நவீனன் 9,747 Report post Posted August 2, 2018 ரூட்டுக்கு ‘ரூட்’ காட்டிய கோலி: எள்ளல் கொண்டாட்டம் படம். | ஏ.பி. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 80 ரன்கள் எடுத்து பெரிய சதத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் ஜானி பேர்ஸ்டோவின் அழைப்பை நம்பி 2வது ரன் ஓடி கோலியின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். இதனையடுத்து விராட் கோலி, கொஞ்சம் நாமும் கிண்டல் செய்து பார்ப்போமே என்று ஜோ ரூட் அன்று சதமடித்து ஒருநாள் தொடரை வென்ற போது ‘ஊதிவிட்டோம்’ என்ற பாணியில் செய்கை செய்து கிண்டல் செய்ததைப் போல் ரன் அவுட் செய்து கோலியும் ‘ஊதிவிட்டோம்’ என்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு அறிவுறுத்துமாறு உதட்டின் மேல் விரல்களை வைத்து ‘உஷ் சத்தம் போடாதீங்க’ என்றும் கூறியது முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் ருசிகர சம்பவமாகியுள்ளது. கோலி எப்போதுமே தான் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கமுள்ளவர். தொடருக்கு முன் அநியாயத்திற்கு அவரது 2014 பார்ம் குறித்து இங்கிலாந்து ஊடகங்கள் வம்பிழுத்தன. 112/3 என்ற நிலையிலிருந்து ஜோ ரூட், பேர்ஸ்டோ இணைந்து 216 ரன்களுக்குக் கொண்டு சென்று வலுவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மிட்விக்கெட்டில் ஒரு பந்தைத் தள்ளிவிட்டு 2வது ரன்னுக்கு பேர்ஸ்டோ அழைப்புக்கு தேவையில்லாமல் இசைந்தார் ஜோ ரூட், விராட் கோலி பந்தை விரட்டிச் சென்று எடுத்து திரும்பி அதே போஸில் த்ரோ அடிக்க நேராக ரன்னர் முனை ஸ்டம்பைப் பந்து தாக்கியது, ஜோ ரூட் மிகவும் பின் தங்கிவிட்டார். ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டினால் இங்கிலாந்து சரிவு ஆரம்பமானது. கோலி எள்ளல் கொண்டாட்டம். | கெட்டி இமேஜஸ் இதனையடுத்து ஜோ ரூட் அன்று ஒருநாள் தொடரை தன் சதத்தின் மூலம் வென்று செய்த செய்கையை இமிடேட் செய்த கோலி அவரைப்போலவே செய்து ரூட்டை எள்ளி நகையாடினார். இந்தக் கொண்டாட்டம் குறித்து இங்கிலாந்து தொடக்க வீரர் கீட்டன் ஜெனிங்ஸ் கூறும்போது, “எந்த வீரரும் தான் விரும்பும் வழியில் கொண்டாட உரிமை உண்டு. அவர் கொண்டாடினார் அது கூலானதுதான்” என்றார். https://tamil.thehindu.com/sports/article24579036.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 2, 2018 ‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது இங்கிலாந்து அ-அ+ இன்றைய 2-வது நாளில் 10 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #Ashwin #Shami இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 42 ரன்களும், ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோவ் 70 ரன்களும் அடித்தனர். சாம் குர்ரான் 24 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை அஸ்வின் வீசினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ஆண்டசர்ன் இரண்டு ரன்கள் சேர்த்தார். அடுத்த ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாம் குர்ரான் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்கள் விளையாடி 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இன்று 10 பந்துகள் சந்தித்த இங்கிலாந்து இரண்டு ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டை இழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/02155051/1181193/ENGvIND-Edgbaston-Test-england-287-all-out-ashwin.vpf India 18/0 * (4.5 ov) Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,177 Report post Posted August 2, 2018 India. 160/6 * (48 ov) Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 2, 2018 எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் 2-வது நாள்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 76/3 அ-அ+ எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். https://www.maalaimalar.com/News/Sports/2018/08/02180217/1181247/ENGvIND-Edgbaston-Test-1000th-Test-india-quick-lost.vpf India 160/6 * (48 ov) Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 2, 2018 இந்தியாவின் ஆட்டத்தைப் பார்க்காமல் ‘தூங்கிய ரவி சாஸ்திரி’: ஹர்பஜன் எழுப்பியபோது ‘தியானம்’ செய்வதாக மழுப்பல் இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்காமல் தூங்கிய ரவி சாஸ்திரி இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்காமல் தூங்கிய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை வர்ணனை மூலம் ஹர்பஜன் எழுப்பியபோது, நான் தியானம் செய்வதாக கூறி அவர் மழுப்பினார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி பர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு, பீல்டிங்கில் உத்வேகம் காணப்பட்டது, அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால், ஆட்டம் பரபரப்பானது. ஆனால், இதைப் பார்க்காமல் பெவிலியனில் அமர்ந்து கொண்டு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அமர்ந்தவாறே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகே துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அமர்ந்திருந்தார். , வர்ணனையாளர் அறையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்டுடன் ஹர்பஜன் சிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்குவதை கேமரா மூலம் பார்த்த ஹர்பஜன் சிங் பார்த்து சிரித்து, கிண்டல் செய்தார். சஞ்சய் பங்கரை அழைத்த ஹர்பஜன் சிங், “ ரவி சாஸ்திரியின் கன்னத்தைப் பிடித்து இழுத்து உலுக்கி, தூக்கத்தில் இருந்து எழுப்புங்கள்” என்று ஹர்பஜன் கிண்டல் செய்தார். இதைக் கேட்ட சஞ்சய் பங்கர் தன்னிடம் இருந்த இயர்போனை ரவி சாஸ்திரியிடம் கொடுத்து கேட்கக் கூறினார். அவரிடம் “ரவி எழுந்திருங்கள், தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள்” என ஹர்பஜன் தெரிவித்தார். இதைக் கேட்டு சிரித்த ரவி சாஸ்திரி, “நான் தூங்கவில்லை, நான் சிறிது நேரம் அமர்ந்தவாறே தியானம் செய்து கொண்டிருந்தேன்” என்று கூற அங்கு ஒரே சிரிப்பலை நிலவியது. https://twitter.com/sukhiaatma69/status/1024673170178101248 https://tamil.thehindu.com/sports/article24583116.ece இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் `முதல் டெஸ்ட் சதம்’! சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார். Photo Credit: BCCI இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மேலும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்ஸை முரளி விஜய் மற்றும் தவான் ஆகியோர் தொடங்கினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்க்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் ஆட்டமிழந்தார். அவர் 20 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முரளி விஜய் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். தவான் 26 ரன்களும், ராகுல் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் இளம் வீரர் டாம் குர்ரான், 8 பந்துகளில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, விராட் கோலி - ரஹானே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து பந்துவீச்சை சிறிதுநேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடியை, ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் ரஹானே 15 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். இதனால், 50 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி, 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Photo Credit: ICC அடுத்து களமிறங்கிய பாண்டியா, கேப்டன் கோலியுடன் இணைந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் நோக்கில் விளையாடினார். 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், டாம் குர்ரன் பந்துவீச்சில் பாண்டியா ஆட்டமிழந்தார். 52 பந்துகளைச் சந்தித்த பாண்டியா 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஷ்வின், 10 ரன்களிலும், ஷமி 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தநிலையில், 9வது விக்கெட்டுக்கு இஷாந்த் ஷர்மாவுடன் இணைந்து கேப்டன் கோலி விரைவாக ரன் சேர்க்க முற்பட்டார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. விராட் கோலி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷாந்த் ஷர்மா ஆட்டமிழக்க ஆட்டத்தில் சிறிது பரபரப்புத் தொற்றிக் கொண்டது. ஆனால், இங்கிலாந்து வீரர்களின் முயற்சியை முறியடித்த கோலி, அசத்தல் பவுண்டரியுடன், தனது 22வது சதத்தைப் பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி பதிவு செய்யும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். 100 பந்துகளில் அரை சதம் கடந்த கோலி, 172 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி எப்படி விளையாடப் போகிறார் என்ற விமர்சனத்துக்குத் தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்து அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவுடன் இணைந்து கோலி 57 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 274 ரன்கள் எடுத்திருந்த போது 149 ரன்களுக்கு கோலி அவுட் ஆக முதல் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. இதில், இங்கிலாந்தை விட இந்திய அணி 13 ரன்கள் பின்தங்கியுள்ளது. https://www.vikatan.com/news/sports/132856-virat-kohli-scores-first-test-hundred-in-england.html Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 2, 2018 விராட் கோலியின் உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரிய சதம்; விமர்சனங்களுக்குப் பதிலடி: இந்தியா 274 ரன்கள் சாம்பியன் இன்னிங்ஸ் ஆடிய விராட் கோலி. | ராய்ட்டர்ஸ். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முழுதும் விராட் கோலிக்குச் சொந்தமாகியுள்ளது. 225 பந்துகளில் 22 பவுண்டரிகள் 1 சிக்சருடன் விராட் கோலி 149 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆதில் ரஷீத்திடம் ஆட்டமிழக்க இந்திய அணி 169/7 என்ற நிலையிலிருந்து கோலியின் உலகத்தரம் வாய்ந்த சத இன்னிங்ஸினால் கடைசியில் இங்கிலாந்து ஸ்கோருக்கு நெருக்கமாக வந்து 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட முடிவில் அலிஸ்டர் குக் 14 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்காமல் கடந்த இன்னிங்ஸில் அஸ்வினிடம் எப்படி பவுல்டு ஆனாரோ அதன் ஜெராக்ஸ் காப்பி போல் இந்த இன்னிங்ஸிலும் பவுல்டு ஆக இங்கிலாந்து ஆட்ட முடிவில் 9/1 என்று உள்ளது. அதாவது முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து 22/1. விராட் கோலி, இஷாந்த் சர்மா இணைந்து 9வது விக்கெட்டுக்காக 35 ரன்களைச் சேர்க்க உமேஷ் யாதவ் (1 நாட் அவுட்) விராட் கோலிக்கு ஸ்டாண்ட் கொடுக்க கோலி 57 ரன்களைச் சேர்த்தார். இந்தப் பார்ட்னர்ஷிப்பை மிகவும் அழகாக பில்ட் அப் செய்த விராட் கோலி இங்கிலாந்தை கடுமையாக வெறுப்பேற்றியதோடு இங்கிலாந்து ஸ்கோரை கடந்து விடும் நிலைக்குக் கொண்டு வந்தார், கடைசியில் கட் ஷாட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார், போராளி இன்னிங்ஸ்! ஆனால் 2 எளிதான கேட்ச்களை மலானும், ஜெனிங்ஸும் கோலிக்கு விட்டதன் பலனை இங்கிலாந்து அனுபவித்தனர். 100 தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷிகர் தவண் முதல் விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் இடது கை ஸ்விங் பவுலர் சாம் கரன், முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி பிறகு ஷிகர் தவணையும் எட்ஜ் செய்ய வைத்து வெளியேற்ற இந்தியா 59/3 என்று ஆனது, உணவு இடைவேளையின் போது இந்திய அணி 76/3 என்று இருந்தது. அப்போது கோலி 9 ரன்களுடனும், ரஹானே 8 ரன்களுடனும் இருந்தனர். ஒரு முறை ஏறக்குறைய பவுல்டு ஆகியிருப்பார், ஒரு முறை பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் அபாரம்: இங்கிலாந்து விட்ட கேட்ச்கள்! இங்கிலாந்தின் பலவீனம் கேட்ச்களை விடுவது என்று முன்னோட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம், இன்றும் ஏகப்பட்ட கேட்ச்களைக் கோட்டைவிட்டனர், கோலிக்கு இரண்டு சிட்டர்களை விட்டனர். அதன் பலனை அனுபவித்தனர், அலிஸ்டர் குக் பாண்டியாவுக்கு கையில் வந்த கேட்சை விட்டார். வழுக்கும் விரல்கள் கொண்ட இங்கிலாந்து பீல்டர்கள் என்ற கூற்றை நிரூபித்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு ரஹானேயை பென் ஸ்டோக்ஸ் ஒரு அபாரமான ஸ்பெல்லில் ஒர்க் அவுட் செய்தார், முதலில் ஒரு பிளம்ப் எல்.பி.யை ரிவியூ செய்யாமல் ரஹானேவுக்கு விட்டனர், அது அவுட். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ரஹானேயை இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர் என்று மாறி மாறி வீசி கடுமையாகத் திணறடிக்க கடைசியில் ஒரு பந்தை அவர் எட்ஜ் செய்ய நிர்பந்திக்கப்பட்டு ஜெனிங்ஸிடம் கேட்ச் ஆகி 15 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்குக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாத ஒரு இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு செய்தார். லேட் இன்ஸ்விங் பந்தில் கார்த்திக் ஒன்றும் செய்ய முடியாது போக் ஸ்டம்புகளை பதம் பார்த்தது. பென் ஸ்டோக்ஸ் பந்தில் பவுல்டு ஆன தினேஷ் கார்த்திக். | கெட்டி இமேஜஸ். ஹர்திக் பாண்டியாவுக்கு அலிஸ்டர் குக் ஒரு சிட்டரைக் கோட்டை விட்டார், அவர் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து சாம் கரனின் யார்க்கருக்கு எல்.பி.ஆனார். பந்து ஷூவின் முனையைத் தாக்கியது, ஒரு வாசிம் அக்ரம் யார்க்கர் அது. அஸ்வின் 10 ரன்களை எடுத்திருந்த போது ஆண்டர்சனின் அற்புதமான இன்ஸ்விங்கரில் அஸ்வினின் குச்சியைப் பெயர்த்தார். இந்திய அணி 169/7 என்று ஆனது. மொகமது ஷமி ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை தொட்டார் கெட்டார், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 182/8. எட்ஜ்கள், லைஃப்கள், ஏகப்பட்ட பீட்டன்களாயினும் போராளியான கோலியின் உலகத்தர சதம்: ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய 182/8 என்று ஷமி விக்கெட்டு போனபோது விராட் கோலி 67 ரன்களில் ஒரு முனையில் போராளியாக நின்றார். அனைத்து பவுலர்களையும் ஓரளவுக்கு கண்டுணர்ந்து ஆடிய விராட் கோலி, ஆண்டர்சனை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை, கடுமையாக பீட்டன் ஆனார். பந்துகள் ஸ்லிப் திசையில் பீல்டர் கைகளுக்குச் செல்லாமல் பல முறை முன்னதாகவே விழுந்தது, சில வேளைகளில் ஸ்லிப் பீல்டர்கள் டைவ் அடித்தாலும் பந்து தாண்டி பவுண்டரிக்குச் சென்றது. ஒரு கட்டத்தில் ஆண்டர்சனை 43 பந்துகள் சந்தித்த விராட் கோலி வெறும் 6 ரன்களையே எடுத்தார், 41 டாட்பால்களை விட்டார். 2 ஸ்கோரிங் ஷாட்கள் ஆடியபோதும் அது எட்ஜ் ஷாட்களே. மட்டையின் வெளிவிளிம்பில் 4 முறை பட்டு சென்றது. ஒரு முறை ஸ்ட்ரைக்கிலிருந்து விடுபட்டு எதிர்முனை போனால் போதும் என்று உயிரைவெறுத்து ஓடிய போது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். ஆண்டர்சன் பந்தில் இவரால் ஒரு ரன் கூட எடுக்க முடியாது என்பது போல்தான் இருந்தது. பந்தை விளாசும் விராட் கோலி. | ராய்ட்டர்ஸ். கோலி இறங்கிய போது எட்ஜ்பாஸ்டன் ரசிகர்கள் இவரை நோக்கி கேலியுடன் குரல் எழுப்பினர், கடைசியில் எழுந்து நின்று கைதட்ட வேண்டி வந்தது, இதுதான் சாம்பியன் பேட்ஸ்மென்களின் ஒரு தன்மை. கடைசி 3 விக்கெட்டுகளுடன் சேர்த்த 105 ரன்களில் கோலி மட்டும் 92 ரன்களை எடுத்தார். அதாவது போராடுவேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற ஒரு வீரரின் சதமாகும் இது. மனவலிமையும், கிரிக்கெட் திறனும் ஆதிக்கக் குணத்தை அடக்கியும் எழுப்பியும் காட்டக்கூடிய ஒரு விசித்திர ஆகிருதியாக விளங்கினார் விராட் கோலி. அஸ்வின் ஆட்டமிழந்த பிறகு கோலி கொஞ்சம் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடினார், ஆனாலும் 80களிலும் 90களிலும் கூட ஆண்டர்சனிடம் பீட்டன் ஆனார். டெய்ல் எண்டர்கள் வந்தவுடன் ஜோ ரூட் இங்கிலாந்து பீல்டிங்கைப் பரவலாக்கினார். ஒரு கட்டத்தில் கோலியை வீழ்த்தும் எண்ணத்தை இங்கிலாந்து கைவிட்டது போல்தான் தெரிந்தது. மிக அற்புதமான ஒரு சதத்தை எடுத்த விராட் கோலியின் சதமாக மாற்றும் விகிதம் 71%, இதில் கேன் வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகியோரைக் காட்டிலும் வேறு ஒரு உச்சத்தில் இருக்கிறார் விராட் கோலி. சதம் அடித்த பிறகு பவுண்டரிகளை தன் இஷ்டத்துக்கு அடித்தார், உமேஷ் யாதவ்வுடன் ஆடியது உண்மையில் ஒரு சாம்பியன் ஆட்டமே. அவருக்கு ஸ்ட்ரைக் வராமல் தானும் பெரிய ரிஸ்க் எடுக்காமல் பவுண்டரிகளை அடித்தார், கடைசியில் ரஷீத்தை ஒரு பேய் சிக்ஸ் அடித்தார். இன்னிங்ஸ் முழுதும் மணிக்கட்டை தளர்த்தியும் இறுக்கிப் பிடித்தும், முன்னால் வந்தும் பின்னால் சென்றும் அவர் ஆடிய ஷாட்கள், தடுப்பாட்டங்கள் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாத ஒரு 149 ரன்களை கோலி எடுத்து விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார், தனி மனிதராக அவர் இங்கிலாந்தை எதிர்கொண்டுள்ளார். 22வது டெஸ்ட் சதத்தை தனது 113வது இன்னிங்ஸில் எடுத்து, டான் பிராட்மேன் (58), சுனில் கவாஸ்கர் (101), ஸ்டீவ் ஸ்மித் (108), சச்சின் டெண்டுல்கர் (114), மொகமது யூசுப் (121) ஆகியோருக்கு இடையில் புகுந்துள்ளார். இங்கிலாந்து அணியில் சாம் கரன் 4 விக்கெட்டுகளையும் ரஷீத், ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. https://tamil.thehindu.com/sports/article24585347.ece Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 இங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன?- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின் அஸ்வினின் அபார ஆஃப் ஸ்பின் கனவுப் பந்துக்கு பவுல்டு ஆன குக். | ராய்ட்டர்ஸ். இங்கிலாந்தில் இந்திய ஸ்பின்னர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது 2002க்குப் பிறகு நிகழவில்லை. அஸ்வின் மிகவும் நெருங்கி வந்து நடப்பு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வரை வந்தார். பொதுவாக அயல்நாட்டில் அவர் பந்து வீச்சு எடுபடாமல் இருந்தது, ஷார்ட் பிட்ச், லெக் திசை பவுலிங் என்று சாத்து வாங்கிக் கொண்டிருந்தார். சுருக்கமாக இங்கிலாந்து போன்ற பிட்ச்களில் பந்தின் வேகம், லெந்த் ஆகியவற்றில் பிழைகள் செய்து வந்தார். இந்நிலையில் தான் செய்த மாற்றங்கள் குறித்து பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருணுடன் பிசிசிஐ.டிவிக்காக அஸ்வின் பேசியது: கடந்த முறை இங்கு கவுண்ட்டி கிரிக்கெட்டுக்காக வந்த போது இந்தப் பிட்ச்களில் ஸ்பின்னர்கள் என்ன வேகத்தில் வீச வேண்டும் என்பதை உணர்ந்தேன். பிட்ச்கள் மிகவும் மந்தமாக இருந்தன, முதல் நாளில் கூட கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். ஆனால் பந்தின் வேகத்தை நாம் சரியாகக் கடைபிடிக்கவில்லையெனில் பேட்ஸ்மென்கள் முன்னால் வந்தோ பின்னால் சென்றோ ஆடுவதற்கு நிறைய நேரம் இருக்கும். இங்கு வந்தவுடன் நான் விரைவில் இதனைக் கண்டுணர்ந்தேன், என்றார். படம்.| ஏ.எப்.பி. அலிஸ்டர் குக்கிற்கு காற்றில் உள்ளே செலுத்தி வெளியே இழுத்து கனவுப்பந்தில் பவுல்டு செய்த பந்தின் வேகம் 86 கிமீ. அதே போல் ஜோஸ் பட்லருக்கும் 85 கிமீ வேகத்தில் வீசினார். பிட்சில் ஈரப்பதன் இருந்ததால் அஸ்வினின் பந்து பிட்ச் ஆன பிறகு மண்ணைப் பற்றி நின்று திரும்பியது. கடந்த 18 மாதங்களாக என் பந்து வீச்சு ஆக்ஷனை கொஞ்சம் எளிமைப்படுத்த முயற்சி செய்தேன். அதாவது வெறும் கையை மட்டும் பயன்படுத்தாமல் பந்துக்குப் பின்னால் என் உடலையும் கொஞ்சம் செலுத்தி காற்றில் பந்து சில வேலைகளைக் காட்ட முயற்சி செய்தேன். அதைத்தான் நேற்று செய்தேன், இது பயனளித்தது. நாம் எப்போதுமே பிட்ச் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பேசியிருக்கிறோம். குறிப்பாக பிட்ச் பேட்டிங் சாதகமாக இருக்கும் போது, நடப்பு பேட்ஸ்மென்கள் இத்தகைய பிட்ச்களில் பேட்டிங்கை மகிழ்வுடன் ஆடும்போது பிட்ச் என்பதை நம் சமன்பாட்டிலிருந்து எடுத்துவிட வேண்டும் என்று பேசியிருக்கிறோம். பந்தை காற்றில் நன்றாகத் தூக்கி வீசி பேட்ஸ்மென்களின் கணிப்பை ஏமாற்றும் முயற்சியில் சில வேளைகளில் உடல் ஒத்துழைப்பதில்லை. இதனால் சற்று ஷார்ட் பிட்ச் ஆகவும் சற்று ஃபுல் லெந்தாகவும் விழுகிறது, இதனால்தான் என் ஆக்ஷனை கொஞ்சம் எளிமைப்படுத்த விரும்பினேன். ஒரு குறிப்பிட்ட ஆக்ஷன் மூலம் கிரிக்கெட்டில் ஒரு நல்ல காலக்கட்டத்தில் நான் இருந்தேன் ஆனால் பந்து வீச்சு அங்குதான் கெட்டுப் போக ஆரம்பித்தது. சில மாற்றங்களை என் விருப்பத்துக்கு மாற்றாகவே செய்ய வேண்டியிருந்தது” இவ்வாறு கூறினார் அஸ்வின். https://tamil.thehindu.com/sports/article24582560.ece Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 அன்று 10 இன்னிங்ஸில் 134... இன்று ஒரே இன்னிங்ஸில் 149... `விராட் தி கிரேட்..!’ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருக்க வேண்டுமெனில், ஒரேயாரு ஷாட்டில் பிதாமகனாக இருப்பது முக்கியமல்ல, தேவைப்பட்டால் அந்த ஷாட்டை தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் டிரைவ்களில் கில்லி. ஆனால், அவர் சிட்னியில் கவர் டிரைவ் ஆடுவதைத் தவிர்த்தார். அதேபோல, எட்ஜ்பேஸ்டனில் நேற்று விராட் கோலி சதம் அடிக்கும்வரை, ஆண்டர்சன் பந்தில் டிரைவ் ஆடவே இல்லை. விராட் கோலி மீண்டும் ஒருமுறை இந்திய அணியை ஆபத்தான தருணத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். பொறுப்பில்லாமல் அவுட்டாகிச் சென்ற மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, மறைமுகமாக பாடம் எடுத்திருக்கிறார். இந்தியா மட்டுமல்ல, துணைக்கண்டங்கள் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஏன், இங்கிலாந்திலும் என்னால் ரன் அடிக்க முடியும், சதம் அடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். #ENGvIND எப்பேர்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காதவரை அவரை லெஜண்ட் என ஒப்புக் கொள்வதே இல்லை நிபுணர்கள். `5 டெஸ்ட். 10 இன்னிங்ஸ். 134 ரன்கள். நான்குமுறை ஒரே பெளலரிடம் அவுட்!’ - டெஸ்ட் கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனிக்கும் யாரிடம் வேண்டுமானாலும், இந்த எண்களை மட்டும் சொல்லிப் பாருங்கள். உடனே அவர்கள் `2014-ல் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது விராட் கோலி அடித்த ரன்கள்’ என பட்டென சொல்லிவிடுவார்கள். எட்ஜ்பேஸ்ட்னில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்புவரை, கிட்டத்தட்ட எல்லா மீடியாக்களுமே, விராட் கோலி அடித்த இந்த ரன்களைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. இங்கிலாந்து மண்ணில் மீண்டும் ஒருமுறை விராட் கோலி சொதப்புவார்; ஆண்டர்சனிடம் விக்கெட்டைப் பறிகொடுப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. குறிப்பாக, இங்கிலாந்து ஊடகங்கள். ஆனால், தவறுகளில் இருந்து விரைவில் பாடம் கற்கும் கோலி, பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து, `விராட் தி கிரேட்’ எனப் பெயரெடுத்துவிட்டார். அன்று 10 இன்னிங்ஸில் எடுத்த ரன்களை (134), இன்று ஒரே இன்னிங்ஸில் ஓவர்டேக் செய்துவிட்டார். எதிர்ப்பாளர்கள் வாயாலேயே `சும்மா சொல்லக்கூடாது `ஆங்ரிபேர்ட்’ பெஸ்ட் பேட்ஸ்மேன்தான்’ என பாராட்டுபெற்றுவிட்டார். மெல்ல மெல்ல விராட் GOAT (Greatest Of All Time ) ஆகி வருகிறார் என்பதை விராட் ஹேட்டர்ஸும் ஒப்புக்கொள்ள வேண்டியதிருக்கிறது. `நீங்கள் ஒரு ஷாட்டில் மட்டும் கில்லி எனில், உங்களை எதிரணி எளிதில் கார்னர் செய்துவிடும். அதனால், ரொட்டேட் தி ஸ்ட்ரைக் ரொம்ப முக்கியம்’ என்று அடிக்கடி சொல்வார் ராகுல் டிராவிட். அவர் சொன்னதைப் போல, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருக்க வேண்டுமெனில், ஒரேயாரு ஷாட்டில் பிதாமகனாக இருப்பது முக்கியமல்ல, தேவைப்பட்டால் அந்த ஷாட்டை தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் டிரைவ்களில் கில்லி. ஆனால், அவர் சிட்னியில் கவர் டிரைவ் ஆடுவதைத் தவிர்த்தார். அதேபோல, எட்ஜ்பேஸ்டனில் நேற்று விராட் கோலி சதம் அடிக்கும்வரை, ஆண்டர்சன் பந்தில் டிரைவ் ஆடவே இல்லை. ஏனெனில், ஃபுல் லென்த்தில் வீசி, டிரைவ் ஆடத் தூண்டி, எட்ஜாகும் தருணத்தில் கேட்ச் பிடிக்கும் `புளு பிரின்ட்டை’ இங்கிலாந்து பக்காவாக தயார் செய்துவைத்திருந்தது. அந்த வலையில் விழுந்து இரண்டுமுறை தப்பித்தார் கோலி. ஆம், 21, 52 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்லிப்பில் கேட்ச் வந்தது. முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன், இந்தியா - இங்கிலாந்து மோதலை விராட் கோலி Vs ஆண்டர்சன் மோதல் என டெம்போ ஏற்றி வைத்திருந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் விராட் கோலியை ஆண்டர்சன் நான்கு முறை அவுட்டாக்கினார் என்பதுதான் இந்த மிகைப்படுத்தலுக்குக் காரணம். எதிர்பார்த்ததுபோலவே இருவரும் சளைக்காமல் போராடினர். கோலிக்கு ஆண்டர்சன் 43 பந்துகள் வீசினார். அதில் 41 டாட் பால். 2 பந்தில் நான்கு ரன்கள் மட்டுமே அடித்தார் கோலி. லெக் ஸ்டம்புக்கு வலதுபுறம் வந்த ஒரு பந்து, லெக் ஸ்டம்ப்புக்கு இடதுபுறம் வந்த ஒரு பந்து, வெளேிய போன ஒரு பந்து என மொத்தம் மூன்று பந்துகளை மட்டுமே அட்டாக் செய்திருந்தார் கோலி. 22 பந்துகளைத் தொடவே இல்லை. 17 பந்துகள் டிஃபன்ஸிவ் ஷாட், 6 பந்துகளில் ஸ்ட்ரைக் ரொட்டேட் என ஆண்டர்சனை நேர்த்தியாக டீல் செய்தார் கோலி. எப்படியாவது கோலியின் விக்கெட்டை எடுத்துவிட வேண்டும் என மதிய உணவு இடைவேளைக்குள் ஆண்டர்சனை 15 ஓவர்கள் வரை வீச வைத்தார், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். ம்ஹும் கடைசிவரை ஆண்டர்சனிடம் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதில் கோலி உறுதியாக இருந்தார். இந்த ஈகோவில் கோலி ஜெயித்துவிட்டார் என்றாலும், நானும் சளைத்தவர் அல்ல என நிரூபித்துவிட்டார் ஆண்டர்சன். ஏனெனில், ஆண்டர்சன் பந்தை கோலி 72 சதவீதம் கட்டுப்பாட்டுடன் எதிர்கொண்டாலும், நான்கு முறை பந்து எட்ஜானது. அதில் மூன்றுமுறை பந்து ஸ்லிப்பில் இருந்த ஃபீல்டர்களுக்கு கொஞ்சம் முன்கூட்டியே விழுந்து விட்டது. ஒருமுறை கேட்ச் டிராப். `நான் கொடுத்து வைத்தவன். கோலியின் இந்த இன்னிங்ஸை நேரில் பார்த்துவிட்டேன்’ என்றார் ஹர்ஷா போக்ளே. அப்படியா? டெஸ்ட் அரங்கில் கோலி அடிக்கும் 22-வது சதம் இது. இதற்கு முன் பலமுறை பிரமாதமான இன்னிங்ஸ் ஆடியுள்ளார். ஆனாலும், இது அவரது ஒன் ஆஃப் தி பெஸ்ட் இன்னிங்ஸ். இங்கிலாந்தில் அவர் அடிக்கும் முதல் சதம் என்பது மட்டுமல்ல காரணம். நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவை வைத்துக் கொண்டு சதம் அடித்தது பெரிய விஷயம். ஆண்டர்சன் மட்டுமே கோலிக்கு அச்சுறுத்தல் அல்ல. முரளி விஜய், ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஆகிய மூவரையும் பெவிலியன் அனுப்பி, இந்திய அணியின் டாப் ஆர்டரை பதம் பார்த்து விட்டார், தன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற சாம் கரன். போதாக்குறைக்கு பென் ஸ்டோக்ஸ் வேற வெலல் ஃபார்மில் இருக்கிறார். இன் ஸ்விங்களில் மிரட்டுகிறார். பந்து எங்கே பிட்ச்சாகிறது, எப்படி டர்னாகிறது என்பதை கணிக்கவே முடியவில்லை. இதுவே ஒன்டே மேட்ச் எனில், அதுவே சேஸிங் எனில் எப்போது, எந்த கேப்பில், எந்த பவுலரின் பந்தை குறிவைக்க வேண்டும் என்பது கோலிக்கு அத்துப்படி. நடப்பது ஒன்டே மேட்ச்சும் அல்ல, களம் இந்தியாவும் அல்ல. கோலி நிதானமாக இருந்தார். தன் தருணத்துக்காக காத்திருந்தார். ஆண்டர்சன் டைட் லைனில் வீசியதை தொடாமல் விட்ட கோலி, மற்ற பவுலர்களின் மோசமான பந்தை பவுண்டரிக்கு அனுப்பவும் தவறவில்லை. பொதுவாக, கோலியின் 100 ரன்களில் பல டிரைவ்கள் இருக்கும்; பல ஃபிளிக்குகள் இருக்கும். இந்த 149 ரன்களில் ரசிக்கத்தக்க ஷாட்கள் கம்மி என்றாலும், இவ்வளவு ரன்கள் அடித்ததே பெரிது. ஹர்டிக் பாண்டியா அவுட்டானதுமே, இந்தியா 200 ரன்களைத் தாண்டாது என நினைத்தனர். அஷ்வின் இருக்கும் வரை 8 சதவீதமே அட்டாக்கிங் ஷாட்களை ஆடிய கோலி, அஷ்வின் அவுட்டானபின் 49 சதவீதம் அட்டாக்கிங் ஷாட்களை ஆடினார். சதம் அடித்தபின் உமேஷ் யாதவை மறுமுனையில் நிற்கவைத்து, ஒன்டே மோடுக்கு மாறினார். எக்ஸ்ட்ரா கவருக்கு மேலே டிரைவ் பறந்தது. கடைசி பந்தில் ரன் எடுக்க விடாமல் ஃபீல்டர்கள் சுற்றி வளைத்தபோது ஸ்வீப் கைகூடியது. நம்பிக்கை பிறந்தது. இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்குமான ரன்களின் இடைவெளி குறைந்தது. விராட் சதம் அடித்தது மட்டுமல்ல, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவுடன் இணைந்து, இந்தியாவின் ஸ்கோரை 274 ரன்களுக்குக் கொண்டுவந்ததுதான் பெரிய விஷயம். கடைசி மூன்று விக்கெட்டுகளுடன் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது அட்டகாசம். கோலி 100 ரன்களைக் கடந்தபின் அடித்த ரன்கள்தான், இந்தியாவை இன்னும் இந்த டெஸ்ட்டுக்குள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அவுட்டாகி டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த சக இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்ததும் செளரவ் கங்குலி, `ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் விராட் கோலி சொதப்புவார் என நீங்கள் நினைத்தால், I am sorry..!’ எனச் சொன்னார். ஏனெனில், விராட் தவறுகளில் இருந்து பாடம் கற்பவன்; பெரிய இன்னிங்ஸ் ஆடத் தெரிந்தவன்; 50-களை 100-ஆக மாற்றத் தெரிந்தவன். அதற்கு இதோ ஒரு உதாரணம். 2016-க்குப் பின் ஜோ ரூட் 24 அரைசதம் அடித்திருக்கிறார். அதில் ஐந்து மட்டுமே சதங்களாக மாறின. ஆனால், கோலி 11 சதங்கள் அடித்திருக்கிறார், அரைசதம் நான்கு மட்டுமே. முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்தபின், கோலி கொண்டாடிய விதத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனால், கோலி பேட் செய்ய வரும்போது இங்கிலாந்து ரசிகர்கள் கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். ஆனால், அவர் அவுட்டாகி பெவிலியின் திரும்பும்போது மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். இதைவிட வேறென்ன சாதனை வேண்டும்?! https://www.vikatan.com/news/sports/132895-virat-kohli-in-tests-in-england-in-2014-scored-134-runs-in-10-innings-in-2018-scored-149-runs-in-one-innings.html Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 ‘கிங்’, ‘தனிமனித ஹீரோ கோலி’: இங்கிலாந்து ஊடகங்கள் புகழாரம் சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விராட் கோலி - படம்: கெட்டி இமேஜஸ் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தையும், தனி மனிதராகக் களத்தில் நின்று அணியைக் காத்ததையும் இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்தில் வெளிவரும் நாளேடுகள் முகப்புப் பக்கத்தில் விராட் கோலியின் சதத்தைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியிடம் இழந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால், கேப்டன் பொறுப்பை உணர்ந்தும், கடந்த 2014-ம் ஆண்டு கால கசப்பானப் பேச்சுகளையும், விமர்சனங்களை உடைக்கும் வகையில் பேட் செய்த விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். சிறப்பாக பேட் செய்த விராட் கோலி 149 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி விராட் கோலியின் ஆர்ப்பரிப்பான சதத்தை இங்கிலாந்து ஊடகங்கள் பாராட்டிச் செய்தி வெளியிட்டுள்ளன. கிரிக்கெட்.காம்.ஏயு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்தியா திருப்பி அடிக்கும் என்பதை கிங் கோலி நிரூபித்துவிட்டார்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது. தி கார்டியன் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், ''விராட் கோலி தனிமனித ஹீரோவாகக் களத்தில் நின்று மிகச்சிறந்த இன்னிங்ஸை அளித்துள்ளார். என்ன மாதிரியான மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளார்'' எனப் புகழ்ந்துள்ளது. இங்கிலாந்தில் வெளிவரும் புகழ்பெற்ற டெய்லிமெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில், ''டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறப்பான வெளிப்பாடு. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹெவிவெயிட் சாம்பியன் போட்டியில் இந்தியா சிறப்பான பஞ்ச் கொடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஒற்றை நபராக இருந்து தனது இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார். இது அவருக்கான நாளாகும்'' எனத் தெரிவித்துள்ளது. டெலிகிராப் நாளேடு வெளியிட்ட செய்தியில், ''சாம் கரன் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை கண்ணீர்விட வைத்தார். ஆனால், மாஸ்டராக மாறிய விராட் கோலி, சதம் அடித்து அணியைக் காத்துள்ளார்'' என்று புகழ்ந்துள்ளது. ஸ்டஃப் இணையதளம் வெளியிட்ட செய்தியில், ''எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மிகச்சிறந்த சதம் அடித்து இந்திய அணியைக் காத்துள்ளார் விராட் கோலி'' என்று புகழ்ந்துள்ளது. https://tamil.thehindu.com/sports/article24591523.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 இசாந்த் சர்மாவின் ஒரே ஓவரில் 3 விக்கெட்; அஸ்வின் அசத்தல்: இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து திணறல் பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இசாந்த் சர்மா - படம் உதவி: ட்விட்டர் அஸ்வின், இசாந்த் சர்மா ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. காலை நேரத் தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து மதிய உணவு இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்ததது. அதிலும் அஸ்வினுடைய குழப்பமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் ரன் சேர்க்கத் திணறி வருகின்றனர். இசாந்த் சர்மா வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தணறியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தால்(149 ரன்கள்) 274 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 13 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் சேர்த்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகியது போன்று, 2-வது இன்னிங்கிலும் சிறிதுகூட மாற்றமில்லாமல் அதே பந்துவீச்சில் படம் காட்டி போல்டாக்கினார் அஸ்வின். இன்று மூன்றாவது நாள் தொடங்கி நடந்து வருகிறது. ஜென்னிங்ஸ், கேப்டன் ரூட் களமிறங்கினார்கள். 2-வது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று தொடக்கத்திலேயே கணிக்கப்பட்டது போன்று ஆடுகளம் அஸ்வினுடைய சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. அஸ்வின் வீசிய 7-வது ஓவரில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஜென்னிங்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து டேவிட் மலான் களமிறங்கினார். ரூட், மலானும் நிதானமாக பேட் செய்தாலும், ரன்களைச் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர். 16-வது ஓவரில் ரூட் விக்கெட்டைப் பெற்றார் அஸ்வின். லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் பெவிலியின் திரும்பினார் ரூட். அதன்பின் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. மலானும், பேர்ஸ்டோவும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் கட்டுக்கோப்பாக விளையாடினர். இந்த நெருக்கடியைப் பயன்படுத்தும் வகையில் இசாந்த் சர்மா பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் ஸ்விங் பந்துவீச்சு நன்றாக எடுபட்டது. இசாந்த் சர்மா வீசிய 27-வது ஓவரில் கல்லி பாயின்டில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து, மலான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், இசாந்த் சர்மா வீசிய 31-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. 31-வது ஓவரின் 2-வது பந்தில் பேர்ஸ்டோ 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த தவணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பட்லர் ஒரு ரன் எடுத்துவிட்டு, ஸ்டோக்ஸிடம் கொடுத்தார். 3-வது பந்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் சேர்த்த நிலையில், 3-வது ஸ்லிப்பில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் உணவு இடைவேளை விடப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மீதமிருந்த இரு பந்துகளை இசாந்த் சர்மா வீசினார். இதில் 5-வது பந்தைச் சந்தித்த குரன் ஒரு ரன் அடித்து பட்லரிடம் கொடுத்தார். கடைசிப் பந்தைச் சந்தித்த பட்லர் ஒரு ரன் சேர்த்த நிலையில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்து அணி பெரிய சரிவைச் சந்தித்தது. ஷாம் கரன் 13 ரன்களிலும், ஆதில் ராஷித் 4 ரன்களிலும் களத்தில் ஆடி வருகின்றனர். 36 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களுடன் இங்கிலாந்து பேட் செய்து வருகிறது. 116 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. https://tamil.thehindu.com/sports/article24594381.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 விதிமுறைகளை மீறவேண்டாம்: கோலியிடம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்திய போட்டி நடுவர்! இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கோலியின் 22-வது டெஸ்ட் சதத்துக்கு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பலத்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்தார் விராட் கோலி. அப்போது, மிகவும் ஆக்ரோஷமாக கத்தியபடி, ஒருநாள் தொடரின்போது ரூட் செய்த செய்கையை தானும் செய்துகாண்பித்தார் கோலி. அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவயமாகத் தென்பட்டார். இதையடுத்து, இந்த டெஸ்ட் போட்டியின் நடுவரான ஜெஃப் குரோவ் கோலியின் செயலை ஏற்கவில்லை என்று தற்போது தெரிய வருகிறது. இன்று காலை கோலியைச் சந்தித்த குரோவ், ஆட்ட விதிமுறைகளை மீறவேண்டாம் என அதிகாரபூர்வமாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஓர் அணியின் கேப்டனின் நடத்தை எப்படியிருக்க வேண்டும், கேப்டனின் பொறுப்புகள் என்னென்ன என்று அவர் கோலிக்கு விளக்கியதாகத் தெரிகிறது. எனினும் ரூட் ஆட்டமிழந்தபோது ஆக்ரோஷமாகக் கத்திய கோலி மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் வீரர் ஆதர்டன், கோலியின் செயலில் தவறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இச்செய்தி என்னைக் கடுப்பேற்றுகிறது. இரு அற்புதமான நாள்கள் அமைந்துள்ளன. வீரர்கள் யாரும் பேட்ஸ்மேனின் முகத்துக்கு முன்பு கேவலமாக நடந்துகொள்ளவில்லை. வெளியேறும்படி சைகை காட்டவில்லை. கோலியின் ஆக்ரோஷம், ஆடுகளத்துக்கு வெளியே, தன்னிச்சையாக எழுந்த செயல். இதை விடவும் கவலைப்பட முக்கியமான விஷயங்கள் உள்ளன என கோலிக்கு ஆதரவாகப் பேட்டியளித்துள்ளார். http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/03/விதிமுறைகளை-மீறவேண்டாம்-கோலியிடம்-தனிப்பட்ட-முறையில்-அறிவுறுத்திய-போட்டி-நடுவர்-2973661.html Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- இந்தியாவிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு அ-அ+ இசாந்த் ஷர்மா 5 விக்கெட் அள்ளியதால் 180 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பட்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. பட்லர் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். முதல் பந்தில் சாம் குர்ரான் ஒரு எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 87 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது. இதனால் 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாம் குர்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நேர்த்தியாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். இஷாந்த் சர்மா பந்தில் இமாலய சிக்சர் விளாசி 54 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. அந்த வேளையில் இஷாந்த் சர்மா பந்தில் பிராட் ஆட்டமிழந்தார். பிராட்டை வீழ்த்தி ஐந்து விக்கெட்டை பதிவு செய்தார் இஷாந்த் ஷர்மா. அடுத்த ஓவரில் குர்ரான் 65 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் அதிகம் பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 2-வது இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/03203731/1181540/ENGvIND-Edgbaston-Test-England-194-runs-targets-to.vpf Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 விஜய், தவான், ராகுல் அவுட். இந்தியா 54/3 இன்னும் 140 ஓட்டங்கள் தேவை வெற்றிக்கு கைவசம் 7 விக்கெட்கள். கொஹ்லி 23 ஓட்டங்களுடனும் ரகனே 2 ஓட்டங்களுடனும் களத்தில் Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,177 Report post Posted August 3, 2018 274 & 68/4 * (22.4 ov, target 194) India GROUND TIME: 17:56 TEST CAREER BATSMEN R B 4s 6s SR THIS BOWLER LAST 10 OVS MAT RUNS HS AVE R Ashwin*(rhb) 9 12 2 0 75.00 4(5b) 9(12b) 59 2182 124 30.30 V Kohli(rhb) 29 50 2 0 58.00 5(9b) 17(28b) 67 5732 243 54.59 BOWLERS O M R W ECON 0s 4s 6s THIS SPELL MAT WKTS BBI AVE BA Stokes(rfm) 3.5 0 12 1 3.13 17 1 0 0.5-0-4-0 43 101 6/22 33.67 JM Anderson(rfm) 9 2 21 0 2.33 40 0 0 3.0-1-5-0 139 542 7/42 27.24 Current Partnership : 10 runs, 2 overs, RR: 5 (R Ashwin 9, V Kohli 1) Last Bat : AM Rahane c †Bairstow b Curra Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,177 Report post Posted August 3, 2018 274 & 78/5 * (24.4 ov, target 194) Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 3, 2018 இந்தத் தொடரை இங்கிலாந்தே கைப்பற்றும்: கெயில் கணிப்பு அ+ அ- இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணிதான் கைப்பற்றும் என கணித்திருக்கிறார் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில். வீடியோ கேம் வெப்சைட் ஒன்றின் விளம்பர தூதராக இருக்கும் கெயில் அந்நிறுவனம் சார்ந்த விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரைக் கைப்பற்ற இங்கிலாந்து அணிக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது என நான் நம்புகிறேன். அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவது ஆதாயம். அதேவேளையில் இந்திய அணியை சமாளிப்பது இங்கிலாந்துக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது. விராட் கோலியின் சிறப்பான சதம் இதுதான். இந்தத் தொடருக்கு அவர் மிகச்சிறந்த துவக்கத்தைத் தந்திருக்கிறார். தனிநபராக அவர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். இதுதான் அவர் எதிர்கொண்ட டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சிறந்ததாக இருக்க வேண்டும்" என்றார். https://www.kamadenu.in/news/sports/4493-england-favourites-to-win-test-series-gayle.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 4, 2018 `சொதப்பிய ஓப்பனிங்; நிலைத்து நின்ற விராட்' - வெற்றியை நெருங்கும் இந்திய அணி! இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 110 ரன்கள் குவித்தது. இந்திய அணி வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படுகிறது. @icc இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இந்தியா, 274 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 149 ரன்கள் எடுத்தார். அதையடுத்து இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் கலக்கிய அஷ்வினோடு சேர்ந்து இஷாந்த் சர்மாவும் தன் பங்குக்கு அசத்தினார். இதனால் இங்கிலாந்து வீரர்கள் ரன்கள் எடுக்கச் சிரமப்பட்டதோடு, தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஷ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதற்கிடையே 194 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் ஆகிய தொடக்க வீரர்கள் கைகொடுக்கத் தவறினர். 6 ரன்களுக்கு பிராட் ஓவரில் எல்பி மூலம் முரளி விஜய் வெளியேற அதற்கடுத்த ஓவரிலேயே அதே பிராட் ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தவான் நடையைக் கட்டினார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்ற, ரகானேவும், அஷ்வினும் ஏமாற்றம் தந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்றார் கேப்டன் கோலி. அவர் இங்கிலாந்து பௌலர்களை சமாளித்து விளையாடினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இந்திய அணி வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் நாளை இந்தியா வெற்றிவாகை சூடும். https://www.vikatan.com/news/sports/132976-india-need-84-runs-to-win-the-1st-test-against-england.html Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 4, 2018 கோலியை ஆட்டமிழக்கச்செய்யும் கனவுடன் உறங்கப்போகின்றோம்- அன்டர்சன் இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கான தடையாக விராட் கோலி மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் அவரை இன்று காலையில் விரைவில் ஆட்டமிழக்கசெய்யமுடியும் என்ற கனவுடனேயே இங்கிலாந்து வீரர்கள் உறங்கசெல்வார்கள் என நேற்றைய நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி வெற்றிபெறுவதற்கு இன்னமு; 84 ஓட்டங்கள் தேவையாகவுள்ள உள்ள நிலையில் அணி ஐந்து முக்கிய விக்கெட்களை இழந்துள்ளது. இந்திய அணித்தலைவர் விராட் கோலி மாத்திரம் அணியின் நம்பிக்கையாக ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த நிலையிலேயே ஆன்டர்சன் கோலியை உடனடியாக ஆட்டமிழக்க செய்வது குறித்த கனவுடன் நாங்கள் உறங்கச்செல்வோம் என அன்டர்சன் தெரிவித்துள்ளார். நாங்கள் ஐந்து விக்கெட்களை விரைவாக வீழ்த்த வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள இலக்குகளை அடைந்து விடுவார்கள் என தெரிவித்துள் அன்டர்சன் இன்று முதல் 15 ஓவர்களில் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் எனவும் குறி;ப்பிட்டுள்ளார். இது மிகவும் சுவாரஸ்யமான தருணம் வெற்றிக்காக நாங்கள் விசேடமாக எதையாவாது செய்யவேண்டும் என்பது சுவாரஸ்யமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து அணி ஸ்லிப்பில் கட்ச்களை தவறவிடுவது குறித்தும் தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் சமீபகாலங்களில் அணிக்கு பிரச்சினையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/37811 Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 4, 2018 India 274 & 152/8 * (49 ov, target 194) Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 4, 2018 எட்ஜ்பாஸ்டன் - இங்கிலாந்துடனான முதல் டெஸ்டில் இந்தியா போராடி தோல்வி அ-அ+ இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா விராட் கோலிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் ஒன்று, இரண்டு ரன்களை எடுத்தார். விராட் கோலி 51 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார்.இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து இறங்கிய மொகமது ஷமி டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 11 ரன்களில் அவுட்டானார். இறுதி வரை ஹர்திக் பாண்ட்யா போராடினார். அவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/04171554/1181735/england-beat-india-by-31-runs-in-first-test-match.vpf Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 4, 2018 பேட்ஸ்மேன் கோலி சூப்பர்... ஆனால், கேப்டன் கோலி செய்த 5 தவறுகள்! #ENGvIND இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து கோலி சேர்த்த ரன்கள் மட்டும் 200. ஆனால், இந்தியாவின் மற்ற 10 வீரர்களும் இரண்டு இன்னிஸிலும் சேர்த்து அடித்த ரன்கள் 122. பேட்டிங் மிக மிக மோசமாக இருந்ததுதான் இந்த முதல் டெஸ்ட்டின் தோல்விக்குக் காரணம். இங்கிலாந்தில் தனது முதல் செஞ்சுரியை நிறைவுசெய்த விராட் கோலி, கேப்டனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கவேண்டிய தங்கத்தருணம் ஜஸ்ட் மிஸ்! இந்திய பெளலர்கள் அசத்த, மறுபக்கம் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, வென்றிருக்க வேண்டிய டெஸ்ட்டை இழந்திருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் என பேட்ஸ்மேன் கோலி சூப்பர். ஆனால், கேப்டன் கோலி..?! 1. தீராத ப்ளேயிங் லெவன் குழப்பம்?! டாஸ் போட்டதும் 5 ஸ்பெஷல் பேட்ஸ்மென், ஹர்திக் என்னும் ஆல்ரவுண்டர், அஷ்வின் என்னும் ஆஃப் ஸ்பின்னர், தினேஷ் கார்த்திக் என்னும் விக்கெட் கீப்பர், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என அணியை அறிமுகப்படுத்தினார் கேப்டன் கோலி. இந்திய அணி அறிவிக்கப்பட்டதுமே எல்லோருக்கும் ஏமாற்றம். காரணம் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான சேத்தஷ்வர் புஜாரா அணியில் இல்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் எடுக்கப்பட்டிருந்தார். தவானின் இடத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. புஜாரா கவுன்ட்டி கிரிக்கெட் ஆடி, இந்த சீரிஸுக்காகவே தயாரானவர். ஆனால், அவரை அணியில் இருந்து கழற்றிவிட்டது கோலி செய்த முதல் தவறு. 2. டெஸ்ட் போட்டிக்கு சரியான ஆல் ரவுண்டரா ஹர்திக் பாண்டியா? டெஸ்ட் போட்டிக்கு ஆல் ரவுண்டர் தேவைதான். ஆனால், அவர் ஒரு இன்னிங்ஸில் 30 ஓவர்கள் வரை வீசுபவராகவும், ஒரு இன்னிங்ஸில் 30 ரன்களுக்களுக்கு மேல் அடிப்பவராகவும் இருக்கவேண்டும். அப்படித்தான் ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டுவந்தார் கோலி. ஆனால், அவர் முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசினார். 46 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவர் அடித்த ரன்கள் வெறும் 22. இரண்டாவது இன்னிங்ஸில் பாண்டியாவுக்கு பெளலிங் வாய்ப்பே வழங்கப்படவில்லை. பேட்டிங்கில் டெய்ல் எண்டர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியைப் பொறுத்தவரை அஷ்வினே ஒரு ஆல் ரவுண்டர்தான். பாண்டியாவின் இடத்தை ஒரு பெளலருக்குக் கொடுத்திருக்கலாம். 3. இரண்டு ஸ்பின்னர்கள் நிச்சயம் வேண்டும்! இந்திய அணியின் பலமே ஸ்பின்தான். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னில்தான் அதிகம் தடுமாறுவார்கள். எட்ஜ்பேஸ்டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றது என்றாலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள் என்கிற காம்பினேஷனோடு கோலி களமிறங்கியிருக்கவேண்டும். ஹர்திக் பாண்டியாவின் இடத்தை குல்தீப் யாதவுக்கு கொடுத்திருந்தால் இங்கிலாந்தின் டோட்டல் இன்னும் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம். டெய்ல் எண்டர்கள் திணறியிருப்பார்கள். இரண்டு இன்னிங்ஸிலும் அஷ்வினைத்தான் அதிக ஓவர்கள் வீசவைத்தார் கோலி. அஷ்வின் மட்டுமே மொத்தமாக 47 ஓவர்கள் வீசினார். இன்னொரு ஸ்பின்னர் இருந்திருந்தால் அஷ்வினின் பிரஷர் குறைந்திருக்கும். அந்த வாய்ப்பை வீணடித்துவிட்டார் கோலி. 4. பேட்டிங் ஆர்டரில் நடந்த குளறுபடி! மூன்றாவது நாளில் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் இருக்கும் நிலையில் ரஹானே அவுட் ஆனதும் தினேஷ் கார்த்திக், பாண்டியாவுக்கு பதிலாக அஷ்வின் களமிறக்கப்பட்டார். கடைசி சில ஓவர்களே இருக்கும் நிலையில்தான் நைட் வாட்ச்மேன்கள் இறக்கிவிடப்படுவார்கள். ஆனால், அஷ்வினை ஏன் இறக்கினார் என்பதே புரியவில்லை. வந்த மூன்றாவது ஓவரில் அஷ்வின் அவுட். அஷ்வினுக்குப் பிறகு பாண்டியா அல்லது இஷாந்த் ஷர்மா என யாரையாவது களமிறக்கியிருக்கலாம். ஆனால், தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். 5. சொதப்பல் பேட்ஸ்மேன்கள்! இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து கோலி சேர்த்த ரன்கள் மட்டும் 200. ஆனால், இந்தியாவின் மற்ற 10 வீரர்களும் இரண்டு இன்னிஸிலும் சேர்த்து அடித்த ரன்கள் 122. பேட்டிங் மிக மிக மோசமாக இருந்ததுதான் முதல் டெஸ்ட்டின் தோல்விக்குக் காரணம். இரண்டாவது இன்னிங்ஸில் சில ஆச்சர்யங்களை கோலி செய்திருக்கலாம். தவானுக்கு பதிலாக ராகுலை ஓப்பனிங் இறக்கியிருக்கலாம். அதேபோல, ரஹானே 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கியிருக்கலாம். ஆனால், அப்படி எந்த சஸ்பென்ஸும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் சொதப்பியது போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் இறங்கிக்கொண்டிருந்ததை கோலி தடுத்திருக்கலாம். https://www.vikatan.com/news/sports/133056-england-vs-india-first-test-match-analysis.html Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 4, 2018 கீழ்வரிசை வீரர்களிடமிருந்து டாப் ஆர்டர் கற்றுக் கொள்ள வேண்டும்: விராட் கோலி எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரது தனிச்சிறப்பான ஆட்டத்தினால் ஒரு அருமையான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 194 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவந்த போது ஒரு கவனம் சிதறிய தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் இன்ஸ்விங்கரை லெக் திசையில் பிளிக் செய்யும் தவறான முயற்சியில் விராட் கோலி எல்.பி.ஆக மற்ற சம்பிரதாயங்களை இங்கிலாந்து செவ்வனே முடித்து வைத்தது. விஜய், தவண், ராகுல், ரஹானே 2 இன்னிங்ஸ்களிலும் சொதப்ப முதல் இன்னிங்ஸில் இஷாந்த், உமேஷ் யாதவ், ஸ்டாண்ட் கொடுக்க இங்கிலாந்து ரன் எண்ணிக்கையை அச்சுறுத்தினார் விராட் கோலி. மறக்க முடியாத சதத்தில் 105 ரன்களை கடைசி 3 விக்கெட்டுகளுக்காகச் சேர்த்ததில் கோலியின் பங்களிப்பு 92 ரன்கள்! ஆகவேதான் அவர் கூறுகிறார் கீழ் வரிசை வீரர்கள் நம் கண்ணாடி என்று. இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது: முதலில் இது ஒரு அபாரமான டெஸ்ட் போட்டி என்பதைக் கூறி விடுகிறேன். உற்சாகமான இந்த டெஸ்ட் போட்டியில் ஆடியதில் மகிழ்ச்சி. நிறைய தருணங்களில் மீண்டெழுந்தோம், நல்ல கேரக்டர் காட்டினோம். ஆனால் இங்கிலாந்து ஓய்வு ஒழிச்சலில்லாமல் படுத்தி எடுத்தனர். எங்களை ரன்களுக்காக கடினமாக உழைக்குமாறு செய்துவிட்டனர். நிச்சயமாக இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடியிருக்க வேண்டும். ஆனால் போராட்டக்குணம் பெருமையளிக்கிறது. அணியினரிடம் பேச நேரம் போதவில்லை. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து சாதக அம்சங்களை எடுத்துக் கொள்வோம். பெரிய தொடரில் இந்தமாதிரியான ஒரு தொடக்கம் பெருமையளிக்கிறது. கீழ் வரிசை வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. உமேஷ், இஷாந்த் களத்தில் அங்கு நின்றனர். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மெனாக இப்படிப்பட்ட விஷயங்கள் நம் முன் கண்ணாடியைக் காட்டுகிறது. நாம் பாசிட்டிவாக, அச்சமின்றி ஆடி எதிர்மறைச் சிந்தனைகளைக் களைய வேண்டும். அணியின் பார்வையில் சதம் எடுத்தேன், அடிலெய்ட் சதத்துக்கு அடுத்த என்னுடைய சிறந்த சதம். இதனை நான் நினைவில் வைத்திருப்பேன். அணியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும்போது நல்லுணர்வு தோன்றுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் அபாரமானது, எனக்குப் பிடித்தமானதும் கூட. உயர்தர வீரர்களுக்கு எதிராக நம்மை நாம் சோதனை உட்படுத்திக் கொள்வதைப் போல் வேறொன்றும் இல்லை என்றே நான் கருதுகிறேன். https://tamil.thehindu.com/sports/article24603660.ece டெய்ல் எண்டர்களுடன் பேட் செய்வது எப்படி என்பதை விராட் கோலியிடமிருந்து கற்றேன்: சாம் கரன் ஆட்ட நாயக ஆல்ரவுண்டர் சாம் கரன். | ஏ.பி. இங்கிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணமான இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன், 2வது இன்னிங்சில் ஒரு மேட்ச் வின்ன்ங் பேட்டிங்கைச் செய்து காட்டினார், இந்திய அணியும் கேட்ச்களை விட்டு அவருக்கு உதவியது ஒருபுறம் இருக்கட்டும், அவர் விராட் கோலி முதல் இன்னிங்சில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டதிலிருந்து தானும் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். “அனைத்துப் பெருமைகளையும் நான் இப்போது எடுத்துக் கொள்ள முடியாது, நான் கனவு காண்பதைப்போல்தான் உணர்கிறேன். உள்ளபடியே கூற வேண்டுமெனில் முதல் இன்னிங்சில் விராட் கோலி கீழ்வரிசை வீரர்களுடன் எப்படி பேட் செய்தார் என்பதைப் பார்த்தேன், அதிலிருந்து கற்றுக் கொண்டேன். சங்கக்காராவை இன்னொரு நாள் விடுதியில் சந்தித்தேன். அவர் டெய்ல் எண்டர்களுடன் விளையாடுவது பற்றி என்னிடம் சிறிது உரையாடினார். இத்தகைய ரசிகர்கள் முன்னிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதுவும் இந்த வீர்ர்களுடன் ஆடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, நான் கிரிக்கெட்டைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்தவர்ன், ஒவ்வொரு நாளுமே கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஆட்ட நாயகன் சாம் கரன். முதல் இன்னிங்ஸில் 50/0 என்று இருந்த இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை சடுதியில் வீழ்த்தி பிரச்சினைக்குள்ளாக்கிய சாம் கரன் பிறகு இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 2வது இன்னிங்ஸில் 87/7 என்று தோல்வியின் பிடியிலிருந்த இங்கிலாந்தை தன் அதிரடி அரைசதம் மூலம் வெற்றிப்பாதைக்குத் திருப்பினார், ஆகவே ஆட்ட நாயகன் விருதுக்கு அனைத்துத் தகுதிகளையும் அவர் உடையவராகிறார். https://tamil.thehindu.com/sports/article24604316.ece இங்கிலாந்து வீரரை ’வழியனுப்பிய’ இசாந்த் சர்மாவுக்கு அபராதம் இந்திய அணியின் பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா - படம் உதவி: கெட்டி இமேஜஸ் பர்மிங்ஹாமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலனை வழியனுப்பி சென்ட் ஆப் செய்த இந்தியஅ ணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது. பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியஅணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.. அப்போது 2-வது இன்னிங்ஸில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மலான் ஆட்டமிழந்தபோது, அவரை சென்ட் ஆப் செய்து வழியனுப்பி இசாந்த் சர்மா கிண்டல் செய்தார். இது தொடர்பாக களநடுவர்கள் அலீம் தார், கிறிஸ் ஜெபானி, மூன்றாவது நடுவர் மராயிஸ் எராஸ்மஸ் ஆகியோர் இசாந்த் சர்மா மீது புகார் தெரிவித்தனர். இது குறித்து ஐசிசி போட்டி நடுவர் ஜெப் கிரோவ் நடத்திய விசாரணையில் இசாந்த் சர்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மேல் விசாரணை ஏதும் நடக்காமல் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஐசிசி வீரர்கள் நடத்தைவிதிப்படி, எதிரணி வீரர்களை நோக்கி, வார்த்தைகள், சைகைகள், உடல்மொழிகள் மூலம் கோபமூட்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது லெவல்-1ன்படி குற்றமாகும் நடத்தை விதிமுறை லெவல்-1 விதியை மீறி இசாந்த் சர்மா செயல்பட்டது உறுதியாகியது. அது குறித்து இசாந்த் சர்மாவிடம் ஐசிசி நடுவர் ஜெப் கிரோவ் விசாரித்த போது இசாந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதிக்கப்படுகிறது என்று ஐசிசி அறிவித்துள்ளது. https://tamil.thehindu.com/sports/article24603748.ece Share this post Link to post Share on other sites
nunavilan 2,572 Report post Posted August 5, 2018 வரலாற்று சிறப்புமிக்க 1000 வது டெஸ்ட் - இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பேர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கிலாந்து 1877 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த டெஸ்ட் இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000 வது டெஸ்ட் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியின் 4 வது நாளில் இந்தியாவை 31 ஓட்டங்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை 1000 டெஸ்ட் போட்டிகளில் 358 இல் வெற்றியும், 297 இல் தோல்வியையும், 345 போட்டிகளில் சமனிலையைுயம் சந்தித்துள்ளது. எட்ஜ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902 இல் இருந்து 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 28 போட்டிகளில் வெற்றியும், 8 இல் தோல்வியும், 15 இல் சமநிலையும் செய்துள்ளது. 1000 வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=104960 Share this post Link to post Share on other sites