Jump to content

மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா?


Recommended Posts

மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா?

 

 

 

7e-750x430.jpg

 
 
 

தமிழ் மக்­கள் ஒரு­போ­துமே இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக இருக்க மாட்­டார்­கள். அவர்­களை அரசு தொடர்ந்து ஏமாற்­றி­னால் அவர்­கள் மாற்­றுப் பாதை­யொன்றை நாட­வேண்­டிய கட்­டா­யத்­துக்­குத் தள்­ளப்­ப­டு­வார்­கள். இவ்­வாறு எதிர்க் கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­தன் இலங்­கை­யி­லி­ருந்து விடை­பெற்­றுச் செல்­லும் இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வ­ரி­டம் கூறி­யமை இன்­றைய சூழ்­நி­லை­யில் கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது.

எதிர்க்கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­த­னின் கருத்­துக்­க­ளுக்கு பன்­னாட்­டுச் சமூ­கத்­தில் ஒரு தனி மதிப்பு உள்­ளது. பன்­னாட்­டுப் பிர­தி­நி­தி­கள் இலங்­கைக்கு வருகை தரும்­போது, எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ற ரீதி­யி­லும், ஈழத் தமி­ழர்­க­ளது முக்­கிய அர­சி­யல் கட்­சி­யின் தலை­வர் என்ற ரீதி­யி­லும் சம்­பந்­த­னைச் சந்­தித்­துப் பேசு­வது வழ­மை­யா­ன ஒன்று. இதன் கார­ண­மா­கத் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக அவர்­க­ளுக்கு சம்­பந்­த­னால் விளக்க முடி­கின்­றது.

சம்­பந்­த­ரது கருத்து வெளிப்­பாடு
தெளி­வற்ற, முழு­மை­யற்ற ஒன்று
விடை­பெற்­றுச் செல்­லும் அமெ­ரிக்­கத் தூது­வ­ரி­டம் சம்­பந்­தன் கூறிய மாற்­றுப்­பாதை எது­வென்­பது தெரி­ய­வில்லை. அந்த மாற்­றுப்­பாதை ஒரே சீரா­னதா? அல்­லது மேடு­பள்­ளம் நிறைந்­ததா? என்­ப­தும் தெரி­ய­வில்லை. கொடிய போரி­னால் மிகக் களைப்­ப­டைந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்ற தமிழ் மக்­கள் துன்­பங்­கள் நிறைந்த மாற்­றுப் பாதை­யொன்­றில் பய­ணிப்­ப­தற்­குத் தயா­ராக இருக்­கி­றார்­களா? என்­ப­தை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

 

 

 

புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தில் அமெ­ரிக்­கா­வின் பங்கு அளப்­ப­ரி­யது. இறு­திப் போரில் புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்டமைக்கு ஆயு­தப் பற்­றாக்­கு­றையே பிர­தான கார­ண­மா­கும். அமெ­ரிக்கா வழங்­கிய உள­வுத் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் புலி­க­ளின் ஆயு­தக் கப்­பல்­கள் அழிக்­கப்­பட்­டன. இதில் இந்­தி­யா­வின் பங்­கும் நிறை­யவே காணப்­பட்­டது. ஆனால் போரி­னால் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் தொடர்­பாக இந்த இரு நாடு­க­ளும் சிறி­து­கூட அக்­கறை காட்­ட­வில்லை.

மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடு­க­ளெனத் தம்­மைத் தம்­பட்­டம் அடித்­துக்­கொள்­ளும் அமெ­ரிக்­கா­வும், இந்­தி­யா­வும் இலங்­கைத் தமி­ழர்­கள் தமக்­குக் கிட்­ட­ வேண்­டிய ஜன­நா­யக உரி­மை­க­ளைக்­கூட இழந்து நிர்க்­க­தி­யான நிலை­யில் நிற்­ப­தைக் கவ­னிக்­கத் தவ­றி­விட்­டன. இது ஈழத் தமி­ழர்­க­ளுக்கு இந்த நாடு­கள் புரி­கின்ற மிகப்­பெ­ரிய துரோ­க­மா­கும். வேறு­வ­ழி­யில்­லா­த­த­னால் சம்­பந்­தன் மாற்­றுப்­பாதை தொடர்­பா­கத் தெரி­வித்­தார் என்­பதை உணர முடி­கின்­றது.

தமிழ்­மக்­க­ளுக்கு அரசு நியா­யம்
வழங்­கும் என நம்­பு­வது முட்­டாள்த்த­னம்
தற்­போ­தைய நிலை­யில் தமி­ழர்­கள் தொடர்ந்­தும் இலங்கை அரசை நம்­பிக்­கொண்­டி­ருப்­ப­தில் பய­னொன்­றும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. அரசு அவர்­க­ளைத் தொடர்ந்து ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கின்­றது. பன்­னாட்­டுச் சமூ­கம் அவர்­க­ளைக் கவ­னிப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. தமது உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­குப் போரா­டு­கின்ற சக்­தி­யும் அவர்­க­ளி­ட­மில்லை. இந்த நிலை­யில் அவர்­க­ளால் என்­ன­தான் செய்ய முடி­யும்?
இந்த நாட்­டின் அர­சி­யல் சூழ்­நிலை வெகு­வே­க­மாக மாறி­வ­ரு­கின்­றது. மகிந்த ராஜ­பக்ச உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் பெற்ற வெற்­றி­யைத் தொடர்ந்து இரண்­டா­வது வெற்­றிக்­கா­க­வும் தம்­மைத் தயார்ப்­ப­டுத்தி வரு­கின்­றார். மாகா­ண­ச­பைத் தேர்­தல், அர­ச­த­லை­வர் தேர்­தல், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ஆகி­ய­வற்­றி­லும் தமது கட்­சியே வெற்­றி­பெ­று­மென அவர் திட­மாக நம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார். தின­மும் அர­சி­லி­ருந்து பிரிந்து செல்­ப­வர்­கள் மகிந்த பக்­கம் இணைந்து வரு­கின்­ற­னர்.

இத­னால் அரசு நாளுக்கு நாள் நலி­வ­டைந்து வரு­கின்­றது. எஞ்­சிய ஆயுட்­கா­லத்தை அரசு பூர்த்தி செய்­யுமா? என்ற வினா­வும் கூடவே எழுந்­துள்­ளது. அரச தலை­வர் பத­விக் காலத்­தைப் பூர்த்தி செய்ய முடி­யும். ஆனால் நாடா­ளு­மன்­றத்­தின் ஆயுட்­கா­லம் நிச்­ச­ய­மற்­ற­தொரு நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

தகர்ந்­து­போன எதிர்­பார்ப்­பு­க­ளால்
விரக்தி நிலை­யில் ஈழத்­த­மி­ழினம்
இதற்­கி­டை­யில் புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பான நம்­பிக்­கை­யும் தகர்ந்­து­போன நிலை­யில் தமி­ழர்­கள் காணப்­ப­டு­கின்­ற­னர். இந்த அர­சின் ஆட்­சிக் காலத்­தில் அது நிறை­வேற்றி வைக்­கப்­ப­டு­மென்ற நம்­பிக்­கை­யும் தற்­போது தகர்ந்­துள்­ளது.

கடந்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் தாம் தமி­ழர்­க­ளின் வாக்­கு­க­ளால் தோற்­க­டிக்­கப்­பட்­டதை மகிந்த இன்­ன­மும் மறந்­தி­ருக்க மாட்­டார். ஏரா­ள­மான இன­வா­தி­கள் அவ­ரு­டன் உள்­ள­தால் தமி­ழர்­க­ளுக்கு எதை­யா­வது செய்­வ­தற்கு மகிந்த விரும்­பி­னா­லும், அதை அந்த இன­வா­தத் தரப்­பி­னர் அனு­ம­திக்க மாட்­டார்­கள். ஆகவே மகிந்­தவை நம்­பு­வ­தா­லும் பய­னொன்­றும் கிடைக்­க­மாட்­டாது.

ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்­கள் இனி­யும் இந்த நாட்­டில் பயன்­ப­டு­மென எதிர்­பார்க்க முடி­யாது. தென்­ப­கு­தி­யில் இடம்­பெற்ற பல போராட்­டங்­கள் வன்­முறை வழி­யில் அர­சி­னால் ஒடுக்­கப்­பட்டு விட்­டன. இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் போராட்­டங்­கள் பயன்­த­ருமா? என்­ப­தும் சந்­தே­கத்­திற்­கி­ட­மா­னதே.

இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது தமி­ழர்­கள் மாற்­றுப்­பா­தை­யொன்­றைத் தேடு­வது எளி­தான காரி­ய­மல்ல என்­பது தௌிவா­கத் தெரி­கின்­றது. ஆனால் சம்­பந்­தன் எதை மன­தில் கொண்டு அவ்­வாறு தெரி­வித்­தார் என்­ப­தும் புரி­ய­வில்லை. ஆனால் ஏதோ­வொன்றை மன­தில் வைத்­துக்­கொண்­டு­தான் அவர் அவ்­வாறு கூறி­யி­ ருக்­கக்­கூ­டும்.
ஐ.நா.கூட இன்று பல­வீ­ன­மான நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யின் இறு­திப் போரின்­போது போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­றா­மல் தடுப்­ப­தற்கு ஐ.நா தவ­றி­ய­மைக்­குப் போதிய வளங்­கள் இல்­லா­மையே கார­ண­மென ஐ.நா.பொதுச் செய­லர் பகி­ரங்­க­மாக கூறி­யுள்­ளமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

உண்­மை­யைக் கூறு­வ­தா­னால் தமி­ழர்­கள் இன்று மிக மோச­மா­ன­தொரு பாதை­யி­லேயே பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இதற்கு மாற்­றீ­டாக மாற்­றுப்­பா­தை­யொன்று கிடைக்­குமா? என்­பது சந்­தே­கம்­தான்.

http://newuthayan.com/story/12/மாற்றுப்-பாதை-சாத்தியமாகுமா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.