-
Tell a friend
-
Topics
-
Posts
-
இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.
-
தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. தமிழகத்துக்கு நன்மை நடக்கவேண்டும் அதனூடு எமக்கு நல்லது நடக்க வேண்டும் என நாம் விரும்புவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எம் தலையெழுத்தையே திருத்த முடியாதவர்கள் எப்படி இன்னொருவனுக்கு வழிகாட்ட முடியும். இறுதியில் யானை பார்த்த குருடனின்கதைதான்...😂
-
Lesson 42 | வைத்திருத்தல் 03 | avoir | French with Pirakalathan | ASCES......! வினா சொற்களை வைத்துக் கொண்டு வசனங்கள் அமைத்தல்......! 👍
-
ஏதோ சீமானை எதிர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் தான் என நினைச்சுக் கொண்டு என்னை சுமா என்றும் ஊடகவியலாளர் நடேசன் என்றும் நினைக்கின்றீர்கள். ஏனென்றால் இந்த இரண்டு மூன்று பேர்தான் சீமானை எதிர்க்கின்றார்கள் என நினைப்பு இது ஆரம்பம் தான் தல. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் புலம்பெயர் தமிழர்கள் சீமானின் பாசிச கட்சிக்கு கொடுக்கும் ஆதரவும் குறைய போகுது நிதியும் குறைவடைந்து பூச்சியமாக போகப் போகுது சனம் முழிச்சுட்டுது இனி சீமானின் ஆதரவாளர்கள் தடா சந்திரசேகர் போன்று புலம்பெயர் தமிழர்களை கரிச்சுக் கட்டுவினம் தமக்கு தெரிந்த அவதூறு மொழியில் சமூகவலைத்தளங்களில் எல்லாம் கேவலமாக பின்னூட்டம் இடுவினம். இறுதியில் தாயக மக்களையும் புலம்பெயர் மக்களையும் சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள் அவர்களுக்கு தெரிந்த ஒரே ஒரு பாசையான அவதூறு பாசையில் பொரிந்து தள்ளுவினம். உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள் அப்ப நான் வரட்டா?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.