Jump to content

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

இங்கே இந்துமதத்தை மட்டுமே சாடுவதால் எதுவுமே மாறிவிடப்போவதில்லை. வெளியே தெரியாவிட்டாலும் கூட கத்தோலிக்க மதத்திலும் கூட வெறித்தனமான சாதி வேறுபாட்டுப் பிரிவினைகளும் அடாவடித்தனங்களும் இருக்கின்றன. ஜூட் சொல்லாவிட்டாலும் கூட, கத்தோலிக்கன் என்கிற வகையில் எனக்கு இம்மதத்திலுள்ள குறைபாடுகள் நன்கே தெரியும்.
குறைந்த சாதி என்பதற்காக தேவாலயங்களின் சில பகுதிகளுக்கு செல்லவிடாமல் மறுக்கப்பட்டவர்கள், வருடாந்த சுற்றுப் பிரகாரங்களில் குறைந்த சாதியைச் சேர்ந்தவர்கள் சுருவங்களைத் தூக்குவதையோ, கிட்டே வருவதையோ கடுமையாகத் தடுத்த சந்தர்ப்பங்கள், ஒரு குருவானவர் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே பலர் முன்பாக அவரது சாதியைச் சொல்லி, "நீ சொல்லும் பிரசங்கத்தை நான் ஏன் கேட்கவேண்டும்?" என்று தேவாலயத்துக்கே வராமல் விட்ட பலர், உயர் சாதிப் பெண்ணை ஒரு கீழ்சாதி ஆண் முடித்தான் என்பதற்காகவே அவர்களது குடும்பத்தையே தேவாலயங்களுக்கு வரமுடியாமல்ப் பண்ணிய பலர்...இப்படி இந்துமதத்திற்கு எந்த விதத்திலும் சளைக்காது சாதிவெறியைக் காட்டியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், கத்தோலிக்கத்தில், எந்தச் சாதியினராக இருந்தாலும், அவர்கள் குருவானவராக வரமுடியும். வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாக தடைகள் பல வந்தாலும் கூட, பலர் குருவானவர்களாக வருகிறார்கள். இந்துமதத்தில் இது இன்னும் இல்லை.

இந்துக்களின் சாதி வேற்றுமைதான் பலர் வேற்று மதங்களுக்கு மாறுவதற்கான காரணம் என்பது ஓரளவிற்குச் சரியாகப் பட்டாலும், அவர்கள் புதிதாகச் சேரும் மதங்களிலும் சாதி வேற்றுமைகள் இருக்கிறதே?

இங்கு ஒரு அன்பர் குறிப்பிட்டதுபோல, வடக்கில் இடம்பெறும் கலாசாரச் சீரழிவுகளுக்கான கருத்துப் பகிர்வு, இன்று தமிழர்களிடையே உள்ள மதங்களை நான் பெரிது, நீ பெரிது என்று ஒப்பீட்டு வாதாடுமளவிற்கு வந்துவிட்டது தேவையற்றது.

வடக்கில் இடம்பெறும் சமூக விரோதச் செயற்பாடுகளுக்குப் பிண்ணனியில் அதிகார சக்திகள் இருக்கலாம், தனிப்பட்ட குழுக்களாகக்கூட இயங்கலாம். ஆனால் கட்டுப்படுத்தப்படுவது காலத்தின் தேவையானது.

ஆகவே விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னதுபோல, முழுமையான அதிகாரம் தமிழர்களின் கைகளில் வருமிடத்து, சமூகத்தின் தீய சக்திகளை அடக்குவதென்பது இலகுவானது. எமக்கு அதிகாரம் இல்லாமலும், அதிகாரத்தில் இன்றிருப்பவர்களுக்கு சமூக சீர்கேடுகளை இல்லாதொழிப்பதற்கான தேவையோ, கரிசணையோ இல்லாமலிருப்பதும் எமது சாபக்கேடே ஒழிய வேறில்லை.

கிறிஸ்தவர்களிடமும் இஸ்லாமியர்களிடமும் 
சாதி பிரிவினை இருக்கலாம் 

ஆனால் பைபிளிலோ குரானிலோ அது இல்லை 
இந்துமதம் எனும்போது அவர்களின் மனுநீதியிலேயே 
அதுதான் அடிப்படையாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், கத்தோலிக்கத்தில், எந்தச் சாதியினராக இருந்தாலும், அவர்கள் குருவானவராக வரமுடியும். வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாக தடைகள் பல வந்தாலும் கூட, பலர் குருவானவர்களாக வருகிறார்கள். இந்துமதத்தில் இது இன்னும் இல்லை.

முன்னரும் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன், இந்தக்கோவிலில் யாரும் குருவானவராக வரமுடியும்.

http://srividya.org/about/temple/

"Our Temple was founded on Aiya’s unique vision that all sincere devotees have the right to chant the Vedas, to chant Lalita Sahasranama, and to learn and perform the worship of the Divine Mother, even in a traditional Agamic temple. In keeping with this vision, we encourage all visitors and volunteers to participate in the Temple rituals to whatever extent they are capable. It is our mission to help everyone learn about the worship of Sri Rajarajeswari as well as the great and noble Tamil Saiva culture."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரக்கணக்கான தனிழர்களைக் கொலைசெய்த கொத்தபாய ராஜபக்ஸவைச் சந்தித்து கைகொடுத்து நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருக்கிறோம் என மன்றாடும் சம்பந்தன் சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும்வரைக்கும் தமிழர்கெதிரான வன்முறையை எவர் செய்தாலும் முடிவுக்குக் கொண்டுவரமுடியாது. திருட்டு ******** அரசியல்வாதிகளை நம்பும் தமிழர்கள் அனைவர்க்கும் இதே நிலைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎23‎/‎2018 at 7:51 AM, Maruthankerny said:

ஆரிய பார்ப்பானால் திணிக்கப்பட்ட இந்து மதம்தான் இன்று ஈழத்திலும் 
ஆதிக்கம் செலுத்துகிறது. 
இந்தியாவில் யாரும் பிராமணரை தூக்கி தலையில் வைக்கவில்லை 
அவர்கள் தமது பெண்களை ஆங்கிலேயருக்கு கூட்டி கொடுத்து. ஆளுமைகளை 
கைப்பற்றி மற்றோரை அடிமை படுத்தி மூளை சலவை செய்தார்கள்.

ஈழத்துக்கு இது ஆறுமுகநாவலாரால் இறக்குமதி செய்யப்பட கொஞ்சம் தாமதம் 
ஆகியதால் பிரமாண ஆதிக்கம் வளர வாய்ப்பு இருக்கவில்லையே தவிர 
சாக்கடை இந்துமதம்.
எமது முன்னோரின் இரவு பகல் உழைப்பில் உருவான சைவ மதத்தை 
அப்படியே துடைத்து அழித்தது என்பதுதானே நிதர்சனம்.  

மருதர், இந்தியாவில் எல்லாப் பெரிய பதவிகளுக்கும், அரசியலிலும் பிராமணர்கள் தான் முன்னிலை வகிக்கிறார்கள்....எங்கள் ஊரில் அப்படி இல்லை....ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்து சாதி இருந்து கொண்டு தான் இருக்குது......தமிழன் என்டால் சாதி வெறியன் தான்...அவன் இந்துவா இருந்தாலும் சரி கிறிஸ்தவனாய் இருந்தாலும் சரி 

சாதிக்கும்,வாழ் வெட்டுக்கும் சம்மந்தம் இருக்குது என்று சொல்வது தலையைத் திருப்பி மூக்கைத் தொடும் கதை :

தாழ்ந்த சாதிக்காரனா வாழ் வெட்டுக் க்ரூப் வைசிறுக்கிறான்?
அல்லது 
உயர்ந்த சாதிக்காரனா?
அல்லது 
ஒருத்தரது குரூப்பில் மற்றவர்கள் இருக்கினமா,இல்லையா?

வாள் வெட்டுக் குழுக்களை அவர்களது பெற்றோர் நினைத்தால் கட்டுப்படுத்தலாம்....அளவுக்கு மிஞ்சிய பணம்/வெளிநாட்டுப் பணம் ,பெற்றோர்களது கண்டிப்பு இன்மை, காதல்,பெடடைப் பிரச்சினைகள்,படங்களை பார்த்து கெட்டுப் போதல், ஒருத்தருக்கும் பயம் இல்லை, எல்லாவற்றிக்கும்  தமிழர்கள் எப்படியும் அழிந்து போகட்டும் என்று கண்டும் காணாத அரசியல்வாதிகள், தமிழர்களுக்கு ஒரு உருப்படியான தலைவன் இல்லாமை தான் இப்படியான வன்செயல்களுக்கு காரணம் 

தமிழருக்குள் சாதி வெறி இருக்குது ஆனால் அதனால் தான் வன்முறை என்பது சுத்த மடமைத்தனம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎23‎/‎2018 at 7:56 PM, tulpen said:

ரதி உலகில். வாழும் எல்லா மக்களும் ஆண்டவனின் குழந்தைகள்  என்றால் கோவில் அர்ச்சகராக அந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை . ஏன்?  ஈழத்தமிழரிடையே  அரத்தமற்ற மூடப்பழக்கவகளை மத்த்தின் பெயரால் புகுத்தி அவர்களை  அறிவு பூர்வமாக  சிந்திக்க விடாமல் தடுப்பது யார்? ஆன்மீகத்தை அப்படியே தமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள மட்டும் யன்படுத்துவது யார்? புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஒரு கோவில் கூட  ஆன்மீகம்  இல்லாமல் இருப்பது  ஏன்?  

ஒரு இந்து எப்படி வாழவேண்டும. என்று கூறும் இந்து சமய புனித நூல் மனுதர்மம் கூறுவதை பாருங்கள் 

பிராமணன்‌ தொழிலைச் சூத்திரன் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாகமாட்டான். ஏனென்றால், அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழில் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்.
 (மனு அத்.10. சுலோ.73)

எங்களது சிலை வழிபாடு...சிலைக்கு பூசைகள் செய்யும் போது அதற்கு என்று பல வரை முறைகள் இருக்கு...எல்லோரும் கடவுளது குழந்தைகள் தான் அதற்காக எல்லோரும் கோயிலில் பூசை செய்ய வெளிக்கிடடால் நிலைமை இப்ப இருக்கிறதை விட மோசமாகும்...பிராமணர்கள் தங்களை பெரியவர்கள் என்று சொன்னதில்லை.உங்களை போன்றவர்கள் தான் அவர்களை பெரியவர்களாக்கி உள்ளீர்கள்...உண்மையில் அவர்கள் தான் பாவப்படட ஜென்மங்கள்...நினைத்ததையெல்லாம் சாப்பிட முடியாது...நாங்கள் இண்டைக்கு விரும்பின மச்சத்தை சாப்பிடுவோம் நாளைக்கு முழுகிப் பூட்டு கோயிலுக்கு போவோம்.

புலம் பெயர் மக்களை ஒன்றினைக்கும் இடமாய் இருப்பது கோயில் மட்டும் தான்...பக்தியாய் கோயிலுக்குப் போனால் அது ஆன்மிகமான இடமாய் இருக்கும்..அதை விடுத்து விடுப்புப் பார்க்கப் போனால் ஆனமீகம் இல்லாத மாதிரித் தான் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மருதர், இந்தியாவில் எல்லாப் பெரிய பதவிகளுக்கும், அரசியலிலும் பிராமணர்கள் தான் முன்னிலை வகிக்கிறார்கள்....எங்கள் ஊரில் அப்படி இல்லை....ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்து சாதி இருந்து கொண்டு தான் இருக்குது......தமிழன் என்டால் சாதி வெறியன் தான்...அவன் இந்துவா இருந்தாலும் சரி கிறிஸ்தவனாய் இருந்தாலும் சரி 

சாதிக்கும்,வாழ் வெட்டுக்கும் சம்மந்தம் இருக்குது என்று சொல்வது தலையைத் திருப்பி மூக்கைத் தொடும் கதை :

தாழ்ந்த சாதிக்காரனா வாழ் வெட்டுக் க்ரூப் வைசிறுக்கிறான்?
அல்லது 
உயர்ந்த சாதிக்காரனா?
அல்லது 
ஒருத்தரது குரூப்பில் மற்றவர்கள் இருக்கினமா,இல்லையா?

வாள் வெட்டுக் குழுக்களை அவர்களது பெற்றோர் நினைத்தால் கட்டுப்படுத்தலாம்....அளவுக்கு மிஞ்சிய பணம்/வெளிநாட்டுப் பணம் ,பெற்றோர்களது கண்டிப்பு இன்மை, காதல்,பெடடைப் பிரச்சினைகள்,படங்களை பார்த்து கெட்டுப் போதல், ஒருத்தருக்கும் பயம் இல்லை, எல்லாவற்றிக்கும்  தமிழர்கள் எப்படியும் அழிந்து போகட்டும் என்று கண்டும் காணாத அரசியல்வாதிகள், தமிழர்களுக்கு ஒரு உருப்படியான தலைவன் இல்லாமை தான் இப்படியான வன்செயல்களுக்கு காரணம் 

தமிழருக்குள் சாதி வெறி இருக்குது ஆனால் அதனால் தான் வன்முறை என்பது சுத்த மடமைத்தனம் 

இதை பற்றி விரிவாக எழுதலாம் .....
திரும்ப திரும்ப எமது குப்பையை நாமே கிளறி மணந்து 
என்ன பயன் என்று அதை அப்படியே விட்டிட்டு விடலாம்.

ஆனையிறவை தாண்டி காங்கேசன்துறை முனைவரை நடக்கும் 
நடந்து முடிந்த 90 வீதமான வாள்வெட்டுக்கள் சாதி அடிப்படையில் 
நடந்தவை என்பதை உங்களை தவிர்த்து யாழில் வசித்த யாரும் அதை மறுக்க 
மாட்டார்கள். மருதனமாடம் ஈப்பி காம்பில் யார் யார் பொறுப்பாக இருந்தார்கள் 
அப்போது அவர்களால் நடத்த பட்ட கொலைகள் ... ஏன் என்பது 
அந்த ஊர்களை சுற்றி இருந்து இப்போ யாழ் களத்தில்  இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். 

தமிழரிடம் இந்த சாதியை கொண்டுவந்து இப்போதும் வளர்த்து வருவது 
இந்துமதம் ஒன்றுதான். தமிழன் தற்காலிக வேலைவாய்ப்புக்காக கிறிஸ்தவன் ஆனானே 
தவிர கிறிஸ்துவை படித்து கிறிஸ்துவை பின்பற்ற கிறிஸ்தவன் ஆகவில்லை ....பின் நாளில் 
அப்படி ஆனவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்தான். 

கொல்லாமையை கடைப்பிடித்தது தமிழரின் சமணமும் புத்தமதமும்தான் பின் அதை பின்பற்றி 
வந்த சைவம் அதை தமிழரிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
வான்முகியின் ராமாயணத்தில் சீதை ராமனுக்கு தேனில் ஊறவைத்த மாடு இறைச்சியை 
சுவையாக சமைத்து பரிமாறினாள் என்று இருக்கிறது. 

இறைச்சியை தின்றுவிட்டு முழுகிவிட்டு கோவிலுக்கு போவதை ஆரியர்கள்தான் 
நிச்சயம் தமிழருக்கு கற்று கொடுத்து இருப்பார்கள். 

தெருவுக்கு தெரு கோயில் நான் பெரிதா நீ பெரிதா? என்ற சண்டை 
கொஞ்ச கோவிலை அடித்து நுறுக்கினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
ஆயிரம் வருஷம் முன்பு நாம் இன்றும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு கோவில்கள் 
கட்டி இருக்கிறார்கள் எமது முன்னோர்கள்.
இன்று புலம்பெயர்ந்தவர்கள் எல்ல்லோரும் ஒன்று கூடினால் எமது காலத்தை 
வரலாறில் பதிக்க ஒரு பிரமாண்ட கோவிலை ஈழத்தில் கட்டி வைக்க முடியும்.
இந்து என்று குத்தி முறிக்கிற யாரவது முன்வருவார்களா?
கடவுள் நம்பிக்கை ..... பக்தி இல்லாத கூட்டத்தை இந்த மதம் உருவாக்குகிறது 
என்பது தான் எனது வாதமும் ...
சில கருத்தை நீங்கள் எனக்கு சார்பாகத்தான் எழுதி உள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

எங்களது சிலை வழிபாடு...சிலைக்கு பூசைகள் செய்யும் போது அதற்கு என்று பல வரை முறைகள் இருக்கு...எல்லோரும் கடவுளது குழந்தைகள் தான் அதற்காக எல்லோரும் கோயிலில் பூசை செய்ய வெளிக்கிடடால் நிலைமை இப்ப இருக்கிறதை விட மோசமாகும்...பிராமணர்கள் தங்களை பெரியவர்கள் என்று சொன்னதில்லை.உங்களை போன்றவர்கள் தான் அவர்களை பெரியவர்களாக்கி உள்ளீர்கள்...உண்மையில் அவர்கள் தான் பாவப்படட ஜென்மங்கள்...நினைத்ததையெல்லாம் சாப்பிட முடியாது...நாங்கள் இண்டைக்கு விரும்பின மச்சத்தை சாப்பிடுவோம் நாளைக்கு முழுகிப் பூட்டு கோயிலுக்கு போவோம்.

புலம் பெயர் மக்களை ஒன்றினைக்கும் இடமாய் இருப்பது கோயில் மட்டும் தான்...பக்தியாய் கோயிலுக்குப் போனால் அது ஆன்மிகமான இடமாய் இருக்கும்..அதை விடுத்து விடுப்புப் பார்க்கப் போனால் ஆனமீகம் இல்லாத மாதிரித் தான் இருக்கும் 

ஏதோ பதில் எழுத வேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்கள். வழிபாட்டுக்கு வரை முறை உண்டு என்றால் அது நீதியானதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தவர்கள்  தான் பூஜை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்கியது யார்? கடவுளா?  அது கடவுள் என்றால் இவ்வளவு ஓர வஞ்சனை உள்ளவரா கடவுள்?  இதில் என்ன நீதியை கண்டு விட்டீர்கள். 

பிறப்பால் பிராமணர் அல்லாதோர் உண்மையான பக்தியுடன் ஆன்மீகவாதிகளாக பூஜை செய்தால் நிலமை மோசமாகி விடும் என்று எழுதி உள்ளீர்கள். அது எப்படி மோசமாகும்? நீங்கள் கூறும் மோசம் என்பது என்ன?  அது உங்களுக்கே புரியாத புதிர். பிராமணர்களுக்கு  அவகளின் பித்தலாட்டத்திற்கு  வக்காலத்து  வாங்கிவிட்டு அவரகளை நாம் தூக்கி பிடிப்பதாக ஆதாரமற்ற குற்றச்சட்டு வேறு. 

கோவில்கள் ஆன்மிகத்தை வளர்பதற்கு ஆடம்பர திருவிழாக்கள் தேவையில்லை. ஆன்மீகம் என்பது உண்மையில் ஒரு wellness போன்றது.மன உள அமைதியை உருவாக்கவே wellness,meditation போன்றவை உள்ளன. அதில ஒரு வகை தான் ஆன்மீகம். அதற்கு கோவில்கள் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் . திருவிழாக்கள் வைப்பபது உண்மையில் மத வியாபாரிகள். பார்பனர்கள்  பணமீட்டவே. அப்படியான வியாபார கோவில் திருவிழாக்களில் விடுப்பு பார்பபது  ஒன்றும் தவறு இல்லை. மதவியாபாரிகள்  பணமீட்டும் திருவிழாக்களில் இளவட்டங்கள் Entertainment செய்வதுஇயல்பானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையில்நுழைவதற்கு மன்னிக்கவும். மண்டூர், செல்வச்சன்னிதியில் பூசை செய்வது பிராமணரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎25‎/‎2018 at 6:21 AM, Maruthankerny said:

இதை பற்றி விரிவாக எழுதலாம் .....
திரும்ப திரும்ப எமது குப்பையை நாமே கிளறி மணந்து 
என்ன பயன் என்று அதை அப்படியே விட்டிட்டு விடலாம்.

ஆனையிறவை தாண்டி காங்கேசன்துறை முனைவரை நடக்கும் 
நடந்து முடிந்த 90 வீதமான வாள்வெட்டுக்கள் சாதி அடிப்படையில் 
நடந்தவை என்பதை உங்களை தவிர்த்து யாழில் வசித்த யாரும் அதை மறுக்க 
மாட்டார்கள். மருதனமாடம் ஈப்பி காம்பில் யார் யார் பொறுப்பாக இருந்தார்கள் 
அப்போது அவர்களால் நடத்த பட்ட கொலைகள் ... ஏன் என்பது 
அந்த ஊர்களை சுற்றி இருந்து இப்போ யாழ் களத்தில்  இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். 

தமிழரிடம் இந்த சாதியை கொண்டுவந்து இப்போதும் வளர்த்து வருவது 
இந்துமதம் ஒன்றுதான். தமிழன் தற்காலிக வேலைவாய்ப்புக்காக கிறிஸ்தவன் ஆனானே 
தவிர கிறிஸ்துவை படித்து கிறிஸ்துவை பின்பற்ற கிறிஸ்தவன் ஆகவில்லை ....பின் நாளில் 
அப்படி ஆனவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்தான். 

கொல்லாமையை கடைப்பிடித்தது தமிழரின் சமணமும் புத்தமதமும்தான் பின் அதை பின்பற்றி 
வந்த சைவம் அதை தமிழரிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
வான்முகியின் ராமாயணத்தில் சீதை ராமனுக்கு தேனில் ஊறவைத்த மாடு இறைச்சியை 
சுவையாக சமைத்து பரிமாறினாள் என்று இருக்கிறது. 

இறைச்சியை தின்றுவிட்டு முழுகிவிட்டு கோவிலுக்கு போவதை ஆரியர்கள்தான் 
நிச்சயம் தமிழருக்கு கற்று கொடுத்து இருப்பார்கள். 

தெருவுக்கு தெரு கோயில் நான் பெரிதா நீ பெரிதா? என்ற சண்டை 
கொஞ்ச கோவிலை அடித்து நுறுக்கினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
ஆயிரம் வருஷம் முன்பு நாம் இன்றும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு கோவில்கள் 
கட்டி இருக்கிறார்கள் எமது முன்னோர்கள்.
இன்று புலம்பெயர்ந்தவர்கள் எல்ல்லோரும் ஒன்று கூடினால் எமது காலத்தை 
வரலாறில் பதிக்க ஒரு பிரமாண்ட கோவிலை ஈழத்தில் கட்டி வைக்க முடியும்.
இந்து என்று குத்தி முறிக்கிற யாரவது முன்வருவார்களா?
கடவுள் நம்பிக்கை ..... பக்தி இல்லாத கூட்டத்தை இந்த மதம் உருவாக்குகிறது 
என்பது தான் எனது வாதமும் ...
சில கருத்தை நீங்கள் எனக்கு சார்பாகத்தான் எழுதி உள்ளீர்கள். 

மருதர், ஆவா குழுவில் இருப்பவர்கள் எல்லோரும்  என்ன சாதி?...அவர்கள் எல்லோரும் ஒரே சாதியா?....இனி மேல் பிரமாண்டமாய் கோயில் கட்டுறதை விட்டுட்டு இருக்கிற கோயில்களை கவனமாய் பாதுகாக்கின்ற வழியைப் பாருங்கோ
 
On ‎7‎/‎25‎/‎2018 at 8:42 AM, tulpen said:

இங்கே லண்டனிலேயே  எனக்கு தெரிஞ்சு பிராமணர் அல்லாத மச்சம் சாப்பிட்டு வளர்ந்த இருவர் கோயில் திறந்து இருக்கிறார்கள்...ஆட்களும் போயினம்...உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஜெர்மனியில் ஒன்று திறவுங்கோ...வருமானத்திற்கு ஆட்களை சேர்ப்பது உங்கள் சாமர்த்தியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள் அமைதியான இடம் தான்...குறிப்பிட கொஞ்ச நாள் திரு விழாக்கள் நடக்கிறது.., நீங்களும் திரு விழா செய்யுங்கோ...வருமானம் ஈட்டுங்கோ யார் வேண்டாம் எண்டது...உங்களுக்கு அது தானே பொறாமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

மருதர், ஆவா குழுவில் இருப்பவர்கள் எல்லோரும்  என்ன சாதி?...அவர்கள் எல்லோரும் ஒரே சாதியா?....இனி மேல் பிரமாண்டமாய் கோயில் கட்டுறதை விட்டுட்டு இருக்கிற கோயில்களை கவனமாய் பாதுகாக்கின்ற வழியைப் பாருங்கோ
 
இங்கே லண்டனிலேயே  எனக்கு தெரிஞ்சு பிராமணர் அல்லாத மச்சம் சாப்பிட்டு வளர்ந்த இருவர் கோயில் திறந்து இருக்கிறார்கள்...ஆட்களும் போயினம்...உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஜெர்மனியில் ஒன்று திறவுங்கோ...வருமானத்திற்கு ஆட்களை சேர்ப்பது உங்கள் சாமர்த்தியம் 

நன்றி உங்கள் உண்மையான கருத்துக்களுக்கு 
எரிய நெருப்பில் தொடர்ந்தும் எண்ணெய் ஊத்துங்கள் 
என்று நீங்கள் தாழ்மையுடன் கேட்டு கொண்டாலும்.

சில சமூக சிந்தனை தாக்கத்தினால் 
ஒரு சமூகத்தை தொடர்ந்தும் சீரழிப்பதில் இஷடம் இல்லை.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக்கு அடிப்படை காரணம் என்ன?
என்பதை நோக்கியதே எமது கருத்துக்கள் 
தொடர்கையில் ..........
உங்களிடமும் அதை எதிர்பார்க்கிறேன். 

On 7/26/2018 at 2:27 AM, வாதவூரான் said:

இடையில்நுழைவதற்கு மன்னிக்கவும். மண்டூர், செல்வச்சன்னிதியில் பூசை செய்வது பிராமணரா?

அண்ணே நானே வெள்ளிக்கு வெள்ளி பூசை வைத்திருக்கிறேன் 
அதற்காக இந்துமதம் சீரழிக்கும் எமது சமூகம் அதில் இருந்து விடுபடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

நன்றி உங்கள் உண்மையான கருத்துக்களுக்கு 
எரிய நெருப்பில் தொடர்ந்தும் எண்ணெய் ஊத்துங்கள் 
என்று நீங்கள் தாழ்மையுடன் கேட்டு கொண்டாலும்.

சில சமூக சிந்தனை தாக்கத்தினால் 
ஒரு சமூகத்தை தொடர்ந்தும் சீரழிப்பதில் இஷடம் இல்லை.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக்கு அடிப்படை காரணம் என்ன?
என்பதை நோக்கியதே எமது கருத்துக்கள் 
தொடர்கையில் ..........
உங்களிடமும் அதை எதிர்பார்க்கிறேன். 

அண்ணே நானே வெள்ளிக்கு வெள்ளி பூசை வைத்திருக்கிறேன் 
அதற்காக இந்துமதம் சீரழிக்கும் எமது சமூகம் அதில் இருந்து விடுபடுமா?

எனக்கு தெரியும் உங்களிடம் இருந்து பதில் வராது என்று ...ஆவா குழுவில் எல்லா சாதியையும் சேர்ந்த படித்த,படிக்கின்ற மாணவர்கள் தான் இருக்கிறார்கள்...அவர்களிடம் சாதி வேறுபாடு இல்லை...அதை ஊட்டி  வளர்ப்பது ஆடிக் ஒருக்கால்  ஆவணிக் ஒருக்கால் ஊருக்குப் போய்  வரும் உங்களை போல ஆட்கள் தான் ..வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக்கு காரணம் சாதி இல்லை ...என்ன காரணம் என்பதை முதலே எழுதி விடடேன்...விளங்காட்டில் திரும்பவும் வாசிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்கள் எதோ உலக நீதிபதி மாதிரி 
" நான் எழுதிவிட்டேன்" என்பது சிரிப்பாக இருக்கிறது.

ஆவ குழு கூவா குழுவின் விபரம் எனக்கு தெரியாது 
தெரியாத ஒரு குழுவையே நான் வளர்க்கிறேன் என்று நீங்கள் எழுதியது 
எனக்கு கொஞ்சம் மன மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் 90 வீதமான வாள்வெட்டுக்கள் என்று.
சொந்த குடும்ப விவகாரங்களால் மாமன் மச்சானை வெட்டுவது எல்லாம் 
நடந்துகொண்டுதான் இருக்கிறது ஒரு 10 வீதம் அளவில்.
வட மாகாணத்தை நன்கு அறிந்த யாரும் எனது கருத்தை எதிர்க்க மாட்ட்டார்கள் 
காரணம் ..... எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த விடயம்தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎25‎/‎2018 at 6:21 AM, Maruthankerny said:

இதை பற்றி விரிவாக எழுதலாம் .....
திரும்ப திரும்ப எமது குப்பையை நாமே கிளறி மணந்து 
என்ன பயன் என்று அதை அப்படியே விட்டிட்டு விடலாம்.

ஆனையிறவை தாண்டி காங்கேசன்துறை முனைவரை நடக்கும் 
நடந்து முடிந்த 90 வீதமான வாள்வெட்டுக்கள் சாதி அடிப்படையில் 
நடந்தவை என்பதை உங்களை தவிர்த்து யாழில் வசித்த யாரும் அதை மறுக்க 
மாட்டார்கள். மருதனமாடம் ஈப்பி காம்பில் யார் யார் பொறுப்பாக இருந்தார்கள் 
அப்போது அவர்களால் நடத்த பட்ட கொலைகள் ... ஏன் என்பது 
அந்த ஊர்களை சுற்றி இருந்து இப்போ யாழ் களத்தில்  இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். 

தமிழரிடம் இந்த சாதியை கொண்டுவந்து இப்போதும் வளர்த்து வருவது 
இந்துமதம் ஒன்றுதான். தமிழன் தற்காலிக வேலைவாய்ப்புக்காக கிறிஸ்தவன் ஆனானே 
தவிர கிறிஸ்துவை படித்து கிறிஸ்துவை பின்பற்ற கிறிஸ்தவன் ஆகவில்லை ....பின் நாளில் 
அப்படி ஆனவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்தான். 

கொல்லாமையை கடைப்பிடித்தது தமிழரின் சமணமும் புத்தமதமும்தான் பின் அதை பின்பற்றி 
வந்த சைவம் அதை தமிழரிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
வான்முகியின் ராமாயணத்தில் சீதை ராமனுக்கு தேனில் ஊறவைத்த மாடு இறைச்சியை 
சுவையாக சமைத்து பரிமாறினாள் என்று இருக்கிறது. 

இறைச்சியை தின்றுவிட்டு முழுகிவிட்டு கோவிலுக்கு போவதை ஆரியர்கள்தான் 
நிச்சயம் தமிழருக்கு கற்று கொடுத்து இருப்பார்கள். 

தெருவுக்கு தெரு கோயில் நான் பெரிதா நீ பெரிதா? என்ற சண்டை 
கொஞ்ச கோவிலை அடித்து நுறுக்கினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
ஆயிரம் வருஷம் முன்பு நாம் இன்றும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு கோவில்கள் 
கட்டி இருக்கிறார்கள் எமது முன்னோர்கள்.
இன்று புலம்பெயர்ந்தவர்கள் எல்ல்லோரும் ஒன்று கூடினால் எமது காலத்தை 
வரலாறில் பதிக்க ஒரு பிரமாண்ட கோவிலை ஈழத்தில் கட்டி வைக்க முடியும்.
இந்து என்று குத்தி முறிக்கிற யாரவது முன்வருவார்களா?
கடவுள் நம்பிக்கை ..... பக்தி இல்லாத கூட்டத்தை இந்த மதம் உருவாக்குகிறது 
என்பது தான் எனது வாதமும் ...
சில கருத்தை நீங்கள் எனக்கு சார்பாகத்தான் எழுதி உள்ளீர்கள். 

5 minutes ago, Maruthankerny said:

நீங்கள் எதோ உலக நீதிபதி மாதிரி 
" நான் எழுதிவிட்டேன்" என்பது சிரிப்பாக இருக்கிறது.

ஆவ குழு கூவா குழுவின் விபரம் எனக்கு தெரியாது 
தெரியாத ஒரு குழுவையே நான் வளர்க்கிறேன் என்று நீங்கள் எழுதியது 
எனக்கு கொஞ்சம் மன மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் 90 வீதமான வாள்வெட்டுக்கள் என்று.
சொந்த குடும்ப விவகாரங்களால் மாமன் மச்சானை வெட்டுவது எல்லாம் 
நடந்துகொண்டுதான் இருக்கிறது ஒரு 10 வீதம் அளவில்.
வட மாகாணத்தை நன்கு அறிந்த யாரும் எனது கருத்தை எதிர்க்க மாட்ட்டார்கள் 
காரணம் ..... எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த விடயம்தான்.  

யாழில் பிரபல்யமாக இருக்கும் ஒரு குழுவை பற்றி தெரியாத நீங்கள் தான் மேலே உள்ள கருத்தையும் அதாவது 90% வாள் வெட்டுக்கள் சாதி அடிப்படையில் நடக்கிறது என்று எழுதினீர்கள்,,,இனி மேலாவது காழ்ப்புணர்ச்சியுடன் போட்டிக்கு எழுதாமல் உண்மையை மட்டும் எழுதப் பாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யாழ் சமூகம் சார்ந்த அடிப்படை தெளிவு உங்களிடம் அறவே இல்லை.
ஆவா குழு முதன்மையான ஆக்கப்டுகிறதே தவிர முதன்மையாக அங்கு இல்லை.
யார் அதை இயக்குகிறார்கள் .... ஏன் இயக்குகிறார்கள் என்பதே உங்களுக்கு புரியாது.  

ஒரு ஆவாவை வைத்துதான் ஒரு 1000 வருட சமூகத்தை நீங்கள் தப்பாக எடைபோடுகிறீர்கள்.
என்பதை நேரிடையாக எழுதி மனதை புண்படுத்தாமல் விடுவோம் என்று மறைமுகமாக எழுதினாலும் 
உங்களுக்கு புரியுதில்லை. 

கோவிலை  காப்பாத்த போனீர்கள் .....
இறுதியில் நீங்களும் திறவுங்கோ என்கிறீர்கள் 
சாதியால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றீர்கள்.......
ஒரு ஆவா ஆக கூடி ஒரு 10 வால்வெட்டை செய்திருக்கும் 
எதோ சர்வதேச இராணுவ ரேஞ்சில் வந்து யாழில் தரை இறங்கிய 
மாதிரி எழுதுறீங்கள்.

கொஞ்சம் என்றாலும் லாஜிக்காக எழுதினால்தான் பதில் எழுத முடியும். 

இப்போதும் திரும்பவும் நான் இங்கு எழுதுவது வடக்கில் 90 வீதமான வாழ் வெட்டுக்கள் 
எனக்கு தெரிந்து 70-80 தொடங்கி இப்போ வரை சாதி அடிப்படையை கொண்டவையே.
உங்களுக்கு யாழுக்கு வாழ் கத்தி எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாது.

உங்களுக்கு அரைசத்தையே திரும்பவும் அரைப்பதற்கு  நிறைய நேரம் இருக்குது என்று நினைக்கிறேன்.ஆனால் எனக்கு இல்லை...ஆவா குழுவை ஒரு உதாரணத்திற்கு தான் எழுதினேன்...அங்கு இயங்கும் ஒரு குழுவைப் பற்றி தெரியாத நீங்கள் அங்குள்ள சமூகத்தை பற்றி எழுதுவது வேடிக்கையாய் இல்லை....இழுத்து போர்த்துக் கொண்டு படுங்கோ...நன்றி ....வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

சாதி விடயம் என்பதால்....
சமூக ஒழுக்கம் யாழ் களத்தின் தார்மீகம் சார்ந்து 
அடக்கித்தான் எழுத முடியும்.

துரதிஷ்ட வசமாக நீங்கள் குறுக்க வந்தது 
எனது கால கஷடம் என்று எண்ணுகிறேன்.

ஆவ குழுவே இப்போ உள்ளேதான் இருக்கு முடிந்த விடயம் 
பற்றி இனி எழுத் வேண்டாம் என்று விட்டதால் .... நீங்கள் ஆவ குழுவின் 
அக்கா ரேஞ்சில் போறீங்கள்.
இதன்  தலைவர் கொக்குவிலை சேர்ந்த குமேரேஸ்வரன் வினோத்தின் சாதிவிடயம் 
உங்களுக்கு தெரியாது .......... நானும் அதை எழுத போவதில்லை.
இங்கு பொதுவான கருத்தியலில்தான் நாம் சாதி பற்றி நாகரீகமாக எழுத முடியும் 
அதை விடுத்தால் நாமும் சாதி வெறியராக ஆகி எழுத வேண்டும் 
உங்கள் நிலை பார்த்து பரிதாப பட வேண்டுமே தவிர .... எமது நிலையை கைவிடும் அளவில் 
உங்கள் எழுத்த்தில் எதுவும் இல்லை.

முடிந்தால் தயவு செய்து தலைப்பு சார்ந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.
அடுத்தவரை படுங்கோ எழும்புங்கோ என்ற நிலைமைக்கு போகாதீர்கள். 
நீங்கள் எழுதும் எழுத்தை வைத்து உங்களுக்கு என்ன தெரியும் என்பதை அறிய முடியும்.
ஆவுக்குள்ளும்  விரிவாக எழுதப்போனால் இங்கு சாதி சார்ந்த சிக்கல் இருக்கிறது 
அதனால் ...... நீங்கள் அவர்களின் அக்கா ரேஞ்சில் ஆட்டம் போடடாலும் 
யாழ் கள நாகரீகம் கருதி நாங்கள் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். 

Image result for aava group jaffna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka police arrests soldier over Jaffna terror

SRI LANKA POLICE ARRESTS SOLDIER OVER JAFFNA TERROR

08 NOVEMBER, 2016
 
Sri Lanka’s police have arrested a member of the security forces while investigating the so called “Aava Group” accused of terrorising people in the Jaffna peninsula and destabilising the region.

The suspect, arrested along with five others, is reported to be from a military unit. The military denied the arrest, but police sources said their information was that one of the suspects in custody was reportedly in active service.

Police stepped up a crackdown against the underworld gang after President Maithripala Sirisena last week ordered a clean-up following allegations that the military was behind the criminal gang in Jaffna.

“It is too early to speculate, but the arrest is very significant given what has happened in the past two weeks,” a senior administration official said adding that the highest levels of the government was being kept informed.

President Sirisena bowed to his civil society supporters and ordered a shake-up of the military intelligence units, including the removal of intelligence chief Brigadier Tuan Suresh Sallay last week.

Sallay, among other things, had been accused of causing rifts within the ruling coalition.

He is also a “person of interest” in the investigations into the murder of editor Lasantha Wickrematunga and the abduction of cartoonist Prageeth Eknaligoda.

The involvement of the military intelligence had been well established in both cases and the attempted murder of Upali Thennakoon with courts passing severe strictures on the military for not cooperating with the police investigation.

Government spokesman Rajitha Senaratne told reporters last week that former defence secretary Gotabhaya Rajapaksa and an army officer (who had since retired) were responsible for creating the clandestine Aava Group.

Rajapaksa has since denied setting up such a group.

The minister’s remarks backed claims from residents that the military intelligence was still behind the Aava Group and they operated with impunity because of the covert army support.

The crisis with the Aava Group came to a head when police opened fire and killed two university students at a check point in Jaffna.

Five policemen have been arrested and remanded in connection with the murder of the students, but police had initially said they thought the two were Aava Group members who disobeyed orders to stop.

During the funeral of one of the students, unidentified men beat up two police spies raising fears that the military intelligence was responsible for the attack.

The shake-up in the army intelligence followed although army spokesman Brigadier Roshan Seneviratne said the transfers were routine.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

யாழ் சமூகம் சார்ந்த அடிப்படை தெளிவு உங்களிடம் அறவே இல்லை.
ஆவா குழு முதன்மையான ஆக்கப்டுகிறதே தவிர முதன்மையாக அங்கு இல்லை.
யார் அதை இயக்குகிறார்கள் .... ஏன் இயக்குகிறார்கள் என்பதே உங்களுக்கு புரியாது.  

ஒரு ஆவாவை வைத்துதான் ஒரு 1000 வருட சமூகத்தை நீங்கள் தப்பாக எடைபோடுகிறீர்கள்.
என்பதை நேரிடையாக எழுதி மனதை புண்படுத்தாமல் விடுவோம் என்று மறைமுகமாக எழுதினாலும் 
உங்களுக்கு புரியுதில்லை. 

கோவிலை  காப்பாத்த போனீர்கள் .....
இறுதியில் நீங்களும் திறவுங்கோ என்கிறீர்கள் 
சாதியால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றீர்கள்.......
ஒரு ஆவா ஆக கூடி ஒரு 10 வால்வெட்டை செய்திருக்கும் 
எதோ சர்வதேச இராணுவ ரேஞ்சில் வந்து யாழில் தரை இறங்கிய 
மாதிரி எழுதுறீங்கள்.

கொஞ்சம் என்றாலும் லாஜிக்காக எழுதினால்தான் பதில் எழுத முடியும். 

இப்போதும் திரும்பவும் நான் இங்கு எழுதுவது வடக்கில் 90 வீதமான வாழ் வெட்டுக்கள் 
எனக்கு தெரிந்து 70-80 தொடங்கி இப்போ வரை சாதி அடிப்படையை கொண்டவையே.
உங்களுக்கு யாழுக்கு வாழ் கத்தி எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாது.

தலைப்பு வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கான காரணம் என்ன என்பது. சாதி மட்டுமே அதன் காரணம் அல்ல. வெளிநாடுகளில் இருந்துவரும் தேவைக்கதிகமான பண உதவிகள் இதற்க்கு முதல் காரணி. அடுத்தது சினிமா. அதைப்பார்த்துவிட்டு யாரையாவது ஒருதலையாக காதலிப்பது அவள் மறுப்பு சொன்னால் அவளையும் குடும்பத்தையும் மிரட்டுவது அவர்கள் போலீஸிடம் போனால் வீடு புகுந்து வெட்டுவது. இது ஒரு ரகம். மற்றயது தொழில் போட்டி. இதில் ஒருவர் வேலை வெட்டி இல்லாமல் அடாவடி பண்ணும் குழுவை நாடி மற்றவரை வெட்ட அல்லது அடிக்க சொல்லுவது.இதுதான் 80% மான காரணங்கள்.

பெற்றோர்களும் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோரும் நினைத்தால் இதனை மிக இலகுவாக தவிர்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நல்ல மழை பெய்வதினால் 
மரங்கள் வளரவில்லை என்றால்.

மரங்களில் ஏற்கனவே எதோ தவறு இருப்பது 
என்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

சாதியின் தாக்கம் என்பது வெறுமெனே பாகுபாட்டுடன் முடிவதில்லை 
ஒரு சிறிய குழுமத்தை வதைக்கும் கொடூர மனநிலையை வளர்ப்பது 
ஒரு குருவிக்கு இருக்கும் அறிவே இல்லாதவர்கள் தாம் மேன்மை 
ஆனவர்கள் எனும் மனோ நிலையை கொடுப்பது.
தமக்கு மட்டுமே சுதந்திரம் எனும் அற்ப மனோநிலையை கொடுப்பது 
கடவுளை மூடன் ஆக்கி இனொருவருக்கு கடவுளை மறுப்பது 
சக மனிதனை பழிப்பது .......... என்று பல தரப்பட்ட 
மனோ நிலையில் மனிதர்களை வளர்கிறது.
அதற்குள் சிக்குண்டவர்கள் .... வெகு இலகுவாக வெளிவர முடியாது.

பணத்துக்காக உலகில் எத்தனையோ ஜீவன்கள் உயிரை பணயம் வைத்து 
உழைக்கும் போது ....
பண வரவு ஒரு சமூகத்தை மேன்மை அடைய செய்வதை விடுத்து 
பாலக்குகிறது என்றால் ....... அந்த சமூகத்தில் ஏற்கனவே எதோ தவறு இருந்திருக்க வேண்டும். 

பாழாக்குகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

மழை பெய்து மரம் வளர்வது நாமே உழைத்து முன்னேறுவது.இங்கே மரம் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது.அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றினாலும் சில மரங்கள் அழுகி அழிந்துவிடும்.அளவாக தண்ணீர் ஊற்றினால் நன்றே வளரும்.சற்று குறைவாக ஊற்றினால் வேரானது நீரைத்தேடி சென்றாவது மரத்தை வளர்க்க முயற்சிக்கும்.வடக்கே நடப்பது முதல் ரகம்.

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.யாரும் இப்போ சாதியின் பெயரால் சிறிய குழுமங்களை வதைப்பதில்லை, எல்லா சாதியினரும் கோவில்களில் அனுமதிக்கப்படுகிறார்கள், எத்தனையோ சாதி குறைந்தவர்கள் படித்து நல்ல வேலைகளில் அதுவும் அரசாங்க வேளைகளில் இருக்கிறார்கள்.நல்ல நிலையில் உள்ள வேறு வேறு ஜாதியினர் கல்யாணம் செய்து தமது குடும்பங்களை பிரிந்தேனும் தனியே சென்று வாழுகிறார்கள். பிரச்சனை வருவது வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் சோம்பேறிகளாக கோஷ்டிகளாக ஊர் மேயும் கூட்டங்கள் ஒருதலையாகவோ அல்லது இருவரும் விரும்பியோ காதலித்து பின் அது கல்யாணமென்று வரும்போதுதான் தொடங்குகிறது. எந்த பெற்றோரும் உழைப்பின்றி வேறு யாரிலோ தங்கியிருக்கும் இந்த சண்டியர்களுக்கு பெண்ணை கொடுக்க முன்வரமாட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதிகமான வாள் வெட்டுக்கள் இதனால்தான் நடக்கிறது.இது எமது ஊரில் மட்டுமல்ல சிங்கள ஊர்களிலும் உள்ளதுதான்.

கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து உழைப்பவன் ஒருநாளும் உந்த வாள்  வெட்டு கோஷ்டிகளில் தனது குடும்பத்தவனையோ சமூகத்தவனையோ இருக்க விட மாட்டான்.இந்த அறிவு ஒரு குருவிக்கே இருக்குமே உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்று தெரியவில்லை?

தேவையில்லாமல் சாதியையும் மதத்தையும் கடவுளையும் இங்கே இழுக்காதீர்கள்.பிரச்சனை வீட்டு  வளர்ப்பிலும் வெளி நாடுகளில் இருந்து பணம் அனுப்புவார்கள் அது எவ்வாறு பயன் படுத்தப்படுகிறது என்பதை கவனிக்காமல் இருப்பதனாலேயுமே வருகிறது. முக்கியமாக கஷ்டப்பட்டு உழைத்தால்தான் அடுத்த வேலைக்கு சோறு கிடைக்கும் என்ற நிலையை வளர்க்காமல் சோம்பேறிகளாக இவர்களை வெளிநாட்டு உறவுகள் வளர்ப்பதே பிரதான காரணம்.

உங்களின் ஆக்கபூர்வமான பல கருத்தாடல்களை மற்றய திரிகளில் வாசித்திருக்கிறேன்.ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து பதிவுகள் மிகவும் வித்தியாசமாகவே இருக்கிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

மழை பெய்து மரம் வளர்வது நாமே உழைத்து முன்னேறுவது.இங்கே மரம் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது.அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றினாலும் சில மரங்கள் அழுகி அழிந்துவிடும்.அளவாக தண்ணீர் ஊற்றினால் நன்றே வளரும்.சற்று குறைவாக ஊற்றினால் வேரானது நீரைத்தேடி சென்றாவது மரத்தை வளர்க்க முயற்சிக்கும்.வடக்கே நடப்பது முதல் ரகம்.

மரம் நன்றாக அல்லவா வளர வேண்டும்?

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.யாரும் இப்போ சாதியின் பெயரால் சிறிய குழுமங்களை வதைப்பதில்லை, எல்லா சாதியினரும் கோவில்களில் அனுமதிக்கப்படுகிறார்கள், எத்தனையோ சாதி குறைந்தவர்கள் படித்து நல்ல வேலைகளில் அதுவும் அரசாங்க வேளைகளில் இருக்கிறார்கள்.நல்ல நிலையில் உள்ள வேறு வேறு ஜாதியினர் கல்யாணம் செய்து தமது குடும்பங்களை பிரிந்தேனும் தனியே சென்று வாழுகிறார்கள்.

புலம்பெயர்ந்த சிலர் வெள்ளைக்காரரையே மணம் முடித்து இருக்கிறார்கள் 
ஆதலால் புலம்பெயர்ந்த ஈழ தமிழரிடம் சாதி இல்லை என்று ஒத்துக்கொள்வீர்களா?
நீங்கள் மேலோட்ட்மாக எழுதுகிறீர்கள் ......... வீடுகளுக்குள் அது அப்படியேதான் இருக்கிறது.
போர் முடிந்த பிறகு இன்னமும் நீர் ஊற்றி வளர்க்க படுகிறது.

பிரச்சனை வருவது வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் சோம்பேறிகளாக கோஷ்டிகளாக ஊர் மேயும் கூட்டங்கள் ஒருதலையாகவோ அல்லது இருவரும் விரும்பியோ காதலித்து பின் அது கல்யாணமென்று வரும்போதுதான் தொடங்குகிறது. எந்த பெற்றோரும் உழைப்பின்றி வேறு யாரிலோ தங்கியிருக்கும் இந்த சண்டியர்களுக்கு பெண்ணை கொடுக்க முன்வரமாட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதிகமான வாள் வெட்டுக்கள் இதனால்தான் நடக்கிறது.இது எமது ஊரில் மட்டுமல்ல சிங்கள ஊர்களிலும் உள்ளதுதான்.

கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து உழைப்பவன் ஒருநாளும் உந்த வாள்  வெட்டு கோஷ்டிகளில் தனது குடும்பத்தவனையோ சமூகத்தவனையோ இருக்க விட மாட்டான்.இந்த அறிவு ஒரு குருவிக்கே இருக்குமே உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்று தெரியவில்லை?

தேவையில்லாமல் சாதியையும் மதத்தையும் கடவுளையும் இங்கே இழுக்காதீர்கள்.பிரச்சனை வீட்டு  வளர்ப்பிலும் வெளி நாடுகளில் இருந்து பணம் அனுப்புவார்கள் அது எவ்வாறு பயன் படுத்தப்படுகிறது என்பதை கவனிக்காமல் இருப்பதனாலேயுமே வருகிறது. முக்கியமாக கஷ்டப்பட்டு உழைத்தால்தான் அடுத்த வேலைக்கு சோறு கிடைக்கும் என்ற நிலையை வளர்க்காமல் சோம்பேறிகளாக இவர்களை வெளிநாட்டு உறவுகள் வளர்ப்பதே பிரதான காரணம்.

உங்களின் ஆக்கபூர்வமான பல கருத்தாடல்களை மற்றய திரிகளில் வாசித்திருக்கிறேன்.ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து பதிவுகள் மிகவும் வித்தியாசமாகவே இருக்கிறது???

வடமாகாணத்தில் சாதி ஒடுக்குமுறை ஓரளவுக்கு குறைவான இடம் 
வடமராட்சி .... இப்போ எனக்கு தெரிய ஒரு கோவில் கட்டினார்கள்.
இப்போது பலரும் புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்த்து  இந்த கோவிலுக்கு 
தாழ்த்தப்பட்ட என்று சொல்ல கூடிய ஒரு சமூகத்தினரே பெரும்பான்மையாக 
வந்து போகிறார்கள் ... கும்பாபிஷேகம் .. திருவிழா என்று வரும்போது 
அவர்கள் ஒரு திருவிழாவை தாம் செய்வதா கேட்டு இருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கவில்லை.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது சங்கிலி காப்பை காட்ட ஒவ்வரு திருவிழாவையும் 
பிரித்து எடுத்து இருக்கிறார்கள் கோடை விடுமுறை முடிய இவர்கள் வந்துவிடுவார்கள்.
கோவிலை அவர்கள்தான் பார்க்க வேண்டும். இது அவர்களை ஒரு விரக்தியுடனேயே வளர்த்து வருகிறது 
எதோ ஒரு சந்தர்ப்பம் வரும்போது அவர்கள் ஒரு வாளை எடுத்து செருகிவிடலாம். 
சம்பவத்துக்கும் சாதிக்கும் சம்மந்தம் அப்போது ஒருவேளை இருக்காது. ஆனால் அடிப்படையாக அதுதான் இருக்கிறது.

இப்போது பல வாள்வெட்டுக்கள் திருட்டுக்கள் காரணமாக நடக்கிறது 
சமூக ஏற்ற தாழ்வுகள் உருவாக எது காரணமாக அமைந்தது?

நீங்கள் சொல்வதுபோல் பலரும் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள் இதுவும் 
இன்னொரு காரணம் காதல் கலியாணம் என்று வரும்போது .... கத்தி வாள்களும் வருகிறது. 

தனக்கு தேவை வரும்போது கூட்டி வைத்து கொள்வதும் 
பின்பு தட்டி கழிப்பதும் போலி யாழ் தமிழரின் தொடர் நாடகம்.
புலம்பெயர்ந்த உயர்ஜாதி தமிழர் யாரும் புலம்பெயர் நாட்டில் நாம் 
வயல்தான் விதைப்போம் என்று அடம்பிடிக்கவில்லையே ? கழுவி துடைக்கிற வேலை 
என்றாலும் ஓவர் டைம் செய்யலாமோ என்று கேட்பவர்களே அதிகம்.
பின்பு எல்லாம் முடிய கலியாணம் காதல் என்று வந்தால் பிள்ளைகளுக்கு விளங்காத 
காவடி எடுத்து ஆடுவதை நான் நாளும் நாளும் பார்க்கிறேன். 
கழுவி துடைக்க தொடங்கியதை வைத்து சாதி இல்லை என்ற முடிவுக்கு 
எப்படி வரமுடியும்? 

உலகில் இல்லாததுதான் சாதி 
இல்லாததை இருப்பதாக இருப்பவன் இருக்கிறான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  சாதி  மற்றும் அடக்குமுறைகள்

எல்லா  நாட்டிலும்

எல்லா மதத்திலும் இருந்திருக்கின்றன

அவற்றை  போர்களும் இடம்பெயர்வுகளும்

இயற்கை  அழிவுகளும்

வறுமையும் பட்டினியும்

புரட்சிகளும்  மாற்றிவிட்டன

இவை  அனைத்தையும்  சந்தித்த  தமிழினம்  மட்டும்.......???

மேலும் மேலும்  ஆவேசத்துடன்...............??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

வடமாகாணத்தில் சாதி ஒடுக்குமுறை ஓரளவுக்கு குறைவான இடம் 
வடமராட்சி .... இப்போ எனக்கு தெரிய ஒரு கோவில் கட்டினார்கள்.
இப்போது பலரும் புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்த்து  இந்த கோவிலுக்கு 
தாழ்த்தப்பட்ட என்று சொல்ல கூடிய ஒரு சமூகத்தினரே பெரும்பான்மையாக 
வந்து போகிறார்கள் ... கும்பாபிஷேகம் .. திருவிழா என்று வரும்போது 
அவர்கள் ஒரு திருவிழாவை தாம் செய்வதா கேட்டு இருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கவில்லை.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது சங்கிலி காப்பை காட்ட ஒவ்வரு திருவிழாவையும் 
பிரித்து எடுத்து இருக்கிறார்கள் கோடை விடுமுறை முடிய இவர்கள் வந்துவிடுவார்கள்.
கோவிலை அவர்கள்தான் பார்க்க வேண்டும். இது அவர்களை ஒரு விரக்தியுடனேயே வளர்த்து வருகிறது 
எதோ ஒரு சந்தர்ப்பம் வரும்போது அவர்கள் ஒரு வாளை எடுத்து செருகிவிடலாம். 
சம்பவத்துக்கும் சாதிக்கும் சம்மந்தம் அப்போது ஒருவேளை இருக்காது. ஆனால் அடிப்படையாக அதுதான் இருக்கிறது.

இப்போது பல வாள்வெட்டுக்கள் திருட்டுக்கள் காரணமாக நடக்கிறது 
சமூக ஏற்ற தாழ்வுகள் உருவாக எது காரணமாக அமைந்தது?

நீங்கள் சொல்வதுபோல் பலரும் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள் இதுவும் 
இன்னொரு காரணம் காதல் கலியாணம் என்று வரும்போது .... கத்தி வாள்களும் வருகிறது. 

தனக்கு தேவை வரும்போது கூட்டி வைத்து கொள்வதும் 
பின்பு தட்டி கழிப்பதும் போலி யாழ் தமிழரின் தொடர் நாடகம்.
புலம்பெயர்ந்த உயர்ஜாதி தமிழர் யாரும் புலம்பெயர் நாட்டில் நாம் 
வயல்தான் விதைப்போம் என்று அடம்பிடிக்கவில்லையே ? கழுவி துடைக்கிற வேலை 
என்றாலும் ஓவர் டைம் செய்யலாமோ என்று கேட்பவர்களே அதிகம்.
பின்பு எல்லாம் முடிய கலியாணம் காதல் என்று வந்தால் பிள்ளைகளுக்கு விளங்காத 
காவடி எடுத்து ஆடுவதை நான் நாளும் நாளும் பார்க்கிறேன். 
கழுவி துடைக்க தொடங்கியதை வைத்து சாதி இல்லை என்ற முடிவுக்கு 
எப்படி வரமுடியும்? 

உலகில் இல்லாததுதான் சாதி 
இல்லாததை இருப்பதாக இருப்பவன் இருக்கிறான். 

மருது  நானும் வடமராச்சிதான்.  உங்களுக்கே தெரியும் யாழிலேயே மிகப்பெரிய கோவிலான வல்லிபுரக்கோவில் பரிபாலன சபையில் உள்ள பலர் மேல் சாதியினர் இல்லையென்று. இப்போ பொதுவாக பல கோவில்களில் சாதியப்பிரச்சனை மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.

இன்னும் குறையாமல் இருப்பது காதல் கல்யாண பிரச்சனைதான். புலம்பெயர்ந்தோர்களிடையே இது அடுத்த அடுத்த தலைமுறையுடன் இல்லாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால் தாயகத்தில் இதை மாற்ற நெடுங்காலம் எடுக்கும்.

நீங்களே எழுதியுள்ளீர்கள் இப்போ கூடிய வாள் வெட்டுக்கள் திருட்டுக்காகத்தான் நடக்கிறதென்று. மற்றய முக்கிய காரணம் தொழில் போட்டி. இவைகளுடன் ஒப்பிடும்போது சாதிப்பிரச்சனை காரணமாக நடைபெறும் வன்முறைகள் மிக குறைவென்றே சொல்லலாம்.

முன்பு சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு பணமும்,படிப்பறிவுமே முக்கிய காரணிகளாக இருந்தது.இப்போ எல்லா ஜாதியினரும் வெளிநாடு சென்று உழைக்கத்தொடங்கியபின்னர் பணமும் படிப்பும் எல்லோரிடமும் உள்ளது.ஊரில் ஒரு சிறிய வேலை செய்யக்கூட ஆட்களை பிடிக்க முடியாத நிலை

 இன்று மிக பிரச்சனையாக இருப்பது வேலை வாய்ப்பின்மையும் சுய தொழில்களில் நாட்டமின்மையுமே. மக்கள் பலர் சோம்பேறிகள் ஆகி விட்டார்கள் அல்லது அதீதமான வெளி நாட்டு பண வரவினால் சோம்பேறிகளாக்கப்பட்டுவிட்டார்கள்.
பலருக்கு உடலை வருத்தி வேலை செய்ய இஷ்டமில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.