Jump to content

``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம்


Recommended Posts

``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம்

 
 
 

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவரின் கால்பந்தாட்ட திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த உலகக்கோப்பையிலும் அவரின் விளையாட்டை நாடுகள் கடந்து ரசித்தனர். உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். 

ரொனால்டோ

அதாவது கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக முன்னரே பல தகவல்கள் வந்தாலும்,  33 வயதான ரொனால்டோ தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுவார் என நினைத்திருந்த வேளையில், அவரின் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். அவர்கள் மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். 

 

 

கடந்த 2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்த ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகள் ரியல் மாட்ரிட் அணிக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தார். இதுவரை ரியல் மாட்ரிட்  அணிக்காக 438 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 451 கோல்கள் அடித்துள்ளார். மேலும், இரண்டு முறை லா லீகா சாம்பியன், நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரின் சாம்பியன், மூன்று கிளப் உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் என அந்த அணியை உச்சம் தொட வைத்தார். தனிப்பட்ட முறையிலும் ரொனால்டோ ரியல் மாட்ரிட்  அணிக்காக விளையாடும்போது பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார். இதனால் ரொனால்டோ என்றால், ரியல் மாட்ரிட்  ரியல் மாட்ரிட்  என்றால் ரொனால்டோ என ரசிகர்கள் கொண்டாடினர். இதனால்தான் அவரின் இந்த முடிவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
 
இந்நிலையில், ரொனால்டோ ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``இத்தனை காலம் ரியல் மாட்ரிட் அணியிலும், மாட்ரிட் நகரத்திலும் நான் இருந்ததுதான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலம். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான காலகட்டம் வந்து விட்டதாக நம்புகிறேன். அதனால்தான் இந்த மாற்றம். ரியல் மாட்ரிட் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றைத் தான். எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள். 

 
 

 

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய 9 வருடங்களும் பொற்காலம். இங்கே கால்பந்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினேன். களத்திலும் ஓய்வு அறையிலும் எனக்குக் கிடைத்த சிறந்த சக வீரர்களுக்கும் நன்றி. ரியல் மாட்ரிட் கிளப், மருத்துவக்குழு, தொழில்நுட்பக்குழு உட்பட அனைவருக்கும் நன்றி” என்றார். 

ரொனால்டோ இத்தாலியன் கிளப் அணியான யுவெண்டஸ் அணிக்காக 112 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 902 கோடி ரூபாய். 

https://www.vikatan.com/news/sports/130449-ronaldo-letter-to-real-madrid-fans.html

Link to comment
Share on other sites

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

AFP-15-696x418.jpg
 

ரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது மிக விலை உயர்ந்த வீரர் என்ற பெருமையுடன் ஜுவண்டஸ் கழகத்தில் இணைந்துள்ளார்.

 

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற நிலையில் அதன்…

 

இந்த இரு கழகங்களுக்கும் இடையில் 112 மில்லியன் யூரோ (சுமார் 20 பில்லியன் ரூபாய்) பெறுமதியான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் போர்த்துக்கல்லைச் சேர்ந்த முன்கள வீரரான ரொனால்டோ இத்தாலி சம்பியன் அணியுடன் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒன்பது ஆண்டுகள் ரியெல் மெட்ரிட்டில் ஆடிய 33 வயதுடைய ரொனால்டோ நான்கு சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்றுள்ளார்.

எனது வாழ்வில் புதிய நிலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நேரம் வந்து விட்டது, அதனாலேயே என்னை பரிமாற்றம் செய்யும்படி கழகத்தை கேட்டுக்கொண்டேன் என்று ரொனால்டோ அறிவித்துள்ளார்.

உலகின் மிக விலை உயர்ந்த வீரராக பிரேசில் முன்கள வீரர் நெய்மார் கடந்த ஆண்டு ஓகஸ்டில் பார்சிலோனா கழகத்தில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்கு 222 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார். அதேபோன்று, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்காக சோபித்த பிரான்ஸ் முன்கள வீரர் கைலியன் ம்பாப்பே இரண்டாவது அதிக தொகையாக கடந்த மாதம் அந்த கழகத்தில் 180 மில்லியன் யூரோவுக்கு நிரந்தர ஒப்பந்தமானார்.

 

‘எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் எனது மனதில் அப்படியே இருக்கிறது’ என்று…

 

அதேபோன்று, பிரேசில் மத்தியகள வீரர் பிலிப் கோடின்ஹோவை பார்சிலோனா கழகம் கடந்த ஜனவரியில் 142 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், ரொனால்டோவின் பரிமாற்றம் குறித்த அறிவிப்பை ஐரோப்பாவின் இரு பிரமாண்ட கழகங்களும் செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்டன. ஐந்து முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ 2008 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து அப்போதைய மிகப்பெரிய தொகையான 106 மில்லியன் டொலர்களுக்கு ரியெல் மெட்ரிட்டில் ஒப்பந்தமானார்.

அது தொடக்கம் அவர் ஸ்பெயின் கழகத்திற்காக அனைத்து போட்டிகளிலும் 451 கோல்களுடன் அதிக கோல்கள் பெற்றவராக பதிவானதோடு இரண்டு லா லிகா பட்டங்கள் மற்றும் நான்கு சம்பியன்ஸ் லீக் பட்டங்களை அந்த கழகத்திற்காக வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக்கில் கடந்த ஆறு பருவங்களில் அதிக கோல் பெற்றவராக இருந்து வருபவரும் நடப்பு பல்லோன் டிஓர் வெற்றியாளருமான ரொனால்டோவை தன்னகப்படுத்திக் கொண்டிருப்பது இத்தாலி கழகத்தின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஜுவண்டஸ் அணி 2012 தொடக்கம் இத்தாலியின் பலம்மிக்க கழகமாக இருந்து வருகின்றபோதும் 1996 தொடக்கம் அந்த அணியால் ஐரோப்பாவின் உயரிய பட்டத்தை வெல்ல முடியவில்லை.  

இதன்படி ஸ்பெயினின் பிரதான தொடரான லா லிகா நெய்மாரை அடுத்து இரண்டாவது உலக நட்சத்திர வீரரையும் இழந்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் பெற்றவரான ரொனால்டோவுக்கு விடைகொடுக்கும் வகையில் ரியெல் மெட்ரிட் தனது இணையதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வீரர் பரிமாற்றத்திற்கு ரொனால்டோ கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

உலகக் கால்பந்திலும் எமது கழக வரலாற்றிலும் மிகச் சிறப்பான ஒரு யுகத்தை தந்து உலகில் மிகச் சிறந்தவர் என நிரூபித்த வீரர் ஒருவருக்கு ரியல் மெட்ரிட் இன்று தனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது என்று அந்த கழகம் குறிப்பிட்டுள்ளது.

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக ஈரான் தனது முதல் போட்டியில் ஆடியபோது அந்த…

ஐரோப்பிய பிரீமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தியபோதும் ரியல் மெட்ரிட் உள்நாட்டு தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த லா லிகா பருவத்தில் சம்பியனான பார்சிலோனாவை விடவும் அந்த அணி 17 புள்ளிகள் பின்தங்கியமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் 33 தடவைகள் லா லிகா கிண்ணத்தை வென்றிருக்கும் ரியல் மெட்ரிட் அதன் புதிய முகாமையாளர் ஜூலன் லொபடிபுயின் கீழ் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.