Jump to content

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)

Recommended Posts

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

DSC_0510-copy.jpg?resize=800%2C533
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு காவல்துறை தலைமையகம் ஆகியன இணைந்து ‘கவனமாக சென்று வாருங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளன.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 1500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச்சாரதிகள் கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் செயல்முறை காட்சி நாடகங்களும் வீதியில் அரங்கேற்றப்பட்டன

வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே ஒட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

DSC_0414-copy.jpg?resize=800%2C533DSC_0417-copy.jpg?resize=800%2C533DSC_0422-copy.jpg?resize=800%2C533DSC_0427-copy.jpg?resize=800%2C533DSC_0429-copy.jpg?resize=800%2C533DSC_0449-copy.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/88075/

Link to comment
Share on other sites

மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடு. ஆளுநருக்கும் அவருடன் இணைத்து செயற்படும் மாகாண சபை மற்றும் காவல்துறைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடு. ஆளுநருக்கும் அவருடன் இணைத்து செயற்படும் மாகாண சபை மற்றும் காவல்துறைக்கும் நன்றிகள்.

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

எட்டாவது எல்லா சாரதிகளுக்கும் தரமான முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபையின் மாஜி போக்குவரத்து அமைச்சர் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த தான் மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்று அண்மைய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆளுனரின் இந்த அதிரடி நகர்வுக்கு மாஜி போக்குவரத்து அமைச்சரின் கருத்து என்னவாயிருக்கும்.

உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடமைகளை சரிவர புரிந்துகொண்டு வேலை செய்தாலே விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கணிசமாக குறைக்கலாம். இதற்கு ஆளுனரோ முதலமைச்சரோ போக்குவரத்து அமைச்சரோ வீதியில் இறங்கி வேலைசெய்து பந்தா காண்டவேண்டிய அவசியமில்லை. 

வாகனங்களின் குறைபாடுகளையும் பழுதுகளையும் கண்டறிந்து உடனுக்குடன் திருத்தவேலைகளை செய்வதற்கும் பாதசாரிகள் உட்பட வாகனச்சாரதிகளுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி செய்முறையிலும் பாடவகுப்புகளிலும் சித்திபெற்றவர்களுக்குமட்டுமே வாகன ஓட்டுநருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

எட்டாவது எல்லா சாரதிகளுக்கும் தரமான முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ பொலிஸ் மாதிரி நாட்டுப் பற்றுடன் சிறிலங்கா காவல்துறை செயல்படுமானால் எந்த அறிவித்தலும் தேவையில்லை. 

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

அதை இங்கு சுட்டி காட்டிய போது வேண்டிகட்டியது நினைவுக்கு வருது பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

712_C748_F-0_D09-47_E4-81_D2-_ACC011_CD2

5 hours ago, ஈழப்பிரியன் said:

கவனமாக வெட்டுங்கள்.

ஒரு வரியில், சிந்திக்க...   கூறிய விதம் அருமை.

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அடேங்கப்பா! இவ்வளவு அறிவாளியான நீங்கள் ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் போய் மாகாணசபைக்கு ஆலோசகராக இருக்க கூடாது? நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய வேண்டியவை தான், ஆனால் நடைமுறையில் இவ்வளவும் செய்ய பல பத்து ஆண்டுகளாகும். செய்து முடிக்க ஸ்ரீ லங்கா சிங்கப்பூர் ஆகி விடும்.

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ பொலிஸ் மாதிரி நாட்டுப் பற்றுடன் சிறிலங்கா காவல்துறை செயல்படுமானால் எந்த அறிவித்தலும் தேவையில்லை. 

தமிழீழ பொலிஸ்  என்றதும் 1992 டிசம்பரில் தமிழீழம் கடந்து ஊரியானுக்கூடாக யாழ்ப்பாணம் போன காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள். கிளிநோச்சியை வந்தடையத்தான் தெரிந்தது தாக்குதல்கள் காரனாமாக ஊரியானுக்கூடாக படகுகள் ஓடவில்லை என்று.  தமிழீழத்தில் இரவு நிற்க வேண்டி வந்தது. ஒரு தேவாலயத்தில் படுத்தோம். விடிய எழுந்தால் பிரதான வீதியில் கொஞ்சம் பரபரப்பு! பக்கத்தில் இருந்த சாப்பாட்டு கடையில் ஒரு படுகொலை. கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

காலையில் கொலை. மாலையில் காலாற  கிளிநோச்சி நெடுஞ்சாலையில் நடந்தால் ஒரு வயோதிப பெண்ணின் அழுகுரல். சாலையில் அருகில் உள்ள பள்ளமான நிலத்தில் இருந்த அவரது வீட்டு காணிக்குள் ஊர் கழிவு நீரை நகர ஊழியர்கள் கான் வெட்டி விட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களை ஒரு பொறியியலாளர் வழிநடத்தி கொண்டு இருந்தார். நான் மனம் தாங்காமல் அவரிடம் கேட்டேன் ஏன் நீங்கள் சாலைக்கு குறுக்காக வெட்டி மறுபுறம் உள்ள காட்டுக்குள்  கழிவு நீரை விடக்கூடாது என்று. அவர் சொன்னார் இது இயக்கத்தின் மேலிடத்து உத்தரவு என்று. நான் கேள்வி கேட்பதை கண்ட அவரது மேலாளர் தொலைவில் இருந்து மோட்டார் சயிக்கிளில் வேகமாக வந்தார். "இவர் ஆர் கனக்க கதைக்கிறார்?" என்று அவரிடம் காட்டமாக கேட்டார். நான் தலை தப்பியது காணும் என்று நடையை கட்டினேன். 

இதற்கு பிறகு தமிழீழம் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

8 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

அதை அடிக்கடி நினைவுஊட்ட தான் இந்த ஸ்டிக்கர்.

8 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

நீங்கள் அதை சிந்தித்து கண்டுபிடித்து உலகுக்கே வழிகாட்டலாமே? தமிழீழத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள். இனி இது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அடேங்கப்பா! இவ்வளவு அறிவாளியான நீங்கள் ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் போய் மாகாணசபைக்கு ஆலோசகராக இருக்க கூடாது? நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய வேண்டியவை தான், ஆனால் நடைமுறையில் இவ்வளவும் செய்ய பல பத்து ஆண்டுகளாகும். செய்து முடிக்க ஸ்ரீ லங்கா சிங்கப்பூர் ஆகி விடும்.

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

எத்தனை தசாப்தங்களாக இலங்கை - சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கதை விடுகிறோம், ஆனால் அங்குள்ள அரசோ மக்களோ அதை நோக்கி ஒரு அடியேனும் நகர்ந்ததில்லை.

அமேரிக்கா கனடாவில் high way இல் நாய் ஓடுகிறதா அல்லது இத்துப் போன road worthy இல்லாத வாகனங்கள் தான் ஓடுகின்றனவா? 

இலங்கையில் என்றாவது overloaded என்று எந்த வாகனமாவது நிறுத்தப்பட்டிருக்கிறதா?

வடமாகாண சபையை யார்தான் கவனத்தில் எடுக்கிறார்கள்? 

(என்னுடன் கூடப்படித்தவர்களே அரச திணைக்களங்களிலும் வடமாகாண சபையிலும் வேலை செய்கிறார்கள், சில வருடங்களுக்கு முன்னர் " என்னுடன், கூடப்படித்தவனே எனது அறிக்கைக்கு பதில் அனுப்புகிறான் இல்லை" என வடமாகாண சபையில் வேலை செய்யும் நண்பன் குறைபட்டுக் கொண்டான், இப்போ அவனும் அரச திணைக்களத்திற்கு மாற்றலாகிவிட்டான்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

அவர் அப்படித்தான். அரசாங்கம் எது செய்தாலும் செம்பு தூக்கிக்கொண்டு வந்திடுவார்.பிறகுதான் நல்லதா கெட்டதா என்றெல்லாம் யோசிப்பார்.இனிப்பாருங்கோ அதை நியாயப்படுத்த ஒரு பெரிய வகுப்பெடுப்பார்.
அப்பாடா அதை நினைக்க இப்பவே  கண்ணை கட்டுதே.!!

18 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

இப்போ எமது உயிர்களெல்லாம் எமக்கு முன்னே அல்லது பின்னே வாகனம் ஓட்டி வருபவரின் கைகளிலோ அல்லது கால்களிலிலேயே  தங்கி இருக்கிறது.நாம் எவ்வளவு கவனமாக வண்டி ஓட்டினாலும், முன்னாலும், பக்கத்தாலும் பின்னாலும் வந்தெல்லோ இடிக்கிறாங்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

நீங்கள் சொல்வது மிகச்சரியே. இந்த வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் சாலை ஓரங்களில் பெரிய விளம்பர பலகைகளில் எழுதப்படவேண்டும். ஸ்டிக்கரில் அடித்து அதை எமது வாகனத்திலேயே ஓட்டுவதைத்தான் லூசுத்தனமான வேலை என்று மீரா குறிப்பிட்டார்.  அப்படித்தானே மீரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேகம்,சாலைவிதிகளை மீறுவோர்களுக்கு  அதியுச்ச தண்டப்பணம், வாகனம் பறிமுதல், சாரதி அனுமதி பத்திரம் ரத்து போன்றன தண்டனையாக வழங்கப்பட்டாலொழிய விபத்துக்களை கட்டுக்குள் கொண்டுவருவது முடியாத காரியம்.

எதுவும் புரியாத மக்களுக்குத்தான் விழிப்புணர்வு பயன்படும்,

இழப்புக்கள்,வலிகள்,காயங்கள் என எல்லாமே பட்டு தெரிந்த மக்களுக்கு விழிப்புணர்வு என்பது வெறும் நேர விரயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

இப்படிப்பட்டவர் இருந்தால் என்ன இறந்தால் என்ன?சிலவேளை இயக்கம் சொல்லியும் மீறியிருப்பார்.அதனால் இயக்கமே சொல்லி பிளானும் கொடுத்திருக்கலாம்.  

உங்களுக்கு புலிகள் என்றால் எப்பவுமே கிலி கொள்கிறீர்கள்.ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆயிரம் திறமை இருந்தால் அதைப் பாராட்டுங்கள்.இருக்கும் ஓரிரு குறைகுற்றத்தையே தூக்கிப் பிடிக்காதீர்கள்.
இப்படியே போனால் உலகில் எந்த ஒரு கணவன் மனைவி கூட சேர்ந்து வாழ இயலாது.நீங்கள் மனைவிக்கும் மனைவி உங்களுக்கும் 100 வீதமும் பிடிக்கும்படியாக வாழமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

தமிழீழ பொலிஸ்  என்றதும் 1992 டிசம்பரில் தமிழீழம் கடந்து ஊரியானுக்கூடாக யாழ்ப்பாணம் போன காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள். கிளிநோச்சியை வந்தடையத்தான் தெரிந்தது தாக்குதல்கள் காரனாமாக ஊரியானுக்கூடாக படகுகள் ஓடவில்லை என்று.  தமிழீழத்தில் இரவு நிற்க வேண்டி வந்தது. ஒரு தேவாலயத்தில் படுத்தோம். விடிய எழுந்தால் பிரதான வீதியில் கொஞ்சம் பரபரப்பு! பக்கத்தில் இருந்த சாப்பாட்டு கடையில் ஒரு படுகொலை. கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

ஊர் இடத்தை சொல்லாமல் யாரும் கட்டுக்கதை பரப்பலாம் பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊர் இடத்தை சொல்லாமல் யாரும் கட்டுக்கதை பரப்பலாம் பாஸ் .

இவர்கள்...இப்படிப்பட்டவர்கள் தான் புலிகளால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஏன் சந்ததிக்குமே ஆபத்து என்று சொல்லி சிற்றிசன் எடுத்து சுகபோக வாழ்கை வாழ்கின்றவர்கள்.
இலங்கை பூர்வீகமே தெரியாதவர்கள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை நான் ஓட்டோவில் போகும் போது ஒரு பாதுகாப்பில்லாத ரயில் கடவையில் அதன் சாரதி எந்தப் பக்கமும் பாக்காமல் வேகத்தையும் குறைக்காமல் போனார்.என்னப்பா இப்படி போகிறீகள் என்டு கேட்டதற்க்கு இது ரயில் வாற நேரம் இல்லை எங்களுக்கு இது எல்லாம் வலு நோமல் என்றார்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

நீங்கள் அதை சிந்தித்து கண்டுபிடித்து உலகுக்கே வழிகாட்டலாமே? தமிழீழத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள். இனி இது ?

புலிகளின் நடவடிக்கைகளை  நீதி நியாயம் ஒழுங்கு  என சிங்கள மக்களும் அரசும் மெச்சுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு முறை நான் ஓட்டோவில் போகும் போது ஒரு பாதுகாப்பில்லாத ரயில் கடவையில் அதன் சாரதி எந்தப் பக்கமும் பாக்காமல் வேகத்தையும் குறைக்காமல் போனார்.என்னப்பா இப்படி போகிறீகள் என்டு கேட்டதற்க்கு இது ரயில் வாற நேரம் இல்லை எங்களுக்கு இது எல்லாம் வலு நோமல் என்றார்.?

முன்னர் ஓட்டோவுக்கு இரண்டு பக்கத்தாலும் ஏறி இறங்கலாம்.இப்போ என்ன நடந்தாலும் ஒரே ஒரு பக்கத்தால்த் தான் ஏறி இறங்கலாம்.ஆனால் சாரதி இரண்டு பக்கமும் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.