Recommended Posts

இன அரசியல்-1: மனித இனத்தின் தோற்றமும் - பரவலும்

 

 
hominids

 

பிரபஞ்சம் மற்றும் உயிர்த் தோற்றம்
    

பிரபஞ்சத்தின் வயது சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட சூரியக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும் விலங்கு பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப்படாதவையும், குறிப்பாக நிலைத்திணை, துண்ணுயிரிகள், சிற்றுயிர்கள் மும்மடங்கு  இருக்கும் என்று அறிவியலார்கள் கருதுகின்றனர்.

இன்றைக்கு 24 கோடி  ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகப் பெரிய விண் கொள்ளிகள்  (Meteors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்காலம் என்கின்றனர். இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய எலி போன்ற பருமனுடைய விலங்கிலிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மூதாதையான லெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை) உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள் தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டுகளும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டுகளும் ஆகின்றன)

 

மனிதன் எப்படித் தோன்றினான்?  

மனிதக் குரங்கினத்துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மனிதனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 லட்சம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மனிதர்களுமே, அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் அல்லது தற்கால மனிதர் என்ற (homo sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார்கள் அனைவரும் ஏற்ற முடிவு. 
 

ape.jpg

முன்மனிதன்

ஏறத்தாழ  மனிதனையொத்த 'முன்மனித (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன் பீகிங் மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாசில் மனிதன் ஆகியவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சேர்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல்  இனமும் முன்மனித இனமே. இந்த 'முன்மனித இனங்கள்" எவற்றிடையேயும் 'மொழி" உருவாகவே இல்லை.

இப்பொழுதுள்ள மனிதர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மனித இனம், கடந்த ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது:

table.jpg

கண்டங்கள் நகர்வுக் கொள்கையின்படி (Continental Drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் இப்போதுள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர் கண்டம் அளவுக்கு (Continental Proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை. ஆயினும் பனியூழி முடிவில் கி.மு 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம், சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்டத்திட்டு (Continetal shelf) ஏறத்தாழ இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது.  அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும், தென் திசை உட்பட சில நூறு மைல் தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே  இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவிலிருந்து தற்கால மனிதன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக  இருக்கலாம். 
 

 

world_map_of_ape.jpg

மனித பரவல்

ஜியாகிராபிக்ஸ் மாகசீன் செப்டம்பர் 2006 இதழில் தற்காலமனிதர் ஆப்பிரிக்காவை விட்டு தென்னிந்தியாவையொட்டிய கண்டத்திட்டு வழியாக புலம்பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப்படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்போது உள்ளதைப் போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன. எனினும் நிலப்பகுதி சில நூறு மைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் ஃபிளெமிங். இன்றைய மனிதனிடம் உள்ளவை 23×2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மனிதன் வேறுபட்டவன் என்றாலும் மனிதன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான். 

கண்டங்கள் நகர்வுக்கொள்கை மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற்காணும் கடல்கோள் செய்திகளை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்கு தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்திகளை கலித்தொகை 104-ம் சிலப்பதிகாரம் காடுகாண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய, கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளம்பூரணரும் இதை குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுப்படுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும்  இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு:-

i) ச.சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV

ii). வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு தமிழியன் ஆண்டிகுவாரி II-I.

iii) மறைமலையடிகள் (1930) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்.

iv) ஏ.எஸ். வைத்தியநாத ஐயர் (1929): கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள் : பம்பாய் வரலாற்றுக்  கழக ஜர்னல் II-1.

v) ஜே.பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI

vi) ஹீராஸ் பாதிரியர் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் VI பக். 411-439.

சதபதபிராமணம் 1,8 முதலியவற்றில் கூறப்படும் 'மனு பிரளயம்" திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) மற்றும் (iv) கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i) , (vi)ம் கருதுகின்றன. 

இந்தியமாக்கடலில், பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும்  கருதி அதற்கு 'லெமூரியா" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவியலறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன? கண்டம் அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிடவில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். காந்திரதாவ் தமது 'முக்கடற்புதிர்கள்" நூலில் இதை 1974லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை.

'தொன்மை நாகரிகங்களைப் படைத்த மனித இனங்களை கொண்டிருந்த கண்டம் போன்ற பெருநிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்திய, பசுபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம்.

இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate Techtonics) யாகும். ஆயினும் கி.மு. 8,000-ஐ ஒட்டி உர்ம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு, முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கி விட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகளும் சில (பின்னர் மூழ்கி விட்டவை)  இருந்திருக்கலாம் என்கிறார் வால்டர் பேர்சர்வீஸ். லெமூரியாக் கண்டக் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச.சோமசுந்தரபாரதி, மயிலை சீனி வேங்கடசாமி, எம். ஆரோக்கியசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவினதன்று, சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.  கா. அப்பாத்துரையாரும் கடல் கொண்ட தென்னாடு என்று குறிப்பிட்டதை அறிவோம்.  

1950களுக்குப் பின் லெமூரியாக் கண்டக் கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு- தொல் பழங்காலம் போன்ற  நூல்களில் குறிப்பிட்டுளது. அன்றைய ‘நாடு’ என்பது ‘இந்தியா’ தமிழ் நாடு போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட (தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்த கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டியதேயில்லை.  முன்பு கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டி கணடத்திட்டுப் பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கழக (சங்க) இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம் என P. ராமநாதன் கூறுகிறார்.

 

References:

 

 • The History and geography of Human henes by cavalla Sforza and others 1994
 • Submarine prehistoric archaeology of the Indian continental shelf: A potential resource. N. C. Flemming. 2004 
 • The roots of ancient India by Walter Fairservis
 • Iruṅkoveḷ and the Koṭṭai Veḷāḷar—the possible origins of a closed community P. Ramanathan
 • தமிழர் வரலாறு பி.டி.சீனிவாச ஐயங்கார்.

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/07/இன-அரசியல்-1-மனித-இனத்தின்-தோற்றமும்---பரவலும்-2915062--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-2: ஆதி மனிதன், ஜாவா மனிதன், ஹெய்டில்பர்க் மனிதன், நிண்டேர்தல் மனிதன்

 

 
stone_age_human

 

மனிதனுடைய வரலாறு மிக வியப்பானது. பிற வரலாறுகளைப் பயில்வதன்முன் நாம் மனிதனைப்பற்றிய வரலாற்றையே அறிதல் வேண்டும். மனித வரலாறே மற்றைய வரலாற்றுக் கல்விகளுக்குத் துணை புரிவது. அவனுடைய வடிவமும் இன்றைய மனிதனைவிட வேறுபட்டிருந்தது. இப்பூமியில் வாழத் தொடங்கிய பல்லாயிரம் ஆண்டுகளில் அவனுடைய வடிவம் சிறிது சிறிதாக பண்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. அவனுடைய வாழ்க்கை முறைகளும் அவ்வாறே பண்பாட்டைந்துள்ளன.

 

மனித தோற்றம்

இவ்வுலகின் பல்வேறு இடங்களில் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகளும்,  எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டன. அவைகளை வைத்து அம்மக்களின் வடிவங்களை விஞ்ஞானிகள் அமைத்துள்ளார்கள். கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளுக்கும், எலும்புகளுக்கும் அருகில் கல்லாயுதங்களும், விலங்குகளின் எலும்புகளும் கிடந்தன. இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர் ஆதிகால மக்களின் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். மக்கள் நாகரிகமடைந்து எழுதப்பயின்று வரலாறுகளை எழுதிவைக்கத் தொடங்குவதற்கு முற்பட்ட மனித வரலாறு இவ்வகையிலேயே எழுதப்பட்டுள்ளது. மேல் நாட்டார் மனித வரலாற்றை ஓர் கலையாகக் கொண்டு அதனை ஊக்கத்தோடு கற்கின்றனர். பற்பல புதிய நூல்களை வெளியிடுகின்றனர். மனித வரலாறு மனிதனின் பகுத்தறிவைத் தூண்டி வளர்க்கத்தக்கது. தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள், பழங்கதைகள் போன்ற பலவற்றைத் தக்கவாறு விளக்கத்தக்கது. நம் நாட்டில் இன்னும் சாதி, மத வரலாறுகளில் நாம் திளைத்துள்ளோம்.

 

ஆதி மனிதன்
 

eugene.jpg

யூஜீன் துர்போயிஸ்

 

யூஜீன் துர்போயிஸ் (Eugène Durbois) என்னும் டச்சுக்காரர் 1891-ல் ஜாவாவிலே மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓட்டையும், எலும்புகளையும் இந்தோனேஷியாவில் அமைந்துள்ள சோலோ நதிக்கரையில் கண்டு எடுத்தார். இவை ஆறு வாரிக்கொண்டு வந்து குவித்த மணற்படைகளுள் கிடந்தன. இவை கிடந்த இடத்தின் அருகில் விலங்குகளின் எலும்புகளும் காணப்பட்டன. துர்போயிஸ் கண்டு எடுத்த மண்டை ஓட்டுக்கும் எலும்புகளுக்கும் உரிய மனிதனுக்கு விஞ்ஞானிகள் ஜாவா மனிதன் எனப் பெயரிட்டுள்ளார்கள். இவனுடைய வடிவு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்டது. ஆகவே நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன்  எனவும் அவன் அறியப்படுவான். அம் மனிதனின் மூளை இன்றைய மனிதனின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிலானது. 

 

 

java_man.jpg

ஜாவா மனிதன் (Java Man)

 

இவன் காலம் 4,75,000 ஆண்டுகள் வரை ஆகும். இன்றைய மக்கள் ஜாவா மனிதனை வாலில்லாக் குரங்கு மனிதன் என்று அழைக்கிறார்கள். ஜாவா மனிதன் மயிர் மூடிய உடலையும் தொங்கும் தோள்களையும் பெரிய உறுப்புகளையும் முன்புறம் தள்ளிய தாடையையும் நோக்குகின்றவர்களுக்கு வாலில்லாக் குரங்குபோல் தோன்றலாம். ஆனால், ஜாவா மனிதன் மனிதனே. சீனாவில் பீகிங் எனுமிடத்தில் 1929 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மனிதன் பீகிங் (Peking) மனிதன் எனப்படுவான்.

குரங்குகள் தவழ்ந்து செல்லும், ஆனால் நடக்கத் தொடங்கியப்பின் ஜாவா மனிதன் ஒரு போதும் நாலு கால்களில் சென்றதில்லை. இன்று காணப்படுவது போன்றதல்லாத அழகிய ஓர் இடத்தில் மரத்தில் கட்டப்பட்ட ஒரு கூட்டில் இருந்து வளர்ந்தான். பால்குடி மறந்தபின் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஜாவா மனிதர்களைப் போன்ற உராங்குடன் என்னும் குரங்குக் குட்டிகளோடு விளையாடினான். மனிதக் குரங்குகள் செய்யும் ஒலிக் குறிகளின் பொருளை ஜாவா மனிதன் அறிந்திருந்தான். ஜாவா மனிதன் அவைகளைப் போலவே சத்தமிட்டான். சிறிது வளர்ந்த பின், குடும்பத்தவர்களுக்கு உணவு தேடிவர அரம்பித்தான். உண்ணக் கூடிய பழம், நத்தை பூச்சிகள் போன்றவைகளை தேடிக்கொண்டு வந்தான். சில சமயங்களில் பறவைகளையும் பிடித்து அவைகளின் இறைச்சியையும் உண்டான். குரங்குகளிடம் காணப்படாத சில குணங்கள் ஜாவா மனிதனுக்கு உண்டு. ஜாவா மனிதன் பெற்றோரும் ஆகிய மூவரும் தேடிய உணவை அவர்கள் இருக்கும் மரத்தடிக்குக் கொண்டு வந்து, அதனைத் தந்தை சமமாக பிரித்துத் தந்தார். வாலில்லாக் குரங்குகளோ தமக்கு வேண்டிய உணவை தாமே தேடி உண்டன. காட்டிலே நாயோடு இருக்கும் குட்டியின் தந்தைக் குரங்கு மந்திரம் தாய்க்கும், குட்டிக்கும் உணவு கொண்டு வந்தது.

ஜாவா மனிதன் இனத்தில் பத்து அல்லது பன்னிரெண்டு குடும்பங்கள் வரையில்தான் இருந்தன. ஜாவா மனிதன் வாலில்லாக் குரங்குகளுள் திருமணம் செய்து கொள்ளவில்லை.  வயது வந்த ஓர் ஆண், பெண்ணைத் தேடும் பொருட்டு நூற்றுக்கணக்கான மைல்கள் திரிந்தான். உடம்பு முழுவதும் மயிருள்ள ஒரு இளம் பெண்  கிடைத்தாள். அவர்கள் உறுமிச் சத்தமிட்டு ஒருவர் கன்னத்தோடு ஒருவர் கன்னத்தை உரசி, உடனே இருவரும் திருமணம் செய்துகொள்வதென நிச்சயம் செய்து கொண்டனர். இருவரும் உயர்ந்த மரம் ஒன்றின் மீது கூடுகட்டத் தீர்மானித்து, கூடுகட்டி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். மரம் ஆற்றங்கரையில் நின்றது. அதன் கிளைகள் ஆற்றுக்கு மேலே தொங்கின. ஒருநாள் பூமி வெடித்தது போல பெரிய சத்தம் கேட்டது. ஆற்றில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு அலை எழுந்தது. அது ஜாவா மனிதனையும், மனைவியையும் ஆற்றில் அடித்து விழுத்தி வாரிக்கொண்டு போய் விட்டது. அவ்வலை எரிமலைக் குழம்பினால் உண்டாயிற்று.

 

heidlberg.jpg

ஹெய்டில்பர்க் மனிதன் (Heidelberg man)
 

ஜெர்மனியின் ஜெய்டில்பர்க் எனுமிடத்தில் பழங்கால மனிதனின் மணை ஓடும் எலும்புகளும் 1907 இல் கண்டெடுக்கப்பட்டன. இவன் காலம் 3,00,000 ஆண்டுகள் வரை ஆகும். ஹெய்டில்பர்க் மனிதனுக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நான்கு பேரும் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தனர். நீண்டு வளைந்த பற்களையுடைய கொடிய புலி இரை தேடுவதற்கு இரவில்  உலாவித் திரிந்தது. ஹெய்டில்பர்க் மனிதன் அக்கொடிய விலங்குக்குப் பயந்து வாழ்ந்தான். அப்புலி இரவு நேரத்தில் மரங்களை முன்னங்கால்களால் உதைத்து ஆட்டும், அப்போது மரக்கிளைகளில் இருக்கும் குரங்குகள் பழங்களைப்போல பொத்தென்று கீழே விழும். ஹெய்டில்பர்க் மனிதனின் கூடு மரத்தின் உச்சிக் கிளையில் இருந்தது. 

ஒரு முறை சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மனைவியைப் புலி பிடித்தது. அப்போது அம் மனித குரங்கு ஆத்திரங்கொண்டு பெரிய கல்லை எடுத்துப் புலியின் மண்டையில் அடித்தது. புலி அக்குரங்கைத் தனது முன்னங்கால்களால் வாரி எடுத்துக் கிழித்தெறிந்துவிட்டது. பின்பு அம்மனிதக் குரங்கின் சகோதரனை, புலி சதை சதையாகக் கிழிப்பதை கண்டு அவனது மனம் வேலை செய்து கொண்டிருந்தது. உடனே தனது சகோதரிமாரோடு ஓடி மறைந்துவிட்டான். அவனது உயிர் போக நேர்ந்தாலும் அப்புலியை கொன்று விட வேண்டுமென எண்ணி, தொலைவில் நின்றபடியே புலியைக் கொல்லலாம் என்று அவன் மூளையில் தோன்றிற்று.

அவன் தந்தை ஒரு தண்டாயுதத்தைச் செய்து வைத்திருந்தார். அது முதல் பறவைகளை கல்லால் எறிவதை நிறுத்தி விட்டு, அவை புலியைக் கொல்வதற்குப் பயன்படுமா என்று பல நாட்களாக ஆலோசித்தான். அவன் சகோதரி தினமும் வெளியே சென்று உணவு கொண்டு வந்தாள். பழங்கள், குருவிகளின் முட்டைகள், தவளைகள், முயல் இலைகள் என்பவை அவர்கள் கொண்டு வரும் உணவு வகைகள் நான் உணவு தேடும் பொருட்டு ஒரு விரலைத்தானும் அசைக்கவில்லை. கடைசியில் ஒரு எண்ணம் தட்டிற்று. உடனே மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்து எழுந்து கூத்தாடினான். உடனே சிம்பன்சி என்னும் மனிதக்குரங்களும் ஓடிவந்து அவன் ஆடுவது போல கூத்தாடின.

தோலை பிளந்து அதனால் ஒரு கவண் செய்தான். ஆற்றங்கரைக்கு சென்று அங்கு கிடைக்கும் அழுத்தமான கூழாங்கற்களைக் கவணில் வைத்துக் கழற்றி எரிந்து பழகினான். நாளடைவில் கல் இலக்கில் படும்படி எறியும் பழக்கம் உண்டாயிற்று. பின்பு பறக்கும் பறவைகளின் இறக்கைகள் மீது கல்படும்படி எறியப் பழக்கம் அடைந்தான். ஒரு நாள் மத்தியான நேரம் வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. அப்போது புதர்களைப் பார்த்து கற்களை எறிந்தான். சடுதியாகப் புதர் அசைந்தது. உடனே புலியொன்று வெளியே வந்தது. அதன் வால் நிலத்தை அடித்து கொண்டிருந்தது. வெய்யில் படுதலால் அதன் கண்கள் வெளிச்சமாக தோன்றின. உடனே புலியின் கண்களை நோக்கி கற்களை வீசினான். உடனே அந்தப் புலி விழுந்து இறந்து போயிற்று.

அந்த தீவிலே இனத்தவர்கள் பலர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு கவண் செய்யும் வகையை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தான். அவர்கள் வரும்போது முயல்களையும் பிற உணவுப் பொருட்களையும் கொண்டு வந்தார்கள். கவணின் துணையைக் கொண்டு நன்றாக வேட்டையாடலாம். புலியைக் கொல்லும் போது பார்த்து கொண்டிருந்த சிம்பன்சி குரங்குகள். அதன்பின் அவை அவன் அருகில் வருவதில்லை.

உணவு சமைத்து உடல் செழுமையுறுவதற்கு மனிதன் பலவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். எறிதடி கவண் என்பவைகளின் உதவியாலும் அவைகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் வாய்ப்பினாலும் அவர்களுக்கு ஊன் உணவு எப்பொழுதும் கிடைத்தது. முதலாவது உறை பனிக் காலத்துக்கு பின் தோன்றி இரண்டாவது வெப்ப காலத்தில் ஐரோப்பிய சமவெளிகளில் வாழ்ந்தான். எல்லா வகை உணவுகளையும் உண்ண அறியாமலிருந்தால் அவர்கள் விலங்குகள் சென்ற வழியே போயிருப்பர். இனத்தவர்களுடன்  மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தான். விலங்குகள் மலைக் குகைகளில் வசிப்பதையும், குகைகள் மழைக்கும், வெய்யிலுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றன என்பதையும் கவனித்தான். பெரிய மலைக் குகை ஒன்றுக்கு சென்று. அங்கு  இருந்த கழுதைப்புலியை துரத்திவிட்டு குடும்பத்துடன் அங்கு குடியேறினான். இதற்கு பிறகு மரத்தில் கூடிகட்டி ஒருபோதும் வாழவில்லை. குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்தான்.

 

 

neanderthel.jpg

நியாண்டேர்தல் மனிதன் (Neanderthal Man) 

 

ஹெய்டில்பார்க் மனிதனுக்கும், நியாண்டேர்தல் மனிதனுக்குமிடையில் இரண்டு லட்சம் ஆண்டுகள் கழிந்தன. 1875 இல் நியாண்டேர்தல் என்னுமிடத்தில் பழைய மனிதனின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. இம்மனிதன் நியாண்டேர்தல் மனிதன் ஆவன். அவனது காலம் 40,000 ஆண்டுகள் ஆகும்.

இக்காலத்தில் உறைபனி மூன்று முறை மனிதரையும் விலங்குகளையும் தனக்கு முன்னால் துரத்திக் கொண்டு பூமியை சுற்றி வந்தது. நியாண்டேர்தல் மனிதன் நாலாவது குளிர்காலத்தில் வாழ்ந்தான். இவ்வினத்தவர் முன்னேற்ற வழிகளில் செல்ல ஆரம்பத்திருந்தார்கள். மனித இறைச்சியை உண்ணும் மக்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நாடி எலும்பு இருக்கவில்லை. ஆகவே அவர்கள் அதிகம் பேசாதவர்களாக இருந்தனர். அவர்கள் தமது கைகளால் காட்டும் சைகைகளோடு இருபது ஒலிக் குறிகளையும் பேச்சாக பயன்படுத்தினர்.

மனித இறைச்சியை உண்ணும் குணம் பசிக்கொடுமையால் உண்டாகவில்லை. எலும்புகளை உடைக்கும்போது அவைகளினுள் உள்ள ஊன் மிக சுவையுடையதாயிருந்தது. சுவை காரணமாக மனித எலும்பையும் உடைத்து ஊனை உண்ட மக்கள் மனித இறைச்சியையும் உண்ணத் தொடங்கினார்கள். இன்றும் தென் கடல் தீவுகளில் வாழும் மக்கள் நீளப்பன்றியைச் சிறந்த உணவாகக் கொள்கிறார்கள். நீளப்பன்றி என்பது மனிதனைக் குறிக்கும். வீரமுள்ளவனைக் கொன்று தின்பதால் அவனுடைய வீரம் உண்பவனைச் சேர்கின்றதென்னும் நம்பிக்கையும் இருந்து வந்தது.

 

இவனுக்கு முன்பு மக்கள் நெருப்பை பற்றி அறிந்திருக்கவில்லை. குகைகளிலும், மரப்பொந்துகளிலும் நடுங்கிக்கொண்டிருந்து உணவைப் பச்சையாகப் புசித்தனர். ஓநாய்களிடமிருந்தும், புலிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள இவர்களிடம் மிகக் கீழ்த்தரமான ஆயுதங்கள் மாத்திரமிருந்தன. நாட்கள் கழிந்தன. இவர்களின் உடல்கள் வயிரமடைந்தன. இளைஞர், இருபது பேர் அல்லது முப்பது பேர் சேர்ந்து கூட்டங்களாகத் திரிந்தார்கள். வயது முதிர்ந்தவர்கள் அவர்களோடு செல்ல முடியாமலிருந்தது. தம்மைப் பின் தொடர்ந்து செல்ல முடியாதவர்களை வலியுள்ள ஒருவன் தனது தண்டாயுதத்தால் மண்டையிலடித்துக் கொன்றான். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது முன்னேற்றம் விரைந்து சென்றது.

ஒருநாள் குகைக்கு வெளியே இரவு முழுதும் புயல் அடித்தது. மின்னல் இடைவிடாமல் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. காலையில் காட்டுமரங்கள் புகைந்து கொண்டிருந்தன. எரிந்து  சிந்திக் கிடக்கும் சாம்பலில் நெருப்பில் வெந்து கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தேன். அவைகளுள் ஒன்றை எடுத்துக் கரியைத் துடைத்துவிட்டுப் பல்லாற் கடித்துப் பார்த்தான். இவ்வகை ருசியான உணவை முன் ஒரு போதும் உண்டதில்லை. நெருப்புத் தணலைக் கல் ஒன்றின் மீது வைத்து அதனை விலங்கின் குடல் ஒன்றால் தூக்கிக்கொண்டு அவனது குகைக்குச் சென்றான். அவன்  மனைவியர் பலருள் ஒருத்தியை சுள்ளிகள் பொறுக்கி வரும்படி சொன்னான்.  சுள்ளிகள் மீது தணலை வைத்து நெருப்பை மூட்டி எரித்தான்.

அவன் இனத்தவர்கள் அவனிடமிருந்து நெருப்பை பெற்றுச் சென்றார்கள். அந்த நெருப்பு இராப்பகல் எரியும்படி விறகிட்டு எரிக்கப்பட்டது. நெருப்பு அவிந்து போகுமாயின் மறுபடி மின்னலும் புயலும் உண்டாகும் காலத்தை பார்த்திருக்க வேண்டும். நெருப்பு இல்லாவிடில் குளிர் காயவும், சமைக்கவும் முடியாது. குகையிலுள்ள பெண்களுக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பொழுது புதுக்கடமை ஒன்று உண்டாயிற்று. அக்கடமை விறகுகளை இட்டு நெருப்பை அணைந்து போகாதபடி பார்த்து கொள்வதாகும்.

 

 

stone_age.jpg

நெருப்பைக் கண்டுபிடித்தான்

 

நெருப்பு எப்பொழுதாவது அணைந்து விடுமோ என்று ஏங்கி கொண்டிருந்தான். ஒருமுறை அவர்கள் வேட்டையாட சென்றபோது, இன்னொரு வேட்டையாடும் கூட்டத்தினர் அவர்களை சந்தித்தார்கள். இரு கூட்டதாரும் எதிர்த்து கடுமையாக சண்டை செய்தனர். அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களினும் பலராயிருந்தனர். அவர்கள் இவர்களைத் துரத்தி விட்டு இவர்கள் நெருப்பை பிடித்து கொண்டார்கள். அப்போது ஓடிச் சென்று பார்த்தபோது தங்கிய குகைகளில் நெருப்பு இல்லை. ஆகவே இவர்கள் குளிரால் வருந்திக் கொண்டிருந்தார்கள். உணவை சமைக்க முடியாமலும் துயரப்பட்டனர். இவனுக்கு புதல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் சோம்பேறியும் பலங்குறைந்தவனுமாயிருந்தான். அவன் வேண்டும்போது நெருப்பை உண்டாக்கக் கண்டுபிடித்தான். அவன் தீத்தட்டிக்கல் ஆயுதத்தால் வேலை செய்வதில் கெட்டிக்காரன். அவன் முரடான கல்லாயுதத்தால் மரத்தை சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது மரம் சூடேறுவதை கண்டான். பின்பு ஒருநாள் இரண்டு மரத்துண்டுகளை எடுத்து நீண்ட நேரம் உரசினான். சடுதியில் புகை உண்டாயிற்று. பின்பு மரத்தின் துறையில் நெருப்பு தோன்றிற்று. அவன் உடனே பெருங்கூச்சலிட்டான். இதன் பின்பு அவர்கள் ஒரு போதும் தங்களுடன் நெருப்பைக் கொண்டு திரியவில்லை. நெருப்பை சுற்றிச் சிறு குடிசைகள் எழுந்தன. நெருப்பின் உதவியால் ஆயுதங்களை நான்றாக கூராக்கவும், வயிரப்படுத்தவும் அறிந்தனர். நெருப்பைக் கண்டுபிடித்த பின் குடும்ப உணர்ச்சியும் நெருங்கி வளர்ந்தது.

நெருப்பு மனிதனையும் விலங்குகளையும் பிரித்து வைத்தது. குளிர் மிகுந்த இரவு காலத்தில் சிம்பன்சி என்னும் மனித குரங்குகள் இவர்கள் குகைமுன் எரியும் நெருப்பைக் கண்டு வந்தன. தமது கைகளை நெருப்பில் காய்ச்சி குளிர் காய்ந்து மகிழ்ச்சியினால் சத்தமிட்டன. ஒரு மனிதக் குரங்குக்கும் நெருப்பின்மேல் விறகை இட்டு எரிக்கச் செய்தது. பின்னர் நெருப்பு அணைந்தவுடன் அவை மறுபடியும் குளிரால் நடுங்கின.

வாழத் தகுதியுள்ளது நிலைபெறுதல் தகுதியற்றது மறைந்து போதல் என்பதே அன்று முதல் இன்று வரையும் உள்ள இயற்கை விதி. இவ்விதியை இன்னொரு மயிர் அதிகமில்லாதவரும், உயரமுடைவருமாகிய ஒரு சாதியினர் வேட்டையாடி அழித்தார்கள். விரிவளர்ச்சி (Evolution) விதி தகுதியுள்ளதற்கு அல்லது வலியதற்கு இடங்கொடு என்பதே. இவர்கள் இவ்விதிக்கு மாறாக நிற்க முடியவில்லை.

 

பெண்கள்

விலங்குகள் போன்ற மக்களிடையே பெண்களின் நிலை எவ்வாறிருந்தது? பெண்கள் மிகவும் கவனிக்கப்படாதவர்களாகவும் அடிமை போன்றவர்களாகவம் இருந்தனர். பெண் புனிதமானவள், இரக்கமுள்ளவள், மனிதனின் இனிய பாதியாயுள்ளவள் என்னும் கருத்துகள் தோன்றவில்லை. 

அக்காலத்தில் மனிதன் அரை விலங்காகவே இருந்தான். பெண்கள் அடர்ந்த மயிருள்ளவர்களாகவும், அதிக விறைப்பு ஏறாதவர்களாகவும் சாந்தமான தோற்றமுடையவர்களாகவும், இருந்தனர். அவர்களில் பலர் வட்டமாக குந்தியிருப்பார்கள். அவர்களில் சிலர் கல்லாயுதங்களால் கிழங்குளைச் சுரண்டி சுத்தம் செய்வர். சிலர் விதைகளைக் கல்லின்மேல் வைத்துக் கல்லால் அடித்து உடைத்துக் கொண்டிருப்பர். சிலர் மான் முதலிய விலங்குகளின் தோல்களை பல்லினால் சப்பி மிருதுவாக்கிக் கொண்டிருப்பர். சிலர் தமது குழந்தைகளுக்கும் பன்றி, நாய்க் குட்டிகளுக்கும் பால் கொடுத்து கொண்டிருப்பர். நெருப்பைச் சுற்றியிருந்து அவர்கள் பலவகை கதைகளைப் பேசுவார்கள்.

இருபதாம் நூற்றாண்டாகிய இன்று நன்கு வளர்க்கப்படும் பெண்கள், பெண்ணினத்தினர் ஆண்களை விலங்கு நிலையினின்றும் எப்படி மேலே வரச்செய்தார்கள் என்பதை அறியமாட்டார்கள். சமீப காலத்திலேயே பெண்கள் ஆண்களை ஒத்த உரிமைகளைப் பெற்று அவர்களோடு சம வாழ்க்கை நடத்துகின்றனர். இன்று ஆண்களை போலவே பெண்களும் வேலை செய்து கூலி பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் உழைப்பைக் கொண்டே வாழ்கின்றனர். ஆண்களின் சம்பந்தமில்லாமலேயே பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்.

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/12/இன-அரசியல்-2-ஆதி-மனிதன்-ஜாவா-மனிதன்-ஹெய்டில்பர்க்-மனிதன்-நிண்டேர்தல்-மனிதன்-2918371--3.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-3: குரோமக்நன் மனிதன்

 

 
cro_magnon

 

க்ரோ-மேக்னன் மனிதன் உடல் நிலை, உடல் அமைப்பு, மூளை அளவு மற்றும் அவர்களின் கலாச்சாரம் இன்றுள்ள மனிதனுக்கு தகுதியானவர் ஆவர். நிண்டேர்தல் மனிதருக்குப் பின் குரோமக்நன் மனிதர் தோன்றினார்கள். இவர்கள் துருவமான மனிதர் (Reindeer man) எனவும் அறியப்படுவர். இவர்கள் நிண்டேர்தல் மக்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிக் கொன்றனர். இவர்கள் ஆசிய நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் பரவி வாழ்ந்தார்கள். இவர்கள் நெட்டையானவர்களாயும், குறைந்த மயிர் அடர்த்தி உடையவர்களாயுமிருந்தனர். இவர்கள் சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஒரு பெரிய குடிசையைச் சுற்றி பல சிறிய குடிசைகள் இருந்தன. குரோமக்நன் மக்கள் குடும்பம் என்னும் சமூக நிலையை அடைந்தனர். இவர்களிலிருந்தே சமூக வாழ்க்கை தோன்றிற்று. குடும்ப நெருப்பைச் சுற்றி குடும்பம் வளர்கின்றது. குடும்பத்திலிருந்தே சமூகம் வளர்ந்ததென்று வரிவளர்ச்சிக் கொள்கை (Evolution theory) கூறுகிறது. மற்றவர்களின் மனத்தோடு பழகுவதால் இவர் மனம் வளர்ச்சியடைகிறது. இவர்கள் பிரிந்து சென்று வௌ;வேறு கூட்டங்களாக வாழ்ந்தபோதும் தாம் எல்லோரும் ஒரு பெரிய கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லி கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று துருவ மான்களை வேட்டையாடினர். துரத்தப்படும் விலங்குகள் எங்குச் சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள். துருவ மான், காட்டு குதிரை, கஸ்தூரி மாடுகள், மேய்ச்சல் நிலங்களை தேடிச் சென்றபோது இவர்களும் அவைகளை வேட்டையாடும் பொருட்டு அவைகளைப் பின் தொடர்ந்து சென்றனர்.

வரலாறு ஆரம்பிப்பதன் முன் மத்திய ஐரோப்பிய புல்வெளியில் புல் முழங்கால் உயராமாயிருந்தது. அங்கு மேயும் துருவ மான்களும்  காட்டுக் குதிரைகளும் வேட்டைக்காரரை மோப்பம் பிடித்தற்கு அடிக்கடி தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன. வேட்டைகாரர் தவழ்ந்து அம்பு பாயக்கூடிய அண்மையில் சென்றனர். காட்டின் தொலைவில் ஒரு பக்கத்தில் பெண்கள் நின்றார்கள்.  மூன்று மான்களும் ஒரு குதிரையும் மேலே துள்ளிக் கீழே விழுந்தன. உடனே மற்றைய விலங்குகள் காட்டுக்கு ஊடாகப்பாய்ந்து வேகமா யோடி மறைந்தன. பெண்கள் ஓடி வந்தனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தோள்களிலிட்டுச் சுமந்து சென்றனர். இறைச்சி பொரிக்கவோ, சமைக்கவோ அல்லது அவிக்கவோ படவில்லை. அக்காலப் பெண்கள் பானை செய்ய அறிந்திருக்கவில்லை. இப் புல்வெளியில் வேட்டையாடு வோர் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். பின்பு இன்னொரு கூட்டம் விலங்குகள் அவ்விடம் வந்தன. அங்கு மம்மத்து என்னும் யானை வந்து கொண்டிருக்கும் செய்தியை இளைஞன் ஒருவன் வந்து சொன்னான். பின்பு எல்லோரும் சேர்ந்து பொறிக் கிடங்கு ஒன்று தோண்டினார்கள். மம்மத்தின் முன்நின்று அதனை வேட்டையாட அவர்கள் அஞ்சினார்கள். மம்மத்து யானை கூட்டம் வந்தது. அக் கூட்டத்திலுள்ள யானையொன்று கிடங்கின் மேலே பரப்பியிருந்த தடிகள் மீது காலை வைத்தது. அது உடனே குழியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டது. அது எக்காளமிட்டுச் சத்தஞ் செய்தது. மற்ற யானைகள் அதனை மீட்பதற்குக் குழி அண்டை வந்தன. அவைகளால் அதற்கு உதவி அளிக்க முடியவி;லை. அவைகள் அதனைக் குழுp யிடத்திலேயே விட்டு சென்றன. வேட்டைகாரர் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் குழியை சுற்றி நின்று கூத்தாடினார்கள். விலங்கு இறந்து போகும் வரையில் தமது ஈட்டிகளை அதன் மீது பாய்ச்சினார்கள். ஈட்டிகளை நக்கி இரத்தத்தை சுவைத்தார்கள்.

மக்கள் வேட்டை விலங்குகளோடு வெளியிலேயே வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் குகைகள் இருந்தன. இவை நிலையானவும் உறுதியானவும் குடிசைகளாகப்பயன்பட்டன. வேட்டை விலங்குகள் கிடைப்பது அருமையான காலங்களில் வேட்டையாடுவேர் அவைகளில் தங்கியிருந்தார்கள். ஆண்டில் ஒரு முறை அல்லது இரண்டு முறை எல்லோரும் ஓரிடத்தில் கூடினார்கள். இவ்வழக்கம் 40,000 ஆண்டுகளின் முன் தொடங்கியது இது எங்கள் காலம் வரையில் இருந்து வருகின்றது.

நிண்டேர்தல் மனிதனிடத்தில் காணப்படாத பொருள்கள் குரோமக்நன் காணப்படாத மனிதனிடத்தில் இருந்தன. குரோமக்நன் மனிதரிடத்தில் குகைளில் வாழும் கரடி, வாள் போன்ற பல்லுடைய புலிகளை எதிர்த்துப்போராடத்தக்க ஆயுதங்கள் இருந்தன. வில்லையும் அம்பையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இவர்கள் ஆடை உடுக்கவில்லை தம்மை அழகுபடுத்தும் பொருட்டுத் தோல் அணிந்திருந்தார்கள் இவர்கள் புல்வெளிகளில் வாழ்ந்தார்கள். சிறிது சிறிதாக இவர்களின் எண் குறையத் தொடங்கிற்று.

 

stone_age_man.jpg

புதிய கற்கால மக்கள்

 

குரோமக்நன் மக்கள் மறைந்து ஐயாயிரம் ஆண்டுகளின் பின் புதிய கற்கால மக்கள் தோன்றினார்கள். மக்கள் எழுத்துகளைப் பற்றி அறியுமுன் வரலாறு தோன்றவில்லை கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து நோக்கும்போது அவர்களின் வரலாறு புலப்படுகின்றது. இம் மக்கள் இருள் அல்லது கபில நிறமுடையவர்களாயிருந்தனர். இவர்கள் உலகம் முழுமையிலும் சென்று பரந்து தங்கி வாழ்ந்தார்கள். வெப்பநிலை, உணவு, பழக்க வழக்கங்கள் சமய வழக்கம்  போன்றவை காலின் வளர்ச்சி தாடை எலும்புகளின் நீளம் உடலின் உயரம் அல்லது குறுக்;கம், மண்டையின் பருமை, பாதத்தின் அளவு போன்ற மாற்றங்களை உண்டு பண்ணின. வாழத் தகுதியுடையவர்கள் நிலை பெற்றார்கள். தகுதியற்றவர் மறைந்து போயினர். தகுதியுடைய ஒர சாதியார் தோன்றும் போது தகுதியற்றவர் மறைந்து போகின்றனர்.

வரலாறு தொடங்கும்போது மங்கிய நிறமுள்ள மக்கள் வட ஆப்பிரிக்கா மத்திய தரைக்கடல் ஓரங்கள்  முதல் இந்தியாவரையில் வாழ்ந்தார்கள். புதிய கற்கால மக்கள் குடிசை கட்டி வாழ்ந்தார்கள். மரங்கள் தோப்புகள் போல் வளர்ந்திருந்தன. சோலைக்கு வெளிப்புறத்தில் நாற்புறத்தும் பயிர் செய்யும் நிலங்கள் இருந்தன. பெண்கள் உணவு தேடும் பொருட்டுக் காட்டுக்குள் வெகுதூரம் சென்று அலையவில்லை. அவர்கள் தானியத்தை நிலத்தில் விதைத்தார்கள். ஆண்டுதோறும் அவை விளைவு அளித்தன. அவர்களின் கணவர் ஓரிடத்தில் தங்கியிருந்தார்கள். வீடு இன்றி அலைந்து திரிந்த அவர்கள் இப்பொழுது வீட்டில் இருந்தார்கள். வீடுகளில் நாய்கள் நின்று குரைத்தன. நாய் அவர்களுக்கு உதவியாக விருந்தது. மாலை நேரத்தில்  ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் நின்றும் ஒட்டிக்கொண்டு வர அது உதவி புரிந்தது. காட்டில் வாழுமு; துவ மான், பன்றி, குதிரை, மாடு, ஆடுகளை அவர்கள் பிடித்துப் பழக்கிஅ வை உணவின் பொருட்டு தம்மிடம் தங்கி வாழும்படி செய்தார்கள். அவர்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடவும் சென்றார்கள். இப்பொழுது வேட்டையாடாமலே உணவு கிடைத்தது. ஆகவே, அவர்கள் வேட்டையாடுவதைப் பொழுது போக்காக மாத்திரம் கொண்டனர்.

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/15/இன-அரசியல்-3-குரோமக்நன்-மனிதன்-2920305.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-4: குடியம்- ஆதித் தமிழரின் வாழ்விடம் மற்றும் நுண்கற்கால தொழிற்சாலை அமைவிடம்

 

 
gudiyam

 

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த பல சிறப்புமிக்க இடங்கள் அழிந்துவருகின்றன. அவ்வாறு அழிந்துவரும் புராதன மனித வாழிடங்களையும், பழங்கால சிற்பங்களையும் ஆராய்ச்சியாளர்களும், தொல்லியல் நிபுணர்களும் ஆய்ந்து அதைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தக் குகையானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ளது. இதுவொரு தொன்மையான குகைவாழிடம் ஆகும். தலைநகர் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது முதலில் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான ராபர்ட் புரூஸ் பூட் என்பவரால் 1860களில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு இந்தியத் தொல்லியல் துறையினரால் இந்தப் பகுதி 1962-64க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.

stone_age_home.jpg

குடியம் : ஆதித் தமிழரின் வாழ்விடம்!
 

குடியம் குகைகள், பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையென கருதப்படுகின்றன. ஒற்றையடிப் பாதையுடன், பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மரங்கள், அடர்ந்த புதர்கள், மூலிகைச் செடிகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய உருளை கூழாங்கற்கள், ஒரே நேரத்தில் பலர் தங்கும்படியான குகைகள் என பல சிறப்புகளைக் கொண்டது. இந்தக் குகையில் அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

robert.jpg

ராபர்ட் புரூஸ் பூட்

இங்கிலாந்து நாட்டில், 1834ல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களது ஆயுதங்களை கண்டறிந்து, இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக (சர்வேயர்) தன் பணியைத் துவக்கினார். 

33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891ல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு, கற்கால மனிதர்கள், கற்களையே ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் (அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது) பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன், மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை கண்டறிந்தார். இந்த ஆயுதங்கள், சென்னை கற்கோடாரி மரபு வகையைச் சார்ந்தது. கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களையும் சேகரித்தார். இவை அனைத்தும் பூண்டியில், தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

stone_age_equipments.jpg

நுண்கற்கால தொழிற்சாலை 


 
ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை (Post Acheulean Industry)  உறுதிப்படுத்தியுள்ளார். ஆதியிலேயே நுண்கற்கால தொழிற்சாலை அமைத்து ஆயுதம் தயாரித்தவன் ஆதித்தமிழன் என்பது பெருமைக்குரியது. ராபர்ட் புரூஸ் பூட் பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது.

சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும்.

 

குடியம் குகைகள்’ ஆவணப்படம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகையின் முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் இயக்குனர் ரமேஷ் யாந்த்ரா ‘குடியம் குகைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படம், கடந்த 2015ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 


References:
Indian Archaeological Review 1962-63
Indian Archaeological Review 1963-64
The Foote collection of Indian prehistoric and protohistoric antiquities by Foote Robert Bruce
Prehistoric And Protohistoric Antiquities Of India  by Foote, Robert Bruce

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/17/இன-அரசியல்-4-குடியம்--ஆதித்-தமிழரின்-வாழ்விடம்-மற்றும்-நுண்கற்கால-தொழிற்சாலை-அமைவிடம்-2921599.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-5: சமகால மனித இனங்கள்

 

 
HUMAN-RACES

 

சமகால மனித இனங்கள்: காக்கேசியர், மங்கோலியர் மற்றும் நீக்ரோவினர்
 

உலகளாவிய நிலையில் மனித குலத்தவர் இன்று இனங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு இனத்தவரும் மரபணுசார்ந்த, உயிரியில் சார்ந்த பண்புகளால் மற்ற இனத்தவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.

இந்த இனப் பண்புகளில் சில மட்டும் புறத்தோற்றத்தில் காணப்படுபவையாக உள்ளன. மண்டையோட்டின் அளவு, முக அமைப்பு,  மூக்கின் தன்மை, கண் அளவு, தலை மயிரின் தன்மை, உள்ளங்கை – உள்ளங்கால் ஆகிய இரண்டின் தோற்கூற்றியல் கூறுகள், தலைச் சுழிகள், உடல் உயரம், உடல் நிறம் போன்றவை புறத் தோற்றக் கூறுகளாகும். இரத்தவகை, என்சைம், புரோட்டீன் போன்ற அகப் பண்புகளும் இனவேறுபாடுகளைக் காட்டும் கூறுகளாக உள்ளன. இவற்றில் அடிப்படையில் பெரும்பான்மையான அறிஞர்கள் இன்று மனித குலத்தைப் பின்வரும் மூன்று பெரும் இனங்களாக வகைப்படுத்துவார்கள்.
A. காக்கேசியர் 
B. மங்கோலியர் 
C. நீக்ரோவினர் 

மனித குலத்தின் இந்த மூன்று பெரும் இனங்களுக்குரிய பேராளர்கள் எங்கெல்லாம் புலம் பெயர்ந்து சென்றனர். இப்போது அவர்கள் எங்கெல்லாம் பரவிக் காணப்படுகின்றனர் என்பதைப் பற்றி நிறைய அறிய வேண்டும். இப்புரிதலை ஏற்படுத்திக் கொண்டாதல் தான் இந்திய மண்ணில் குடியேறிய இனங்கள் பற்றியும், திராவிடப் பகுதியில் பல்வேறு இனங்களின் சேர்மத்தால் ஏற்பட்ட இனச் சங்கமம் பற்றி பார்போம்.

 

Caucasoid.jpg

காக்கேசியர் (Caucasoid)

காக்கேசிய மக்கள் வழக்கமாக மொழிசார்ந்த பிரதேசங்களைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்: ஆர்ய இனம் (இந்தோ-ஐரோப்பிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), செமித்திய இனம் (செமித்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள்) மற்றும் ஹாமிட்டிக் இனம் (பெர்பர்-கஷிட்டிக்-எகிப்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) ஆகியவை ஆகும். 

காக்கேசிய இனத்தார் பின்வரும் பதினொரு கிளையினங்களாகப் பாகுபடுகின்றனர்.

1.    நடுநிலக்கடலினத்தவர் 
அ. பூர்வ நடுநிலக்கடலினத்தவர் 
ஆ. அட்லாண்டிக் பகுதி நடுநிலக்டலினத்தவர் 
இ. இந்திய – ஆப்கன் அல்லது ஈரானிய ஆப்கன் இனத்தவர் 
2.    நார்டிக் 
3.    ஆல்பைன் 
4.    கிழக்கு பால்டிக் 
5.    தைனாரிக் 
6.    ஆர்மீனியர் 
7.    கெல்டிக் 
8.    லாப் 
9.    தொல் காக்கேசியர் 
i.    இந்திய திராவிடர் (Indo-Dravidian)
ii.    தொல் ஆஸ்திரேலியர் (Proto--Australoid)
       அ. ஆஸ்திரேலிய முதுகுடியினர் 
       ஆ. முன்னை திராவிடர் / ஆஸ்திரேலியர் / வேடர் 
10. பாலினீசியர் 
11. அய்னு 

 

1. நடுநிலக் கடலினத்தவர் (Mediterranean)

வெள்ளைக்காரர்கள் எனப் பொது வழக்கில் கூறப்படும் இனத்தவர்களில் இக்கிளையினத்தவர் மிகவும் தொன்மையானவர்கள். ஆனால் இவர்கள் எப்போது தோன்றினார்கள் என்பது துல்லியமாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.  மனித குல வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் இவர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிச் சென்றனர். அதனால் இன்று போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தால், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலும், காலனிகளாகச் சென்றதால் வடக்கு ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றனர். மேலும், அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும் பரவிக் காணப்படுகின்றனர்.

அ. பூர்வ நடுநிலக்கடலினத்தவர் (Classical Mediterranean)

இவர்கள் நடுநிலக்கடல் பகுதி முழுவதும், குறிப்பாக போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, ஆகிய நாடுகளில் வாழ்பவர்கள், மேலும் ஐரோப்பாவின் கிழக்கு, நடு, வடமேற்குப் பகுதிகளில் சிதறலாகப் பரவிக் காணப்படுகின்றனர்.  எகிப்திலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் கூட இவ்வினப் பண்புகள் கொண்டோர் உள்ளனர்.

ஆ. அட்வாண்டிக் பகுதி நடுநிலக்கடலினத்தவர் (Atlanto Mediterranean)

இவர்கள் வடக்கு ஆப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஈராக், கிழக்கு பால்கன் பகுதிகளில் பரவலாகவும், பிரிட்டிஷ் தீவுகள், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இடங்களில் சிதறலாகவும் உள்ளனர்.

இ. இந்திய – ஆப்கன் அல்லது ஈரானிய – ஆப்கன் இனத்தவர்  (indo-Afghan or Irano-Afgan)

இவ்வினத்தார் பெரும்பான்மையாக ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பலுஸிஸ்தான், வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.

2. நார்டிக் (Nordic)

நார்டிக் இனத்தார் ஸ்காண்டிநேவியா, பாலடிக்பகுதி, வடக்கு பிரான்ஸ் ஆகிய இடங்களில் பரவலாகவும், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டிஸ் தீவுகள் ஆகிய இடங்களில் குறைவாகவும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் சிதறலாகவும் காணப்படுகின்றனர்.

3. ஆல்பைன் (Alpine)

ஆல்பைன் இனத்தார் நடு ஆசியாவில் தோன்றியவர்கள் எனச் சில மானிடவியலர்கள் கூறுவர். இவர்களை ஆசிய மங்கோலியர்களுடன் இணைத்துப் பேசுபவர்களும் உண்டு. ஆல்பைன் இனத்தார் நார்டிக், நடுநிலக்கடலினத்தார் ஆகியோரின் கலப்புக் கூறுகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆல்பைன் இனத்தவர்கள் நடு ஐரோப்பா முதல் கிழக்கு ஐரோப்பா வரை பரவிக் காணப்படுகின்றனர்.  குறிப்பாக, பிரான்ஸ் முதல் ஊரல் மலைத் தொடர்வரை இவர்கள் பரவியுள்ளனர். மேலும், மென்மார்க், பால்கன், நார்வே, வடக்கு இத்தாலி, சிற்றாசியாவின் மலைப் பதிகள் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். கூடவே இவர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறலாகப் பரவிக் காணப்படுகின்றனர்.

4.    கிழக்கு பால்டிக்  (East baltic)

இவ்வினத்தாரிடமும் கலப்பினக் கூறுகள் உள்ளன. குறிப்பாக, நார்டிக், ஆல்பைன் ஆகிய இரண்டும் இனங்களின் கூறுகள் அதிகமாக உள்ளன. இவர்களுடைய இனத்தோற்றம் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளது. இவர்கள் வட கிழக்கு ஜெர்மனி, பால்டிக் நாடுகள், போலந்து, ரஷ்யா, பின்லாந்து ஆகிய பகுதிகளில் பரவி வாழ்கின்றனர்.

 

5.    தைனாரிக்  (Dinaric)

தைனாரிக் இனத்தவரிடம் நார்டிக், ஆர்மீனிய இனங்களின் கூறுகள் கலந்துள்ளன. இன்னும் சிலரிடம் ஆல்பைன், அடலாண்டிக் நடுநிலக்கடல் இனம், இந்திய – ஆப்கன் ஆகிய இனங்களின் கூறுகள் கலந்துள்ளன. இவர்கள் பெரும்பாலும் தைனாரிக் ஆல்பைன் பகுதி என்றழைக்கப்படும் யூகோஸ்லேவியா, அலபேனியா, ஆஸ்டிரியன் டைரால் ஆகிய பகுதி களில் வெகுவாகவும், நடு ஐரோப்பாவில் சிதறலாகவும் காணப்படுகின்றனர்.

6.    ஆர்மீனியர் (Armenoid)

இவர்களும் சில இனங்களின் கலப்பால் தோன்றிய ஒரு புதிய வகையினரே. ஆர்மீனியர்களிடம் பூர்வ நடுநிலக்கடலினத்தார்.  ஆல்பைன் நார்டிக், இந்திய-ஆப்கன் ஆகிய இனக் கூறுகள் கலந்துள்ளன.  அண்மைக்கால ஆண்வுகளின்படி இவர்கள் நடுநிலக்கடல் இனம், ஆல்பைன் இனம் ஆகிய இரண்டு இனங்களின் மிகுதியான கலப்பால் தோன்றியவர்கள் என அறிய முடிகிறது இவர்களின் பூர்வீகம் சிற்றாசியர்  இங்கிருந்தே அரேபியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவினர் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆர்மீனரியர்கள் துருக்கி சிரியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளனர். எனினும், ஈரான், ஈராக், பால்கன் நாடுகள், கிரீஸ், பல்கேரியா. ஆமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகின்றனர்.

7.    கெல்டிக் (keltic) 

இவர்கள் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றனர். இங்கிலாந்திலும் மேற்கு ஐரோப்பாவிலும் சிதறலாகப் பரவி வாழ்கின்றனர்.

8.    லாப் (Lapp) 

வடக்கு ஸ்காண்டிநேவியா, வடக்கு பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, வடகிழக்கு ரஷ்யா ஆகிய இடங்களில் வெகுவாக உள்ளனர். இவர்களிடம் ரஷ்யா, பின்லாந்தியா, ஸ்வீடன் நாட்டவர், நார்வே நாட்டவர் இனக்கூறுகள் கலந்துள்ளன. என்னும் இவர்களைத் தனி இனமாகக் கருதுவதற்குரிய சிறப்புக் கூறுகள் பல உள்ளன. மேலும், இவர்களிடம் மங்கோலிய இனக் கூறுகளும் கலந்துள்ளன. என்றாலும் காக்கேசிய இனக் கூறுகளே மிகுந்திருக்கின்றன. என்பதால் லாப்பியர் தனி இனமாகவே அடையாளம் பெறுகின்றனர்.

9.    தொல் காக்கேசியர்  (Archaic Caucasoid)

தமிழர் உள்ளிட்ட திராவிடர்கள் இவ்வினத்திற்குரியவர்கள். இந்த இனத்தில் பின்வரும் நான்கு கிளையினங்கள் உள்ளன.

1.ஆஸ்திரேலிய முதுகுடினர் (Australian aboriges)
இவர்களிடம் மிக அரிதான நீக்ரோ இனச் கூறுகள் சிலவும், பசிபிக் பெருங்கடலினக் கூறுகள் சிலவும் கலந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் இவர்களே.  இவர்கள் தொல் திராவிடர்களோடும் ஒத்துள்ளனர்.

2.முன்னைத் திராவிடர்கள் (Pre-Dravidian or Australoid or Veddoid)
தென்னிந்தியாவில் வாழும் தொல்குடிகளான காடர், இருளர், குறும்பர், கோண்டு, கோந்த், பீல் ஓராவ்ன், செஞ்சு போன்றவர்கள் இவ்வினத்தவர்களாவர்.

3.வேடர்
இவர்களே இலங்கையின் தொல்குடியினர். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.  12 ஆம் நூற்றாண்டு வரை மலைக்குகைகளில் வாழ்ந்து வந்தனர்.  இவர்கள் இப்போது சிங்களம், தமிழ் இரண்டும் கலந்து கிளை மொழியைப் பேசி வருகின்றனர்.  (ஆனால் திராவிட உறவுமுறையைக் கொண்டுள்ளனர்.

4.சகாய அல்லது சனாய் 
மலாய் முந்நீரகத்தில் வாழ்கின்றனர்.

10.பாலினீசியர் (Polynesian)

இவர்கள் பல இனக் கூறுகளின் கலப்பினைக் கொண்ட இனத்தவராக உள்ளனர். வெள்ளையர்களாகத் தோன்றினாலும் தொடக்கால நடுநிலக் கடலினத்தவர், ஆசிய மங்கோலியர், பசிபிக் பகுதி நீக்ரோவினர் ஆகிய மூன்று இனத்தவர்களுடன் கலப்புற்று இவர்கள் தனி இனமாக மாறிவிட்டனர். இவ்வினத்தார் பிசிபிக் பெங்கடலில் உள்ள பாலினிசியத் தீவுகளின் குறிப்பாக, நியூசிலாந்து பிரண்ட்லி தீவுகள், சமோவா, மர்குவசாஸ், ஹவாய் போன்ற தீவுகளில் பரவிக் காணப்படுகின்றனர்.

11.அய்னு (Ainu)

இவர்களே ஜப்பானில் தொல்குடியினர். அய்னுக்கள் அடிப்படையில் காக்கேசிய இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் இவர்களிடம் மங்கோலிய இனக் கூறுகள் வெகுவாகக் கலந்து விட்டன.  ஆஸ்திரேலிய முதுகுடிகளின் சில பண்புகளும் இவர்களிடம் காணப்படுகின்றன. இவர்கள் வடக்கு ஜப்பான், தெற்கு சகஉறாலின், யெசோ ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றனர்.

 

 

mangolians.jpg

மங்கோலியர்
 

மங்கோலிய இனத்தார் பின்வரும் பிரிவினர்களாகப் பாகுபடுகின்றனர்.

1. பூர்வ மங்கோலியர் அல்லது மைய மங்கோலியர் 
2. துருவப் பகுதியினர் அல்லது எஸ்கிமோவினர்
3. இந்திய மலாய் மங்கோலியர் 
அ. மலாய் வகை 
ஆ. இந்தோனேஷிய வகை அல்லது நெசியாத் 
4. அமெரிக்க இந்தியர் 
அ. தொல் அமெரிக்க இந்தியர் 
ஆ. வடக்கு அமெரிக்க இந்தியர் 
இ. புதிய அமெரிக்க இந்தியர் 
ஈ. தெகுக்லீஷ் 
உ. வடமேற்குக் கரை அமெரிக்க இந்தியர் 

1. பூர்வ மங்கோலியர்/மைய மங்கோலியர்  (classical mogoloid or Central Mogoloid)

இவ்வகை மங்கோலியர்கள் சைபீரியா, ஆமூர் ஆற்றுப்பகுதி ஆகிய இரண்டிடங்களில் அதிகமாகவும், வடக்குச் சீனம், மங்கோலியா, திபேத் ஆகிய பகுதிகளில் சிதரலாகவும் வாழ்கின்றனர். திபெத்தியர்கள் மற்றும் வட சீனர்களும் இவ்வினத்தவர்கள். புரியத்  கொர்யத், கோல்டி  கில்யக்  போன்ற சமூகத்தார் இவ்வினத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

2. துருவப் பகுதினர் அல்லது எஸ்கிமோவினர் (Arctic or Eskimoid)

வடக்கு ஆசியா, வட அமெரிக்காவின் துருவக் கடற்கரைப் பகுதி, கிரீன்லாந்து, லேப்ரடார்,  மேற்கு அலாஸ்கா ஆகிய பகுதிகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  சுக்சிஸ், கம்சடேல்ஸ், யாக்குட், கடோயேட் போன்ற சமூகத்தார் இவ்வினத்தில் முக்கியமானவர்கள் எனலாம்.

3.  இந்திய மலாய் மங்கோலயர் (Indo-Malayan Mongoloid)

 

இவ்வினத்தார் இந்தோனேஷிய வகை எனவும், மலாய் வகை எனவும் இரு பிரிவினராகப் பாகுபடுகின்றனர்.  முதல் வகையினர் தென் சீனம், இந்திய-சீனம், பர்மா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றனர். இரண்டாம் வகையினர் மேற்கூறிய பகுதிகளில் காணப்படுவதுடன் டச்சு கிழக்கிந்தியப் பகுதி, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். பெரும்பாலான ஜப்பானியர்கள் மலாய் வகை மங்கோலியர்களாக உள்ளனர். இந்தோனேஷிய வகையினரைக் காட்டிலும் மலாய் வகையினர் மங்கோலிய இனக்கூறுகளை அதஜகம் கொண்டுள்ளனர்.

4.  அமெரிக்க இந்தியர்  (American or American Indian)

இவர்கள் செவ்விந்தியர்கள் என்று கூறப்படுவார்கள் இவர்களே அமெரிக்காவின் தொல்குடிகள்.  இவர்கள் அனைவரும் இனத்தால் மங்கோலியர்கள். அந்நாட்டின் வட பகுதியிலும் மையப்பகுதியிலும் தென் பகுதியிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.  கொலம்பசுக்குப் பிறகு இங்கு மனிதக் குடியேற்றம் ஏற்பட்ட பின்னர் அத்தொல்குடிகளின் பூர்வ நிலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோனது. ஆமெரிக்க இந்தியர்களில் பின்வரும் ஐந்து பிரிவினர் உள்ளனர்.

அ. தொல் அமெரிக்க இந்தியர் (Palaeo American)

இவர்கள் தென் அமெரிக்காவின் தொல்குடியாவர். பிரேசிலின் லாகோ சாந்தா வகையினர் ஆவர். இப்போது கிழக்கு அமெரிக்காவிலும் கனடாவிலும் வெகுவாகக் காணப்படுகின்றனர். அமெரிக்கா முழுவதிலும் சிதறலாக உள்ளனர்.

ஆ. வடக்கு அமெரிக்க இந்தியர் (north Amerind)

ஆமெரிக்காவின் வட பகுதியின் தொல்குடிகளும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த உட்வேண்ட்ஸ் மக்களும் இவ்வகையில் அடங்குவர்.

இ. புதிய அமெரிக்க இந்தியர் (New Amerind)

இவ்வகையினர் அமெரிக்காவின் தென்பகுதி, நடுப்பகுதி, வடப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள மேட்டுநிலங்களில் பரவலாகக் காணப்படுகின்றனர்.

ஈ. தெகுக்லீஷ் (Tehucleche)

இவர்கள் பட்டகோனியா பகுதியில், அதிலும் குறிப்பாக தியாரா டெல் புயூகோவில் ஒன்ஸ் பகுதியில் வாழ்கின்றனர்.

உ. வட மேற்குக் கரை அமெரிக்க இந்தியர் (North-West Coast Amerind)

இவ்வகை மங்கோலியர்கள் தென்கிழக்காசிய மக்களைப் போன்ற சாயல் கொண்டவர்கள்.  இவர்கள் வட அமெரிக்காவின் வட மேற்குக் கடற்கரைப் பகுதியில் பெருமளவு வாழ்கின்றனர். இவர்களில் வடக்கத்தியார், தெற்கத்தியார் என இரு பிரிவுகளுண்டு.  முதலாம் பிரிவினர் குழிந்த அல்லது நேரான மூக்கும் அகன்ற முகத்தையும் கொண்டுள்ளனர். இரண்டாம் பிரிவினர் குவிந்த உணரமான மூக்கையும் நீண்ட முகத்தையும் கொண்டுள்ளனர்.

 

 

niegro.jpg

நீக்ரோ
 

நீக்ரோ இனத்தார் பின்வரும் பிரிவினர்களாகப் பாகுபடுகின்றனர்.

1.ஆப்பிரிக்க நீக்ரோ 

அ. தூய நீக்ரோ 
ஆ. நைல் பகுதி நீக்ரோ 
இ. பண்டு 
ஈ. புஷ்மன் - ஹாட்டண்டாட் 
உ. நீக்ரில்லோ (ஆப்பரிக்கக் குள்ளர் ) 

2. பெருங்கடல் நீக்ரோ 

அ. நீக்ரிட்டோ 
1. ஆசியக் குள்ளர் 
2. பசிபிக் குள்ளர் 
ஆ. பப்புவர், மெலனீஷியர் 

1.  ஆப்பிரிக்க நீக்ரோவினர் (Arican Negro)
நீக்ரோ இனத்தின் முக்கிய பிரிவாக விளங்கும் இவ்வினத்தில் பின்வரும் ஐந்து கிளையினத்தவர்கள் உள்ளனர்.

அ. தூய நீக்ரோ (True Negro)
இவர்கள் மேற்கு ஆப்பிரிக்க, கினி கடற்கரை ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள்.
 ஆ. நைலி பகுதி நிக்ரோ (Nilotic Negro)
இவர்கள் நைல் ஆற்றில் மேல் பகுதியிலும் கிழக்கு சூடானிலும் வாழ்பவர்கள்.
இ. பண்டு(Bantu)
இவர்கள் பண்டு மொழி பேசுபவர்கள். நடு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றனர்.
ஈ. புஷ்மன் - ஹாட்டண்டாட் (Bushman-Hottentot)
புஷ்மன் பிரிவினரும் ஹாட்டண்டாட் பிரிவினரும் இனத்தவர்கள் (மிகச் சில கூறுகளே மாறுபடுகின்றன). ஆனால் பண்பாட்டால் மாறுபட்டவர்கள். புஷ்மன்கள் குவாய் அல்லது கான் எனவும், ஹாட்டண்டாட் கோய் கோய் எனவும் அழைக்கப்படுகின்றனர். புஷ்மன்கள் இப்போது கலகாரிகப் பாலைவனத்தோடு தங்கள் வரிஜடத்தைச் சுருக்கிக் கொண்டனர். முன்னாளில் தெற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவிக் காணப்பட்டனர்.  ஹாட்டண்டாட் மக்கள் தென் மேற்கு ஆப்பிரிக்காவில் பெரிதும் வாழ்கின்றனர்.
உ. நீக்ரில்லோ (ஆப்பிரிக்கக் குள்ளர்) (Negrillo-African Pygmy)
அக்கா, பட்வா, பம்பூட்டி ஆகிய சமூகத்தார் இப்பிரிவில் அடங்குவர். இவர்கள் காங்கோ பகுதியில் நடுநிலக் கோட்டுப் பகுதியிலுள்ள காடுகளில வாழ்கின்றனர்.
 

2. பெருங்கடல் பகுதி நீக்ரோ (Oceanic Negro) 

இவர்களில் நீக்ரிட்டோ (Negrito), பப்புவர்-மெலனீஷியர் (Papuans and Melanesians) ஆகிய இரண்டு பிரிவினர்கள் உள்ளனர். நீக்ரிட்டோவினர் பிரிவில் மேலும் இரண்டு பிரிவினர்கள் உள்ளனர். ஆசியக் குள்ளர்கள் (Asianic Pygmy), பசிபிக் குள்ளர்கள் (Oceanic Pygmy). ஆசியக் குள்ளர்கள் எனப்படுவோர் அந்தமான தீவுகளில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்களில் ஒங்கி போன்ற பழங்குடியினர். மிகக் குறைந்த உயரமுடையவர்கள். பசிபிக் குள்ளர்கள் நியூகினி, அதையொட்டிய தீவுப் பகுதிகளில் பெரிதும் காணப்படுபவர்கள். பப்புவர்கள் நியூகினியிலும் மெலனீஷியாவின் பல தீவுகளிலும் வாழ்பவர்கள்.

3.  அமெரிக்க நீக்ரோ (American Negro)

இவ்வகையினர் பலரின் கவனத்தை ஈர்ப்பவர்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடாகிய நைஜீரியாவிலிருந்து பெருமளவு நீக்ரோக்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட நீக்ரோவினர் 19ஆம் நூற்றாண்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கேயே வாழத் தலைப் பட்டதால் அமெரிக்க இனச் சேர்மத்தில் இவர்கள் தனி தனித்தவராகவே உள்ளனர். அமெரிக்க நீக்ரோ என இவர்கள் தனிமைப்பட்டாலும் இவர்கள் அங்குள்ள காக்கேசிய இனத்தாருடன் சில நூற்றாண்டுகள் கலப்புற்றதால் இன்று அங்கு வடஅமெரிக்க காக்கேசியர் என்ற பிரிவினராகவும் தனி இன அடையாளம் பெற்று வாழ்கின்றனர்.

 

 • References:
 • Outline of History by H. G. Wells
 • On the Geographical Distribution of the Chief Modifications of Mankind by the scientist Thomas Henry Huxley
 • The Races Of Europe by Stevens Coon Carleton

 

 

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/21/இன-அரசியல்-5-சமகால-மனித-இனங்கள்-2924106--4.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-6: மனித இன நவீன வரையறைகள் மற்றும் வகைப்பாடுகள்

 

 
geographical_race

 

உலகளாவிய நிலையில் மனித குலத்தாரைப் பல்வேறு இனங்களாகப் பாகுபடுத்திய முறையைப் பின்னாளில் மானிடவியலர்கள் மாற்ற விரும்பினார்கள்.  இனம் என்னும் சொல்லுக்குப் பதில் மெண்டலிய மக்கள் என்று கூறலாம் என ஸ்டான்லி மேரியன் கார்ன் (Stanley Marion Garn) முன்மொழிந்தார். 
 

stanley.jpg

ஸ்டான்லி மேரியன் கார்ன்


தொடக்க காலத்தில் இனம் எனும் சொல் ஏதொ ஒரு வகையில் நேரடியாக இனவெறியோடும்.  இன ஒதுக்குதல் கொள்கையோடும் தொடர்பு பெற்று விட்டதால் அச்சொல்லாடலைக் கைவிட வேண்டுமென விரும்பினார்கள். ஆனாலும் அது தொடர்ந்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.  அதனால் மானிடவியலர்கள் இச்சொல்லை முழுக்க உயிரியல் துறைசார்ந்த அர்த்தத்தோடு மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும் புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

இன்று மானிடவியலார் மனித குலத்தாரைப் பின்வரும் வகையினங்களாக வகைப்படுத்துகின்றனர்.  அவை :

1.    புவியியல் சார்ந்த இனம் (Geographical race)
2.    வட்டார இனம் (Local race)
3.    நுண்ணினம் (Micro Race)

 

புவியியல் ரீதியாகத் தனித்துவம் கொண்ட நிலப்பகுதியில் வாழும் மக்களினத்தவரின் உயிரியல் பண்புகள் அப்பகுதிக் குள்ளேயே தொடருவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன.  அவர்களுக்குள் மணவுறவு நிகழ்வதே காரணம். இதனால் இத்தகைய மக்களை மெண்டலிய மக்கள் என அழைப்பது வழக்கம். தீவுக்கூட்டம், ஒரு முழுமையான கண்டம்/ துணைக் கண்டம் / மலை / கடல் ஆகியவற்றால் பிரியும் ஒரு பிரதேசம் ஆகியவற்றில் வாழும் அனைவரும் புவியியல் சார்ந்த இனமாகக் கருதப்படுகின்றனர்.  பின்வரும் அட்டவணையில் முக்கியமான புவியியல் சார்ந்த இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

table_1.jpg

 

வட்டார இனங்கள்

புவியியல்சார் இனத்திற்கடுத்து வட்டார இனங்களாக மக்கள் வகைப்படுகின்றனர். ஒரு பரந்த புவியியல்சார் பரப்பிற்குரிய இனமானது வட்டார அடிப்படையில் சில தனித்துவங்களை முன் வைத்து வேறுபடுபவையே ‘வட்டார இனங்கள்’ எனப்படும். புவியியல்சார் இனத்தின் ஒர் உட்பிரிவே வட்டார இனம்.  இனப்பெருக்க அளவில் ஒரு பரந்த எல்லையை வரையறுத்து அந்த எல்லைக்குள்ளேயே நில, சமூக, மொழி எதுவாகவும் இருக்கலாம். இனப்பெருக்க முறையைக் கொண்டிருக்கும் மக்கள் வட்டார இனமாகக் கருதப்படுவார்கள்.

 

முக்கியமான வட்டார இனங்கள் 

table_2.jpg

 

ஒரு குறிப்பிட்ட குறுகிய நிலப்பரப்பின் சுற்றுச் சூழல் தரும் அழுத்தத்தின் இனப்பெருக்க வாய்ப்புகளையும், அதையொட்டிய மரபணு பரவுதலில் ஒர் ஒழுங்கையும் தக்கவைக்கும் மக்கள் கூட்டமாக வட்டார இனம் அமைகிறது. அதுவுங்கூட ஒரு பரந்த வகையினமாகவே உள்ளது.  ஏனெனில் திராவிடர் என்ற வகைப்பாட்டிற்குள் வட்டார இனம் இடம் பெறுகிறது நுண்ணினம் என்ற அடுத்தகட்ட வகைப்பாட்டையும் கவனிக்கும் போது இனம் பற்றிய நமது புரிதல் மேலும் தெளிவடையும்.

 

நுண்ணினம் 

வட்டார இனங்கள் என அறியப்படும் ஒவ்வொரு இனத்தின் கண் அமையும் கிளையினங்களே நுண்ணினம் ஆகும். திராவிடர் எனும் வட்டார இனத்தின்கண் காணப்படும் மொழிவாரிப் பிரிவினர்களை நுண்ணினம் எனக் கொள்ளலாம். தமிழர் தமிழருடன் மணவுறவு கொள்ள விரும்பும் போக்கு இம்மக்களுக்கிடையில் காணப்படும் மரபணு ஒழுங்கமைவினைத் தொடர்ந்து கொண்டு செல்ல உதவுகிறது.  இதனால் ஏற்படும் மக்களினம் தனிவகையினமாக உருப்பெற்று காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.

இந்தவகையில் மனிதகுலமானது பல்வேறு நிலைகளில் படிப்படியாக வகைப்பட்டு அதன தன் மரபணு எல்லையின் தனித்துவத்தை வரையறுத்துக்கொண்டு வருகின்றது.  மேற்கூறிய இனங்களுக்கிடையில் கலப்பு  நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது.  இந்த இனக்கலப்பு என்பது ஒர் இனத்தின் தனித்துவமான சில பண்புகளை உடனடியாக மாற்றிவிடாது.  மாறாக, இதனை மரபணு ஒட்டம் என்று கூறுவார்கள்.  இனப்பெருக்க வரையறை கொண்ட ஒர் இனத்தார் மற்றொரு இனத்தாரை விரும்பி மணக்கும்போது ஒரு மரபணுச் சேர்மத்ததுக்குரிய பண்புகள் மற்றொரு இனத்தின் மரபணுச் சேர்மத்தோடு கலக்கிறது.  இதனையே மரபணு ஒட்டம் என மானிடவியலர்கள் அழைக்கின்றனர்.  இந்திய இனச் சங்கமத்தில் ஆங்கிலோ-இந்தியா, மலபார் கரைக்குரிய மாப்பிள்ளை ஆகியோர் இனக் கலப்பால் உருவான நுண்ணின வகையினங்களாகும். மனித குலத்தின் நீண்ட நெடிய படிமலர்ச்சியில் இத்தகைய போக்குகள் இயல்பானவையே.

 

இந்தியாவில் இனங்கள்

வரலாற்றுக்கும் முந்தைய இனங்கள் 

இந்தியாவில் வரலாற்றுக்கும் முந்தையகால மனிதர்கள் பல்வேறு  இடங்களில் வாழ்ந்துள்ளனர். அகழாய்வு மூலம் இவர்களை அறியும் முயற்சி 1839இல் பால்கொனர் (Falconer) காட்லி (Cautley) என்பவர்களால் தொடங்கப்பட்டது.

இமயமலையின் தாழ்வான பகுதிகளில் குறிப்பாக சிவாலிக் குன்றுகளின் உயரமான பகுதிகளில் உயர்பாலூட்டி வகையைச் சேர்ந்த புதைபடிவத்தை முதலில் கண்டெடுத்தனர்.  இந்த வாலில்லாக் குரங்கின் புதைபடிவத்தைத் தொடர்ந்து இதனையொத்த பல புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1886இல் லைடேக்கர் (Lydekkar) இதற்கு சைனோ செபாவஸ் பால்கொனரி எனவும், 1910இல் பில்கிரிம் (Pilgrim) கண்டெடுத்த இதே வகையினத்திற்கு பப்பியோ பால்கொனரி எனவும் பெயரிட்டனர்.

இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள ஜாபி எனும் கிராமத்தில் சிவாலிக் மண்ணடுக்கு வரிசையில் கிடைத்த அதே வகையான மேலுமொரு புதைபடிவவகைக்கு பேலியோ பித்தகஸ் சிவாலன்சிஸ் (Palaeopithecus Sivalensis) எனவும், லீவிஸ் (Lewis) கண்டெடுத்த இதே வகைக்கு சிவாபித்தகஸ் எனவும் பெயரிட்டனர்.  இவ்வகையினம் டிரையோபித்தகஸ் வகையைச் (Dryopithecus pattern) சேர்ந்தது என்ற முடிவுக்குப் பின்னர் வந்தனர்.

டிரையோபித்தகஸ் வகையைச் சேர்ந்த இன்னும் பல புதைபடிவங்கள் பலராலும் கண்டுபிடிக்கப்பட்டன.  அவற்றுக்குப் பல பெயர்கள் இடப்பட்டன.  சில வருமாறு: சுக்ரிவா பித்தகஸ் (Dryopithecus), சிவாபித்தகஸ் (Sivapithecus), சுக்ரிவா பித்தகஸ் (sugrivapithecus), பிராமபித்தகஸ் (Brahmapithecus), ஜைகேண்டோபித்தகஸ் அல்லது இண்டோபித்தகஸ் (Giganio pithecus or Indopithecus), கிருஷணபித்தகஸ் (Krishnapithecus), சிவாஸ்மியா (Sivasimia) ஆகியனவாகும்.

இதற்கடுத்த ஆய்வுகளில்சிவாலிக் குன்றுகளில் ஒரளவு தொடர்புடைய, அதே நேரத்தில் இனங்காண்பதற்குச் சற்று சிக்கலான புதைபடிவடிமொன்று கிடைத்தது. இது வாலில்லாக் குரங்கினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டதாகக் கருதப்பட்டது.  இதைப் போன்றதொரு புதைவடிவத்தை, 1934இல் இந்தியப் பகுதிக்குட்பட்ட சிவாலிக் குன்றுகளில் ஹரிடாலியங்கன் என்னுமிடத்தில் லூவிஸ் கண்டறிந்தார்.  இதனை ராமபித்தகஸ் பஞ்சாபிகஸ் (Ramaithecus panjabicus) எனப் பெயரிட்டார். 

வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலேயே இந்தியாவில் மனித இனம் காணப்பட்டதற்கான முக்கியமான சான்றாக விளங்குவது இந்த ராமபித்தகஸ் இனம் தான் அதனால் தான் இந்த இன வகை குறித்துப் பல அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

பீல்பீம், சிமன்ஸ் இருவரும் ராமபித்தகசை வெகுவாக ஆராய்ந்தனர்.  இதன் பல் அமைப்பு ஹோமோ அல்லது ஆஸ்ட்ரலோபித்தகஸ் (homo or Australopithecus) வகைக்கு நெருக்கமாக உள்ளதாகக் கருதினர்.  கடைவாய்ப் பற்களின் ச்சி குறுகி இருந்தது, கோரைப்பல் முன்வாய்ப்பல் இரண்டும் அளவில் சிறியதாக மாறியிருந்தன.  இன்னும் பல கூறுகளைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் ஒட்டு மொத்த வாய், தாடை, பல் அமைப்புகளின் தகவமைப்பு ஆஸ்ட்ரலோ பித்தகசுக்கு மிக நெருக்கமாக இருந்தது.  இதனால் இவ்வறிஞர்கள் ராம பித்த கஸ்  முதல் ஹோமினிட் வகையைச் சார்ந்தது என்று கருதினர்.  இக்கருத்தை கே (1983)  சோப்ரா (1983), கே ரூ சிம்ன்ஸ் 1983 ஆகியோர் இன்றுவரை ஏற்றுக் கொள்கின்றனர்.

1980களுக்குப் பிறகு பாகிஸ்தானில் அட்டோக் மாவட்டத்தில் போட்வார் பீடபூமியில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த ராமபித்தகஸ் புதைபடிவத்தினை பில்பீம், ஸ்மித் இருவரும்  (1981, 1982, 1983) ஆராய்ந்தனர். இவர்கள் இந்த இனம் மனித இனத்துக்கான கால்வழியோடு நெருங்காமல் சற்று விலகி நிற்கக்கூடிய ஆசிய மனதக்குரங்கினத்தைச் சேர்ந்தது என்று கருத்து தெரிவித்தனர். அதாவது ஹோமின்ட் இனத்திற்கு மூதாதையராக இல்லாமல் உராங்குட்டானுக்கு மூதாதையாராக இருந்தது என்றனர்.

மூன்றாவதாக ஒரு கருத்தினை சில அறிஞர்கள் முன்வைத்தனர். அதாவது, ராமபித்தகஸ், அதன் உறவுடைய பிற வகையினம் யாவும் ஹோமினட், பொங்கிட் ஆகியவற்றுக்குப் பொதுமூதாதையராக இருந்தவை என்று கருதுகின்றனர்.

ராமபித்தகஸ் இனம் சற்று மேம்பட்டிருந்ததற்கு காரணம் அது தொடர்ந்து உணவை மென்று கொண்டிருக்க வேண்டிய நிலையிலும்.  கடினமான உணவுப் பொருட்களை மென்று தின்னும் நிலையிலும் இருந்ததால் அத்தகு மேம்பட்ட பல் அமைப்பு ஏற்பட்டது என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இவ்வறிஞர்கள் அனைவருமே ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். ஹோமினட் படிமலர்ச்சியல் ராமபித்தகஸ் இன வகையானது ஒரு மிக முக்கியமடான வளர்ச்சிக் கட்டத்தைக் காட்டுகிறது என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த வகையினமானர் பழைய உலகப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில்இவ்வினத்தைக் காண முடிகிறது. இதன் காலம் 14-7 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் இந்தியப் பகுதியும் இந்த வகையினத்தைக் கொண்டிருந்த ஒரு பகுதியாக விளங்குகிறது என்பது தான்.

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/24/இன-அரசியல்-6-மனித-இன-நவீன-வரையறைகள்-மற்றும்-வகைப்பாடுகள்-2926005--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-7: மொகஞ்சதாரோ, ஹரப்பா, ஆதிச்சநல்லூரில் மனித இனங்கள் 

 

 
harappa

 

 

mohanjadharo.jpg

மொகஞ்சதாரோவில் மனித இனங்கள்

மொகஞ்சதாரோ நாகரிகத்தின் காலம் கி.மு.2500-கி.மி.1500 எனப் பல வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இக்காலவரை ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பெறப்பட்டதாகும்.  இதன் பின்னர் இந்நாகரிகத்தின் இடைக்காலப் பகுதியில் மேற்கொண்ட கார்பன்-14 முறையின் படி மேற் கொண்ட ஆய்வுகள் கி.மு.2500 என்பதை உறுதி செய்கின்றன. மொகஞ்சதாரோவின் பிற்காலகட்டத்தியப் பகுதியில் மேற்கொண்ட துல்லியமாகக் கணிக்கக் கூடிய கார்பன்-14 முறைப்படி ஆராய்ந்த போது அதன் காலக்கட்டம் கி.மு. 1760-கி.மு 115 என அறியப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் பல அகழாய்வுகள் செய்யப்பட்டன. அங்குக் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மண்டையோடுகளைக் கொண்டு செவல், குகா இருவரும் பல உண்மைகளைக் கண்டறிந்தனர்.

இவ்வகழாய்வில் 26 எலும்புக்கூடுகள் கிடைத்தன. அவற்றில் 22 மூழுமையாதாகவும், 3 மண்டையோடுகளாகவும் இருந்தன. இறுதி ஒன்று “M” மண்டையோடு என வகைப்படுத்தப்பட்டது. இவையனைத்தையும் உற்றுநோக்கிய செவல், குகா இருவரும் 14 மண்டையோடுகள் மட்டுமே முழுமையாக இருந்ததால் அவற்றை மட்டுமே ஆய்வு செய்தனர். இந்த 14 மண்டையோடுகளும் ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவையாக இல்லை. பின்வரும் நான்கு இனத்திற்குரியனவாக இருந்தன.

வகை 1: தொன்மை ஆஸ்திரேலிய இனம் 
வகை 2: நடுநிலக்கடல் இனம் 
வகை 3: மங்கோலிய இனம் 
வகை 4: ஆல்பைன் இனம் 

ஆய்வுக்குத் தேர்வு செய்த 14 மண்டையோடுகளில் 2, 11, R என்னும் 3 மண்டையோடுகள் தொன்மை ஆஸ்திரேலிய இனத்துக்குரியதாக இருந்தன. இவையே திராவிடர்கள் உள்ளிட்ட தமிழர்களுக்குரியவை. இம்மூன்று மண்டையோடுகளும் ஆண்களின் மண்டையோடுகள். பெண்களின் மண்டை யோடுகள் கிடைக்கவில்லை.

இம்மண்டையோடுகளின் சராசரி கொள்ளளவு 1490 cc ஆகும். இவை அளவுள்ளவை நீண்டு அகண்ட மண்டைகள் எனப்படும். மொகஞ்சதாரோவில் கிடைத்த இந்த மண்டையோடுகள் 1490cc அளவுள்ளவை.  இவை அண்மையில் அற்றுப்போன  டாஸ்மேனிய இனத்தை ஒத்ததாகவும் வடக்கு ஆப்பிரிக்காவில் காணப்பட்ட வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தில் 1400cc-1500cc சராசரி அளவு கொண்ட ஹோமோ நியாண்டர்தால் மனித இனத்தைப் பெரிதும் ஒத்துள்ளது என்றும் கருதினர்.

பின்னர், ஆறு மண்டையோடுகள் (எண் 6,7,9,10,19,26) நடுநிலக்கடல் இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன இவற்றில் 2 ஆண் மண்டையோடுகளும் 4 பெண் மண்டையோடுகளும் அடங்கும். இவற்றின் அளவு சற்று சிறியதாக இருந்தது. சராசரி கொள்ளளவு 1332.5cc ஆகும். அடுத்ததாக மங்கோலிய இனத்தைச் சேர்ந்த மண்டை யோடு ஒன்று மட்டுமே இருந்தது.  இது நாகர் இனத்து மண்டையை ஒத்திருந்தது.

இறுதியாக, ஒரு குழந்தையின் மண்டையோடு ஆல்பைன் இனத்தைச் சேர்ந்ததாகும். மொகஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அகழாய்வில் 15 நபர்களின் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 4 மட்டுமே முறையான அளவீட்டிற்கு உட்படுத்தப்படும் வகையில் இருந்தன.  இந்நான்கும் சடங்குடமுறைகளுடன் இயல்பாகப் புதைக்கப் பட்டதாக இல்லை. இவ்வுடல்கள் கொடுரத் தாக்குதலுக்குட்பட்டு படுகாயங்களுடன் இறந்திருக்கக்கூடும் என்ற ஐயத்தை எழுப்புவதாக குகாவும் பாசுவும்  கருதுகின்றனர்.

மேற்கூறிய இவ்வுடல்கள் மொகஞ்சதாரோவின் பிற்கால கட்டத்தைச் சேர்ந்தவை என்று மெக்கே கூறுகிறார்.  இவ்வுடல்களில் ஒரு பகுதி தொன்மை ஆஸ்திரேலிய இனத்திற்குரியதாகவும் உள்ளன என்று குகாவும் பாசுவும் கூறுகின்றனர். M28 என்று குறிக்கப்பட்ட எலும்புக்கூடு மட்டும் இவ்விரண்டு இனங்களின் கூறுகளைத் தெளிவாகப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர். இன்றும் கூட மொகஞ்சதாரோவுக்குப் பக்கத்தில் உள்ள ஜலவான் மலை, சாரவான் மலைகளில் பிராகூய் மொழி பேசும் (திராவிடமொழி) மக்கள் வாழ்வது திராவிட இனத்தாரின் பரந்த பிரதேசத்தைக் காட்டுகிறது.

 

harappa_2.jpg

ஹரப்பாவில் மனித இனங்கள் 

அகழாய்வுகள் மூலம் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள எலும்புக்கூடுகளையும் மண்டையோடுகளையும் கணக்கில் கொண்டால் ஹரப்பாவில்தான் இவை அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இவையனைத்தும் கிடைத்த வெவ்வேறு இடங்களை ஆய்வாளர்கள் தனித்தனிக் குறியீடுகள் கொடுத்து அடையாளப் படுத்தியுள்ளனர். R37 இடுகாடு, AB எனப் பெயரிடப்பட்ட மண்மேடு(Mound Area) , G பகுதி, H இடுகாட்டுப் பகுதி ஆகிய நான்கு இடங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் R 37 பகுதியில் கிடைக்கப்பெற்ற எலும்புகள் மிகப் பண்டைய மனிதர்களின் எச்சங்கள் எனவும் இடுகாட்டுப் பகுதியில் கிடைத்தவை கடைசியாக அங்கு வாழ்ந்த இனத்தவரின் எச்சங்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளன.

H புதைவிடத்தின் அகழாய்வில் இரண்டு அடுக்குகள் காணப்பட்டன.  அவற்றில் அடுக்கு I (பிற்காலத்தைச் சேர்ந்தது)  குடத்தில் இட்டுப் புதைத்த முறையைச் சுட்டுக்கின்றது. அடுக்கு II (முற்காலத்தைச் சேர்ந்தது) பகுதியில் குடத்தில் இடாமல் திறந்த வெளியில் புதைக்கும் முறையைச் சுட்டுகின்றது. மேற்கூறிய தரவுகளைக் கொண்டு பார்க்கும்போது மேலே கிடைத்த அடுக்கு I-இல் வாழ்ந்தவர்கள் இறந்தவர்களால் புதுவகையில் அடக்கம் செய்யும் முறையைக் கொண்டிருந்ததை அறியமுடிகிறது. , இந்த இரண்டாம் அடுக்கைச் சேர்ந்தவர்கள் தொல் ஆஸ்திரேலிய இனத்தவர்கள் என்கிறார் குகா. அடுக்கு I-இல் வாழ்ந்த தொல் ஆஸ்திரேலிய இனத்தாரோடு ஆர்மீனியர் அல்லாத பிற இனத்தாரும், ஆர்மீனிய-ஆல்பைன் இனத்தாரும் அடங்குவர் என்கிறார். ஹரப்பாவில் 86 எலும்புக்கூடுகளை ஆய்வு செய்த குப்தாவும் பிறரும் இவ்விடத்தில் 4 வகையான இனத்தவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

 

ஆதிச்சநல்லூர் 

இந்தியாவில் தொல் மனித இனங்களை ஆய்வு செய்வதற்கு மிக முக்கிய இடங்களில் ஒன்று ஆதிச்சநல்லூர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவமட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஊர். ஜகோர்(Jagor) என்னும் அறிஞர் 1876ஆம் ஆண்டு இவ்விடத்தில் அகழாய்வு செய்தார்.  இவ்வூரை லப்பிக் 1905 லும் , தர்ஸ்டன் 1909 இலும், அலெக்சாண்டர் ரே 1915இலும் , ஸ்மித் 1924&1927 இலும், சுக்கர்மேன் 1930-இலும் , செவல் ரூ குகா 1931 இலும், சட்டர்ஜி ரூ குப்தா 1963-இலும்  ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 

ஆதிச்சநல்லூர் மண்டையோடுகள் தொல் திராவிடக் கூறுகள் கொண்டவை என்று லப்பிக் கூறினார்.  இவர் 1903-04 காலக்கட்டத்தில் ஆய்வு செய்தார்.  இந்த மண்டையோடுகள் அகன்ற தாடை கொண்டவை ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளும் ஒத்த தன்மை கொண்டவை.

ஹரப்பாவில் அகழ்ந்த குழிகளில் முக்கியமான ஒரு குழிக்கு R-37 எனப் பெயரிடப்பட்டது.  அந்தக் குழியில் கிடைத்த மண்டையோடுகள் ஆதிச்சநல்லூர் மண்டையோடுகளை ஒத்துள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வு மூலம்  மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் குன்னத்தூர், அமிர்தமங்கலம், சானூர் ஆகிய மூன்று இடங்களில் மனித எலும்புகுள், மண்டைகள் எடுக்கப்பட்டன.  முதலிடத்தில் கிருஷ்ண மூர்த்தியும் பன்னிரண்டு இடங்களில் பானர்ஜியும் ஆய்வு செய்தனர். இலங்கையில் வேடர்களின் எலும்புகளை ஆஸ்மன் ஹில் 1931-இல் ஆய்வு செய்தார் ஹரப்பாவில் பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

ஹரப்பா தொடங்கி தமிழகம், இலங்கை வரை ஆய்வு செய்ததன் மூலம் ஒரு ஒப்பீட்டு ஆய்வுக்கு வழி ஏற்பட்டது. இந்த ஒப்பீட்டின் மூலம் தான் இத்துணைக்கணடத்தின் இனவியல் கூறுகளை வெகு நுட்பமாக அறிய முடிகிறது. தாமிரபரணி முகத்துவாரத்திலும் செங்கல்பட்டிலும் கிடைத்த மண்டையோடுகள் ஹரப்பா மண்டையோடுகளோடு நெருக்கமாக உள்ளன. வேடர்களின் மண்டையோடுகளோடு நெருக்கமாக உள்ளன. வேடர்களின் மண்டையளவுகள் சற்று விலகி உள்ளன. ஆதலால் தமிழகத்தில் வாழ்ந்த ஆதிமக்கள் வேடர்களை விடவும் ஹரப்பா மக்களோடு இனவியல் ரீதியாக நெருக்கமுடன் இருப்பதைக்காண முடிகிறது. இந்த இனவியல் பண்புகளை விளக்கும் சில  தரவுகளை அட்டவணையில்காணலாம். தொல் ஆஸ்திரேலிய இனத்தாருக்கிடையே உடற்கூறு ஒப்பீடு:-

 

ஆதிச்சநல்லூர்

  ஆண் பெண்
மண்டையின் நீளம்  185.86 180.70
மண்டையின் அகலம் 130.57 128.25
மண்டையின் சுற்றளவு 517.80 498.50
மூக்கின் உயரம் 51.50 47.50
மூக்கின் அகலம் 25.50 27.00
அண்ணத்தின் உயரம் 45.50 --
அண்ணத்தின் அகலம் 38.00 --
 குறுக்கு வில்வளைவு 305.00 301.00
தலை வில்வளைவு 372.42 360.00
காதின் உயரம் 117.33 114.25

 

ஹரப்பா (சR-37 குழி) 

  ஆண் பெண்
மண்டையின் நீளம்  188.46 179.64
மண்டையின் அகலம் 134.57 130.67
மண்டையின் சுற்றளவு 517.33 502.32
மூக்கின் உயரம் 52.92 47.97
மூக்கின் அகலம் 26.71 24.82
அண்ணத்தின் உயரம் 48.18 44.55
அண்ணத்தின் அகலம் 40.00 --
 குறுக்கு வில்வளைவு 302.55 303.92
தலை வில்வளைவு 377.08 366.45
காதின் உயரம் 115.46 111.25

 

இலங்கைவேடர்

  ஆண் பெண்
மண்டையின் நீளம்  178.56 169.78
மண்டையின் அகலம் 126.36 123.53
மண்டையின் சுற்றளவு 492.44 473.76
மூக்கின் உயரம் 44.47 41.08
மூக்கின் அகலம் 24.22 22.79
அண்ணத்தின் உயரம் 50.36 46.85
அண்ணத்தின் அகலம் 44.92 42.67
 குறுக்கு வில்வளைவு 300.84 287.22
தலை வில்வளைவு 361.17 344.67
காதின் உயரம் 110.77 108.71


References:

 • The Archaeological back-ground: Human skeletal remains from Harappa by N.K.Bose & A.Ghosh
 • The Ethnology of India: Antecedents and Ethnic Affinities of People of India by Kalla, Aloke K.
 • Society in India by Mandelbaum, David G
 • The aborininal Races of India S.S.Sarkar
 • peasant State and Society in Medieval South India by Stein, Burton

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/28/இன-அரசியல்-7-மொகஞ்சதாரோ-ஹரப்பா-ஆதிச்சநல்லூரில்-மனித-இனங்கள்-2928530--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-8: ஆதிமனித வாழ்வியல் முறை

 

 
stone_age_life

 

தொல்பழங்காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்வியல் பற்றி அறிந்து கொள்ளக் கல் ஆயுதங்கள், கருவிகளைத் தவிர தொல்லியல் அகழ்வாய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற உண்மைகளும் துணைபுரிகின்றன.

ஆதிமனிதன் வாழ்க்கையை முழுமையாக அறிந்து கொள்ளக்  கள ஆய்வும், தொல்லியல் அகழாய்வும் துணைபுரிகின்றன. பழைய கற்காலத்தில் குளிர்ந்த நிலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வேட்டையாடியும், மீன்பிடித்தும் தம் உணவைத் தேடிக் கொண்டனர். சூழ்நிலை ஏதுவாக இருந்தால் பழம் பறித்தல், கிழங்குகளைத் தோண்டிச் சேகரித்தல் போன்ற தொழில்களைச் செய்தனர். வெப்பப் பிரதேசத்தில் பழம் பறித்தல் கிழங்கு, தானியம், கொட்டை சேகரித்தல் முதலியன முக்கிய தொழிலாக இருந்தன. இன்றைக்கும் கலஹாரி பாலைவனப் புஷ்மன் இனத்தினர் இப்பழக்கங்களையே கொண்டுள்ளனர்.

பழைய கற்காலத்தில் இடைப்பகுதியிலும், இறுதிப்பகுதியிலும் வாழ்ந்த மக்கள் பொதுத் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் வேறுபட்ட வாழ்க்கைச் சூழல்களைப் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. ஆதிமனிதன் என்றவுடன் பெரும்பாலோர்க்கு குகைகள் தான் மனதில் தோன்றும் குளிர்ந்த பிரதேசத்தில் உள்ள குகைகள் மனித வாழ்விற்கு ஏற்றவனவாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தோற்பார்வையால் போர்த்திக்கொண்டால் மட்டுமே இவ்விடங்களில் மனிதர்களால் வாழ முடியும்.

வெப்பப் பிரதேசங்களில் குகைகள் முக்கிய வாழ்விடமாக இருந்தன. ஆகவே தான் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் கற்கால மனிதனின் குகைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மழையிலிருந்து பாதுகாக்க இலையினால் பின்னப்பட்ட பாய்கள் கூரைகளாய் உபயோகிக்கப்பட்டன. தொல் பொருள் அகழ்வாராய்ச்சியின் போது சில இடங்களில் வட்டமாக அல்லது செவ்வக வடிவில் கற்கள் அமைந்திருப்பது காணப்பட்டது. அவற்றைக் குடியிருப்புகளின் அடித்தளம் என்று கருதலாம்.  இத்தகைய வாழ்விடங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ அடுப்புகள் உபயோகித்தமைக்கான அடையாளமும் காணப்படுகின்றன.

கற்கால மனிதன் ஒரு நிலையான வாழ்விடத்தில் சமூதாய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும் வேட்டையாடும் போதும், உணவுகளைச் சேகரிக்க முயலும் போதும் சிறு சிறு குழுக்களாய்ப் பிரிந்து வாழ்ந்தான். கலஹாரி புஷ்மன் இனத்தவர் இன்று வரை இவ்வாறு தான் வாழ்ந்து வருகின்றனர். மனிதனின் உடைப் பழக்கங்கள் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தன.  வெப்பப் பிரதேசத்தில் தோலினால் ஆன சிறிய ஆடையையே அணிந்தான். குளர்ப் பிரதேசத்தில் உறையவைக்கும் குளிரில் இன்றைய எஸ்கிமோக்கள் போலவே உடைகளை அணிந்திருந்தான்.

 

weapons.jpg

ஆயுதங்கள், கருவிகள்
 

தென்மேற்கு பிரான்சில் Gourdon-Polignanஇல் இருந்து 12,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எலும்பு ஊசிகளின் தொகுப்பு. (பிரான்ஸ், துலூஸ் அருங்காட்சியகம்) எலும்பினால் ஆன ஊசி சொலுட்ரியன் காலத்தில் தான் தோன்றியது. முந்திய காலத்தில் கல்லினால் ஆன கூரிய முனை கொண்ட நீண்ட கல் ஆயுதத்தையே தோலில் துளையிட உபயோகப்படுத்தினர்.  தாவரங்களிலிருந்து பிரித்த சணல் போன்ற கயிறுகளையும், விலங்குகளின் நரம்புகளையும் நூலாகப் பயன்படுத்தினர். ஆர்க்டிக் பகுதிமக்கள் இன்றும் மானின் நரம்பைத் தைக்கும் நூலாக உபயோகப்படுத்துகின்றனர். இக்காலத்தில் தோலினாலும், மரத்தினாலும் ஆன காலனிகள் உபயோகத்தில் இருந்தன. கற்கால மனிதனின் துளைக் கருவிகள் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் இனத்திற்கு இனம் வேறுபட்டுள்ளன. காலம் மாறமாற இவை படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரே இனத்தவர் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான கருவிகளைப் பயன்படுத்தினர்.

கடைக்கற்காலத்துக் கல் ஆயுதங்கள் உருவத்தில் சிறியனவாயும் அதிகமான முனையுடன் சுரண்டுவதற்கு வசதியாகவும் அமைந்திருந்தன. இவர்கள் துளையிடும் கருவிகள் மற்றும் எலும்பினால் ஆன துளையீடுகள், ஊசிகள் போன்றவற்றைச் செய்து பயன்படுத்தினர். இந்தக்கருவிகள் அனைத்தும் அன்றாட வேலைகள் செய்வதற்கும் உரியனவாகவே இருந்தன. இம்மக்கள் தம்முன் சண்டைக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தியது மிகக் குறைவே ஆகும்.

பழைய கற்காலத்தின் இடைப்பகுதியில் கல்லினால் செய்யப்பட்ட கூர்மையான வேல் முனைகள் மரத்தினால் ஆன ஈட்டிகள் எலும்பினால் ஆன துளைப்பான்கள், கதைகள் போன்றவை பயன்பட்டன. பல வகையான கூர் ஈட்டிமுனைகள், எறிகற்கள், கூர்மையாகச் செய்யப்பட்டு எலும்பினூடோ அல்லது நீண்ட மரக்கொம்புகளின் முனையிலோ கட்டப்பட்ட ஈட்டியைப்போல் உபயோகமாயின். மனிதன் அருகில் நெருங்க முடியாத கொடிய விலங்குகளையும் இந்த ஈட்டிகள் மூலம் வீழ்த்தித் தனது இரையாக்கிக் கொண்டான். சொலுட்ரியன் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் நாளடைவில் மகதலேனியன் காலத்தில் மேலும் முன்னேற்றம் அடைந்தது. மரம் மற்றும் எலும்பினால் ஆன கூரிய ஆயுதங்களுடன் மீன் பிடிப்பதற்கான தூண்டில்களும் உருவாயின.

 

உணவு மற்றும் வேட்டையாடுதல்

மனிதன் தோன்றிய போதே வேட்டையாடுதலும் தோன்றிவிட்டது. தான் வேட்டையாடும் விலங்களுக்கு ஏற்ப பலவிதக் கருவிகளையும் முறைகளையும் தானே உருவாக்கி வேட்டையாடினான். இக்கருவிகள் மூலம் அவன் பலத்தையும், வேகத்தையும் மட்டுமின்ற அவனது அறிவுக் கூர்மையையும் நாம் அறிகிறோம். முதலில் எல்லா மிருங்களையும் கல்லாலும் தடியாலும் நெருங்கி வேட்டையாடியவன் அதன் அபாயம் தெரிந்து நீண்ட கூரிய கல் ஈட்டிகளைக் கொண்டு அருகில் நெருங்காமல் பாதுகாப்பாக வேட்டையாடினான்.

ஒடும் மிருகங்களைக் குறிபார்த்துக் கூரிய ஈட்டி எறிந்து வேட்டையாடியவன், பின்னர் மலையுச்சியிலிருந்து நெருப்பு அல்லது ஒலி கொண்டு மாடு, மான், ஆடு போன்ற மிருகங்களை விரட்டிக் கீழே விழச் செய்து உணவாக உட்கொண்டான். யானை, காண்டாமிருகம் போன்ற பெரிய தாவர உண்ணிகளைப் பெரிய பள்ளம் தோண்டி இலை, தழை, செடி, கொடி, மூங்கில், புல் கொண்டு மூடிப்பள்ளத்தில் விழச் செய்து வேட்டையாடினான். மாமிச உண்ணிகள் போன்ற கொடிய மிருகங்களை அவற்றின் இரை கொண்டே வலை விரித்துக் கல்லின் உதவியால் பிடிக்கும் வழக்கத்தையும் கற்றுக் கொண்டு வேட்டையில் சிறந்து விளங்கினான். வேட்டையாடுவதில் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு அறிவாலும், ஆற்றலாலும் புலி போன்ற கொடிய மிருங்களையும் பிடித்து தனக்கு அடிமையாக்கினான். மனிதன் நீண்ட காலம் வரை மீன்பிடிப்பதில் முன்னேற்றம் அடைய வில்லை.

ஒரு சில விலங்கு. பறவையைப் பார்த்து மீன்பிடிக்க முனைந்தவன். கற்காலத்தின் பிற்பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கவும் கற்றுக் கொண்டவன் குளிர்ந்த பிரதேசத்தில் உறைபனியின் கீழ்க்கிடக்கும் மிகப்பெரிய மீன்களையும் சீல், வால்ரஸ் போன்றவைகளையும் வேட்டையாடினான். இவன் சிறிய கற்கள் உதவியாலே, தந்தம், கொம்பு ஆகியவற்றைத் தூண்டில் போல் செய்து உபயோகித்தான். மத்தலேனியன் காலத்தில் மீன் ஒரு முக்கிய உணவாகவும் மீன்படிப்பதும் ஒரு முக்கிய தொழிலாகவும் ஆனது. இந்தியாவிலும், ஆசியாவிலும் பிற பகுதிகளிலும் ஆப்பிரிக்காவில் குறிப்பாக நைல் நதிக்கரைப் பகுதிகளிலும் மீன் பிடிக்கும் நுண்கற்காலச் சமூகத்தினர் வாழ்ந்தனர். மீன்பிடிப்பதற்கும் வலைகள் கற்காலத்தின் பிற்பகுதியில் உபயோகத்திற்கு வந்தன. இவர்கள் மீன்களை உலரவைத்துக் கருவாடாக்கிப் பயன்படுத்தவும் அறிந்திருந்தனர்.

 

தாவர உணவுகளில் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், தண்டுகள், பூக்கள், கீரைவகைகள் ஆகியவை அடங்கும். இவைகளைச் சேகரிக்கும் பொறுப்பு பெண்களிடமும் சிறியவர்களிடமும் கொடுக்கப்பட்டது.  தாவர உணவு வகைகள் இடத்திற்கு இடம் மாறி  இருந்தன. சீனாவில் வாழ்ந்த பீகிங் மனிதன் நெருப்பைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. ஐரோப்பாவில் மௌஸ்டீரியன் காலத்தில் நெருப்புப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. ஆனாலும் கற்காலத்தின் கடைசியில் தான் ஆதிமனிதன் நெருப்பைத் தானே உண்டாக்கினான். கற்களை உரசியும் மரத்துளைகளில் மரத்தை உரசியும், இரும்புக்கனிமத்தின் மேல் கல்லை இடித்தும் அவன் நெருப்பை உண்டாக்கினான்.  அவன் கல் அகல்களை தாவரக் கயிறுகளைத் திரியாகவும் உபயோகித்தான்.  இவ்வாறு ஆதிமனிதன் தன் வாழ்க்கையில் ஒளி உண்டாக்கிக் கொண்டது அவனது நாகரிகத்தின் சிறந்த கூறு என்றும் அறிவின் சிறந்த சாதனை என்றும் கூறவேண்டும்.

 

ஆதிச் சமூக பிறப்பு இறப்பு

தொல்லியல் வல்லுநர் போர்டஸ் - பழைய கற்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு உதவியாக ஒரு ஆதாரமும் இல்லை. சுமார் நூறு பேர் கொண்ட குழுவே ஒரு பெரிய சமுதாயமாக இருந்திருக்ககூடும். கற்கால மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதைக் கூடத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை. குழந்தை இறப்பு மிக அதிக அளவில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

முதன் முதலாகப் பிணங்களைப் புதைக்கும் முறை மௌஸ்டீரின் காலத்தில் ஏற்பட்டது. புதைக்கும் போது மிருக எலும்புகளுடன் புதைக்கும் வழக்கமும் பூக்கள் மீது புதைக்கும் வழக்கமும் அவன் உபயோகித்த கற்கருவிகள். ஆயுதங்கள் ஆபரணங்களோடு புதைக்கும் வழக்கமும் நாளடைவில் ஏற்பட்டன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் புதிய கற்காலத்தின் போது தான் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டது. இப்பழக்கமே பின்னாளில் பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் உருவாக வழிவகுத்தன. குழந்தைகளைப் புதைக்கும் முறை சிறப்பாகக் காணப்படுவதால் குழந்தைப் பிணத்திற்கு இக்காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் எனலாம். பெண்களைப் புதைக்கும் போதும் ஆண்களைப் புதைப்பது போலவே புதைத்தனர். புதைக்கும் முறையில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை எனலாம்.  புதிய கற்காலத்தில் வாழ்விடங்களிலேயே பிணங்களைப் புதைத்தவர்கள் பெருங்கற்காலத்தில் பிணங்களைப் புதைக்கத் தனி இடம் ஒதுக்கி அங்குப் புதைத்தனர்.

 

 

ornaments.jpg

கலைகள், ஆபரணங்கள்

கற்கால மனிதன் கலைத்திறனை அவன் படைத்த கல் ஆயுதங்கள், கொம்பு, எலும்பு, தந்தக் கருவிகள், சுடுமண் பொம்மைகள், கல் பொம்மைகள், பாறை ஒவியங்கள், பாறைச் செதுக்கல்கள், குகை ஒவியங்கள் மூலம் அறியலாம். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பழைய கற்காலத்தில் இடைப்பகுதியிலும் கடைசிப் பகுதியிலும், கலை ஆர்வத்துடன் கல் ஆயுதங்களையும், இதர கருவிகளையும், குகை ஒவியங்களையும் பாறைச் செதுக்கல்களையும், கல் மற்றும் மண் பொம்மைகள் ஆபரணங்களையும் உருவாக்கினான். இதனால் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கலைஞன் உருவாகிவிட்டான் எனலாம். எல்லா இடங்களிலும் கலைத்திறன் ஒரே மாதியாக வளர்ச்சி பெறவில்லை.  கலை ஆர்வம் மிகுந்த க்தவேனியன் காலத்து மனிதன் உருவாக்கிய தொல்பொருட்கள் ஐரோப்பாவில் பல முக்கிய பொருட்காட்சிகளிலும், அகழ்வைப்பு சங்கங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படும் ஏராளமான பாறைச் செதுக்கல்களும், ஒவியங்களும், கற்கால மனிதனின் கலைத்திறனைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இம்மாதிரியான ஒவியங்கள் வரையும் முறை இன்றும் ஆதிவாசிப் பழங்குடியினரிடம் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் கி.மு. 30,000 ஆண்டுகளுக்கு முன்னும் அதற்குப் பிறகும் வரையப்பட்ட குகை ஒவியங்கள் வியப்பூட்டுவன. இவை காணப்படும் லாஸ்காஸ். ஆல்டாமிரா, போன்ற குகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள் அதிசயத்தக்க முறையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. மிருகங்களை வெவ்வேறு ரூபத்தில் வரைந்திருக்கும் முறையில் கலைத்திறன் பிரதிபலிக்கிறது. இங்குக் காணப்படும் ஒடும் மிருகங்கள். ஆக்ரோஷமாகத் தாவும் மிருகங்கள் அவற்றை வீரமாக வேட்டையாடும் மனிதர்கள், ஒடி ஒளியும் மனிதர்கள் எனப் பல ஒவியங்கள் கலைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நாம் நம்ப முடியாத படி ஒரு குகை ஒவியம் நீருக்கடியில் 30 மீட்டர் நீளமுள்ள குகையில் வரையப்பட்டுள்ளது. எனவே தான் இக்குகை ஒவியங்களின் காலம் அவ்வளவு பழைமையானது என்று நீண்ட காலம் வரை உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.  ஆனால் தற்சமயம் விஞ்ஞான ரீதியான மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் காலக் கணிப்புகள் அவை மிகப்பழமையான ஒவியங்கள் தான் (கி.மு. 30,000 – 10,000) என்று உறுதி செய்கின்றன. இவ்வகை ஒவியங்கள் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் பல இடங்களில் காணப்படுகின்றன.

குகை ஒவியங்கள் கற்கால மனிதனின் கலைத்திறனை மட்டும் உணர்த்தாமல் அவன் வாழ்க்கையைப் பற்றியும் அவன் மேற்கொண்ட தொழில்கள் பற்றியும் வேட்டையாடிய மிருகங்கள் பற்றியும் தெளிவாக அறிய உதவுகின்றன.  மேலும் மந்திர தந்திர சக்திகளில் அவன் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் உணர்த்துகின்றன. இந்த ஓவியங்களில் மிருகங்களை வேட்டையாடும் சித்திரங்களே அவனது நம்பிக்கையை நமக்குப் பறை சாற்றுகின்றன.  இவன் தன் உடம்பிலேயே உருவம் வரைந்து கொள்ளும் முறையையும் அறிந்திருந்தான். இப்பழக்கம் இன்றும் பல பழங்குடியினரிடமும் காணப்படுகிறது. பச்சை குத்திக்கொள்ளும் வழக்கமும் இதைப் போலவே உருவாகியிருக்க முடியும். பிற்காலத்தில் வரையப்பட்ட ஒவியங்களில் சில குறியீடுகள் சித்திர எழுத்தாகிப் பின்னாளில் எழுத்தாக மாறியிருக்க வேண்டும். கற்கால மனிதன் பேசிய பேச்சு, பாடிய பாட்டுகள், சொன்ன சொற்கள், இன்று கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இக்கலைப் பொக்கிஷங்கள் நமக்குப் பல உண்மைகளை உணர்த்துகின்றன.

 

praying.jpg

கடவுள் வழிபாடு

 

கடவுள் வழிபாடு பற்றிய நேரான ஆதாரம் எதுவும் இல்லை. பெண் தெய்வம் அல்லது தாய்த் தெய்வம் போன்ற சுடுமன், கல்பொம்மைகள், கற்கால மனிதனின் வழிபாட்டு எண்ணத்தையும் சமயத்தையும் வெள்ப்படுத்துகின்றன. இறந்தவர்களைப் புதைக்கும் முறையில் இறப்பிற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருப்பதை அவன் நம்பினான் என்று கருதலாம். தண்ணீரை அல்லது உணவைச் சேமிக்கவோ அல்லது வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது தான் பாண்டங்களின் இன்றியமையாமையை மனிதன் உணர்ந்தான்.  தண்ணீர் எடுக்கவும், குடிக்கவும் மண்டை ஒட்டையே கூட அவன் முதன் முதலாக உபயோகிகத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான கற்களைக் குடைந்து குழிவான பாத்திரம் தயாரித்தான்.  இதுபோன்ற கல் சட்டியிலிருந்து மண்சட்டியைத் தயாரித்தான்.  சக்கரம் கண்டுபிடித்த பிறகு தன் தேவைக்கு ஏற்ப பலவிதமான பாத்திர வடிவங்களை உருவாக்கி நெருப்பினால் சுட்டு உபயோகித்தான்.  சக்கரம் கண்டுபிடித்த பிறகு பாத்திரம் தயாரிப்பதில் ஒரு மாபெரும் புரட்சி நிகழ்ந்தது. இவன் விலங்குகளின் எலும்பு, காய்ந்த காய்கள் (ஈரைக்குடுக்கை) மூங்கில் போன்றவைகளையும் பாண்டங்களாக உபயோகித்தான்.  இப்பழக்கம் இன்றும் பழங்குடியினரிடம் உள்ளது.

 

மருத்துவம்

தொல் பழங்காலத்தில் மனிதன் தன்னை நோய்களிலிருந்தோ அல்லது அடிப்பட்டு அவதியுற்றபோதோ, வேட்டையின் போது  பெரிய காயம் ஏற்பட்ட போதோ எப்படி மருத்துவம் செய்து கொண்டான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவன் அக்காலத்திலேயே தசைப்புண்களுக்கும், எலும்பு முறிவுகளுக்கும் ஒரு வகையான மருத்துவ முறையைப் பின்பற்றியிருக்கலாம்.

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/31/இன-அரசியல்-8-ஆதிமனித-வாழ்வியல்-முறை-2930497--3.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-9: புதிய கற்கால, இந்தியப் புதிய கற்கால, தென்னிந்தியப் புதிய கற்கால மனித இனங்கள்

 

 
stone-age


புதிய கற்காலம்

புதிய கற்காலம் மனித வாழ்வில் ஒரு புரட்சிகரமான காலமாகும். இக்கால மனிதன் நிலத்தில் பயிர் செய்து வாழ்விடம் அமைத்து நிலையாகத் தங்கினான். வேட்டையாடியதோடு மிருகங்கள், பறவைகளை வளர்க்கவும் தொடங்கினான். சக்கரத்தின் உதவி கொண்டு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மட்பாண்டங்கள் செய்தான். இவ்வாறு ஒரு குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டான். இக்காலத்திலே தான் நெசவுத் தொழில் மூலமட ஆடைகளைத் தயாரிக்கத் தொடங்கினான். உலோகங்களின் பயனையும் அறிந்து கொண்டான். இக்காலத்தின் முற்பகுதியிலேயே இந்த அனைத்துப் பண்பினையும் இவன் பெறவில்லை. வாழ்க்கைத்தரம் உயர உயரப் புதிய கண்டுபிடிப்புகள் அதிகமாயின. இக்கால மனிதன் பளபளப்பான கைக்கோடாரிகளைப் பெருமளவில் தாயரித்து உபயோகத்தான் என்றாலும் பல இடங்களில் குறுணிக் கற்கருவிகளையும் உபயோகித்தான் என்பதற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல், லேவண்ட் (ஜெரிக்கோ, பாலஸ்தீனம்) பகுதியில் இது காணப்பட்டது. இது, இப்பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லேவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆப்பிரிக்கா, வட மெசபோடோமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.

கி.மு. 8,000 ஆண்டுகளில்புதிய கற்காலம் முதன் முதலாக மேற்கு ஆசியாவில் தோன்றியது. அப்போது அங்கே ஏற்பட்ட தட்ப வெப்ப மாற்றத்தாலும், சுற்றுப்புறச்அசூழலில் ஏற்பட்ட மாற்றத்தாலும் அப்பகுதி ஆடு, செம்மறி ஆடு, எருது, எருமை, பசு, நாய், பன்றி போன்ற மிருகங்கள் வளர்ப்பதற்கு ஏற்றனவாய் அமைந்தன. கோதுமை, வார் கோதுமை, பார்லி போன்ற பயிர்கள் இயற்கையாகவே முளைத்தன. இதனால் அங்கு வாழ்ந்த மனிதன் மந்தை வளர்ப்பிலும், பயிர் செய்வதிலும் முக்கிய கவனம் செலுத்தினான். புதிய கற்கால மனிதன் நாளடையில் தனது கருவிகளைச் சீராக அமைக்கவும் நிரந்தரமான குடியிருப்புகளைக் கட்டவும், மட்பாண்டங்களை ஆக்கவும் முனைந்தான்.

தொல்லியலார் புதிய கற்கால வளர்ச்சியை மட்பாண்டங்களின் உபயோகத்திற்கு முந்தைய நிலை, மட்பாண்டங்கள் உபயோகித்த நிலை என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கி.மு. 8,000 முதல் கி.மு. 5,000 வரையிலான காலத்தில் மட்பாண்டங்களின் உபயோகம் காணப்படாத புதிய கற்காலக் குடியிருப்புகள் நிரந்தரமான மண்வீடுகளில் காணப்பட்டன. இங்கே மட்பாண்டங்களுக்குப் பதிலாகக் கல்லினாலான பாண்டங்கள் உபயோகத்தில் இருந்தன.

பிற்காலத்தில் கி.மு. 3,500 ஆண்டு வாக்கில் செம்பினாலான உபகரணங்கள் உபயோகத்திற்கு  வந்தன.  மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட புதிய கற்கால வளர்ச்சி இந்தியாவில் பரவியது. சிந்துச் சமவெளியில் கி.மு. 5,000 அல்லது கி.மு. 4,500 ஆண்டுகளிலும் ஏனைய பகுதிகளான கங்கைச் சமவெளி, மேற்கிந்தியா மற்றும் தக்காணத்தின் வட பகுதியிலும், தென்னிந்தியாவிலும் கி.மு. 4,000 ஆண்டுகளிலும் புதிய கற்காலம் தொடங்கியது.

 

புதிய கற்காலக் கருவிகளின் பசால்ட், டோ

லோரைட் நயிஸ், சிஸ்ட், எபிடியோரைட் கொன்ற கற்களால் ஆக்கப்பெற்றன. இக்கருவிகளில் கைக்கோடரியும் உளியும் முக்கியமானவை.  கைக்கோடரிகள் தேய்க்கப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்டன. இவை மரத்திலே பொருத்திப் பயன்படுத்தப்பட்டன. இவையே பிறகாலதத்தில் மனிதனால் தயாரிக்கப்பட்ட உலோகத்தினாலான கருவிகளுக்கும், ஆயுதங்களுக்கும் முன்னோடியாயின. தானியங்களை மாவாக்குவதற்கும், உடைப்தற்கும், அரைப்பதற்கும் அம்மி குழவி போன்ற கருவிகளும் கல்லினால் ஆக்கப்பெற்றன. இக்கால மனிதன் தயாரித்த மட்கலங்கள் உணவுப் பொருள்களைச் சேமிக்கவும் தயாரிக்கவும் உதவி புரிந்தன.

புதிய கற்காலத்தில் கைக்கோடாரிகள், உளிகள், இடிப்பான்கள் பல கைக்கற்கள், வீசி எறியும் கற்கள், வட்டமான துளை கொண்ட கற்கள், தேய்க்கும் கற்கள், கல் உருண்டைகள், தானியம் அறைக்க உதவும் கற்கள், அம்மி குழவி போன்ற கருவிகள், கொட்டைகள் உடைக்க உதவும் கருவிகள் போன்றவை செய்யப்பட்டன. களிமண், மரம் இவற்றின் துணை கொண்டு வட்டம் அல்லது சதுரமான வீடுகள் அமைத்துக் கொண்டனர். முதலில் கையினாலும், பின்னர்ச் சக்கரத்தின் உதவியுடனும் மட்கலங்கள் செய்யப்பட்டன.  இவை முதலில் சூரிய வெப்பத்;திலும் பின்னர் நெரும்பிலும் சூடாக்கப்பட்டு உறுதியாக்கப்பட்டன. ஒவியம் மற்றும் கடுமண்பொம்மைகள் உருவானதும் இக்காலத்திலே தான் இம்மக்கள் விளக்கின் பயனையும், நிறங்களைப்பற்றியும் அறிந்திருந்தனர். குளிர், வெப்பம் பற்றிய பௌதீகப் பண்புகளைப்பற்றிய அறிவு இக்கால மக்களுக்கு இருந்தது.

 

இந்தியப் புதிய கற்காலம்

1. வட இந்தியப் புதிய கற்காலம்
2. தென்னிந்தியப் புதிய கற்காலம்.
3. கிழக்கிந்தியப் புதிய கற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

 

வடஇந்தியப் புதிய கற்காலம்     

வடஇந்தியாவில் காஷ்மீர்ப்பகுதி தான் புதிய கற்கால வாழ்விடமாக அமைந்தது. இக்கால மனிதன் குழி வீடுகள் போன்ற அமைப்பில் வாழ்ந்தான். பளபளப்பான கைக்கோடரிகள், உளிகல், போன்ற கல் ஆயுதங்களுடன் எலும்பினாலான துளையீடும் கருவிகள், ஊசிகள், கூர்முனைகள், மீன் பிடிக்க உதவும் தூண்டில்கள் போன்றவற்றையும் உபயோகப்படுத்தினான். இக்கால மட்கலங்கள் கையினால் செய்யப்பட்டவையே ஆகும்.

பின்னாளில் குழிதோண்டி உருவாக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக மரம் மற்றும் களிமண் கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் உருவாக்க்பட்ட வீடுகள் வழக்கத்திற்கு வந்தன. சுவர்களும், தரையும் சிகப்பு நிறக் கலவை கொண்டு பூசப்பட்டன.  வீடுகளில் அடுப்பும் அம்பிக்குழவியும் இருந்தன.  சக்கரம் கொண்டு அடங்கும் பாறைச் செதுக்கல் பாறை ஒவியங்கள் மூலமாகவும் எலும்பினால் செய்யப்பட்ட வேட்டையாடும் கருவிகள் காணப்படுவதன் மூலமும் வேட்டையாடுதல் ஒரு முக்கிய தொழலாக இருந்தது என உணரலாம். இக்காலத்தில் மனிதனுடன் சேர்த்து விலங்குகளையும் புதைக்கும் வழக்கம் இருந்தது.  இப்புதிய கற்காலம் கார்பன் காலப் பகுப்புப் படி கி.மு. 2400 – கி.மு. 1400 ஆண்டுகளில் தழைத்தோங்கியது. இப்பண்பாடு வட சீனாவில் காணப்படும் புதிய கற்காலப் பண்பாட்டுடன் ஒத்துப் போவதால் வடசீனாவிலிருந்து பரவியிருக்கலாம் என்று ஒரு சாரரும், மேற்காசிய நாடுகளிலிருந்து பரவியிருக்க வேண்டும் என்று மற்றொரு சாரரும் கருதுகின்றனர். இது தென்னிந்தியப் புதிய கற்காலத்தோடு ஒற்றுமை உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

 

தென்னிந்தியப் புதிய கற்காலம் 

தென்னிந்தியப் புதிய கற்காலத்திலும் பளபளப்பான கைக்கோடரி மற்றும் உளிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மந்தை வளர்ப்பும், விவசாயமும் முக்கித் தொழில்களாகும்.  இக்கால மக்கள் குடிசைகளிலும், மண் வீடுகளிலும் வசித்தனர். எருது உருவத்தில் சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். கிடைத்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் இம்மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கின்றனர்.

 

தென்னிந்தியப் புதிய கற்காலத்தை மட்பாண்டம் உள்ள காலம் மட்பாண்டத்திற்கு முற்பட்ட காலம் எனவும், உலோகத்தாக்கம் உள்ள காலம். உலோகத்தாக்கம் இல்லாத காலம் எனவும் பாகுபாடு செய்வர். ஆயினும் இக்காலத்தை அல்சின் கி.மு. 2300-1800, கி.மு. 1800-1500, கி.மு. 1400-1050 என்ற மூன்று காலப்பகுதிகளாகப் பிரித்துக் காண்பார்.

தென்னிந்தியப் புதிய கற்காலம் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், மேற்கு ஆசியாவிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், தன்னிச்சையாக உருவானது என்றும் அறிஞர்கள் கருதுவர்.

 

stone_age_2.jpg

தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள்

தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆற்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.

 

பையம்பள்ளி

பையம்பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சமுதாயம் 2 விதத்தில் காணப்படுகின்றது.

முதற்பிரிவு- இக்கால மக்கள் வெளுப்பு மிக்க சாம்பல் நிற மட்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பல வகைக் கற்களால் ஆன கற்கருவிகள், கற்கோடாரிகள், தானியங்களை அரைக்க, இடிக்க உதவும் கற்கருவிகள் ஆகியனவும் கிடைத்துள்ளன. மேலும் இக்கால மக்கள் வாழ்ந்த பல்வேறு அளவுள்ள குழி வீடுகளில் குச்சி நடுகுழிகள் காணப்படுவதால் இவர்கள் கூரைகள் அமைந்த குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இரண்டாம் பிரிவு- இதே புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாம் பிரிவு மக்கள் சாம்பல் மற்றும் சிவப்பு நிற மட்கலன்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் இங்கு கிடைத்தனவற்றுள் சிறந்தனவாம். உணவு உற்பத்தி: கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர்.

 

பரவல்

மேலும் இக்காலக் கருவிகள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்,

வட ஆற்காடு பகுதிகள்- அப்புக்கல்லு, கல்லேரிமலை, சவ்வாது மலை, திருமலை, அம்பூர், சந்திராபுரம், கீழ்விளம்புச்சி, கொளுதம் பத்து, குத்ததூர், மலையம்பத்து, நெல்லிவாசல் நாடு, பழையதலூர், புதூர்நாடு, புலியூர், சோழிங்கூர், விண்ணமங்கலம்.

தென் ஆற்காடு பகுதிகள்- கொண்டிய நாத்தம், மேல் பரிகம், அரிக்கமேடு.

சேலம் மாவட்டம்- சேவரி

கோயமுத்தூர் மாவட்டம்- பெரியகுல்லே பாளையம்.

திருச்சி மாவட்டம்- ஒத்தக்கோயில்

தேனி மாவட்டம்- கருப்பண்ணசாமி கோவில் மேடு, பெரியகுளம்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம்- சைதங்கநல்லூர், கொற்கை, சாயர்புரம்.

தர்மபுரி மாவட்டம்- கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி, பன்னிமடுவ, தயில்மலை, முள்ளிக்காடு, கப்பலாவடி, பர்கூர், கடத்தூர், மரிரெட்டிப்பள்ளி, மயிலாடும்பாறை, மோதூர், கொத்துக்குப்பம், வேடர் தத்தக்கல்  போன்ற இடங்களில் மனித இனங்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.


References:

 • தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், இராசவேலு சு, 1995
 • Archeological Gazatter of Tamilnadu, Chennai. Rajan k ,1997
 • தொல்பொருளியலாய்வும் தமிழர் பண்பாடும். குருமூர்த்தி. சா 1974
 • Neolithic and Megalithic cultures in Tamilnadu Narasimayah B 1976

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/04/இன-அரசியல்-9-புதிய-கற்கால-இந்தியப்-புதிய-கற்கால-தென்னிந்தியப்-புதிய-கற்கால-மனித-இனங்கள்-2932999--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-10: ஆரிய இனம், பூர்வீகம் மற்றும் பரவல்

 

 
aryan_life

 

"ஆரியன்" சொல் விளக்கம்

ஆரியன் என்ற சொல் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதலாக ரிக் வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. என்கிறார் தேவநேய பாவாணர்.

ஆரிய வார்த்தை ஏர் உழுதல் என்று சொல்லப்படுகிறது. அது லத்தீன் மொழியில் arare என்றும்,கிரேக்க மொழியில் அர்டோ(ardo) என்றும்  மேலும் ஆங்கிலத்தில்”வரை” (to till)   என்ற பொருளிலும் உள்ளது.

ஆரியர்கள் துரானிய நாடோடிலிருந்து (Turanians) வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் இப்பெயரைத் தெரிவு செய்துள்ளனர். சமஸ்கிருதத்தில், ஆர்யா என்பது, பிரப்புத்தனம் என்றாலும் நிகண்டுகளில் ஆரியர்களின் பெயர்களுள் ஒன்றாக ”மிலேச்சர்கள்” (Barbarians) என்ற சொல் காணப்படுகிறது.

அது கிரேக்க aristos, சிறந்தது, ஜேர்மன் Ehr-e ல் எரின்(Erin) ஐயர்லாந்திலிருந்து எனும் பொருள் கொண்டுள்ளது. The Oxford Introduction To Proto-Indo-European and the Proto-Indo-European World நூலில் J.B. மல்லோரி மற்றும் D.Q. ஆடம்ஸ் ஆரியன் என்றால் “ஒரு சொந்த குழு உறுப்பினர்” (member of one`s own group) என்று பொருள் தருகிறார்கள்.

 

ஆரியனின் இனம் 

ஆர்யன் சாந்தாக்ரோய் (xanthochroi) இனத்தவர், அதாவது மங்கோலிய இனத்தின் வழிவந்த ஒரு வகைப்பாடு ஆகும் என்கிறார் மானுடவியலாளர் J. W. ஜாக்சன் (J. W. Jackson). இவர்கள் வெண்ணிற தோல் மற்றும் அலையும் பொன்னிற முடி கொண்ட மனித மக்களின் ஒரு பிரிவு. இவ்வின மக்கள் இந்தோ-ஐரோப்பியர்(Celts), ஸ்லோவேனிய (Slavonians) இந்திய மக்களுடன் கலந்துவிட்டனர். 

 

ஆரியனின் பூர்வீகம் (Aryan Homeland)

1507-ஆம் ஆண்டில் மார்டின் வால்ட்ஸெமுல்லரால் (Martin Waldseemüller) சித்தரிக்கப்பட்ட ஆரிய பகுதி

Martin_Waldseem%C3%BCller.jpg

 

பிரெஞ்சு, ஜோசப் ஆர்தர் டி கோபினோ (Arthur de Gobineau) 1848-ஆம் ஆண்டு புரட்சியின் உடனடிப் பின்னணியில், 1400 பக்கங்கள் கொண்ட, மனித இனத்தின் சமத்துவமின்மை பற்றிய ஒரு கட்டுரை (An Essay on the Inequality of the Human Races) என்ற புத்தகத்தை பிரஞ்சு மொழியில் எழுதினார். ஆரிய இனம் பற்றிய பல தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

பெர்ஷிய மற்றும் ஆர்மேனிய மலைநாட்டு அக்சஸ்(Oxus), ஓரேக்சஸ்(Oraxes), யூஃரேட்ஸ்(Euphrates) பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறார் U.J.பர்க்கி.

joseph_arthur.jpg

ஜோசப் ஆர்தர் டி கோபினோ

 

பாரிஸ் மானிடவியல் கூட்டமைப்பு முடிவுகள்

1879 ஆம் ஆண்டு அக்டோபர், 23 அன்று பாரிஸ் மானிடவியல் கூட்டமைப்பின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆரியனின் பூர்வீகம் ஆகும். இதில் பிரஞ்சு மானுடவியலாளர்கள் கிராட் டி ரிலையெல் (Monsieur GIRRAD De Rialle) ஈரானிய நாகரிகத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். சார்லஸ் டி உஜ்ஃபால்வி (Monsieur  Charles De Ujfalvy) ஆரியர்கள் தற்போதைய தஜிகிஸ்தான்(Tajikistan) நாட்டில் ஜராப்ஷான் பள்ளத்தாக்கு Zarafshan Valley (Galchas), நொஸ்கு பள்ளத்தாக்கு Nouksou Valley (Karategins) துர்க்மெனிஸ்தான் (Turkmenistan) ஓக்சஸ் (Oxus) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.

இக்கூட்டமைப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆரியனின் உருவம்

aryan_face.jpg

 

பெர்கானா (Ferghana), கோஹிஸ்தான் (Kohistan) மற்றும் வாகன்(Wakhan) பகுதியில் வாழந்த பழங்குடியினர் கல்காஸ்(Galchas) மற்றும் தாதர்(Tatar) ஆரியர்களே ஆவர்.

உஜ்ஃபால்வி ஆரியர்கள் கருப்பு அல்லது மாநிறம் மற்றும் சிகப்பு, சில நேரங்களில் சிவப்பு முடி, பழுப்பு, நீலம் அல்லது சாம்பல் கண்கள், சாய்வான, நன்கு வடிவமைக்கப்பட்ட, சற்று வளைந்த மூக்கு, மெல்லிய உதடுகள், ஓவல் முகம் மற்றும் சுற்று தலை என்கிறார்

கருநிற ஆரியர்கள் (brunet Aryan) ஐரோப்பாவை வென்றிருக்கிறார்கள், இந்தியாவிற்கு வந்த பொன்னிற ஆரியர்கள் (Blond Aryan) தாழ்வாகவே மதிக்கப்பட்டுள்ளனர். 

 

behisten.jpg

பிஹிஸ்டன் கல்வெட்டு

ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில்(Kermanshah) பிஹிஸ்டன் மலையில் Mount Behistun, கி.மு. 6 ஆம் நூற்றாண்டு பிஹிஸ்டன் கல்வெட்டில் (Behistun inscription), "ஆர்யன்”  என்ற வார்த்தை குறிப்பு உள்ளது.

 

ஆரிய மொழி

ஓப்பர்ட்(Oppert), ஹோவெலாக்(Hovelacque), மற்றும் பல மொழியியலாளர்கள் ஆரிய மொழிகள் ஒரு பொதுவான வம்சாவளியை நிரூபிக்கவில்லை, ஆயினும் ஒரு குறிப்பிட்ட மொழியின் வழியே பரவியுள்ளது என்கின்றனர்.

 

ஆரியம் (Aryanism)

 

houstan.jpg

ஹூஸ்டன் ஸ்டீவர்ட் சேம்பர்லெய்ன்

பழங்கால ஆரிய இனத்தை ஒரு உயர்ந்த இனம் என்று கருதுவதே நாசிசத்தின் சித்தாந்தம் அடிப்படையாக இருந்தது, இன வரிசைமுறைக்கு மிக உயர்ந்த நிலைப்பாட்டை வைத்திருந்தது, மேலும் ஜெர்மனிய மக்களை ஆர்ய இன ரீதியிலான தூய்மையான மக்களாக குறிப்பிட்டனர். ஆர்யன் இனம் பற்றிய நாஜி கருத்துருவானது ஆர்தர் டி கோபினோ  மற்றும் ஹூஸ்டன் ஸ்டீவர்ட் சேம்பர்லெய்ன் (Houston Stewart Chamberlain) ஆதரவாளர்களிலிருந்து எழுந்தது.

 

ஆரியனின் பரவல்

aryan_map.jpg

 

References:

 • The Aryan Homeland by Henri Martin 1878
 • Tribes of the Hindoo-Koosh Major J. Biddulph, 1880
 • TABLE of ARYAN LANGUAGES by HENRY ATTWELL 1874
 • Aryan and Semite, Anthropological Review, vii. 333

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/07/இன-அரசியல்-10-ஆரிய-இனம்-பூர்வீகம்-மற்றும்-பரவல்-2934994--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-11: இந்திய ஆரியர்கள்

 

 
aryans_entering_india

 

இந்திய ஆரியர் வந்த காலம்

இந்திய ஆரியரின் முதல் இலக்கியமான ரிக் வேதத்தின்  காலம் கி. மு.1200-1000 என்று மாக்ஸ் முல்லரும் (Max Muller), கி.மு.2400-2000 என்று வின்டர்நீட்ஸும் (Winternitz), கி.மு.3000 ஆண்டிற்கு முன்னென்று சி.வி. வைத்தியாவும், கி.மு.4500-3000 என்று  ஜக்கோபியும் (Jacobi), கி.மு.6000 என்று லோகமானிய திலகரும், வெவ்வேறு கரணியமுங் கணிப்புங் கொண்டு கூறியுள்ளனர்.

 

 

hindu_kush_mountains.jpg

 
இந்து-குஷ் மலைகள்

ஆரிய வருகைக்கு முற்பட்ட ஹரப்பா - மொகஞ்சதாரோ  (Harrappa-Mohenjodaro) நாகரிக முடிவுக்காலம், ஜான் மார்சலால் (Sri John Marshal) கி.மு.3000 என முடிவு செய்யப் பெற்றுள்ளது. அந் நாகரிகத்திற்கும் வேத ஆரியர் நாகரிக நிலைக்கும் யாதொரு தொடர்புமில்லை. வேத மந்திரங்களை நால்வேதமாக வகுத்ததாகச் சொல்லப்படும் வியாசர் காலமாகிய பாரதக் காலம் கி.மு.1000 என, இந்திய வரலாற்றாசிரியரும் ஆராய்ச்சியாளரும் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய ஆரியர் வருகைக்காலம் கி.மு.2000-1500 எனக் கொள்வது எல்லா வகையிலும் மிகப் பொருத்தமானதாகும்.

hindu_aryans.jpg

இந்திய ஆரியா்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு முதற் காரணம் என்று கருதப்படும் ஆரியரை 'இந்து ஆரியா்' என்று குறித்தல் வரலாற்று மரபு. கிரிஸ், பாரசீகம் முதலிய நாடுகளில் இருந்து வந்த ஆரியா்களும் உள்ளதால் இந்தியாவில் இந்து-குஷ் மலைகல் வழியாக புகுந்து தங்கிய ஆரியா்கள் இந்து ஆரியா்கள் எனப்பட்டனா். வேதங்களில், ஆரியர் இந்தியா மீது படையெடுத்துவந்ததாகக் குறிப்புகள் ஏதும் இல்லை என்கிறார் அறிஞர் அண்ணா.


இந்திய ஆரியர் சமூக நிலை

இந்திய ஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபோது, கிரேக்கத்திற்கு நெருங்கிய மொழியைப் பேசிக்கொண்டு ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையிலேயே இருந்தனர். பன்றி, மாடு, குதிரை முதலிய பல விலங்கிறைச்சியையும் அவர் உண்டு வந்தனர். 

 

ஆரிய கடவுள், மதம்

ஆரியர்களுடைய சமயம் இயற்கை வழிபாடு. பசுவை கடவுளாக கருதினா். பிற்கால ஆரியா்கள் காலத்தில் கடவுள் தன்மை ஏற்றப்பட்ட படிம வழிபாடு தோன்றியது 

இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் கதிரவன், நெருப்பு, காற்று, மழைமுகில் முதலிய இயற்கைப் பொருள்களை வணங்குவதும், வேள்வியில் சிறுதெய்வங்கட்கு விலங்குகளைக் காவுகொடுப்பதும், இறந்த முன்னோர்க்கு உரிய நாளில் பிண்டம் படைப்பதுமே அவர் மதம். முன்னோர் வரலாற்றுக் கதைகளும் சிறுதெய்வ வழுத்துகளும் செவிமரபாகவே வழங்கி வந்தன. அவருள் அறிவிற் சிறந்த பூசாரியர் (புரோகிதர்) மனமும்,  வேள்வித் தூண், சுருவம், உரல், அம்பு முதலிய உயிரிலாப் பொருள்களுடன் பேசுவதும், இயங்கும் கார்முகில்களைப் பறக்கும் மலைகளாகவும் மின்னலை அவற்றை வெட்டி வீழ்த்தும் மழைத் தெய்வத்தின் வெண் படைக்கலமாகவும் கருதுவதும், இரவு பகலையும் விடியற்காலத்தையும் தெய்வங்களாகப் போற்றுவதும் போன்ற சிறுபிள்ளைத் தன்மையளவே வளர்ச்சியடைந்திருந்தது.

 

ஆரியத் தெய்வங்கள்

ஆண் தெய்வங்கள்

தியசு (த்யஸ் - Dyas), பிருதுவி (ப்ருத்வீ), மித்திரன் (மித்ர), அக்கினி (அக்னி-Agni), உழை (உக்ஷஸ்), சூரியன் (சூர்ய), விண்டு (விக்ஷ்ணு), அசுவினியர் (அஸ்வின்), ஆதித்தர் (ஆதித்ய-Aditya), பரிசனியன் பர்ஜன்ய), வாயு, மருத்துக்கள் (மருத்), சோமன் (ஸோம), இரிபுக்கள் (ரிபு-Ribhus) ,விசுவகர்மன் (விச்வகர்மா) பிரசாபதி (ப்ரஜாபதி), பிருகற்பதி (ப்ருகஸ்பதி-Brihaspati),  வாச் (Vac), பூசன் (பூஷன்), அபாம் நபாத்து (அபாம் நபாத்), திரிதன் (த்ரித) ,வனற்பதி (வனஸ்பதி), திதி, சரசுவதி (ஸரஸ்வதி), பாரதி (Bharati), பிதிர்க்கள் (பித்ரு) யமன், யமி

அதிதி (Aditi), வருணன் (வருண), உருத்திரன் (ருத்ர-Rudra), இந்திரன் (இந்த்ர) துவட்டா (த்வஷ்டா) ஆகிய தெய்வங்களை தமிழ் மக்களிடமிருந்து ஆரிய மக்கள் பெற்றுக் கொண்டனர் என்கிறார் P.T. சீனிவாச ஐயங்கார்.

 

பெண் தெய்வங்கள்

பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண் தெய்வங்களுடன், வேறு சில ஆண் தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ளனர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை.

ஆண்பால்       பெண்பால்
இந்திரன்          இந்திராணீ
வருணன்          வருணானீ
அக்கினி          அக்கினாயீ
அசுவின்          அசுவினீ

சமுதாய அமைப்பு முறையில், அவர் வெவ்வேறு கோத்திரமாகப் பிரிந்திருந்தனர். ஒவ்வொரு கோத்திரமும் உறவுத் தொடர்புள்ள பல குடும்பங்களையும் ஒரு தலைவனையும் ஒரு பூசாரியையும் கொண்டிருந்தது. தலைவனைப் போன்றே பூசாரியும் அவ்வச் சரவடியிற் பிறந்தவனாகவேயிருந்தான்.

இந்திய ஆரியர் படையெடுத்துப் பிற நாடுகளைக் கைப்பற்றுமளவு பெருந்தொகையினராய் வரவுமில்லை. அவருக்குள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நாற்பாற் பகுப்புமில்லை. இப் பகுப்பெல்லாம் பிற்காலத்தில் வடஇந்தியத் தென்னிந்தியத் தமிழரொடும் தொடர்புகொண்ட பின்பு, ஆரியப் பூசாரியரான பிராமணர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ்ப் பொருளிலக்கணப் பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்க்குள் வகுத்தமைத்தவையே. ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவில் குடியிருந்தவர் பெரும்பாலும் தமிழரே. 

ஆரியர் வருமுன்பே, தமிழர் இம்மை மறுமையாகிய இருமைக்கு மேற்ற பல துறைகளிலும் உயர்நாகரிக மடைந்திருந்தனர். தமிழர் கண்ட கலைகளும் அறிவியல்களுமே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டும். விரிவாக்கப் பெற்றும் உள்ளன. மேலையறிஞர் இதையறியாது இந்திய நாகரிகம் முழுவதும் ஆரியரிடையதென மயங்கிவிட்டனர் என்கிறார் தேவநேயப் பாவணர்.

 

ஆரியர்கள் இந்திய வருகை மரபியல் ரீதியாக நடைபெற்ற ஆய்வுகள்

M.J பாம்ஷட்டின் ஆய்வு

2001 ஆம் ஆண்டு, M.J பாம்ஷட்( M.J BAMSHAD) மற்றும் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் (Dr.SPENCER WELLS Director of the Genographic Project) ஆகிய மரபணு அறிஞர்கள் தலைமையிலான அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் குழு, ஆரியர்களின் பூர்வீகத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குழுவில் TOOMAS KIVISILD என்பவரும் ஒருவர். இவர் தான் 1999 இல் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு ஆரிய படையெடுப்பு பொய் என்று வாதிட்டவர். இவர் நடத்திய மரபணு சோதனைகளில் MATERNAL GENETIC எனப்படும் தாய்வழி GENOTYPE களை மட்டும் வைத்து ஆய்வு செய்திருந்தார். PATERNAM GENETIC எனப்படும் தந்தைவழி ஜீன்களை ஏனோ அப்பொழுது கருத்தில் அவர் கொள்ளவில்லை. அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில் TOOMAS KIVISILD உள்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து முடிவுகளை அறிவித்தனர்.

இந்த மரபணு சோதனையில் MATERNAL GENETIC எனப்படும் தாய்வழி மரபுரிமைக்கு மட்டும் பயன்படும் MITOCHONDRIAL DNA எனப்படும் DNAவை வைத்து FEMALE INHERITANCE எனப்படும் பெண்களின் தலைமுறை பற்றியும், ஆண்களை நிர்ணயிக்கும் Y-CHROMOSOME எனப்படும் DNAவை வைத்து ஆண்களின் தலைமுறை MALE INHERITANCE பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. Y-CHROMOSOME இன் NON-RECOMBINING பகுதிகள் மூலமாக M17 என்ற GENETIC MARKER-ஐ வைத்து இந்தியாவினுள் ஆரியர் நுழைந்ததை உறுதி செய்தனர். M17 என்பது ஆரியர்களின் மரபணு அடையாளக் குறியாகும். 

"இந்திய ஆரியர்கள், மரபணு ரீதியாக WEST EURESIA என அழைக்கப்படக்கூடிய பகுதியை சேர்ந்தவர்களை (ஈரான் இந்த பகுதியில் தான் உள்ளது) ஒத்து உள்ளனர். தமிழர்கள் (திராவிடர்கள்) மரபணு ரிதியாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களை ஒத்து உள்ளனர். 

2003 இல், QUINTANA-MURCI என்ற மற்றொரு மரபியல் அறிஞரும், இதே போல, ஆடுமாடுகளை மேய்த்த நாடோடி இடையர்கள், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்ததை குறிப்பிட்டுள்ளார். 

 

டேவிட் ரீச்சின் ஆய்வுகள்

டேவிட் ரீச் (David Reich) என்ற மரபியலர் டிஎன்ஏ அடிப்படையில் இந்தியாவில் ஆரியர்களின் வருகை என்பது நிச்சயம் நடந்த ஒன்று என்று மெய்ப்பிக்கும் கருத்தை “Who We Are and How We Got Here” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதில் தந்தைவழியில் கடத்தப்படும் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து ஆரியர்களின் வருகை என்பது இந்தியாவிற்கு வெளியில் இருந்துதான் நிச்சயம் நிகழ்ந்தது என்பதை நிறுவியிருக்கின்றார். இதுநாள்வரை பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் சரியான முடிவை எட்ட முடியவில்லை அதற்குக் காரணம் ஆரியர்களில் ஆண்களே பெரும் அளவில் புலம் பெயர்ந்து வெண்கல யுகத்தில் (Bronze Age migrations) வந்ததே காரணம் ஆகும். தற்போதைய ஆய்வுகள் தந்தைவழி குரோமோசோம்களான Y யின் அடிப்படையில் நடத்தப்பட்டிருப்பதால் ஆரியர்களின் வருகைப்பற்றிய அடிப்படையான ஆதார உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் Y டிஎன்ஏக்களின் ஆய்வில் 17.5% சதவீத இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, அய்ரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கின்றார்கள்.

ஹட்டர்ஸ் ஃபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் (Prof. Martin P. Richards) தலைமையில் 16 விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை “A Genetic Chronology for the Indian Subcontinent Points to Heavily Sex-biased Dispersals; இல் ஆரியர்களில் ஆண்களே பெரும் அளவில் புலம் பெயர்ந்துள்ளனர் (male-driven) என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

 

பீட்டர் அண்டர்ஹில் மற்றும் டேவிட் போஸ்னிக் ஆய்வுகள்

வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது என்கின்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ். ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று Z282, Z93. இதில் Z282 அய்ரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்துசென்றனர். Z93 என்ற பிரிவினர் மத்திய ஆசியாவிற்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும் Z93ந் மூன்று துணை பிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்  இமாலய பகுதியில் பரவினர். இதற்கு முந்திய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டு அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு முடிவுகள் தகர்த்திருக்கின்றது என்கின்றார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.

ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மரபியல் துறை விஞ்ஞானி பீட்டர் அண்டர்ஹில்லுடன் (Peter Underhill) இணைந்து டேவிட் போஸ்னிக் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட  ஒரு ஆய்வு முடிவில் Z93 பிரிவினர் பரவல் 4000 லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினர் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கின்றார் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு முடிவுகள் ஆரியர்கள் வந்தேறிகள் என்ற கோட்பாட்டுக்கு மிகப் பெரிய வலிமை சேர்த்து இருக்கின்றன. 


பாசு (Basu et al) என்ற ஜீனோம் அறிஞர் பல ஜீனோமிக் ஆய்வு முடிவுகளை முன் வைக்கிறார்;

1. இந்திய ஆரிய பெண்களுடைய மரபு வழியில், அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளது. இது ஆரம்பத்தில் இந்தியாவிற்கு வந்த பெண்கள் குறைவு என்பதையே காட்டுகிறது.
2. பழங்குடி இனத்தவருக்கும் மற்றும் ஜாதிவாரி மக்களுக்கும் இடையே மிக பெரிய வேற்றுமை உள்ளது.
3. Austro-Asiatic எனப்படும் பழங்குடியினர் இந்தியாவில் குடியேறிய முதல் பழங்குடியினர் ஆவர்.
4. இந்தோ ஐரோப்பிய நாடோடி கூட்டங்கள் வருவதற்கு முன்னரே திராவிட பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கி இருந்தனர்.
5. உயர்ஜாதி மக்கள் மரபியல் தொடர்புகள் மத்திய ஆசிய மக்களை ஒத்து உள்ளது.
கோர்டாக்ஸ் என்ற மரபியல் அறிஞர் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இந்திய ஜாதி அமைப்புகளில் உள்ள தந்தைவழி மரபுவளிகள் 3500 வருடங்களுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆரியர்களை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.
 

கலப்பற்ற ஆரியர் உளரா ?

ஆரியர் எனும் மக்கள், சென்ற இடங்களில் வாழ்ந்த மக்களோடு தாராளமாகக் கலந்து கொண்டார்கள், இன்று இவ்வுலகத்திலேயே கலப்பற்ற ஆரியர் இலர். இந்திய நாட்டிலே காஷ்மீரில் அதிகக் கலப்பற்ற ஆரியர் வாழ்கிறார்கள் என்று கருதப்படுகின்றது. இன்று மக்கள் தம்மை ஆரியர் என்று குறிப்பாக தென்னிந்தியர் அவ்வாறு கூறிக்கொள்வது வியப்புகுரியது என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை.

 

ஆரியரின் உணவு

வேதகால ஆரியர் இறைச்சி வகைகளத் தாராளமாக புசித்தார்கள். வெள்ளாடு, செம்மறியாடு, பசுக்கள், எருமைகள் யாகங்களில் கொல்லப்பட்டன. முக்கிய விருந்து வந்தால் பெரிய மாடு அல்லது ஆட்டைக் கொல்லும் படி சதபத பிராமணங் கூறுகிறது. சதபத பிராமணம்-III 1.1.21-இல் யாக் ஞவல்கியர் கூறுவது: பசு, காளை ஊன் மெதுவாக இருந்தால் உண்பேன் என்பதாகும். இந்திரனுக்கு எருதுகள் பலியிடப்பட்டன. சோமக்கொடிச் சாற்றினின்று உருவாக்கிய மதுவையுண்டு. களிப்பதும் அதைத் தெய்வமாகப் புகழ்ந்து பாடுவதும் அவர் வழக்கம். அம் மதுவை வழிபட்ட தெய்வங்கட்கும் படைத்தனர்.

 

ஆரியர்களின் எழுத்தறிவு

ஆரியருக்கு எழுத்துமில்லை; இலக்கியமுமில்லை என்கிறார் பாவாணர். ஆரியர்கள் எழுத்துக் கலையை முதல் முதல் கற்றது நாகர்களிடமிருந்து என்கிறார் கா.அப்பாதுரையார். மேலும், இந்திய பூர்வீக நாகர்களே ஆரியருக்கு சமஸ்கிருத மொழியை கற்பித்தனர் என்கிறார் டாக்டர் கிளீட் விண்டர்ஸ் (DR. CLYDE WINTERS)

 

References:

 • வடமொழி வரலாறு – 1 ஞா.தேவநேய பாவாணர் 1967    
 • ஆரிய வேதம் ந.சி.கந்தையா பிள்ளை.
 • ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்_ கா.அப்பாதுரையார்
 • ஆரிய மாடை அறிஞர் அண்ணா
 • Ancient African Kings Of India By Dr. Clyde Winters
 • The age of the Mantras by P.T.Srinivasa Iyenkar
 • A Genetic Chronology for the Indian Subcontinent Points to Heavily Sex-biased Dispersals
 • Genetic evidence on the origins of Indian caste populations by Bamshad M
 • The Journey of Man: A Genetic Odyssey by Spencer Wells,2002

 

தொடரும்...

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/11/இன-அரசியல்-12-இந்திய-ஆரியர்கள்-2937646--3.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-12: திராவிடர்

 

 
austirelo_family

 

திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது. எனினும் அநேகர் காக்கசாயிட் இனத்தின் தென்கோடியில் உள்ள பிரதிநிதிகளாகத் திராவிட இனத்தைக் கருதி வருகின்றார்கள். தமிழர், கன்னடர், மலையாளி, தெலுங்கர் மற்றும் பல பழங்குடியினருக்கு முன்னோர்கள் ஆதி திராவிடர்கள் என்கிறார் T.R.சேஷ ஐயங்கார். இந்தியக் மலைகளில் காடுகளில் பழங்குடிகள் ஒதுங்கி வாழ்வதைக் காணும் பொழுது, திராவிடர்கள் வெகு காலத்திற்கு முன் இந்தியாவை படையெடுத்து வந்த குழுவினர் என்கிறார் E.L.தம்பிமுத்து.

 

திராவிடர் பூர்வீகம்

austirelo_family_inside.jpg

 

திராவிடர்கள் இரு வகையினர் ஒன்று கோலேரியர்கள் (kolarians) மற்றொன்று முண்டரிகள் (Mundari) ஆவர். கோலேரியர்கள் வடகிழக்கு வழியாக இந்தியாவிற்குள் வந்தவர்கள். இந்த முண்டரிகளுக்கு முன்னோர் நாகர்கள் என்கிறார் தேவநேய பாவாணர். வடமேற்கு வழியாக பஞ்சாபை அடைந்தனர் என்கிறார் சர் வில்லியம் ஹண்டர். மங்கோலிய பூர்வீகத்தினர் என்கிறார் கனகசபை. சர் H ஹிஸ்லி(Sir H Hisley)  இமாலயப்பகுதியிலிருந்து (trans-himalayan) வந்தவர்கள் என்கிறார்.

திராவிட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்று கூறுவதற்கேற்ற ஆதாரம் ஒன்றேனும் காணப்படவில்லை. பழைய கற்காலம் முதல் இரும்புக்காலம் வரையில் மக்கள் தொடர்பாகச் செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் பிறபொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

திராவிட மக்கள் அயல்நாடுகளினின்றும் வந்தார்கள் என்று கூறுவோர்க்குத் துணேயாயிருப்பது ஆப்கானிஸ்தானத்தின் ஒர் பகுதியில் தமிழுக்கு இனமுடைய பிராகூய் மொழி வழங்குவது. இன்றைக்கு ஆராயிரம் ஆண்டுகளின் முன் சிந்து ஆற்று வெளிகளில் திராவிடர் நாகரிகம் பரவியிருந்தது. அங்கு தமிழ் வழங்கிற்று. இம்மக்களின் தொடர்புடையவர்களே ஆப்கானிஸ்தானத்தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் சந்ததியினரே திராவிடத் தின் சம்பந்தமுடைய பிராகூய் மொழியை இன்றும் பேசி வருகின்றனர் என்கிறார் W.R.ராமசந்திர தீட்சிதர்.

 

திராவிடர் பரவல்

indian_people.jpg

 

ரிக் வேதத்தில் திராவிடர்

ரிக் வேதத்தின் ஒன்பதாவது இயல்,சோம பானம் மற்றும் சுரா பானம் காய்ச்சும் முறைகளைக் பற்றியும் இவற்றை எந்த அளவில் எவற்றோடு கலந்து குடிப்பது என்பதைப் பற்றியும் 1108 பாடல்களில் விரிவாகப் பாடுகின்றது. சுரா பானத்தைக் குடிப்பவர்களை ஆரியர்கள் தங்களைச் ‘சுரர்’ என்றும் அதனை மறுத்த திராவிடர்களை ‘அசுரர்கள்’ என்றும் அழைத்தனர்.

“அக்கினியே, தானம் அளிக்காத எங்கள் பகைவர்களாகிய அரக்கர்களைத் தூள் தூளாக்கு’ (ரிக்-441). ‘இந்திரனே, தெய்வ நம்பிக்கையில்லாத - கடவுளற்ற - சடங்குகள் செய்யாத தாசர்  இனத்தைப் பூண்டோடு அழித்துச் சாம்பல் ஆக்க வானத்தையும் பூமியையும் அனலாக்கு’ (ரிக் - 4617)

திராவிடர்களை, தாசர்கள், தஸ்யூக்கள், கறுப்பர்கள் என்ற சொல்லாட்சிகளால் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார்கள்.
 

தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்

மரபணு ரீதியாக மனிதகுல வரலாற்றையும் இடப்பெயர்வுகளையும் ஆராயும் தமிழக விஞ்ஞானி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மரபணு அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்.இராம பிச்சப்பன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூரில் விருமாண்டி என்பவரிடம் மரபியியல் ஆய்வு செய்த போது "எம்130 டி.என்.ஏ" கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆப்பிரிக்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் "Mம்130 DNA" இருப்பதாக டாக்டர்.பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார்.

 

 

micheal_woods.jpg

 மைகேல் வூட்ஸ்

மைக்கேல் வூட்ஸ் (Michael Woods) என்கிற ஆவண பட தயாரிப்பாளர் விருமாண்டியை நேரில் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார், இதை தனது ஆவணப்படம் பகுதி-1இல் பதிவு செய்துள்ளார். இத்தரவுகளை இந்திய வரலாறு (The Story of India) என்ற தனது நூலிலும் பதிவு செய்துள்ளார். அடிப்படையில் இவர் வரலாற்று ஆசிரியர் எனினும் இவர் பதிவுகள் மானுடவியல், மரபியல் அல்லது தொல்லியல் சார்ந்து இல்லாத காரணத்தால் இவர் தரவுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது.  இவர் முருகனின் சிரிப்பில் (A South Indian Journey: The Smile of Murugan) என்று அவர் ஒரு ஆங்கில நூலும் எழுதி உள்ளார்.

இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும். 13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபணு குறியீடுகளை ஆய்வு செய்தனர். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழங்குடியினர், உட்பட அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர். அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். 

 

சமீபத்திய ஆய்வுகள்

ஆப்பிரிக்காவில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், 26 மே 2018 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

திராவிட மொழிகள் (dravidian language)

திராவிட மொழிக் குடும்பம் என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரப்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் ,பியரி மொழி, படுக மொழி, குடகு மொழி, குறும்பா மொழி, காணிக்காரர் மொழி, கொற்ற கொரகா, இருளா, தோடா, கோத்தர், அல்லர், கோண்டி, முரியா, கூய், மாரியா குவி, பெங்கோ, கோயா, பர்தான், செஞ்சு, கொண்டா, நாகர்ச்சால், மண்டா, கொலாமி, துருவா, ஒல்லாரி, நைக்கி, பிராகுயி, குறுக்ஸ், சவ்ரியா பஹரியா, குமார்பக் பஹரிய் போன்றவை அவற்றுள் சில ஆகும்.

 

திராவிடர் சமயம்

சைவம் எனப்படும் சிவ நெறியானது பழங்காலத் திராவிடர்களின் சமயக் கொள்கை எனலாம். பறவைகளும், விலங்குகளும் சூழ, மனிதன் கால்மேல் கால்போட்டு வீற்றிருப்பது போன்ற உருவம் பொறித்த இலச்சினைகள் பல மொகஞ்சதரோவிலிருந்து கிடைத்துள்ளன, சிவனுக்கு சொல்லப்படும் சாயல் தோற்றங்கள் எல்லாம் இந்த உருவத்துக்கும் அமைந்துள்ளன

 

References:

 • திராவிட மக்கள் வரலாறு E.L.தம்பிமுத்து 1946
 • திராவிட இந்தியா  ந. சி. கந்தையா பிள்ளை 1949
 • Origin and Spread of the Tamils-W.R.Ramachandra Dikshitar
 • ஆரிய - திராவிடப் போராட்டம் பேராசிரியர் ப.காளிமுத்து
 • Tamil Studies by M.Srinivasa Iyengar
 • Dravidian India Vol 1 T.R. Sesha Iyengar 1925
 • The Dictionary of Historical and Comparative Linguistics, Robert Lawrence 2000

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர்

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/14/இன-அரசியல்-12-திராவிடர்-2939535--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-13: நாகர் இனம்

 

 
nagas

 

நாகர்கள் (Nagas)

நாகா என்பது பாம்பு என்று பொருள்படுவதாக ஜான் ஓவன் (John owen) குறிப்பிடுகிறார். குமரி முதல் இமயப் பனிமலை வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-ஹரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும் பரவிக் கிடந்த திராவிடப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களைத் திராவிடர்கள் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

நாகர்கள் மங்கோலிய வகுப்பைச் சார்ந்த திபெத் தோவர்ம குலத்தவர்கள் என்றும் கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின் வடகிழக்கு கணவாய் வழியாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்கிறார் ஏ.கே.மஜும்தார். நாகர்கள் இலங்கை மற்றும் கடல்கொண்ட பாண்டியநாடு உட்பட பல பகுதிகளுக்கு திராவிட நாட்டிலிருந்து சென்று குடியேறினார்கள் என க.ப.அறவாணர் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழர், நாகர் என்போர் இடத்தால் வேறுபட்டவர்களே அன்றி பிறவற்றால் வேறுபட்டவர்கள் அல்லர். அவர்களின் மொழி அது வழங்கப்பட்ட இடத்தால் சிறிது வேறுபடும் தமிழே என்கிறார் K.R.சுப்ரமணியன். நாக் என்பது பாம்பினைக் குறிக்கும் வடமொழிச்சொல், ஆகவே நாகா என்று வடமொழி எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

ரிக் வேதத்தில் “அஹி” (Ahi) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அஹி என்பதன் பொருள் பாம்பு, விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தால் தாக்கிய போது வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பவன் வீழ்ந்தான். இதன்வழி, நாகர்கள் அசுரர்கள் சொல்லால் வழங்கப்பட்டது தெரிய வருகிறது என்கிறார் ஜாய் ஜானதேசிகன்.

போகவதியை ஹீராலால் எனும் அறிஞர் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நாம்டிக் நகரம் என அடையாளம் காண்கிறார். அதனை நாகர்களின் இருப்பிடமாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. தாலமி திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள ஓர்த்தூரா (உரகபுரா அல்லது பாம்பு நகரம்) பற்றிக் குறிப்பிடுகின்றார்.

நாகர் என்பார் முதன்முதல் நாகவணக்கங் கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ்நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை.
“கீழ்நில மருங்கி னாகநாடாளு
மிருவர் மன்னவர்”(9 : 54- 55) என்பது மணிமேகலை.

நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடையவராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தலையிலணிந்தவராயுமிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்ததாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்குவதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது.

சிந்தர்கள் புகழ்பெற்ற சிந்து நதியில் இருந்து தங்கள் பெயரைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது, கி.பி11-12 நூற்றாண்டுகளில் தக்காணத்தின் பெரும் பகுதியில் காணப்படுகின்றார்கள். பிஜப்பூர், தார்வார் ஆகிய பகுதிகளில் உள்ள சிந்தர்கள் நாகா இனத்தைச் சார்ந்தவர்கள்.

 

தொல்லியல் ஆதாரங்கள்

தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழி”கள் அகழ்வாராய்ச்சியாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு புதைக்கப்பட்டவர்கள் உயரமானவர்களாகவும் மங்கோலிய உருவ அமைப்பின் அம்சங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்று அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவல்களை ஒரு சேரப் பார்க்கையில் புதைக்கப்பட்ட மக்கள் ‘தமிழ் நாகர்’ என்று குறிப்பனவாக உள்ளன.

கைகயர்கள்(Haihayas) இனம் அஹி அல்லது விரித்ராவிலிருந்து தோன்றியது என கருதப்படுகிறது.

கிருஸ்துவ சகாப்தத்தின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே மைசூர் உட்பட தக்காணத்தில் நாகர் இன மக்கள் வசித்தனர் எனக் கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்வெட்டுகளில் ஏராளமான நாகப் பெயர்களும், நாகச் சிற்பங்களும் தக்காணத்தில் காணப்படுவதால் தக்காணம் நாகர்களில் மையமாக விளங்கியது எனலாம்.

குஷானர்களின் வீழ்ச்சிக்கும் சமுத்திர குப்தரின் தலைமையில் குப்தர்களின் எழுச்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் ஏராளமான நாகர் தலைவர்கள் தோன்றினர் என குப்தர்கள் காலக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.மதுரா நாகர்களின் கேந்திரமாக முற்காலத்தில் இருந்தது என பிராமிக் கல்வெட்டுகள் வழி தெரியவருகிறது.

 

நாகர்களின் இருப்பிடம்

சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன. இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Chota Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயேயிருத்தல் காண்க.
நாகர் அல்லது கீழ்த் திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், நரவூனுண்ணிகளாயு மிருந்தனர்.
“சாதுவ னென்போன் தகவில னாகி...
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன்...
நக்க சாரணர் நயமிலர் தோன்றி...
ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்”(16 : 4-59) என்னும் மணிமேகலையடிகளைக் காண்க.

சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலைநகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது. நடுமாகாணத்தி (Central Provices)லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாகநாட்டாரே. வங்காளக்குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்துபோனபின், அவற்றினின்றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர்.

 

முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள்

(1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரே வகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.

(2) முண்டா மொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான்குமேர் (Mon-Khmer) மொழிகளும் ஓரினமென்று கொள்ளும் படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.

 

உணவு

மாமிசமும், நர மாமிசமும் உண்பவர்களாக இருந்தனர். தாவர உணவுகளை உண்பவர்களாக புத்தர் மாற்றினார்.

 

சேர நாகர்கள்

நானாகாட் கல்வெட்டுக்கள் நாகர்களை நாயணிகாவில் வருவது போன்று நாயா என்று குறிப்பிடுகின்றது. மலபார் நாகர்கள் முற்காலத்திய நாகர்களின் பழக்கவழக்கங்கள் மாறாது பிரதிபலிக்கின்றனர். சில கால முன்புவரை நாயர் பெண்கள் நாகப்படம் என்னும் காதணியை அணிந்தனர்.

 

அங்கமி நாகர்கள் (ANGAMI NAGAS)

அங்கமி நாகர்கள் பழங்குடியினர்கள் பிபேமா, சிபாமா, விடிமா, கிர்ஹா, பெரிமா போன்ற கிராமங்களில் வசிக்கின்றனர். விழாக்காலங்களில் இவர்களின் நடனமும், விருந்தும் அட்டகாசமானதாக இருக்கும். பிப்ரவரி மாதம் இவர்களின் விழாவான செங்கென்யி கொண்டாடப்படுகிறது. இவர்களில் சிலர் நன்கு படித்து நவநாகரிக உடை அணியவும், வெளியுலகத்துக்கு வரவும் தொடங்கிவிட்டாலும், இந்த கிராமம் இன்னும் பழமையை தொடர்கிறது. அங்கமி இனத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. திருவிழாக்களின் போது சேவல் பலி கொடுக்கிறார்கள். முன்பு பல வருடங்களுக்கு முன்பு வரை மனிதர்களைத் தான் பலியிட்டு வந்திருக்கிறார்கள்.

 

அஸ்ஸாம் மணிப்பூர் நாகர்கள்

assam,_manipur_nagas_tribal.jpg


 

அஸ்ஸாம் நாகர்கள்

அஸ்ஸாம் நாகர்கள் மொத்தமாக “மிரி; என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் திக்கு ஆற்றுப் (Dikhu River) பகுதியில் வசித்தனர். ஆண் பென் இருபாலரும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். மணிப்பூர் நாகர்கள் பல குழுக்களாக இருந்தனர்.

 

manipur_nagas.jpg


மணிப்பூர் நாகர்கள்


லோதா நாகர்கள் (Lhota Nagas)

லோதா நாகர்கள் வோஹா மலைப்பகுதிகளில் வசித்தனர். இவர்களுடைய மொழி ஏவோ(Ao), தங்சா(Tangsa), துகுமி(Thukumi) யச்சூமி (Yachumi ) வழி வந்த லோதா மொழி என்கிறார் சர் ஜார்ஜ் கிரியர்சன் (Sir George Grierson)

 

சமயம் வழிபாடு

பித்துப் பிடித்த கடவுள்களை வழிபாடு செய்தனர். நாகர்களின் மூதாதையர் வழிபாட்டு முறைகளும், பாம்பு வழிபாடும் சைவ மத வழிபாட்டுடன் புத்தர் காலத்திலேயே கலந்துவிட்டன. உலகெங்கும் நாக வழிபாட்டை பரப்பியவர்கள் நாகர்களே. கேரளத்துப் பாம்பு மேக்காட்டு நம்பூதிரிகள் பழங்காலத்து நாகர் இன மக்களே ஆவர். லிங்கங்கள் நாகர்களின் பாதுகாப்பிலும், கவனிப்பிலுன் உள்ளனவாகக் காணப்படுகின்றன. நாகார்ஜுனாவின் சீடர் புத்தமதம் தழுவி மரவழிபாடு மற்றும் பாம்பு வழிபாட்டை ஏற்றுக் கொண்டது குறித்து கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

 

கிளைகள்

நாகர்களில் பல கிளைகளாக இருந்தனர். எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய கிளையினர் இருந்தனர். அவர்களில் மறவரே வலிமை மிக்கவராயும் போர்த்திறம் மிக்கவராயும் இருந்தனர், நாலைக் கிழவன் நாகன் என்ற மறவர் கோமன் பாண்டிய மன்னனிடம் அமைச்சனாகவும்,படைத் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரைமலையை ஆண்ட பிட்டங்கொற்றன் சேர மன்னனிடம்  பணிசெய்ததாக வி.கனகசபைப் பிள்ளை கூறுகிறார்.

நாகர்களில் அடக்காப் பண்புடையவர்கள் வயினர் அல்லது வேடர்களே ஆவர். நாகர்களில் இன்னொரு மரபினரான ஒளியர் கரிகால் சோழனால் வென்றெடக்கப் பட்டனர் என்று பட்டினப்பாலை மூலம் தெரிகிறது.

நாகர் இனத்தில் மற்றொரு வகுப்பினர் பரதவர் ஆவர். இவர்கள் மீன் பிடித்தல், கடல் வாணிபம் செய்தல் முதலிய தொழில்கள் செய்துவந்தனர்.ஓவிர் தேசம் ஓவியராகிய நாகர்கள் வாழ்ந்த மாந்தை நகரமாகும்.

 

எழுத்து

ஆரியர்கள் எழுத்துக்களையை கற்றது நாகர்களிடமிருந்து என்பார். சமஸ்கிருத்த்தை உருவாக்கி அதை கற்பித்தவர்கள் நாகர்களே. அதனால் தான் அவ்வெழுத்துக்களுக்கு தேவநாகரி (தேவ+நாகரி) என்றழைக்கப்படுவதாக செ.ராசநாயகம் முதலியார் தெரிவிக்கிறார்.

 

நாகர்களின் மந்திரங்கள்

இசையிலும் மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நாகர்கள். அம்மந்திரங்களை ஆங்கில அறிஞர்கள் ரிவென்பர்க் (Rev S.W.Rivenberg) மற்றும் பெட்டிக்ரூவ் (Rev.W.Pettigrew) இருவரும் தொகுத்துள்ளனர்

 

கலைகள்

நாகர்கள் பல கலைகளில் திறமை உடையவர்களாக இருந்தனர். நெசவு அவர்களின் தனித் திறமையாக இருந்துள்ளது. ஆடைகளையும், மல்மல் என்ற மெல்லாடைகளையும் ஏற்றுமதி செய்துள்ளனர். நீல நாகர்கள் தனக்களித்து மல்மல் ஆடைகளுள் ஒன்றை ஆய் எனும் வள்ள சிவபெருமான் சிலைக்கு பரிசளித்ததாக பத்துப்பாட்டு குறிப்பிடுகிறது.

புது நகரங்களைக் கட்டுவதில் நாக மன்னர்கள் நிபுணர்கள் ஆவர். அவர்கள் பல நகரங்களைக் கட்டினார்கள், மகாபாரதத்தில் வரும் “மாயசபை” இவர்களுடைய சித்திர வேலைத் திறனைக் காட்டுகிறது.பாதாளம், பிரஜயோடிஷ, தக்‌ஷலா, மகாத, மதுரா, விலாசபொரி முதலிய நகரங்களை அமைத்தவர்கள் நாகர்களே. உலகில் முதல் முதலில் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள். பாம்புகள், எறும்புகள் போல நிலத்தைத் தோண்டி பொன், வெள்ளி, முதலிய உலோகங்களைக் கண்டவர்கள்ம் சிற்பக்கலை முதலிய அருங்கலைகளில் சிறந்தவர்கள் நாகர்களே. இத்தொழில்களில் இன்றுவரை நாகர் ரத்தம் உள்ளவர்களே ஈடுபட்டு வருகின்றனர்,

 

தாசர்கள்

திராவிடர் என்பது மொழியைக் குறிக்கும் பெயராகும். ஆதி திராவிடர் என்ற சொல்லே அவர்கள் ஆதியில் வாழ்ந்தவர்கள் என்பதே. நாகன், நாகப்பன், நாகராஜ், நாகலுங்கம், நாகேந்திரன், நாகூரான் என்ற பெயர்கள் ஆராய வேண்டியவை. தாசர்கள் திராவிடர்களே.

 

நாகப்பட்டினம்

தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகநாதர் கோயிலில் உள்ள பல்லவர் கல்வெட்டிலும் இவ்வூர் நாகை’ என அழைக்கப்படுவதைக் காணலாம். இப்பெயர் பின்னர் ‘பட்டினம்’ (அந்நாட்களில் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகத்தைச் சுட்டும் சொல்) என்ற பின்னொட்டுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என வழங்கலாயிற்று. நாகர் இன மக்களுக்கும் இவ்விடத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் இவ்வூர் நாகை எனப் பெயர் பெற்றதாகவும் கொள்வர்.
 
பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிறமுடைய மண்கலச் சில்லுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் ஒரு சில்லில் ‘நாகர்’ என எழுத்துகள் காணப்படுவது சிறப்புக்குரியதாகும். எழுத்துகளின் அமைப்பினைக் கொண்டு கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். எழுத்துகள் கீறப்படாமல் புடைப்பாகக் காட்டப்பட்டுள்ளமை இவை முத்திரையிடப்பட்டவை என்பதைப் புலப்படுத்துகிறது.

 

தேவையான ஆய்வுகள்

மானுடவியலாளர்கள், தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் நாகர்கள், திராவிடர்கள் மற்றும் தமிழர்களிடையுள்ள மரபுத் தொடர்புகளைப் பற்றி ஆய்ந்து விளக்குதல் அவசியமான ஒன்றாகிறது.

 

References:

 • ஒப்பியன் மொழிநூல் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
 • நாகப்பட்டினம் அகழாய்வு,முனைவர் பா.ஜெயக்குமார்,கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
 • ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும்பேரும், 1976
 • நாகர் வரலாறு டாக்டர்.சிவ.விவேகானந்தன்.
 • நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்வ் வ.ஜெயதேவன்
 • ஒரு மறக்கப்பட்ட வரலாறு, ஜாய் ஞானதாசன்
 • The origin of saivism and its History in Tamilnadu by K.R.Subramanian
 • ‘Sketches of Ceylon History' 
 • The Naga tribe of Assam_William Carlson Smith 1925
 • Notes on Naga tribes_John owen 1844
 • The Naga tribes of Manipur_T.C.Hodson 1911
 • The Angami Nagas by John Henry Hutton I.C.S 1921

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/21/இன-அரசியல்-13-நாகர்-இனம்-2944347--3.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல் 14: தமிழர் இனம்

 

 
tamil

 

தமிழர் யார்?

கன்னியாகுமரிக்குத் தெற்கே பரவியிருந்த லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர் என்பர் ஒரு சாரார். அந்த நிலப்பரப்பை ”நாவலந்தீவு” எனப் பெயரிட்டு அழைத்தனர். கால்டுவெல் முதலானோர் தமிழர்களின் முன்னோர் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கலாம் என்பர். கங்கைச் சமவெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்கிறார் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி. புலுசிஸ்தான் பாகங்களில் இன்றும் திராவிட மொழிகளும் புருஹீ மொழிக்கும் தொடர்புண்டு என்கிறார் ராப்ஸன். எனினும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட யாவரும் தமிழர் எனலாம்.

 

தமிழரின் தொன்மைச் சிறப்பு

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். இந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம் தோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி என்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
    புனல்சூழ்ந்து வடிந்து போன 
    நிலத்திலே புதிய நாளை 
    மனிதப் பைங்கூழ் முளைத்தே 
    வகுத்தது மனித வாழ்வை 
    இனிய நற்றமிழே நீதான் எழுப்பினை (அழகின்சிரிப்பு : தமிழ் - முதல்பாடல் வரிகள்: 1 - 6)

 

சிந்துவெளித் தமிழர்

மிக வளர்ச்சி அடைந்த இந்த நாகரிகம் கி.மு2700 முற்பட்டதென்று C.L.ஃபாப்ரி (C.L.Fabri) குறிப்பிடுகின்றார். திராவிட மொழியை வழங்கும் மக்களே பலுசிஸ்தானம் முதலிய இடங்களில் வசித்தனர் என்கிறார் S.K.சட்டர்ஜி.

 

தமிழ் மக்கள்

தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள் என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

 

தமிழக எல்லை

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய “பனம்பாரனார்” என்பவர்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 
தமிழ்கூறும் நல்லுலகம்

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

 

தமிழ் மொழி தமிழ்ச் சங்கம்

மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம்.

தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம் கூறுகின்றது.

பழந்தமிழ் நாட்டில் தமிழ் மொழியினைப் பேணி வளர்ப்பதற்காகச் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. இச்சங்கத்தைப் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்தனர். தமிழ்ப் புலவர்கள் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்ததுடன் பல நூல்களை இயற்றினர். அதோடு மட்டுமல்லாமல் பிற புலவர்கள் இயற்றிய நூல்களை மதிப்பீடு செய்தும் வந்தனர். இதில் அமர்ந்திருந்த புலவர்கள் பல இலக்கியங்களைத் தமிழில் படைத்துத் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு உணர்த்தினர். இதனையே ஔவையார் கூறும்போது,
பாண்டிய நன்னாடுடைத்து நல்ல தமிழ்
 மணத் துறவிகள் திரமிள சங்கம் (தமிழ சங்கம்) என்ற ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணி ஆற்றினர். இச்சங்கத்தைத் திராவிட சங்கம் என்றும் கூறுவர்.

 

பழந்தமிழ் இசை

நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், ஆதி சங்கீத மும்மூர்த்திகள் சீர்காழி முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை,  அருணாசலக் கவிராயர் , சேத்ரக்ஞர், சங்கீத மும்மூர்த்திகள் சியாமா சாஸ்திரி, தியாகையர், முத்துசாமி தீட்சிதர், புரந்தர தாசர் அருணகிரிநாதர் என எண்ணிலடங்கா சங்கீத விற்பன்னர்களால் வளர்ந்தது தமிழிசை. பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன.

அகத்திய முனிவரால் எழுதப்பட்ட “அகத்தியம்” சிகண்டி என்னும் முனிவரால் எழுதப்பட்ட “இசை நுணுக்கம்”, யாமளேந்திரர்     என்பவரால் எழுதப்பட்ட “இந்திர காளியம்”, தேவவிருடி நாரதன் எழுதிய “பஞ்சபாரதீயம்”, அறிவனார் இயற்றிய“பஞ்சமரபு” மற்றும் பெருங்குருகு,பெருநாரை,
தாளவகை யோத்து போன்ற பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்தன. பழந்தமிழ்ப் "பண்", இக்கால இந்திய இசையில் ‘இராகம்’ என்று சொல்லப்படுகிறது. 

 

தமிழிசைக் கருவிகள்

யாழ், குழல், முழவு, பேரிகை,சீர்மிகு, திமிலை,தமருகம்,அந்தரி,மொந்தை,நிசாளம்,ஆசில்,தொக்க,படகம், மத்தளம்,குடமுழாத்,தண்ணுமை,முழவொடு,முரசு,துடுமை,தகுணிச்சம்,உபாங்கம்,இடக்கை,சல்லிகை தக்கை,தாவில்,சந்திர,கண்விடு,சிறுபறை,விரலேறு,துடிபெரும்,உடுக்கை,கரடிகை,கணப்பறை,தடாரி,
வளையம்,துாம்பு,அடக்கம்,பாகம்,பறை.

 

தமிழர் நாகரிகம்

tamil_1.jpg

 

மிகப்பழமையான நகர நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டு பூம்புகார் ஆகும். 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்பர்.  S.R.ராவ் கி.மு.1500 என்கிறார்.

மாநகர் கடல்கொள
அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்               (மணிமேகலை 28 அடி 80-81)

 

அந்த காலத்திலேயே சுட்ட செங்கற்களை பயன்படுத்தியுள்ளனர். கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள் குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது. பண்டை நாள்களில் பூம்புகார் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு உள்ளது இதாவது, புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, சோழப்பட்டினம் மற்றும் காவேரிப் பண்டப்பெருநிலையம் (Kaberis Emporium) 

 

தமிழரின் கப்பற்கலை

பண்டைத் தமிழ் மன்னர்கள் மலைகள் போன்ற பெரும் கப்பல்களைக் கொண்டு கடலாட்சி செய்தனர். மாமல்லபுரத்தில் உள்ல ஒலக்கணேசுவரர் கோயில் முற்காலத்தில் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டதாகவும், திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் திருமணி விளக்கு கலக்கரைவிளக்கம் போல் கருத இடமுண்டு. துர்றைமுகப்பட்டினம் புகாரில் கலங்கரவிளக்கு உயர்ந்து ஒளிவீசியது என நற்றிணை சொல்கிறது.கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “ நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது. போஜராஜனால் இயற்றப்பட்ட யுக்தி கல்பதரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல் கட்டும் கலை, தமிழ் அரசர்களிடமிருந்து தான் பெறப்பட்டது.

பாதை, யானம், மதலை, திமில், பாறு, அம்பி, பஃறி, சதா, பாரதி, நவ். போதம், பகடு, பட்டிகை, தெப்பம், மிதவை, புணை, பரிசில், ஓடம், பிளாவு, மச்சுவா, குல்லா, வள்ளம், டிங்கி, தோணி ,மசுலா, வத்தை, உரு, மரக்கலம், கப்பல், நாவாய், வங்கம், கலவம், வேடிபடவு என பல வகையான கப்பல்கள் இருந்துள்ளன என சேத்தன் திவாகரம் எனும் நூல் மற்றும் ஹெர்மன் குல்கே குறிப்பிடுகின்றனர், ஏரா, பருமல், தொகுதி, வங்கு, பாய்மரம், பாய் என கப்பலின் எல்லா உறுப்புகளுக்கும் தமிழ்ப் பெயர் இருந்துள்ளது கப்பல் கட்டும் தொழிலில் தமிழர் சிறந்து விளங்கியதை அறியலாம். “Navy” என்ற வார்த்தை ”நாவாய்” இலிருந்தும் “catamaran” கட்டுமரம் என்ற வார்த்தையிலிருந்துமே உருவானது.

கி.பி.42 முதல் கி.பி 100 வரை இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் நவ்ராவை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். “நவ்ரா” என்பதற்கு புதிய பட்டிணம் என்று பொருளும் உண்டு.

கப்பற் படையில் முன்னோடிகளாக பல்லவர் இருந்தனர் என்றும் கிழக்காசியாவுடன் வாணிபத் தொடர்பு பற்றி சயாமில் (தக்வா-பா) கல்வெட்டு கூறுகிறது.

கப்பல் கட்டுவதற்கு வேம்பு, இருப்பை, புன்னை, நாவல், வெண் தேக்கு, தேக்கு முதலியன பயன்படுத்தப்பட்டதாக T.P.பழனியப்ப பிள்ளை கூறுகிறார்.

 

தமிழனின் இரும்புப் பயன்பாடு

tamil_2.jpg


 
ஆதிச்சநல்லூர் பரம்பின் இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கி.மு7-8 நூற்றாண்டிற்குரிய இரும்புக் கொழு கண்டுபிடிக்கப்பட்டதாக கோ.முத்துசாமி கூறுகிறார். வட ஆற்காடு பையம்பள்ளி அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கி.மு.640-105 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தருமபுரி தொகரப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரும்புப் பொருட்களில் காலம் கி.மு.290 அனத் தெரிய வருகிறது.

கே.என்.பி.ராவ் தனது அறிக்கையில் கி.மு.3 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஆப்பிரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு இரும்பு ஏற்றுமதி செய்ததாகக் கூறுகிறார். இதை பிளினியும் பெரிபுளூஸும் ஒப்புக் கொள்கின்றனர். க.வேலுச்சாமியும், பி.கெ.குருராஜாவும் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டருக்கு புருசோத்தமன் சேலம் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட நல்ல ரகமான இரும்பை பரிசளித்ததாக கூறுகின்றனர்.

 

தமிழரின் வீரம்

இராஜேந்திர சோழன். போரிடுவதிலும், வீரத்திலும் ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமானவர் இராஜேந்திர சோழன். கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட, சோழ தேசத்தை, கி.பி., 1012 முதல், 1044 வரை ஆண்ட, முதலாம் ராஜேந்திர சோழன், இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள், லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன. கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்தது 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே.

கி.பி., 1019ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, கங்கை கொண்ட சோழபுரத்தின், பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான். அதற்கு முன், கங்கை நீரை, திருலோக்கி கைலாசநாதர் கோவிலில் வைத்து வணங்கியதற்கான கல்வெட்டு சான்றுகள், அக்கோவிலில் உள்ளன. அந்த கல்வெட்டை, 2015ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அறநிலையத் துறையினர், வண்ணம் பூசி சிதைத்து விட்டனர். பல்லாயிரம் வீரத்தமிழரில் ராஜேந்திரன் ஒரு உதாரணமே.

 

கடல் வாணிபம்

பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் மரக்கலம் செலுத்திய பெருமை கொண்டவர்கள். மேலும், சோழர்கள் கடலில் கலம் செலுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று, போர் வென்று, கடாரம் கொண்டும், ஈழநாடு கொண்டும் பெயர் பெற்ற ஆற்றல் மிக்கவர்கள். யவன நாட்டினரும் பிறரும் தமிழ் நாடடிற்கும் பண்டமாற்றும், வாணிகமுங்குறித்து மரக் கலங்களில் வந்துள்ளனர். எனவே, இரவில் மரக்கலங்களைச் செலுத்தி வருகையில் கரைதெரியும் வண்ணம் கலங்கரைவிளக்கம் தமிழர்களால் அமைக்கப்பட்டது. பூம்புகார்க் கடற்கரையில், இரவில் ஆழமான கடலில் செல்லும் கப்பல்களுக்கு ஒளிகாட்டி உதவிய கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில்,
    
இரவில் மாட்டிய விளங்குசுடர் நெகிழி 
உரவிநீ ரழுவத் தோடுகலங் கரையும் 
துறைபிறக் கொழியப் போகி 

 

தமிழரின் மதம்

பண்டைத் தமிழ் மக்கள், தாம் வாழ்ந்த நிலப்பரப்பையும், வாழ்க்கைச் சூழலையும், தங்கள் பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே இறைவழிபாட்டையும் பின்பற்றினர். மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும், காடு சார்ந்த முல்லை நிலத்தையும், வயல் பகுதியாகிய மருத நிலத்தையும், கடலைஒட்டிய மணல் சார்ந்த நெய்தல் நிலத்தையும், வறட்சியின் காரணமாக மாறி அமைந்த பாலை நிலத்தையும் பின்புலமாகவும், சூழலாகவும் கொண்டு வாழ்ந்தனர். வாழ்ந்த நிலத்திற்கு ஏற்பவே, தாம் வழிபடும் இறைவனையும் அமைத்துக் கொண்டனர்.

 

முருகன் வழிபாடு

தமிழில் ‘முருகு’ என்றால் அழகு என்று பொருள். அழகான இயற்கைக் காட்சி நிறைந்த பகுதி மலையும் மலைச்சாரலும் ஆகும். அந்த அழகை வழிபடும் நிலையில் அந்நிலப்பகுதியின் இறைவனுக்கு ‘முருகன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.

பிற இறை வழிபாடு

முல்லை நிலத்தினர் திருமாலையும், மருத நிலத்தினர் இந்திரனையும், நெய்தல் நிலத்தினர் வருணனையும், பாலை நிலத்தினர் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தையும் வழிபட்டு வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் 
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே   (தொல். அகத்திணை: 5)

 

கொற்றவை வழிபாடு
 

மறம்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த கொற்றவை நிலையும் அகத்திணை புறனே (தொல்: பொருள், புறத்திணை : 62)

வீரத்தினால் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்குத் துடிநிலை என்று பெயர். அந்த வெற்றிக்குத் துணை செய்த தெய்வம் கொற்றவை. அந்தத் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்திட வணங்கும் விழாவுக்குக் கொற்றவை நிலை என்று பெயர். மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து எவை தெரிகின்றன? பண்டைத் தமிழர்களிடையே இறை நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும், பயன் கருதியும் பாதுகாப்புக் கருதியும் இறைவனை வழிபட்டனர் என்பதுவும் தெரிகின்றன.

 

பல சமயங்கள்

இன்று தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வருகின்றனர். சைவம், வைணவம், பௌத்தம், சமணம், இசுலாம், கிறித்துவம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சமயங்களாகும். சங்க காலத்தில், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகியவை மட்டுமே இருந்தன. இவற்றுள் பொதுமையைக் காணும் நோக்கில்,இசுலாமும் கிறித்துவமும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்னரே ஆறாம் நூற்றாண்டில், திருமூலர்,
    ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
     நன்றே நினைமின்!’                                                                       (திருமந்திரம்: 2066)
என்ற தத்துவத்தை வெளியிட்டார். திருமூலர்க்கு முந்தைய திருவள்ளுவரிடமும் இந்தப் பொதுமைத் தன்மையைக் காண முடிகிறது. இதைத் திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து’ எனும் அதிகாரத்தில் காணமுடியும். அதில் எந்த ஒரு தனி சமயத்தின் பெயரையோ, தனி ஒரு கடவுளின் பெயரையோ குறிக்கவில்லை. இந்த நிலையைத் திருவள்ளுவர், திருக்குறளின் இறுதிவரையிலும் பின்பற்றியுள்ளார். 
 
பழந்தமிழர்களின் பெருமைகளையும் அறிவுத்திறனையும் இன்றைய தமிழர்கள் அறிவார்களா என்பதே சந்தேகத்துக்குரிய ஒன்றாக அவர்கள் வாழ்வியல் உள்ளதற்கெல்லாம் காலம் தான் பதில்சொல்லும்

 

References:

 • தமிழர் யார்? நாரண-துரைக்கண்ணன் 1939
 • காரைக்கால் அம்மையார் தென்னிந்திய இசையின் தாய்_ஞானாம்பிகை குலேந்திரன் 1996
 • நம் நாட்டுக் கப்பற்கலை_சாத்தான் குளம் அ.ராகவன்
 • புகழ்பெற்ற கடற்போர்கள்_வி.என்.சாமி 1982
 • கப்பல் சாத்திரம்_T.P.பழனியப்ப பிள்ளை 1950 
 • நாவாய் சாத்திரம்-முனைவர் சீ.வசந்தி 2014
 • தென்கிழக்காசியாவில் சோழர்களின் கடற்பயணங்கள்_ ஹெர்மன் குல்கே,2011
 • இசைக் கலை_பேரா. ஞானாம்பிகை குலேந்திரன்
 • பூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி
 • இரும்பும் உருக்காலையும்_எஸ்.எஸ்.ராமசாமி 1982
 • இரும்பின் கதை, மா.பா.குருசாமி 1975
 • சேலத்து இரும்பு_ச.சரவணன் 1967
 • பழந்தமிழகத்தில் இரும்புத் தொழில், முனைவர் வே.சா.அருள்ராசு 2000
 • Marine Archaeological Investigations on Tamil Nadu Coast, India: An Overview Sundaresh and A.S. Gaur
 • Prof. Aufrecht in his ‘Catalogue of Sanskrit Manu scripts. Aufrecht, Theodor,  1869

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர்

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/25/இன-அரசியல்-14-தமிழர்-இனம்-2946944--3.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-15: இன உணர்வு, இனவாதம், இனவெறி

 

 
race

 

முன்னால் நாம் விவாதித்த மிக நெருக்கமான உறவுகளைக் கொண்ட இனங்களுக்கிடையே ஏற்பட்ட விரிசல்கள் , கலகங்கள் பற்றி பார்ப்போம்.

இன உணர்வு பற்றி யாரும் சிறிதும் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது.

இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை. இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. அது மொழி மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும் காரணத்தால் அது முற்றாக புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும், சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுக்கி வழிவிடவே செய்வன. ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்க முடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுய நலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்து விரிந்த மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே, இனஉணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இனஉணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.


இனவாதம், இன வெறி

மனிதர்கள் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும், காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறு பாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்னைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை கொள்ள ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒரே சமுதாயம் முன்னேறிய “நாகரிக’’ சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு எதிரான இன வெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஜெர்மனியில் ஹிட்லரின் இனவெறி, ஜாரிஸ் ரஷியாவில் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல, இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.

மனிதனது பலவீனங்களைச் சுரண்டும் வர்க்கங்கள் எப்போதும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன உணர்வு இன்றைய சமுதாயத்தின் தனிமனிதனுக்கு ஒரு ஆதாரமாகவே தோன்றினாலும் அது உண்மையில் அவனுடைய பலவீனம். அந்த இன உணர்வை மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்துவதில் பிற்போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன. அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள் இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடியாகப் புலனாகாது. அதற்காக நாம் சோர்ந்துவிட அவசியம் இல்லை. இனவாதிகளும் இனவெறியர்களும் என்றைக்குமே மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக்கொண்டு காலம் வரும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்றால் கலங்குண்ட மனங்களை தெளிய வைக்கும் கடமை நம்முன் உள்ளது. மற்றவர்களின் இனவாதத்தை இலகுவாக அடையாளம் காணும் நாம் நம் மத்தியிலுள்ள இனவாதத்தையும் அடையாளம் காணத் தவறக்கூடாது. இன வாதத்தை ஒழிப்பது என்பது பல முனைப்போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும் உள்ளபடியே மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

 

இனப் பகை 

கலாசார வேறுபாடுகள், முக்கியமாக மத நம்பிக்கைகள் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பானவை, இனங்களினதும் சிறுபான்மை இனப் பிரிவுகளினதும் தனித் தன்மையை வலியுறுத்துகின்றன. அவை இனங்கள் ஒன்றையொன்று பரஸ்பரம் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்க அவசியமில்லை. ஆயினும் உயர்வு தாழ்வு அடிப்படையிலான வேறுபடுத்தல்களுக்கு அவை இடமளிக்கின்றன. இரு இனங்களிடையே சினேகப்பூர்வமான உறவு வளரும்போது இவ்வேறுபாடுகளே கலாசாரப் பரிமாறலுக்கும் அதன் விளைவான கலாசார விருத்திக்கும் துணை நிற்கின்றன. மொழி வேறுபாடுகளுங்கூட, முதலில் இனங்களிடையே உறவுக்குத் தடையாக நின்றாலும், சினேக உறவுகள் தோன்றியதும், தொடர்பின் விளைவாக மொழிகளின் விருத்திக்கு வழி செய்கின்றன, இது வரலாறு நமக்குப் பன்முறை கூறியுள்ள பாடம்.

இனங்களிடையே உள்ள கலாச்சார, மொழி வேறுபாடுகள் இனப்பகைமை வளர்க்கப் பயன் படுத்தப்பட்ட சூழ்நிலைகள் பல உள்ளன. இதற்கு ஆதாரமாக ஐரோப்பாவில் நிலவிய யூத இன விரோத உணர்வுகளையும் ஆப்பிரிக்காவின் தென்முனையில் நிறவெறியையும் விட அதிகமாக எதையும் குறிப்பிடவேண்டியதில்லை.

நவீன வரலாற்றில் எப்போதும் அதிகார வர்க்கங்கள் தம் நலன்களைப் பேணி ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்து வைக்கவே இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. எனவே, இனங்களிடையே வேறுபாடுகள் பற்றிப் பரந்துபட்ட மக்களின் நலன்களை நாடுவோரது கண்ணோட்ட மும் சுரண்டும் வர்க்கங்களின் கண்ணோட்டமும் எதிர்மாறானவை எனலாம்.

வரலாற்று அனுபவங்கள், வரலாறு விளனப்பட்டுள்ள விதம், சமுதாய நெருக்கடிகளின்போது தனிப்பட்டோரதும் குழுக்களினதும் குறுகிய கால நலன்கள் பாதிக்கப்படல் போன்றவை இனங்களிடையிலான முரண்பாடுகளாகத் தோன்றுகின்றன அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. இவை அரசியல் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய சூழ்நிலையில் எவ்வித தயக்கமுமின்றிப் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் நீடிப்பு இனப்பகைக்கு வழிகோலுகிறது.

இனங்களிடையிலும் இனப் பிரிவுகளிடையிலும் நல்லுறவு வளர்த்தல் ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்கு அவசியமானது. ஒரு இனத்தவர் மற்ற இனத்தவர்கட்குரிய குறிப்பான பிரச்சினைகளையும் அவர்களது வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பற்றி ஓரளவு தெளிவு பெறுவதும் பிரச்னைகளை தம் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி மற்றவர்களது கண்ணோட்டத்திலும் காண முயல்வதும் மக்களிடையே இன அடிப்படையிலான முரண்பாடுகளில் பகைமையைக் குறைந்து சினேக இயல்பை வலுவூட்ட உதவும்.

ஒரு சாதியினர் பற்றி இன்னொரு சாதியினர் நடுவில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இவை யாவுமே தீங்கானவை அல்ல. எல்லாமே அடிப்படை இல்லாதனவுமல்ல. ஆனால், சில நேரங்களில் ஓரிரு தனி நபர்கள் பற்றி அனுபவங்கள் ஒரு முழு இனத்துக்குமே உரியனவாக்கப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு மனிதனது ஒரு குறிப்பிட்ட செயல் அவனது முழுமையும் குறிப்பது ஆகிவிடாது. தனி மனிதனது இயல்பு அவன் சார்ந்த முழு இனத்தினது இயல்புமாகி விடாது. பகை முரண்பாடுகளை வளர்க்க விரும்புவோர் ஒருவனது தவறான செயலை வைத்து அவனை அவனுடைய முழு இனத்தையுமே தீயவர்களாகச் சித்தரிக்க முனைகிறார்கள். இது இன வெறியர்க்கும் மதவெறியர்கட்கும், சாதி வெறியர் கட்கும் பொருந்தும். இவர்கள் ‘பகை’ இனத்தின் நல்ல பண்புகளை எல்லாம் மூடி மறைப்பதிலும் அவர்களது நியாயமான பிரச்னைகளை எல்லாம் மறைப்பதிலும் கூடத் தம் பங்கையாற்றவே செய்கிறார்கள்.

 

தொடரும்...

 

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jun/28/இன-அரசியல்-15-இன-உணர்வு-இனவாதம்-இனவெறி-2949135--2.html

Share this post


Link to post
Share on other sites

இன அரசியல்-16: இனவாதம், இனப் படுகொலை

 

 
ina_arasial

 


மனித இயல்புகளையும் அவர்கள் தகுதிகளையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி, இன வேறுபாடுகள் குறிப்பிட்ட இனங்களை மற்றவர்களிலும் உள்ளார்ந்த அடிப்படையில் மேலானவர்களாக ஆக்குகிறது என்னும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கையே இனவாதம் எனப்படுகிறது.

இனவாதம்

இனம் மற்றும் இனவாதத்தின் கருத்துக்கள் உயிரியல் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பினும், அந்த கருத்துக்கள் அடிப்படையில் இனம் பற்றி வரையப்பட்ட எந்த முடிவுகளும் கலாச்சார கருத்தியல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இனவாதம், ஒரு கருத்தியலாக, தனிப்பட்ட மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் ஒரு சமூகத்தில் உள்ளது. கடந்த அரை நூற்றாண்டில் அல்லது மேலை நாடுகளில் "வெள்ளை இனவெறி" மீது குவிந்த ஆராய்ச்சி மற்றும் வேலை அதிகமானதாக இருந்துள்ளது. தனிமனித மற்றும் குழுவான பாரபட்சங்களையும், பெரும்பான்மை அல்லது மேலாதிக்க சமூகக் குழுவில் வழங்கப்பட்ட பொருள் மற்றும் கலாச்சார நன்மைகள் விளைவிக்கும் பாகுபாடு செயல்களையும் உள்ளடக்கிய இனவாதத்தை பரவலாக வரையறுக்க முடியும். "வெள்ளை இனவெறி" என்று அழைக்கப்படுபவை சமூகங்களில் கவனம் செலுத்துகின்றன.

இனம் மற்றும் இனம் உறவுகள் சமூகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் படிப்படியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரும்பாலான சமூகவியல் இலக்கியங்கள் வெள்ளை இனவாதத்தில் கவனம் செலுத்துகின்றன. 

 

boys.jpg

W.E.B.டூ பாய்ஸ்

W.E.B.டூ பாய்ஸ்,( W.E.B.Du Bois) "இருபதாம் நூற்றாண்டின் பிரச்னை வண்ணம் பிரச்சினை’ என்று எழுதினார். "சமூக மற்றும் பொருளாதாரத்தில், இனவாத நடவடிக்கைகளின் விளைவுகள் பெரும்பாலும் வருவாய், வருவாயில், நிகர மதிப்பில், மற்றும் பிற கலாச்சார வளங்களை அணுகுவதன் மூலம் சமத்துவமின்மை இனக்குழுக்கள் இடையே இருக்கும். 

தனி மனித அல்லது அமைப்புரீதியான வடிவங்களுள்ள இனவாதத்தை தடுக்கவும் அது பற்றி பேசவும் உதவக்கூடிய ஒரு நல்ல இன வாத எதிர்ப்பு திட்டத்தை உருவாக்கலே ஒரு நல்ல தொடக்கமாகும்.  அது பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:

 • பொருத்தமான சூழலில் இனம் சம்பந்தமான எண்ணிக்கைத் தரவுகளைச் சேர்த்தல்.
 • சரித்திர ரீதியான இனம் சம்பந்தமான பிரதிகூலங்களைப் பதிதல்.
 • தீங்கு விளைவிக்கக் கூடிய வேலையிடக் கலாசாரத்தை, கொள்கைகளை, செயல்முறைகளை, தீர்மானம் எடுக்கும் படிமுறைகளை மீட்டல்.
 • இன வாதத்துக்கும், இனப்பாகுபாட்டுக்கும், துன்புறுத்தலுக்கும் எதிரான கொள்கைகளையும் கல்வித்திட்டங்களையும் உருவாக்கலும் செயற்படுத்தலும்.
 • இன வாதத்துக்கு எதிரான திட்டம், அமைப்புக்கள் சம உரிமையையும், பல்வகைமை லட்சியத்தையும் விருத்தி செய்தலைச் சுலபமாக்குவதுடன்  நல்ல தொழில் உணர்வையும் கொடுக்கும். 


இனப் படுகொலை (Genocide)

மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது போலந்துச் சட்ட வல்லுனரான ராஃபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். 


 

Raphael_Lemkin.jpg

ராஃபேல் லெம்கின்

1933-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடுகள் கூட்டமைப்பின் (League of Nations), சட்ட அவையின் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் தொடர்பான மாநாட்டில், லெம்கின் ஒரு முன்மொழிவைச் செய்தார். லெம்கின் “காட்டுமிராண்டித் தனமான குற்றம்“ (Crime of Barbarity) உலகச் சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்னும் பொருளில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக் குற்றம் தொடர்பான கருத்துரு பின்னர் இனப்படுகொலை தொடர்பான எண்ணமாக உருவானது. இது, 1933 ஆம் ஆண்டில், ஈராக்கில் அசிரியர்கள் கொலை செய்யப்பட்ட அநுபவத்தில் இருந்து உருவானதாகும். லெம்கினுக்கு, ஈராக்கில் நடைபெற்ற இச் சம்பவம், முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. அந்த ஆண்டிலேயே லெம்கின், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கும்படியான தனது முன்மொழிவை, நாடுகள் கூட்டமைப்பின் சட்ட அவையிடம் கையளித்தார். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதுடன், அப்போது நாஸி ஜெர்மனியுடன் சமாதானம் செய்ய்துகொள்ள விரும்பிய போலந்து அரசும், லெம்கினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் லெம்கின் தொடர்ந்தும் தனது நோக்கங்களுக்காகப் பல வழிகளிலும் போராடி வந்தார். லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு உதவின.

http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/jul/02/இன-அரசியல்-16-இனவாதம்-இனப்-படுகொலை-2951800.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now