Jump to content

சுவையான மீன் கறி.. (குழம்பு)


Recommended Posts

தென்னிந்திய மீன் கறி

 
 

sl526864.jpg

என்னென்ன தேவை?

மீன் - 500 கிராம்,
கத்தரிக்காய் - 100 கிராம்,
முருங்கைக்காய் - 1,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
கொத்தமல்லித்தழை - சிறிது.

தாளிக்க...

நறுக்கிய சின்ன வெங்காயம் - 10,
பூண்டு பல் - 5,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய தக்காளி - 1.

 

எப்படிச் செய்வது?

மீனை நன்றாக கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து பிரட்டி வைக்கவும் கடாயில் சிறிது நல் லெண்ணெயை சேர்த்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் மற்றும் மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கி, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, சின்ன வெங்காயத்தை வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது புளிக்கரைசல் மற்றும் சுடு தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதித்ததும், கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

மல்வானி ஃபிஷ் கறி

 

sl526928.jpg

என்னென்ன தேவை?

மீன் - 1/2 கிலோ,
துருவிய தேங்காய் - 2 கப்,
மஞ்சள் தூள் - 1½ ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 8,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
பூண்டு பல் - 6,
வெங்காயம் - 1,
கோகம் புளி - 8 துண்டுகள்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

 

எப்படிச் செய்வது?

மீனை சுத்தம் செய்து 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 20 நிமிடம் மாரினேட் செய்யவும். தேங்காய்த்துருவல், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், பாதி வெங்காயம், கொத்தமல்லித்தழை, பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மீதியுள்ள பாதி வெங்காயத்தை நறுக்கி நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொதிக்க விடவும். கொதித்ததும் மீன் துண்டுகளை போட்டு மூடி வைத்து வேகவைக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஏதாவது விசேஷமா ஒரே மீன்குழம்பாய்க் கிடக்கு.....! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

இன்று ஏதாவது விசேஷமா ஒரே மீன்குழம்பாய்க் கிடக்கு.....! ?

துள்ளி விளையாடும் மீன் குழம்பாகிறது வழமைதானே அண்ண:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துள்ளி விளையாடும் மீன் குழம்பாகிறது வழமைதானே அண்ண:)

உங்கட ஊர்ல மீன் துள்ளி விளையாடும், பாடும். இங்கு துள்ளி விழுந்தால் நேரே சட்டிக்குள்தான்.....! ?

Image associée Résultat de recherche d'images pour "fish fry in the pot moving gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2018 at 12:34 PM, suvy said:

உங்கட ஊர்ல மீன் துள்ளி விளையாடும், பாடும். இங்கு துள்ளி விழுந்தால் நேரே சட்டிக்குள்தான்.....! ?

 

இன்னும் ஒன்று இருக்கு இங்கே மீன்கள் பாடும் :)

Link to comment
Share on other sites

ஒடிசா மீன் கறி

 

sl52698870.jpg

என்னென்ன தேவை?

எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
முள் மற்றும் தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் - 8,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
கடுகு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
நறுக்கிய வெங்காயம் - 2 கப்,
இஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காய விதை - 1 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

மீன் துண்டு களை நன்றாக கழுவி உப்பு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் கடுகு எண்ணெயை சேர்த்து மீனை இரண்டு பக்கம் நன்கு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். மீதியுள்ள எண்ணெயை சேர்த்து கடுகு, வெங்காய விதை, காய்ந்தமிளகாய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கடுகு பேஸ்ட், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்ததும், வறுத்த மீன் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து மீன் மசாலாவுடன் சேர்ந்து வரும்வரை நன்றாக வதக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு, கடுகு எண்ணெய், கடுகு பேஸ்ட் ஒரே கடுகாய் இருக்கு ....மீனிலும் கடுகு தாராளமாய்....கடுசா மீன்கறி என்று நாமமிட்டாலும் பொருத்தமாய் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கடுகு, கடுகு எண்ணெய், கடுகு பேஸ்ட் ஒரே கடுகாய் இருக்கு ....மீனிலும் கடுகு தாராளமாய்....கடுசா மீன்கறி என்று நாமமிட்டாலும் பொருத்தமாய் இருக்கும்.....!  tw_blush:

கடுகு, கடுகு... ? என்று சொல்லி,  கடுப்பேத்தீங்கிறீங்க, பாஸ். ? ? ?

Link to comment
Share on other sites

மீன் குழம்பு //fish stew

 
 
IMG-20180307-WA0015.jpg

சிக்கன் ஸ்டூ போல் தான் மீன் ஸ்டூவும் . பொதுவாக கேரளத்தில் தேங்காய்ப்பால் மட்டும் சேர்ப்பாங்க, இது தவிர நான் ஒரு பொருளும் சேர்த்து செய்தேன் செமை டேஸ்ட்.ஆப்பம்,இடியாப்பத்திற்கு சிக்கன், மட்டன் குழம்பு செய்வோம், மாறுதலாக இதையும் செய்து அசத்தலாம்.


தேவையான பொருட்கள்;
முள்ளில்லாத மீன் துண்டுகள் - 300 கிராம்


மீனில் பிரட்டி வைக்க:-
மிளகாய்த்தூள் - 1/2 -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி (பொரிக்க)


இனி தாளிக்க:-
தேங்காய் எண்ணெய் - 2  மேஜைக்கரண்டி
கடுகு - 1 /2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம் (பெரியது அல்லது சின்ன வெங்காயம்)
கீறிய பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
நறுக்கிய பூண்டு பற்கள் - 5
அதே அளவு நறுக்கிய இஞ்சி துண்டு
கருவேப்பிலை 2இணுக்கு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி(விரும்னினால்)
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி  சிறியது -1
எலுமிச்சை பழம் - பாதி.
உப்பு சுவைக்கு.
தேங்காய்ப்பால் -மூன்றாம், இரண்டாம் தடவை எடுத்தது 2 கப்
முதல் கெட்டி பால் 1 கப்
இது தவிர ஃப்ரெஷ் கிரீம் - 2 -3 மேஜைக்கரண்டி (நான் சேர்த்தது, ஹோட்டலில் ஒரு முறை சாப்பிட்ட பொழுது கீரீம் சுவை தெரிந்தது, அதனால் நானும் சேர்த்தேன், அதன் பின்பு ஸ்டூ கெட்டியாக ஆனது)


 செய்முறை:

 
IMAG2174.jpg

 


மீனை வாங்கி துண்டு போட்டு நன்கு அலசி வைக்கவும்.

 
 
IMAG2177.jpg
 
 
 
 மேற்கூறிய படி பொருட்கள் சேர்த்து மீனை அரை மணி நேரம் பிரட்டி வைக்கவும்.
IMAG2178.jpg
 
 
 
 பின்பு பக்குவமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும்.
IMAG2180.jpg
 
 

 கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கருவேப்பிலை பொரியவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்க்கவும், நன்கு வதக்கவும்.
இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப்பால் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்பு பொரித்த மீன் சேர்க்கவும்.

 

 

IMAG2183.jpg
 
IMAG2184.jpg
 
 
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சூப்பராக இருக்கும் எடுத்துச் சாப்பிட. நன்கு கொதிக்க விடவும்.
IMAG2185.jpg
 
 
 மீன் தேங்காய்ப்பால் சேர்த்த பொருட்களோடு சேர்த்து நன்கு கொதி வரட்டும்.மிளகுத்தூள் காரம் தேவைப்பட்டால் சேர்க்கவும்.
IMAG2186.jpg
 
 
 
 
 இறுதியாக முதல் தேங்காய்ப்பால் சேர்க்கவும். நுரை கூடும்.
IMAG2189.jpg
 
 
 
 ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பாதி எலுமிச்சைப் பிழிந்து அடுப்பை அணைக்கவும்.மேலே
நறுக்கிய கருவேப்பிலை சேர்க்கலாம்.
IMG-20180307-WA0015.jpg
 
 
சுவையாக சூப்பராக தயாராகிவிட்டது. ஆப்பம், இடியாப்பம், வெறுஞ்சோறு உடன் பரிமாறலாம்.
IMAG2193.jpg
 
 
பரிமாறி அசத்துங்க.
IMG-20180307-WA0017.jpg

http://asiyaomar.blogspot.com/

Link to comment
Share on other sites

தோசைக்கு அருமையான வஞ்சிரம் மீன் கிரேவி

 
அ-அ+

தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வஞ்சிரம் மீன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
தோசைக்கு அருமையான வஞ்சிரம் மீன் கிரேவி
 
தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
நாட்டுத் தக்காளி - 200 கிராம்,
பெரிய வெங்காயம்100 கிராம்,
பூண்டு - 1,
புளி எலுமிச்சை அளவு,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 100 மி.லி,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய் - பாதி

201807191514552734_1_vanjaram-fish-gravy._L_styvpf.jpg

செய்முறை :

தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.

பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை இப்பதான் சாமி கும்பிட்டுட்டு வாறன்.....அருமையான டிஷ் தயாராகுது. பேஷ் ....பேஷ்.....!  tw_blush:

இப்ப ஒரு பருப்போ ,பயித்தங்காயோ போடவேணும் சொல்லிப்போட்டன்......!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

வெள்ளிக்கிழமை இப்பதான் சாமி கும்பிட்டுட்டு வாறன்.....அருமையான டிஷ் தயாராகுது. பேஷ் ....பேஷ்.....!  tw_blush:

இப்ப ஒரு பருப்போ ,பயித்தங்காயோ போடவேணும் சொல்லிப்போட்டன்......!  ? 

வெள்ளிகிழமையெண்டால் சாம்பாரோடையும் சாம்பிடலாமெல்லோ...பருப்பு பயித்தங்காய் தனித்தனியாய் வேணுமெண்டு அடம்பிடிக்கப்படாது கண்டியளோ....tw_blush:

 

எவ்வளவு பக்குவமா சொல்லிதாறா பாருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

22 hours ago, குமாரசாமி said:

எவ்வளவு பக்குவமா சொல்லிதாறா பாருங்கோ...

பக்குவமாகத்தான் சொல்லித்தாறா  ஆனாலும் குமாரசாமி ஒரு சின்னப் பிரச்சினை. புளி விட்டால் காய்கறி வேகுமா என்ற கேள்விக்கு அவர் பதில் ஏன் தராமல் போனார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kavi arunasalam said:

 

பக்குவமாகத்தான் சொல்லித்தாறா  ஆனாலும் குமாரசாமி ஒரு சின்னப் பிரச்சினை. புளி விட்டால் காய்கறி வேகுமா என்ற கேள்விக்கு அவர் பதில் ஏன் தராமல் போனார்?

வெந்துடும் எண்டு சொல்லுறாங்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரையில் அளவான நீரில் காய்கறி வெந்தபின் புளிக்கரைசல் விட வேண்டும். பின் அது நன்றாக கொதித்து பச்சை வாசம் போனபின் மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். மீன் விரைவில் வெந்து விடும்......!   ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.