Jump to content

சாவ­கச்­சே­ரி­யைப் பிரிக்க அர­சி­தழ் அறி­விப்பு தயார் – யாழ். மாவட்­டச் செய­லர்


Recommended Posts

சாவ­கச்­சே­ரி­யைப் பிரிக்க அர­சி­தழ் அறி­விப்பு தயார் – யாழ். மாவட்­டச் செய­லர்

 

 

download-1-6.jpg

 
 
 
 

சாவ­கச்­சேரிப் பிர­தேச செய­லர் பிரிவை இரண்­டா­கப் பிரிப்­ப ­தற்­கான அர­சி­தழ் அறி­வித்­தல் பத்­தி­ரம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன்.
அவர் தெரி­வித்ததா­வது:-

50 கிராம அலு­வ­லர் பிரி­வு­களை விட அதி­க­மான கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளைக் கொண்ட பிர­தேச செய­லர் பிரி­வு­களை இரண்­டா­கப் பிரிக்­கும் யோசனை கொள்­கை­ய­ள­வில் நீண்­ட­கா­ல­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
ஏனைய மாவட்­டங்­க­ளில் இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­போ­தும் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அண்­மை­யில் தலைமை அமைச்­ச­ரி­டம் இது தொடர்­பில் சுடு்­டிக்­காட்­டப்­பட்­டது. சாவ­கச்­சே­ரிப் பிர­தேச சபையை இரண்­டா­கப் பிரிப்­ப­தன் ஊடா­கவே அபி­வி­ருத்தி அடைய முடி­யும் என்று சாவ­கச்­சேரி பிர­தேச செய­ல­ரும், ஏனை­யோ­ரும் அந்­தச் சந்­திப்­பில் திட­மா­கக் கூறி­னர். அதை­ய­டுத்து சாவ­கச்­சே­ரிப் பிர­தேச செய­லர் பிரிவை இரண்­டா­கப் பிரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யைத் தலைமை அமைச்­சர் எடுத்­தார். அதற்­கான அர­சி­தழை தயார்ப்­ப­டுத்­தப் பணித்­தார்.

 

தற்­போது அர­சி­தழ் அறி­வித்­தல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டின் ஏனைய மாவட்­டத்­தி­லும் சில பிர­தேச செய­லா­ளர் பிரி­வு­கள் இரண்­டா­கப் பிரிப்­ப­தற்­கான முற்­பா­டு­கள் பூர்த்தி செய்­யப்­பட்டு அர­சி­தழ் அறி­வித்­த­லுக்­காக அனுப்­பப்­ப­டு­கின்­றது. அவற்­று­டன் இணைந்து சாவ­கச்­சே­ரிப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வை­யும் இரண்­டா­கப் பிரிப்­ப­தற்­காக அறி­வித்­த­லும் வெளி­யா­கும்.

அர­சி­தழ் அறி­விப்­பின் பின்­னர் தற்­போ­துள்ள சாவ­கச்­சே­ரிப் பிர­தேச செய­லர் பிரி­வில் 32 கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளும், புதி­தாக உரு­வாக்­கப்­ப­டும் கொடி­கா­மம் பிர­தேச செய­லர் பிரி­வில் 28 கிராம அலு­வர் பிரி­வு­க­ளும் உள்­ள­டங்­கும். – என்­றார்.

http://newuthayan.com/story/09/சாவ­கச்­சே­ரி­யைப்-பிரிக்க-அர­சி­தழ்-அறி­விப்பு-தயார்-யாழ்-மாவட்­டச்-செய­லர்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.