது  பொருட்களை மலிவாக விற்க முடிவதில்லை.

உலகின் முதற்தர பணக்காரராக அமெசோன்(Amazon) வர காரணங்களில்  மேற் கூறிய காரணங்கள் முதன்மையானவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணயத்தள வியாபார வளர்ச்சிக்கு, மிக முக்கிய காரணம், துரித விநியோகம், பொருட்களை திரும்பி அனுப்புதலை, வாடிக்கையாளருக்கு செலவு இல்லாமல் இலகுவாக்கியமை. 

ஆதன வாடகை, ஆதன வரி, ஆள் சம்பளம், லைட், கீற், கிளீனிங், இணையத்தள வேலைகளை செலவு குறைந்த பிற நாடுகளில் நடாத்துதல், என சோ ரூம் வையாமல்,    மீதப்படுத்தும் பணத்தில் சிறுபகுதியை கஸ்டமர் ரிட்ரேன்க்கு ஒதுக்கி, ரிட்ரேன் மிக சிம்பிள் விடயம் என்ற நம்பகத்தன்மை உண்டாக்கிய வியாபார தந்திரமே வளர்ச்சிக்கு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பபம், விலை மற்றும் வேகமாக மாறும் நடப்பு மற்றும் வழக்குகள், வாடிக்கையாளர் பொருட்கள் வாங்குவதை ஓர் அனுபவம் சார்ந்த பொழுதுபோக்காக தாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குவது, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆழ்ந்து சேவைகளை வழங்குவது, மதிப்பு குறைந்த சேவைகள் மற்றும் பொருட்களின் உட்பதியை   அயலாக்கம் (outsourcing)  மற்றும் கரைவிலக்கம் (offshoring) செய்தல் போன்றவை இந்த பல்பொருள் அங்காடிகளை மிகவும் பாதித்துள்ளது.

ஆயினும், மிக முக்கியமான காரணம் சனத்தொகை கட்டமைப்பு (demography) மாறுவது.  Baby boomers இந்த நுகர்வு குறைவடைந்து வருகிறது. பொதுவாக இவர்களே பிரித்தானியாவில் (பொதுவாக மேற்குலகில்)  பொருளாதார வளத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் மிகப் பெரிய சனத்தொகை ஆகும். இவர்களே இந்த பல்பொருள் அங்காடிகளின் ஏறத்தாழ பயபக்தியுள்ள வாடிக்கையாளர்கள் ஆகும். இன்னொன்று, இவர்களுக்கு முன்னுள்ள தலை முறையும் இந்த பல்பொருள் அங்காடிகளை மிகவும்  மதிப்பவர்கள், இவர்களின் இயற்றகை இறப்பு வீதம் அண்ணளவாக 2% இ தொட்டு விட்டது.      

இது அநேகமாக எல்லா மேட்டர்களுக்கு நாடுகளுக்கும் பொருந்தும்.

ஆனாலும், மேட்ற்கு ஐரோப்பாவில் பிரித்தானியாவில் சனத்தொகை வளர்ச்சி வீதமே அதிகம் என்பதையும் கவனிக்க வேண்டும்.   இந்த சனத்தொகை வளர்ச்சி  எனபது சட்ட அடிப்படையிலான மற்றும் அப்படி இல்லாத குடி வரவினாலேயே. இவர்களின் நுகர்வு சுவை வேறு, முக்கியமாக விலை தேவையை தீர்க்கும் மற்றும் தீர்மானிக்கும் பிரதான காரணியாகும்.

மற்றும் இளம் தலைமுறையினர்  (அதாவது want-it-now, buy-now-pay-later) , மாதந்த வேதனத் தலைமுறையினர் இடம் எறிந்து  செலவு செய்யக் கூடிய பராதீனமான வருமானம் இல்லை.

பொருளியல் வல்லுனர்களின் ஒரு பகுதியினரின் வாதம்  இனொன்றையும் சொல்கிறது.,

முக்கியமாக 2007 - 2009 இல் நடந்த கடன் மற்றும் பண நெருக்கடி மற்றும் முடக்கத்தை கையாள்வதற்காக மத்திய வங்கிகளினால் செயட்படுத்தப்படும் நிதி மற்றும் பணப் பரிமற்ற கொள்கை (quatitative easing) யம், அதன் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் (property, stock, shares)  கேள்வியையும் பெறுமதியையும்  ஏற்றப்படுத்துவதை அடித்தளமாக கொண்டு   பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் தளம்பல் இல்லாமல் நுகர்வை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புமே தற்போதைய இந்த இந்த பல்பொருள் அங்காடிகாலிலும் தாக்கத்தை ஏட்படுத்துகிறது என்ற வாதமும் உண்டு.

இதில் உண்மையும் இல்லாமல் இல்லை.   quatitative easing ஆல் அதிகரிக்கும் நிதி வேகம் முக்கியாமாக procutive productive economy  இ விடுத்து இந்த  அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் நோக்கியே நிதி சென்று தங்கி விடுகிறது என்றதும், மற்றும் இந்த சொத்துக்களை பெரும்பாலாக வைத்திருப்பதும் Baby boomers.  

இதனால் உடற்பது, மாற்றம் நுகர்வது பொருளாதாரத்தின் பக்கம் வரும் நிதி குறைவடைந்து வருகிறது என்றும்.

இத பற்றி எழுதவாததற்கு வேறு ஓர் பகுதியே வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

யபக்தியுள்ள வாடிக்கையாளர்கள் -

Loyal Customers??

நல்ல தமிழ் சொலலாடல்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3ம் தர நாடுகளில் இன்னும் துணி கடைக்கு சென்று பார்த்து ஆடைகள் வாங்கும் நிலையிலேயே உள்ளோம். இங்கு இணையப்பாவனை வளர்ந்தாலும் ஒன்லைனில் வியாபாரம் வளர்ச்சியடையுமா என்பது சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

3ம் தர நாடுகளில் இன்னும் துணி கடைக்கு சென்று பார்த்து ஆடைகள் வாங்கும் நிலையிலேயே உள்ளோம். இங்கு இணையப்பாவனை வளர்ந்தாலும் ஒன்லைனில் வியாபாரம் வளர்ச்சியடையுமா என்பது சந்தேகம்.

தொழில்நுட்பம்  வேகம் கூடின கால கட்டத்தில் இருக்கிறம் 5g தொழில்னுட்பம் மூன்றாம் உலக நாடுகளில் 2020ல் ஒரே நேரத்தில் தொழில்பட ஆரம்பிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது அந்த காலகட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் நடைபெறும் .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வங்கிகளால் எவ்வாறு நிதி தோற்றுவிக்கப்படுகிறது என்பதையும், அப்படிப்பட்ட நிதி எவ்வாறு வாங்கிளால் சொத்துரிமையை நோக்கி திசை திருப்பப்படுகிறது என்பதையும், அது எவ்வாறு பொருளாதார, மற்றும் நிதி நிலைத்த தன்மையை தளம்பும் நிலைகக்கு இட்டு செல்கிறது என்பதையும் மிகவும் இலகுவாக விளக்குகிறார்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

debenham நிறுவனம் இன்னும் சில தினங்களில் தனது நிதி நிலையினை அறிவுக்கும் என என்று  பத்திரிகை செய்தி வந்துள்ளது.

daily telegraph பத்திரிக்கைச் செய்திப்படி, 500மில்லியன் இழப்புடன் நொண்டிக் கொண்டிருக்கிறது 205 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த நிறுவனம். அதன் நாட்கள் எண்ணப் படுகின்றன என்கிறது இந்த பத்திரிகை.

தூர நோக்கில் ஒன்லைன் வியாபாரம் எப்படி செங்கல் + சீமெந்து நிறுவனங்களை  பாதிக்கப் போகின்றது என்பதை சிந்திக்க தவறிய நிறுவங்களின் கதை இப்படி தான் போகப் போகின்றது.

வீட்டினை அடமானம் வைத்து பணம் போட்டு தொடங்கும் தமிழ் கடைகளும் சிந்திக்க வேண்டும்... தூர நோக்கில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில ஆட்சி மாற்றம் வரப்போகுது பெட்டி படுக்கையுடன் அங்கதான் வரணும் போல உடுப்புக்கள் வாங்க  ஆடி தள்ளுபடிகள் என்றும் ஒன்றும் இல்லையாப்பா உந்த கடைகளில் :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Store closing down

பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 14 கடைகள் என்ற சராசரியில் பெருந்தெரு வியாபாரக் கடைகள் மூடப்படும் அதேவேளை.. துரிதகதி உணவுக்கடைகள் பெருக்கெடுக்கின்றன. 

About 14 shops are closing every day as UK High Streets face their toughest trading climate in five years, a report has found.

https://www.bbc.co.uk/news/business-46142025

Closures by type of stores

Closures by region

A net 1,123 stores disappeared from Britain's top 500 high streets in the first six months of the year, according to the accountancy firm PwC.

It said fashion and electrical stores had suffered most as customers did more shopping online.

Restaurants and pubs also floundered as fewer people go out to eat or drink.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

It said fashion and electrical stores had suffered most as customers did more shopping online.

இது எல்லாம் நுகர்வுகளின் தேவை மாற்றமும், அந்த நுகர்வு தேவைப்படும் சனத்தொகையின் கட்டமைப்பு மாற்றத்தை பொதுவாக கோடி காட்டி நிக்கிறது.

மேட்ற்குலக வாழ்க்கை அடிப்படைத் தேவைகளை தீர்க்கும் பெரிய, சிறிய வர்த்தக அமைப்புக்கள் பாதிக்கப்பட்டது மிக குறைவு.

ஆனாலும், பிருத்தானியாவை பொறுத்தவறையில், கடந்த ஆண்டு நடைமுறையில் வந்த அசையா சொத்துக்களின் பெறுமதி உயர்வின் (உண்மையாந பெறுமதி உயர்வா என்பது வேறு விடயம்) business rates அதிகாரரிப்பும் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி விட்டது போல் ஆகிவிட்டது.

இதில் நிச்சயமாக, 2008 இல் இருந்து வரும் நிதிக்கு கொள்கையான quatitative easing இந்த தாக்கம் வெளிப்படையாக புலப்படாமல் உள்ளது.

மற்றைய காரணிகள் (online ஷாப்பிங் போன்றவை) எல்லாம் இரண்டாம் மூன்றாம் நிலை காரணிகள். பிபிசி UK Goverment  இன் ஊது குழலாக அதனை மிகைப்படுத்துகிறது.

அசையா சொத்துக்களின் பெறுமதி உயர்வு  (உண்மையாந பெறுமதி உயர்வா என்பது வேறு விடயம்) quatitative easing ஆள் வந்தது. ஆனால், அதற்கேற்ப, நுகர்வு பொருளாதாரத்தின் பக்கம் வந்த நிதியின் வேகமும், கொள்ளளவும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாட்டை ஒத்தது.

இதனால், அடிப்படை தேவைகளை தவிர்த்து, மற்றைய தேவைகளுக்கு (அவை எல்லாமே ஆடம்பரம் என்றே கருத்தில் எடுக்கப்படும்)  செலவு செய்ய வேதனம் எடுக்கும் சனத்தொகையிடம் பணமில்லை.

அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, அவ்வப்போது, கிரெடிட் கார்டு அல்லது சேமிப்புக்களில் கைவைக்காமல் சமாளிப்பதற்கு  பெரும் பகுதியினர் விளிம்பில் திண்டாடுகின்றனர்.    

baby  boomers இல் மிகப்பெரும்பானமை, asset rich cash poor, அதனால் அவர்கழும் எறிந்து செலவு செய்யும் நிலையில் இல்லை.  எறிந்து செலவு செய்யும் நிலைக்கு, baby  boomers பெறுமதி போல் தோற்றமளிக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் நடக்க கூடிய சாத்தியமில்லை.

இவை எல்லாம், structural economic issues,. இதுவே brexit, Trump ஆட்சி கட்டிலில் ஏறியது, மற்றும் தீவிர வலது சாரி மற்றும் இனவாத கட்சிகளின் எழுச்சி போன்றவை இந்த பொருதாரத்தின் அரசியல் பிரதிபலிப்புக்கள்.   

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

லாபம் 10% வீழ்ச்சி. மேலும் 110 கிளைகளை இழுத்து மூடுகின்றது மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம். இந்த அறிவிப்பு இன்று வெளியானது.

https://www.msn.com/en-gb/money/business/mands-is-set-to-close-another-110-stores-after-profits-fall-by-nearly-10percent-to-£5232-million-this-year-as-high-street-bloodbath-continues-in-britain/ar-AABJ5gy?ocid=spartanntp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் பிரச்சனைகள்.

TOPSHOP 23 கிளைகளை பூட்டுவதாக அறிவித்துள்ளது.

https://www.bbc.co.uk/news/business-48367379

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.