• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி1)

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

"விதிவிலக்குகளைச் சான்றாகக் காட்டி, இதுதான் விதியாக இருந்தது என்று சொல்வது சரியா?" என்றார் நண்பர் கோபமாக.

"அப்படிச் சொன்னால் அது தவறுதான்!" என்றேன் நான்.

தமிழ் மண்ணில்சாதி புகுத்தியது ஆரியரா?

"சங்க இலக்கியத்தில், கபிலர் ஒருவர்தான் 'பிராமணர்களே நால்வகைச் சாதியைத் தமிழகத்தில் நாட்டியதாக'க் குற்றம் சாட்டுகின்றார். அதவிட்டா அடுத்த சாட்சி சூரியநாராயண சாஸ்திரி-ன்ற பரிதிமாற்கலைஞர்; இவ்விரு பிராமணர்களும் 'விதிவிலக்காக'க் கொள்ளப்படவேண்டியவர்கள். இவர்கள் குற்றம் சொல்வதை நம்பி, ஒட்டு மொத்த பிராமணர்களையே நால்வருணச் சாதியப் புகுத்துனவுங்கன்னு குற்றம் சொன்னா எப்பிடிப்பா?",என்றார் நண்பர்.

"தமது சுயநலத்துக்காகத் தாங்கள் தூக்கிப் பிடிக்கும் நால்வருணத் தத்துவத்தை பிராமணர்கள் மறுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பிராமணர்களின் நால்வருணத் தத்துவங்கள் மனிதகுலத்துக்கு விரோதம் என்று அவர்களுக்குள்ளேயே எழும் கலகக் குரல்கள் குறைவாகத்தானே இருக்கமுடியும்? இதுதானே உலக இயற்கை!", என்றேன் நான்.

"இருந்தாலும், கபிலர்-ன்னு ஒண்ணே ஒண்ணுதானே தமிழர்களால் காட்ட முடியுது! இது ஒனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?", என்றார் நண்பர் கோபமாக.

தொல்காப்பியரின் சாட்சியம்

"சரிப்பா! தமிழ் இலக்கியம் தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியரைப் பிராமணராக்கி,  'திரனதுமாக்கினியர்'ன்னு நாமகரணம் சூட்டி, அகத்தியர் என்னும் ஆரிய பிராமண முனிவரின் சீடர்-னுட்டு கத விடுறாங்கல்லப்பா! அவர் சொன்னதச் சொல்றேன் கேளு!

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.   தொல்காப்பியம்.பொருள்இலக்கணம்.4.3

மூவருண மேலோர், நாலாம் வருண கீழோர்-னு சொல்ற அனைவருக்குமான சமநீதி விதிமுறைகள் தமிழ் மண்ணில் இருந்த காலமும் உண்டு என்பது பொருள்; இப்ப கபிலருக்கும் முந்தைய இன்னொரு சாட்சியும் தந்துட்டேன்! போறுமா!" என்றேன் நான்.

வார்த்தை விளையாட்டுகள் செய்து மக்களைக் குழப்புவதில் வட ஆரியர்களை யாரும் விஞ்சிவிட முடியாது. ஆரியர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆரியர் கருத்துக்களை ஆரியர்களைவிட அதிகமாக நேசிக்கும் எமது நண்பரைப்போன்ற தமிழர்கள் ஆடும் ஆட்டம் அவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக இருக்கும்.

"கொஞ்சம் பொறுப்பா! Constitution Amendment போல, மனுதர்மமும் நெறைய மாற்றங்களைச் சந்திச்சு வந்திருக்கு! யுகத்துக்கு யுகம் அது மாறும்! மனுதர்மத்தைப் பற்றிய முழு உண்மையும் தெரியாமல் ஒங்கட்டுரைகள் இருக்கின்றன" என்றார்.

"அப்படியா! இருந்தாலும், மனிதகுலத்தை பிறப்பின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து, சூத்திரன் என்னும் ஒரு பிரிவு பெரும்பான்மை மக்களை, ஏனைய மூன்று பிரிவினருக்கும் அடிமை என்று கொத்தடிமை போடும் மனுவின் சட்டம் மானுடத்துக்கே எதிரானதல்லவா" என்றேன் நான்.

மனுதருமம் கலியுகத்துக்குச் சொல்லப்படவில்லை!

"ஒன்ன மாதிரி பலரும் இப்பிடித்தான் கேப்பிங்க!  ஒரு விஷயம் தெரியுமா?  மனுதர்மம் கலியுகத்துக்குச் சொல்லப்படவில்லை; பல மனுக்கள் உண்டு!  மானவ தர்மம்(मानवधर्मशास्त्र)  செய்த மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சொராஷ்ட்டிர மத வேதநூலான ஜெண்ட் அவஸ்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முனிவர்கள் மனுவை அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்து கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்து கொடுத்ததே மனுஸ்மிருதி. யுகங்களுக்கு ஏற்ப மாறுவது  ‘மனுஸ்மிருதி’-ங்கறது ஒனக்குத் தெரியாது,  அந்தந்த காலகட்டத்திற்கும்,  மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப,  பல்வேறு யுகங்களுக்கும் மனுஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது நீ குறிப்பிட்டுச் சொல்லும் மனுஸ்மிருதி கிருதாயுகத்திற்கானது. மனுசன சூத்திரன்-னு சொல்லுற  மனு ஸ்மிருதி இந்தகலியுகத்திற்கு பொருந்தாது. இது த்ரேதாயுகக் கால மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இதை கலியுகத்தில் பயன்படுத்தியது முன்னோர்கள் செய்த முதல் தவறு." என்றார் கொதிப்புடன்.

"ம்! மேல சொல்லு!" என்றேன் நான்.

பகவத்கீதையைப் பின்பற்றித்  திருக்குறள் எழுதப்பட்டதா?

"இந்தயுகத்திற்கான ஸ்மிருதி வேதவியாசரின் தந்தையான பராசரரால் உருவாக்கப்பட்ட ‘பராசரஸ்மிருதி’. இப்படி ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-னு சொல்ற திருக்குறளுக்கு முன்னயே 'மனுஷா எல்லாரும்  ஒண்ணு'தான்னு சரியாச் சொல்லுறது பகவத்கீதை மட்டும்தான்! பகவத்கீதையில அத்தனை சமஸ்கிருத சாத்திரங்களுக்கும் சரியான விளக்கம் இருக்கு. பகவத்கீதையைப் பின்பற்றித்தான் திருக்குறள் எழுதப்பட்டிருக்கு. அதத்தான் தொல்லியல் அறிஞர் நாகசாமி சொல்றார்", என்றார்.

"அப்படியா! கீதைல பகவான் என்ன சொல்றார்?" என்றேன் நான்.

கீதை குணத்தின் அடிப்படையில் வருணம் சொல்கிறதா?

நண்பர், "நாலு வர்ணம்-ங்கறத மனிதர் குணத்தின் அடிப்படையிலே, அதாவது, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் பிரிச்சதே பகவான்தான்.  ஒரு மனிதனின் குணத்தின் அடிப்படையில்தான் அவனோட வருணம் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை;  பிற்காலத்திலேதான் பிறப்பின் அடிப்படையில வர்ணம் வந்ததே தவிர, பகவான் அப்படியெல்லாம் உருவாக்கலே! அவரவர் குணத்த அடிப்படையாக் கொண்டதாலே, மனுஷாளோட கதிக்கு அவா அவாதான் பொறுப்பே தவிர, பகவான் இல்லன்றதயும் பகவானே கீதைல சொல்றார்.

"चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्।।4.13।।"
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்யகர்த்தாரமவ்யயம்."
என்றபடி, என்னையே உற்றுப்பார்த்தார்; அப்போது என்னிடம் இருந்த பதில் மௌனம் மட்டுமே!

என்ன பதிலையே காணோம்?" என்றார் நண்பர்.

"கீதை குறித்து நீ சொன்ன செய்திகளை சிறிது மறுவாசிப்பு செய்துவிட்டு வருகிறேன். "நான் உருவாக்கிய நால்வருணம் அவரவர் குண அடிப்படையிலேயே அமைகிறது; பிறப்பின் அடிப்படையில் இல்லை!"ன்னு பகவான் கிருஷ்ணர் சொல்றதாச் சொல்லுறே! சரி, அடுத்தவாரம் மீண்டும் விவாதிப்போம்" என்றேன் நான்.

"ஒரு வாரம் ஆனாலும் பகவத்கீதையில் புதிதாக ஒன்றும் வரப்போவதில்லை", என்றார் நண்பர்.

"உண்மை, ஆனால் நானே வாசித்து அறிந்தால் எனக்குத் தெளிவு கிடைக்குமல்லவா?" என்றேன் நான்.

ஒருவாரம் கழிந்தது! நான் அழைக்காமலேயே ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் ஆஜரானார் நண்பர்.

"என்னப்பா! இப்போவாது ஒனக்குத் தெளிஞ்சிருக்கும்னு நெனக்கேன்! கீதைல புதுசா ஒண்ணும் இல்லயே?", என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.

"அதான் போன வாரமே சொல்லிட்டயே! இருக்கதுதானே இருக்கும்!", என்றேன் நான்.

"அப்போ நீ புரிஞ்சத அடுத்த கட்டுரை-ல எழுது! திருக்குறள் மட்டுமல்ல, பகவத்கீதையும் உலகப் பொதுமறைதான்-ன்னு தலைப்புப் போட்டு ஜோரா எழுதுப்பா!" என்றார் மகிழ்ச்சியுடன்.

"மகாபாரதம் சீரியல்ல வர்ர "Title Song" பகவத்கீதை 2வது அத்தியாயம்.47வது சுலோகம். அது என்ன சொல்லுதுன்னு முதல்ல பார்ப்போமே! "உனக்கு விதிக்கப்பட்ட கடமை(கருமத்தை)யைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு. செயல்(கரும)களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை.உனது செயல்(கருமங்)களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையிலும் விருப்பம் கொள்ளாதே." என்கிறார் பகவான்[1].

இந்த ஸ்லோகத்தை நான் புரிஞ்சிச்கிட்டவரை சொல்றேன். சரியான்னு மட்டும் சொல்லு! சரின்னா மேலே விவாதம் செய்யாமல் போகலாம்", என்றேன் நான்.

"சரி", என்றார் நண்பர்.

"பலன் கருதாமல் கடமை(கருமம்)யைச் செய்."-னு பகவான் சொல்றாரு. கடமை(கருமம்)யைச் செய்யாமல் இருப்பதும் பாவம் என்கிறார் பகவான்.  சரியா", என்றேன் நான்.

'சரிதான்!", என்றார் நண்பர்.

"அடுத்த முக்கியமான செய்தி கீதையின் நான்காம் அத்தியாயத்தின் 13வது ஸ்லோகத்தில் வருது.

"மூவித இயற்கைக் குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகளும் என்னாலேயே ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக நீ அறியக் கடவாயாக." என்கிறார் பகவான்.[2]

"குணத்தின் அடிப்படையில்தான் நாலு வர்ணங்களும் பகவான் படைச்சாரே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை"-ன்னு நீ சொன்னது இதைத்தான் இல்லையா?" என்றேன் நான்.

"சரியான பாதைக்கு இப்ப வந்துட்ட. மேல சொல்லு!", என்றார் நண்பர்.

"ஒன்பதாம் அத்தியாயத்துல பகவான் சொன்ன 32வது சுலோகம் முக்கியமானதா எனக்குப்பட்டது. அதப் பார்க்கலாம்.

கீதை சொல்லும் 'பாவயோனி' பிறப்பைக் குறிக்கும் சொல்!

"ப்ருதாவின் மைந்தனே! என்னிடம் அடைக்கலம் கொள்பவர்கள், அவர்கள் பாவ யோனியில் பிறந்த இழிய பிறவியைச் சேர்ந்தவராயினும் - பெண்டிர், வைசியர்கள்(வணிகர்), சூத்திரர்கள்(தொழிலாளர்) - பரமகதியை அடைய முடியும்.[3]

பாவயோனி வழியாகப் பிறந்த  இழிபிறவி என்று சொல்வதால், பிறப்பைக் கொண்டே ஒருவரின் தகுதி தீர்மானிக்கப் படுவதாக ஐயம் கொள்வதற்கு இச்சூத்திரம் இடமளிக்கிறது அல்லவா?" என்றேன் நான்.

இதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பரின் முகத்தில் பதட்டம் தொற்றிக்கொண்டது. "உன் பிரச்னையே இதான். Basic Definition தர்ர நாலாம் சாப்டர்-லையே தெளிவா 'குணத்தின் அடிப்படை'-ன்னு வரையறை கொடுத்த பிறகு, ஒம்பதாம் சாப்டர்-ல ஒனக்கு சந்தேகம் ஏன் வரணும்?. இது ஓங் குசும்பக் காட்டுது", என்று படபடத்தார் நண்பர்.

"சந்தேகத்தத்தான் கேட்டேன்! ஏன் பதறுகிறாய்? இருப்பதுதானே இருக்கும்-னு கூலாச் சொன்ன நீ இப்பக் கொஞ்சம் பொறுமையாக் கேளுப்பா!" என்றேன் நான்.

"சரி, சரி, மேலே சொல்லு!", என்றார் நண்பர்.

"ஓகே. வளவள-ன்னு இழுக்காமே கீதையின் இறுதியான பதினெட்டாம் அத்தியாயத்துக்கு வருவோம். "திருக்குறள்-ல துறவு முதலில் வருது. கீதைல கடைசி பதினெட்டாம் அத்தியாயத்துல துறவின் பக்குவம்-அதாவது The Perfection of Renunciation-ன்னு வருது. இத மட்டும் பாத்துட்டு முடிவுக்கு வந்துருவோம்!", என்றேன் நான்.

"சரி!", என்றார் நண்பர்.

பிறப்பே தகுதியைத் தீர்மானிக்கிறது என்கிறது கீதை!

"பதினெட்டாம் அத்தியாயத்தின் 41ஸ்லோகத்துல பகவான் இப்படிச் சொல்லியிருக்கார்:

"எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! பிறப்பினால் ஏற்படும் குணபாவங்களால்  நிகழும் அவரவர் செயல்(கருமங்)களின் தன்மைகளுக்கு ஏற்ப, பிராமணர்கள், சத்திரியர்கள்,வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரித்து அறியப்படுகிறார்கள்."[4] இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்: தாங்கள் வாழும் உடலின் முக்குணத் தன்மைக்கேற்ப, பகவான் விதித்துள்ள செயல்களைச் செய்து பகவானை வழிபடுவதன் மூலம் அனைவரும் வெற்றி பெறலாம்; இச்செயல்களைப் பகவான் ஆறு ஸ்லோகங்களில் விவரித்துள்ளார்.  அவரவர் பிறப்பினால் ஏற்படும் சத்துவ, ரஜ, தமோ குணங்களுக்கு ஏற்ப பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் என்னென்ன கடமைகள் அல்லது செயல்கள் செய்யவேண்டும் என்பவை பகவானால் வரையறுக்கப்பட்டுள்ளன" என்பதாகும். இதன் பொருள் நால்வருணத்தாருக்கும் பகவானே என்னென்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதையும், அச்செயல்களைச் செய்வதன் மூலமே பகவானை வழிபட்டு வெற்றியடைய முடியும் என்பதையும் பகவானே வரையறுத்துள்ளார். சரிதானே?" என்றேன் நான்.

நால்வருணத்தாரின் வேலைகளையும் கீதை வரையறுக்கிறது!

படபடப்பான நண்பர் "ஆறு ஸ்லோகங்களையும் படித்துவிட்டு, உன் கருத்தைப் பிறகு சொல்லு.", என்றார்.

"சரி, அடுத்த மூன்று ஸ்லோகத்துக்குச் செல்வோம். இவற்றில், ஆரியவேத சமுதாயத்தின் நால்வருணத்தாரும் இன்னென்ன வேலைகள்தான்  செய்ய வேண்டும் என்று பகவானே வரையறுத்துக் கூறுகின்றார். 18.42ம் ஸ்லோகம் பிராமணன் செய்யவேண்டிய வேலை என்ன என்று கூறுகின்றது. "அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், அறிவு மற்றும் முழுமுதற்கடவுளே அனைத்தையும் கட்டுப்படுத்தும் சர்வவல்லமை கொண்டவர் என்னும் ஆத்திக அறிவு ஆகிய தன்மைகளால் பிராமணர்கள் செயல்படுகின்றனர். ஆக, பிராமணர்களின் வேலை, மேற்கூறிய தகுதிகளுடன் தவம் செய்வது[5]" என்றேன் நான்.

"சரிதான்! மேலே சொல்லு!" என்றார் நண்பர்.

" கீதை-பதினெட்டாம் அத்தியாயத்தின் நாற்பத்து மூன்றாம் ஸ்லோகம்.18.43 சத்திரியன் செய்யவேண்டிய வேலை என்ன என்று கூறுகின்றது. தீரம், வலிமை, உறுதி, வழமை, போரில் வீரம், ஈகை, மற்றும் தலைமை ஆகியன சத்திரியனின் கருமம் என்கின்றது[6]", என்றேன் நான்.

வேளாண்மையும் வைசியனின் தொழிலே!

"இன்னம் மீதி இரண்டையும் சொல்லி முடி", என்றார் நண்பர் பொறுமை இழந்து.

"சரி! கீதையின் 18.44ம் ஸ்லோகம் வைசியனுக்கும், சூத்திரனுக்கும் விதிக்கப்பட்ட கருமங்களைச் சொல்கின்றது. விவசாயம், கால்நடைகளை வளர்த்தல் மற்றும் வியாபாரம் ஆகியன வைசியனின் கருமங்கள் என்றும், ஏனைய மூன்று மேல்வருணத்தாருக்காக உழைப்பதும், பணிவிடை செய்வதும் சூத்திரர்களின் கருமங்களாகும்[7].", என்றேன் நான்.

"சரி, அடுத்த ஸ்லோகத்துக்குச் செல்', என்றார் நண்பர்.

தமிழ் இனத்தில் சூத்திரர் இல்லை!

"சற்று பொறு! கீதையின் 18.44ம் ஸ்லோகம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லுகிறது. வேளாண்மை என்னும் விவசாயம் வேளாளர்களின் தொழில் என்று தமிழர்களின் தொல்காப்பியம் மரபியல் சொல்லுகின்றது. ஆனால், விவசாயம் வைசியரின் தொழில் என்று பகவத்கீதை சொல்லுகின்றது. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்னும் நான்கு பிரிவுகளையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமன்பாடு செய்யும் முயற்சியை ஆரியர்கள் தொல்காப்பியர் காலம்தொட்டு செய்துவருகின்றனர். ஆரியப்பிராமணர்களின் புரட்டு வாதம் முற்றிலும் தவறு என்பதற்கு பகவத்கீதையே சாட்சி மட்டுமல்ல, தமிழகத்தில் சூத்திரர் என்று ஒரு வகுப்பாரே இருந்தது இல்லை என்பதையும் பகவத்கீதையின் இச்சுலோகத்திலிருந்து வெளிச்சத்துக்கு வருகின்றது.", என்றேன் நான்.

நண்பரின் கைப்பேசி ஒலிக்கவே,  அவசர வேலையைக் காரணம் காட்டி, நழுவினார் நண்பர்.

பிறப்பின் அடிப்படையிலேயே கீதையில் நால்வருணம் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை, கீதைக்கு விளக்கம் எழுதிய அத்வைத மதநிறுவனரும் ஸ்மார்த்த குருவுமான ஆதிசங்கரர், துவைத மதநிறுவனர் மத்துவர், விசிஷ்ட்டாத்வைதம்  மதநிறுவனர் இராமானுஜர், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா உள்ளிட்டோர் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளனர். உலகப் பொதுமறை திருக்குறள் சொல்லும் உலகப் பொதுஅறம் பகவத்கீதையில் தப்பித் தவறி எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் காண்போம்.

 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

ஆய்வுக் குறிப்புகள் - Research References

1. "कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि।।2.47।।

karmaNyevadhikaraste ma phalesu kadäcana
mä karma-phala-hetur bhürmä te sango’ stv akarmaNi
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன
மா கர்மபல ஹேதுர்பூர்மா தே ஸங்கோ' ஸ்த்வகர்மணி."
(Meaning: You have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your activities, and never be attached to not doing your duty.

2. "चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्।।4.13।।"

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்யகர்த்தாரமவ்யயம்.
cātur-varṇyaṁ mayā sṛṣṭaṁ guṇa-karma-vibhāgaśaḥ
tasya kartāram api māṁ viddhy akartāram avyayam
Meaning of words
catur-varnyam—the four divisions of human society; maya—by Me; srstam—created; guna—quality; karma—work; vibhagasah—in terms of division; tasya—of that; kartaram—the father; api—although; mam—Me; viddhi—you may know; akartaram—as the non-doer; avyayam—being unchangeable.
English Translation of the Sloga:
According to the three modes of material nature and the work ascribed to them, the four divisions of human society were created by Me. And, although I am the creator of this system, you should know that I am yet the non-doer, being unchangeable.

3. मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9.32।।

மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோநய:।
ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தே அபி யாந்தி பராம் கதிம்॥ 9.32 ॥
māḿ hi pārtha vyapāśritya ye ’pi syuḥ pāpa-yonayaḥ
striyo vaiśyās tathā śūdrās te ’pi yānti parāḿ gatim ॥ 9.32 ॥
English Translation of Bhagavad Gita 9.32: O son of Pritha, those who take shelter in Me, though they be of lower birth—women, vaishyas [merchants] and shudras [workers]—can attain the supreme destination.

4. ["ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परंतप।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः।।18.41।।

ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப।
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥
brāhmaṇa-kṣatriya-viśāḿ śūdrāṇāḿ ca paran-tapa
karmāṇi pravibhaktāni svabhāva-prabhavair guṇaiḥ
Translation of Bhagavad Gita 18.41 Brahmanas, kshatriyas, vaishyas and shudras are distinguished by the qualities born of their own natures in accordance with the material modes, O chastiser of the enemy.
Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: However, the living body filled with the three gunas becomes successful by worshipping the Supreme Lord by prescribed activities according to his nature. This is described in six verses. These activities or duties, designated precisely (pravibhaktani) by the gunas of sattva, rajas and tamas, which manifest by birth (svabhavena), are prescribed for the brahmanas, ksatriyas, vaisyas.]

5. [शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम्।।18.42।।

ஷமோ தமஸ்தப: ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச।
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்॥ 18.42 ॥
śamo damas tapaḥ śaucaḿ kṣāntir ārjavam eva ca
jñānaḿ vijñānam āstikyaḿ brahma-karma svabhāva-jam
Translation: Peacefulness, self-control, austerity, purity, tolerance, honesty, knowledge, wisdom and religiousness—these are the natural qualities by which the brahmanas work.
Commentary by Sri Sridhara Swami of Rudra Sampradaya:
The natural duties of a brahmin or priestly class are given by Lord Krishna. Serenity is control of the mind. Self-control is controlling the impulses of the external senses. Purity is internal and external cleanliness. Forbearance is forgiveness. Straightforwardness means without duplicity. Knowledge is understanding the Vedic scriptures. Realisation is experiencing direct cognition. Faith is the conviction that the Supreme Lord Krishna is the supreme controller of all. All these duties of brahmins are born of their nature in sattva guna the mode of goodness.
Now Lord Krishna commences a new theme with this verse explaining that the duties of the different classes of Vedic society such as brahmana or priestly class, ksatriya or royal and warrior class, vaisya or agricultural and mercantile class as well as sudra or menial worker class which is the only one not qualified to take part in any Vedic activity as they serve the other three classes. The duties enjoined for all the classes are clearly delineated and itemised with distinct divisions. The typical duties of all the four classes will be described according to the predominating influence of the three gunas which manifest the corresponding nature determined by the tendencies acquired in past lives and the impressions from the attendant karma or reactions to actions. The brahmins have a predominance of sattva guna, the ksatriya’s a predominance of raja guna with a little sattva guna, the vaisyas with raja guna mixed with tama guna and the sudras with a predominance tama guna and a little raja guna.]

6. शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम्।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम्।।18.43।।

ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்।
தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥
śauryaḿ tejo dhṛtir dākṣyaḿ yuddhe cāpy apalāyanam
dānam īśvara-bhāvaś ca kṣātraḿ karma svabhāva-jam ॥ 18.43 ॥
Translation:Heroism, power, determination, resourcefulness, courage in battle, generosity and leadership are the natural qualities of work for the kshatriyas.

7. कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम्।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम्।।18.44।।

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்।
பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥
kṛṣi-go-rakṣya-vāṇijyaḿ vaiśya-karma svabhāva-jam
paricaryātmakaḿ karma śūdrasyāpi svabhāva-jam
Translation of Bhagavad Gita 18.44: Farming, cow protection and business are the natural work for the vaishyas, and for the shudras there is labor and service to others.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நான் உங்கள் கருத்தை குறைசொல்லவில்லை. நீங்கள் சொன்ன சுவிச்சலண்டு நாட்டை பற்றிய தகவல்களில் தனது மொழில் தான் முதலில் அறிவிப்பு வர வேண்டும் என்று நிற்கிற விமல் வீரவன்சவும் மனோ கணேசனும் அங்கேயும்  இருக்கிறார்கள் என்பதே எனது வியப்பு.
  • 'தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நன்றி.
  • படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்தூரம் செல்லவேண்டிய நிலைமையில் இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்க பிரச்சாரகர் எலிசபெத் கேடி ஸ்டான்ட்டன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மகளிர் உரிமை மாநாட்டில் பேசி சர்ச்சையை உருவாக்கினார். அது ரொம்ப பெரிய ஆசை என்று அவருடைய ஆதரவாளர்களே கூட கருதினர். இதற்கிடையில் பாஸ்டன் நகரில், திரையில் வெற்றி பெற முடியாத ஒரு நடிகர் ஒரு கண்டுபிடிப்பாளராக தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஒரு பட்டறை ஷோரூமில் சிறிய இடத்தை அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். மரத்தில் எழுத்துகளை செதுக்குவதற்கு தனது மெஷினை விற்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆனால், மரத்தில் எழுத்துருக்களை செதுக்குவது அப்போது வழக்கொழியத் தொடங்கிவிட்டது. அந்த இயந்திரம் நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது. ஆனால் அதை வாங்க யாரும் விரும்பவில்லை. நம்பிக்கை இழந்திருந்த அவரை, விற்க முடியாமல் கிடந்த தையல் மெசின்களை பார்க்கும் படி அந்த பட்டறையின் உரிமையாளர் அழைத்தார். அது சரியாக விற்கவில்லை. பல தசாப்தங்களாக பலர் முயற்சி செய்தும், அந்த மெஷினை விற்பனைக்கு ஏற்ற அளவில் யாராலும் தயாரிக்க முடியவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐசக் மெரிட் சிங்கர் வாய்ப்பு தெளிவாக இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிராத காலம் அது - நியூயார்க் ஹெரால்டு பின்வருமாறு கூறியிருந்தது: ``தங்கள் வேலைக்கு மிகக் குறைந்த அளவு ஊதியம் தரப்படும் வேறு பெண் தொழிலாளர்கள் இல்லை அல்லது கடினமாக உழைக்கும் வேறு பெண்களை பார்த்திருக்க முடியாது'' என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால், துணி தைக்க அதிக நேரம் தேவைப்பட்டது - ஒரு சட்டை தைக்க 14 மணி நேரம் ஆனது. எனவே வேகமாக துணி தைக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற தேவை அப்போது இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு மட்டும் தான் அந்தச் சிரமம் என்றில்லை: பெரும்பாலான மனைவியரும், மகள்களும் துணி தைக்க வேண்டும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. சமகால எழுத்தாளர் சாரா ஹாலே கூறியுள்ளபடி, அந்த ``ஒருபோதும் முடிவுறாத - எப்போதும் தொடக்கமாகவே உள்ள'' அந்த வேலையானது பலரையும் ``சர்வகாலமும் துயரத்திலேயே இருக்கும் நபர்களாக'' ஆக்குவதாக இருந்தது. பாஸ்டன் தொழிலகத்தில், கண்டுபிடிப்பாளர் அந்த மெஷினைப் பார்த்து சொன்னார்: ``பெண்களை அமைதியாக வைத்திருக்கும் ஒரே விஷயத்தையும் மாற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்று கூறினார். திரையில் தோற்றுப் போய், கண்டுபிடிப்பாளராக மாறிய அந்த நபர் ஐசக் மெர்ரிட் சிங்கர். பகட்டாக உடுத்தக் கூடிய, கவர்ச்சியுள்ள மற்றும் தாராள சிந்தனை உள்ளவராகவும், அதேசமயம் கடுமையானவராகவும் இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுதல் சிங்கர் தையல் மிஷின் 1851 பேடண்ட் உரிமை பெற்றது திருத்த முடியாத அளவுக்கு, நிறைய பெண்களுடன் காதல் கொண்டவராக இருந்த அவர் குறைந்தது 22 குழந்தைகளுக்குத் தந்தையானார். பல ஆண்டுகளாக அவர் மூன்று குடும்பங்களைப் பராமரித்து வந்தார். மூன்று பேருக்குமே, மற்ற இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் இன்னொருவரையும் அவர் திருமணம் செய்து கொள்வார். அவர் தன்னை அடித்தார் என்று யாராவது ஒரு பெண் புகார் சொல்வார். அவருடைய நடத்தை சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றாலும், இயல்பாக சிங்கர் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய ரூத் பிரான்டன், ``பெண்ணிய இயக்கத்துக்கு உறுதியாக முதுகெலும்பை உருவாக்கிய மனிதர்'' என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தையல் மெஷினுக்கான அடிப்படையான மாதிரியை சிங்கர் உருவாக்கினார். ``ஊடூசி வட்டமான பாதையில் அசைவதற்குப் பதிலாக, அது நேர்க்கோட்டில் முன்னும் பின்னும் செல்லும் வகையில் வடிவமைக்க விரும்புகிறேன். ஊசியின் பட்டை, வளைவான ஊசியை கிடைமட்டமாக நகர்த்துவதற்குப் பதிலாக, நேரான ஒரு ஊசி மேலும் கீழும் செல்வது போல உருவாக்க விரும்புகிறேன்'' என்று தொழிலகத்தின் உரிமையாளரிடம் அவர் கூறினார். சிங்கர் தனது மெஷின்களுக்கு காப்புரிமை பெற்று, விற்பனை செய்யத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது: முதலாவது வடிவமைப்பு நன்கு செயல்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஒரு சட்டையைத் தைக்க முடிந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிங்கர் மிஷின் விளம்பரம் - 1900 துரதிருஷ்டவசமாக, மற்ற கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மற்ற கருவிகளையும் அது சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. பள்ளம் உள்ள, கண் போன்ற துளையுள்ள ஊசி, முடிச்சு போடும் தையல், துணியை உள்ளே தள்ளுவதற்கான நுட்பம் கொண்டவை என பல அப்போது பயன்பாட்டில் இருந்தன. 1850களின் ``தையல் மெஷின் போர்'' நடந்த காலத்தில், தையல் மெசின் தயாரிப்பாளர்கள், தங்கள் மெசின்களை விற்பதைவிட பிற தயாரிப்பாளர்கள் மீது காப்புரிமை மீறியதாக வழக்குப் போடுவதில்தான் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு வழக்குரைஞர் அவர்களை ஒன்று சேர்த்தார். ஒரு நல்ல தையல் மெஷினை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நான்கு தரப்பினரிடம் இருந்தன. அவற்றுக்கு லைசென்ஸ் வாங்கி, ஒன்றாக பயன்படுத்தி ஏன் தைக்கக் கூடாது என யோசித்தார். சட்டப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தையல் மெஷின் மார்க்கெட் சூடு பிடித்தது - அதில் சிங்கர் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியாளர்களைவிட அவருடைய தொழிற்சாலைகள் எப்படி வித்தியாசமாக இருந்தன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ளக் கூடிய பாகங்களைக் கொண்டதாக இருந்த ``அமெரிக்க முறையிலான'' மெஷின் என்ற வகையில் மற்றவர்கள் தயாரித்தனர். அப்போதும் இந்த நடைமுறைக்கு சிங்கர் மாறுவற்கு தாமதமானது. கைகளால் தயாரிக்கப்பட்ட பாகங்களையும், கடைகளில் வாங்கப்பட்ட போல்ட், நட்களையும் கொண்டு அவருடைய மெஷின்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சிங்கரும், அவருடைய வர்த்தக பங்காளர் எட்வர்ட் கிளார்க்கும் வேறொரு வழியில் முன்னோடிகளாக இருந்தனர். சந்தைப்படுத்துதலில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். தையல் மெஷின்கள் விலை அதிகமாக இருந்தது. சராசரி குடும்பம் பல மாதங்கள் சேமித்தால் தான் அதை வாங்க முடியும் என்றிருந்தது. மெஷின்களை தவணை கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கிளார்க் முன்மொழிந்தார். குடும்பத்தினர் மாதம் சில டாலர்கள் வாடகைக்கு அந்த மெஷின்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகையாக அவர்கள் செலுத்திய பணம், மெஷினின் விலையை எட்டிவிட்டால், அந்த மெசின் அவருக்குச் சொந்தமாகிவிடும். முந்தைய ஆண்டுகளில் இருந்த மெதுவாக தைக்கும், அதிகம் நம்பியிருக்க முடியாத மெஷின்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு இது உதவிகரமாக இருந்தது. சிங்கர் நிறுவனத்தின் ஏஜென்ட்களும் அதற்கேற்ப பணியாற்றினர். மெஷினை வாங்கும் போது, அதை பொருத்திக் கொடுப்பதுடன், அது நன்கு செயல்படுகிறதா என பார்ப்பதற்கு அவ்வப்போது சென்று வந்தனர். அப்போதும் சந்தைப்படுத்தலில் ஒரு பிரச்சினை இருந்தது. பெண்ணின வெறுப்பு என்ற ரூபத்தில் பிரச்சினை வந்தது. "தையல் மெசினை திருமணம் செய்ய முடியும்போது..." இதற்கு இரண்டு கார்ட்டூன்களை ஸ்டான்டன் உருவாக்கினார். ஒரு தையல் மெசினை உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஏன் ``தையல் மெசினை'' வாங்குகிறீர்கள் என்று ஓர் ஆண் கேட்பது போல ஒரு கார்ட்டூன் இருந்தது. பெண்கள் தங்களது ``அறிவை வளர்த்துக் கொள்ள'' கூடுதல் நேரம் கிடைக்கும் என்று விற்பனையாளர் சொல்வது போல இன்னொரு கார்ட்டூன் இருந்தது. அதில் சொல்ல வந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டது. விலை உயர்ந்த இந்த மெஷின்களை பெண்களால் இயக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தன் சொந்த வாழ்க்கையில் பெண்களை எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தியிருந்தாலும், இந்த மெஷினை பெண்கள் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதில் தான் அவருடைய வியாபாரம் சார்ந்திருந்தது. நியூயார்க் பிராட்வே பகுதியில் ஒரு கடையை அவர் வாடகைக்கு எடுத்து, இந்த மெசின்களை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுவதற்காக சில இளம் பெண்களை பணிக்கு அமர்த்தினார். அங்கு நல்ல கூட்டம் கூடியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption1907 எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படம் முடிவெடுக்கும் நபர்களாக பெண்கள் உருவாகலாம் என்பதாக சிங்கரின் விளம்பரங்கள் இருந்தன. ``தயாரிப்பாளரால் நேரடியாக குடும்பத்தின் பெண்களுக்கு விற்கப்படுகிறது'' என்று விளம்பரம் செய்தார். பெண்கள் நிதி சுதந்திரம் பெற ஆசைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை அது உருவாக்கியது. ``நல்ல பெண் தையல் தொழிலாளி ஆண்டுக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்க முடியும்'' என்று விளம்பரம் செய்தார். 1860 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படி புகழ்ந்தது: வேறு எந்த கண்டுபிடிப்பும் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு ``இவ்வளவு பெரிய விடுதலையை'' அளிக்கவில்லை என்று எழுதியது. தையல் பெண்மணிகள், ``குறைவான உழைப்பில், நல்ல வருமானத்தை'' ஈட்டத் தொடங்கினர். அப்போதும், "ஆணின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு'' என்று கூறி, தி டைம்ஸ் பத்திரிகை பாலின பெருமை பேசியது. ஒரு பெண்மணியை நாம் கேட்டால் தெரிந்துவிடும். 1860ல் வெளியான Godey's Lady's Book and Magazine-ல் சாரா ஹாலே இப்படி கூறியுள்ளார்: ``ஊசியுடன் வாழ்ந்த பெண்மணி, இரவில் ஓய்வெடுக்க முடிகிறது. குடும்ப வேலைகளை கவனிக்கவும், மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடவும் பகல் பொழுதில் பெண்ணுக்கு நேரம் கிடைக்கிறது. இது உலகிற்கு பெரிய லாபம் இல்லையா?'' என்று அவர் கூறியுள்ளார். வோக் கேபிடலிசம் என்னும் 'முற்போக்கு முதலாளித்துவம்' பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா? சில்லரை வருமானங்களில் தாம் அக்கறை காட்டுவதாக சிங்கர் கூறினார். மிக உயர்வான சுய அக்கறையுள்ள உந்துதல்களால் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு அவர் நிரூபணமாக இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-51125872
  • "இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் படத்தின் காப்புரிமைTWITTER/BOBBLACKMAN கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு. சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன்? பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன். ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன். தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார். 'பாரத் மாதா கி ஜே' பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார். https://www.bbc.com/tamil/global-51255035