Jump to content

சுற்றிலும் வெள்ளம்; 8-வது நாளாக குகைக்குள் சிக்கி இருக்கும் தாய்லாந்து கால்பந்து சிறுவர் அணி: மீட்புப்பணியில் ஆயிரம் வீரர்கள்


Recommended Posts

தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வழிகள் என்னென்ன?

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. பிறகு, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

இந்த மீட்புப் பணியை சிறுவர்களின் நலம் குறித்த பதற்றத்தோடும், மீட்புப் பணியின் சாகசத் தன்மை குறித்த ஆச்சரியத்தோடு உலகம் உற்று நோக்கி வந்தது. 'காட்டுப் பன்றிகள்' என்று பெயரிடப்பட்ட இந்த சிறுவர் கால்பந்து அணி குகையில் தொலைந்து போனது முதல், மீட்கப்பட்டது வரையிலான 17 நாள் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்கே..

மீட்புத் திட்ட வரைபடம் Image captionஇப்படித்தான் மீட்பார்கள்....

எப்படிக் காணாமல் போனார்கள்?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

 

 

குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.

அவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.

ஆனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

இந்த குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் இருந்தது.

சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் வெளியானது, எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது. எனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது.

குகைக்குள் மீட்புக் குழு...படத்தின் காப்புரிமைTHAI NAVY SEALS Image captionகுகைக்குள் மீட்புக் குழு...

அப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது.

ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர்.

நான்கு மாதமும் இப்படியே உணவும் மருந்தும் சப்ளை செய்து அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறை ஒரு முக்குளிக்கும் வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"படத்தின் காப்புரிமைEPA / THAI NAVY

சிக்கிக் கொண்ட சிறுவர்களும், பயிற்சியாளரும் குகையில் இருந்து குடும்பத்தினருக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் மனதை உருக்கின.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

மீட்புத் திட்டம்

ஒரு இடத்தில் 40 செமீ அகலமே உள்ள திறப்பு....

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

குகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. ஒரு இடம் வெறும் 40 செ.மீ. அகலம் மட்டுமே உடையது. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும்.

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

முழு முகத்தையும் மூடும் கவசம்

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வரும் வகையிலும், ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வகையிலும் மீட்புப் பணி திட்டமிடப்பட்டது. மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

ஆனால் மீட்புப் பாதை என்பது வெறும் நீந்தும் வகையில் மட்டும் இல்லை. நடப்பது, பாறை ஏறுவது, சேற்றில் நடப்பது போன்றவற்றையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சேம்பர் 'சி' என்ற இடத்தை அடைந்த பிறகு அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு நடந்தே வந்துவிடலாம். அந்த இடத்தில்தான் மீட்புப் பணியாளர்கள் முகாம் அமைத்திருந்தனர்.

குகைக்குள் சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்தில் காற்றில் ஆக்சிஜன் விகிதம் வீழ்வது அச்சுறுத்துவதாக இருந்தது. சாதாரணமாக காற்றில் 21 சதவீத ஆக்சிஜன் இருக்கவேண்டும். ஆனால், குகைக்குள் 15 சதவீதம் வரை ஆக்சிஜன் அளவு வீழ்ந்தது. எனவே, மீட்புப் பணியாளர்கள் இதுவரை நூறு ஆக்சிஜன் உருளைகளை சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்துக்கு கடும் இடர்ப்பாடுகளுக்கு இடையில் கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன், மீட்புப் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவர் உள்ளிட்ட 9 முக்குளிக்கும் வீரர்கள் சிறுவர்களுக்குத் துணையாக குகைக்குள் சென்று தங்கிவிட்டனர்.

மீட்பு

ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் மீட்புப் பணியில் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேவைப்படுகிறவர்களை உடனடியாக ஏற்றிச் செல்வதற்கு வசதியாக ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. நான்கு பேர் மீட்கப்பட்டவுடன், காற்றுக்குடுவைகளை நிரப்புவதற்காகவும், அடுத்தகட்டத்தை திட்டமிடுவதற்காகவும், இரவு நேரத்தில் மீட்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

குகைக்குள்ளே சிறுவர்களோடு துணையாக இருந்துவிட்டு கடைசியாக வெளியேறிய ஒரு டாக்டர் உள்ளிட்ட நான்கு மீட்பு வீரர்கள்.படத்தின் காப்புரிமைEPA

திங்கள்கிழமை தொடங்கிய இரண்டாவது நாள் மீட்புப் பணியும் வெற்றிகரமாகவே தொடர்ந்தது. ஆனால், இரண்டாவது நாள் மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களில் சிலர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களும் நலமுடனே இருப்பதாக பின்பு தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் யாரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. எனினும், செவ்வாய்க்கிழமை சில சிறுவர்கள் கண்ணாடி வழியாகத் தங்கள் பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

சீல்கள்

செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாள் மீட்புப் பணியை உற்சாகத்தோடு தொடங்கியது தாய்லாந்தின் கடற்படை சீல் அணி. தொடக்கம் முதல் மீட்புப் பணியை ஒருங்கிணைத்ததும், முன்னணியில் நின்றதும் இந்த அணியே. கடல், வான், நிலப் பரப்புகளில் செயல்படும் உயர் திறன் வாய்ந்த அணிகளையே சீல் அணி என்பர். (SEAL என்ற ஆங்கிலச் சொல், SEA, AIR and LAND என்பதன் முதல் எழுத்துகளின் சுருக்கமே ஆகும்).

மூன்றாம் நாள் மீட்புப் பணியை மேற்கொள்ள 19 தாய்லாந்து கடற்படை சீல் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர்.

முதல் இரண்டு நாள்களைப் போல அல்லாமல் செவ்வாய்க்கிழமை மீட்புப்பணி நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கும் மாறாக மிக விரைவிலேயே மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தது. கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் வெளியேறிய பிறகே, அவர்களுடன் தங்கியிருந்த மருத்துவர், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட நான்குபேர் கடைசியாக குகையை விட்டு வெளியேறினர்.

படிப்பினை

இயற்கையின் சிக்கலான குகை அமைப்பையும், ஆபத்தான மீட்புப் பணியையும் உலகம் வாய்பிளந்து பார்த்தது. அது மட்டுமல்ல, இடர் கால மீட்பு என்ற துறை படித்துக் கொள்வதற்கு இந்த சம்பவம் மிக அரிதான பாடங்களை அளித்தது. கண்டுபிடிக்கப்படும் வரை முதல் 9 நாள்கள் குகைக்கடியில் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கையும், உற்சாகமும் குறையாமல் காத்திருந்த சிறுவர் அணியின் மன உறுதி குறிப்பாக கவனிக்கப்பட்டது. உறுதியோடு இந்த அணியை காத்திருக்கச் செய்ததில் பயிற்சியாளர் ஏக்போலின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

தேச, இன, நிற எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் இருந்து வந்த மீட்புப் பணியாளர்களின் உதவியும், எல்லை கடந்த மானுடத்தின் வாஞ்சையும், எதிர்பார்ப்பும் இந்த நெருக்கடிக்கு ஒரு மனிதாபிமானக் கோணத்தையும் அளித்தன.

https://www.bbc.com/tamil/global-44789984

Link to comment
Share on other sites

சிறுவர்களை மீட்க உதவிய வைத்தியருக்கு குகைக்கு வெளியே காத்திருந்த அதிர்ச்சி

 

 

தாய்லாந்தில் குகைக்குள் சிக்குண்ட சிறுவர்களுடன் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்த அவுஸ்திரேலிய வைத்தியர் நேற்று குகையிலிருந்து வெளியே வந்தவுடன் தனது  தந்தை இறந்தது துயரச் செய்தியை எதிர்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடிலெய்டை சேர்ந்த ரிச்சட் ஹரிஸ் என்ற வைத்தியர்  இவ்வாறான இக்கட்டான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

குகைக்குள் சிக்கிய சிறுவர்களையும் பயிற்றுவிப்பாளர்களையும் காப்பாற்றுவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களில் ஒருவர் என  வைத்தியர்ஹரிஸ் கருதப்படுகின்றார்.

நீச்சல் சுழியோடுதல் குகைக்குள் செல்லுதல் போன்றவற்றில் திறமைவாய்ந்தவரான இவர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த வேளை சிறுவர்களின் நிலையை அறிந்துள்ளார்.

australian_doctor.jpg

இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மீட்பு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு சென்று ஆபத்தான குகைகள் ஊடாக சிறுவர்களை சென்றடைந்து அவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார்.

மேலும் அவர் எந்த சிறுவனை முதலில் வெளியேற்றவேண்டும் என்பதை தீர்மானித்து அதனடிப்படையில் ஓவ்வொருவரையும் வெளியில் அனுப்பியுள்ளார்.

பின்னர் அவர் சிறுவர்களுடன் தங்கியிருந்து இறுதியாக வெளியில் வந்த வேளை அவரது தந்தை இறந்த செய்தி அவரது செவிகளை எட்டியுள்ளது. 

இதேவேளை வைத்தியர் ரிச்சட் ஹரிசின் துணிச்சலும் மனிதாபிமானமும் மிக்க செயலை அவுஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்த வருடத்தின் அவுஸ்திரேலியருக்கான விருதிற்கு தெரிவு செய்யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

இந்த வருடத்தின் அவுஸ்திரேலியர் விருது யாருக்காவது வழங்கப்படவேண்டும் என்றால் அதற்கு இவரே பொருத்தமானவர் என ஓருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டின் உண்மையான உணர்வை இவர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் ஒரு அவுஸ்திரேலியன் என்ற வகையில் எங்களை எவ்வளவு தூரம் பெருமைப்படவைத்துள்ளார் என்பதை சொல்வதற்கு வார்த்கைகளில்லை என மற்றொருவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

உலகில் பலரை நாங்கள் அர்த்தமற்ற விதத்தில் கௌரவிக்கின்றோம் உண்மையில் இவரே உண்மையான வீரன் மனிதன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மருத்துவர் ஹரிஸ் இதற்கு முன்னரும் தனது உயிரை பணயம் வைத்து பலரை மீட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2011 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குகையொன்றிற்குள் சிக்குண்டிருந்த தனது சிநேகிதியை இவர் கடும் போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/36374

Link to comment
Share on other sites

தாய்லாந்து குகை: சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியீடு

தாய்லாந்தில்படத்தின் காப்புரிமைTHAI GOVERNMENT PUBLIC RELATIONS DEPARTMENT

தாய்லாந்தில் சிக்கலான குகை அமைப்பில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனை உடையும், முகமூடியும் அணிந்திருக்கும் சிறுவர்களை அப்புகைப்படத்தில் பார்க்க முடிகிறது. அதில் ஒரு சிறுவர் வெற்றி சின்னத்தை காட்டுகிறார்.

சிறுவர்களைக் குகையில் இருந்து உயிருடன் அழைத்து வரும் அபாயகரமான நடவடிக்கையின் புதிய தகவலாக இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மீட்புப் பணி எப்படி நடந்தது என்பது குறித்த காணொளியையும் தாய்லாந்து கடற்படை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைAFP

இருட்டான, குறுகிய, நீருக்கடி பாதையில் சிறுவர்கள் பயப்படாமல் இருக்க, மீட்பு பணிக்கு முன்பு சிறுவர்ளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பிபிசியிடம் கூறினர்.

நீருக்கடியில் செல்லும்போது, இரண்டு முக்குளிப்பவர்களில் ஒரு முக்குளிப்பவருடன் சிறுவர்கள் கட்டப்பட்டனர்.

சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை மறுத்துள்ள தாய்லாந்து பிரதமர், பதற்றத்தைக் குறைக்கும் மருத்து சிறிதளவு கொடுக்கப்பட்டதாகவும், இது வழக்கமாக ராணுவ வீரர்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.

சிறுவர்கள் வெளியே அழைத்து வரப்படும் போது, ஓரளவு நினைவுடன் மட்டுமே இருந்ததாகப் பல தகவல்கள் கூறுகின்றன.

மீட்கப்பட்ட 13 பேருக்கும் மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் நன்கு குணமடைந்து வருகின்றனர்.

அனைத்துச் சிறுவர்களும் உடல் எடையை இழந்துள்ள நிலையில், ஒரு வாரம் மருத்துவமனையில் இருப்பார்கள். பிறகு வீட்டில் இரு வாரம் சிகிச்சை அளிக்கப்படும்.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் வழக்கமான உணவுகளைச் சாப்பிட்டு வருவதாகவும், இரண்டாவதாக மீட்கப்பட்ட சிறுவர்கள் இன்று முதல் வழக்கமான உணவுகளை சாப்பிட்டுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாய்லாந்து குகை

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. பிறகு, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணியில், தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குகையில் சிக்கிய 13 பேரும் பத்திரமாக மீட்கப்படுவது பற்றி அக்கறை காட்டிய இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்ம்mகு நன்றி தெரிவித்து கொள்வதாக தாய்லாந்து அரசு கூறியுள்ளது. தாய்லாந்து வெளியுறத்துறை அமைச்சர், இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44796316

Link to comment
Share on other sites

தாய்லாந்து குகை: மயக்க மருந்து கொடுத்து மீட்கப்பட்டார்களா சிறுவர்கள்?

தாய்லாந்து சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் தாம் லுவாங் மலைக் குகைக்குள் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பங்கெடுத்து நடந்த இந்த மீட்பு குறித்த செய்திகள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன.

பிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட் அந்த சிறுவர்கள், மீட்புப் பணி மற்றும் அடுத்தது என்ன என்பது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

அவர்கள் ஏன் அந்த ஆழமான குகைக்குள் சென்றார்கள்?

அந்த சிறுவர்கள் மற்றும் கால்பந்து அணியின் துணைப் பயிற்சியாளர் எக்கபோல் 'ஏக்' சந்தாவாங் குறித்து இந்த சம்பவத்துக்கு முன்பு வரை நம் யாருக்கும் தெரியாது.

அந்த சனிக்கிழமையன்று (ஜூன் 23) அவர்கள் ஒரு கால்பந்து போட்டியில் விளையாட இருந்தார்கள். ஆனால், பின்னர் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார் தலைமைப் பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங். அதற்கு பதிலாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது.

அந்த சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். அவர்களை சைக்கிளில் கால்பந்து மைதானம் செல்ல எக்கபோல் கூறியுள்ளார்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைFACEBOOK/EKATOL

அவர்கள் குகையை நோக்கி செல்வதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

அன்று சிறுவர்களில் ஒருவரான பீராபத் 'நைட்' சோம்பியெங்ஜாயின் பிறந்த நாள். அன்று அவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் உணவு விடுதியில் 700 பாட் அளவுக்கு பணத்தை செலவிட்டுள்ளனர். அது அப்பகுதியில் ஒரு பெரிய தொகை.

எக்கபோல் மிகவும் அமைதியானவர் என்றும் அந்த குகைக்குள் செல்வது அந்த சிறுவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்களது பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங்.

இதற்கு முன்னரும் அவர்கள் அந்த குகைக்குள் சென்றுள்ளனர்.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

இன்னும் பெற்றோரை சந்திக்க சிறுவர்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை?

அந்த சிறுவர்கள் அனைவரும் மிகவும் வலிமையற்றவர்களாக இருப்பதாகவும், அவர்களது பெற்றோரை சந்தித்தால் நோய் கிருமிகளின் தொற்று உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாய்லாந்து குகைபடத்தின் காப்புரிமைTHAI GOVERNMENT PUBLIC RELATIONS DEPARTMENT

இப்போது தாய்லாந்தில் அந்த சிறுவர்களின் உயிர்கள் மிகவும் மதிப்பு மிக்கவை. கடுமையான முயற்சிகளுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு உண்டாகும் நோய்த் தோற்றால் அந்த முயற்சிகள் வீணாவதை யாரும் விரும்பவில்லை.

அவர்கள் பெற்றோர் அனைவரும் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதையே கேட்டு நடந்து பழகியவர்கள். அதனால் தங்கள் குழந்தைகளை சந்திக்கக்கூடாது எனும் உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

முதலில் சன்னல் வழியாக மட்டுமே தங்கள் மகன்களைப் பார்க்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இப்போது கை உறைகள் மற்றும் முக மூடி அணிந்துகொண்டு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்குள் நுழைய மெல்ல மெல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

துணை பயிற்சியாளர் 'ஏக்' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

இப்போது அதற்கு வாய்ப்பில்லாதது போலவே தோன்றுகிறது. 12 ஆண்டுகள் இளம் துறவியாகி இருந்த அவர் தியானம் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் அந்த சிறுவர்கள் தங்கள் உடல் வலிமையை இழக்காமல் பார்த்துக் கொண்டார். அதற்காகவே சிறுவர்களின் பெற்றோர் அவரை மன்னித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

அவர் மீண்டும் சில காலம் தம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ள துறவறத்திற்கே அனுப்பப்படலாம் என்றும் நொப்பரத் கூறுகிறார்.

இது தாய்லாந்து மக்களின் ஆதரவையும் பெறும். பின்னர் மீண்டும் இயல்பு வாழ்க்கை வாழ அவர் அனுமதிக்கப்படுவார்.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

உணவு இல்லாமல் அவர்கள் எப்படி தாக்குபிடித்தனர்?

அந்த சிறுவர்கள் காணாமல்போன ஒன்பதாம் நாள்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் எடை அதிக அளவில் குறையவில்லை.

THAI NAVYபடத்தின் காப்புரிமைEPA / THAI NAVY

நைட்டின் பிறந்தநாளன்று அவர்கள் கைவசம் இருந்த சொற்ப உணவே அவர்களிடம் இருந்தது. அவர்கள் அனைவரும் உடல் வலிமை மிக்க, நன்கு பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்கள்.

இதனால் அவர்கள் தங்களிடம் இருந்த உணவை கவனத்துடன் பகிர்ந்துகொள்ளவும், ஒருவரை ஒருவர் ஆதரிக்கவும் அவர்களால் முடிந்திருக்கும். ஒரு வேளை பாடல்களும் அவர்கள் வலிமையுடன் இருந்திருக்க உதவியிருக்கும்.

மாசுபட்ட நிலத்தடி நீரை அருந்துவதைவிடவும், பாறைகளில் இருந்துவரும் நீரை அருந்துமாறு அவர்களிடம் ஏக் கூறியிருந்தார். தனது உணவைக் குறைத்துக்கொண்டு அவர்களை அதிகம் உணவு உண்ணச் சொன்னார்.

அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு புரதம் மிகுந்த 'ஜெல்' வழங்கப்பட்டது. பின்னர் மீட்கப்படும் முன்னர் இயல்பான உணவுகள் வழங்கப்பட்டன.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

அவர்கள் இருட்டிலேயே இருந்தனரா?

பெரும்பாலான நேரம் அவர்கள் இருட்டிலேயே இருந்தனர். அவர்கள் மலிவான கை விளக்குகளுடன் குகைக்குள் சென்றனர்.

தாய்லாந்து குகைபடத்தின் காப்புரிமைTHAI NAVY SEALS/GETTY IMAGES

அவர்கள் கண்டறியப்பட்டபின், ஒரு ராணுவ மருத்துவரும் மூன்று முக்குளிப்பு வீரர்களும் அவர்களுடனேயே தங்கிவிட்டனர். அப்போது அவர்களுக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்குகள் கிடைத்தன.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதா?

இது குறித்த தகவல்களை யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை.

அவர்களுக்கு குறைந்த அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது என்றும் அவர்கள் முழுவதுமாக சுயாதீன நிலையில் இல்லை என்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் சிலர் பிபிசியிடம் கூறினர்.

தாய்லாந்து குகை

அதற்கு காரணம், சுழலும் நீருக்குள் இருட்டில், முக்குளிப்பு உபகரணங்களுடன் செல்லும்போது அவர்கள் பயந்துவிடக் கூடாது என்பதே. அவ்வாறு அவர்கள் பயந்திருந்தால் அவர்கள் உயிருக்கு அது ஆபத்தாக அமைந்திருக்கும்.

முழுமையாக சுயநினைவு இல்லாத அந்த சிறுவர்களை முக்குளிப்பு வீரர்கள் சுமந்துகொண்டு அந்த குறுகலான குகைப் பாதையைக் கடந்து மீட்டு வந்தனர்.

சில நேரங்களில் அந்த சிறுவர்கள் முக்குளிப்பு வீரர்களின் உடல்களுடனும், ஸ்ட்ரெச்சர் உடனும் கட்டப்பட்டு மீட்கப்பட்டனர்.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

இதற்கான செலவு யாருடையது?

பெரும்பாலும் தாய்லாந்து அரசுதான் செலவு செய்தது. பிற நாடுகளும் உதவி செய்தன. அமெரிக்கா உதவிக்கு 30 விமானப்படை வீரர்களை அனுப்பியது.

தாய்லாந்து தொழிலதிபர்கள் போக்குவரத்து மற்றும் உணவு கொடுத்து உதவினர். தாய் ஏர்வேஸ் மற்றும் பேங்காக் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் முக்குளிப்பு வீரர்கள் பயணத்திற்கு பணம் வாங்கவில்லை.

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

தாய்லாந்தால் தனியாக மீட்டிருக்க முடியுமா?

முடிந்திருக்காது. வேறு சில நாடுகளால் முடிந்திருக்கும். குகைகளுக்குள் முக்குளிப்பது சிறப்பு பயிற்சி தேவைப்படும் ஒரு அரிய திறமை.

அந்த தாம் லுவாங் குகையில் பயணித்து அதைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருந்த வெர்ன் அன்ஸ்வொர்த் எனும் முக்குளிப்பு வீரர் மிக அருகிலேயே வசித்தது அதிர்ஷ்டம்.

பயிற்சி பெற்ற பிற நாட்டினரை உதவிக்கு அழைக்க வேண்டும் என்று தாய்லாந்து அரசிடம் அவர் கூறினார். அந்த சிறுவர்கள் காணாமல் போன நாளன்றே அவர் அங்கு சென்று விட்டார்.

THAI NAVY SEALSபடத்தின் காப்புரிமைTHAI NAVY SEALS

அவர்களை மீட்க சென்ற தாய்லாந்து கடற்படை வீரர்கள் முதலில் சற்று திணறினர். அது அவர்களுக்கு சற்று சவாலாக இருந்தது. உள்ளே உயர்ந்த நீர் மட்டத்தால் அவர்கள் வெளியேறிவிட்டனர்.

வெளிநாட்டு முக்குளிப்பு வீரர்கள் வந்தபின்தான் அவர்களால் குகையின் மூலை முடுக்குகளுக்குள் செல்ல முடிந்தது. கயிறு மற்றும் கம்பிகளை அமைப்பது, விளக்கு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அமைப்பது ஆகியவை பின்னரே முடிந்தது.

இந்த முயற்சிகள் அனைத்தையும் சிறப்பாக நிர்வகித்த பாராட்டுகள் நிச்சயம் தாய்லாந்து அரசையே சேரும்.

https://www.bbc.com/tamil/global-44804710

Link to comment
Share on other sites

'நாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த 'அற்புத தருணம்' குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளனர்.

Thai cave rescue boysபடத்தின் காப்புரிமைEPA

ஆங்கிலம் பேசத்தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் முக்குளிப்பு நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் 'ஹலோ' மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.

அவர்களை மீட்ட தாய்லாந்து கடற்படை குழுவினருடன் சியாங் ராயில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கால்பந்து சீருடையில் இருந்தனர்.

புதன்கிழமை அன்று மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவுக்கு வந்து, அவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

பாறைகளில் வடிந்த நீரை மட்டும் அருந்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் குகைக்குள் தங்கியிருந்த அக்குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவன், "நீர் தூய்மையாக இருந்தது. உணவு எங்களிடம் இல்லை," என்று கூறினார்.

தங்களின் இந்த இன்னல் மிக்க அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வோம் என்று அந்த சிறுவர்களில் சிலர் கூறினார்கள். இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் என்றும் எனது வாழ்வை இயன்றவரை முழுமையாக இனி வாழ்வேன் என்று ஒரு சிறுவன் கூறினார்.

Tham Luang caveபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமைதியாகவும் வலிமையாகவும் இருக்க இந்த அனுபவம் கற்றுக்கொடுத்துள்ளது என்று இன்னொரு சிறுவன் தெரிவித்தார்.

இதுதான் அந்த சிறுவர்களின் ஒரே அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு என்று கூறியுள்ள சியாங் ராய் மாகாண ஆளுநர் பிரசோன் பிராஸ்துகான், இனிமேல் அவர்கள் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள் என்று கூறினார்.

அந்த சிறுவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் முன்கூட்டியே அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. அவற்றை ஒரு குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஒருவர், ஆராய்ந்து தேர்வு செய்தார். அந்த சிறுவர்களுக்கு மன அழுத்தம் எதையும் உண்டாக்காது என்று கருதப்பட்ட அந்த கேள்விகள் மட்டுமே அவர்களிடம் கேட்கப்பட்டன.

 

 

அந்த சிறுவர்களை சில காலம் மட்டுமே புத்த துறவிகளாக்கும் திட்டமும் உள்ளது. மோசமான அனுபவங்களுக்கு உள்ளன ஆண்களை சில காலம் துறவிகளாக்கும் வழக்கம் தாய்லாந்தில் உள்ளது.

அவர்கள் ஏன் அந்த குகைக்குள் சென்றார்கள்?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக் குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது துணை பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

அந்த சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். அவர்களை சைக்கிளில் கால்பந்து மைதானம் செல்ல துணை பயிற்சியாளர் எக்கபோல் கூறியுள்ளார். அவர்கள் குகையை நோக்கி செல்வதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைAFP/ROYAL THAI NAVY

அன்று சிறுவர்களில் ஒருவரான பீராபத் 'நைட்' சோம்பியெங்ஜாயின் பிறந்த நாள். அன்று அவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் உணவு விடுதியில் 700 பாட் அளவுக்கு பணத்தை செலவிட்டுள்ளனர். அது அப்பகுதியில் ஒரு பெரிய தொகை.

எக்கபோல் மிகவும் அமைதியானவர் என்றும் அந்த குகைக்குள் செல்வது அந்த சிறுவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்களது பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங்.

குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.

https://www.bbc.com/tamil/global-44873777

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.