ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது

By
நவீனன்,
in தென்னங்கீற்று
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
ஜுனில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த திட்டம் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமதம் குறித்தும் காணப்படும் நிலையிலேயே அரசாங்கம் ஜுன் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதுடன், இதன்போது மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாகாண சபைகளுக்கும் பதவிக் காலம் முடிவடைந்து இரண்டு வருடங்களை கடந்துள்ள போதும், இன்னும் தேர்தல் நடத்தப்படாதுள்ளது. புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக கடந்த அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும், எல்லை நிர்ணயம் தொடர்பான சர்ச்சைகளால் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது. இதனால் மீண்டும் அதில் திருத்தத்தை கொண்டு வந்து பழைய முறையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/ஜுனில்-மாகாண-சபைகளுக்கான/ -
By கிருபன் · பதியப்பட்டது
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று கூறினார்.மேலும் வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். http://www.samakalam.com/அழகிய-மொழியான-தமிழை-சரிய/ -
By கிருபன் · பதியப்பட்டது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இதுகுறித்து இரா.சாணக்கியன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும். அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(15) http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-32/ -
By கிருபன் · பதியப்பட்டது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றது தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தமது போராட்டங்களை திசை திருப்பி, அரசினை திருப்திபடுத்த முயல்கின்றது. தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தி, அதாவது அவர்களது உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர் என வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும் இலங்கை அரசை திருப்திபடுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு, மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுகின்றது. சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டை சிதைக்கும் இவர்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து, வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சிதைத்து, கட்சி இலாபம் தேடி வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.(15) http://www.samakalam.com/தமிழ்த்-தேசிய-மக்கள்-முன-13/
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.