Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

இங்கிலாந்தில் டெஸ்ட் வெற்றியை சுவைத்தது இந்தியா : வரலாற்றில் தனது பெயரையும் பதித்தார் கோலி 

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

virat.jpg

இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலைபெற்றுள்ளது.

279536.jpg

இந்த வெற்றியையடுத்து இங்கிலாந்து மண்ணில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த அணித் தலைவர்கள் பட்டியலில் விராட் கோலியும் 6 ஆவது தலைவராக இணைந்துள்ளார்.

279546.jpg

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

279551.jpg

முதலிரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 18 ஆம் திகதி நொட்டிங்காமின் டிரென்ட் பிரிட்ஜியில் ஆரம்பமாகியது.

279553.jpg

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் பெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 323 ஓட்டங்களையும் இங்கிலாந்து 161 ஓட்டங்களையம் பெற்றுக்கொண்டன. இதையடுத்து 168 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

279561.jpg

இதேவேளை, நேற்று போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 62 ஓட்டங்களுக்கு  4 விக்கெட்டை இழந்து அதன் ஜோஸ் பட்லர்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடிது. ஜோஸ் பட்லர் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார். அவர் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக 169 ஓட்டங்களை சேர்த்தனர்.

279572__1_.jpg

அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. பேர்ஸ்டோவ் (0). கிறிஸ் லோக்ஸ் (4), பென்ஸ்டோக்ஸ் (62), பிராய் (20) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 311 ஓட்டங்களை எடுத்து இருந்தது. ரஷித் 30 ஓட்டங்களுடனும் ஆன்டர்சன் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர். 

279576.jpg

இன்று 5 ஆது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஆம்பமாகியது. இந்திய அணி வெற்றிபெறுவதற்கு ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. இறுதி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா அணி நேற்றைய தினம் வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.

இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை விரைவிலேயே கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி காத்திருந்தது.

279578.4.jpg

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகிய நிலையில், இன்றைய ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். 5 ஆவது பந்தில் ஆண்டர்சன் ரகானேயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் இங்கிலாந்து 2 ஆவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்களைப்பெற்றது. 

இதையடுத்து இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டுகளையம் ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4 ஆவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதேவேளை, இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா 1971 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்தது.

அஜித்வடகேர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 1986 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்தியா அணி 2 டெஸ்டில் (லார்ட்ஸ், மற்றும் சிட்னி) வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் சிட்னி டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 2007-ம் ஆண்டு ராகுல்டிராவிட் தலைமையிலான இந்தியா 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் (1-0) கைப்பற்றியது.

2014 ஆம் ஆண்டு டோனி தலைமையில் இந்தியா லோர்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசித்த 6 ஆவது இந்திய அணித்தலைவராக விராட்கோலி வரலாற்றில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38964

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

லெக் பிரேக்கில் அஸ்வின் வெற்றி விக்கெட்; வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணித்த ஆட்டநாயகன் கோலி, தொடரை வெல்வொம் என உறுதி

 

 
kohli

வெற்றிக்கு முன்னும் பின்னும் அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டன் விராட் கோலி. | ஏ.பி.

 நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்று 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி கண்டு தொடரில் 2-1 என்று தன் வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.

இன்று 17வது பந்தில் அஸ்வின் கடைசி விக்கெட்டான ஆண்டர்சனை லெக்ஸ்பின்னில் வீழ்த்தினார். ஆப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் ஆக பிட்ச் ஆகி ஆண்டர்சனை நோக்கி பெரிய அளவில் திரும்பியது. அவர் கட் செய்ய முயன்றார், பந்து கிளவ்வில் பட்டு ஸ்லிப்புக்கு மேல் செல்ல ரஹானே பின்னால் சென்று எளிதான கேட்சை எடுக்க இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தன் 7வது டெஸ்ட் வெற்றியைச் சாதித்தது. ஆதில் ரஷீத் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 
 

இந்த டெஸ்ட் போட்டியில் எட்ஜ்பாஸ்டனுக்குப் பிறகு 200 ரன்களையும் அற்புதமான கேட்சையும் ஆணித்தரமான, ஆக்ரோஷ கேப்டன்சியும் செய்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

kohli2jpg
 

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி கூறியதாவது:

அனைத்திற்கும் முதலாக, நாங்கள் ஓர் அணியாக இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த மக்கள் பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், எங்களால் முடிந்தது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிப்பதே.

அனைத்துத் துறைகளிலும் மகிழ்வுக்குரிய ஆட்டம். இது எங்களுக்கு ஒரு முழுமையான டெஸ்ட் போட்டியாகும். தென் ஆப்பிரிக்காவில் 3டெஸ்ட் இங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே முற்றிலும் எங்களை வீழ்த்த முடிந்துள்ளது என்பதை நான் எப்போதும் கூறிவருகிறேன். அந்த முழுத் தோல்வி லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஏற்பட்டது.

பேட்ஸ்மெனாக மேம்படுத்துவது பற்றி பேசினோம், அதைத்தான் செய்தோம். பவுலர்களுக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்தோம். பவுலர்கள் 20 விக்கெட்டுகளை மறுபடியும் வீழ்த்த ஆர்வமாக இருந்தார்கள், எனவே பேட்ஸ்மெனாக அதற்குத் தகுந்த களத்தை அமைத்துக் கொடுத்தோம். ஸ்லிப் கேட்சிங்குடன் திறமைகள் சேரும்போது டெஸ்ட் போட்டிகளில் வெல்கிறோம்.

ரஹானே முக்கியம்...

ரஹானேவின் இன்னிங்ஸ் மிக முக்கியமாக அமைந்தது. உணவு இடைவேளைக்கு முன்பு புஜாராவை இழந்த பிறகு ரஹானே பாசிட்டிவாக ஆடினார். இதற்காகத்தான் அவரை நாங்கள் விரும்புகிறோம். அவர் ஆட்டத்தின் போக்கையும், தன்மையையும் மாற்றக்கூடியவர். அதைத்தான் அவர் செய்தார்.

இங்கிலாந்து பவுலர்கள் தரமான பவுலர்கள் எனவே அவர்களுக்கு எதிராக ரன்களை எடுக்க தைரியம் தேவை. இதைத்தான் முதல் இன்னிங்ஸில் ரஹானேவும், 2வது இன்னிங்சில் புஜாராவும் செய்தனர்.

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிப்பு!

என்னுடைய இன்னிங்சை நான் மனைவி அனுஷ்காவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்தான் என்னை ஊக்குவித்துக் கொண்டேயிர்ந்தார், அவர்தான் நான் பாசிட்டிவாக களத்தில் செயல்படக் காரணமாக இருந்தவர். இந்தத் தொடரில் நல்ல வேகமாக வீசிய 4 பந்து வீச்சாளர்களும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்கள் உடற்தகுதி, மனநிலை என்று அனைத்திலும் கவனம் செலுத்தினோம். தளர்வான பந்துகளைக் குறைத்தோம். இன்னும் டெஸ்ட் போட்டிகளை ஆட ஆட அவர்கள் இன்னும் மேம்படுவார்கள். அவர்கள் ஓடி வந்து வீசுவதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

தொடரை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நாங்கள் நம்பவில்லை என்றால் இப்போது 2-1 என்று தொடர் ஆகியிருக்காது. எப்போதுமே முன்னேறிச்செல்லவும் வெற்றி பெறவும்தான் நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24752449.ece

Link to comment
Share on other sites

கடைசி இரண்டு டெஸ்ட்- முரளி விஜய் நீக்கம்- பிரித்வி ஷா, ஹனுமா விஹாரிக்கு இடம்

 

 
 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #ENGvIND

 
 
 
 
கடைசி இரண்டு டெஸ்ட்- முரளி விஜய் நீக்கம்- பிரித்வி ஷா, ஹனுமா விஹாரிக்கு இடம்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது.

201808222150255905_1_prithivshaw-s._L_styvpf.jpg
பிரித்வி ஷா

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் வீரர்கள் சாடினார்கள். இதனால் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முடிந்த டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

201808222150255905_2_hanumavihari-s._L_styvpf.jpg
ஹனுமா விஹாரி

இந்நிலையில் இன்று கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/22215025/1185757/Murali-Vijay-Out-ENGvIND-Indian-team-for-4th-and-5th.vpf

Link to comment
Share on other sites

பொதுவாக கோலிக்கு நன்றாகவே வீசுகிறோம், அவரால் விரைவில் ரன்கள் எடுக்க முடியவில்லை: தோல்வி கேப்டன் ஜோ ரூட் பேட்டி

 

 
root

ஜோ ரூட். | ஏ.பி.

ட்ரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தோல்வி ஏமாற்றத்துடன் பேட்டியளித்துள்ளார்.

ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

 

இது வலுவான அணி, டாஸில் எப்போதுமே முடிவுகள் எடுப்பது கடினம். பிட்சில் உயிருள்ள புற்கள் இருந்தன. பந்து வீச்சிலும் சிறப்பாகவே ஆடிவந்துள்ளோம். இதைக் கருத்தில் கொண்டு டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தேன், ஆனால் இந்திய அணியை விரைவில் முடித்திருக்க வேண்டும்.

நாங்கள் இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்தில் வீசியிருக்கலாம். ஆனால் இந்தியா மிக நன்றாக பேட் செய்தனர். குறிப்பாக முதல் நாளில். முதல் இன்னிங்ஸில் நாங்கள் எங்கல் திறமைக்கேற்ப ஆடவில்லை என்று கூறுவது சரியானதுதான்.

2வது இன்னிங்சில் பட்லர்-ஸ்டோக்ஸ் கூட்டணி எங்களுக்கெல்லாம் சரியான் பாடம். எப்படி ரன்கள் எடுக்கப் போகிறோம் என்பதில் அவர்களுக்கு நல்ல தெளிவு இருந்தது.

முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுப்பதற்கு என்ன தேவை என்பதை நாங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆம் கேட்ச்கள் மிக முக்கியம். கேட்ச்களை விடாமல் பிடிப்பதில் சீரியசாகப் பணியாற்றுகிறோம், அது எங்களுக்கு மிகமுக்கியமாகும். இதுவரை அது கைகொடுக்கவில்லை, அது கைகொடுக்கத் தொடங்கி விட்டால் அது பெரிய அளவில் நமக்கு பலன்களை அளிக்கும்.

இரு அணிகளின் டாப் ஆர்டருக்குமே இங்கு சவாலான சூழ்நிலைதான் இருந்தது. பட்லரைப் பொறுத்தவரை சிறந்தது அவர் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்க முடிகிறது. ஆனால் அவர் சூழ்நிலைக்கேற்ப தன் ஆட்டத்தை வடிவமைப்பதுதான் அவரிடம் பிடித்தது. இது அவருக்கு பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும்.

இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.

விராட் கோலிக்கு பொதுவாகவே நன்றாகத்தான் வீசுகிறோம், எங்களுக்கு எதிராக அவரால் விரைவு கதியில் ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் ரன்கள் எடுக்கும் வழியை கண்டுபிடித்துக் கொள்கிறார்.

https://tamil.thehindu.com/sports/article24753403.ece

Link to comment
Share on other sites

இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள ஹனுமா விஹாரியை அறிவோம்: முதல்தர கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக சராசரி; சுவையான தகவல்கள்

 

 
hanuma%20vihari

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக சதம் எடுத்த போது ஹூக் ஷாட் ஆடும் ஹனும விஹாரி.   -  படம். | ஜி.பி.சம்பத்குமார்

இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி கடந்த 19 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள முதல் ஆந்திரா அணியைச் சேர்ந்த வீரராவார்.

இதற்கு முன்னர் ஆந்திராவிலிருந்து கடைசியாக இந்திய அணிக்குத் தேர்வானவர் தற்போதைய அணித்தேர்வுக்குழு தலைவரும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.கே.பிரசாத் ஆவார்.

 

ஹனுமா விஹாரியின் முதல்தர கிரிகெட் சராசரி 59.45, இவருக்கு அடுத்தபடியாக சிறந்த சராசரி வைத்திருப்பவர் ஆஸி.யின் ஸ்டீவ் ஸ்மித் 57.27.

இந்திய ஏ அணியின் இங்கிலாந்து பயணத்தின் போது ஒருநாள் அணி, 4 நாள் டெஸ்ட் அணியிலும் இவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் 3 இன்னிங்ஸ்களில் 253 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்தார். இதில் மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டி ஒன்றில் 147 ரன்கள் விளாசினார்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல்தர கிரிக்கெட்டில் 148 ரன்களை எடுத்தது அணியின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது.

hanumajpg

அப்பர் கட் ஆடும் ஹனுமா விஹாரி. | விவேக் பெந்த்ரே.

 

இவரைப் பற்றி ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளராக இருந்த சனத் குமார் ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “இரு பக்கங்களிலும் ஸ்கொயர் திசைகளில் இவர் வலுவான வீரர், அதாவது அவர் ஒரு சிறந்த பேக்ஃபுட் பிளேயர், பந்தின் லெந்த்தை விரைவில் கணிப்பது இவரது சிறப்பம்சம்” என்றார்.

2017-18 ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் 752 ரன்களை 94 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் ஒடிஷா அணிக்கு எதிராக முச்சதம் கண்டு 302 நாட் அவுட் என்று அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எட்டினார்.

ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான இரானி கோப்பைப் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ஆடிய ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், பெரிய இன்ஸ்விங் பவுலர் ரஜ்னீஷ் குர்பானி (இவர் இந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்) ஆகியோருக்கு எதிராக ஒரு அபாரமான 183 ரன்களை எடுத்தார். பின் வரிசை வீரரான ஜெயந்த் யாதவை வைத்துக் கொண்டு 7வது விக்கெட்டுக்காக 216 ரன்களைச் சேர்த்தது சாதனையானது.

தகவல்கள்: ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ

https://tamil.thehindu.com/sports/article24761842.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ஏதாவது செய் அஸ்வின் ஏதாவது செய்.. இது ஆக்ரோஷம் விராட்... பிராடுக்கு பதிலடி: ஸ்டம்ப் மைக் சுவாரசியங்கள்

 

 
kohli

படம். | ஏ.எஃப்.பி.

இங்கிலாந்துக்கு எதிரான டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்ததையடுத்து தொடரில் இந்திய அணி 1-2 என்று பின் தங்கியுள்ளது.

இந்தப் போட்டியின் ஆக்ரோஷமான 2வது இன்னிங்சில் விராட் கோலி களத்தில் பேசிக்கொண்டேயிருந்தார், கொஞ்சம், லேசாக இங்கிலாந்து வீர்ர்களை களத்தில் சீண்டவும் செய்தார். அவற்றில் சில ஸ்டம்ப் மைக்கில் கேட்டது.

 

ஸ்டூவர்ட் பிராட், ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவரை நோக்கி சில வார்த்தைகளைக் கூறியதை கருத்தில் கொண்டு பிராடுக்குக் கொஞ்சம் திருப்பிக் கொடுத்தார் விராட் கோலி. ஸ்டம்ப் மைக் சுவாரசியங்கள் இதோ:

இஷாந்த் சர்மா, ஜெனிங்ஸுக்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் குத்தி வெளியே எடுத்தவுடன் விராட் கோலி “பிரில்லியண்ட் ஆங்கிள் இஷி” என்றார். பிறகு அதே பந்தையே இஷாந்த் வீச ‘லவ்லி இஷி, அதேதான் அங்கயேதான்’ என்று பேசினார்.

பும்ரா பந்தில் அலிஸ்டர் குக் பீட் ஆன போது: “இதைப்பாருங்கள் பாய்ஸ், லுக் அட் தட், என்ன நடந்தது என்று குக் அதிசயிக்கிறார், நாம் இங்கிலாந்தில் ஆடிக்கொண்டிருக்கிறோம், கமான் லேட்ஸ்!

பிறகு அஷ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசும்போது: லவ்லி அஸ்வின் லவ்லி..

இஷாந்த் வீசிய போது: இதைப் பாருங்கள், அருமை... அருமை

அஸ்வின் வீசும் போது: நமக்கு இங்கு பெரிய அளவில் பந்துகள் திரும்பவில்லை, கமான் அஷ்லி.

அஸ்வின் பந்தில் ஒரு ஷாட் ஆடப்படுகிறது அப்போது பீல்டரை நோக்கி: நீ ஓட வேண்டும், நீ ஓட வேண்டும்..

விக்கெட் விழாமல் இங்கிலாந்து செட்டில் ஆன போது: “கமான் பாய்ஸ், ஏதோ ஒன்று வந்துகொண்டிருக்கிறது, ஏதோ நிகழப்போகிறது”

அஸ்வின் ஒரு பந்தை லெந்தில் தூக்கி வீசிய போது: “இதுதான் லைன், இதுதான் 6 பந்துகளையும் இங்கேயே போடு அஷ்...”

பிறகு, “ஒரு விக்கெட்தான், ஒரே விக்கெட்தான் கமான் கமான்... பொறுமை பொறுமை பாய்ஸ்...

பட்லருக்கு அஸ்வின் வீசும் போது: “சிக்ஸ் அடிக்கப் பார்க்கிறார்...வெல்டன் அஷ், பாய்ஸ் கவனமா இருங்க சிக்ஸ் அடிக்க பார்க்கிறார்.. ஒரு பந்தைத் தூக்கி அடிக்கப் பார்க்கிறார். வெல்டன் அஷ், ஏதாவது நிகழச்செய், ஏதாவது நிகழச்செய் அஸ்வின்.

அங்கேயே போடு பந்து டர்ன் ஆகும், அங்கேயே போடு.. அங்க ஒரு மண் திட்டு இருக்கு அதுல போடு.. உம் இந்தப் பந்து திட்டுக்கு பக்கத்துல பிட்ச் ஆச்சு, கமான் கமான். திட்டுக்கு பக்கத்துல பிட்ச் ஆனவுடனே குழப்பமாகி விட்டார்.

பிறகு ஷமி பவுலிங் வீச வந்தார், பிராட் பேட்டிங், பந்தை பிராட் தடுத்தாடினார். அப்போது, “கமான் ஷாமோ என்று கூறி பிராடை நோக்கி கோலி ஏதோ கூறுகிறார் அதற்கு பிராட், “அது ஆக்ரோஷம் மேன், ஆக்ரோஷமானது விராட்.. என்று கூற கோலி அவரை நோக்கி, “இளம் வீரர்களை நீங்கள் இப்படியாக எதிர்கொண்டால் உங்களுக்கும் அதுதான் கிடைக்கும்..

இதற்கு பிராட், “இது டெஸ்ட் கிரிக்கெட் மேன்.. இது ஆக்ரோஷம்... இது ஆக்ரோஷம் விராட்”

https://tamil.thehindu.com/sports/article24769910.ece

Link to comment
Share on other sites

4-ஆம் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

 

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட முதலிரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்தும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றன. நான்காவது ஆட்டம், செளதாம்ப்டனில் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வென்றால் தொடரை இங்கிலாந்து கைப்பற்றி விடும். மேலும் இந்தியா இதில் வென்று சமன் செய்ய முயற்சிக்கும்.
 இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் புதிய அணியை அறிவித்துள்ளது. ஹேம்ப்ஷையர் கவுண்டி அணி பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். கைவிரல்களில் காயமடைந்த ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக வின்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜேமி போர்டர் கவுண்டி சாம்பியன்ஷிப்புக்காக விடுவிக்கப்பட்டுள்ளார்.
 அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), அலிஸ்டர் குக், கியட்டன் ஜென்னிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஓலி போப், மொயின் அலி, அடில் ரஷீத், சாம் கரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ்வின்ஸ்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/25/4-ஆம்-டெஸ்ட்டுக்கான-இங்கிலாந்து-அணி-அறிவிப்பு-2987019.html

Link to comment
Share on other sites

புதிய பந்தில் வீச பும்ரா லாயக்கில்லை: மைக்கேல் ஹோல்டிங் கருத்தால் விளைந்த சர்ச்சை

 

 
bumrah

ஜஸ்பிரித் பும்ரா. | கெட்டி இமேஜஸ்.

முதலில் பாண்டியாவை விமர்சித்தார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் பாண்டியா 5 விக்கெட்டுகளையும் ஒரு வேகமான அரைசதத்தையும் எடுத்தார். தற்போது பும்ரா புதிய பந்தில் வீச சரிப்பட மாட்டார் என்று மைக்கேல் ஹோல்டிங் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

பும்ரா தன் 4 டெஸ்ட் போட்டிகளில் இருமுறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ள நிலையில் மைக்கேல் ஹோல்டிங் தேவையற்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் அவர் மீது வருத்தமடைந்துள்ளனர்.

 

தொலைக்காட்சியில் மைக்கேல் ஹோல்டிங் கூறும்போது, “பும்ரா புதிய பந்தில் வீசக்கூடியவர் அல்ல, அவரை இங்கிலாந்து தொடருக்கு நானாக இருந்தால் தேர்வு செய்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.

“நான் புதிய பந்தில் வீச பும்ராவை அழைக்க மாட்டேன். புதிய பந்தில் இஷாந்த், ஷமி கூடுதலாக ஸ்விங் செய்கின்றனர். புவனேஷ்வர் குமார் இல்லாத போது இவர்கள்தான் தொடக்கத்தில் வீச வேண்டும்.

நான் பார்த்தவரையில் பும்ரா, வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே கொண்டு வந்து பிறகு சற்றே வெளியே எடுக்கிறார் இது பழைய பந்துக்குப் பொருந்தும். பந்து பழசான பிறகே பும்ரா திறமையாக வீசுகிறார்.

இங்கிலாந்தில் அவரால் வலது கை பேட்ஸ்மென்களுக்கு இதை அவர் செய்ய முடியும். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் இம்மாதிரி உள்ளே வந்து பந்தை வெளியே ஸ்விங் செய்ய முடியாது. ஆனால் பும்ராவின் சொத்து அவரது வேகம்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

‘மைக்கேல் ஹோல்டிங் தன் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இந்திய வீர்ர்களை அவர் ஒவ்வொருமுறையும் விமர்சனமோ, கேலியோ பேசுகிறார். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் பற்றிய அவரது கருத்துகள் மிகவும் தவறாக உள்ளன. கம் ஆன் மைக்கேல், ஸ்டீவ் பக்னர் வழியில் செல்ல வேண்டாம்’ என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

இன்னொரு ட்விட்டர் வாசி, “ஹர்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் இல்லை என்று ஹோல்டிங் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பும்ராவை டெஸ்ட் போட்டிகளுக்கு எடுத்திருக்க மாட்டேன் என்று கூறுவது தர்க்கத்துக்கு ஒத்துவரவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24772408.ece

Link to comment
Share on other sites

இந்திய அணி வெற்றிபெறும் உத்வேகத்தில் உள்ளது - செவாக்

 

 
 

இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி பசித்த புலி போல விளையாடும் என  முன்னாள் வீரர் விரேந்திர செவாக் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்டில் இந்தியா விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும் போது நான்காவது டெஸ்டின் நான்காவது நாளில் இந்தியா வெற்றிபெறும் என நினைக்கின்றேன் என செவாக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெற்றி உத்வேகத்தில் உள்ளனர் அதேவேளை இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றிக்கு திரும்ப முயலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்திய அணி பசித்த புலிகள் போன்று விளையாடும்  அவர்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவர் எனவும் செவாக் தெரிவித்துள்ளார்..

virendra_sewack.jpg

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழாம் மிகவும் சிறப்பானது இதுவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39219

Link to comment
Share on other sites

4 ஆவது போட்டி நாளை ; தொடரை கைப்பற்றும் வேட்கையுடன் இங்கிலாந்து

 

 
 

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டித் தொடர் நாளை சவுத்தாம்டனில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன்  மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

cricket3.jpg

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில்  31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்ட வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றயீட்டி இந்திய அணியை தலை குணிய வைத்தது.

அதன் பின்னர் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு கடிவாளமிட்டு 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

cricket2.jpg

இந் நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் நான்காவது டெஸட் போட்டித் தொடர் நாளை சவுத்தாம்டனில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிக் காட்டி டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா? அல்லது தொடரை இங்கிலாந்திடம் பறிகொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியதன் காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பயிற்சிப் போட்டியின் போது அஸ்வீனுக்கு உபாதை ஏற்பட்டுள்ளதனால் அவர் நாளை களமிறங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

cricket1.jpg

இங்கிலாந்து அணியை பொருத்தவரை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் தொடர‍ை கைப்பற்றி விடலாம் என்ற வேட்கையுடனும் அவ்வாறு முடியாமல் போகும் பட்சத்தில் போட்டியை சமன் செய்தாலும் அதிர்ஷ்டம் இங்கிலாந்து வசமே.

http://www.virakesari.lk/article/39344

Link to comment
Share on other sites

இங்கிலாந்து அணியில் சாம் கரன், மொயீன் அலி; வோக்ஸ், போப் இல்லை: தொடரைச் சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி

 

 

 

root-kohli

படம். | கெட்டி இமேஜஸ்.

கடினமான இங்கிலாந்து தொடர் 3 கடினமான டெஸ்ட் போட்டிகளின் சவாலான கிரிக்கெட்டுக்குப் பிறகு நாளை 4வது டெஸ்ட் போட்டியில் சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுலில் இந்தியா-இங்கிலாந்து களமிறங்குகின்றன.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோருக்குப் பதிலாக சாம் கரன், மொயீன் அலி அணிக்கு வந்துள்ளனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது.

 

டிரெண்ட் பிரிட்ஜில் இந்திய அணி ஆசியாவுக்கு வெளியே மிகப்பிரமாதமான முழு ஆதிக்க வெற்றியைப் பெற்று இங்கிலாந்துக்கு தொடர் தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

0-2 தோல்வியிலிருந்து 1936-37 தொடரில் டான் பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணி 3-2 என்று தொடரைக் கைப்பற்றியது பற்றிய கதையாடல்கள் ஏற்கெனவே வலம் வந்துள்ள நிலையில் விராட் கோலி படை மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மென்களான ராகுல், தவன், புஜாரா, ரஹானே ஆகிய வீரர்கள் பின் காலில் சென்று ஆடியதையும், பந்தை ஸ்விங் ஆகவிட்டு கடைசி நேரத்தில் ஆடுவதோ ஆடாமல் விடுவதோ போன்று எடுத்த முடிவுகளினால் விளைந்த பயனையும் பார்த்தோம். இந்தப் பிட்சிலும் கொஞ்சம் புல் உள்ளது. டாஸ் வென்றால் முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச் ஆக இது உள்ளது, எனவே விராட் கோலி முதலில் டாஸை வெல்ல வேண்டும். ஏனெனில் ஜோ ரூட் டாஸ் வென்று இன்னொரு முறை இந்தியாவை பேட் செய்ய அழைக்கும் தவறைச் செய்ய வாய்ப்பில்லை.

bumrahjpg
 

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் வருகையும், ஹர்திக் பாண்டியாவின் அபாரப் பந்து வீச்சும் பேட்டிங்கும் உத்வேகமூட்டியுள்ளன. இஷாந்த் சர்மா பிரமாதமாக வீசி வருகிறார், அவரிடம் நாம் எதிர்பார்ப்பது ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ அது இருந்தால் அவரே தனி நபராக 2014 லார்ட்ஸில் இங்கிலாந்தைச் சாய்த்தது போல் இப்போதும் முடியும், அந்த இங்கிலாந்து அணியை விட இது பலவீனமான பேட்டிங் அணிதான். மொகமது ஷமி இன்னும் சரியாக தன் திறமையை நிரூபிக்கவில்லை, பெயர் சொல்லும்படியாக ஒரு ஸ்பெல்லைக் கூட வீசவில்லை. ஒரு ஆதரவு, கூடுதல் பவுலராகவே செயல்பட்டு வருகிறார். கடந்த டெஸ்ட்டில் ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் கொடுத்தார். எனவே இவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் பிழைப்பார், இல்லையெனில் புவனேஷ்வர் குமார் வந்த பிறகு இவர் தன் இடத்தை இழக்க வேண்டிவரும். இவருக்குப் பதில் ரஜ்னீஷ் குர்பானி போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ரொடேஷன் முறையில் வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சோபிக்க வேண்டுமெனில் அலிஸ்டர் குக் ரன்கள் எடுக்க வேண்டும், இதுவரை இந்திய அணி இவரை விரைவில் பெவிலியன் அனுப்பியது. இங்கிலாந்து வெற்றி பெற வேண்டுமெனில் 350-400 ரன்கள் அடிப்பது அவசியம்.

இந்திய அணி 350-400 அடிக்க வேண்டுமெனில் முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழக்கக் கூடாது. கடந்த டெஸ்ட் போல் கூட்டணிகளை அமைப்பது அவசியம். ஜேம்ஸ் ஆண்டர்சனை யாராவது நாலு சாத்து சாத்தினால் அது இந்தத் தொடரின் சாதனையாகப் பேசப்படும். 90-95 ரன்களிலும் விராட் கோலி இவரிடம் பீட்டன் ஆகிறார், ஆனால் இதுவரை விக்கெட்டை இவரிடம் கொடுக்கவில்லை, இதுவே தன்னளவில் விராட் கோலிக்கு ஒரு வெற்றிதான்.

பிட்ச் நிலவரம்:

பிட்ச் கிரீன் டாப் விக்கெட்டாகும். ஆனாலும் கொஞ்சம் வறண்ட வானிலை என்பதால் முதல் 2 மணி நேர புதிய பந்து சவால்களைக் கடந்து விட்டால் முதலில் பேட் செய்யும் அணிக்குச் சாதகமான பிட்ச். இதே பிட்சில் தான் 2014-ல் மொயின் அலி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால் இப்போது பிட்ச் அதன் தன்மையை வெகுவாக மாற்றிக் கொள்ளாது என்றே பிட்ச் அறிக்கைக் கூறுகிறது.

புள்ளிவிவரங்கள்:

ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் கிளென் மெக்ராவின் விக்கெட்டுகளைக் கடந்து 564 விக்கெட்டுகள் என்று புதிய வேகப்பந்து வீச்சு வரலாறு படைப்பார்.

விராட் கோலி இன்னும் 6 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். 9 இந்திய வீரர்கள்தான் 6000 ரன்கள் மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ளனர். கேப்டனாக 4000 டெஸ்ட் ரன்கள் மைல்கல்லுக்கு கோலிக்கு தேவை 104 ரன்கள். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் எடுத்தால் 250 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டுவார்.

இங்கிலாந்து அணி: அலிஸ்டர் குக், ஜெனிங்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்[ (வி.கீ), மொயின் அலி, சாம் கரன், ஆதில் ரஷீத், பிராட், ஆண்டர்சன்.

இந்திய அணி: தவண், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, பாண்டியா, ரிஷப் பந்த், ஆர்.அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

https://tamil.thehindu.com/sports/article24812147.ece

Link to comment
Share on other sites

‘இங்கிலாந்தைக் காலிசெய்யுமா கோலி டீம்?’- இன்று தொடங்குகிறது 4-வது டெஸ்ட்

 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சௌத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 

கிரிக்கெட்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. டி-20 தொடரை இந்திய அணியும் ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. தற்போது, இவ்விரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும்,  2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள்மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாகச் செய்தபோதும், பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், முதல் 2 டெஸ்ட்டிலும் ஏமாற்றமே அளித்தார்.

 

 

இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  சௌத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி, மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் .இதையடுத்து நடைபெறும் 5-வது போட்டி பரபரப்பாக இருக்கும். இந்தப் போட்டியில் இந்தியா தோற்றால், இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றும். 

 

 

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்று வெகு நாள்களாகிவிட்டது. கடைசியாக, இங்கிலாந்து மண்ணில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற பட்டோடி டிராபி தொடரை ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடித்தந்த முன்னாள் கேப்டன் தோனி தலைமையில், 2014 -ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்தத் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. தற்போது சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய அணி, வெற்றியைத் தேடித் தருமா? என்ற ஆவலில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். 

இங்கிலாந்து அணிக்குத் தனது சொந்த மண்ணில் விளையாடுவது பலம். முதல் இரண்டு போட்டியில் அசத்திய ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி இந்தப்போட்டியில் மிரட்டினால், இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இங்கிலாந்தும் சொந்த மண்ணில் தொடரை இழக்க விரும்பாது. எனவே, இந்தப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
 

https://www.vikatan.com/news/sports/135404-india-vs-england-kholi-team-ready-to-attack-england.html

Link to comment
Share on other sites

4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது: இந்திய அணியில் மாற்றமா?

 

 
toss

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிபார்க்கையில், இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட் டாஸ் போடும் காட்சி   -  படம்உதவி: ட்விட்டர்

 சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது.

 

டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில்முன்னிலையில் இருந்தது. நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின்அபார சதம், அஸ்வின், பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சால் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சவுத்தாம்டன் நகரில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் இருமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக வோக்ஸ்கு பதிலாக சாம் குரன் சேர்க்கப்பட்டுள்ளார். அணிக்கு மொயின் அலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் காரணமாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்றைய பயிற்சியில் அஸ்வின் பந்து வீசினார். அப்போது பேட்டி அளித்த விராட் கோலி, அஸ்வின் முழுத்தகுதியுடன் உள்ளார் எனத் தெரிவித்தார். இளம் வீரர்கள் பிரித்திவி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. ஆனால், 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்கள் எந்த மாற்றமுமில்லாமல் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: கே.எல் ராகுல், தவண், புஜாரா, விராட் கோலி, ரஹானே, பாண்டியா, ரிஷாப்பந்த், அஸ்வின், முகமது ஷமி, இசாந்த் சர்மா, பும்ரா

இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ், ஜோய்ரூட், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென்ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் குரன், அதில் ராஷித், கிறிஸ் பிராட், ஆன்டர்ஸன்.

https://tamil.thehindu.com/sports/article24819070.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

1.png&h=42&w=42

40/4 * (18.2 ov)
 

 

Link to comment
Share on other sites

சவுத்தாம்டன் டெஸ்ட் - இந்தியா அபார பந்துவீச்சு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

 
அ-அ+

சவுத்தாம்டனில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருவதால் 171 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. #INDvsENG

 
 
 
 
சவுத்தாம்டன் டெஸ்ட் - இந்தியா அபார பந்துவீச்சு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்
 
லண்டன் :

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகலில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இஷாந்த் சர்மா படைத்தார்.

இதைத்தொடர்ந்து பேய்ர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய குக் 18வது ஓவரில் மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

201808302122123095_1_cook._L_styvpf.jpg

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லரும், பென் ஸ்டோக்சும் இந்திய பந்துவீச்சாளர்களின் உத்திகளை கணித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் 26-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பட்லரும், 34-வது ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்சும் ஷமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

சிறப்பாக விளையாடிய மொயின் அலியை தனது சுழலில் வீழ்த்தினார் அஷ்வின், அவர் 40 ரன்கள் எடுத்திருந்தார். 7-வது விக்கெட்டுக்கு மொயின் அலியும், குர்ரனும் இணைந்து 81-ரன்கள் சேர்த்தனர்.

இதனால் 61 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்களுடன் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. சாம் குர்ரன் 37 ரன்களுடனும், ரஷித் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் பூம்ரா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். #INDvsENG
 
 
Link to comment
Share on other sites

246 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 19 ஓட்டத்துடன் இந்தியா

 

 
 

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 76.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

ind4.jpg

சவுத்தாம்டனில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி 3.30 மணியளவில் ஆரம்பமான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர்கள் கொண்ட நான்காவது போட்டித் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.

இதன்படி இங்கிலாந்து அணி சார்பாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஜோடி களம் புகுந்த வேகத்திலேயே ஒரு ஓட்டங்களை அணி பெற்றிருந்த வேளை 2.1 ஆவது ஓவரில் ஜென்னிங்ஸ் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளாது டக்கவுட் முறையில் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ind1.jpg

இவருக்கு அடுத்த படியாக களமிறங்கிய அணித் தலைவர் ரூட்டும் அதிக நேரம் தாக்குப் பிடிக்காமல் நான்கு ஓட்டங்களுடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்களும் நீண்ட நேரம் நிலைத்து நிற்க்காது ஆட்டமிழந்தமையினால் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து கதிகலங்கியது.

அதன்படி ஜோனி பிரிஸ்டோ 6 ஓட்டங்களுடனும் குக் 17 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 21 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் மொயின் அலியும்  குர்ரனும் சற்று நிதானமாக ஜோடி சேர்ந்து ஆடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இருப்பினும் இந்த ஜோடி 81 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மொயின் அலி, 59.3 ஆவது ஓவரில் அஷ்வினின் சுழலில் சிக்கி பும்ராவிடம் பிடிகொடுத்து 40 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ind2.jpg

ind3.jpg

இவரையடுத்து ரஷித் 6 ஓட்டங்களுடனும் புரொட் 17 ஓட்டங்களுடனும் நிதானமாக ஆடி வந்த குர்ரன் 78 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

ind5.jpg

இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டுக்களையும் ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை  இந்திய அணி ஆரம்பித்தது. இந்திய அணி சார்பாக தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். இறுதியாக முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

http://www.virakesari.lk/article/39474

Link to comment
Share on other sites

அப்பீல் செய்வதற்கு முன்பே கொண்டாட்டம்: ராகுலின் கால்காப்பையும், தவணின் மட்டை விளிம்பையும் பிடித்த பிராட் பந்து வீச்சு: இந்தியா திணறல்

 

 
broad

எல்.பி.ஆனா ராகுல், முறையீடு செய்யும் ஸ்டூவர்ட் பிராட். | படம்: ராய்ட்டர்ஸ்.

சவுத்தாம்டன், ஏஜியஸ் பவுலில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று கேஎல்.ராகுல், ஷிகர் தவண் விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் பிராட் கைப்பற்றினார்.

இன்று வந்தவுடன் ஆண்டர்சன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்த் பந்தை ஷிகர் தவண் மிக அருமையாக 4வது ஸ்லிப்புக்குத் தள்ளி தட்டிவிட்டார் பந்து பவுண்டரிக்குச் சென்றது.

 

ராகுலும் மிக அருமையாகப் பின்னால் சென்று ஆண்டர்சன் பந்தை ஒரு பஞ்ச்-டிரைவ் ஆடி கவர் பாயிண்ட் திசையில் பவுண்டரி விளாசினார்.

ஆனால் ஆட்டத்தின் 8வது ஓவரின் 2வது பந்தில் பிராட், ராகுலின் பலவீனமான இன்ஸ்விங்கரை வீசினார், இந்தப் பந்து அது வந்த கோணத்திலேயே சென்றிருந்தால் ஒருவேளை ஸ்டம்பில் படாமல் கூட சென்றிருக்கும், ஆனால் பிட்ச் ஆகி கடைசி விநாடியில் சற்றே பந்து நேராகி பின்காலைத் தாக்கியது, கொஞ்சம் உயரம் கூடுதலாக தெரிந்தது. பந்து கால்காப்பில் பட்டவுடனேயே கொண்டாடிவிட்டார், ஆனால் தர்மசேனா வாளாவிருக்கவும் திரும்பி கொஞ்சம் கோபாவேசமாக அப்பீல் செய்தார், தர்மசேனா கையை சந்தேகமாக உயர்த்தினர். இதனையடுத்து ராகுல் ரிவியூ கேட்டார்.

ஆனால் பந்து மிடில் ஸ்டம்பைப் பதம் பார்க்கும் என்று ரீப்ளேயில் தெரிந்தது. ஒரு ரிவியூவை விரயம் செய்தார், மீண்டும் இன்ஸ்விங்கரை ஆடும்போது அரையும்குறையுமாக கால்நீட்டி பந்தைக் கோட்டை விட்டார் ராகுல். ஒரு விதத்தில் ராகுலை ஒர்க் அவுட் செய்தார் பிராட். இன்ஸ்விங்கரில் எல்.பியாவது ராகுலுக்கு இந்தத் தொடரில் இது முதல் முறையல்ல.

ஷிகர் தவண் எட்ஜைப் பிடித்த பிராட் கொண்டாட்டம். | ஏ.பி.
 

அடுத்ததாக ஷிகர் தவண் 23 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார், ஆனால் அவரும் கடைசியில் பிராடின் ரவுண்ட் த விக்கெட், சபலம் ஏற்படுத்திய பந்துக்கு மட்டையை தேவையில்லாமல் கொண்டு செல்லப் பணிக்கப்பட்டார். எட்ஜ் ஆனது பட்லர் கேட்ச் எடுத்தார்.

இன்று 14 ஓவர்களை ஆடி இந்திய அணி 13 ரன்களை மட்டுமே எடுத்து ராகுல், தவண் விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 35 பந்துகளில் 5 ரன்களுடன் ஆடி வருகிறார், விராட் கோலி இப்போதுதான் இறங்கியுள்ளார். இந்திய அணி 50/2.

https://tamil.thehindu.com/sports/article24831747.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

6.png&h=42&w=42

79/2 * (24 ov)
 
Link to comment
Share on other sites

ஆண்டர்சன் பந்தை பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னொரு மைல்கல்

 

 
kohlijpg

விராட் கோலி. | ஏ.எப்.பி.

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார்.

2ம் நாளான இன்று ஸ்டூவர்ட் பிராடிடம் இந்திய அணி ராகுல், தவணை இழந்த பிறகு கோலி, புஜாரா இணைந்து ஆடி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஆண்டர்சன் வீசிய இன்னிங்சின் 22வது ஓவரின் 5வது பந்தை கோலி பவுண்டரிக்கு அனுப்பி 6,000 ரன்களைக் கடந்தார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்புகளுக்கு வைடாக பவுண்டரிக்குச் சென்றது.

தனது 70வது டெஸ்ட், 119வது இன்னிங்ஸில் விராட் கோலி 6,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

உலக அளவில் அதிவிரைவாக 6,000 ரன்களை எட்டியோர் பட்டியலில் டான் பிராட்மேன் 45 டெஸ்ட் போட்டிகளில் 68 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடம் வகிக்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித் 61 போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் சுனில் கவாஸ்கர் 65 டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 76 டெஸ்ட் 120 இன்னிங்ஸ்களிலும் சேவாக் 72 டெஸ்ட் 123 இன்னிங்ஸ்களிலும் ராகுல் திராவிட் 73 டெஸ்ட் 125 இன்னிங்ஸ்களிலும் 6,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விராட் கோலி 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களுடனும் புஜாரா 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களுடனும் ஆடி அரைசதக் கூட்டணி அமைத்துள்ளனர். இந்திய அணி 100/2.

https://tamil.thehindu.com/sports/article24832524.ece

 

6.png&h=42&w=42

270/9 * (81.5 ov)
 
Link to comment
Share on other sites

சவுத்தாம்டன் டெஸ்டில் புஜாரா சதம் - இந்தியா 273 ரன்கள் எடுத்தது 27 ரன்கள் முன்னிலை

 

 

அ-அ+

சவுத்தாம்டனில் நடைபெற்றும் வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் புஜாராவின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #INDvsENG

 
 
 
 
சவுத்தாம்டன் டெஸ்டில் புஜாரா சதம் - இந்தியா 273 ரன்கள் எடுத்தது 27 ரன்கள் முன்னிலை
 
லண்டன் :
 
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
 
இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
 
அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் நிதானமாக ஆடினார். இந்த் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 
 
இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் 19 ரன்னும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் வெளியேறினர்.
 
இதன்பின் ஜோடி சேர்ந்த புஜாராவும், கோலியும் நிதானமாக ஆடினர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கோலி 46 ரன்களில் அவுட்டானார். 
 
புஜாரா சிறப்பாக ஆடி 132 ரன்கள் சேர்த்து இறுதியில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. கடைசி விக்கெட்டுக்கு புஜாராவும், பும்ராவும் 46 ரன்கள் சேர்த்தனர். இறுதியில், இந்தியா 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. குக்கும் ஜென்னிங்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 ஓவர் முடிவில் 6 ரன்கள் எடுத்துள்ளது. #INDvsENG

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/31232251/1188028/india-all-out-273-for-second-day-stumps-against-england.vpf

 

Link to comment
Share on other sites

புஜாராவின் பிரமாத சதம்;கையில் கொடுத்த கோலி, காலில் வாங்கிய ரஹானே, 29 பந்துகள் ஆடி பந்த் டக்: மொயின் அலியிடம் சரிந்த இந்திய பேட்டிங்

 

 
pujarajpg

புஜாரா ஷாட். | கெட்டி இமேஜஸ்

சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. புஜாரா மிகச்சிறப்பான ஒரு இன்னிங்ஸை ஆடி தனது 15வது சதத்தை ஒருமுனையில் போராளியாக நின்று எடுத்ததோடு 132 ரன்கள் நாட் அவுட் என்று இந்திய அணிக்கு 27 ரன்கள் என்ற ஒரு சிறிய முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.

ஆட்டம் முடியும் போது இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

   
 

இஷாந்த் சர்மா, பும்ரா இவருக்கு உறுதுணையாக நின்றனர். பாண்டியா, அஸ்வின் பொறுப்பற்ற ஆட்டமிழப்புக்குப் பிறகு இஷாந்த்துடன் 32 ரன்களையும் பும்ராவுடன் கடைசி விக்கெட்டுக்காக 46 மிக முக்கிய ரன்களையும் சேர்த்தார் புஜாரா.

கடைசியில் 16 அருமையான பவுண்டரிகளுடன் அவர் 132 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இது இங்கிலாந்தில் புஜாராவின் முதல் சதம், ஆசியாவுக்கு வெளியே புஜாராவின் 2வது சதம், அவரது 61 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வாழ்வில் இதுவே வெளியே எடுக்கும் 2வது சதம்!!

அவருக்கு மறக்க முடியாத ஒரு சதமாக இது அமையும். மிகவும் கவனத்துடன் ஆடினார், அதிக பிரச்சினைகள் இன்றி ஒரு கட்டத்துக்குப் பிறகு சரளமாக ஆடத் தொடங்கினார். கடைசியில் பும்ராவை வைத்துக் கொண்டு மொயின் அலி பந்தை நேராக மேலேறி வந்து தூக்கி விட்டு 2 ரன்கள் எடுத்து தன் அபாரமான சதத்தை எடுத்து முடித்தார். சதம் எடுத்த பிறகு அலியை மேலேறி வந்து மிக அழகாக ஒரு பவுண்டரி அடித்து தன் ஆதிக்கத்தை உறுதி செய்தார். 99-ல் இருந்த போது அலி பந்தை கால்காப்பில் வாங்க ஒரு சிறு ரிவியூ செய்யப்பட்டது, நாட் அவுட், இங்கிலாந்து ரிவியூவை இழந்ததில்தான் அது முடிந்தது, ரூட் ஏமாற்றமடைந்தார்.

கட், பஞ்ச், அருமையான டிரைவ்கள் 2 தூக்கி அடிக்கப்பட்ட ஷாட்கள், புல்ஷாட்கள் என்று புஜாரா சிறப்பாக ஆடினார். அதுவும் கடைசியில் பீல்டர்களை அருகில் அழைத்து சாம் கரன் வீசிய பந்தை சேவாக் பாணியில் கவர் திசையில் ஒரே அறை அறைந்து அடித்த பவுண்டரி பிரமாதமான ஷாட் ஆகும்.

மொயின் அலியிடம் சரிந்த இந்திய அணி!

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 31 ஓவர்களில் 100/2 என்று இருந்தது அப்போது புஜாரா 28 ரன்களுடனும் கோலி 25 ரன்களுடனும் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாரா தன்னம்பிக்கையுடன் ஆட, விராட் கோலி, உள்ளுக்குள் புதைந்து விடக் கூடாது என்பதற்காக கொஞ்சம் ஸ்கோர் செய்யப்பார்த்தார். அதில் தவறில்லை, ஆனாலும் 5வது ஸ்டம்புக்குச் செல்லும் பந்துகளை விரட்டி வந்தார்.

மேலும் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் இருமுறை பீட்டன் ஆனார். ஆனால் இதே ஓவரின் முதல் பந்தை மிக அழகாக நேர் டிரைவ் செய்து பவுண்டரிக்கு ஒரு பந்தை விரட்டினார். இதே ஓவரில் பிறகு ஒரு பந்து லேட் அவுட் ஸ்விங் ஆக பீட்டன் ஆனார். அடுத்த பந்தே அதேமாதிரியான ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்துக்கு மட்டையைக் கொண்டு சென்று பீட்டன் ஆனார்.

பிறகு அடுத்த ஓவரே மொயின் அலி பந்து வீச ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து ஆடாமல் விட வேண்டிய பந்து, ஆனால் கோலி மட்டையை நீட்ட பந்து விக்கெட் கீப்பர் பட்லருக்கும் ஸ்டோக்ஸுக்கும் இடையே சென்று பவுண்டரி ஆனது. மிகவும் அதிர்ஷ்டம் ஏனெனில் பட்லரின் வலது கை கிளவ்வுக்கு அருகில் சென்றது பந்து.

kohli2jpg

ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த கோலி. | கெட்டி இமேஜஸ்

 

இப்படியே ஆடிவந்த விராட் கோலி 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரன் ஒரு பந்தை அவருக்கு ஓவர் த ஸ்டம்ப்பிலிருந்து வீசி இடது கை வீச்சாளருக்கே உரிய கோணத்தில் கோலியின் மட்டையைக் குறுக்காகக் கடந்து செல்லுமாறு வீசினார். மீண்டும் மிகவும் தள்ளிச் சென்ற பந்து ஆடாமல் விட்டிருக்க வேண்டிய பந்து, ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகுமோ என்று அவர் மட்டையைக் கொண்டு சென்றிருக்கலாம், எட்ஜ் ஆனது முதல் ஸ்லிப்பில் குக் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிகப்பெரிய விக்கெட்டைக் கைப்பற்றினார் சாம் கரன்.

ரஹானே அவுட்டும், சர்ச்சையும்! பாண்டியா, அஸ்வின் பொறுப்பற்ற அவுட்

ரஹானே இறங்கி 5 ரன்களில் இருந்த போது ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒன்று உள்ளே ஒரு கோணத்தில் வந்து பிறகு ரஹானே ஆட முற்பட்டார் எட்ஜ் ஆகி ரூட்டின் வலது கையில் பட்டு சென்றது, தப்பினார். பிறகு ஸ்டோக்ஸ் ஒவர் பிட்ச் வீச கவரில் அருமையான பவுண்டரி அடித்தார்.

ஆனால் இதே ஓவரில் 11 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பெரிய இன்ஸ்விங்கரை வீச நேராக கால்காப்பில் வாங்கினார். ஆனால் உடனேயே ரிவியூ கேட்டார். அதில் ஸ்டோக்ஸின் பந்து நோ-பாலோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் குதிகாலின் ஒரு புறம் கிரீசிற்கு மேல் இருந்ததாகவும் தெரிந்தது. எனவே சரியான பந்து என்றார் 3வது நடுவர் ஜோ வில்சன். ஆகவே கையை உயர்த்தினார். ரஹானே எல்.பி.அவுட். அதன் பிறகு புஜாரா ஸ்டோக்ஸ் பந்தில் நெற்றியின் வலது புறம் ஒரு அடி வாங்கினார். பிசியோ வந்தார் ஆனால் புஜாரா தொடர்ந்தார்.

ஆனால் இதே ஸ்டோக்ஸை லெக் திசையிலும் கவர் திசையிலும் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசி பழிதீர்த்துக் கொண்டார் புஜாரா.

moeen%20alijpg

கெட்டி இமேஜஸ்.

 

ரிஷப் பந்த் ஏன் அப்படி ஆடினார் என்று தெரியவில்லை 29 பந்துகள் ஆடி ஒரு ரன் கூட எடுக்க முடியாத அளவுக்கு பெரிய பந்து வீச்செல்லாம் ஒன்றுமில்லை, அப்படியிருந்தும் அவர் 29 பந்துகள் ஆடி 0-வில் வெளியேறினார். மொயின் அலி ரவுண்ட் த விக்கெட்டில் வந்து மிடில் அண்ட் லெக் ஸ்டம்பில் பந்தை இறக்கினார். நேராக வாங்கினார் பந்த் தனது கால்காப்பில், உடனடியாக நடுவர் அவுட் கொடுத்தார், இந்தியாவின் கைவசம் ரிவியூ இல்லை. நடையைக் கட்டினார், ஆனால் ரீப்ளேயில் அது பிளம்ப் எல்.பி.என்று உறுதியானது. இவ்வளவு பந்துகள் ஆடி டக் அவுட் ஆன விக்கெட் கீப்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஆராய்வது சுவாரசியமானதாக இருக்கும்.

பாண்டியா இறங்கினார். ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தை கொஞ்சம் மேலேறி வந்து ஆடியிருக்கலாம் ஆனால் அவர் காலை நீட்டி பந்துக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல முற்பட்டார். பிறகு பந்தை திரும்பும் திசையிலேயே பிளிக் ஆட முயன்றார். ஷார்ட் மிட்விக்கெட்டில் ஜோ ரூட் இடது புறம் பாய்ந்து பிடித்தார்.

அப்போது புஜாரா 77 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் ஆடி வந்தனர். இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள்.

பிறகு அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில் மொயின் அலியின் நேர் பந்து திரும்பும் என்று நினைத்து பீட் ஆனார். ஆனால் அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமாக வர மிகவும் மவுடீகமாக அதை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆனார். மிகவும் பொறுப்பற்ற ஷாட்டாகும் அது. மொயின் அலியின் 3வது விக்கெட்டாகும் இது.

அடுத்த பந்தே மொகமது ஷமியும் பவுல்டு ஆக, ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார் மொயின் அலி. அடுத்த பிராட் ஓவருக்குப் பிறகு ஹாட்ரிக் பந்தை வீச வந்தார் மொயின் அலி ஆனால் இஷாந்த் சர்மா ஹாட்ரிக்கை தடுத்து நிறுத்தினார். இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 195ரன்களை எடுத்திருந்தது.

இதன் பிறகுதான் இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரது உறுதியுடன் சதத்தை நிறைவு செய்தார் புஜாரா, இஷாந்த் சர்மா 40 பந்துகள் நின்றார், நன்றாக தடுத்தாடினார் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி ஓவரில் லாங் லெக்கில் அடித்து விட்டு சிங்கிள் வேண்டாம் என்று புஜாரா முடிவெடுத்தது தவறாகப் போனது, அடுத்த பந்தே இஷாந்த் சர்மா இன்சைடு எட்ஜில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பும்ரா 6 ரன்களுக்கு 24 பந்துகள் நின்றார், மிக அழகாக உறுதியுடன் பின் காலில் சென்று ஆடியதோடு முன் காலில் வந்து தடுத்தாடியும் புஜாரா சதமெடுக்கவும் இந்திய அணி முன்னிலை பெறவும் உதவினார். கடைசியில் பிராட் பந்தில் கிளவ்வில் அடிபட்டு கேட்ச் ஆனார் பெவிலியன் செல்லும் போது அவருக்கு வலி இருந்தது தெரிந்தது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை மொயின் அலி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சாம் கரன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட், ஆண்டர்சன் விக்கெட் இல்லை.

https://tamil.thehindu.com/sports/article24838649.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

சவுத்தாம்டன் டெஸ்ட் - ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 260/8

 
அ-அ+

சவுத்தாம்டனில் நடைபெற்றும் வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. #INDvsENG

 
 
 
 
சவுத்தாம்டன் டெஸ்ட் - ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 260/8
 
லண்டன் :
 
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 
 
இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாராவின் சிறப்பாக சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
 
201809012340220486_1_engl-3._L_styvpf.jpg
 
குக் 12 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 36 ரன்னிலும், மொயின் அலி 9 ரன்னிலும், ஜோ ரூட் 48 ரன்னிலும், பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். 
 
ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்பாக ஆடி அரை சதமடித்ததுடன், 69 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. சாம் குர்ரன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.
 
இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும்ம் எடுத்துள்ளனர். இங்கிலாந்து தற்போது 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #INDvsENG

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/01234022/1188299/england-2608-for-third-day-stumps-against-india.vpf

 

Resilient Buttler and England Frustrate India | England v India 4th Test Day 3 2018 - Highlights

Link to comment
Share on other sites

அஸ்வின் மீது விமர்சனங்கள்- புஜாராவின் பதில் என்ன?

 

 
 

இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்தின் இரண்டாது இனிங்சில்  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்து வீச்சு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை துடுப்பாட்ட வீரர் புஜாரா அதனை நிராகரித்துள்ளார்.

இரண்டாவது இனிங்சில் 35 ஓவர்கள் பந்து வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டிளை மாத்திரம் வீழ்த்தியுள்ளார்

அஸ்வின் பந்து வீச்சு குறித்து உடனடி விமர்சனங்கள்  எழுந்துள்ளன.

எனினும் புஜாரா அஸ்வின் பந்து வீசிய விதத்தை பாராட்டியுள்ளார்.

அஸ்வின் மோசமாக பந்து வீசவில்லை என நான் கருதுகின்றேன் அவர் விக்கெட்களை வீசவில்லை ஆனால் பந்துகளை சரியான இடத்தில் வீசிக்கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களில் நீங்கள் சிறப்பாக பந்து வீசினாலும் விக்கெட்களை வீழ்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் மிகவும் புத்திசாலியான பந்துவீச்சார் அவர் வெளிநாடுகளில் எங்களுக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளார் இதன் காரணமாக அவர் மோசமாக பந்துவீசவில்லை எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

ashwin_2.jpg

ஆடுகளம் மெதுவானதாக மாறியுள்ளது இதன் காரணமாகவே அஸ்வினின் சில பந்துகள் எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை குறிப்பாக மொயீன் அலியை இந்திய அணியினர் எவ்வாறு விளையாடுகின்றனர் என்பதே இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கும் எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது அதன் வேகம் குறைந்துள்ளமை புலனாகின்றது டெஸ்ட்; போட்டியின் கடைசி இரண்டு நாட்களில் வேகம் குறையும் ஆடுகளங்களில் நாங்கள் விளையாடியுள்ளோம் எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்

பந்து மேலெழும்பாத மிகக்குறைந்த உயரத்தில் வரும் ஆடுகளங்களில் இந்தியாவில் நாங்கள் விளையாடியுள்ளோம் இதன் காரணமாக அது எங்களிற்கு சாதகமானதாக அமையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39585

Link to comment
Share on other sites

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை: ‘4-வது நாளில் பேட் செய்வது எளிதானது அல்ல’

 

 
unil-gavaskar-afp

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் : கோப்புப்படம்

சவுத்தாம்டன் ரோஸ்பவுல் மைதானத்தில் 4-வது நாளில் பேட் செய்துவது எளிதான காரியம் கிடையாது, இந்திய பேட்ஸ்மேன்கள், மிகுந்த கவனத்துடன் பேட் செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

சவுத்தாம்டனில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களுக்கும் ஆட்டமிழந்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

 

இரு இன்னிங்ஸிலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், 4-வது நாளில் இருந்து ரோஸ்பவுல் மைதானத்தில் பேட்செய்வது கடினமாகிவிடும் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் இந்திய வீரர்களை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கவாஸ்கர் ஒரு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:

''சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசுகிறார்கள். மீண்டும் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் திறனும், போட்டியில் வெற்றி பெறும் சூழலும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் வென்றால், டெஸ்ட் தொடர் 2-2 என்று சமநிலைக்கு வரும்.

பும்ரா தான் வீசியக்கூடிய ஒவ்வொரு பந்திலும், எதிரணிக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார், இசாந்த் சர்மாவும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே கட்டுக்கோப்பாக பந்து வீசுகிறார்.

முகமது ஷமி தேவைக்கு ஏற்றார்போல் ஆக்ரோஷமாகவும், அதேசமயம், லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசுகிறார். ஆனால், அவரால் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. போட்டியின் முதல்நாளில் இருந்து இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது, இந்தத் தொடரை சமன் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், ரோஸ்பவுல் மைதானத்தில் முதல் 3 நாட்களில் பேட் செய்வது போன்று 4-வது நாளில் எளிதாக பேட் செய்ய முடியாது. 150 ரன்களுக்கு அதிகமாக இங்கிலாந்து சேர்த்துவிட்டு இலக்கு நிர்ணயித்தால் அதை அடைந்து வெற்றி பெறுவது என்பது கடினமாகும். ஏனென்றால், 4-வது நாளில் பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் முற்றிலும் ஒத்துழைக்காது.

IndiaEnglajpg
 

முதல் 2 நாட்களில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. பந்துவீச்சாளர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. 4-வது நாளில் இருந்து பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும். சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக நகர்ந்து கொடுக்கும்.

இந்திய பேட்ஸ்மேன்களோ தொடக்கத்தில் இருந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துவதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 4-வது, 5-வது நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் பேட் செய்ய வேண்டும், குறிப்பாக மொயின் அலியின் பந்துவீச்சை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இல்லாவிட்டால், வெற்றிக்கு கைக்கு எட்டியும், அதைத் தக்கவைக்க முடியாமல் போகும்''.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

https://tamil.thehindu.com/sports/article24846936.ece

  •  
Day 4: England lead by 244 runs with 0 wickets remaining
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.