Jump to content

பிரிய சிநேகிதி...


Recommended Posts

பிரிய சிநேகிதி,

மன்னிப்பாய்...!

மெளனத் தவம்

கலைத்துச்

சகுனம் பார்க்காது

காதலென்னும் மாய

வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி

வைக்காது...

பள்ளம் விழுந்ததடி

உன் பார்வை

பட்டென்றேன்

நீயும் பட்டென

பதில் சொன்னாய்

என்னைச் சட்டென

வெட்டி விட்டாய்

சட்டென

தேறிவிட்டேன்

வெளியில் சிரித்தவாறு

ஆனால் உள்ளம்

இன்னும்

வலியில் அழுதவாறு

வெள்ளமென

உவகை தோன்றுதடி

உன்னோடு இருக்கும்போது!

இதற்குப் பெயர்

காதலென்று

அர்த்தம் செய்தேன்!

கடைசிவரை

குற்றம் செய்தேன்!

உன் கனவுக்

கட்டிட வாசலில்

கூட நிற்கத்

தகுதியிருக்குமா எனக்கு?

நீ நுழைவுத் தேர்வு

நடத்தவில்லையே

சிநேகிதி...

ஆனாலும் சிநேகிதி

என் அன்புக்

கூட்டுக்குள் நீ

இன்னும்

சிட்டுக் குருவிதான்!

நீ அதிலிருப்பதும்

தூரப் பறப்பதும்

உன் சிறகுகளிடம்...

வாழ்க்கைப் பாதையில்

முகம் மறக்கலாம்

முகவரி மறக்கலாம்

என் அன்பு தடவிய

வார்த்தைகளை

நினைத்துப் பார்

நேரம் கிடைக்கும்

போதெல்லாம்

நேற்றைய

பொழுதெதற்கு

என்று

சாட்டையால்

அடிக்காதே...

கடந்த காலங்களின்

கனவுகள் முக்கியம்!

என் வார்த்தைகளில்

சில சமயம்

வாள்கள்

கட்டியிருப்பேன்

உன்னைக்

காயப்படுத்தவல்ல...

கடைசி வரை

என்னை

ஞாபகப்படுத்த...

பிரிய சிநேகிதி

நான் உன்னை நேசிக்கிறேன்

நீ நேசிக்காதபோது கூட

ஏனெனில்,

நீ மட்டும் தான்

என்னோடு

சிநேகிதம் செய்வாள்!

அழகில்லாதவன்

நான்!

உண்மை தான்

'அழகில்' ஆதவன்

இல்லை!

சிநேகிதி உன்போல்

இன்னும் பலர்

எனை வேண்டாம்

என்று வெறுக்கட்டும்

சோகமே எனக்குச்

சொந்தமாகட்டும்!

காயம்

பெருக்கட்டும்

முட்டாள் நான்

கூட கவி

புனைவேன்

என் கவிகளே

எனக்குத் தலைகோதி

விழி நீர் துடைக்கட்டும்

இதை நீ

'கவிதை' என்கிறாயா

சிநேகிதி..?

'ஆம்' எனில்

நீ 'வேண்டாம்'

என்றதில் கூட

அர்த்தமுண்டு

நல்லது

சிநேகிதி...

தயவுசெய்து

என்னை

மன்னித்துவிடு

மன்மதனுக்கு

ஒரு மரணம்

வராதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கவிகளே

எனக்குத் தலைகோதி

விழி நீர் துடைக்கட்டும் என்றே

அழகாய் உவமித்து வரித்த

கவிதை அழகு அழகு

Link to comment
Share on other sites

கவிரூபன் உங்கள் கவிதை அழகு.

உணர்ச்சிகளும் எண்ணங்களும் கைகோர்த்து நிற்க

வார்த்தைகளும் உவமைகளும் உயரப் பறக்கின்றனவே.

இது உங்கள் கற்பனையா இல்லை அனுபவமா?

Link to comment
Share on other sites

ஆங்... வெறுமனவே கற்பனை என்று சொல்ல முடியாது தான் (அப்ப....? )

அது சரி வானவில் ஆனால் என்று நிறுத்தினால் என்ன அர்த்தம்? கீறிட்ட இடத்தை நிரப்ப என்னால் முடியாது....

கருத்துகளுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி...

Link to comment
Share on other sites

ஆங்... வெறுமனவே கற்பனை என்று சொல்ல முடியாது தான் (அப்ப....? )

அது சரி வானவில் ஆனால் என்று நிறுத்தினால் என்ன அர்த்தம்? கீறிட்ட இடத்தை நிரப்ப என்னால் முடியாது....

கருத்துகளுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி...

அதெல்லாம் சொல்ல மாட்டேன் :lol:

Link to comment
Share on other sites

மெளனத் தவம்

கலைத்துச்

சகுனம் பார்க்காது

காதலென்னும் மாய

வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி

வைக்காது...

பள்ளம் விழுந்ததடி

உன் பார்வை

பட்டென்றேன்

நீயும் பட்டென

பதில் சொன்னாய்

என்னைச் சட்டென

வெட்டி விட்டாய்

சட்டென

தேறிவிட்டேன்

வெளியில் சிரித்தவாறு

ஆனால் உள்ளம்

இன்னும்

வலியில் அழுதவாறு

அழகான கவிதை....

கவிதையில் என்னவோ சோகம் இழையோடுகின்றது...

பலரை கவர்ந்திருக்கின்றது இக் கவிதை ..கவி_ரூபன்!

இக் கவிதைக்கு வந்த கருத்துக்களை விட இதை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கு.

கவனித்தீர்களா? அதை வைத்தே சொன்னேன்.

அத்தோடு உங்கள் கவிகளை வாசித்ததில் பிடித்த இன்னொரு கவி:

காதல்

அடிக்கடி

விருந்துண்ண

அழைக்கின்றது

இலை விரித்து

பந்தி

பரிமாறும்

வேளையில்

அடுத்த

பந்தியில்

அமருமாறு

அறிவிக்கின்றது!

சிறு வரிகளில் பல அர்த்தங்கள் கொண்டு...எழுதுகிறீர்கள்...

தொடருங்கள் உங்கள் கவி பணியை... B)

Link to comment
Share on other sites

கவிதையைப் பார்த்து மேலே நண்பர் ஒருவர் குழம்பியதற்கான காரணம் குறிப்பிட்ட பெயரில் யாழ் களத்தில் ஒரு உறவு இருப்பதன் காரணமாக இருக்கலாம்? :P :P :P

Link to comment
Share on other sites

பிரிய சிநேகிதி,

மன்னிப்பாய்...!

இதற்குப் பெயர்

காதலென்று

அர்த்தம் செய்தேன்!

கடைசிவரை

குற்றம் செய்தேன்!

அழகிய கவிதை

ஹர்மோன்களின் யுத்தம்

அதிகமான முட்டாள்கள்

செய்யும் தவறு.

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க கவிதை நல்லா இருக்கு கவிரூபன். ;)

Link to comment
Share on other sites

உங்கள் ரசனைக்கும் நன்றி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.