யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

Recommended Posts

அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

 
ஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது?

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். ‘சசிகலா குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கும்விதமாக ஆணையம் செயல்படுகிறது’ என புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், ஆணையத்தின் விசாரணை அப்போலோ மருத்துவமனையை சிக்கவைக்கப் பார்க்கிறது. ‘தோண்டத் தோண்டப் புதையல்’ போல இந்த விசாரணையில் புதுப்புது பூதங்களாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதில் லேட்டஸ்ட் பூதம்... ஜூலை 4-ம் தேதி ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவமனை டாக்டர் சினேகாஸ்ரீ தந்த வாக்குமூலம். 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்குச் சென்று, ஜெயலலிதாவை அழைத்துவந்த ஆம்புலன்ஸில் அவருடன் வந்தவர் சினேகாஸ்ரீ. ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, ஜெயலலிதாவை சேரில் அமர்த்தியிருந்தனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார். முதலுதவி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றினோம். சசிகலாவும் டாக்டர் சிவக்குமாரும் உடன் வந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயேதான் இருந்தார்’’ என்று சினேகாஸ்ரீ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

p6_1530859522.jpg

‘மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயேதான் இருந்தார்’ என்று சினேகாஸ்ரீ சொல்கிறார். ஆனால், சசிகலா தாக்கல் செய்த தனது பிரமாணப் பத்திரத்தில், ‘‘ஆம்புலன்ஸில் வரும்போது ஜெயலலிதா கண்விழித்துப் பார்த்து, ‘என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்’ என்று கேட்டார்’’ எனக் குறிப்பிட்டிருந்தார். டாக்டர் சிவக்குமாரோ, ‘‘மருத்துவமனைக்கு வந்ததும் ஜெயலலிதா என்னை அழைத்து, ‘நான் எங்கே இருக்கிறேன்’ என்று கேட்டார்’’ என சாட்சியம் அளித்திருந்தார். ஜெயலலிதாவோடு ஆம்புலன்ஸில் வந்த மூன்று பேரும் மூன்றுவிதமாகக் கூறியிருப்பது பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜூலை 4-ம் தேதி மூன்றாவது முறையாக ஆணையத்தில் ஆஜரானார். ‘‘ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட மனவருத்தத்தில் போயஸ் கார்டன் செல்வதையே நிறுத்திவிட்டேன். அதன்பிறகு என் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு இல்லத்தை நடராஜன் என்பவர் பார்த்துவருகிறார். கொடநாடு எஸ்டேட் தொடர்பாக சசிகலாவிடமே நடராஜன் பேசிக்கொள்வார்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். ‘‘உங்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காகத்தான் சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திகேயனை மீண்டும் பணியில் சேர்த்தார்களா?’’ என்ற கேள்விக்கு, ‘‘அதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது’’ என்று பூங்குன்றன் பதில் அளித்துள்ளார்.

அதே நாளில் ஆஜரான கார்த்திகேயனிடம் குறுக்கு விசாரணை நடத்தியது சசிகலா தரப்பு. அப்போது அவரிடம், ‘‘2011-ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பிறகு எதற்காக மீண்டும் போயஸ் கார்டனில் சேர்க்கப்பட்டீர்கள்?’’ என அவரிடம் கேட்கப்பட்டது. ‘‘நான் வேலை வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதனால் வேலை கொடுத்தார்கள்’’ என்றார் அவர். மேலும், ‘‘ஒரு தடவை முடிவு எடுத்து, அது தவறாக முடிந்தால், அதை மாற்றிக்கொள்ளும் குணம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதேநேரம் தான் எடுத்த முடிவு சரிதான் என்றால், தவறு செய்தவர்களைக் கடைசிவரை தவறு இழைத்தவர்களாகவே கருதுவார்’’ என்று சொன்னார் கார்த்திகேயன். சசிகலாவை வெளியேற்றிய ஜெயலலிதா, பின்னர் அந்த முடிவு தவறு என்பதை உணர்ந்து மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கொண்டதை ஆணையத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவே, கார்த்திகேயனை இப்படி சசிகலா தரப்பு சொல்ல வைத்திருக்கிறது.

p6a_1530859543.jpg

ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன், ‘‘நீங்கள் சசிகலாவுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்கிறீர்களா? உண்மையை மறைக்கிறீர்களா?’’ என்று கார்த்திகேயனிடம் கேட்க, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ‘‘சசிகலாவைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று கேள்விகளை எழுப்பக்கூடாது’’ என்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பாகவே கடும் வாதம் செய்துள்ளார்கள்.

ஜூலை 5-ம் தேதி ஆணையத்தில் திவாகரனின் மகன் ஜெயானந்த் ஆஜரானார். ‘‘என் தந்தை திவாகரன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து கீழ்தளத்தில்தான் இருந்தார். ஜெயலலிதா மற்றும் சசிகலாவை அவர் பார்க்கவில்லை. ஆனால், டி.டி.வி.தினகரன் சசிகலாவை பலமுறை சந்தித்துள்ளார். 2011-ம் ஆண்டு கொடநாட்டில் ஜெயலலிதாவைப் பார்த்தேன். அதன்பிறகு, 2016-ம் ஆண்டு மருத்துவமனையில் இருந்தபோது கண்ணாடி வழியாகப் பார்த்தேன்’’ என்ற அவர் சொல்லியிருக்கிறார்.

அதே நாளில் அப்போலோ மருத்துவமனையின் எக்கோ டெக்னீஷியன் நளினி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ‘‘2016, டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு எக்கோ பார்த்த டெக்னீசியன் நான். அன்றைய தினம் மாலை 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், இதயம் செயலிழப்புக்குப்பின் சோதிக்கும் போஸ்ட் கார்டியாக் எக்கோ பார்க்க வேண்டும் என்றும் சொல்லி என்னை அழைத்தார்கள். நான் சென்று பார்த்தபோது, மசாஜ் மூலம் மீண்டும் ஜெயலலிதாவின் இதயத்தைச் செயல்பட வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான் எக்கோ எடுத்தேன். அதில் இதயம் செயலிழந்துவிட்டது தெரியவந்தது’’ என்றார் நளினி. அப்போது ஆணைய வழக்கறிஞர்கள், ‘டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக’ அப்போலோ அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டி நளினியிடம் கேள்வி எழுப்பினர். ‘‘இது தொடர்பாக பெரிய டாக்டர்கள் சொல்லி அப்படி யாராவது எழுதியிருக்கலாம்’’ என நளினி சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில்கூட முரண்பட்ட வாக்குமூலங்கள் தரப்படுவதால், அப்போலோ மருத்துவமனை சிக்கவைக்கப்படுகிறது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • கடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாதாரணமாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படின் கட்டாயமாக 4 வருடங்கள் சேவையாற்றிய பின் இடமாற்றம் பெற முடியும். சேவையின் மூப்பின் அடிப்படையில் தான் அவர் புதிய நிலையத்தினை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்த விசேட இடாற்ற பட்டியல் மூலம் ஒருவருட காலத்தில் இடமாற்றம் பெறும் வாய்ப்புக்கிடைக்கிறது. இதனால் சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்தபின் சிறிது காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதனால் சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிப்படைகின்றன என வடக்கு கிழக்கினை சேர்ந்த வைத்தியர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் வடமாகாண அளுநர் மற்றும் எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விசேட பட்டியலினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்து எமது சுகாதார சேவைகள் பாதிப்புறாவண்ணம் மக்களுக்கு கிடைக்க வழிசமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/124598
  • விளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த  பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம். 
  • தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களையும் உளவுகள் நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் சிறிலங்காவிற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜெனீவா அமர்வு உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் பிரதமர் ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று காப்பாற்றி வருகின்றது. இந்த நிலையில் வவுனியா - பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் 884 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பிலான தமது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை நிலவரங்களை வெளியிட ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்கும் நிலையில், இனங்காணப்பட்டு வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இறந்திருக்கலாம் என கவலையுடன் கூறிய தாய், இராணுவத்திடம் தன்னை போல பல தாய்மார்கள் பிள்ளைகளை கையளித்து விட்டு கண்ணீர் சிந்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரசு தமக்கு ஒருபோதும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள், அதனால் சர்வதேச சமூகமே நேரடியாக தலையிட்டு தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். https://www.ibctamil.com/srilanka/80/124588
  • அமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம்!   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார்.   அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.   இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.       http://eelamurasu.com.au/?p=20363&fbclid=IwAR1c2yk8YqbeDcx8RXjZeVd0wGU7ZXkFtWXF0T1KcBPf_BWKwszwszhfg4U      
  • மொத்தத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் இதனூடாக ஊடுருவும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதால் இந்த ரெட் க்றசென்ட் குழுக்களை தடை செய்வது நாட்டின் அமைதிக்கு நல்லது.