Jump to content

இந்தியா-இங்கிலாந்து.... ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

 

 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் நாளை நடக்கிறது. #ENDvIND #INDvEND

 
 
 
 
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
 
நாட்டிங்காம்:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

கடைசியாக 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இங்கிலாந்தில் விளையாடிய போது 5 போட்டிகொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல தற்போதைய இந்திய அணியும் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

யசுவேந்திர சாஹல்- குல்தீப் யாதவின் பந்துவீச்சை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.

பேட்டிங்கில் கேப்டன் கோலி, ரோகித்சர்மா, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் தொடரில் வாய்ப்பு கிடைக்காத தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடரிலாவது இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இங்கிலாந்து உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் திகழ்கிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 97-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 96 ஆட்டத்தில் இந்தியா-52-ல், இங்கிலாந்து-39-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, டோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோரூட், பென்ஸ்டோகஸ், ஜேக்பால், டாம் குர்ரான், புளுன்கெட், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட். #ENDvIND #INDvEND

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/11122046/1175790/india-vs-england-1st-odi-match-on-tomorrow.vpf

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கு எதிராக தோனிக்காக காத்திருக்கும் சாதனைத்துளிகள்: சச்சின், திராவிட், கங்குலியுடன் இணைகிறார்

 

 
Dhoni

தோனிக்காகக் காத்திருக்கும் சாதனைகள். | ஏ.எப்.பி.

இங்கிலாந்துக்கு எதிராக முக்கியமான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (12) தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீரர்கள் சிலபல மைல்கல்லை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தோனி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுக்க 33 ரன்கள் தேவை. நாளை நாட்டிங்கம், டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும் போட்டியில் தோனி இந்த ரன்களை எடுத்தாரென்றால் சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர் அடங்கிய இந்திய 10,000 ரன்கள் கிளப்பில் தோனி இணைவார்.

 
 

இந்திய அளவில் 4வது வீரராக 10,000 ரன்கள் கிளப்பில் தோனி இணையும் அதே வேளையில் உலக அளவில் 12வது வீரராக 10,000 கிளப்பில் இணைவார்.

dadajpg

கங்குலி, திராவிட், சச்சின், தோனி. | படம்: வி.சுப்ரமணியம்.

 

சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் சங்கக்காரா 14234 ரன்களுடனும், ரிக்கி பாண்டிங் 13,074 ரன்களுடனும் சனத் ஜெயசூரியா 13,430 ரன்களுடனும் மகேலா ஜெயவர்தனே 12,650 ரன்களுடனும் இன்சமாம் உல் ஹக் 11,739 ரன்களுடனும், ஜாக் காலீஸ் 11,579 ரன்களுடனும், கங்குலி 11,363 ரன்களுடனும் திராவிட் 10,889 ரன்களுடனும், லாரா 10,405 ரன்களுடனும், திலகரத்ன தில்ஷன் 10290 ரன்களுடனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சங்கக்காராவுக்கு அடுத்தபடியாக தோனி 10000 ரன்கள் மைல்கல்லை எட்டும் 2வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாகத் திகழ்வார்.

மேலு இதுவரை ஒருநாள் போட்டிகளில் 297 கேட்ச்களை எடுத்துள்ள தோனி இன்னும் 3 கேட்ச்களை எடுத்தால் 300 கிளப்பில் இணைவார். 318 ஒருநாள் போட்டிகளில் தோனி 107 ஸ்டம்பிங்குகளுடன் முதலிடம் வகித்து வருகிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்றையும் சேர்த்து தோனி 785 டிஸ்மிசல்கள் செய்துள்ளார், மார்க் பவுச்சர் 998, ஆடம் கில்கிறிஸ்ட் 905.

http://tamil.thehindu.com/sports/article24390376.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதல்

 

 
TRENTKB

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இந்நிலையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டி 20 தொடரில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் மிரட்ட காத்திருக்கின்றனர்.

 

கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டித் தொடரிலும் 4-வது வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பார்முடன் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது.

டி 20 தொடரில் கடைசி இரு ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படத் தவறிய ஷிகர் தவண் மீண்டும் பார்முக்கு திரும்ப முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமாருடன், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் பலம் சேர்க்கக்கூடும்.

டி 20 தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டித் தொடரில் பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இன்றைய போட்டி நடைபெறும் மைதானத்தில் தான் இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தது. இதனால் அந்த அணி மீண்டும் ஒரு முறை மிரட்டக்கூடும். ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளிக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் லயிம் பிளங்கெட், ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட், அடில் ரஷித், மொயின் அலி ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாகி உள்ள னர்.

http://tamil.thehindu.com/sports/article24395947.ece

Link to comment
Share on other sites

டாஸ் வென்று இந்தியா பீல்டிங்: முதல் ஓவரிலேயே ‘ட்ராமா’ தொடக்கம்: தவறு செய்தார் கோலி

 

 
kohli

அணியை களத்துக்கு வழிநடத்திச் செல்லும் விராட் கோலி. | ஏ.எப்.பி.

ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார், அணியில் புவனேஷ்வர் குமார் இல்லை. சித்தார்த் கவுல் வந்துள்ளார்.

இந்திய அணி: ரோஹித், தவண், ராகுல், கோலி, ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், சாஹல்.

 

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, டேவிட் வில்லே, லியாம் பிளெங்கெட், ரஷீத், மார்க் உட்.

முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீச ஆஃப் ஸ்டம்பில் வீசிய முதல் பந்தே ஜேசன் ராய்க்கு எட்ஜ் எடுக்க ஒரே ஸ்லிப்பை வைத்து வீசியதால் ரெய்னா வலது புறம் டைவ் அடித்தும் பயனில்லை பந்து பவுண்டரிக்குப் பறந்தது. ரெய்னா டைவ் கொஞ்சம் தாமதம். என்ன செய்வது அவர் யோ-யோ பாஸ் செய்வதராயிற்றே? இந்த வயதில் இந்த கேட்சைப் பிடிப்பது கடினம்தான், யோ-யோவில் தேறினால் கேட்ச் எடுப்பார்கள் என்று யார் கூறியது?

பேர்ஸ்டோவுக்கு மட்டையின் வெளிப்புற விளிம்பை நூலிழையில் தவற விட்டுச் சென்றது உமேஷின் அற்புத பந்து ஒன்று.

ஆனால் கடைசி பந்தில் ஜானி பேர்ஸ்டோ பின்கால்காப்பில் வாங்கினார், விக்கெட் முன்னால் கால் என்று கடும் முறையீடு செய்தனர் இந்திய அணியினர் நடுவர் நாட் அவுட் என்றார், ரீப்ளேயில் மட்டை உள்விளிம்பில் படவில்லை என்று காட்டியது. விராட் கோலி ரிவியூ செய்திருக்க வேண்டும், செய்திருந்தால் அது பிளம்ப் எல்.பி. அவுட் கொடுத்திருப்பார்கள், ஆனால் அவர் அதற்கு எதிராக முடிவெடுத்து விட்டார். இதனால் அபாயகரமான ஜானி பேர்ஸ்டோ தப்பினார்.

அதன் பிறகு 3 அரக்க பவுண்டரிகளைத்தான் அடித்துள்ளார் பேர்ஸ்டோ, கோலியின் தவறு எதில் போய் முடியும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article24399568.ece

Link to comment
Share on other sites

குல்தீப் யாதவ் 6/25; ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதங்கள் எடுக்க இங்கிலாந்து 268 ரன்களுக்குச் சுருண்டது

 

 
kuldeep2jpg

குல்தீப் யாதவ் 6 விக். பாராட்டும் கேப்டன் கோலி. | ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்கமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியினால் முதலில் பேட் செய்ய தைரியமாக அழைக்கப்பட்ட இங்கிலாந்து மீண்டும் குல்தீப் சுழலில் சிக்கித் திணறி ஒருவழியாக 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், டி.ஜே.வில்லே ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 38 டாட் பால்கள், சாஹல் 10 ஓவர்களில் 51 ரன்கள் முக்கிய விக்கெட்டான மோர்கனைக் காலி செய்தார். வேகப்பந்து வீச்சுக் கவலை தொடர்கிறது, உமேஷ் யாதவ் 70 ரன்களையும் சித்தார்த் கவுல் 62 ரன்களையும் பாண்டியா 7 ஓவர்களில் 47 ரன்களையும் கொடுத்து 179 ரன்களை 26.5 ஓவர்களில் விட்டுக் கொடுத்தனர்.

   
 

ஹர்திக் பாண்டியாவை மோர்கன் ஒரு சிக்ஸ் பவுண்டரி என்று கவனிக்க பட்லர், ஸ்டோக்ஸும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இவரை ஆட கோலி ஒரு முனையில் பாண்டியாவின் கோட்டாவை முடிக்க ரெய்னாவை 3 ஓவர்கள் வீசச் செய்தார். அவரும் 3 ஓவர் 1 மெய்டனுடன் 8 ரன்களைத்தான் விட்டு கொடுத்து சிக்கனம் காட்டினார்.

குல்தீப் யாதவ்வின் கை சாதுரியங்களை விட அவர் வீசும் வேகம் இங்கிலாந்துக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது என்றே கூற வேண்டும், தென் ஆப்பிரிக்காவில் வீசியது போலவே பந்துகள் மணிக்கு 60-70 கிமீ வேகம்தான், இது இங்கிலாந்து வீரர்களின் பேட் ஸ்பீடுக்குப் பொருத்தமாக இல்லை. கொஞ்சம் காத்திருந்து ஆட வேண்டும். அதற்காக பேர்ஸ்டோ, ஜோ ரூட் போல் பின் காலில் சென்று பந்தை அவர் ஸ்கிட் செய்ய அனுமதிக்கக் கூடாது.

73/0 என்று 11வது ஓவரில் இருந்த இங்கிலாந்து குல்தீப்பின் முதல் ஸ்பெல் சுழலில் சிக்கி 105/4 என்று ஆனது. பட்லர், பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை 198 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், பட்லர் 51 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். மாறாக பென் ஸ்டோக்ஸ் கட்டிப்போடப்பட்டார், 103 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அவர் 53 எடுத்தார். இருவரும் ஒருவேளை நின்றிருந்தால் ஸ்கோரை 300 பக்கம் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் பட்லர் லெக் திசையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து குல்தீப்பிடம் வெளியேற, பென் ஸ்டோக்ஸ் தன் பொறுமையை இழந்து தவறாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆட பேக்வர்ட் பாயிண்டில் சித்தார்த் கவுல் இடது புறம் டைவ் அடித்து பிரமாதமான கேட்சை எடுத்தார், குல்தீப் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் எடுத்த 6வது விக்கெட் டி.ஜே.வில்லே. இந்த விக்கெட்டுதான் ஒரு சாதாரண பந்தில் எடுக்கப்பட்டது, மற்றபடி குல்தீப் யாதவ்வை இங்கிலாந்து புரிந்து கொள்வார்களா என்ற சந்தேகமே எஞ்சுகிறது.

கடைசியில் மொயின் அலி உமேஷ் யாதவ்வை ஒரு அருமையான புல்ஷாட் சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று விளாசி 24 ரன்களையும் அடில் ரஷீத் 16 பந்துகளில் 22 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து ஒருவழியாக 268 ரன்கள் எடுத்தது. ஆனால் மொயின் அலி, அடில் ரஷீத் இருவருமே உமேஷிடம் காலியாயினர். கடைசியில் பிளங்கெட் 10 ரன்களில் ரெய்னா, தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆனார்.

முன்னதாக...

மீண்டும் இங்கிலாந்தைத் திணறடிக்கும் குல்தீப்; தவறைச் சரி செய்த கோலி; ரிவியூவில் பேர்ஸ்டோ அவுட்

நாட்டிங்கமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்துக்குப் பிறகு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

kuldeepjpg

இங்கிலாந்தைச் சரித்த குல்தீப். | ஏ.எப்.பி.

 

முதலில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ இணைந்து 10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 73 ரன்களை விளாச, 11வது ஓவரில் ஸ்ட்ரைக் பவுலர் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார். 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அபாயகரமாகத் திகழ்ந்த ஜேசன் ராய் முன் கூட்டியே திட்டமிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை நேராகக் கவரில் அடித்தார். அதற்கு முன்னதாக ஸ்லிப் நகர்த்தப்பட்டு லெக் ஸ்லிப் வைக்கப்பட்டது, இதனால் ரிவர்ஸ் ஷாட் முயன்றார் ஜேசன் ராய் கேட்ச் ஆனது.

அடுத்ததாக ஜோ ரூட் 6 பந்துகளில் 3 ரன்களே எடுத்த நிலையில் குல்தீப்பின் உள்ளே வரும் பந்தை புரிந்து கொள்ளவில்லை, கால்காப்பைத் தாக்க பிளம்ப் எல்.பி. வெளியேறினார்.

ஜானி பேர்ஸ்டோ முதல் ஓவரில் ரிவியூ செய்யப்படாமல் தப்பித்தார், ஆனால்  ஜோ ரூட் அவுட் ஆன அதே ஓவரின் 5வது பந்தில் ஜானி பேர்ஸ்டோ கூக்ளியை கணிக்கத் தவறி கால்காப்பில் வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்றனர் ஆனால் இம்முறை கோலி தவறு செய்யவில்லை, ரிவியூ கேட்டார் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் பேர்ஸ்டோ நடையைக் கட்டினார்.

தற்போது இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய புதிய பேட்ஸ்மென்கள் களம் கண்டுள்ளனர், குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் 8 ரன்கள் 3 விக்கெட்டுகள் இதுவரை.

http://tamil.thehindu.com/sports/article24399568.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - ரோகித், கோலியின் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

 

 

அ-அ+

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. #ENGvIND #IndiavEngland

 
 
 
 
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - ரோகித், கோலியின் அதிரடியால் இந்தியா அபார வெற்றி
 
நாட்டிங்காம்:
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.
 
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தொடர்ந்து ஜோ ரூட்டையும், பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார். 
 
5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்சும் ஜோஸ் பட்லரும் ஜோடி சேர்ந்தனர். ஜோஸ் பட்லர் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.
 
அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
 
201807122358232540_1_yadav-2._L_styvpf.jpg
 
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களும், சாஹல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆடினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கினர்.
 
அணியின் எண்ணிக்கை 59 ஆக இருந்தபோது ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
 
ஒருபுறம் ரோகித் சர்மா சதமடிக்க, மறுபுறம் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 167 ரன்கள் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி 75 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
 
இறுதியில், இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்னுடனும், ராகுல் 9 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND #IndiavEngland

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/12235823/1176136/india-beat-england-by-8-wickets-in-firtst-one-day.vpf

Link to comment
Share on other sites

கிரிக்கெட்: குல்தீப் சுழலில் சிக்கிய இங்கிலாந்து; ரோஹித் அதிரடி சதம் - 8 தகவல்கள்

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் விக்கெட்டை இழக்க, ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதம் மற்றும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியை வென்றது.

குல்தீப்படத்தின் காப்புரிமைANTHONY DEVLIN

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது.

ட்ரென்ட் பிரிட்ஜில் நேற்று நடத்த போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் முத்திரை பதித்தார். இந்திய அணி 59 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே போட்டியை வென்றது.

1. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இவ்விருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் காட்டினர். ஓவருக்கு சுமார் ஏழு ரன்கள் வீதத்தில் ஆடினர். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டினார் ஜேசன் ராய். முதல் பத்து ஓவர்களில் 71 ரன்கள் குவித்தது இங்கிலாந்து.

2. ஆட்டத்தின் 11-வது ஓவரிலேயே ஐந்தாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தினார் விராட் கோலி. குல்தீப் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஜேசன் ராய் வீழ்ந்தார். அவர் 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். குல்தீப்பின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் பேர்ஸ்டோவும் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். 13 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 82/3 என்றானது.

ஜேசன் ராய்.படத்தின் காப்புரிமைANTHONY DEVLIN

3. குல்தீப் பந்து வீசத் துவங்கிய பிறகு இங்கிலாந்தின் ரன் வேகம் மந்தமானது. சாஹல் இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மோர்கன் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் மிகவும் கவனமாக ஆடினர். ஒரு பக்கம் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு பக்கம் பட்லர் 45 பந்தில் அரை சதம் எடுத்தார். பட்லர் தொடர்ச்சியாக அடிக்கும் மூன்றாவது அரை சதம் இது. ஆட்டத்தின் 39-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பட்லர் அவுட் ஆனார்.

ஜாஸ் பட்லர்படத்தின் காப்புரிமைGARETH COPLEY

4. மிகப்பொறுமையாக விளையாடிய ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரை சதத்தை பூர்த்திசெய்தார். 17 ஆண்டுகளுக்கு முன்னர் காலிங்வுட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 108 பந்தில் அரை சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து வீரர் ஒருவர் அடித்த மிக பொறுமையான அரை சதம் இதுவே. பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் அரை சதம் அடித்த கையோடு குல்தீப் பந்தில் வீழ்ந்தார்.

5. தனது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் மற்றும் கடைசி பந்தில் டேவிட் வில்லியை அவுட் ஆக்கினார் குல்தீப். இதன் மூலம் நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஒருவரின் நான்காவது சிறந்த பந்துவீச்சு இது.

இடது கை மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் (left arm wrist spinner) ஒருவர் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்துவது வரலாற்றில் இதுவே முதல்முறை. இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் பெற்றார். முன்னதாக 2004-ல் அஃப்ரிடி 11 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் நேற்றைய போட்டியில் பெற்றார்.

பென் ஸ்டோக்ஸ்படத்தின் காப்புரிமைPHILIP BROWN

6. இங்கிலாந்து பேட்டிங்கின் போது 34 ஓவர் முதல் 47-வது ஓவருக்கு இடையில் ஒரு பௌண்டரி கூட விளாசப்படவில்லை. 73 பந்துகள் பௌண்டரி இல்லாமல் ஆட்டம் நகர்ந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் அதிரடியாக ஆடி முடிந்த பங்களிப்பைச் செய்ததால் இங்கிலாந்தின் ஸ்கோர் 268-ஐ எட்டியது.

7. இலக்கை துரத்தும்போது இந்தியாவின் முதல் விக்கெட்டாக தவான் வீழ்ந்தார். அவர் 27 பந்துகளில் எட்டு பௌண்டரியோடு 40 ரன்கள் விளாசியிருந்தார். அதன்பின்னர் அணித்தலைவர் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினர். 82 பந்துகளில் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார். இது அவரது 18-வது சதமாகும்.

இந்தியா விளையாடிய கடைசி ஒன்பது போட்டிகளில் எட்டு போட்டியில் இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சதம் எடுத்துள்ளனர். இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு மொஹாலியில் நடந்த போட்டியில் ரோஹித் இரட்டை சதம் எடுத்தார். விசாகப்பட்டினம் போட்டியில் தவான் நூறு ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டர்பன், கேப்டவுன் சென்சூரியனில் நடந்த போட்டிகளில் கோலி சதம் கண்டார். ஜோஹன்னஸ்பார்க் போட்டியில் தவான் 109 ரன்கள் எடுத்தார். போர்ட் எலிசபத்தில் நடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 115 ரன்கள் விளாசினார். நேற்றைய போட்டியிலும் ரோஹித் அதிரடியாக சதம் எடுத்து 137 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் பெவிலியன் சென்றார்.

ரோஹித் ஷர்மாபடத்தின் காப்புரிமைSTEVE FEENEY

8. இந்திய அணி 40.1 ஓவரில் இலக்கை கடந்தது. விராட் கோலி 75 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். இந்திய அணியின் தலைவராக கோலி பொறுப்பேற்று விளையாடிய 50 போட்டிகளில் நேற்றைய வெற்றியோடு சேர்த்து மொத்த வெற்றியின் எண்ணிக்கை 39 ஆகியுள்ளது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் சொந்தமண்ணில் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுக்காமல் திரும்பிய நிகழ்வு வரலாற்றில் நேற்றைய போட்டியோடு சேர்த்து மூன்றாவது முறை.

 

 

குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார். '' இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட எனக்கும் அழைப்பு வரும் என நம்புகிறேன்'' என ஆட்டம் முடிந்த பிறகு கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது போட்டி நாளை (சனிக்கிழமை) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா வென்றால் இங்கிலாந்து தொடரை இழக்கும்.

https://www.bbc.com/tamil/sport-44816886

Link to comment
Share on other sites

சமீபத்தில் இப்படிப்பட்ட பந்துவீச்சை ஒருநாள் போட்டிகளில் பார்க்கவில்லை; டெஸ்ட்டிலும் குல்தீப்: கோலி சூசகம்

 

 
Virat%20Kohlijpg

முதல் ஒரு நாள் போட்டியில் சவாலின்றி இங்கிலாந்து குல்தீப்பிடம் சரணடைய பிற்பாடு ரோஹித் சர்மா தனது தொடர்ச்சியான 2வது சதத்தை எடுக்க இங்கிலாந்து அணியின் இலக்கை இந்திய அணி நடந்து சென்று வென்றது.

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:

 

எவ்வளவு துல்லியமாக வெல்ல முடியுமோ அவ்வளவு துல்லியமான வெற்றி. இது பேட்டிங் பிட்ச் என்பது தெரியும், ஆனால் ரிஸ்ட் ஸ்பின் நடு ஓவர்களில் சிக்கலைத் தோற்றுவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம்.

குல்தீப் பந்து வீச்சு தனிச்சிறப்பானது. சமீபத்தில் இப்படிப்பட்ட ஒருநாள் பந்து வீச்சை நான் பார்க்கவில்லை. அவர் தன்னம்பிக்கையுடன் வீசுவதை விரும்புகிறோம், ஏனெனில் குல்தீப் மேட்ச் வின்னர்.

இந்தப் பிட்ச்களில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனில் கடினம்.

(டெஸ்ட் அணியிலும் குல்தீப் தேர்வு செய்யப்படுவாரா?) ஆம் டெஸ்ட் போட்டி அணியில் சில ஆச்சரியங்கள் இருக்க வாய்ப்புண்டு. டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன.

இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் தடுமாறுவதைப் பார்க்கும் போது குல்தீப்பை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற தூண்டுதல் உள்ளது.

வானிலை அருமையாக உள்ளது, சொந்த நாட்டிலிருந்து வெளியே இருக்கும் உணர்வு இல்லை, ஆனால் கடினமான கிரிக்கெட் எங்களுக்கு முன்னால் சவாலாக உள்ளது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article24406368.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப கூட்டிட்டு வாங்க’’ - இந்தியாவுடனான தோல்வி குறித்து மைகேல் வாகன் கிண்டல்

 

 
kapng

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  இந்தியாவுடன் அடைந்த தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் நாங்கள் மீண்டும் நாங்கள் விளையாட முடியுமா என்ற தொனியில் மைக்கேல் வாகன் இந்தப் பதிவையிட்டிருக்கிறார்.

 

நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் 6 விக்கெட்டுகளில் 268 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோட் சிறப்பாக ஆட இந்திய அணி 40 ஓவர்களில் 269/2 என்று வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது என்று இங்கிலாந்து ஊடகங்கள் பலவும் விமர்சித்து வரும் வேளையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலான பதிவு ஒன்றை பதிவிட்டுருக்கிறார்.

அதில், "ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக சமீபத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்து (க்ளீன்ஸ்வீப்) தொடரை இழந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந்தத் தோல்வி மிகப்பெரிய கரும்புள்ளியாகவே இது பதிவானது.

அதனை நினைவுக் கூறும் வகையில் இங்கிலாந்து அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணியுடன் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று நோக்கில் மைக்கேல் வாகன் கிண்டலாக இந்தப் பதிவையிட்டுருக்கிறார்.

http://tamil.thehindu.com/sports/article24407481.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

 

 
14CHPMUVIRATKOHLI

விராட் கோலி   -  PTI

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 269 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது அதிரடியால் 40.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

 

ரோஹித் சர்மா 114 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 82 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 167 ரன்கள் குவித்திருந்தது. மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவணும் 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசி சிறந்த தொடக்கம் கொடுத்து வெற்றிக்கு உதவினார். முன்னதாக இங்கிலாந்து அணியை 268 ரன்களுக்குள் சுருட்டியதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். அவர், 10 ஓவர்களை வீசி 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில் 6 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வெல்லும். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இழக்காமல் கோப்பையை வென்றுள்ளது. இந்த எண்ணிக்கையை 10 ஆக அதிரிக்கச் செய்வதில் விராட் கோலி குழுவினர் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

டி 20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்த குல்தீப் யாதவ் மீண்டும் மிரட்ட காத்திருக்கிறார். அவரை கையாள்வதற்காக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் புதிய திட்டம் வகுக்கக்கூடும். முதல் ஒருநாள் போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் மட்டுமே அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இன்றைய ஆட்டத்தில் அவரது பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்படக்கூடும். முதல் ஆட்டத்தில் குல்தீபுக்கு உறுதுணையாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த மற்ற இந்திய அணி பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை வழங்கினர். உமேஷ் யாதவ் 70 ரன்களையும், சித்தார்த் கவுல் 62, சாஹல் 51 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இதனால் வேகப்பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். புவனேஷ்வர் குமார் முழு உடல்தகுதியை எட்டாததால் இன்று களமிறங்குவது சந்தேகம்தான். அநேகமாக சித்தார்த் கவுலுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெறக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இங்கிலாந்து அணி கூடுதல் கவனத்துடன் விளையாடக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article24417414.ece

Link to comment
Share on other sites

2வது ஒருநாள் போட்டி - ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 
அ-அ+

லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. #ENGvIND

 
 
 
 
2வது ஒருநாள் போட்டி - ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
 
இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜேசன் ராய் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் அதிரடியாக ஆடி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
 
அடுத்து இறங்கிய டேவிட் வில்லே அதிரடியாக ஆடினார். லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட். இது சர்வதேச அளவில் 12-வது சதம். டேவிட் வில்லே 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
 
இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
201807142330054996_1_india-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இறங்கினர். ரோகித் 15 ரன்னிலும் ஷிகர் தவான் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவ்ருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். தோனி 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
 
அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
 
இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளங்கெட் 4விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/14233005/1176612/england-beat-india-by-86-runs-in-second-one-day-match.vpf

Link to comment
Share on other sites

இங்கிலாந்தின் தல 'ரூட்'... கோலியின் சேஸர்ஸ் ஆல் அவுட்! #EngvInd

 

கோலி அவுட் ஆனப்பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள், குறிப்பாக ரெய்னா- தோனி இருவரும் வெற்றிக்காக ஆடவேயில்லை. சமீபத்தில் இந்தியா ஆடிய மிக போரிங் ஆட்டம் இதுதான்.

இங்கிலாந்தின் தல 'ரூட்'... கோலியின் சேஸர்ஸ் ஆல் அவுட்! #EngvInd
 

பேட்டிங்கில் ஸ்ட்ராங்கான இரண்டு அணிகள் மோதிக்கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பார்க்கும் அற்புத வாய்ப்ப்பு. தற்போதைய ரேங்கிங்படி இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. இந்த இரு அணிகளுமே பர்ஃபாமென்ஸில் இப்படி பின்னியெடுக்கக் காரணம் பெளலிங் அல்ல, பேட்டிங் மட்டுமே. 6-7 டவுன் வரை இறங்கி ஆடும் பேட்ஸ்மேன்களைக் கொண்டிருக்கும் அணிகள் என்பதால் ரன்கள் குவிகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் டார்கெட்டை 40 ஓவர்களில் முடித்த கோலியின் சேஸர்ஸ், இரண்டாவது போட்டியில் ஆல் அவுட் ஆனதுதான் சோகம். அதிலும், தோனி, ரெய்னாவின் ஆட்டம் மிகப் 'பிரமாதம்'!

தோனி ரெய்னா

டாஸ்!

 

 

கிரிக்கெட்டின் தலைமையிடமான லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது இரண்டாவது ஒருநாள் போட்டி. பேட்டிங்கிற்கு சாதாகமான பிட்ச் என்றாலும் இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் டாஸ் வென்றதும் சேஸிங் ரிஸ்க்கை எடுக்காமல் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தார். மோர்கனும் சரி, கோலியும் சரி அணியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சுரேஷ் ரெய்னா அணிக்குள் வேண்டுமா எனத் தொடர்ந்து பல கேள்விகள் எழுப்பப்பட்டும் அவருக்கு வாய்ப்பளித்தார் கோலி.

 

 

ஓப்பனிங் கில்லீஸ்!

இங்கிலாந்தின் மிகப்பெரிய பலமே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்தான். ஜேஸன் ராய்- ஜானி பாரிஸ்டோவ் எனும் இந்த ஓப்பனிங் இணை அடி வெளுக்கிறது. நேற்றும் பவுண்டரிகளால் பேசினார்கள் ராயும், பாரிஸ்டோவும். யாதவ், கவுல், பாண்டியா என 8 ஓவர்கள் வரை பெளலிங்கை கோலி மாற்றிப்பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. 8 ஓவர்களில் 56 ரன்கள் அடித்தது இங்கிலாந்து. குல்தீப் வந்துதான் முதல் விக்கெட்டை எடுத்தார். 11வது ஓவரை குல்தீப்பிடம் கொடுத்தார் கோலி. இந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே பாரிஸ்டோவ் போல்டு. 31 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் எடுத்தார்  பாரிஸ்டோவ். 1டவுன் பேட்ஸ்மேனாக வந்தவர் அதுவரை ஃபார்முக்கே வராத ஜோ ரூட். 

குல்தீப்பின் மூன்று விக்கெட்ஸ்!

குல்தீப்பின் மூன்றாவது ஓவரில் ஜேஸன் ராய் அவுட். 40 ரன்களில் ஆட்டம் இழந்தார் ராய். ஜோ ரூட்டுடன் கூட்டணி போட்டார் இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன். குல்தீப்பின் மோசமான பந்துகளை ரூட், மோர்கன் இருவரும் பவுண்டரி லைனுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். இங்கிலாந்தின் ரன் ரேட் உயர்ந்துகொண்டே இருந்தது. 20 ஓவர்களில் 121 ரன்கள் என ரன்ரேட் 6-ஐ ஒட்டியே இருந்தது. 

தோனி ரெய்னா

28வது ஓவரில் குல்தீப்பின் பந்தில் 50 ரன்கள் அடித்தார் ஜோ ரூட். 56 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஃபார்முக்கு வந்திருந்தார் ரூட். குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் கேப்டன் மோர்கனும் 50 ரன்கள் அடித்தார். 49 பந்துகளில் 51 ரன்கள் அடித்த மோர்கன் அடுத்த இரண்டாவது பந்திலேயே அவுட். ஃபுல் டாஸில் வந்த குல்தீப்பின் பந்தை சிக்ஸருக்குத் தூக்கியடிக்க மோர்கன் முயற்சிக்க அது கேட்ச் ஆனது. இங்கிலாந்தின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் தூக்கியவர் குல்தீப். ஆனால் அதன்பிறகு குல்தீப்பின் பந்துவீச்சு எடுபடவில்லை.

 

 

ரூட்டு தல!

பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களுக்கும், ஜாஸ் பட்லர் 4 ரன்களுக்கும் என மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜோ ரூட் செம ஸ்ட்ராங்காக நின்றுவிட்டார். அவருக்கு மொயின் அலி பக்கபலமாக நிற்க இங்கிலாந்தின் ரன்ரேட் குறையவேயில்லை. சாஹலின் முதல் விக்கெட்டாக அவரது கடைசி ஓவரில் மொயின் அலி அவுட். டேவிட் வில்லி வந்தார். கடைசி 10 ஓவர்களும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது.

 

வில்லி- ரூட் அதிரடி!

கடைசி 8 ஓவர்களில் 62 ரன்கள் அடித்தது வில்லி- ரூட் பார்ட்னர்ஷிப். 48வது ஓவரில் லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் சதத்தை அடித்தார் ஜோ ரூட். கடைசி ஓவரில் டேவிட் வில்லியும் 50 ரன்கள் அடித்தார். கடைசிப் பந்தில் 113 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார் ஜோ ரூட். ஆனால் இங்கிலாந்தின் ஸ்கோர் 322 ரன்களைத் தொட்டது. 300 ரன்களை எல்லாம் இந்தியா ஈஸியாகச் சேஸ் செய்யும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு தோனியும்-ரெய்னாவும் அப்படி ஒரு பர்ஃபாமென்ஸைக் காட்டினார்கள்.

தோனி ரெய்னா

கோலியின் சேஸர்ஸ்!

முதல் 8 ஓவர்கள் வரை எந்த பிரச்னையும் இல்லை. தவான் , ரோஹித் இருவரும் நிதானமாக அதே சமயம் அடிக்கவேண்டிய பந்துகளை அடித்து ரன்ரேட்டை 6-க்குள் மெயின்டெய்ன் செய்தனர். 8 ஓவர்களில் இந்தியா 49 ரன்களுக்கு விக்கெட் இல்லாமல் இருந்தது. மார்க் உட், டேவிட் வில்லி என பெளலிங்கை மாற்றாமல் தொடர்ந்தார் இயான் மார்கன். 

மூன்று ஓவர்... மூன்று விக்கெட்!

மார்க் உட்டின் 5வது ஓவர், ஆட்டத்தின் 9வது ஓவரில்தான் டர்னிங் பாயின்ட். 26 பந்துகளில் 15 ரன்கள் அடித்திருந்த ரோஹித் ஷர்மா அவுட். அடுத்த ஓவரிலேயே டேவிட் வில்லியின் பந்துவீச்சில் தவான் 36 ரன்களுக்கு அவுட். அதற்கு அடுத்த ஓவர் லயம் ப்ளங்கெட்டின் முதல் ஓவர். கேஎல் ராகுல் டக் அவுட். மூன்று ஓவர்களில் தொடர்ந்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் அவுட். கோலியோடு இணைந்தார் சுரேஷ் ரெய்னா.

உயர்ந்துகொண்டே போன ரன்ரேட்!

இங்கிலாந்து இன்னிங்ஸில் விக்கெட்டுகள் போனாலும் ரன்ரேட்டை அவர்கள் காப்பாற்றினார்கள்.ஆனால் இந்தியாவின் இன்னிங்ஸில் ரன்ரேட் குறைந்துகொண்டே போனது. 15 ஓவர்களில் 87 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. சுரேஷ் ரெய்னா கடுப்பேற்ற ஆரம்பித்தார். மொயின் அலியின் ஓவர்களை எல்லாம் அனாவசியமாக வீணடித்தார் ரெய்னா. டாட் பால்கள் உயர்ந்துகொண்டே போனது.

ஒரு ஓவருக்கு 3 ரன், 4 ரன் என இந்தியாவின் ரன் ரேட் குறைந்துகொண்டே போனது.27வது ஓவரில் மொயின் அலியின் பெளலிங்கில் கோலி அவுட். 56 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த கோலி எல்.பி.டபிள்யு ஆனார். கோலியின் இன்னிங்ஸில் இரண்டே பவுண்டரிகள்தான். 

தோனி ரெய்னா

கட்டையைப்போட்ட ரெய்னா- தோனி!

கோலி அவுட் ஆனதும் இந்தியாவுக்கு சேஸிங் செய்யும் ஆர்வம் போனதுபோல் இருந்தது. தோனி-ரெய்னாவின் ஆட்டம் ''ஏன்டா மேட்ச் பார்க்குறோம்'' என ரசிகர்களை மனம் நோக வைத்தது. இருவருமே இங்கிலாந்தின் ரன்களை சேஸ் செய்யவேண்டும் என்று ஆடவே இல்லை. 

30 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களில் இருந்தது இந்தியா. இன்னும் 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுக்கவேண்டும் என்பதுதான் டார்கெட். ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 9 ரன்கள் அடிக்கவேண்டும். 20/20 ஸ்பெஷலிஸ்டுகளான தோனிக்கும்- ரெய்னாவுக்கும் இது சிம்பிளான ஸ்கோர்தான். ஆனால் இருவருக்குமே வெற்றிபெற வேண்டும் என்கிற ஆர்வம் இல்லை என்பதுபோல் ஆடினார்கள்.32வது ஓவரில் 63 பந்துகளில் கஷ்டப்பட்டு 46 ரன்கள் அடித்திருந்த சுரேஷ் ரெய்னா ஆதில் ரஷித்தின் பந்துவீச்சில் போல்டானார். பவர் ஹிட்டரான சுரேஷ் ரெய்னா அடித்திருந்தது ஒரே ஒரு பவுண்டரிதான்.

தோனி 'ஸ்பின்' ஆட்டம்!

ஆதில் ரஷித், மொயின் அலியின் ஸ்பின்களை எல்லாம் ஆடவே முடியாது என்பதுபோல ஆடினார் தோனி. ஏகப்பட்ட டாட் பால்ஸ்.ரன் ரேட் உயர்ந்துகொண்டே போனது. கடைசி 15 ஓவர்களில் அதாவது 90 பந்துகளில் 149 ரன்கள் அடிக்கவேண்டும் என டார்கெட் உயர்ந்தது. ''தோனியும், பாண்டியாவும் களத்தில் நிற்கிறார்கள். இனிதான் தோனியின் ஆட்டம் இருக்கிறது'' என எல்லோரும் எதிர்பார்க்க, 36வது ஓவரில் தொடர்ந்து ஐந்து பந்துகளை டாட் பாலாக்கி சாதனை படைத்தார் தோனி.

39வது ஓவரில் லயன் ப்ளெங்கெட்டின் பெளலிங்கில் பாண்டியா அவுட். இவர் தோனியைப் போல் கட்டையைப் போடாமல் ஆடியதால் 22 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்தார். கடைசி 10 ஓவர்களில் 129 ரன்கள் அடிக்கவேண்டும். ஒரு ஓவருக்கு 13 ரன்கள் தேவை. ஆனாலும் பதற்றப்படாமல் கூலாக ஆடினார் தோனி. 41வது ஓவரில் 3 ரன்கள். 43வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைத் தொட்டு சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார் தோனி. ஆனால், இந்த சாதனைக்கு விசில்களும், கைதட்டல்களும் மைதானத்தில் பறந்திருக்கவேண்டும்தானே? சத்தமே இல்லை. ஏனென்றால் தோனியின் சேஸிங் அப்படி.

தோனி அவுட்!

47வது ஓவரில் லயம் ப்ளெங்கெட்டின் பெளலிங்கில் அவுட் ஆனார் தோனி. 59 பந்துகளில் 37 ரன்கள் அடித்திருந்தார். இதில் இரண்டு பவுண்டரிகள். ஆட்டத்தின் கடைசிப்பந்தில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. 

கோலி அவுட் ஆன பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள், குறிப்பாக ரெய்னா- தோனி இருவரும் வெற்றிக்காக ஆடவேயில்லை. சமீபத்தில் இந்தியா ஆடிய மிக போரிங் ஆட்டம் இதுதான்.

இங்கிலாந்து- இந்தியா ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையை எட்டியிருக்கிறது. மூன்றாவது டிசைடர் போட்டி ஹெடிங்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. கோலியும், தோனியும் மீண்டுவருவார்களா எனப் பார்ப்போம்! 

https://www.vikatan.com/news/sports/130859-joe-root-slams-century-india-lost-the-plot-in-chase.html

Link to comment
Share on other sites

யாருக்கு கோப்பை?- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா இந்தியா?-நாளை இங்கிலாந்துடன் இறுதி மோதல்

 

 
ind

கோப்புப்படம்

 நடுவரிசை பேட்டிங் சிக்கலுடன் இருக்கும் இந்திய அணி லீட்ஸ் நகரில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வென்று தொடர்ந்து 10-வது தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை 9 முறை ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி கைப்பற்றி வந்துள்ள நிலையில், நாளை போட்டியில் வென்று கோப்பையை வென்றால், அது 10-வது தொடராக அமையும்.

   
 

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை இழக்காமல் இந்திய அணி விளையாடி வென்று வருகிறது. அந்தப் பெருமையை இந்தப் போட்டியில் இந்திய அணி தக்கவைக்க வேண்டும்.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து தொடங்கிய ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கோலி ஆட்டமிழக்க நடுவரிசை வீரர்களான ரெய்னா, ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலைத்து ஆடாமல் விரைவாக ஆட்டமிழந்தது மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது.

அதிலும் குறிப்பாக பினிஷிங் நாயகன் என்று அழைக்கக்கூடிய தோனி, 58 பந்துகளைச் சந்தித்து 37 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிரடியான ஆட்டத்துக்கும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறமை கொண்ட தோனி நேற்று சொதப்பலாக பேட் செய்தது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்தக் குறைகள் எல்லாம் இந்தப் போட்டியில் களையப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 86 ரன்களில் பெற்ற வெற்றியால் அந்த அணி தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. நாளை நடக்கும் ஹெடிங்லியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் இங்கிலாந்து அணிக்கு நெருக்கமாக வர முடியும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து (இருமுறை), இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை (இருமுறை) ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வி அடையாமல் இருந்து வருகிறது. இந்தப் பெருமையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக இந்திய அணி விளையாடிய 17 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் தொடரில் 2-1என்று இந்திய அணி வென்றது. அதே பெருமையை இந்த முறையும் தக்கவைக்கும் என நம்பலாம்.

டி20 போட்டித் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பந்துவீச்சும், நடுவரிசை பேட்டிங்கும் திணறி வருகிறது.

kuldeepjpeg
 

குறிப்பாக வேகப்பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு எதிரணிக்கு நெருக்கடி தரும் விதத்தில் அமையவில்லை. கடந்த போட்டியில் கடைசி 8 ஓவர்களில் சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 82 ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

பந்துகளை ஸ்விங் செய்யக்கூடிய புவனேஷ்வர் குமார் , ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறை அணியில் தெரியத் தொடங்குகிறது. சுழற்பந்துவீச்சிலும் குல்தீப் யாதவ் மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். சாஹலின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அணிக்குக் கைகொடுக்கவில்லை.

கடந்த இலங்கை, தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் புவனேஷ்வர் குமார் உடல்நிலை காரணமாக சேர்க்கப்படவில்லை. இந்த முறையும் அவர் எப்போது குணமடைவார் என்பது குறித்த தகவல் இல்லை.

மேலும், கடந்த போட்டியில் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை என்பதால், இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

புனேஷ்வர் குமார் அணியில் இருக்கும் பட்சத்தில் கடைசிநிலை வீரராக ஓரளவுக்கு பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்.

buhuvijpg

புவனேஷ்வர் குமார்

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 237 ரன்களை விரட்டிச் செல்கையில், 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது தோனியுடன், புவனேஷ்குமார் இணைந்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அணியை வெற்றி பெறவைத்தது நினைவிருக்கும்.

புவனேஷ்குமார் இருக்கும் பட்சத்தில் பேட்டிங்கில் கவலையில்லை. அவர் இல்லாத காரணத்தில் கடைசிநிலையில் பேட்டிங் செய்ய ஆல்ரவுண்டர் ஒருவரைத் தேர்வு செய்ய வாய்ப்பு உண்டு.

கடந்த ஒரு போட்டியில் தோனி சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்வார்களா என்பது சந்தேகமே. மிகப்பெரிய மேட்ச் வின்னரான தோனியை எளிதாக பெஞ்சில் அமரவைப்பது என்பது கடினமாகும். ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவரைக் கூடுதல் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் ஆட்டம் கண்டு வருவதால், அதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக தங்களை சிறப்பாகத் தயார் செய்து வருகிறது. அதற்கு முன்னோட்டமாக சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர்.

கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத ஜோட் ரூட் சதம் அடித்து இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, பட்லர், ஜேஸன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் வலுவான பார்மில் இருக்கிறார்கள்.

பந்துவீச்சில் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில், குறிப்பிட்டு யாரையும் கூற இயலாது. பிளங்கெட், டேவிட் வில்லி, மொயின் அலி, ரஷித் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையால்தான் பந்துகள் சிறப்பாக வந்ததேத் தவிர இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கும் பந்துவீச்சு இல்லை. அந்த வகையில் இங்கிலாந்து பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்திய நேரப்படி போட்டி மாலை 5 மணிக்குத் தொடங்கும்.

இங்கிலாந்து அணி விவரம்:

எயின் மோர்கன்(கேப்டன்), ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஜோய் ரூட், ஜேக் பால், லியாம் பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ், ரஷித், டேவிட் வில்லி, மார்க் வுட், வின்ஸ்,

இந்திய அணி விவரம்

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், எம்எஸ்தோனி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் அய்யர், சித்தார்த் கவுல், அக்சல் படேல், உமேஷ் யாதவ், சர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார்

http://tamil.thehindu.com/sports/article24433877.ece

Link to comment
Share on other sites

பவர்பிளேயில் 2015 உலகக்கோப்பைக்குப் பின் மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான்

 
அ-அ+

இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் 10 ஓவரில் இந்தியா 32 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. #ENGvIND

 
 
பவர்பிளேயில் 2015 உலகக்கோப்பைக்குப் பின் மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. ரோகித் சர்மா, தவான் வழக்கமான அதிரடிக்குப் பதிலாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மந்தமான நிலையில் உயர்ந்தது.

இந்தியாவின் 5.4 ஓவரில் 13 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளை சந்தித்து 2 ரன்களே எடுத்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

201807171935084732_1_Rohitsharma0012-s._L_styvpf.jpg

இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது. இதன்மூலம் கடந்த 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு தற்போதுதான் பவர் பிளேயில் மிகவும் குறைவான ரன்களை சேர்த்துள்ளது.

இதற்கு முன் தரம்சாலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக இருந்தது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/17193508/1177179/India-second-lowest-score-after-10-overs-batting-first.vpf

 

6.png&h=42&w=42

256/8 * (50 ov)
 
Link to comment
Share on other sites

தொடரை இழந்தது இந்தியா: கடைசி போட்டியில் தோல்வி

 
 
 
 
தொடரை இழந்தது,இந்தியா,கடைசி போட்டி,தோல்வி
Colors:
  •  
  •  
  •  
  •  
 

 

  •  
  •  
  •  
  •  

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்து, தொடரை 1-2 என இழந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டி முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி லீட்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல், உமேஷ், சித்தார்க் கவுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர், ஷர்துல் தாகூர் வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்க்குப்பதில் வின்சி சேர்க்கப்பட்டார்.
 

 

கோஹ்லி அரை சதம் :

இந்திய அணிக்கு ரோகித் (2) ஏமாற்றினார். ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தபோது, தவான் (44) ஆட்டமிழந்தார். கோஹ்லி (71) அரை சதம் கடந்தார். ரஷித் 'சுழலில்' தினேஷ் கார்த்திக் (21), ரெய்னா (1) சிக்கினர். தோனி 42 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் 21 ரன்களில் திரும்பினார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது. ஷர்துல் (22) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வில்லே, ரஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
 

 

மார்கன் அசத்தல் :

இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், வின்சி சிறப்பான துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் பந்துவீச்சில் 4 பவுண்டரி விளாசிய பேர்ஸ்டோவ் 30 ரன்கள் எடுத்தார். வின்சி (27) ரன்-அவுட்டானார். பின், கைகோர்த்த ஜோ ரூட், கேப்டன் மார்கன் அபாரமாக விளையாடினர். ரெய்னாவின் 21வது ஓவரில் மார்கன் இரண்டு பவுண்டரி விளாசினார். தன் பங்கிற்கு குல்தீப் பந்தை ரூட் பவுண்டரிக்கு அனுப்பினார். மார்கன் அரை சதம் அடித்து வெற்றியை எளிதாக்கினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்த ரூட், சதம் எட்டினார்.
 

முடிவில், இங்கிலாந்து அணி 44.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் (100), மார்கன் (88) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், இங்கிலாந்து அணி 2-1 என தொடரை வென்று கோப்பை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 1ல் பர்மிங்காமில் துவங்குகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=2063480

Link to comment
Share on other sites

உலககிண்ணப்போட்டிகளிற்கு இந்தியா இன்னமும் தயாராகவில்லை- கோலி

 

 
 

இந்தியா இன்னமும் 2019 உலககிண்ணப்போட்டிகளிற்கு தயாராகவில்லை என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா இழந்ததை தொடர்ந்து கோலி இந்த மதிப்பீட்டை முன்வைத்துள்ளார்.

2019 உலககிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் இந்திய அணி பதில் அளிக்கவேண்டிய சில கேள்விகள் உள்ளன என கோலி தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணத்திற்கு முன்னர் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் எவை என்பதை விராட்கோலி தெரிவிக்காத போதிலும் சில விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

dhawan.jpg

ஒவ்வொரு அணியும் உலக கிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் பலவீனமான விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கு முயல்கின்றன, சரியான சமநிலை உள்ள அணியை உருவாக்க முயல்கின்றன என தெரிவித்துள்ள கோலி இவ்வாறான தொடர்கள் இவ்வாறான தோல்விகள் உலக கிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் நாங்கள் திருத்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் எவை என்பதை வெளிப்படுத்தும் எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது போட்டியில் நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை 25 ,30 ஓட்டங்கள் குறைவாகவே பெற்றுள்ளோம் எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

3_oneday_5.jpg

இங்கிலாந்து அணியினர் பந்து வீச்சு துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டனர்,எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/36776

Link to comment
Share on other sites

பந்துவீச்சு, பேட்டிங் சொதப்பல்; கோலி படை 5 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்தது: ஒரு நாள்தொடரை வென்றது இங்கிலாந்து

 

 
cri4jpg

ஜோய் ரூட்டின் தொடர்ச்சியான 2-வது சதம், கேப்டன் மோர்கனின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் லீட்ஸில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு நாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுலை நீக்கியது சரியா

   

 

இந்திய அணியைப் பொருத்தவரை நேற்றைய போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. கே.எல் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார் கவுலுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த மாற்றங்கள் செய்திருந்தும் எந்த விதமான பயனும் இல்லை.

அருமையான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுலை பெஞ்சில் அமரவைப்பதற்கு பதிலாக, ரெய்னாவுக்கு ஓய்வளித்து இருக்கலாம் அல்லது பேட்டிங்கில் திணறிவரும் தோனியை பெஞ்சில் அமரவைத்துவிட்டு ராகுலை எடுத்திருக்கலாம்

இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட் கடந்த 2-வது போட்டியிலும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார், அதேபோல, இந்த போட்டியிலும் அவரின் சதம் வெற்றிக்கு வித்திட்டது. இவருக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ரஷித் அபாரம்

சுழற்பந்துவீச்சில் இந்திய அணிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் "லெக் ஸ்பின்னில்" கலக்கிய அதில் ரஷித் நேற்று முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும், விராட் கோலியை போல்டாக்கிய பந்து, அவரின் லெக்ஸ்பின்னுக்கு கிடைத்த சான்று. கோலி திகைத்துவிட்டார். சிறப்பாக பந்துவீசிய ரஷித்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. 259 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை விரட்டிச் சென்ற இங்கிலாந்து அணி 33 பந்துகள் மீதிருக்கையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

cri2jpg
 

பிரேக்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 9 ஒருநாள் தொடர்களை இழக்காமல் வெற்றி நடைபோட்டு வந்தது. அதற்கு முதல் முறையாக "பிரேக்" போட்டுள்ளது இங்கிலாந்து அணி.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்திய அணி கோலி தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இழந்ததில்லை. ஜிம்பாப்வே, இலங்கை(இருமுறை), தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து என இந்த நாடுகளுக்கு எதிரான அனைத்து ஒருநாள் தொடரையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்று இருந்தது.

கோலி தலைமையில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 39 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

சிரமம் கொடுக்காத பந்துவீச்சு

இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான சிரமத்தை கொடுக்காத வகையில்தான் இந்திய அணியின் பந்துவீச்சு அமைந்திருந்தது என்று கூறலாம். இங்கிலாந்து வீரர் ரஷித்துக்கும், மொயின் அலிக்கும் கைகொடுத்த சுழற்பந்து வீச்சு இந்திய வீரர்களுக்கு ஏன் கைகொடுக்கவில்லை என்ற கேள்வி எழுவதால், ஆடுகளத்தை குறை கூற இயலாது.

மெதுவான ஆடுகளம், பந்துகள் அதிகமாக எழும்பவில்லை என்ற விமர்சனங்கள் இந்திய தரப்பில் இருந்து வைக்கப்பட்டாலும், டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடி பழக்கப்பட்டுவிட்டதால், நீண்ட ஓவர்களை துல்லியமாக வீசும் பாணியில் இருந்து இந்திய வீரர்கள் விலகுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அதுமட்டுமல்லாமல், டி20 போட்டித்தொடரில் பந்துவீச்சில் இருந்த மிரட்டல், துல்லியம் ஒருநாள் போட்டிகளில் காணமுடியவில்லை. அடுத்து வரும் டெஸ்ட் தொடர் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி தரும் விதத்தில்தான் அமையப்போகிறது.

முதல் போட்டியில் சிறப்பாக இருந்த பந்துவீச்சு 2-வது போட்டியில் மோசமான பந்துவீச்சு இருந்ததால், அதிகமான ரன்கள் வாரி கொடுக்கப்பட்டு தோல்விக்கு வித்திட்டது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களும் சொதப்பினர், பந்துவீச்சாளர்களும் நெருக்கடியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் நேற்றைய போட்டியில் 10 ஓவரில் இந்திய அணி 32 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இது கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக தர்மசலாவில் சேர்த்த ஸ்கோருக்கு அடுத்தார்போல் சேர்க்கப்பட்ட மிக குறைவாகும்.

பேட்டிங்கில் திணறல்

தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் தவண், ரோகித் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க திணறினார்கள். மார்க் வுட் வீசிய முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து திணறிய ரோகித் சர்மா 18 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து வில்லி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

முதல் போட்டியில் சதம் அடித்த,ரோகித் சர்மா அடுத்த இரு போட்டிகளிலும் தன்னுடைய பேட்டிங் நிலத்தன்மையை தக்கவைக்க தவறிவிட்டார். இந்த தொடரில் மொத்தம் 137 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

அடுத்து களமிறங்கிய கோலி, தவணுடன் சேர்ந்தார். டி20 தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஷிகர் தவண் ஒருநாள் தொடரிலும் சோபிக்கவில்லை. 18-வது ஓவரில் தவண் ரன் அவுட் ஆகினார். 3 போட்டிகளிலும் சேர்த்து 120 ரன்கள் மட்டுமே சேர்த்த தவண், இந்த போட்டியில் 44 ரன்கள் மட்டுமே சேர்த்தர். இங்கிலாந்து தொடர் முழுவதும் ஷிகர் தவணின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது.

கோலிக்கு படம் காட்டிய ரஷித்

இந்திய அணியைப் பொருத்தவரை கேப்டன் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். கேப்டனாக பொறுப்பு ஏற்று மிகவேகமாக 49 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை கோலி கடந்துள்ளார். ஆனாலும் கோலியின் இந்த மைல்கல், இந்திய அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

இங்கிலாந்து தொடர் என்று கூறியதில் இருந்து விராட் கோலியின் முகத்தில் படபடப்பு இருந்தது. அதற்கு முன்ஏற்பாடாகவே கவுண்டி தொடரில் விளையாடி தன்னை தயார்படுத்த ஆயத்தமானார் கோலி. அதன்பின், துணிச்சலாக தொடரை எதிர்கொண்டாலும், இப்போது கிடைத்துள்ள தோல்வி அவருக்கு மீண்டும் ஒரு அச்சத்தையும், கடந்த முறை இங்கிலாந்து பயணத்தையும் நினைவூட்டியுள்ளது.

இந்த ஒரு நாள் தொடர் முழுவதும் கோலி, சுழற்பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரஷித், மொயின் அலி ஆகியோரின் சுழற்பந்துவீச்சுக்கு கோலி இரையாகி இருப்பது, சுழற்பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடக்கூடிய கோலியின் திறமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

அதிலும் நேற்றைய போட்டியில் லெக்ஸ்பின் பந்தை பேக்புட் ஆட முற்பட்டு போல்டாகி, பின்னர் கேமிரா வெறித்துப் பார்த்தது கோலியின் அதிர்ச்சியை காட்டுகிறது. சுழற்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

நீண்டகாலத்துக்கு பின் அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாகும்.

வாய்பை வீணடித்த ரெய்னா

டி20 தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு ரெய்னா ரன் குவிக்கவில்லை. டி20 தொடரில் கே.எல் ராகுலோடு ஒப்பிடும் போது ரெய்னாவின் பேட்டிங் திறமை ஒன்றும் சிறப்பாக இல்லை. ரெய்னாவி்ன் மோசமான பேட்டிங் ஃபார்ம் ஒருநாள் தொடரிலும் தொடர்ந்தது.

இந்த தொடரில் ரெய்னா மொத்தம் 47 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சுழற்பந்துகளையும், வேகப்பந்துகளையும் எதிர்கொள்ளும் போது காலை நகர்த்தி ஆடும் கலையை ரெய்னா மறந்துவிட்டாரா எனத் தெரியவில்லை.

இந்த போட்டியில் ஒரு ரன் சேர்த்த நிலையில் ரஷி்த் வீசிய 31-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கேப்டன் விராட் கோலி 71 ரன்களில் வெளியேறினார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

கே.எல். ராகுல் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்றும் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட மற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது இன்னும் சில வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம்.

cri-3jpg
 

ஆமை வேகத்தில் பேட்டிங்

பினிஷிங் மன்னன் என்று புகழப்படும் தோனி கடந்த போட்டியில் 57 பந்துகளைச் சந்தித்து 36 ரன்கள் அடித்தது ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆதலால், இந்த போட்டியில் தோனியிடம் இருந்து அதிரடி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்கு வயதாகிவிட்டதை நிரூபிக்கும் வகையில் 66 பந்துகளைச் சந்தித்து 42 ரன்கள் மட்டுமே சேர்த்து தோனி ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.

காலை நகட்டி வைத்து, பேக்புட், பிரன்ட் புட் பேட்டிங் என்ற பேட்டிங் முறை இருப்பதை தோனி மறந்துவிட்டாரா எனத் தெரியவில்லை. அனைத்துப் பந்துகளையும் ஒரே மாதிரி பேட்டிங் யுத்தியால் எதிர்கொண்டார். 

அதிகமான பந்துகளை தேய்த்த தோனியின் ஸ்டிரைக் ரேட் 68 மட்டுமே நேற்று இருந்தது. இந்த தொடரில் தோனி மொத்தம் 79 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்த போட்டியிலும் கோலியுடனும், ஹர்திக் பாண்டியாவுடனும் இணைந்து விளையாடியபோது, தோனி ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டார். தோனி களத்துக்கு வந்த பின் 5 ஓவர்களுக்கு பின்தான் பவுண்டரியை காண முடிந்தது. தோனி நிலைத்து ஆடி இருந்தால் அணியின் ஸ்கோர் 280 ரன்களை எட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மஞ்சள் நிற ஆடை?

யோயோ டெஸ்ட்டில் வெற்றி பெறும் வீர்ர்களால் அணியின் வெற்றியை தீர்மானித்துவிட முடியாது. தோனியைப் பொருத்தவரை நீலநிற உடையில் விளையாடும் போதும், மஞ்சள் நிற ஆடையில் விளையாடும் போது அவரின் பேட்டிங் ஆவேசத்தில் பல மாற்றங்கள் தெரிகிறது. ஒருவேளை இந்திய அணயியின் சீருடையையும் மஞ்சளாக மாற்றினால்தான் தோனி சிறபபாக விளையாடுவாரா எனத் தெரிவில்லை.

அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்கும் தோனிக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், இந்த தொடருடன் தோனி நாட்டுக்கு திரும்பிவிடலாம். ஒட்டுமொத்தத்தில் தோனிக்கு இந்த இங்கிலாந்து தொடர் சொல்லிக்கொள்ளும் விதத்தில் அமையவில்லை.

இளம் கபில்தேவ் என்று வர்ணிக்கப்படும் ஹர்திக்பாண்டியா 21 ரன்கள் சேர்த்து தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்தார். கடைசி வரிசையில் களமிறங்கிய புவனேஷ்குமார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார், ஷர்துல் தாக்கூர் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2 வீரர்கள்

இந்த ஒருநாள் தொடரில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், 3 போட்டிகளிலும் இந்திய அணி 140 ஓவர்களைச் சந்தித்து விளையாடியுள்ளது. ஆனால், 2 வீரர்கள் மட்டுமே சிக்ஸர்கள் அடித்துள்ளனர். முதல் போட்டியில் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்தார், 2-வது போட்டியில் இந்திய அணி தரப்பில் ஒரு வீரரும் சிக்ஸர் அடிக்கவில்லை, இந்த போட்டியில் கடைநிலை வீரர் ஷர்துல் தாக்கூர் 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆக இந்த தொடரில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ரஷித், வில்லி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

சூப்பர் கூட்டணி

259 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வின்ஸ், பேர்ஸ்டோ களமிறங்கினார்கள். வின்ஸ் 27 ரன்களிலும் பேர்ஸ்டோ 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், 3-வது விக்கெட்டுக்கு நங்கூரமிட்ட ஜோய் ரூட், கேப்டன் மோர்கன் கூட்டணி இறுதிவரை இந்திய பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இந்திய தரப்பில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்த கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை

சாஹல், குல்தீப் ஆகியோரின் ரிஸ்ட் ஸ்பின்னைக் கண்டு மிரண்ட ரூட், மோர்கன் நேற்றை போட்டியில் எளிதாக சமாளித்து ஆடினார்கள். வேகப்பந்துவீச்சிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் இந்திய வீரர்கள் பந்துவீசவில்லை. முதல் 9 ஓவர்களில் 14 பவுண்டரிகள் விட்டுக்கொடுத்தனர்.

மோர்கன், ரூட் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 186 ரன்கள் சேர்த்தனர்.

ஜோய் ரூட் 120 பந்துகளில் 100 ரன்களுடனும், மோர்கன் 108 பந்துகளில் 88 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

https://tamil.thehindu.com/sports/article24449043.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

சுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா? #EngvInd

 
 
 
சுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா? #EngvInd
 

ங்கிலாந்தை, இங்கிலாந்து மண்ணில் தோற்கடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக கோலியின் டீம் உயர்ந்துநிற்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எல்லாம் தரைமட்டமாகியிருக்கின்றன. டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் வெல்லும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றாற்போல முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை செம ஈஸியாக வென்றது இந்தியா. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியின் பக்கம் கூட இந்தியாவை நெருங்கவிடாமல் விரட்டியடித்திருக்கிறது இங்கிலாந்து. மீண்டும் ஒருமோசமான தோல்வியை சந்தித்து இங்கிலாந்திடம் 1-2 என தொடரை இழந்திருக்கிறது இந்தியா. இந்த தோல்விக்கு கோலி காரணமா... கோலியின் அணி காரணமா?

கோலி

ப்ளேயிங் லெவனில் குழப்பும் கோலி!

இங்கிலாந்து தொடரில் டி20 ஆரம்பித்து, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் கட்டாயமாக இடம்பிடித்திருக்க வேண்டியவர் தினேஷ் கார்த்திக். ஃபார்மில் இருக்கும் முக்கியமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர். ஆனால், அவரை மூன்று டி20 போட்டிகளிலும் சேர்க்காமல் ஃபார்மில் இல்லாத சுரேஷ் ரெய்னாவை வைத்துக்கொண்டு ஆடினார் கோலி. அதேபோல்  எவ்வளவு விமர்சனங்கள் எழுந்தபோதும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கவில்லை. லார்ட்ஸ் போட்டியில் சொதப்பினார் என்கிற ஒரே காரணத்துக்காக கே.எல் ராகுலை அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை உள்ளே கொண்டுவந்து, சுரேஷ் ரெய்னாவை உள்ளேயே வைத்ததன் மூலம் தனக்குச் சரியான ப்ளேயிங் லெவனை முடிவு செய்வதில் இருக்கும் குழப்பத்தை உலகுக்கு உணர்த்தினார் கோலி. 

 

 

பெளலிங்கைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக் பெளலரான புவனேஷ்வர் குமார் அணிக்குள் வந்துவிட்டார். உமேஷ் யாதவுக்கு பதிலாக உள்ளே கொண்டுவரப்பட்டவர் ஷ்ரதுல் தாக்கூர். தீபக் சாஹர் அல்லது சித்தார்த் கவுலையே அணிக்குள் வைத்திருக்கலாம். அதேபோல் குல்தீப் யாதவின் பெளலிங்கை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் படித்துவிட்டார்கள் என்பதால் மற்றோர் இடது கை ஸ்பின்னரான அக்ஸார் பட்டேலை கொண்டுவந்திருக்கலாம். ஆனால், சர்ப்ரைஸ் அல்லது `டேக்டிக்கல் மூவ்' என்று ராகுலுக்கு பதில் தினேஷ் கார்த்திக் என அணியின் மாற்றத்தை முடித்துக்கொண்டார் கோலி.

 

 

கோலி

தடுமாறும் தோனி!

இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பைகளைப் பெற்றுத்தந்த கேப்டன் தோனி. 37 வயதான தோனி விமர்சனங்களை எல்லாம் உடைத்து ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சாம்பியன் கோப்பையைப் பெற்றுத்தந்தார். ஆனால்,  இங்கிலாந்து தொடரில் அவரின் பர்ஃபாமென்ஸ் என்பது சுமார் ரகம். உலகின் அத்தனை கிரிக்கெட்டர்களும் மதிக்கும், பெருமைப்படும், அந்த மைதானத்தில் விளையாடுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கருதும் புகழ்பெற்ற மைதானத்தில் தோனிக்கு அந்தப் பெரும் வாய்ப்பு கிடைத்தது. லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்கிற மைல்கல்லைக் கடந்தார் தோனி. ஆனால், மைதானத்தில் பெரிதாக கைத்தட்டல்களோ, விசில்களோ இல்லை. காரணம், மேட்ச் பார்க்கவந்தவர்கள் அனைவரும் தோனியின் ஆட்டத்தைப் பார்த்து வெறுப்பில் இருந்தனர். வெற்றிக்காக தோனி அன்று ஆடவே இல்லை. 59 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார் தோனி. அதேபோன்று வெற்றிபெற்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்கிற போட்டியிலும் விளையாடினார் தோனி. மூன்றாவது ஒருநாள் போட்டியில், லீட்ஸ் மைதானத்திலும் தோனியின் பதுங்கும் ஆட்டமே தொடர்ந்தது. 90 நிமிடங்கள், ஒன்றரை மணி நேரம் களத்தில் நின்றவர், 66 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்தார். 

ரெய்னாவுக்கு முன்னதாக மூன்றாவது டவுன் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் தோனி. 25வது ஓவரில் உள்ளே வந்தவர் 45-வது ஓவர் வரை களத்தில் நின்றார். ஆதில் ரஷித், மொயின் அலி என இந்த இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும் அவ்வளவுப் பொறுமையாக ஏன் ஆடினார், அடிக்கவே முடியாத பந்துகள் போல ஏன் தோனி பம்மினார் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

கோலி

கோலியின் கேப்டன்ஸி!

2018 ஐபிஎல் போட்டிகளின்போது கோலியின் கேப்டன்ஸி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. டிவில்லியர்ஸ், மெக்கல்லம், டிகாக், சாஹல், சவுத்தி என ஸ்டார் ப்ளேயர்களை வைத்துக்கொண்டும் லீக் ஸ்டேஜைக்கூடத் தாண்ட முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்தது அவர் தலைமையிலான பெங்களூரு அணி. சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்காததும், சரியான இடைவெளிகளில் பெளலர்களை மாற்றாததும், பேட்டிங் ஆர்டரை சரி செய்யாததுமே தோல்விகளுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது இப்போது இந்திய அணியிலும் தொடர்கிறது.
பேட்ஸ்மேனாக கோலியை எந்தக் குறையும் சொல்லமுடியாது. ஆனால் கேப்டனாக அவர் கடுமையான சில முடிவுகளை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதே இங்கிலாந்து மைதானங்களில்தாம் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை நடக்கவிருக்கிறது. இங்கு பெறும் வெற்றிகள் இந்திய அணிக்கு மிகப்பெரிய கான்ஃபிடென்ஸைத் தரும். அதேபோல் இங்கு விளையாடும் வீரர்களுக்கும் பெரிய அனுபவத்தைத்தரும். ஆனால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடக்கூடியவர்களான கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் என இளம் வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் உட்காரவைத்துவிட்டு சீனியர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தருவது நல்ல தலைவனுக்கான குணம் இல்லை.

 
 

 

பேட்டிங் ஆர்டர்!

4வது, 5வது டவுன் அதாவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசை இன்னும் இந்தியாவுக்கு செட் ஆகாமலேயே இருக்கிறது. ஆனால் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அம்பதி ராயுடு, அஜிங்கியா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் என எந்த ஆர்டரிலும் இறங்கி ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களை வெறும் பார்வையாளர்களாக உட்காரவைத்துக்கொண்டிருப்பது யாருக்கு நஷ்டம்? பேட்டிங்கில் செம ஸ்ட்ராங் எனச் சொல்லிக்கொள்ளும் இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளாக சேஸிங்கிலும், செட்டிங்கிலும் ரன்கள் குவிக்கத் திணறுவது எதனால்?

கோலி

லீட்ஸ் சொல்லும் செய்தி!

பேட்டிங் விக்கெட்டான லீட்ஸ் மைதானத்தில் 256 ரன்கள் என்பது சேஸிங்குக்கான ரன்களே இல்லை. மொயின் அலி, ரஷித்தின் ஸ்பின் இந்திய பேட்ஸ்மேன்களை பயமுறுத்துகிறது என்னும்போது சாஹல், குல்தீப் யாதவின் ஸ்பின்னும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றியிருக்க வேண்டும்தானே? ஆனால் சாஹல், குல்தீப் என இருவருக்குமே விக்கெட் கிடைக்கவில்லை. ஜோ ரூட், இயான் மோர்கன் என இருவருமே அவ்வளவு ஈஸியாக சாஹல், குல்தீப்பின் பந்துகளை எதிர்கொண்டனர். இந்த இரண்டு ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே 96 ரன்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் 2 இங்கிலாந்து விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தாலும் பெளலர்கள் எடுத்தது ஒன்றே ஒன்றுதான். மற்றொன்று ரன் அவுட். இந்தியாவின் பெளலிங் இங்கிலாந்துக்கு எதிராக சுத்தமாக எடுபடவில்லை என்பதுதான் உண்மை. 

பும்ரா, புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப், சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் என பெளலர்களை சரியான நேரத்தில், சரியான விக்கெட்டுகளில் கோலி பயன்படுத்தவேண்டும். 

இங்கிலாந்து தோல்வி இன்னும் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கான அணி செட் ஆகவில்லை என்பதைத்தான் சொல்கிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மாற்றம் செய்யப்படவேண்டும். அதேபோல் பெளலிங்கிலும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே 2019 கனவு நனவாகும்!

https://www.vikatan.com/news/sports/131191-india-lost-the-series-against-england-engvind.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.