Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

கோலியுடன் வாக்குவாதம்; நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆன்டர்ஸனுக்கு அபராதம்

 

 
son

விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நடுவரிடம் அப்பீல் செய்த ஆன்டர்சன்   -  படம் உதவி: ட்விட்டர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனும், நடுவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்ஸனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்தபோது, கேப்டன் விராட் கோலிக்கும், ஆன்டர்ஸனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

ஆன்டர்ஸன் வீசிய 29-வது ஓவரில் விராட் கோலி கால்காப்பில் வாங்கினார். அப்போது எல்பிடபிள்யு கேட்டு ஆன்டர்சன் நடுவரிடம் முறையிட்டார். ஆனால், அதற்கு நடுவர் தர்மசேனா அவுட் தரவில்லை. அந்த ஓவர் முடிந்து நடுவரிடம் தொப்பியை வாங்கிச் செல்லும் போது கேப்டன் விராட் கோலியிடம் ஆவேசமாக ஆன்டர்சன் வாக்குவாதம் செய்தார். இதைத் தடுத்த நடுவர் தர்மசேனாவிடமும் ஆத்திரத்துடன் கத்திவிட்டு சென்றார்.

anderjpg
 

ஆன்டர்சனின் நடவடிக்கை குறித்து போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டிடம் நடுவர் தர்மசேனா புகார் செய்தார். இந்தப் புகாரில் உண்மை குறித்து ஐசிசி எலைட் பேனல் விசாரணை செய்ததில் அதில் உண்மை இருப்பது தெரியவந்தது.அதேசமயம், தான் செய்த குற்றத்தையும் ஆன்டர்ஸன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் நடுவரின் முடிவை மீறி வீரர்கள் வாக்குவாதம் செய்வது என்பது, ஐசிசி ஒழுக்கவிதிமுறைகளை வீரர்கள் மீறியதாகும்.

ஐசிசி புதிய விதிமுறைகளின்படி, ஆன்டர்சனுக்கு ஒரு மைனஸ் புள்ளியுடன் ஆட்டத்தொகையில் 15% அபராதமும் விதிக்கப்பட்டது.

https://tamil.thehindu.com/sports/article24908502.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

இறுதி இனிங்ஸில் சதமடித்தார் குக்

 

 
 

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அலைஸ்டர் குக்  தனது இறுதி இனிங்சில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.

ஓவலில் இடம்பெறும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்சில் குக் சற்று முன்னர் சதமடித்துள்ளார்.

இதன் மூலம் தனது முதல் டெஸ்டிலும் இறுதி டெஸ்டிலும் சதமடித்த வீரர் பட்டியலில் குக் இணைந்து கொண்டுள்ளார்.

பில்பொன்ஸ்போர்ட், டொன்பிரெட்மன்,கிரேய்க் சப்பல் முகமட் அசாருதீன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

குக் இந்தியாவில் தனது முதல் டெஸ்டில் சதம் பெற்றிருந்தார்.

மேலும் தனது இறுதிப்போட்டியின் முதல் இனிங்சில் அரைசதமும் இரண்டாவது இனிங்ஸில் சதமும் அடித்த வீரர் என்ற சாதனையையும்அவர்  நிகழ்த்தியுள்ளார்.

அலைஸ்டர் குக்கின் இறுதி இனிங்ஸில் அவர் சதம் பெறுவதை பார்ப்பதற்காக காத்திருந்த இரசிகர்கள் அவரிற்கு பலத்த கரகோசத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

cook_88.jpg

டுவிட்டரில் அவரிற்கு பாராட்டு மழை குவிந்தவண்ணமுள்ளது

http://www.virakesari.lk/article/40102

 

 

‘கோல்டன் ஆர்ம்’-சதநாயகர்கள் குக், ரூட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்ற ஹனுமா விஹாரி

 

 
hanuma%20vihari

ஜோ ரூட்டை வீழ்த்திய ஹனுமா விஹாரி. | ராய்ட்டர்ஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்தியப் பந்து வீச்சை வறுத்தெடுத்த அலிஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் அறிமுக வீரர் ஹனுமா விஹாரி.

தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 

முதல் டெஸ்ட்டிலேயே கடும் நெருக்கடித் தருணத்தில் இறங்கி அரைசதம் அடித்து தன் தேர்வு குறித்து இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த ஹனுமா விஹாரியை முதல் இன்னிங்சில் கோலி சரியாகப் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் 3வது விக்கெட்டுக்காக இணைந்து 259 ரன்களைச் சேர்த்து இந்தியப் பந்து வீச்சை வறுத்து எடுத்த ஜோ ரூட், அலிஸ்டர் குக் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் ஹனுமா விஹாரி.

12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 125 ரன்களில் ஆடிவந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ரன் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு ஹனுமா விஹாரி வீசிய அவரது 8வது ஓவரின் முதல் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் பந்து பிட்சில் உள்ள ரஃபில் பட்டு நின்று வர சரியாக மட்டையில் சிக்காமல் டீப் மிட்விக்கெட்டில் பதிலி வீரர் பாண்டியாவிடம் கேட்ச் ஆனது.

இந்த ஷாட்டின் போது பேட்டிங் முனைக்கு வந்த சதநாயகன் அலிஸ்டர் குக், 147 ரன்களில் இருந்த போது அடுத்த பந்திலேயே ஹனுமா விஹாரியை கட் ஆட முயன்று எட்ஜ் செய்ய ரிஷப் பந்த் கையில் கேட்ச் ஆனது.

cook2jpg

குக் பிரியாவிடை. | ஏ.பி.

 

அலிஸ்டர் குக் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட்டில் ஆடும் அறிமுக வீரர் ஹனுமா விஹாரியிடம் ஆட்டமிழந்தது ஒரு நல்ல நகைமுரண். இந்திய வீரர்கள் அனைவரும் குழுமி நின்று கரகோஷம் செய்தனர், அனைவரும் அலிஸ்டர் குக்கிற்கு கைகொடுத்து வழியனுப்பினர். ஹனுமா விஹாரியின் பொற்கரம் ஹாட்ரிக் வாய்ப்பைக் கொடுத்தது, ஆனால் ஹாட்ரிக் தடுக்கப்பட்டது.

அதன் பிறகு பேர்ஸ்டோவை ஷமி வெளியேற்ற பட்லரை ஜடேஜா டக்கில் வெளியேற்ற தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24918236.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவிற்கு 464 ரன்கன் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

 

 

அ-அ+

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND

 
 
 
 
அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவிற்கு 464 ரன்கன் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும், ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.

இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.

201809102113315176_1_Joeroot-s212._L_styvpf.jpg

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.

இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா, விஹாரி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/10211331/1190438/ENGvIND-Alastair-Cook-joe-root-century-england-target.vpf

Day 4 - Session 3: India require another 406 runs with 7 wickets remaining
Link to comment
Share on other sites

கோலி கோல்டன் டக், புஜாராவும் 0-வில் அவுட்; மெக்ராவை சமன் செய்த ஆண்டர்சன்: தோல்வியைத் தவிர்க்க இந்தியா போராட்டம்

 

 
anderson

புஜாராவை வீட்டுக்கு அனுப்பிய மகிழ்ச்சியில் ஆண்டர்சன், இங்கிலாந்து. |ஏ.எப்.பி.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று அலிஸ்டர் குக் தனது பிரியாவிடை சதத்தை அடித்தார், இது தனது கனவு சதம் என்று கூறியுள்ளார். ரூட்டும் 2 கேட்ச்கள் விடப்பட்ட பிறகு சதம் எடுக்க ஸ்டோக்ஸ் ஒரு சிறு அதிரடி இன்னிங்ஸை ஆட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 423 என்று டிக்ளேர் செய்தது.

464 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய இந்திய அணி பொறுப்பற்ற முறையில் பேட் செய்து ஷிகர் தவண் (1), புஜாரா (0), கோலி (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 2/3 என்று படுமோசமானது. அதன் பிறகு கே.எல்.ராகுல் ஆட்டப்பாணியை மாற்றி அடித்து ஆடினார். இதுதான் சரியான அணுகுமுறை, அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் நிற்க இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.

 

ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகளை சமன் செய்துள்ளார்.

இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய போது அதுவரை நமக்கு ஸ்விங் ஆகாத பந்துகள் அவர்களுக்கு ஸ்விங் ஆகத் தொடங்கிவிட்டன. ஷிகர் தவணின் மிக மோசமான டெஸ்ட் தொடர் 1 ரன்னில் முடிவுக்கு வந்தது. பந்தை வந்த பிறகு ஆடும் ஷிகர் தவணின் முடிவில் இன்ஸ்விங்கருக்குக் குறித்த நேரத்தில் மட்டை இறங்குவதில்லை. இப்படித்தான் நேர் நேர் தேமா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

இதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் சிந்தனையின்றி ஸ்டம்புக்கு நேராக முன்காலை அரைகுறையுமாக கொண்டு வந்தார் மட்டை வரவில்லை. எல்பி ஆனார். நல்ல வேளை ரிவ்யூ செய்யலாமா என்று யோசித்து யோசனையைக் கைவிட்டார். ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மெக்ராவைச் சமன் செய்தார்.

kohlijpg

கோலி அவுட். பிராட் கொண்டாட்டம். | ராய்ட்டர்ஸ்.

 

இதற்குச் சரியாக 2 பந்துகள் சென்று ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 2வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி அது நேராகச் சென்றது ஸ்விங் இல்லை, பொதுவாக இந்தப் பந்துகளை ஒன்று கோலி ராஜகவர் டிரைவ் அடிப்பார், அல்லது ஆடாமல் விட்டு விடுவார். ஆனால் இங்கிலாந்தின் குக், ரூட் பேட் செய்து களத்தில் இந்தியாவை வறுத்து எடுத்ததினால் ஏமாற்றமோ, கோபமோ அடைந்த கோலி அந்த நினைவிலேயே கால்களை அரையும்குறையுமாக நகர்த்தி மட்டையை பந்தின் மீது தொங்கவிட்டார், எட்ஜ் ஆகி பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைய இங்கிலாந்துக்கு வெற்றி உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ராகுல் தாக்குதலே சிறந்த தற்காப்பு என்று சில ஷாட்களை தூக்கி அடித்து 8 பவுண்டரிகளுடன் இந்தத் தொடரின் தனது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 46 ரன்களை 51 பந்துகளில் விளாசினார். ரஹானே தன் விக்கெட்டைப் பத்திரமாகக் காத்துக் கொண்டார். இந்தியா 58/3 என்று ஆட்ட முடிவில் உள்ளது.

நல்ல பிரகாசமாகத் தொடங்கிய தொடர் 4-1 என்ற தோல்வியில் முடிய வேண்டுமா?

எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்களில் தோல்வி, லார்ட்ஸில் இன்னிங்ஸ் தோல்வி, சவுத்தாம்டனில் 60 ரன்களில் தோல்வி, இடையில் டிரெண்ட் பிரிட்ஜில் ஒரு துல்லியமான, திட்டமிட்ட வெற்றி, கூட்டிக் கழித்துப் பார்த்தால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியும் இந்த டெஸ்ட் போட்டியும்தான் இங்கிலாந்து ஆதிக்கம் இருந்தது.

இந்நிலையில் பிரகாசமாகத் தொடங்கி ஏகப்பட்ட உறுதிமொழிகளின் சுவடுகளைக் காட்டிய இந்தத் தொடர் மோசமாக மீண்டும் 4-1 என்று முடிய வேண்டுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நேற்று இஷாந்த் சர்மா இடது முழங்கால் காயத்தினால் ஒரு ஓவர் போட்டு வெளியேறினர், இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றவர்கள் பந்து வீச்சில் கட்டுக்கோப்பு இல்லை. இங்கிலாந்து டிக்ளேர் செய்வது எப்போது என்று ஆடியது போல் தெரிந்தது. ரூட்டுக்கு 2 கேட்ச்கள் விடப்பட்டன. பிளாட் பிட்சில் பும்ராவின் ஷார்ட் பிட்ச் உத்தியை ரூட் எளிதில் கடந்தார், பிட்ச் மெதுவாகி விட்டது. ஜடேஜாவுக்கு பீல்டிங் வியூகம் நன்றாக வைக்கப்படவில்லை. லெக் திசையில் நிறைய இடைவெளிகள் இருந்ததால் குக், ரூட் அதைப் பயன்படுத்தி வறுத்து எடுத்தனர். ஜடேஜா பிளைட் செய்யாமல் ஷார்ட்டாகவும் நேர்நேர் தேமாவாகவும் வீசினார். சுத்த வேஸ்ட்.

ஹனுமா விஹாரியின் பந்துகள் ஓரளவுக்குத் திரும்பிய நிலையில் ஜடேஜா விரயமாக வீசினார். விஹாரி லைன் மற்றும் லெந்த்தினால் கடைசியில் சதநாயகர்களான ரூட், குக் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார். விஹாரி, ஜடேஜாவை வைத்தே போட்டிருக்க வேண்டும், ஆனால் கோலி தப்பும் தவறுமாக அப்போது போய் புதிய பந்தை எடுத்தார், இதனால் ஸ்டோக்ஸ், கரன் இடையே அனாவசியமாக 41 ரன்கள் விரைவுகதி கூட்டணி ஏற்பட்டது. கடைசியில் கையும் காலும் களைப்படைந்த இந்திய பவுலர்கள் இளைப்பாறுமார் ரூட் டிக்ளேர் செய்தார். இந்திய அணிக்கு இலக்கு 464.

மொயின் அலி அச்சுறுத்தல்:

இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மொயீன் அலியின் பந்து வீச்சுதான். கோலி அச்சுறுத்தலை ஸ்டூவர்ட் பிராட் முடித்து வைத்தார், இந்த டக் கோலியின் நினைவிலிருந்து அகல நீண்ட காலம் ஆகும். ஒரே ஆறுதல் இந்தத் தொடரில் ஆண்டர்சனிடம் விக்கெட்டைக் கொடுக்கவில்லை கோலி. அதனால் எந்தப் பயனும் இல்லை. எழுத்தாளர் அசோக மித்திரன் ‘பாவம் டல்பதடு’ என்ற தன் படைப்பில், “இருட்டில் தடுக்கி விழுந்தால் ஒரேயொரு பயன் தான் யாரும் பார்க்க மாட்டார்கள், ஆனால் அதனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்று எழுதியிருப்பார் அதுதான் கோலியின் நிலைமையும், ஆண்டர்சனிடம் விக்கெட் கொடுக்கவில்லையே ஆனால் அதனால் என்ன பயன்? என்பதே அந்த இருண்ட நகைச்சுவை.

தொடரை நம்பர் 1 என்று தொடங்கி அதற்கு எந்தவித குந்தகமும் ஏற்படவில்லை, ஆனால் இன்னமும் இந்திய அணியை நம்பர் 1 என்று கூறினால் அது நகைப்புக்குரியதுதான்.

வித்தியாசமான அணியாகத் தொடங்கி கடைசியில் ரவிசாஸ்திரி ஆடிய கால இந்திய அணிபோல் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி ஆடியது.

இங்கிலாந்தில் இந்திய அணியின் மறக்க வேண்டிய தொடர்களில் இந்தத் தொடரும் இணைந்து விட்டது.

இனி என்ன? அடுத்து மே.இ.தீவுகள் வருகிறது, அவர்களைப் போட்டு சாத்து சாத்தென்று சாத்தி ‘அப்யூஸ்’ தான். ஆசியக் கோப்பை வருகிறது. அதில் பாகிஸ்தான் என்ற அச்சுறுத்தல் உள்ளது. ஐசிசியின் எஃப்.டி.பியை தங்களுக்குச் சாதகமாக்கி தொடர்ந்து இந்தியாவிலேயே ஆடி, தொடர்ந்து இலங்கையுடனேயே ஆடி இல்லாத வெற்றுச் சாதனைகளை ஊடகங்களை வைத்துப் பேச வைத்து இப்போது உண்மையான திறமை அம்பலப்பட்டு நிற்பதைத்தான் பிசிசிஐ சாதித்துள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24922422.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ராகுல், பந்த் அபார 150 ரன் கூட்டணி: வெற்றி பெற 194 ரன்கள் தேவை; சாதிப்பார்களா?- இங்கிலாந்து உதறல்

 

 
rahul%20pant

ராகுல், பந்த் அபாரக் கூட்டணி, | கெட்டி இமேஜஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் ராகுல், ரிஷப் பந்த் கூட்டணி மூலம் இந்திய அணிக்குப் புதிய நம்பிக்கைப் பிறந்துள்ளது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடி வருகிறது.

கே.எல்.ராகுல் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 140 ரன்களுடனும் ரிஷப் பந்த் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 104 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

 

இருவரும் சேர்ந்து 150 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர். 39 ஓவர்களில் 194 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியுள்ளது. புதிய பந்துக்கு இன்னும் 12 ஓவர்கள் இருப்பதால் இடைப்பட்ட ஓவர்களில் 45-50 ரன்களை எடுக்க முடிந்தால் இங்கிலாந்து அச்சம் இன்னும் அதிகரிக்கும்.

சாத்தியமில்லாததை நோக்கிய முயற்சியில் ராகுல், பந்த் சிறப்பாக ஆடி வருகின்றனர். ரிஷப் பந்த் பந்துகளை பளார் பளார் என்று சக்தி வாய்ந்த ஷாட்களாக ஆடி வருகிறார். இருவரும் சேர்ந்து 192 பந்துகளில் 153 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்தை தோல்வி அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

https://tamil.thehindu.com/sports/article24927695.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

Day 5 - Session 3: India require another 159 runs with 5 wickets remaining
Link to comment
Share on other sites

கடைசி டெஸ்டிலும் இந்தியா தோல்வி: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து

 
அ-அ+

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest

 
 
 
 
கடைசி டெஸ்டிலும் இந்தியா தோல்வி: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து
 
ஓவல்:
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 
 
5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.
 
சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/11220907/1190699/ENGvING-England-won-by-118-runs-and-takes-series.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குக், ராகுல், மற்றும் பந்தக்கு வாழ்த்துக்கள்.?

Link to comment
Share on other sites

பயம் காட்டிய ராகுல், ரிஷப் பந்த்: இங்கிலாந்து 4-1 வெற்றி; கிளென் மெக்ராவை முறியடித்தார் ஆண்டர்சன்

 

 
england%20team

தொடரை 4-1 என்று வென்ற இங்கிலாந்து அணி கோப்பையுடன்.

சாதனைகள் பல நிகழ்த்தப்பட்ட குக் பிரியாவிடை ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 4-1 என்று கைப்பற்றி, ஓய்வு பெற்ற அலிஸ்டர் குக்கிற்கு தொடர் வெற்றியைப் பரிசாக அளித்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 564 விக்கெட்டுகளுடன் கிளென் மெக்ரா சாதனையை முறியடித்து உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

   
 
cook%20andersonjpg

சாதனை நாயகர்கள் குக், ஆண்டர்சன். | கெட்டி இமேஜஸ்

 

கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத மகாவிரட்டலை முதலில் ராகுல், ரஹானே, பிறகு ராகுல் பந்த் மேற்கொண்டனர். தேநீர் இடைவேளையின் போது வெற்றியின் ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது.

ஆனால் ஆதில் ரஷீத் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு ஸ்பாட்டைப் பயன்படுத்தி ஒரு ஷேன் வார்ன் பந்தில் ராகுலை பவுல்டு செய்ய, அதே இடத்தில் இன்னொரு கூக்ளியை வீசி ரிஷப் பந்த்தின் ரத்த வேகத்தைச் சோதனை செய்து வீழ்த்த இந்த இரண்டு விக்கெட்டுகள் சம்பிரதாயங்களை விரைவுபடுத்தியது.

ஒருகட்டத்தில் 33 ஓவர்களில் 166 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது, ராகுல், ரிஷப் பந்த் இருவரும் சதமடித்து கிரீசில் இருந்தனர். கே.எல்.ராகுல் நினைத்திருப்பார் முதலிலிருந்தே பவுலர்களைப் பற்றிய கவலையில்லாமல் அலட்சிய புறக்கணிப்புடன் பேட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று. அப்படித்தான் ஆடினார் ராகுல், அதுவும் சதம் அடிப்பதற்காக பென் ஸ்டோக்ஸை ஒரே ஓவரில் அடித்த ஷார்ட் ஆஃப் த மேட்ச் எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸ், பிறகு ஒரு அற்புத பவுண்டரி, கடைசியில் ஒரு டென்னிஸ் ஃபோர்ஹேண்ட் நேர் பவுண்டரி என்று சதத்தைப் பூர்த்தி செய்தார். சதம் அடித்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரு ஸ்டெப் இறங்கி மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த ஹைபிளிக் பிரமாதமான ஷாட் ஆகும். சச்சின் களமிறங்கியவுடனேயே இத்தகைய ஷாட்களை ஆடுவார்.

rahuljpg

தேநீர் இடைவேளையின் போது நம்பிக்கை நட்சத்திரங்களாய் ராகுல், பந்த். | கெட்டி இமேஜஸ்.

 

ஆனால் அவுட் ஆன பந்து ஒரு விதத்தில் வேஸ்ட்தான், இடது காலைத் தூக்கி லெக் ஸ்டம்புக்கு வெளியே நீட்டியிருந்தால் அந்தப் பந்து ஒருவேஸ்ட் பந்துதான் ஆதில் ரஷீத்தும் ஏதோ விக்கெட்டுகளைக் கைப்பற்ற லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசித் திருப்பவில்லை, ஒருவகையான எதிர்மறைப் பந்து வீச்சு, ரன் குறைப்பு நெகெட்டிவ் பவுலிங்கே. அதில் ராகுல் ஒரு தவறான ஷாட் ஆடப்போய் பவுல்டு ஆக அது பெரிய பந்து வீச்சாகப் பேசப்படுகிறது. அதுவும் இங்கிலாந்து வர்ணனையாளார்களுக்கு எப்போது மைக் கேட்டிங் ஷேன் வார்னிடம் ‘நூற்றாண்டின் சிறந்தப் பந்தில்’ ஆட்டமிழந்தாரோ அது அவர்களின் மனக்கற்பனைவெளியில் தங்கி விட்டது, அதனால் இங்கிலாந்தில் ஏதாவது பந்து திரும்பி விட்டாலே அது ஷேன் வார்னுடன் ஒப்பிடப்படுவது வழக்கம்.

ரிஷப் பந்த் 29 பந்து டக் அவுட்டிலிருந்து கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டிருப்பார், ரன்கள் எடுப்பதே பேட்ஸ்மென்கள் பணி என்பதைப் புரிந்து கொண்டார். டீப் மிட்விக்கெட்டில் ரஷீத்தை ஸ்டாண்ட்சுக்கு ரசிகர்கள் மத்தியில் சிக்சருக்குத் தூக்கி அவர் 117 பந்துகளில் அதிரடி சதம் கண்டார். 204 ரன்களை இருவரும் சேர்த்தனர். ஒருமுறை நேதன் ஆஸ்ட்ல் நியூஸிலாந்தில் இது போன்ற பெரிய இலக்கை தனது 152 பந்து இரட்டைச் சதம் மூலம் அச்சுறுத்திய நினைவு வந்தது, ஒன்று ராகுலோ, அல்லது ரிஷப் பந்த்தோ அது போன்ற ஒரு தாக்குதல் ஆட்டம் ஆடுவார்களோ என்ற நப்பாசை ஏற்பட்டது உண்மைதான்.

கூட்டாளியை உடைத்தவுடன் ரிஷப் பந்த் அதுவரை நன்றாகக் கணித்து ஆடியவர் கூக்ளியை சரிவரக் கணிக்காமல் தூக்கி அடிக்க லாங் ஆஃபில் மொயின் அலியிடம் கேட்ச் ஆனது. ஷார்ட் பிட்ச் உத்தி இங்கிலாந்துக்குக் கை கொடுக்கவில்லை. 146 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 டவரிங் சிக்சர்களுடன் 114 ரன்களில் ஆட்டமிழந்த போது மிகவும் வெறுப்படைந்தும், ஏமாற்றத்திலும் வெளியேறினார். இஷாந்த் சர்மா அடில் ரஷீத் ரஃபில் பிட்ச் செய்த பந்தை ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து தைரியம் காட்டினார். 24 பந்துகள் சுற்றிலும் குடை போல் அமைக்கப்பட்ட களவியூகத்துக்கிடையே தைரியம் காட்டினார். கடைசியில் சாம் கரன் பந்து ஒன்று எட்ஜைத் தட்டிச் சென்றது.

முதல் இன்னிங்ஸ் நாயகன் ஜடேஜாவின் மட்டை விளிம்பை சாம் கரன் பந்து முத்தமிட்டு பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைய, ஆண்டர்சனின் மெக்ரா சாதனை உடைப்புக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் மொகமது ஷமிக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீசி குச்சியைப் பெயர்க்க, கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகளைக் கடந்து 564 விக்கெட்டுகளுடன் உலகின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்குச் சொந்தக் காரரானார் ஆண்டர்சன், இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராகுல், பந்த் 121/5 என்ற நிலையில் இணைந்தனர், ஹனுமா விஹாரிக்கு பேய் பவுன்சரை ஸ்டோக்ஸ் வீச எட்ஜ் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ராகுல், பந்த் சேர்ந்தனர். பிட்ச் மந்தமாக இருந்ததால் ராகுல் வேகப்பந்து வீச்சாளார்களையும் தூக்கித் தூக்கி அடிக்க முடிந்தது. ரிஷப் பந்த் புல் ஷாட்களை கட் ஷாட்களை அபாரமாகப் பயன்படுத்தினார். இங்கிலாந்தில் சதம்டித்த முதல் இந்திய விக்கெட் கீப்பரானார் ரிஷப் பந்த். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல், ரிஷப் பந்த் நிறைய ரன்களைக் குவித்தனர், நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்கு உதறலைக் கொடுத்தனர். இந்தியா 2வது இன்னிங்ஸில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது என்பது தொலைதூர நினைவானது ரிஷப் பந்த், ராகுல் கூட்டணியால்தான். விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி இந்தியப்பக்கம்தான்.

என்னதான் நம்பிக்கை அளித்தாலும் லார்ட்ஸ் டெஸ்ட்டைத் தவிர மற்ற டெஸ்ட் போட்டிகளில் சவால் அளித்தோம் என்றாலும் கடைசியில் இன்னொரு அயல்நாட்டுட் தொடரை 4-1 என்று இந்தியா தோற்றதுதான் நடந்துள்ளது. கோலி கேட்பது போல் எத்தனை நாளைக்குத்தான் நாம் ‘சவால் அளிக்கிறோம்’ ‘முயற்சி செய்தோம்’ என்று கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்? என்றைக்கு வெற்றியுடன் திரும்பப் போகிறோம்?

ஆட்ட நாயகன் அலிஸ்டர் குக், தொடர் நாயகர்கள் சாம் கரன், விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24932163.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து அபாரமாக ஆடிவிடவில்லை; பல தருணங்களில் நாம்தான் சாதகங்களை அவர்களுக்குத் தாரை வார்த்தோம்: விராட் கோலி பேட்டி

 

 
virat%20kohlijpg

படம். | ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற வாய்ப்பிருந்த நிலையிலெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்திய அணி வாய்ப்பை இங்கிலாந்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தது என்று அனைவரும் நினைப்பதையே விராட் கோலியும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரது இரட்டைச் சதக் கூட்டணி இங்கிலாந்துக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியது, இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கையை அளித்தது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

 
 

எட்ஜ்பாஸ்டனில் 194 ரன்கள் இலக்கை எதிர்த்து 31 ரன்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, சவுத்தாம்டனில் 60 ரன்களில் வெற்றியைப் பறிகொடுத்தது, ஓவலில் போராடி வெற்றி வெளிச்சம் கண்களில் தெரியும் போது கைவிட்டது ஆகியவை இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக அமைந்தது.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி அனுகூலமான நிலையை பயன்படுத்தி நெருக்கி கில்லர் இன்ஸ்டிங்க்டுடன் ஆடாமல் இங்கிலாந்துக்குத் தாரை வார்த்தது, இங்கிலாந்தின் கீழ் வரிசை பேட்டிங், வோக்ஸ், ஸ்டோக்ஸ், சாம் கரன், பிராட், பட்லர் என்று முக்கியக் கட்டங்களில் போட்டியை இந்திய அணி கைவிட்டது.

இது பற்றி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இரு அணிகளுக்குமே வெற்றி என்பது தொடரில் சாத்தியமாகவே இருந்த சூழல்கள் அதிகம்.

இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும், இதைவிடவும் நாம் அங்கீகரிக்க வேண்டியது போட்டியில் எங்களுக்குச் சாதகமான நிலைமைகள் இருந்த போது அதை எப்படி மேலும் ஸ்திரப்படுத்துவது என்பது முக்கியம். அதாவது சரிவு நிலையிலிருந்து எதிரணியினர் மீண்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தொடரில் பார்த்தால் அடிக்கடி நாங்கள்தான் எங்கள் கைவசம் இருந்த போட்டியை இங்கிலாந்துக்குச் சாதகமாக தாரை வார்த்தோமே தவிர அவர்கள் ஏதோ பிரில்லியண்டாக விளையாடி சூழ்நிலையைத் தங்கள் பக்கம் வென்றனர் என்று கூற முடியாது. சாம் கரன் இந்தத் தொடரில் தனிச்சிறப்பாக ஆடினார் என்பதை நான் அறிவேன். அவரைத் தவிர அந்த இடத்தில் அந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்டிங்கில் அபாரமாகத் திகழ்ந்தது என்று நான் கூற மாட்டேன். எங்களால் அவர்கள் மீது அழுத்தத்தை நீண்ட நேரத்துக்குத் தக்க வைக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே கூறியது போல் தொடரை நன்றாகத் தொடங்க வேண்டும் முதல் டெஸ்ட் போட்டியை ஏதோ பயிற்சிப் போட்டிபோல் தொடங்குவது கூடாது. முதல் டெஸ்ட் மிக மிக முக்கியம். நாம் நம் சரியான மனநிலையில் இருக்கிறோம் என்பதையும் அனைத்தையும் சரியாகச் செய்து முதலில் வெற்றி பெறுவோம் என்பதையும் உறுதி செய்வது அவசியம்” என்றார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24932642.ece

Link to comment
Share on other sites

தோனி உட்பட எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத தனிச்சிறப்பு: ரிஷப் பந்த் சாதனை

 

 
pantjpg

ரிஷப் பந்த். | கெட்டி இமேஜஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது அனைத்து அதிரடி மற்றும் நிதானத் திறமைகளைக் காட்டி ஆடிய ரிஷப் பந்த் 117 பந்துகளில் சதம் அடித்தார், அதுவும் பம்மிக்கொண்டிருக்காமல் அடில் ரஷீத்தை தூக்கி ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடித்து ராஜா போல் சதம் கண்டார்.

இங்கிலாந்தை இவரும் ராகுலும் சேர்ந்து 204ரன்கள் கூட்டணி  அமைத்து உதறலெடுக்க வைத்தனர், ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்க இங்கிலாந்து ஸ்லிப் இல்லாமல் வீச நேரிட்டது. அடில் ரஷீத்தை சிக்சர்களாக அவர் வெளுத்தாலும் பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் உத்திக்கும் தயாராகவே இருந்து தைரியம் காட்டினார்.

 

கடைசியில் அடில் ரஷீத்தை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் டீப்பில் கேட்ச் ஆனது இந்திய அணியின் ட்ரா வாய்ப்பை பறித்தது.

இந்நிலையில் நேற்றைய ஓவல் சதத்தின் மூலம் ஒரு தனிச்சிறப்பான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பரூக் இஞ்ஜினியர் முதல் தோனி ஈறாக கிர்மானி, கிரன் மோர் என்று எந்த இந்திய விக்கெட் கீப்பரும் செய்யாத ஒரு சாதனையை தன் சதத்தின் மூலம் செய்துள்ளார் ரிஷப் பந்த்.

இங்கிலாந்தில் டெஸட் கிரிக்கெட்டில் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் என்ற சாதனையே அது.

இதனைப் பாராட்டி ஐசிசி அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், “முதல் டெஸ்ட் சதத்தை அடித்ததற்கு வாழ்த்துக்கள் பந்த், மிக ஸ்டைலாக சிக்சரில் சதம்” என்று பாராட்டியதோடு, “இங்கிலாந்தில் சதம் எடுக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர்” என்று ரிஷப் பந்த் சாதனையை அங்கீகரித்துள்ளது.

ஓவலில் 4வது இன்னிங்சில் சதமடித்த இந்திய தொடக்க வீரர்களில் சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ராகுல் இணைந்துள்ளார், 1979 தொடரில் இதே ஓவைலில் சுனில் கவாஸ்கர் 438 ரன்கள் இலக்கை விரட்டும்போது 221 ரன்கள் விளாசியதை யாரால் மறக்கமுடியும். இதே போட்டியில் 213 ரன்கள் தொடக்கக் கூட்டணியை கவாஸ்கருடன் சேர்ந்து அமைத்த சேத்தன் சவுகான் 80 ரன்கள் எடுத்தார்.

https://tamil.thehindu.com/sports/article24932917.ece

Link to comment
Share on other sites

என்று தணியும் நம் கோலியின் காட்டம்? - மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறாரா?


 

 

kohli-strikes-again

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி காட்டமாக பதில் சொன்னது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் என இரண்டையும் அடுத்தடுத்து இழந்துள்ளது. ஓவலில் நடந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை விராட் கோலி சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு காட்டாமாக பதிலளித்தார் கோலி.

பத்திரிகையாளர்: விராட், உங்கள் அணி தொடர் முழுவதும் போட்டி போட்டு விளையாடியது. ஆனால் கடந்த 15 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி என்று சொல்வதெல்லாம் உங்கள் மீது கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதா? நீங்கள் அந்த பட்டத்தை நம்புகிறீர்களா?

கோலி: நாங்கள் சிறந்த அணி என்பதை நம்பவேண்டும். அதிலென்ன இருக்கிறது?

பத்திரிகையாளர்: ஆனால் கடந்த 15 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி இதுவா?

கோலி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிகையாளர்: என்னால் உறுதியாக அப்படி சொல்ல முடியாது

கோலி: உங்களால் சொல்ல முடியாது என்றால் அது உங்கள் கருத்து. நன்றி. 

இப்படி சட்டென முகத்தில் அடிப்பது போல பதிலை சொல்லி முடித்த கோலி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு அடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற போதும், பத்திரிகையாளர் சந்திப்பில் கோலி காட்டமாகவே நடந்து கொண்டார்.

தற்போது மீண்டும் கோலியின் இந்த காட்டமான பதில் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கோலியின் ஆணவத்தையே இது காட்டுகிறது, அவர் திருந்தவே மாட்டார் என்கின்ற ரீதியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரே வேதனையுடன் இந்த காணொலிப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.kamadenu.in/news/sports/5897-kohli-strikes-again-3.html

 

Link to comment
Share on other sites

வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைக்க வேண்டும்: கேப்டன் கோலிக்கு ‘தாதா’ அட்வைஸ்

 

 
ganguly

கங்குலி, கோலி. | படம்: ஏ.எஃப்.பி.

இங்கிலாந்து தொடரில் கடைசியாக ராகுல், ரிஷப் பந்த் முதுகெலும்புடன் தைரியமாக அதிரடி ஆட்டம் ஆடி இங்கிலாந்தை அச்சுறுத்தி ஆடியதால் தொடரை 4-1 என்று இழந்தாலும் ரசிகர்ளுக்கு ஆறுதல் கிடைத்தது.

இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்சி அணுகுமுறையில் பல குறைகள் தெரிய ஆரம்பித்துள்ளதால் பலரும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

 

வீரர்களை நடத்துவதில் வேலை வாங்குவதில் நிபுணரான முன்னாள் கேப்டன் தாதா கங்குலி, விராட் கோலிக்கு தற்போது ஆலோசனை வழங்கியதாவது:

“போஸ்ட் மார்ட்டம் செய்வதை விட, திறமைகளை அங்கீகரிப்பதே இப்போது முக்கியம். புஜாரா, ரஹானே, ராகுல் இந்தத் தொடரில் ஆடியது முன்னை விட 10 மடங்கு மேம்பட்ட ஆட்டமாகும்.

கோலி வீரர்களிடமிருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். இது கேப்டனின் பொறுப்பு.

ஒரு கேப்டனாகப்பட்டவர் வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைத்து தனக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும் ஆட்டத்திறன் தானாகவே மேம்படும்.” என்றார் கங்குலி.

https://tamil.thehindu.com/sports/article24941177.ece

 

 

வாய்ப்பேச்சு ரவி சாஸ்திரியும் வாங்கிக்கட்டிக் கொண்டதும்

 
 
SHASTRI

படம். | ராய்ட்டர்ஸ்.

118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஓவல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்த இந்திய அணியை வானாளவ புகழ்ந்தார். அதற்குச் சரியான பதிலடிகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தென் ஆப்பிரிக்கா முதல் இங்கிலாந்து வரை கேப்டன் கோலி செய்தவற்கெல்லாம் ஆதரவு தெரிவித்து கேள்விக்குரிய அணித்தேர்வின் போது கூட எதுவும் சொல்லாமல் கிட்டத்தட்ட ‘ஜால்ரா’ அடித்து வரும் ரவிசாஸ்திரி, தென் ஆப்பிரிக்கா தோல்வி, தற்போது இங்கிலாந்து தோல்வி, வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் அதன் பிறகு நடக்கும் உலகக்கோப்பை என்று கடும் நெருக்கடிகளை சந்திக்கிறார்.

 

கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த இந்திய அணியே சிறந்தது என்றும் அயல்நாடுகளில் இந்த அணியே வெற்றி பெறுகிறது என்றும் மற்ற அணிகளெல்லாம் ஏதோ ‘ஓபி’ அணிகள் எனும் தொனியில் பேசி முன்னாள், இந்நாள் வீரர்களிடம் வகையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கிரிக் இன்போ தலைமை எடிட்டர் சம்பித் பால் தன் ட்விட்டரில் ரவிசாஸ்திரியை விமர்சிக்கும் போது, “தன்னம்பிக்கை ஒரு அருமையான குணம்தான். ஆனால் சுயவிளம்பரம் எனும் நுரைக்குமிழி எப்போதும் சுய-தோல்வியில்தான் முடியும்” என்று சாடியுள்ளார்.

ஹர்ஷா போக்ளே, “இப்போது இரண்டு அயல்நாட்டுத் தொடர்களில் தொடர்ச்சியான தோல்விகள்” என்று கூறியுள்ளார்.

இந்தியா இலங்கையில் 2 தொடர்களையும் மே.இ.தீவுகளில் ஒரு தொடரையும் வென்றது. ஆனால் 15-20 வருடங்களில் இந்த அணிதான் வெற்றி அணி என்று ரவிசாஸ்திரி இறுமாப்புடன் கூறியது சில முன்னாள் வீரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

சவுரவ் கங்குலி, சாஸ்திரியின் கருத்து முதிர்ச்சியற்றது என்றும் சாஸ்திரி அணியை மேம்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும் என்று சாடினார்.

விரேந்திர சேவாக், “களத்தில் விளையாடுவதை வைத்துத்தான் அயல்நாட்டில் சிறந்த அணி என்று கூற முடியுமே தவிர ஓய்வறையில் அமர்ந்து கொண்டு அதைப்பற்றி பேச முடியாது” என்று சாடினார்.

உடனேயே விராட் கோலி, தனக்கு ‘பூரண’ ஆதரவு தரும் ரவி சாஸ்திரிக்கு ஒத்து ஓதும் விதமாக, “நாம் சிறந்த அணி என்று நாம் நம்ப வேண்டும், ஏன்? இதில் தவறென்ன” என்று கேட்டார்.

அதற்கு ஒரு பத்திரிகையாளர், ‘என்னால் அப்படிக் கூற முடியாது’ என்றார் உடனே கோலி அவருக்கு உங்களால் கூற முடியாது என்றால் அது உங்கள் கருத்து’ என்றார்.

தற்போது கோலி இல்லாமல் ரோஹித் சர்மா தலைமையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கச் செல்கிறது. வரும் 19ம் தேதி பரமவைரி பாகிஸ்தானுடன் தோற்றால் ரவிசாஸ்திரி தலை மேலும் உருளும்.

https://tamil.thehindu.com/sports/article24941649.ece

 

 

களவியூகம், பந்துவீச்சு மாற்றம் பற்றி கோலி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்: சுனில் கவாஸ்கர்

 
 
sunil

சுனில் கவாஸ்கர்.| படம்: கே.முரளிகுமார்.

இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு கேப்டனாக நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது, உத்தி ரீதியாக, சமயோசித முடிவுகளில் கோலி இன்னும் கொஞ்சம் தேற வேண்டியுள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியா டுடே நியூஸ் சேனலில் கவாஸ்கர் கூறும்போது, “அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தற்போது இங்கிலாந்து தொடரிலும் பார்த்தோம்.

 

கொஞ்சம் சரியான களவியூகம் சரியான பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றை அவர் செய்திருந்தால் முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும்., அவர் கேப்டனாகி 2 ஆண்டுகள் (உண்மையில் 4 ஆண்டுகள்) ஆகிறது எனவே அனுபவமின்மையும் ஒரு காரணம்.” என்றார்.

முதல் டெஸ்ட் போட்டி முதல் இங்கிலாந்தின் டாப் ஆர்டர்களைக் கழற்றிவிட்டு பின் கள வீரர்களை ஆடவிட்டது அவரது களவியூகம் மற்றும் அனுபவமற்ற பந்து வீச்சு மாற்றத்தினால் இங்கிலாந்து வெற்றி பெற்றதில் முடிந்தது.

சாம் கரன் சிறப்பாக ஆடிய போது அஸ்வினை பந்து வீச்சிலிருந்து தூக்கியது, அன்று ஷமி பிரமாதமாக வீசிய போது அவருகு 3வது ஸ்லிப் வைக்காமல் பட்லர், பிராட், பரவலான களவியூகத்தில் ஏகப்பட்ட சிங்கிள்களை எடுத்து பிறகு பட்லர் வெளுத்துக் கட்டியதும் கோலியின் தவறுகளே, இதைத்தான் அனுபவமின்மை என்றார் சுனில் கவாஸ்கர்.

ஆனால் செய்தியாளர் ஒருவரிடம் விராட் கோலி இது சிறந்த அணியல்ல என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்து என்று கூறியது பற்றி கவாஸ்கர் கூறும்போது,

“தோற்றுப் போய் உட்கார்ந்திருக்கும் ஒருவரிடம் அந்த நேரத்தில் சிறந்த அணியா என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது ஆனால் செய்தியாளராக அவர் கடமையைச் செய்தது நியாயமே. அதற்கு விராட் கோலி ஒருபோதும், “நீங்கள் சரி, நாங்கள் தவறு” என்று கூறப்போவதில்லை. எனவே இதில் அதிகம் பார்க்க ஒன்றுமில்லை, ஏற்கெனவே தோல்வியில் அவர் துவண்டு போயிருப்பார், அந்தத் தருணத்தில் அவர் அப்படித்தான் பதிலளித்திருப்பார்” என்றார்

அதே போல் ரவிசாஸ்திரி கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த அணியே சிறந்தது என்று கூறியதையும் சுனில் கவாஸ்கர் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல், “நேர்மையாக ரவி சாஸ்திரி முந்தைய இந்திய அணிகளை மட்டம்தட்டும் நோக்கில் கூறியிருக்க மாட்டார், இந்த அணியை உத்வேகப்படுத்த அவர் கூறியிருப்பார்.

நிச்சயம் முந்தைய அணிகளை மட்டம்தட்டுவது அவரது நோக்கமாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.

https://tamil.thehindu.com/sports/article24941751.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் தோல்வி... இந்த 5 வீரர்கள்தான் காரணமா?! #EngVInd

 
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் தோல்வி... இந்த 5 வீரர்கள்தான் காரணமா?!  #EngVInd
 

`இது ஒன்றும் மோசமான தோல்வியில்லை. கிட்டத்தட்ட எல்லா டெஸ்ட் போட்டிகளிலுமே இந்தியா வெல்லும் சூழல் இருந்தது. ஒரு டெஸ்ட்டில் வெற்றியும் பெற்றது. அதனால் இந்தியாவின் இங்கிலாந்து தொடர் தோல்வியை படுதோல்வி என சொல்லமுடியாது. கோலியும் காரணமல்ல' - இப்படி  இந்திய அணிக்கு ஆதரவாக சிலர் சொன்னாலும் உண்மை என்ன என்பதை புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்திய அணியால் இங்கிலாந்து தொடரில் வெல்ல முடியாததற்கு காரணம் பேட்டிங் சொதப்பல் என பொதுவில் சொன்னாலும்  இந்த ஐந்து வீரர்கள்தான் தோல்விக்குக் காரணம் என்பதை புள்ளி விவரங்களும் அடுக்குகின்றன. அவர்கள் யார்... யார்?

1. ஷிகர் தவான்

கோலி

 

 

இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸின் சொதப்பல் உச்சம் ஷிகர் தவான். தொடர்ந்து மோசமான ஆட்டம் ஆடினாலும் 5 டெஸ்ட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் 8 இன்னிங்ஸ் விளையாடினார் ஷிகர். 26, 13, 35, 44, 23, 17, 3, 1.... இதுதான் எட்டு இன்னிங்ஸிலும் இவர் அடித்த ரன்கள். மொத்தமாக 162 ரன்கள்.  அதிகபட்ச ஸ்கோரே 44 ரன்கள்தான். 8 இன்னிங்ஸ்களையும் சேர்த்து இவரது ஆவரேஜ் 20.25. இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் நீண்ட நேரம் நின்று, அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்க வேண்டிய ஷிகர் தவான், டி20 போட்டிகளில் ஆடுவதுபோல் பொறுப்பின்றி ஆடியது, அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக எடுத்துக்கொள்ளலாம். தனது விக்கெட்டுகளை மிக ஈஸியாகக் கொடுத்துவிட்டு வெளியேறிக்கொண்டே இருந்தார் ஷிகர்.

2. அஜிங்கியா ரஹானே

கோலி ரஹானே

இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களும் ஆடினார் ரஹானே. மொத்தமாக அவர் அடித்த ரன்கள் 257. ஆவரேஜ் ஒரு இன்னிங்ஸுக்கு 25.70 ரன்கள். ஆறு இன்னிங்ஸ்களில் 20 ரன்களுக்கும் குறைவாக அடித்த அவரது டாப் ஸ்கோர் 81. கோலிக்கு அடுத்தபடியாக களம் இறங்கும் ரஹானே, மிடில் ஆர்டரில் நின்று அதிக ரன்கள் சேர்த்திருக்க வேண்டியவர். பேட்டிங் ஆர்டரில் இவர் இறங்கும் 5-வது இடம் மிக முக்கியமானது. ஆனால் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆடியதுபோலத்தான் அவரது ஆட்டம் இருந்தது. கோலியுடன் நின்று பார்ட்னர்ஷிப்பில் பின்னியெடுத்திருக்க வேண்டிய ரஹானே சொதப்பியது அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம். 

3. ஹர்திக் பாண்டியா

கோலி பாண்டியா

2.0 இந்திய அணியின் கபில்தேவ் என அழைப்பதை பெருமையாக நினைப்பவர் ஹர்திக் பாண்டியா. இந்தியாவின் மிக முக்கியமான ஆல் ரவுண்டராக நினைத்து இவருக்கு முதல் நான்கு டெஸ்ட்களிலுமே வாய்ப்பை வழங்கினார் கோலி. ஆனால், ஒரே ஒரு டெஸ்ட்டைத் தவிர மற்ற மூன்று டெஸ்ட்களிலுமே ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம், அணிக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸிலுமே பேட்டிங் செய்தார் பாண்டியா. இதில் இவரது டாப் ஸ்கோர் 52 ரன்கள் நாட் அவுட். இதே போட்டியில் 5 விக்கெட்டுகளும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் பாண்டியா. ஆனால், மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் அசால்ட்டான ஆட்டம். 8 இன்னிங்ஸிலும் சேர்த்து இவர் மொத்தமாக அடித்த ரன்கள் 164. ஒரு இன்னிங்ஸூக்கான ஆவரேஜ் 23.42. பெளலிங்கிலும் இதே கதைதான். ஒரு போட்டியைத்தவிர மற்ற அனைத்திலுமே பாண்டியாவின் பெளலிங் எடுபடவில்லை. 4 மேட்ச்களில் விளையாடி மொத்தமாக 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து அணியில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் என ஆல்ரவுண்டர்கள் கலக்க, இந்தியாவின் ஆல் ரவுண்டர் பதுங்காட்டம் ஆடியது தொடர் தோல்விக்கான முக முக்கியக் காரணம்

4. ரவிச்சந்திரன் அஷ்வின்

கோலி அஷ்வின்

டி20, ஒருநாள் போட்டிகளில் அஷ்வினை இந்திய தேர்வுக் குழு அணிக்குள் எடுப்பதில்லை. அதனால் அஷ்வினை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டின் பெளலிங் சுத்தமாக இங்கிலாந்தில் எடுபடவில்லை. இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆஃப் ஸ்பின்னில் அசத்தி, நான்காவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெற்றுத்தர, அஷ்வினோ விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறினார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இங்கிலாந்து தொடரில் மிக சிறப்பாக இருந்தது. ஆனால், ஸ்பின்..? 4 மேட்ச்களில் 7 இன்னிங்ஸில் பந்து வீசினார் ரவிச்சந்திரன் அஷ்வின். இதில் இரண்டு இன்னிங்ஸ்களில் விக்கெட்டே இல்லை. மொத்தமாக இவர் எடுத்த விக்கெட்டுகள் 11 மட்டுமே. மாறாக மொயின் அலி இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து சீரிஸில் மொத்தமே 2 போட்டிகளில்தான் விளையாடினார். அதில் எடுத்த விக்கெட்டுகள் மட்டுமே 12. இந்தியாவின் ஸ்பின் அட்டாக் இந்த தொடரில் மிக மோசமாக இருந்ததற்கான மிக முக்கியக் காரணம் அஷ்வினின் சுமாரான பந்துவீச்சு.  

5. விராட் கோலி 

கோலி

பேட்ஸ்மேனாக 2018 இங்கிலாந்து சீரிஸ் கோலிக்கு மிகப்பெரிய வெற்றி. 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 593 ரன்கள் அடித்து இந்தியாவின் டாப் பேட்ஸ்மேனாக உயர்ந்து நின்றார் கோலி. இவரது பேட்டிங் ஆவரேஜ் ஒரு இன்னிங்ஸுக்கு கிட்டத்தட்ட 60 ரன்கள். இத்தொடரில் இரண்டு சதங்களும் அடித்திருந்தார் கோலி. ஆனால், கேப்டனாக பல இடங்களில் தடுமாறினார் கோலி. சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் கிட்டத்தட்ட 5 டெஸ்ட் போட்டிகளிலுமே சொதப்பினார். ப்ளேயிங் லெவன் மட்டும் அல்லாமல், பேட்டிங் ஆர்டரிலும், பெளலிங் ரொட்டேஷினிலும் பல சொதப்பல்கள். முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகள் எடுக்க, இந்தப்பக்கம் ஹர்திக் பாண்டியாவுக்கு பந்து வீச ஓவர்களே கொடுக்கவில்லை கோலி. அதேபோல் அஷ்வினிடம் ஓவர் டிபென்ட்டென்ட்டாகவும் இருந்தார். கோலி எடுத்த பல தவறான முடிவுகள் இத்தொடர் தோல்விக்கான முக்கியமானக் காரணங்களில் ஒன்று!

https://www.vikatan.com/news/sports/136877-indias-test-series-loss-against-england-are-these-5-players-to-be-blamed-engvsind.html

Link to comment
Share on other sites

`சாம் குரான் எங்களை அதிகமாகவே காயப்படுத்திவிட்டார்' - ரவி சாஸ்திரி வேதனை!

 

இங்கிலாந்து அணியைக்காட்டிலும், சாம் குரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்திவிட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

De15ICmWAAAYjIJ_20099.jpg


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்ட் போட்டிகளில், 20 வயதான சாம் குரான் அதிரடி காட்டினார். அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியைப் பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய அணி தோல்வியடைய காரணமாக இருந்தார் குரான். அபாரமான ஆட்டத்தால்  இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

 

 

இது தொடர்பாக ரவி சாஸ்திரி பேசுகையில், ``நாங்கள் தோற்றோம் எனக் கூறிவிட முடியாது, நாங்கள் முயற்சித்தோம். ஆனால் எங்களின் முயற்சியை விட இங்கிலாந்தின் முயற்சி அபாரமாய் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றார்கள் அவ்வளவுதான். இதுவே இந்திய அணி திறமைக்கான சான்று. தொடரை 1-4 என்ற தோற்ற நிலையிலும், இந்தத் தோல்வியால் இந்திய வீரர்களின் முயற்சி கேள்விக்குரியதாக ஒன்றும் இல்லை. அடுத்தடுத்த தோல்விகளால் நாங்கள் துவளவில்லை. கடந்த நான்கு வருடங்களில் 9 டெஸ்ட் தொடர்களை அந்நிய மண்ணில் இந்தியா வென்றுள்ளது. இந்திய ரசிகர்களுக்கும், எங்களின் மனசாட்சிக்கும் நாங்கள் போராடியது தெரியும். அடுத்து நடக்கவிருக்கும் ஆசிய தொடரிலும், நவம்பரில் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் நிச்சயம் இந்தியா வெல்லும். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதைத் தேர்வு செய்ய எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள். இருவருமே சாம் குரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்து அணியைவிட குரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.

https://www.vikatan.com/news/sports/136921-ravi-shastri-speaks-about-england-player-sam-curran.html

Link to comment
Share on other sites

அவரால்தான் நாங்க தோற்றோம்!! ஒரே ஒரு வீரரை காரணம் காட்டும் சாஸ்திரி

 
First Published 15, Sep 2018, 9:55 AM IST
 
ravi shastri revealed the name who is reason for indias defeat
 
HIGHLIGHTS

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு வீரரை காரணம் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு வீரரை காரணம் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் அனைத்து போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோர் ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் ஆடினரே தவிர பெரும்பாலான இன்னிங்ஸ்களில் கைகொடுக்க தவறிவிட்டனர். 

அதனால்தான் முதல் மற்றும் நான்காவது போட்டியில் வெற்றியின் விளிம்பில் தோல்வியை தழுவினோம். இரண்டாவது போட்டியில் படுதோல்வி, மூன்றாவது போட்டியில் வெற்றி, கடைசி போட்டியில் போராடி தோல்வி என அதிகமான போட்டிகளில் தோற்று தொடரை இழந்தோம். 

sam-curran.jpg

இந்திய அணி போராடி தோல்வியடைந்த போட்டிகளில் எல்லாம், நாம் தோற்பதற்கு இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரனே காரணமாக அமைந்தார். அந்த அணி இக்கட்டான சூழலில் இருந்தபோதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் 4 போட்டிகளில் ஆடி 272 ரன்களை குவித்த சாம் கரன், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட டிரண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில்(மூன்றாவது போட்டி) அந்த அணி தோல்வியடைந்தது. 

curaan.jpg

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரு அணிகளின் ஆட்டத்திற்கு இடையே பெரிய வித்தியாசமாக இருந்த சாம் கரன் தான் இந்திய அணி தொடரை இழக்க காரணம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

20 வயதான சாம் கரன், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான கெவின் கரனின் மகன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி அசத்தினார். விராட் கோலியுடன் சேர்த்து அவருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

Sam-Curran-Virat-Kohli.jpg

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, நாங்கள் படுமோசமாக தோற்கவில்லை. இந்த தொடரை இங்கிலாந்து வென்றதற்கான கிரெடிட் சாம் கரனையே சாரும். அதனால்தான் நானும் கோலியும் பேசி முடிவெடுத்து, இங்கிலாந்து அணி சார்பில் தொடர் நாயகன் விருதை சாம் கரனுக்கு கொடுக்க பரிந்துரைத்தோம். சாம் கரன் எப்போதெல்லாம் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தாரோ, அப்போதெல்லாம் நாங்கள் பாதிக்கப்பட்டோம். 

ravi_sad.jpg

எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது சாம் கரன் ரன்களை குவித்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் இருந்தது. அந்த சூழலில் இந்திய அணியின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதேபோல சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் அந்த அணி 86 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போதும் சாம் கரன் ரன்களை குவித்தார். இப்படி, முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் அந்த அணியை மீட்டெடுத்தார். அதனால் சாம் கரன் தான் இந்திய அணி தோல்விக்கு காரணம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

https://tamil.asianetnews.com/sports/ravi-shastri-revealed-the-name-who-is-reason-for-indias-defeat-pf2xm6

Link to comment
Share on other sites

‘ரவி சாஸ்திரி வர்ணனையாளர் பணியை பார்க்கட்டும் பயிற்சியாளர் பணிக்கு சரிப்பட மாட்டார்: சேட்டன் சவுகான் ஆவேசம்

 

 

 
ravi%20chowgan

முன்னாள் வீரர் சேட்டன் சவுகன், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி : கோப்புப்படம்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி சரிபட்டுவரமாட்டார், ஆஸ்திரேலியத் தொடருக்கு முன் அவரை நீக்கிவிடுங்கள். அவருக்கு வர்ணனையாளர் பணிதான் பொருத்தமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது. இந்தத் தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் ஆளானது.

 
 
 

இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசியில் டெய்லண்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர் என்ற விமர்சனமும், விராட் கோலி, ரஹானே, புஜாரா, ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக பேட் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆனால், இதற்குப் பதில் அளித்துப் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கடந்த 20 ஆண்டுகளில் இப்போது விராட் கோலி தலைமையில் இருக்கும் இந்திய அணியே சிறந்த அணி, குறைந்த காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்தக் கருத்து மீதும் பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வைத்தனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய தொடக்க வீரரும், உ.பி. அரசின் விளையாட்டுத்துறை அமைச்சருமான சேட்டன் சவுகான் தான்பாட் நகரில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்பாக நீக்கிவிடுங்கள். ரவி சாஸ்திரி நல்ல கிரிக்கெட் வர்ணனையாளர். அவர் அந்த பணியைச் செய்தால் போதுமானது, அந்த பணியைச் செய்ய அவரை அனுமதியுங்கள். இந்திய அணிக்குப் பயிற்சியாளர் பணிக்கு அவர் சரிபட்டுவரமாட்டார்.

இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும், இங்கிலாந்து தொடரில் இரு அணிகளுமே சமபலம் கொண்டதாக இருந்ததாகவே காணமுடிந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் இங்கிலாந்து டெய்லண்டர்களை வீழ்த்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர். இந்தக் குறைபாட்டை களைய வேண்டும்.

இப்போதுள்ள இந்திய அணியைக் கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த அணி என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதைநான் ஏற்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை கடந்த 1980களில் இருந்த இந்திய அணிதான் எப்போதுமே சிறப்பான அணியாக இருக்க முடியும். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வெற்றிகளையும் பெற்றுத் திரும்பியது.

ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களும், புதியரத்தம் பாய்ச்சப்பட்ட இளம் வீரர்களும் கொண்ட கலவையாக இருப்பதால், கோப்பையைவெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு சேட்டன் சவுகான் தெரிவித்தார்.

இந்திய அணியில் கடந்த 1969 முதல் 1981-ம் ஆண்டுவரை இடம் பெற்ற சேட்டன் சவுகன், 40 டெஸ்ட் போட்டிகளி்ல விளையாடி, 2,084 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 1969-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராகமும்பையில் நடந்த போட்டியில் சேட்டன் சவுகன் அறிமுகமாகினார். அதன்பின் 1981 ஆண்டு ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெற்றார். சிறந்த டெஸ்ட் வீரரான சேட்டன் சவுகான் 7 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.

ரவிசாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோர் வலியுறுத்திய நிலையில், இப்போது சேட்டன் சேவாக்கும் குரல் எழுப்பியுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24967102.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம்: இந்திய அணிக்கு ராகுல் திராவிட் வேண்டுகோள்


 

 

rahul-dravid-speech-about-england-tour

 

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 11:13 am
  • அ+ அ-

இங்கிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம் என்று இந்திய அணிக்கு ராகுல் திராவிட் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணி களுக்கு எதிராகவும் இந்திய அணி எச்சரிக்கையுடனே விளையாட வேண் டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் குறித்து, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் செய்தி நிறுவனத்துக்கு ராகுல் டிராவிட் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு எளிதானது அல்ல. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா-இங்கிலாந்து தொடரில் இரு அணி பேட்ஸ் மேன்களும் பந்துகளை எதிர்கொள்வதில் தடுமாறினர். நான் இங்கிலாந்தில் சில காலம் விளையாடி இருக்கிறேன். அங்குள்ள ஆடுகளங்கள் மிகவும் கடினமானவை. ரன் குவிப்பது சிரமமாக இருக்கும்.

அடுத்த முறை இங்கிலாந்து தொடருக்கு நாம் செல்லுவதற்கு, முன்னதாகவே பயிற்சி பெற்று செல்லவேண்டும். இங்கிலாந்து தட்ப வெப்பநிலை, ஆடுகளங்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப தயாராவது அவசியமாகும். நம்மால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாட முயல்வது அவசியமாகும். இந்தத் தொடர் மூலம் நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியமாகும்.

இங்கிலாந்தில் நடைபெறும் தொடர் என்பது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். எனவே அந்தத் தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம். இந்தத் தொடர் அருமையானதாக இருந்தது. நமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

ஆசியக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் நமது சிந்தனை எல்லாம் பாகிஸ்தான், வங்கதேசத்தை மட்டும் ஏன் நோக்கியிருக்கிறது என்று தெரியவில்லை.

பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமல்லாமல் மற்ற அணிகளுடனும் எச்சரிக்கையாக விளையாடவேண்டும். வெள்ளைப் பந்துகளில் ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வலிமையானது என்றாலும், எச்சரிக்கையாக விளையாடுவது அவசியம்.

இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்

https://www.kamadenu.in/news/sports/6396-rahul-dravid-speech-about-england-tour.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.