நவீனன் 9,747 Report post Posted July 18, 2018 மரண தண்டனை: தமிழர்கள் ஏழுபேர் அடங்குகின்றனர் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே, இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், மற்றும் 2013ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள டபிள்யு. விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ. சுரேஸ் குமார் ஆகிய தமிழ் கைதிகளின் பெயர்களும் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள கைதிகளாவர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மரண-தண்டனை-தமிழர்கள்-ஏழுபேர்-அடங்குகின்றனர்/150-219203 Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted July 18, 2018 அந்த எழுவரும் உண்மையிலே போதை பொருள் கடத்தல்காரர்களா ? அல்லது ஜோடிக்கபப்ட்டவர்களா? Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,778 Report post Posted July 18, 2018 2 hours ago, பெருமாள் said: அந்த எழுவரும் உண்மையிலே போதை பொருள் கடத்தல்காரர்களா ? அல்லது ஜோடிக்கபப்ட்டவர்களா? மிருகவதையை எதிர்ப்பவர்கள் மனிதவதையை எதிர்ப்பதில்லை. Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,879 Report post Posted July 20, 2018 (edited) On 7/18/2018 at 8:03 PM, குமாரசாமி said: மிருகவதையை எதிர்ப்பவர்கள் மனிதவதையை எதிர்ப்பதில்லை. பொழுது போகாமல்... பெயருக்கும் புகழுக்கும், பணத்துக்கும்... சங்கங்களை நடத்துபவர்கள் தான், இந்த மிருக வதை எதிர்ப்பாளர்கள். Edited July 20, 2018 by தமிழ் சிறி Share this post Link to post Share on other sites