Sign in to follow this  
நவீனன்

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Recommended Posts

6.png&h=42&w=42

329 * (94.5 ov)
இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்

Share this post


Link to post
Share on other sites

இந்திய அணி இப்படியும் ஒரு சாதனை! - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவிப்பு #EngvsInd

 
 

நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களில் ஆட்டமிழந்தது. 

ரிஷப் பண்ட்

Photo Credit: ICC

 

 


இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் ஃபீல்டிங் தேர்வு செய்தார். முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா என 3 மாற்றங்களுடன் முதலில் பேட் செய்ய இந்திய அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக விளையாடிய கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. ஆனால், ஷிகர் தவான், கே.எல்.ராகுல் மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்குக் கைகோத்த கேப்டன் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரஹானே ஆகியோர் 159 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ரஹானே 81 ரன்களிலும், கோலி 97 ரன்களிலும் ஆட்டமிழக்க முதல்நாள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்ந்திருந்தது. ரிஷாப் பண்ட் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  

 

 

நாட்டிங்ஹாம் பகுதியில் பெய்த மழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக அந்நாட்டு நேரப்படி காலை 11.30 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷாப் பாண்டுடன், அஷ்வின் இந்திய அணியின் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினார். போட்டி தொடங்கிய சிறிதுநேரத்திலேயே பிராட் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜாகி ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷாப் பண்டுக்குப் பின்னர் அஷ்வின், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 329 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.  

இங்கிலாந்து மண்ணில் விளையாடும் வெளிநாட்டு அணி ஒன்று டாஸை இழந்து முதலில் பேட் செய்யும் சூழலில், அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் 8 வீரர்களும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்ப்பது இதுவே முதல்முறையாகும்.

https://www.vikatan.com/news/sports/134478-indiaengland-third-test-team-india-all-out-for-329-in-first-innings.html

Share this post


Link to post
Share on other sites

ரிஷப் பந்த்தை வீழ்த்திவிட்டு வார்த்தைகளை உதிர்த்த பிராட்: இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்

 

 

 
rishab%20pant

பிராட் பந்தில் பவுல்டு ஆன ரிஷப் பந்த்.| கெட்டி இமேஜஸ்.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 307/6 என்று 2ம் நாளில் தொடங்கிய இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ரிஷப் பந்த் முதல்நாள் ஆட்டத்தில் 22 நாட் அவுட் என்று இருந்தவர் இன்று 2 ரன்கள் மட்டுமே சேர்த்து 24 ரன்களில் பிராடின் சோதனை தரும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகும் லைன் பந்தை காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் தொங்க விட்டு ஆடப்பார்த்தார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

 

அதுவரை அருமையாக பந்துகளை ஆடாமல் விட்டுவந்த பந்த், தடுப்பாட்டத்திலும் நல்ல நிதானத்தையும் இறுக்கத்தையும் காட்டினார், ஆனால் ஒரு பந்து அவரைப் பதம் பார்த்தது, தவறு அவருடையதுதான். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் ஸ்டூவர்ட் பிராட் அவரிடம் சில வார்த்தைகளைக் கூறினார், அவரது முகபாவத்தை வைத்துப் பார்த்தபோது விஷமமான வார்த்தைகளா, அல்லது வாழ்த்தினாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் இதுவும் ஒரு வழியனுப்புதலே, ஆட்ட நடுவர் கவனத்தில் கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

ரவிச்சந்த்திரன் அஸ்வின் 3 பவுண்டரிகளையும் தேர்ட்மேன் திசையிலேயே அடித்து 14 ரன்கள் எடுத்து பிராடின் இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகளை இழந்தார். மொகமது ஷமி, பும்ரா ஆகியோரை ஆண்டர்சன் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்ய இந்திய அணி 94.5 ஓவர்களில் 329 ரன்களுக்குச் சுருண்டது. வோக்ஸ், பிராட், ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷீத் கோலியை வீழ்த்தினார்.

இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 9 ஓவர்கள் முடிவில் 46 ரன்களுக்கு விக்கெட் விழாமல் ஆடி வருகிறது. ஸ்லிப்பில் பந்து இடையில் புகுந்து போனாலும் வேடிக்கைப் பார்க்கின்றனர் இந்திய வீரர்கள். ஸ்லிப் திசையில் நிற்கும் போது துணைக்கண்டத்தில் நிற்பது போல் இருகைகளையும் கால்முட்டியில் ஊன்றக்கூடாது என்று பலரும் பலமுறை அறிவுறுத்தியும் அப்படித்தான் நிற்கிறார்கள், இதனால் ஒரு பந்து கேட்ச் பிடிக்கும் உயரத்தில் ரஹானே, ராகுல் வேடிக்கைப் பார்க்க இடையில் புகுந்து பவுண்டரி சென்றது. டைவ் அடித்துக் கேட்ச் பிடிக்க வேண்டிய பந்து அது.

https://tamil.thehindu.com/sports/article24731132.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

1.png&h=42&w=42

59/2 * (13 ov)

Share this post


Link to post
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறல்

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இங்கிலாந்து 128 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #ENGvIND #HardikPandya #KLRahul

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறல்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

201808192028006887_1_cook001-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த போப்பை 10 ரன்னில் வெளியேற்றினார் இசாந்த் ஷர்மா. 25-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில ஜோ ரூட் 16 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் (15), பென் ஸ்டோக்ஸ் (10), கிறிஸ் வோக்ஸ் (8) அடில் ரஷித் (5) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வெளியேற்ற இங்கிலாந்து 128 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/19202800/1184950/ENGvIND-Trent-Bridge-Test-England-8-wickets-loses.vpf

 

1.png&h=42&w=42

158/9 * (37.1 ov)
 

Share this post


Link to post
Share on other sites

பாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை! - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd

 

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய அணி

Photo Credit: ICC

 

 

நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கிய இந்திய அணி, 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 29 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே மற்றொரு தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். 

 

 

இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். கேப்டன் ஜோரூட் 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 10, பேரிஸ்டவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்து அசத்திய கிறிஸ் வோக்ஸ், ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சில் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

ஹர்திக் பாண்ட்யா

கடைசி விக்கெட்டுக்கு ஆண்டர்சனுடன் ஜோடி சேர்ந்து ஜோஸ் பட்லர் சிறிதுநேரம் அதிரடி காட்ட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 150ஐக் கடந்தது. 38.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்திய அணி தரப்பில் ஹர்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், அறிமுகப் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார். 

https://www.vikatan.com/news/sports/134497-india-take-crucial-168run-first-innings-lead-over-england-in-3rd-test.html

6.png&h=42&w=42

329 & 76/1 * (14.3 ov)

Share this post


Link to post
Share on other sites

 

6.png&h=42&w=42

329 & 124/2 * (31 ov)
 

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்திய அணி

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்து வீச்சால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. #ENGvIND

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்திய அணி
 
லண்டன் :

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.  

நேற்று 22 ரன்களுடன் களத்தில் இருந்த ரிஷப் பந்த் இன்று மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அஸ்வின் 14, ஷமி 3, பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தனது கடைசி 5 விக்கெட்டுக்களை வெறும் 22 ரன்களுக்கு பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் குக் மற்றும் ஜென்னிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை.
 
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
 
201808192350179429_1_cok._L_styvpf.jpg

அதன்பின் வந்த போப், இஷாந்த் ஷர்மாவின் வேகத்தில் 10 ரன்களில் அவுட்டானார். பிட்சில் பந்து நன்றாக ஸ்விங் ஆவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, ஜோ ரூட் 16, பேர்ஸ்டோவ் 15, கிறிஸ் வோக்ஸ் 8, அடில் ரஷித் 5, பிராட் 0 என அடுத்தடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை துவம்சம் செய்தார்.

இதனால், 38 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 6 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்ந்தார். இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா உற்சாகத்துடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் ராகுல் மீண்டும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ராகுல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா வழக்கத்திற்கு மாறாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாசிய தவான் 44 ரன்களில் ரஷித் பந்தில் பேர்ஸ்டோவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் குவித்தது. புஜாரா 33 ரன்களுடனும் கோலி 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ் மற்றும் ரஷித் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 292 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது. #ENGvIND

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/19235018/1184982/Day-2-India-lead-by-292-runs-with-8-wickets-remaining.vpf

Share this post


Link to post
Share on other sites

கலக்கினார் பாண்டியா; கலங்கியது இங்கிலாந்து; 5 ஓவர்களில் 5 விக்.: வெற்றிப்பாதையில் இந்தியா

 

 
pandyajpg

5 விக். பாண்டியா. | ஏ.எப்.பி.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அபார இந்திய ஸ்விங் பந்து வீச்சுக்கு 161 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.

பாண்டியா 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்து இங்கிலாந்துக்கு சோதனை அளிக்க அறிமுக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அருமையான 5 கேட்ச்களை எடுத்தார்.

 

2ம் நாள் ஆட்ட முடிவில் புஜாரா 33 ரன்களுடனும் விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நேற்று காலை 307/6 என்று தொடங்கிய இந்திய அணி 22 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. 7.5 ஓவர்கள்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆண்டர்சன் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிராட் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வோக்ஸ் 3 விக்கெட்டையும் கோலி விக்கெட்டை ஆதில் ரஷீத்தும் கைப்பற்றினர்.

அதன் பிறகு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய போது இஷாந்த் சர்மா, பும்ரா அபாரமாக வீசி எட்ஜ்களைப் பிடித்தனர், குறிப்பாக பும்ரா இங்கிலாந்து மட்டையாளர்களிடம் சில கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பினார். ஆனால் பந்து ஸ்லிப் பீல்டர்களுக்கு இடையே புகுந்து சென்றது, அல்லது முன்னால் விழுந்தது, இப்படி அதிர்ஷ்டவசமாக ஆடினாலும் அலிஸ்டர் குக் (29), ஜெனிங்ஸ் (20) ஆகியோர் இந்தத் தொடரில் முதல் விக்கெட்டுக்காக முதல் அரைசதக் கூட்டணி அமைத்தனர்.

இந்நிலையில் இஷாந்த் ஷர்மா இன்னிங்சின் 12வது ஓவரை அதியற்புதமாக வீசினார், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே குக்கிற்கு வீசிக் கொண்டேயிருந்தார். ஒரு எட்ஜ் பவுண்டரியும் சென்றது. அடுத்த பந்து மீண்டும் அதே காரிடாரில் வீச குக் எட்ஜ் செய்தார் ஆனால் ஸ்லிப்பில் நேரடியாக கையில் விழுந்த கேட்சை புஜாரா கையினூடாக தரைக்குத் தாரை வார்த்தார். ஆனால் குக் புஜாராவிடம் ‘நீ கேட்ச் விட்டால் வேறு ஆளா எனக்கில்லை’ என்று கூறுவது போல் அபாரமான அடுத்த பந்தை ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்த ஓவரின் முதல் பந்தில் பும்ராவின் ஷார்ட் மற்றும் சற்றே வைடு பந்தை ஜெனிங்ஸ் பேட்டைக் கொண்டு செல்லலாமா பேட்டை விலக்கிக் கொள்ளலாமா என்ற இரண்டக மனநிலையில் தொட்டே விட்டார், ரிஷப் பந்த் தன் 2வது கேட்சை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து உற்சாகம் காட்டினார். இடையே அஸ்வின் ஒரு ஓவர் வீசி விட்டு பெவிலியன் சென்றார், என்ன காரணம் என்று தெரியவில்லை, பிறகுதான் தெரிந்தது, இடுப்புப் பகுதியில் தசைப் பிடிப்புக் காரணமாக அவர் பெவிலியன் சென்றார் என்று. அங்கு சென்று தினேஷ் கார்த்திக்குடன் அரட்டையில் ஈடுபட்டார்.

போப் இறங்கி மிக அழகான ஒரு ஆஃப் டிரைவ் பவுண்டரி அடித்தார். ஜோ ரூட் இறங்கி இஷாந்த் ஷர்மாவின் ஒரு ஓவரில் தடவு தடவென்று தடவினார். ஒரு எட்ஜ், பிறகு இன்ஸ்விங்கரில் தொடையில் வாங்கினார். பிறகு இன்ஸ்விங்கரில் ஒரு மாபெரும் எல்.பி. முறையீடு. பிறகு பும்ராவை ஒரு எட்ஜ் பவுண்டரி என்று இவர் தடவத் தடவ எதிர்முனையில் போப்பிற்கு கொஞ்சம் அழுத்தம் ஏறியது, அதனால் அவர் இஷாந்த் சர்மா அரிதாக வீசிய ஒரு லெக் திசை பந்தை பைன் லெக் திசையில் திருப்பி விட முனைந்து மட்டையில் லேசாகப் பட்டு பந்த்திற்கு இடது புறம் செல்ல ஒரு டைவ் அடித்து கேட்ச் எடுத்தார், போப் 10 ரன்களில் வெளியேறினார்.

பிறகும் ரூட் பும்ரா பந்தில் 3வது ஸ்லிப்புக்கு முன் பந்து விழ ஒரு எட்ஜ் செய்தார். எழும்பிய அடுத்த பந்தையும் தடவினார். ரூட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியே இவர் ஆட பேர்ஸ்டோ ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையி ரூட் தடவல் இன்னிங்ஸில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது....

பாண்டியா வந்தார் இங்கிலாந்தை சரித்தார்... ரூட் சர்ச்சைத்தீர்ப்பு

ஆட்டத்தின் 25வது ஓவரில் பாண்டியா பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தையே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பாண்டியா வீசி ஷார்ட் ஆஃப் லெந்தில் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிட்ச் ஆனவுடன் வெளியே எடுத்தார். ரூட் எட்ஜ் செய்தார் ராகுல் அதனை முன்னால் கையை நீட்டிப் பிடித்தார். பிடித்தவுடன் ராகுல் விக்கெட் விக்கெட் என்று கொண்டாட ஜோ ரூட் இல்லை இல்லை அது கேட்ச் இல்லை என்று தலையை ஆட்டினார். ஆனால் களநடுவர் அவுட் என்று அடையாளம் காட்டி 3வது நடுவரை உதவிக்கு அழைத்தார். அதில் தெளிவாக எதுவும் தெரியவில்லை, பந்து தரையில் பட்டது போலும் இருந்தது, படுவதற்கு முன்பாக ராகுல் விரல்களைக் கொண்டு வந்து கேட்ச் எடுத்தது போலவும் தெரிந்தது.

joe%20root%20outjpg

ஜோ ரூட் சர்ச்சை அவுட். | ஏ.பி.

 

ஆனால் விதிமுறைப்படிதான் 3வது நடுவர் அவுட் என்றார், ஏனெனில் சாட்சியங்கள் தெளிவாக இல்லாத போது களநடுவர் தீர்ப்பே செல்லுபடியாகும் அதன் படி களநடுவர் அவுட் கொடுத்ததற்கிணங்க அவுட் என்றார் 3வது நடுவர், அதே போல் களநடுவர் நாட் அவுட் என்றிருந்தால் அது நாட் அவுட்தான் அப்போது கோலியும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ரூட் கடுகடுப்புடன் முனகியபடியே சென்றார், இது நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்கை என்று ஐசிசி ஆட்ட நடுவர் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பார் என்று கருதப்படுகிறது.

பிறகும் ஹர்திக் பாண்டியா மிக அருமையான லைன் அண்ட் லெந்தில் வீசி தொடர்ந்து சோதித்தார். அதன் பலனாக அவர் தனது ஒரே ஒவரில் ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸை வீழ்த்தினார். பேர்ஸ்டோவுக்கும் பந்து ஆஃப் அண்ட் மிடிலில் உள்ளே வந்து லேட் ஸ்விங் ஆகி செல்லும் வழியில் மட்டை விளிம்பில் பட்டுச் சென்றது, ராகுல்தான் இதையும் பிடித்தார். கிறிஸ் வோக்ஸ் பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார் தோளுக்கு வந்த பவுன்சர் அது, ஹூக் சரியாகச் சிக்கவில்லை, ரிஷப் பந்த் அருமையாகப் பிடித்தார்.

இடையில் பென் ஸ்டோக்ஸ் (10) மொகமது ஷமியின் லேட் அவுட் ஸ்விங்கருக்கு பந்தைத் தொட்டார், ராகுலிடம் கேட்ச் ஆனது. ஆதில் ரஷீத்தை பாண்டியா ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுக்கச் செய்ய பிராட் பாண்டியாவிடம் எல்.பி.ஆக பாண்டியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷீத் ஆட்டமிழக்கும் போது இங்கிலாந்து 201 ரன்கள் பின்னிலை கண்டிருந்தது. ஆனால் கடைசியில் பட்லர் ஒரு டி20 பாணி இன்னிங்ஸை ஆடினார். ஷமியை ஒரு ராட்சச ஸ்கொயர் லெக் சிக்சும் பிறகு இஷாந்த் சர்மாவை ஒரு சிக்சும் அடித்து 32 பந்துகளில் 39 ரன்களைக் குவித்து பும்ராவிடம் ஆட்டமிழக்க இங்கிலாந்து 161 ரன்களுக்குச் சுருண்டது. பாண்டியா 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகள், ஷமி 1 விக்கெட். ஷமி 10 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பினார். இங்கிலாந்து 54/0 107 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து சரிந்தது, சரிந்து இழந்தது.

ராகுல், தவண் அதிரடித் தொடக்கம்:

168 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ராகுல், தவண் மூலம் தன்னம்பிக்கைத் தொடக்கம் கண்டது.

இங்கிலாந்து 161 ரன்களுக்குச் சுருண்டதில் அதிர்ச்சியடைந்திருப்பது அதன் பந்து வீச்சில் தெரிந்தது, ஊக்கமற்ற பந்து வீச்சாக அது இருந்தது,

மாறாக ஷிகர் தவண், ராகுல் தன்னம்பிக்கையுடன் ஆடினர், குறிப்பாக ராகுல் 7 அபார பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க ஷிகர் தவன் தன் ஸ்ட்ரோக்குகளைக் காட்டத் தொடங்கினார், அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுக்க இந்திய அணி மீண்டும் ஒரு நல்லத் தொடக்கம் கண்டதோடு அதிரடி தொடக்கமாகவும் அது இருந்தது, 11 ஒவர்களில் 60 ரன்கள் வந்தது. அப்போது ஸ்டோக்ஸ் பந்து ஒன்று உள்ளே வந்து ராகுலின் பேடில் பட்டு ஸ்டம்புக்குத் திரும்பி பவுல்டு ஆனது.

ஷிகர் தவண் 44 ரன்களில் அடில் ரஷீத்தின் கூக்ளியை சரியாகக் கணிக்காமல் மேலேறி வந்தார் அப்படியே நின்றார், ஸ்டம்ப்டு ஆனார். அவர் மேலேறி வருவதைப் பார்த்த ஆதில் ரஷீத் கடைசி நொடியில் பந்தை கூக்ளியாக்கினார்.

முதல் விக்கெட்டுகாக 60 ரன்களும் பிறகு தவன், புஜாரா (33 நாட் அவுட்) கூட்டணி 51 ரன்களையும் விரைவு கதியில் சேர்த்தனர். கோலி 8 ரன்களுடன் களத்தில் இருக்க இந்திய அணி 124/2 என்று 292 ரன்கள் வலுவான முன்னிலையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.

https://tamil.thehindu.com/sports/article24734800.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

‘கபில் ஆக விரும்பவில்லை, பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன்’

 

 
pandya2jpg

பாண்டியாவை முன்னால் விட்டு கைதட்டும் இந்திய அணி. | ஏ.பி.

கிரேட் ஆல்ரவுண்டர் கபில்தேவுடன் ஒப்பிட வேண்டாம், நான் பாண்டியாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்று ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று 29 பந்துகளில் இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா. இது மேட்ச் வின்னிங் ஸ்பெல்லாக வேண்டும் என்றால் 2வது இன்னிங்ஸிலும் இதே போன்று வீச வேண்டும்.

 
 

தன் அறிமுக டெஸ்ட்டில் 50 ரன்களையும் 3வது டெஸ்ட் போட்டியில் சதமும் எடுத்தார். இதனையடுத்து அடுத்த கபில் என்று ஊடகங்கள் தூபம் போடத் தொடங்கின. ஆனால் அவர் சொதப்பவும் அனைவரும் மீண்டும் கபில்தேவுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூப்பாடு போட்டனர். இப்போது அவர் 5 விக்கெட் வீழ்த்தியதையடுத்து மீண்டும் கபில் என்று கூறிவிடுவார்களோ பிறகு திட்டுவார்களோ என்று அஞ்சி அவரே நான் கபில் அல்ல, பாண்டியாதான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியா கூறியதாவது:

இதில் என்ன பிரச்சினை என்றால் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள், அடுத்த கபில் என்கிறீர்கள் பிரச்சினையில்லை ஆனால் உடனே தவறு நிகழ்ந்து விட்டால் கபில்தேவா, இவரா? என்று கூறுகிறீர்கள். நான் ஒரு போதும் கபில் ஆகவிரும்பவில்லை, ஹர்திக் பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன்.

நான் ஹர்திக் பாண்டியாவாகவே 40 ஒருநாள் போட்டிகள் 10 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளேன், கபில்தேவாக அல்ல. கபில் அவரது காலக்கட்டத்தில் ஒரு கிரேட். நான் ஹர்திக் பாண்டியாவாகவே இருக்கிறேன், கபிலுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ஒப்பிடாத போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

இதே போன்று பந்து வீசவே விரும்புகிறேன். நான் வைடாகச் சென்று வீசும்போது பேட்ஸ்மென்கள் பந்து உள்ளே வருகிறது என்று கருதுகின்றனர் ஆனால் பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆனது.

இஷாந்த் சர்மாவும் என்னிடம் கூறும்போது விக்கெட்டுகளின் பின்னால் ஓடாதே, சரியான இடத்தில் பந்தைப் பிட்ச் செய்தால் உன்னிடம் அவர்களை வீழ்த்தும் திறமை இருக்கிறது என்றார். டைட்டாக வீசுவோம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்பதுதான் நாங்கள் பேசியது. அவர்கள் பொறுமையைச் சோதித்தோம் தற்போது அதன் முடிவு எங்களுக்குச் சாதகமானது.

என்னுடைய 2வது 5 விக்கெட் ஸ்பெல் இது, ஆனால் முதல் 5 விக்கெட்டை விட இது முக்கியமான இடத்தில் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. எனக்கு சதம் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்தான் மகிழ்ச்சி.

இவ்வாறு கூறினார் பாண்டியா.

https://tamil.thehindu.com/sports/article24735087.ece

Share this post


Link to post
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

 

டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 521 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli

 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
 
இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.
 
அடுத்து விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 191 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 197 பந்தில் 103 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் சேர்த்திருந்தது. 449 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
 
201808202223065835_1_pand2._L_styvpf.jpg
 
கோலி ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ரன்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பந்தை இந்தியா களம் இறக்கியது. அவர் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 
 
ரஹானே 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய சமி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 110 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்களை எட்டிய போது, இந்திய அணி டிக்ளேர் செய்தது. பாண்டியா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 
இதன் மூலம் இந்திய அணி 520 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 
 
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

1.png&h=42&w=42

161 & 32/2 * (12.3 ov, target 521)

இங்கிலாந்து தனது 2 ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் இழந்து உள்ளது.

சேவாக்கைத் தொட்டு அசாரூதீன் சாதனையை முறியடித்த கோலி: டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்

 

 

 
virat-kohli-eng-m

நாட்டாங்ஹாமில் சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி   -  படம்: ராய்டர்ஸ்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக்கின் சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, கேப்டனாக இருந்து இங்கிலாந்து அதிக ரன்கள் அடித்த முகமது அசாரூதீனின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 521 ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில், விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டி அரங்கில் 23-வது சதத்தை 118-வது இன்னிங்ஸில் எட்டி சேவாக்கின் டெஸ்ட் சதத்தை சமன் செய்தார். சேவாக் டெஸ்ட் போட்டியில் 23 சதங்கள் அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கேப்டனாக இருந்து இங்கிலாந்தில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இதுவரை முன்னாள் கேப்டன் அசாருதீன் முதலிடத்தில் இருந்தார். அவர் இங்கிலாந்தில் 426 ரன்கள் சேர்த்திருந்தார். அந்த சாதனையை விராட் கோலி முறியடித்து, 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 490 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலிலும் 1,827 ரன்கள் சேர்த்து கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி சராசரியாக 60 ரன்கள் சேர்த்தார். 2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1,693 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 40 ரன்களாகும்.

கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பின் விராட் கோலி அடிக்கும் 16-வது சதம் இதுவாகும். இதன் மூலம் கேப்டனாக இருந்து அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை கோலி பிடித்துள்ளார்.

முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 19 சதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார். விராட் கோலி 16-வது சதத்துடன் 3-வது இடத்தில் உள்ளார்.

மேலும், ஒரு அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு அதிகமாக ஸ்கோர் செய்த கேப்டன்களிலும் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை கோலி இங்கிலாந்துக்கு எதிராக 5 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி 4 முறையும், மறைந்த கேப்டன் பட்டோ 3 முறையும் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாடியதில் கோலி 700 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24744158.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

ஜோ ரூட் கேட்சை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் கொண்டாடிய கேஎல் ராகுல்

 

 

அ-அ+

ஜோ ரூட்டை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதை இங்கிலாந்து கால்பந்து ரசிகர் டேல் அலி ஸ்டைலில் லோகேஷ் ராகுல் கொண்டாடினார். #ENGvIND

 
 
 
 
ஜோ ரூட் கேட்சை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் கொண்டாடிய கேஎல் ராகுல்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 25-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை ஜோ ரூட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டி விளிம்பில் பட்டு மின்னல் வேகத்தில் 2-வது ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுல் கைக்கு சென்றது.

201808211917260615_1_Dellealli-s._L_styvpf.jpg

கேஎல் ராகுல் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த சந்தோசத்தை வலது கையை வைத்து சல்யூட் அடிப்பதுபோல் கொண்டாடினார். இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலி கோல் அடித்ததும் சல்யூட் அடித்து வெற்றியை கொண்டாடுவார்.

201808211917260615_2_Dellealli001-s._L_styvpf.jpg

அவர் மாதிரி வலது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரல்களை மடக்கி சல்யூட் அடிப்பது கடினம். இது மிகப்பெரிய அளவில் டேல் அலி செலபிரேட் சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலம் ஆனது. இதை இன்று கேஎல் ராகுல் செய்தார். அவரது செய்கை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/21191726/1185472/KL-Rahul-did-the-Dele-Alli-celebration-after-taking.vpf

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்தின் தோல்வி இந்த தொடரின் வருமானத்தை பெருக்கியுள்ளது.?

Share this post


Link to post
Share on other sites

டிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா

 
அ-அ+

டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG

 
 
 
 
டிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா
 
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் விராட் கோலி மற்றும் ரகானேயின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதையடுத்து, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். அவருக்கு புஜாரா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 72 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
 
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.
 
201808212349387947_1_ben-2._L_styvpf.jpg
 
ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.
 
தொடர்ந்து இறங்கிய அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.
 
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. #ENGvIND #INDvENG

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/21234939/1185508/england-3119-in-fourth-day-against-india-in-trent.vpf

Share this post


Link to post
Share on other sites

ரிஷப் பந்தை வம்பிழுத்த ஸ்டூவர்ட் பிராடு - போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம்

 
அ-அ+

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்தால் இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad

 
 
 
 
ரிஷப் பந்தை வம்பிழுத்த ஸ்டூவர்ட் பிராடு - போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம்
 
டிரண்ட் பிரிட்ஜ்:
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
 
முதலில் விளையாடிய இந்திய அணி விராட் கோலி, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பிராடு வீசிய பந்தில் ரிஷப் பந்த் ஆட்டம்
இழந்தார். அப்போது, பிராடு அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது. இது விதிமுறைகளை மீறியது.
 
இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/22061914/1185533/Nottingham-Test-Stuart-Broad-penalised-for-breaching.vpf

Share this post


Link to post
Share on other sites

இணைந்த கைகள்: சாதனை நிகழ்த்திய ரிஷப் பந்த் & கே.எல். ராகுல்!

 

 
pant12

 

டெஸ்ட் தொடரில் 2-0 என்ற இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களையும், இங்கிலாந்து 161 ரன்களையும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் கோலி (103), புஜாரா (72), பாண்டியா (52) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ராகுலும் ஓர் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். 

இந்த டெஸ்டில் இதுவரை 7 கேட்சுகளைப் பிடித்துள்ளார் கே.எல். ராகுல். விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு வீரர் இங்கிலாந்தில் அதிக கேட்சுகள் பிடிப்பது இப்போதுதான். இந்திய ஃபீல்டர்களில் ஒரே டெஸ்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்களில் ராகுலுக்கு இரண்டாம் இடம். 2015 கேலே டெஸ்டில் ரஹானே 8 கேட்சுகள் பிடித்ததே சாதனையாக உள்ளது. 

இந்த டெஸ்டில் இதுவரை ராகுலும் ரிஷப் பந்தும் தலா 7 கேட்சுகள் பிடித்துள்ளார்கள். இதுபோல ஓர் அணியில் உள்ள இரு வீரர்கள் 7 அல்லது அதற்கு அதிகமான கேட்சுகள் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. 

டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் கேட்சுகளைக் கோட்டை விடுவது வாடிக்கையாக உள்ள சமயத்தில் ராகுல் இதுபோல 7 கேட்சுகள் பிடித்து சாதனை செய்திருப்பது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமையவுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/22/super-sevens-for-rahul-and-pant-2985388.html

Share this post


Link to post
Share on other sites
3வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி
 
India won by 203 runs

 

 

பும்ராவின் பந்துகளைக் கணிக்க முடியாத இங்கிலாந்து திணறல்: அனைத்து விதங்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி

 

 
bumrah

5 வீக். பந்துடன் பும்ராம். | கெட்டி இமேஜஸ்.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்று தங்கள் வெற்றிக்கணக்கைத் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து தோற்பதைத் தவிர வேறு வழியில்லை, நேற்று 62/4 என்று சரிந்து உணவு இடைவேளையின் போது 84/4 என்று தடுமாறிய போதே இங்கிலாந்து காலாவதியாகிவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் கோலியையும் ஒன்றும் செய்யமுடியவில்லை, பும்ராவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

   
 

ஆனால் பட்லர் (106), பென் ஸ்டோக்ஸ் (62) இணைந்து 169 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றியை ஒத்திப் போடச் செய்ததோடு, இருவரும் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடி மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தனர். ஆனால் அதன் பிறகு பும்ராவுக்குள் ஒரு பேய் புகுந்தது, ஒரே ஓவரில் சதப் போராளி பட்லர், அடுத்த பந்தே பேர்ஸ்டோ ஆகியோரை அபாரமான உள்ளே வரும் பந்துகளில் காலி செய்தார், அதிலும் பட்லர் அந்தப் பந்தை ஆடாமல் விட முடிவெடுத்தது விசித்திரம்தான்.

buttlerjpg

கூட்டணி அமைத்த பட்லர்-ஸ்டோக்ஸ். | ஏ.எஃப்.பி.

 

பேர்ஸ்டோவுக்கு பந்து ஒரு கோணத்தில் உள்ளே வந்தது, இதனால் அவர் மிடில் அண்ட் லெக்கில் தடுத்தாட முயன்றார், ஆனால் பந்து பிட்ச் ஆகி சற்றே கோணத்தை மாற்ற பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை, மிக மிக அபாரமான பந்து 80களில் இம்ரான் கான் ஸ்பெஷல் பந்து ஆகும் இது. எவ்வளவோ டாப் பேட்ஸ்மென்கள் இம்ரானின் இந்தப் பந்துக்கு காலியாகியுள்ளனர், பிறகு ஜவகல் ஸ்ரீநாத் இத்தகைய பந்துகளை வீசினார், 2004 பாகிஸ்தான் தொடரில் லஷ்மிபதி பாலாஜிக்கும் விக்கெட்டுகளைப் பெற்றுத்தந்த பந்து இதுவே.

பிறகு அபாயவீரர் கிறிஸ் வோக்ஸ் தலையை நோக்கி ஒரு பவுன்சர் வீச அவர் தடுத்தாட முயன்றார், முடியவே முடியாத பந்து அது பந்த்திடம் கேட்ச் ஆனது. வோக்ஸ் அவுட் ஆனவுடன் பென் ஸ்டோக்ஸ் புதிய பந்தில் பாண்டியாவின் அபாரமான அவுட் ஸ்விங்கருக்கு ராகுலிடம் கேட்ச் ஆனார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய ஸ்விங் ஆகி உடலின் குறுக்காகச் செல்ல மட்டையை முன்னரே லெக் திசையில் மடக்கிய பென்ஸ்டோக்ஸ் ஸ்கொயர் ஆக பந்து எட்ஜ் ஆகி ராகுல் கையில் தஞ்சமடைந்தது.

bairstow%20bowledjpg

பும்ரா பந்தில் பேர்ஸ்டோ பவுல்டு. | ஏ.எப்.பி.

 

இதே போன்ற ஒரு பந்துக்கு பும்ராவிடம் பிராட் (20) காலியாக 291/9 என்ற நிலையிலிருந்து ரஷித் (30), ஆண்டர்சன் (8) ஆகியோரினால் 311/9 ஆக ஆன போது ஆட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இன்னும் ஒரு விக்கெட் இந்தியா வெற்றி பெறுவதை தடுக்க முடியாது.

முன்னதாக உணவு இடைவேளைக்கு முன்பாக இஷாந்த் ஷர்மாவை ஆட முடியவில்லை. ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து வெளியில் எடுக்கும் பந்துகளில் இங்கிலாந்து இடது கைவீரர்களான குக், ஜெனிங்ஸ் தடவினர். ஜெனிங்ஸ் அப்படித்தான் கால்கள் இருக்கும் நினைவே இல்லாமல் இஷாந்த் பந்து ஒன்றை தொட்டார், கெட்டார், பந்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தது. குக்கிற்கும் ஒரு பந்தை ஆடியே ஆக வேண்டும் என்று வீசி வெளியே இழுத்தார் பந்தை, எட்ஜ் ஆனது மார்புயர கேட்சை ராகுல் பிடித்தார்.

ஜோ ரூட் 13 ரன்களில் பும்ராவின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து ஒன்று வெளியே செல்ல ஆடாமல் விட வேண்டிய பந்தைப் போய் மட்டையால் இடித்தார், இவரும் ராகுல் கையில் சிக்கினார். வலது புறம் பந்து அவரைக் கடந்து சென்றிருக்கும் ஆனால் இருகைகளையும் கொண்டு சென்றதால் பிடித்து ரூட்டை வெளியேற்றினார். இதுதான் பும்ராவின் முதல் விக்கெட் பிறகு இரண்டாவது புதிய பந்தில் மேலும் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து 85 ரன்களுக்கு 5 விக்க்ட் என்று 2வது முறையாக அயல்நாட்டுப் பிட்சில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் பும்ரா.

ஷமி வீசிய பந்தை போப் (16), அனாவசியமாக நோண்ட 3வது ஸ்லிப்பில் அபாரமான ரிஃப்ளெக்சுடன் கோலி இடது புறம் எம்பி கடினமான முறையில் கையை ரிவர்ஸ் ஆக வைத்துப் பிடித்தார். அபாரமான கேட்ச். இங்கிலாந்து 62/4 என்று ஆனது, அதன் பிறகுதான் பென் ஸ்டோக்ஸ், பட்லர் கூட்டணி அமைத்து இந்திய அணியை கொஞ்ச நேரம் அழ அடித்த்தனர், பிறகு பும்ரா வந்தார், பாண்டியா முக்கிய விக்கெட்டைச் சாய்க்க இங்கிலாந்து தவிர்க்க முடியாத தோல்வி நிலையில் உள்ளது.

பும்ராவை கோலி எப்போதும் நம்புகிறார், அவரும் அதற்குரிய பலன்களை அளித்தார், காலியில் ஜோ ரூட்டை ஆட்டிப் படைத்தார் பும்ரா. பல லெந்த்களில் வீசினார் பந்தை உள்ளே கொண்டு வந்தார், வெளியே கொண்டு சென்றார். சில வேளைகளில் தனது டி20, ஒருநாள் உத்தியான யார்க்கர்களையும் வீசி படுத்தினார். ஒருமுறை அஸ்வினிடம் கேட்ச் ஆகியிருப்பார். வெளியே செல்லும் பந்தை ஆடப்போயும் உள்ளே வரும் பந்தை ஆடுவதா வேண்டாமா என்ற சந்தேகத்தையும் பும்ரா ரூட்டுக்கு ஏற்படுத்தினார்.

ஜோஸ் பட்லருக்கும் வந்தவுடனேயே ரூட்டுக்குப் போட்ட அதே பந்தை வீசினார், எட்ஜ் ஆனது ஆனால் ஏற்கெனவே இடது பக்க கொஞ்சம் கூடுதலாக நகர்ந்த பந்த்தினால் பிடிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் எப்படியோ நின்று விட்டனர், ஆனால் பும்ராவை தொடர்ந்து ஆட முடியவில்லை, அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னால் பும்ராவின் பந்துகளைக் கணிக்க முடியவில்லை என்று பட்லரே ஒப்புக் கொண்டார்.

இங்கிலாந்தில் முதல் முறையாக ஆடுகிறார், மொத்தமாகவே 4வது டெஸ்ட் போட்டி இது அதுவும் டியூக்ஸ் பந்தில் முன்னபின்ன பரிச்சயம் இல்லாமல் இப்படி வீசுவது என்பதெல்லாம் பும்ராவிடம் பெரிய பவுலருக்கான அனைத்துத் தரங்களையும் எடுத்துரைக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி லார்ட்ஸ் தோல்வி என்ற சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்து இங்கிலாந்தை சகல விதங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24751631.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை லைவ் ஆக வைத்துள்ளது. #ENGvIND

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.

201808221557465478_1_ViratKohliTeam1-s._L_styvpf.jpg

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆகவே இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/22155746/1185666/ENGvIND-Trent-Bridge-Test-india-Beats-england-ny-203.vpf

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this