Jump to content

மன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)


Recommended Posts

மன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தோகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மற்றும் இன்று புதன் கிழமை(18) காலை மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.

மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவு படுத்தி அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்ற நிலையில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் இரு தினங்களும் சந்தேகத்திற்கிடமாக வகையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ; 36 வது நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

IMG_6999.jpg?resize=800%2C450IMG_7010.jpg?resize=800%2C450IMG_7013.jpg?resize=800%2C450

 

http://globaltamilnews.net/2018/88270/

Link to comment
Share on other sites

மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளை கொழும்பு கொண்டு செல்ல நடவடிக்கை?

 

 

imageproxy-4-750x430.jpg

 
 

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு பல்கலைக்கழக சட்ட மருத்துவ அதிகாரி அங்கு எடுத்துச் செல்வதற்காக மன்னார் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் நகர் நுழை வாயில் பகுதியில் கடந்த மார்ச் மாத பகுதியில் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அகழ்வுகளில் எலும்புக் கூடுகளும், எலும்புகளும் மீட்கப்பட்டன.

இன்று இரண்டு எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இது வரை எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எச்சங்கள் 43 பெட்டிகளில் அடைக்கப்பட்டு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

முதலில் எடுக்கப்பட்ட ஒரு தொகுதி முழு எலும்புக்கூடுகளை கொழும்பு பல்கலைக்கழக சட்ட மருத்துவ அதிகாரி அங்கு எடுத்துச் செல்வதற்காக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://newuthayan.com/story/15/மீட்கப்பட்ட-எலும்புக்-கூடுகளை-கொழும்பு-கொண்டு-செல்ல-நடவடிக்கை.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.