யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
kavi_ruban

பிரிய சிநேகிதி...

Recommended Posts

பிரிய சிநேகிதி,

மன்னிப்பாய்...!

மெளனத் தவம்

கலைத்துச்

சகுனம் பார்க்காது

காதலென்னும் மாய

வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி

வைக்காது...

பள்ளம் விழுந்ததடி

உன் பார்வை

பட்டென்றேன்

நீயும் பட்டென

பதில் சொன்னாய்

என்னைச் சட்டென

வெட்டி விட்டாய்

சட்டென

தேறிவிட்டேன்

வெளியில் சிரித்தவாறு

ஆனால் உள்ளம்

இன்னும்

வலியில் அழுதவாறு

வெள்ளமென

உவகை தோன்றுதடி

உன்னோடு இருக்கும்போது!

இதற்குப் பெயர்

காதலென்று

அர்த்தம் செய்தேன்!

கடைசிவரை

குற்றம் செய்தேன்!

உன் கனவுக்

கட்டிட வாசலில்

கூட நிற்கத்

தகுதியிருக்குமா எனக்கு?

நீ நுழைவுத் தேர்வு

நடத்தவில்லையே

சிநேகிதி...

ஆனாலும் சிநேகிதி

என் அன்புக்

கூட்டுக்குள் நீ

இன்னும்

சிட்டுக் குருவிதான்!

நீ அதிலிருப்பதும்

தூரப் பறப்பதும்

உன் சிறகுகளிடம்...

வாழ்க்கைப் பாதையில்

முகம் மறக்கலாம்

முகவரி மறக்கலாம்

என் அன்பு தடவிய

வார்த்தைகளை

நினைத்துப் பார்

நேரம் கிடைக்கும்

போதெல்லாம்

நேற்றைய

பொழுதெதற்கு

என்று

சாட்டையால்

அடிக்காதே...

கடந்த காலங்களின்

கனவுகள் முக்கியம்!

என் வார்த்தைகளில்

சில சமயம்

வாள்கள்

கட்டியிருப்பேன்

உன்னைக்

காயப்படுத்தவல்ல...

கடைசி வரை

என்னை

ஞாபகப்படுத்த...

பிரிய சிநேகிதி

நான் உன்னை நேசிக்கிறேன்

நீ நேசிக்காதபோது கூட

ஏனெனில்,

நீ மட்டும் தான்

என்னோடு

சிநேகிதம் செய்வாள்!

அழகில்லாதவன்

நான்!

உண்மை தான்

'அழகில்' ஆதவன்

இல்லை!

சிநேகிதி உன்போல்

இன்னும் பலர்

எனை வேண்டாம்

என்று வெறுக்கட்டும்

சோகமே எனக்குச்

சொந்தமாகட்டும்!

காயம்

பெருக்கட்டும்

முட்டாள் நான்

கூட கவி

புனைவேன்

என் கவிகளே

எனக்குத் தலைகோதி

விழி நீர் துடைக்கட்டும்

இதை நீ

'கவிதை' என்கிறாயா

சிநேகிதி..?

'ஆம்' எனில்

நீ 'வேண்டாம்'

என்றதில் கூட

அர்த்தமுண்டு

நல்லது

சிநேகிதி...

தயவுசெய்து

என்னை

மன்னித்துவிடு

மன்மதனுக்கு

ஒரு மரணம்

வராதோ?

Share this post


Link to post
Share on other sites

என் கவிகளே

எனக்குத் தலைகோதி

விழி நீர் துடைக்கட்டும் என்றே

அழகாய் உவமித்து வரித்த

கவிதை அழகு அழகு

Share this post


Link to post
Share on other sites

கவிரூபன் உங்கள் கவிதை அழகு.

உணர்ச்சிகளும் எண்ணங்களும் கைகோர்த்து நிற்க

வார்த்தைகளும் உவமைகளும் உயரப் பறக்கின்றனவே.

இது உங்கள் கற்பனையா இல்லை அனுபவமா?

Share this post


Link to post
Share on other sites

கவிதயெல்லாம் நன்றாகத்தானிருக்கிறது ஆனால்.................. :lol:

Share this post


Link to post
Share on other sites

ஆங்... வெறுமனவே கற்பனை என்று சொல்ல முடியாது தான் (அப்ப....? )

அது சரி வானவில் ஆனால் என்று நிறுத்தினால் என்ன அர்த்தம்? கீறிட்ட இடத்தை நிரப்ப என்னால் முடியாது....

கருத்துகளுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி...

Share this post


Link to post
Share on other sites

ஆங்... வெறுமனவே கற்பனை என்று சொல்ல முடியாது தான் (அப்ப....? )

அது சரி வானவில் ஆனால் என்று நிறுத்தினால் என்ன அர்த்தம்? கீறிட்ட இடத்தை நிரப்ப என்னால் முடியாது....

கருத்துகளுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி...

அதெல்லாம் சொல்ல மாட்டேன் :lol:

Share this post


Link to post
Share on other sites

மெளனத் தவம்

கலைத்துச்

சகுனம் பார்க்காது

காதலென்னும் மாய

வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி

வைக்காது...

பள்ளம் விழுந்ததடி

உன் பார்வை

பட்டென்றேன்

நீயும் பட்டென

பதில் சொன்னாய்

என்னைச் சட்டென

வெட்டி விட்டாய்

சட்டென

தேறிவிட்டேன்

வெளியில் சிரித்தவாறு

ஆனால் உள்ளம்

இன்னும்

வலியில் அழுதவாறு

அழகான கவிதை....

கவிதையில் என்னவோ சோகம் இழையோடுகின்றது...

பலரை கவர்ந்திருக்கின்றது இக் கவிதை ..கவி_ரூபன்!

இக் கவிதைக்கு வந்த கருத்துக்களை விட இதை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கு.

கவனித்தீர்களா? அதை வைத்தே சொன்னேன்.

அத்தோடு உங்கள் கவிகளை வாசித்ததில் பிடித்த இன்னொரு கவி:

காதல்

அடிக்கடி

விருந்துண்ண

அழைக்கின்றது

இலை விரித்து

பந்தி

பரிமாறும்

வேளையில்

அடுத்த

பந்தியில்

அமருமாறு

அறிவிக்கின்றது!

சிறு வரிகளில் பல அர்த்தங்கள் கொண்டு...எழுதுகிறீர்கள்...

தொடருங்கள் உங்கள் கவி பணியை... B)

Share this post


Link to post
Share on other sites

கவிதையைப் பார்த்து மேலே நண்பர் ஒருவர் குழம்பியதற்கான காரணம் குறிப்பிட்ட பெயரில் யாழ் களத்தில் ஒரு உறவு இருப்பதன் காரணமாக இருக்கலாம்? :P :P :P

Edited by மாப்பிளை

Share this post


Link to post
Share on other sites

பிரிய சிநேகிதி,

மன்னிப்பாய்...!

இதற்குப் பெயர்

காதலென்று

அர்த்தம் செய்தேன்!

கடைசிவரை

குற்றம் செய்தேன்!

அழகிய கவிதை

ஹர்மோன்களின் யுத்தம்

அதிகமான முட்டாள்கள்

செய்யும் தவறு.

ஜானா

Share this post


Link to post
Share on other sites

உங்க கவிதை நல்லா இருக்கு கவிரூபன். ;)

Share this post


Link to post
Share on other sites

அழகான வார்த்தை ஜாலங்கள் கொண்டவரிகள் படைத்த கவி ரூபனுக்கு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் ரசனைக்கும் நன்றி...

Share this post


Link to post
Share on other sites

மெல்லிய உணர்வுகளின் இழையோடல் கவிதையில் செறிந்து கிடக்கிறது. எழுதியவருக்கு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • இதேமாதிரி தமிழ்நாட்டவருக்கே முதலிடம் எண்டு சீமான் சொன்னால் இஞ்சையிருக்கிற கொஞ்சச்சனத்துக்கு குடைய வெளிக்கிடும் கண்டியளோ.......
    • அனுராதா: தடைகளை தாண்டி பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது எப்படி? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைANURADHA புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து வசதியே எட்டிப்பார்க்காத நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான அனுராதா பவுன்ராஜ், கடந்த வாரம் நடைபெற்ற 'காமன்வெல்த் வெயிட்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' போட்டியில் இந்தியா சார்பாக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். கடந்த பத்து ஆண்டுகளாக கடினமாக உழைத்து பளுதூக்கும் போட்டிக்காக தன்னை தயார்செய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த அனுராதா, தஞ்சாவூரில் தோகுர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், விளையாட்டுத் துறையில் இருக்கும் ஆர்வம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் அனுராதாவை வெற்றியை நோக்கி செல்ல உதவியுள்ளது. இளம்வயதில் தந்தை பவுன்ராஜ் இறந்ததால், அண்ணன் மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு அம்மா ராணியுடன் கூலிவேலைக்கு செல்ல, அனுராதா படிக்கவும், விளையாட்டுத்துறையில் பங்கேற்கவும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ''பள்ளிப்படிப்பின்போது கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. விளையாட்டுத்துறையில், குழு விளையாட்டில் சாதிப்பதைவிட தனி நபராக முயற்சி செய்தால், அரசு வேலை கிடைக்கும் என அண்ணனின் நண்பர்கள் பரிந்துரைத்தனர். கல்லூரியில் படிக்கும்போது, தமிழக அளவில் பளுதூக்கும் போட்டியில் பங்குபெற வாய்ப்புகள் இருப்பதை அறிந்த நான், முயற்சி செய்துபார்க்கலாம் என சேர்ந்தேன், தமிழக அளவில் வென்று இந்திய அளவில் போட்டியிட தேர்வானேன்,'' என்கிறார் அனுராதா. படத்தின் காப்புரிமைANURADHA 2009ல் அனுராதா முதன்முதலில் இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 35 கிலோபிரிவில் முதல் இடத்தை வென்றபோது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. ''எங்கள் ஊரில் பயிற்சி மையங்கள் கிடையாது. பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்கும் ஆண்களை பார்ப்பது கூட அரிது. எனக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் இல்லை. முதல்முறை கிடைத்த வெற்றி, நான் மேலும் பளுதூக்கும் போட்டியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதித்துவிட்டது. பட்டமேற்படிப்பு படிக்கும்போது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றேன்,'' என அவரது பதக்க பட்டியலைப் பற்றி பேசினார் அனுராதா. வறுமை, பசி, பல தடைகளை கடந்த தங்கமங்கை கோமதி வாட்டிய வறுமை; சளைக்காமல் போராடி ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி ''ஜிம் போக வேண்டும் என முடிவு செய்தபோது மிகவும் தயக்கமாக இருந்தது. எங்கள் ஊரில் பேருந்து வசதி இல்லை. நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். ஜிம்மில் பெண்கள் கிடையாது. ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். தொடக்கத்தில் நான் பயிற்சி முடிக்கும்வரை காத்திருந்து அண்ணன் என்னை அழைத்துச் செல்வார். என் ஊரிலும், வெளியிடங்களிலும் எனக்கு ஏற்படும் தயக்கத்தை நான் துடைத்துவிட்டு முன்னேறவேண்டும் என முடிவுசெய்த பிறகு, என்னை நோக்கி வந்த எல்லா கிண்டல் பேச்சுகளை கையாள தெரிந்துகொண்டேன்,'' என்றார் அனுராதா. உறவினர்கள் பலரும் பளுதூக்கும் போட்டியில் அனுராதா பங்கேற்பதை விமர்சித்தபோதும், அவரது ஊக்கம் குறையவில்லை. ''பளுதூக்கும் போட்டி என்பது ஒரு விளையாட்டு என்ற புரிதல் பலருக்கும் இல்லை. அதிலும் பெண்ணாக இருப்பதால், இதில் பங்கேற்றால், என் உடல் மாறிவிடும் என பலர் குறைகூறுவார்கள். அவர்களின் வார்த்தைகளை சுமப்பதுதான் சில காலம் சிரமமாக இருந்தது. தொடர்ந்து நான் சாதனைகளை குவித்ததால், அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்,''என்கிறார் அனுராதா. பட்ட மேற்படிப்பை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான மையத்தில் பளுதூக்கும் போட்டிக்கான பயிற்றுநர் பாடதிட்டத்தை படித்தார். 2017ல் உதவிஆய்வாளர் வேலைக்கான தேர்வு வந்தபோது, அதில் தேர்வாகி வேலைக்கு சென்றால், அண்ணன் மற்றும் தாய் ராணிக்கும் உதவமுடியும் என்பதால், தனது விளையாட்டு ஆர்வத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார். படத்தின் காப்புரிமைANURADHA ''காவல்துறையில் பணிபுரிவோருக்கான விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டி இருந்ததால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் திறமையை கேள்விப்பட்ட மூத்த அதிகாரிகள் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தார்கள். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றதால், கமான்வெல்த் போட்டியில் பங்கேற்க அடுத்த வாய்ப்பு என்னை தேடிவந்தது. அடுத்த இலக்கு ஒலிம்பிக்ஸ்தான்,'' என சொல்லும்போதே அனுராதாவின் உறுதி அவரது வார்த்தைகளில் தெரிகிறது. பெண்கள் விளையாட்டுதுறையில், அதிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள் என்று கூறும் அனுராதா, ''பஞ்சாப்பில் படித்த சமயத்தில் அங்குள்ள பதின்பருவ பெண்கள் ஆர்வத்துடன் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்ததது. எத்தனை வாய்ப்புகள் உள்ளன, நம் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மிகுந்த திறமையுடன் இருந்தாலும், இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் முடங்கிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்,''என்கிறார். தற்போது அனுராதாவின் வெற்றிகளை கண்ட அவரது நெம்மேலிப்பட்டி கிராமத்தில் பெண்குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று கூறும் அவர், ''கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி அல்ல, விளையாட்டும் சேர்த்துத்தான் என்ற புரிதல் குறைவாக உள்ளது. உடல்நலன் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என்பதை வலியுறுத்தவேண்டும்,''என்கிறார். https://www.bbc.com/tamil/sport-49065142
    • நிஞாயமாய்  பார்த்தால் இந்தமாதிரி கவிதை நான்தான் எழுதி இருக்க வேண்டும். மறந்துபோனன். போகட்டும் பரவாயில்லை , கவிதை நன்றாக இருக்கு....!  👍 
    • உலகிலே உள்ள துர் குணம்களை வைத்துகொண்டு வெளியால் நடிப்பவர்கள் . நாங்கள் கோவில் சென்று கும்பிடபோகும் பொழுது எமக்கு புரியாத மொழியில் இவங்களை யார் கத்த சொன்னது ?