யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்

Recommended Posts

மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்
 
 

அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார்.   

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்.  

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.   

ஆனால், பொதுவாகவே பாரியளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் விடயத்திலேயே, அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.   

ஜனாதிபதி கூறுவது சரியென்றால், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னர், அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது.  

 அதாவது, சிறையில் இருந்துகொண்டே அந்தப் போதைப் பொருள் வியாபாரிகள், தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உதவும் சிறைச்சாலை அதிகாரிகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவதே ஆகும்.   

சிறைக் கைதிகளுக்கு, அவர்கள் விளக்கமறியல்க் கைதிகளாக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்ட கைதியாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.  

 ஆனால், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட செல்வந்தர்களும் போதைப்பொருள் தொடர்பாகச் சிறைக்குச் சென்றவர்களும் பாதாள உலகக் குண்டர்களும் சிறைச்சாலைகளில் அலைபேசிகளைப் பாவிப்பது, சாதாரண விடயமாகிவிட்டது.   

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில், சந்தேக நபர்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ்,  கசுன் பலிசேன ஆகியோர், படுத்துறங்கும் மெத்தையின் கீழ், ஐந்தாறு அலைபேசிகளை மறைத்து வைத்திருந்தபோது, அவை கைப்பற்றப்பட்டதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

 ஏனைய கைதிகள், தரையில் வெறும் ‘கன்வஸ்’ பாயை விரித்துப் படுக்கையில், அலோசியஸும் பலிசேனவும் மெத்தையில் படுப்பது, அப்போதுதான் தெரிய வந்தது.   

அதாவது, பணம் இருந்தால், சிறைச்சாலைகளில் பல வசதிகளைப் பெற முடியும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. சிறைச்சாலைகளிலுள்ள போதைப் பொருள் விற்பனையாளர்களும் பணத்தை வீசித்தான், தமது காரியத்தைச் செய்து கொள்கிறார்கள் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.   

இது இவ்வாறு இருக்க, சிறைக்குச் சென்ற பின்னரும், போதைப்பொருள் தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி கூறுகிறார்.   

சிறைச் சாலைகளுக்குள் போதைப் பொருள் செல்வதைத் தடுக்கத் தம்மால் முடியாது என, ஜனாதிபதி முடிவு செய்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது.   

ஏனெனில், போதைப்பொருள், சிறைக்குள் செல்லும் வழிகளை அடைக்க முடியும் என்றால், எவரும் சிறையிலிருக்கும் போதே, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட முடியாமல் போய்விடும். அப்போது, அவ்வாறானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அவசியமும் ஏற்படாது.   

ஜனாதிபதியின் வாதத்தைப் பாவித்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த கோட்டாபயவாதிகளான சில அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் 2012 ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில், 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முயற்சிப்பதையும் இதற்குள் அவதானிக்க முடிகிறது.   

சிறைச் சாலைகளில் இடம்பெறும் இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காகவே, அன்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அதற்காக இன்று சில அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த, அரசியல்வாதிகளும் பிக்குகளும் வாதிடுகின்றனர்.   

ஆனால், குற்றமிழைத்தாலும் நீதிமன்றத்துக்கன்றி, பொலிஸாருக்கோ இராணுவத்தினருக்கோ, தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை என்பது, அவர்களுக்குத் தெரியாது போலும்.   

உண்மையிலேயே, மரண தண்டனை என்பது, பெரும் சிக்கலான விடயமாகும். அதை நிறைவேற்ற வேண்டுமா, இல்லையா என்பதற்கு, நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிக்க முடியாது.  

 நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீங்கிழைக்கும் சிலரைத் திருத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை எதிர்க்க முடியாது. 

அதேவேளை, சட்டத்துறையும் நீதித்துறையும் ஊழலில் மூழ்கியிருக்கும் நிலையில், நிரபராதிகள் தண்டிக்கப்படும் அபாயம் இருப்பதால் மரண தண்டனையை ஆதரிக்கவும் முடியாது.   

மரண தண்டனை வழங்குவதன் மூலம், சமூகத்தில் குற்றங்கள் குறையுமா என்ற கேள்வியும் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது.   

மக்களைக் குற்றமிழைக்கத் தூண்டும் வறுமை, கலாசாரச் சீரழிவு, அரசியல்வாதிகளினதும் நாட்டின் தலைவர்களினதும், குற்றங்களுக்கான ஒத்துழைப்புகள் போன்ற சூழ்நிலைமைகள் மாறாதிருக்க, வெறுமனே மரண தண்டனையால் மட்டும், குற்றங்களைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாது.   

சிறுவர் விவகார‍ங்களுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் பலமாக இருந்த காலத்தில் சமூக ரீதியான குற்றங்கள், இடம் பெறவில்லை என்பதைக் கூற முனைந்ததில், தமது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தார்.   

புலிகளின் நிர்வாகத்தின் கீழிருந்த பகுதிகளில், குற்றங்கள் குறைய, புலிகளின் மரண தண்டனை உள்ளிட்ட, கடுமையான தண்டனைகளே காரணமாகின  என்பது, சகலரும் அறிந்த விடயமாகும். 

புலிகளும் கல்வியின் மூலம், மக்களின் மனதை மாற்றிக் குற்றங்களைக் குறைத்தார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அவ்வாறாயின் புலிகள் தோல்வியடைந்த பின்னர், அந்த அறிவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுகிறது.   

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வறுமை இருந்த போதிலும், தமது இரும்புப் பிடியால், தலைவர்கள் குற்றங்களுக்கு உதவுவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பது போன்ற ஏனைய நிலைமைகள் தலைதூக்க, புலிகள் இடமளிக்கவில்லை.   

எனவே, அவர்கள் மறைந்த உடன் குற்றச்செயல்கள் தலைதூக்கின. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால், அவ்வாறானதோர் நிலைமையை உருவாக்க முடியாது.   

அண்மையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடபகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கேட்டுக் கொண்டார்.   

மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைவதில்லை என்றால், ஏனைய தண்டனைகள் மூலம் குற்றச் செயல்கள் குறைகின்றனவா என்றும் கேள்வி எழுப்பலாம்.   

அவ்வாறு தொடர்ந்து தர்க்கித்தால், எந்தவொரு தண்டனையும் அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றனவா, இல்லையா என்பதைக் குற்றமிழைக்க மக்களைத் தூண்டும் அல்லது குற்றங்களுக்குள் மக்களைத் தள்ளிவிடும் சூழ்நிலைமைகளற்ற ஒரு சமூகத்தில் தான், சரியான முறையில் பார்க்கலாம். அவ்வாறானதொரு சமூகம் எங்கே இருக்கிறது?  

மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமான, ஊழலற்ற பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் நாட்டில் இருக்கின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.  

 ஊழல் தொடர்பாக ஆராயும் ‘டிரான்பெரன்ஸி இன்டர்நஷனல் நிறுவனம்’ வருடாந்தம் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம், கடந்த காலங்களில், இலங்கை பொலிஸ் திணைக்களமும் நீதித்துறையும் கல்வித் துறையும் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தன.   

தென் பகுதியில், கொட்டதெனியாவையில் 2015 ஆம் ஆண்டு சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட போது, பொலிஸார் ‘கொண்டயா’ என்றழைக்கப்படும் நபரொருவரைக் கைது செய்து, அந்தக் குற்றச் செயலை, அவரே செய்ததாக, அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலமொன்றையும் பெற்றிருந்தனர்.   

ஆனால், அதே கொட்டதெனியாவ பொலிஸார், பின்னர் மற்றொருவரைக் கைது செய்து, வழக்குத் தாக்கல் செய்து, ‘கொண்டயா’வை விடுவித்தனர். முன்னர் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், எவ்வாறு பெறப்பட்டது என்பதை, அதன் மூலம் ஊகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

அதே ஆண்டு, வடபகுதியில் புங்குடுதீவில், வித்தியா என்னும் மாணவியும் அதேபோல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சிலரைப் பாதுகாக்க, உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் முன்வந்தமை பின்னர் அம்பலமாகியது.   

இப்போதும், வட பகுதியில் போதைப்பொருள் போன்ற குற்றங்களோடு, பொலிஸாருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.   

இதேபோல், அரசியல்வாதிகளின் தேவைக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சிலருக்குச் சாதகமாகவும் பொலிஸார், நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் உள்ளன.   

தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த ‘தயா மாஸ்டர்’ அவ்வாறான ஒருவராவர். புலிகளின் சார்பில், ஆயிரக் கணக்கில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு, பல ஊடகவியலாளர் மாநாடுகளை ஏற்பாடு செய்தவர் அவர். ஆயினும், அவருக்குப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறுவதற்கு, ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.   

அண்மையில், இனக் கலவரங்கள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய போன்ற பகுதிகளிலும், அதற்கு முன்னர் இனக் கலவரம் ஏற்பட்ட அளுத்கம, பேருவல, வெலிபன்ன போன்ற பகுதிகளிலும், பொலிஸார் பக்கச் சார்பாகச் செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.   

இவ்வாறு குற்றத்தடுப்பு விடயத்தில், பொலிஸார் எதையும் செய்யக்கூடிய நிலையில் இருக்க, நீதித்துறையும் இப்போது சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.   

அண்மையில், சுகந்திகா பெர்னாண்டோ, நாகாநந்த கொடிதுவக்கு என்ற இரண்டு சட்டத்தரணிகள், பகிரங்க மேடையில் நீதித்துறையில் காணப்படும் பல விடயங்களை அம்பலப்படுத்தினர்.   

குற்றத்தடுப்புத்துறையும் நீதித்துறையும் இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வரும் நிலையில், மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிலையும் நாட்டில் இருந்தால், ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.   

ஆயிரம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது பயங்கரமான நிலைமையாகும் எனப் பலர் இதனாலேயே கூறுகின்றனர். 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வாறிருந்திருக்கும்?  

சில சமயத் தலைவர்களும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவை வரவேற்றுள்ள நிலையில், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதை எதிர்த்துள்ளன.   

சில அரசியல்வாதிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பலரது எதிர்ப்பில், நேர்மையில்லை என்றே கூற வேண்டும். 

ஏனெனில், இந்த நாட்டில் ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் ஒன்றில், சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டுள்ளன. அல்லது, அவற்றை அங்கிகரித்துள்ளன. அதாவது, சட்ட விரோதமான மரணதண்டனையை, அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களும் எப்போதாவது அங்கிகரித்துள்ளனர்.   

1970 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால், 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணியினரும், தமது எதிரிகளான சாதாரண மக்களை, எவ்வித சட்டபூர்வமான விசாரணையுமின்றிக் கொலை செய்தனர்.   

கைது செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேரை, அரச படைகளும் எவ்வித விசாரணையுமின்றிக் கொலை செய்தனர். அப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சம சமாஜக் கட்சியும் கொம்யூனிஸ்ட் கட்சியுமே பதவியில் இருந்தன.  

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி, 1988-89 ஆண்டுகளில் இடம் பெற்ற போதும், இரு சாராரும் சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டனர். அப்போது, அரச படைகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் மேலெனக் கூறப்படுகிறது.   

மக்கள் விடுதலை முன்னணியினர் கொம்யூனிஸக் கொள்கை கொண்டவர்கள் என்பதால், மேற்கத்திய மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, ‘ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்’ போன்ற அமைப்புகளும் அவற்றைப் பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.   

வடக்கு, கிழக்கு போரின் போது, காணாமல் போனவர்களில் 19,000 பேர் விடயத்தில், பரணகம ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அவ்வாறு காணாமற்போனவர்கள் போர்க்களத்தில் சண்டையில் ஈடுபட்ட போதோ அல்லது போரின் போது இரு சாராருக்கும் இடையில் சிக்கியோ கொல்லப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு நடந்த கதியையும் மதகுருமார்கள் உள்ளிட்ட வடக்கிலும் தெற்கிலும் பலர் வரவேற்றுள்ளனர். அல்லது அங்கிகரித்து நியாயப்படுத்தியுள்ளனர்.   

புலிகளும் மரண தண்டனை விதித்தார்கள். அவற்றைப் பல தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வரவேற்றன; அல்லது அங்கிகரித்தன. எனவே, தாம் விரும்பாதவர்களுக்கு சட்டபூர்வமாகவோ சட்ட விரோதமாகவோ மரண தண்டனை வழங்குவதையே, ஏறத்தாழ சகலரும் விரும்புகின்றனர். அத்தோடு, தாம் விரும்புவோர் அல்லது நேசிப்போர் விடயத்தில், மனித உரிமைகளையும் வலியுறுத்திக் கொள்வர்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மரண-தண்டனை-விடயத்தில்-நேர்மையான-ஒருவரைத்-தேடித்-தாருங்கள்/91-219176

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, நவீனன் said:

புலிகளும் மரண தண்டனை விதித்தார்கள்.

இதென்ன கோதாரியாய் இருக்கு புலிகள்  பயங்கரவாதிகள்  ,தீவிரவாதிகள் என்று விட்டு இப்ப புலிகளை போல் மரணதண்டனை குடுப்பதுக்கு முண்டுபட்டுகொண்டு நிக்கினம் சொரிலங்கன் சோஷலிச குடியரசு ஆட்கள் .

இப்ப விளங்கனும் புலி என்பது யார் என்று அவர்கள் மக்களுக்காகவே போராடினார்கள் மடிந்தார்கள் கிபிர் மல்ரிபரல் அடிகளில் கூட தமிழ்  மக்கள் குற்ற செயல்கள் அறவே இல்லாமல்  நிம்மதியாய் இருந்தார்கள் .இப்ப புலி இல்லை ஆட்ச்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு நாள் நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கையை குடுக்க வக்கற்று இருக்கினம் .

Share this post


Link to post
Share on other sites
மைத்திரியின் கிணறு
 

மரண தண்டனை பற்றிய பேச்சுகள் திரும்பவும் ஒரு முறை சூடு பிடித்திருக்கின்றன.  

 இலங்கையின் வரலாறு நெடுகிலும், குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலங்களில், மரண தண்டனையை அமுலாக்குவது பற்றி, அவ்வப்போது உரத்துப் பேசப்படுவதும், சிறிது காலத்தில் அந்த விவகாரம் ‘சப்பென்று’ அமுங்கிப் போவதும், வழமையாக இருந்து வருகிறது.   

அந்த வகையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைக்குள்ளிருந்து கொண்டே, அதே குற்றத்தைச் செய்கின்றவர்களுக்கு, மரண தண்டனையை அமுலாக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருக்கின்றமை, அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

ஆதிகாலத்திலிருந்தே மரண தண்டனையை அரசுகள் அமுல்படுத்தி வருகின்றன. அதற்குச் சமாந்தரமாக, மரண தண்டனைக்கு எதிரான குரல்களும் வீரியத்துடன் ஒலித்து வருகின்றன.   

இலங்கையில், சுதந்திரத்துக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமராவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, மரண தண்டனையை இல்லாமலாக்கினார். ஆனால், பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டமையை அடுத்து, 1959ஆம் ஆண்டு, மீண்டும் மரண தண்டனை அமுலுக்கு வந்தது.  

ஒரு கட்டத்தில், 1978 ஆம் ஆண்டு, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மரண தண்டனை தொடர்பாக, அரசமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.  

 அதற்கிணங்க, குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது.   

மேலும், ஜனாதிபதியின் ஒப்புதலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பெறப்படுதல் அவசியமாக்கப்பட்டது.  

இலங்கையில் மரண தண்டனை அமுலில் உள்ள போதும், 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.  

 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ஜே.எம். சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதுவே, இலங்கையில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட, சட்ட ரீதியான மரண தண்டனையாகும்.  

ஆனாலும், இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிற குரல்கள், அவ்வப்போது மேலெழுந்து வருகின்றமையும் கவனத்துக்குரியது.   

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், மரண தண்டனையை அமுலாக்க வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தார். ஆனால், அதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. அதன் காரணமாக, அந்த யோசனையை அவர் கைவிட்டார்.  

பிறகு, மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய, 2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து, மரண தண்டனை அமுலாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.   

நீதிபதிகளின் உயிருக்கே அச்சுறுத்தல் எழுந்த போது, மரண தண்டனையை அமுலாக்குகின்றமை பற்றி அதிகம் பேசப்பட்டது. நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் ‘பொட்ட நௌபர்’ எனப்படுகின்ற எம்.எம். நௌபர் என்பவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.  

இவ்வாறாக, வரலாற்றின் தொடர்ச்சியில்தான், மரண தண்டனையை அமுலாக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கையில் எடுத்திருக்கிறார்.  

இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம், மிகத் தீவிரமானதொரு கட்டத்தை அடைந்துள்ளமையை அடுத்தே, இவ்வாறானதொரு முடிவுக்கு ஜனாதிபதி வந்துள்ளார். குறிப்பிட்ட சில காலங்களாக, இலங்கை, உலகளவில் போதைப் பொருள் வர்த்தகத்துக்கான முக்கிய தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதெனும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.   

இதில், வெட்கத்துக்கு உரியதோர் உண்மை என்னவென்றால், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கணிசமானோர், உள்ளிருந்து கொண்டே வெளியிலுள்ள போதைப் பொருள் வர்த்தக வலையமைப்பை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும்.   

இதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால்தான், இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, தான் கையொப்பமிட்டு உத்தரவு வழங்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.  

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான, முன் ஆயத்த வேலைகளும் தொடங்கி இருக்கின்றன.   

இலங்கையில் மரண தண்டனை, தூக்கிலிட்டு நிறைவேற்றப்படுகின்றமை அறிந்ததே. அதனால், மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.   

அதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 18 பேரின் விவரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம், நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.  

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அமைச்சரவைக்குள் இருக்கின்ற மிக முக்கிய அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர ஆகியோர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.   

மரண தண்டனையை அமுலாக்குவதன் மூலம், எதை அடைய நினைக்கிறார்களோ, அதை ஒருபோதும் எட்ட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்த கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் இவர் அமைச்சரவை இணைப் பேச்சாளர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.  

இன்னொரு புறமாக, மரண தண்டனையை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை, இலங்கையின் மிக முக்கிய கிறிஸ்தவ மதத் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றுப் பேசியுள்ளமை மிகவும் கவனத்துக்குரியது.   

மேலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து வெளியில் குற்றச் செயல்களை நடாத்துவதற்குக் காரணமாக இருக்கின்ற கைதிகளுக்கு, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உதவியளிப்பதாகவும் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  

மறுபுறமாக, மரண தண்டனையை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. அப்படியொரு யோசனை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், அதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை அந்த ஆணைக்குழு வலியுறுத்தி உள்ளது.  

மரண தண்டனையை அமுல்படுத்து -வதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு, இன்னும் எதிர்ப்புகள் கிளம்புவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன. ஆனாலும், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நிதியுதவி அளிக்கின்ற பிரதான நாடுகளின் எதிர்ப்புகளை, இந்த விவகாரத்தில் இலங்கை சந்திக்கும் அபாயம், மிகவும் குறைவாகவே உள்ளமை ஜனாதிபதிக்கு ஆறுதலானதாகும்.  

 ஏனெனில், உலகில் மரண தண்டனையை நிறைவேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை ஆகும்.   

உலகில் 53 நாடுகள், மரண தண்டனையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றில் 23 நாடுகளில், கடந்த வருடம் மட்டும் 993 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவென, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும், உண்மையான தொகை, இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.   

எவ்வாறாயினும், 2016, 2015ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2017ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் தொகை குறைவானதாகும். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர், இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.  

ஆனால், தற்போது இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   

அதிலும், இந்தக் குற்றத்துக்காக ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்து கொண்டே வெளியில் அதே குற்றத்தை நடாத்தி வருகின்றவர்களுக்கே, மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.   

இந்த இடத்தில், மிக நேர்மையுடன் சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கின்ற மரண தண்டனைக் கைதிகள், அங்கிருந்து கொண்டே வெளியில் மிகப் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால், அதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவி நிச்சயமாகக் கிடைத்திருக்க வேண்டும்.  

 கடந்த மார்ச் மாதம் மட்டும், வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளிருந்து அங்குள்ள கைதிகள் திருட்டுத்தனமாக 3,950 தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர் என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்திருக்கின்றார்.   

இவ்வாறான அழைப்பு ஒன்றுக்கு 2,000 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த அழைப்புகள் சென்றிருக்கின்றன.  

ஆக, சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவியின்றி, இவையெல்லாம் நடந்திருக்க முடியாது. குற்றவாளிகளுக்கு இவ்வாறான ‘உதவிகள்’ செய்வதை, வருமானம் தருகின்ற தொழிலாக மேற்கொண்டு வரும், சிறைச்சாலை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அங்கு உள்ளவரையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, குற்றச்செயல்களை மேற்கொள்கின்றமையைத் தடுப்பதென்பது சாத்தியமாகாது.   

இந்த இடத்தில், கிணற்றுக்குள் பூனை விழுந்து, இறந்த கதையை நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ஆளொருவரின் வீட்டுக் கிணற்றுக்குள் பூனையொன்று விழுந்து, இறந்து விட்டது. 

அதன் காரணமாக, கிணற்று நீர் அசுத்தமடைந்ததோடு, நாற்றமெடுக்கவும் தொடங்கியது. இதைக் கண்ட வீட்டுக்காரர், கிணற்றிலுள்ள நீரை இறைக்கத் தொடங்கினார். அதேநேரம் கிணற்றுக்குள் தண்ணீரும் ஊறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் நாற்றம் அகலவில்லை. வீட்டுக்காரரும் விடாமல் தண்ணீரை இறைத்துக் கொண்டேயிருந்தார். ஆனாலும், கடைசி வரையில் கிணற்றிலிருந்து அசுத்தமான நாற்றம் அகலவேயில்லை.   

சரியாகச் சிந்தித்திருந்தால், கிணற்றில் விழுந்த பூனையை முதலில் அவர் வெளியே எடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அசுத்தமான நீரை வெளியே இறைத்திருக்க வேண்டும். அசுத்தத்தை உள்ளே வைத்துக் கொண்டு, துப்புரவு செய்ய முடியாது என்பதை, அந்த வீட்டுக்காரர் விளங்கிக் கொள்ளவில்லை.  

சிறைச்சாலைகளில் உள்ளவர்கள், வெளியில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை உள்ளிருந்து கொண்டே இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், முதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உதவி செய்கின்ற சிறைச்சாலை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.   

மேலே சொன்ன கதையில், கிணற்றுக்குள் செத்து மிதந்த பூனைகளுக்கு ஒப்பானவர்களாகத்தான் இந்தச் சிறை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் பார்க்க முடிகிறது. இவர்களை அப்படியே வைத்துக் கொண்டு, சிறைச்சாலைகளை ‘துப்புரவு’ செய்ய முடியாது என்பதையும் ஜனாதிபதி விளங்கிக் கொள்தல் அவசியமாகும்.   

இன்னொருபுறம், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முக்கியமானவையாகும்.   

குற்றம் புரிந்த ஒருவருக்குத் தண்டனை வழங்கி, சிறையில் அடைப்பதற்கு நோக்கங்கள் உள்ளன. குற்றம் புரிந்த நபர், தனது பிழையை நினைத்து வருந்தி, திருந்துவதற்காகவே சிறைத்தண்டனைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.   

ஆனால், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பலருக்கு, தலைகீழான அனுபவங்களே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப், அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.   

அதாவது, “சிறைக்கூடங்கள் சீர்திருத்தக் கூடங்களாக மாற்றப்படும்போதே, போதைப்பொருள் குற்றவாளிகளைக் குறைக்க முடியும். போதைப்பொருள் தொடர்பான சிறியதொரு குற்றத்துக்காக சிறைக்குச் செல்லும் ஒருவர், வெளியேறும்போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டு வருகிறார்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை நாட்டில் இல்லாதொழிப்பதற்காக, ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கையின் தொடக்கப் புள்ளி, சரிதானா என்கிற சந்தேகம் மீளமீள எழுகின்றமையைத் தவிர்க்க முடியாமலுள்ளது.   

செத்துப்போன பூனையை வெளியே எடுத்துப் போடாமல், கிணற்று நீரை இறைப்பதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகின்றார் என்பதை, அவரின் காதுகளில் யாரேனும் ஓதி விட மாட்டீர்களா?   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியின்-கிணறு/91-219128

Share this post


Link to post
Share on other sites
மரண தண்டனையெனும் கூச்சல்
 
 

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் அமுல்படுத்தப்படாமல் உள்ள மரண தண்டனையை, மீளவும் அமுல்படுத்துவதற்கான முடிவை, இலங்கையின் அமைச்சரவை எடுத்திருக்கிறது. இதற்காக முன்னின்றவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமானவர்.  

2015ஆம் ஆண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, ஜனாதிபதியால் கூறப்பட்ட காரணம், சிறுவர் துஷ்பிரயோகம், கொலைகள் ஆகியவற்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு மரண தண்டனை வழங்குவது என்பதாகும். ஆனால் இப்போது கூறப்படும் காரணம், போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பது என்பதாகும். எனவே, வெறுமனே இரண்டரை ஆண்டுகளில், என்ன காரணத்துக்காக மரண தண்டனை வேண்டுமென்பதிலேயே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.  

இது தான், உண்மையிலேயே என்ன காரணத்துக்காக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முயலப்படுகிறது என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அப்போது சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் முக்கியமானவை என்றால், இப்போது போதைப்பொருள் விடயங்கள் முக்கியமானவையாக, மக்கள் உணர்கிறார்கள். மக்களின் அவ்வுணர்வைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீளக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, குற்றங்களைக் குறைக்கும் உண்மையான எண்ணம் இருக்கிறதா என்பது சந்தேகமே.  

மக்களைப் பொறுத்தவரை, உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைத்து விடயங்களிலும் உறுதியான, சரியான முடிவை அவர்களால் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் தான், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். மக்களுக்கு அவசியமான முடிவுகளை, ஆராய்ந்தறிந்து எடுக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்குத் தான் இருக்கிறது. மக்களின் தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள், அவர்கள் தான்.  

அரசியல்வாதிகள் என்று வரும் போது, அவர்கள் நடந்துகொள்ளக் கூடிய வகைகளில், இரண்டு பிரதான பிரிவுகள் இருக்கின்றன:  

1. மக்களுக்கு ஏற்கெனவே இருக்கின்ற சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் மேலும் வலுவூட்டுவது. மக்களின் பலவீனங்களை மேலும் பயன்படுத்தி, அவர்கள் விரும்புகின்ற, ஆனால் நீண்டகாலத்தில் அவர்களுக்குப் பயன்தராத, முடிவுகளை எடுப்பது.  

2. மக்களுக்குப் பிடிக்காத விடயங்கள் குறித்து விளக்கமளித்து, மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தி, மக்களுக்குத் தேவையான முடிவுகளை எடுப்பது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த பரம்பரை பற்றிக் கவலைப்படுவது.  

இதில், மரண தண்டனைக்கு மக்களிடத்தில் இருக்கும் ஆதரவைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற முயலும் அரசியல்வாதிகள், முதல் வகையினர்.  

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன என்பது தான், மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமெனக் கருதுவதற்கான காரணமாக, ஜனாதிபதி சிறிசேன கூறும் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருட்களை விநியோகிப்போர் அல்லது அது தொடர்பான கடத்தலில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தான் அவர் கூறுகிறார்.  

ஆனால், முக்கியமானதொரு விடயம் இங்குள்ளது. சிறைச்சாலைகளுக்குள், உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லவே பெருமளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அவற்றுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடிய நிலைமை எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  

அப்படியானால், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு, போதைப்பொருள் விநியோகத்துக்கு அனுசரணை வழங்குவதென்பது, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதற்குப் பின்னரும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதை விட மோசமானதல்லவா? அப்படியாயின், இலங்கையின் சட்ட அமுலாக்கத்துறை, பயனற்றதாக இருக்கிறது என்பதை, ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறார்களா?  

அப்படியாயின், அவர்களுக்கான தண்டனைகளை வழங்கி, அவர்களைக் களையெடுக்க வேண்டியது அவசியமல்லவா? அதற்கான என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன?   

மறுபக்கமாக, பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அரசியல்வாதிகள் விடயத்தில் மாத்திரம், விசாரணைகளும் வழக்குகளும் தண்டனைகளும் தாமதிக்கும் விந்தை ஏன்? பாகுபாடான நீதி நடைமுறை தான் இலங்கையில் இருக்கிறது என்பது அதற்கான அர்த்தமா?  

நீதித்துறை என்று வரும் போது தான், அதைப் பற்றியும் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது. உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும், இலங்கையின் நீதித்துறை தொடர்பான கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்பகத்தன்மை இல்லாத நீதித்துறை ஒன்றை வைத்துக்கொண்டு, மரண தண்டனை எனும், கொடூரமான தண்டனை பற்றிக் கலந்துரையாட முடியுமா? 

போர்க் காலங்களில், ஏராளமான தமிழர்கள், சட்ட அமுலாக்கத் துறையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, தாங்கள் செய்யாத குற்றங்களைச் செய்ததாக ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இலங்கையின் நீதித்துறை, அனைத்து இனத்தவர்களையும் சமமாக மதிக்கிறது என்பதை, யாராவது உறுதியாகக் கூற முடியுமா?  

உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட, தவறான முறையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, பல தசாப்தங்களை, தவறாகச் சிறையில் கழித்த ஏராளமானோர் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது. இலங்கை எம்மூலைக்கு?  

இப்படி, அடிப்படையான விடயங்களிலேயே, மரண தண்டனை என்பது பொருத்தமற்ற தண்டனையாகத் தெரியும் போது, நுணுக்கமான வாதங்களைப் பற்றியெல்லாம் ஆராயத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. மரண தண்டனை என்பது, நீதித்துறையால் மேற்கொள்ளப்படும் கொலை; இத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், மீண்டும் அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை; உயிரை எடுப்பதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி போன்றவையெல்லாம், ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, அந்நிலைமைக்குப் போவதற்கான தேவை கூட எமக்கில்லை.  

இதில், மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்காக, பொய்யான பிரசாரங்களிலும் அரசாங்கத் தரப்பு ஈடுபடுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் குறிப்பாக, நல்லிணக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோ கணேசன், “சதாம் ஹுஸைனுக்கு, அமெரிக்கா தூக்குத் தண்டனை வழங்கிய போது, சர்வதேச மன்னிப்புச் சபை எங்கே போனது? இலங்கைக்கு மாத்திரம் ஏன் அழுத்தம்?” என்ற ரீதியில் கருத்தை வெளியிட்டிருந்தார்.

மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் மீதான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், மரண தண்டனை போன்ற விடயங்களில், அவ்வமைப்புகள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன. அமைச்சர் குறிப்பிட்ட சதாம் ஹுஸைனின் மரண தண்டனை நிறைவேற்றல் விடயத்தில் கூட, தனது முழுமையான எதிர்ப்பை, மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்தது. எதிர்ப்புக்கு ஒருபடி மேல் போய், ஹுஸைன் மீதான வழக்கு விசாரணையின் நடைமுறைகள் குறித்த கேள்விகளையும் அது எழுப்பியிருந்தது. எனவே, ஐ.அமெரிக்கா என்றவுடன் அச்சபை அடங்கிப் போனது என்ற குற்றச்சாட்டு, மிகவும் பொய்யானது.  

இவற்றையெல்லாம் தாண்டி, மரண தண்டனையை அமுல்படுத்தித் தான் ஆகவேண்டுமென இருந்தால், இன்னொரு தீர்வும் இருக்கிறது. ஏனைய குற்றங்களை விடுத்து, மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென, சட்டமொன்றை இயற்றி, அதை நடைமுறைப்படுத்துமாறு, “குற்றங்களைக் குறைக்க விரும்புகிறோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடம் நாம் கோர முடியும். ஒரு ரூபாயாக இருந்தாலும், அரச பணம் கொள்ளையிடப்பட்டால் இல்லாவிட்டால் கையாடப்பட்டால், அதற்குத் தண்டனை, மரண தண்டனை தான் என, முடிவெடுக்கப்படட்டும். 

அரசியல்வாதிகள் அனைவரும் அதற்குச் சம்மதிப்பார்களாக இருந்தால், ஏனைய குற்றங்களுக்கும் தண்டனை வழங்க முடியுமெனக் கூற முடியும்.  

ஆனால், அவ்வாறான ஒரு முயற்சிக்கு, எந்தவோர் அரசியல்வாதியும் சம்மதிக்கப் போவதில்லை. மரண தண்டனைக்கு அவர்கள் ஆதரவு வழங்குவதெல்லாம், தமக்கு அதனால் நேரடியான பாதிப்பு வராது என்ற அடிப்படையில் தான்.

எனவே, குற்றங்களைக் குறைக்க வேண்டுமென்ற உண்மையான கூச்சல் இருக்குமாயின், முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து அதை ஆரம்பிக்கப்பட்டும். அதைவிடுத்து, நம்பிக்கை தொடர்பான கேள்விகளை இன்னமும் கொண்டுள்ள நீதித்துறை, சட்ட அமுலாக்கத் துறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மனித வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய மரண தண்டனை பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதே, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நடவடிக்கையாகும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மரண-தண்டனையெனும்-கூச்சல்/91-219246

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • ஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images "அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்," என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, "எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். "மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்" என்று அவர் கூறுகிறார். "அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், "திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், "சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043  
    • ஒருவர் மனதை ஒருவர் அறிய .....!  😁
    • பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள்? ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா? நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா? ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள்? ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம்? ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம்? இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள்? ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301
    • May 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/