யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Recommended Posts

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: புவனேஷ்வர் குமார் நீக்கம்

 

 
pant

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் விளையாடுவார்கள். மீதமுள்ள 2 போட்டிகளுக்குப் பின்னர் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

 

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இழந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில் முதல் 3 போட்டிகளுக்கான 18 வீரர்களை மட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இதில் டெஸ்ட் தொடருக்கு முதல் முறையாக டெல்லி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

shamijpg

முகமது ஷமி

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடற்தகுதியின்மையால் தேர்வாகாமல் இருந்த முகமது ஷமி டெஸ்ட் தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கைவிரலில் காயம் காரணமாக நீக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டிக்குள் உடற்தகுதியை நிரூபிக்காவிட்டால், 2-வது போட்டியில் பும்ரா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டி20 போட்டிகளிலும், ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு பெற்ற வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவண், லோக்கேஷ் ராகுல், முரளி விஜய், சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பந்த், ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.

https://tamil.thehindu.com/sports/article24451643.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

“அஸ்வின், குல்தீப் இல்லாம களமிறங்காதீங்க” - இந்திய அணிக்கு அசாருதீன் அறிவுரை

 

 

 
aswin

ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

   
 

இதில் இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் விளையாடும் 11 வீரர்களில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

azarudenjpg

அசாருதீன்

 

இது குறித்து முகமது அசாருதீன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் அளவுக்கு வலிமையான அணியாக இருக்கிறது, சிறந்த வாய்ப்புகளும் உள்ளன.

இங்கிலாந்தைப் பொருத்தவரை இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் பந்துவீச்சு இல்லை. ஆனாம், நம்மிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளன. ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவர் மட்டுமே இங்கிலாந்தின் பலம். அவர்களும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுகிறார்கள்.

இங்கிலாந்துடன் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்களில் கண்டிப்பாக அஸ்வின், குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள்,2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கலவையில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் ஒருவேளை ஆடுகளம் பசுமையாக இருந்தால், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டும். ஆனால்,என்னைப்பொருத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதுதான் சரியானதாகும்.

ஏனென்றால்,நாம் விளையாடும் காலத்தில் இங்கிலாந்தில் வெயில் காலமாகும். அப்போது ஆடுகளம் காய்ந்து, வறண்டு காட்சியளிக்கும். ஆதலால் போட்டியின் கடைசி இரு நாட்கள், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகக் களம் மாறிவிடும்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற இருக்கும் ஒரே வாய்ப்பு ஆடுகளம் பசுமையாக இருந்தால் மட்டுமே வேகப்பந்துவீச்சால் வெல்ல முடியும். ஆடுகளத்தைப் பசுமையாக வைத்திருந்தால், அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும், ஏனென்றால், நம்மிடமும் திறமையான ஸ்விங் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

kuldeepjpg

குல்தீப் யாதவ்

 

இப்போது குல்தீப்யாதவ் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அஸ்வினுக்கும் கண்டிப்பாக வாய்ப்புவழங்க வேண்டும்.

ஒருவேளை 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அஸ்வினை மட்டும் வைத்துக்கொள்ளலாம். அஸ்வின் அனுபவமான பந்துவீச்சாளர் என்பதால், டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தலாம்.

விராட் கோலி நன்றாக கேப்டன் பணியைச் செய்கிறார், இன்னும் நீண்ட தொலைவு அவர் பயணிக்க வேண்டும். வீரர்களுக்கு உடற்தகுதி முக்கியம்தான். அதற்காக வீரர்களைத் தேர்வு செய்தபின் யோ யோ டெஸ்ட் வைக்கக்கூடாது. யோயோ டெஸ்ட் வைத்த பின் வீரர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அசாருதீன் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24487614.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

புவனேஷ்வர் குமார் இல்லாதது வெற்றியை பாதிக்காது- சச்சின் டெண்டுல்கர் கருத்து

 

 

 
Sachin-Tendulkar24-1jpg

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புவனேஷ்வர் குமார், பும்ரா இல்லாதது இந்திய அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்காது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

 

இங்கிலாந்துக்கு எதிரான குறுகிய வடிவிலான இரு தொடர்களில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். அவரது பந்துவீச்சுக்கு இங்கிலாந்து அணி மிரள்வது நன்றாகத் தெரிகிறது. ஆனால் அதேவேளையில் இங்கிலாந்து முன்னணி வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட், குல்தீப் யாதவுக்கு எதிராக அபாரமாக விளையாடி வருகிறார். குல்தீப் யாதவ் எந்த வகையில் பந்தை கையில் இருந்து விடுவிக்கிறார் என்பதை கவனித்து ஜோ ரூட் விளையாடுகிறார். இதனால் அவரால் பந்தை எளிதில் கணித்து அடிக்க முடிகிறது.

ஆடுகளங்கள் தட்டையாகவும், வறண்டதாகவும் இருந்தால், டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா வுக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் ஆடுகளங்களில் புற்கள் காணப்பட்டால், அது இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாத கமாக அமைந்துவிடும். டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் புவனேஷ்வர் குமார் குமார், முதல் ஆட்டத்தில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவுதான்.

புவனேஷ்வர் குமார் குமார், இங்கி லாந்து மைதானங்களில் நன்கு பந்துகளை கையாளத் தெரிந்தவர். அவர் இல்லாதது அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். பல ஆண்டுகளாக அணிக்கு பங்களிப்பைக் கொடுத்து வரும் புவனேஸ்வரின் அனுபவம் முதல் 3 போட்டிகளில் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் ஸ்விங் செய்யும் பந்துகள், எதிரணிக்கு நிச்சயம் தலைவலியை ஏற்படுத் தும்.

இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார் குமார் ஆகியோர் இந்திய அணி யின் தரமான பந்து வீச்சாளர் கள். புவனேஷ்வர் குமார் இல்லாத போதும், இவர்கள் நால்வரும் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கவேண்டும்.

ஒருநாள் தொடரில் பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடை வாக அமைந்துவிட்டது. தற்போது முதல் டெஸ்டிலும் அவர் விளை யாடப் போவதில்லை. 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளை யாடும் போது அணிக்கு கூடுதல் பலமாக அமையும். ஆனால் முதல் டெஸ்டில் புவனேஷ்வர் குமார், பும்ரா இல்லாததால் அது இந்திய அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்ற கருத்து அணியினரிடையே நிலவுவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது.

1997-ல் எனது தலைமையில் டொரண்டோவில் சஹாரா கோப்பை போட்டிக்காக விளை யாடச் சென்றோம். அப்போது அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான நாத், வெங்க டேஷ் பிரசாத், சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெறவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி கண்டோம். அந்தத் தொடரில் கங்குலி சிறப்பாக பந்து வீசி 4 ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத தால் இந்திய அணி வெற்றி பெறாது என்று கூற முடியாது.

எதிர்மறையான நிலைகளிலும் தங்களால் முடிந்தவரைக்கும் சிறப்பான பங்களிப்பை வீரர்கள் வழங்கவேண்டும். இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் பார்ம் எப்படி இருக்கும் என்று கூற முடியாது. அவரது பார்மை வைத்து தொடரை வெல்வோமா அல்லது தோல்வி அடைவோமோ என்றும் கூற முடியாது.

இந்தத் தொடரில் இந்திய அணியினர் அனைவருமே சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

https://tamil.thehindu.com/sports/article24487089.ece

Share this post


Link to post
Share on other sites

‘அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு நோ, நோ’: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு

 

 
kohli

விராட் கோலி, அனுஷ்கா சர்மா : கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என்பதற்காகஇந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி வீரர்கள் யாரும் மனைவியை உடன்வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக திமும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

 
 

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக்கைப்பற்றியது. ஆனால், மெத்தனமாக விளையாடியதால், ஒரு நாள் தொடரை 1-2 என்று இழந்தது. அடுத்துநடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க இருப்பதால், இடைப்பட்ட நாட்களை இந்திய வீரர்கள் தங்களின் மனைவி, குடும்பத்தாருடனும், காதலியுடனும்செலவிட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர்.

சமூகவலைதங்களில் அதுதொடர்பான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், அடுத்துத்தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்துடன் பிசிசிஐ இருப்பதால், வீரர்கள் அனைவரும் மனைவியைவிட்டு ஒதுங்கி இருக்க உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள்தெரிவிக்கின்றன.

indiajpg
 

இது குறித்து அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்குமுன்பாகவே அனைத்து வீரர்களும் தங்களின் மனைவி, நண்பர்கள், உறவினர்களை விட்டு விலகிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அடுத்த 3 போட்டிகளுக்கு வீரர்கள் குடும்பத்தாரை விட்டு பிரிந்திருக்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடியதற்கும், பேட்டிங், பந்துவீச்சில் அதிகமாககவனம் செலுத்தாமல் போனதற்கு குடும்பத்தினரை அருகில் வைத்திருந்ததே காரணம் என்றுகுற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அடுத்துவரும் டெஸ்ட் போட்டியில் வெற்றி அவசியம் என்பதால், வீரர்களின் மனைவிகள், தோழிகள் ஆகியோருக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் 25-ம்தேதி முதல் 28 வரை கெம்ஸ்போர்ட்யில் எஸெக்ஸ் அணியுடன்பயிற்சிப்போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24496996.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

வெற்றிதான் முக்கியம், ரன் முக்கியமல்ல என்று கோலி சொன்னால், அது பொய்- ஆண்டர்சன்

 
அ-அ+

தான் ரன் அடிக்காவிடிலும் இந்தியா வெற்றி பெற்றால் போதும் என்று கோலி சொன்னால், அது பொய் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆண்டர்சன் கூறியுள்ளார். #ENGvIND

 
 
 
 
வெற்றிதான் முக்கியம், ரன் முக்கியமல்ல என்று கோலி சொன்னால், அது பொய்- ஆண்டர்சன்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொணட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் விராட் கோலி எப்படி விளையாடுகிறார்? என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலியின் மிகவும் மோசமான டெஸ்ட் தொடர் இதுவாகும்.

அதன்பின் இங்கிலாந்து இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது இந்தியா தொடரை 4-0 என வென்றது. இந்த தொடரில் விராட் கோலி 655 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து தொடர் குறித்து விராட் கோலி பேசுகையில், இந்திய அணி வெற்றி பெறுகிறதா? என்பதுதான் முக்கியம். நான் ரன் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் ரன் முக்கியமில்லை என்று அவர் கூறினால், அது பொய் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றில் பெற்றால் அது பெரிய விஷயம்தான். விராட் அவருடைய அணிக்காக ரன்கள் குவிக்க ஆவலாக இருப்பார். உலசின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அணியின் கேப்டனும் ஆன அவரிடம் இந்தியா அணி அதை எதிர்பார்க்கும்.

201807232018578996_1_Kohli002-s._L_styvpf.jpg

இப்போதைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் ஃபூட்டேஜ்ஜில் இருந்து மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களுடைய கடந்த கால அனுபவத்தில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே, நான் விராட் கோலியின் திறமையை 2014 தொடரில் இருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடியும்.

விராட் கோலி கடினமாக பயிற்சி மேற்கொண்டிப்பார் என்பது எனக்கு உறுதியாக தெரியும். இங்கிலாந்து எதிரான தொடர் விராட் கோலிக்கும் எனக்கும் இடையிலான போட்டியல்ல. மீதமுள்ள இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கும்தான். இது மிகவும் அற்புதமான ஒன்று’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/23201858/1178621/India-vs-england-if-virat-Kohli-says-his-runs-dont.vpf

Share this post


Link to post
Share on other sites

குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டியில் ஆடினால் இங்கிலாந்துக்கு சிலபல காயங்களை ஏற்படுத்துவார்: சச்சின் டெண்டுல்கர் திட்டவட்டம்

 

 

 
kuldeep

குல்தீப் யாதவ். | படம்: விவி. கிருஷ்ணன்.

கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தில் இருக்கும் அனல் தன்மையினால் குல்தீப் பந்து வீச்சுக்குச் சாதகமாக சூழ்நிலைமைகள் இருக்கும் என்பதால் டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் ஆடுவது முக்கியம் என்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சச்சின் கூறியதாவது:

 
 
 

குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராகிவிட்டார் என்று நான் எப்போதிலிருந்தோ கூறி வருகிறேன். அவரிடம் உள்ள சுழற்பந்து ஆயுதங்கள், மற்றும் அதனை சரியான இடத்தில் வீசும் திறன் ஆகியவற்றினால் அவர் எப்போதுமே டெஸ்ட் போட்டிக்குத் தயார்தான். இதில் சந்தேகமேயில்லை.

இம்முறை இங்கிலாந்தில் வெயில் கொஞ்சம் அதிகம் உள்ளது, ஸ்பின்னர்களுக்கு சிறிதளவு உதவி இருக்குமேயானால் குல்தீப் யாதவ் இங்கிலாந்துக்கு சிலபல காயங்களை ஏற்படுத்துவார், இது மிகவும் முக்கியமான காரணியாகும்.

மேலும் இந்திய அணியில் பவுலிங் செய்ய கூடிய பேட்ஸ்மென்களும், பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்களும் உள்ளனர். பேட்டிங்கில் விக்கேட் கீப்பரின் பங்களிப்பும் முக்கியமானது. அஸ்வின், ஜடேஜாவும் பேட் செய்வார்கள். ஹர்திக் பாண்டியா மூலம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நம்மிடையே இருக்கிறார்.

sachinjpg
 

பேப்பரில் பார்க்கும் போது இந்திய அணி நல்ல பேலன்ஸான அணியாகவே தெரிகிறது.

எப்போதும் முழு 11 வீரர்களுடன் ஆடுவது பிரமாதமானது. காயங்கள் ஏற்படவே செய்யும், இது விளையாட்டில் சகஜமானதே. இது சவால்தான் ஆனால் அதனால் நம்மால் முடிவுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைக்கக் கூடாது. நம் அணி வெற்றி முடிவுகளை உருவாக்கும் திறமை கொண்டதே.

ஒருமுறை ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே இல்லாமல் டொராண்டோவில் போட்டிக்குச் சென்றோம். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக. ஆனால் பாகிஸ்தானை 4-1 என்று வீழ்த்தினோம்.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

https://tamil.thehindu.com/sports/article24511340.ece

Share this post


Link to post
Share on other sites

அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நூறு முறையாவது யோசிக்க வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

 

 
kuldeep4455

 


விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.

இந்நிலையில் ஒருநாள், டி20 ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றில் எழுதியதாவது:

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதன்மைத் தேர்வாக இருக்கும்பட்சத்தில் அது அஸ்வின், ஜடேஜாவுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. இருவரும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கக் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

குல்தீப் அபாரமான திறமையாளர். ஆனால் அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நான் நூறுமுறையாவது யோசிப்பேன். மேலும் மெதுவான ஆடுகளத்தில் குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. அஸ்வினிடம் இந்தப் பிரச்னை உண்டு. இதுபோன்ற தருணங்களில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசுவார். 

இந்திய அணி இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆடுவதாக இருந்தால் குல்தீப் யாதவ், இரண்டாவது வீரராகவே இருக்கவேண்டும். அதேநேரம் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்று சொல்லி குல்தீப்பைத் தேர்வு செய்தால் அது அவருக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும். இருவர் என்றால் என் தேர்வு ஜடேஜா - குல்தீப். இது அஸ்வின் - குல்தீப் இணையை விடவும் சிறப்பாக அமையும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ash_jadeja77.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/25/if-india-play-two-spinners-kuldeep-can-be-your-second-spinner-says-sanjay-manjrekar-2967555.html

Share this post


Link to post
Share on other sites

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத், மொயின் அலி, ஜேமி போர்ட்டர்

 

 
rashidjpg

அடில் ரஷீத். | ராய்ட்டர்ஸ்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத், மொயின் அலி, ஜேமி போர்ட்டர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 1-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு 13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 

டிசம்பர் 2016-க்குப் பிறகு அடில் ரஷீத் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார், கடைசியாக அடில் ரஷீத் ஆடியதும் இந்தியாவுக்கு எதிராகவே.

இங்கிலாந்து அணிக்குழு தலைவர் எட் ஸ்மித், குறைந்த ஓவர் கிரிக்கெட் பார்மை வைத்து அடில் ரஷீத்தைத் தேர்வு செய்துள்ளார், அதே அடிப்படையில் மொயின் அலி தேர்வைக் கூற முடியாது, ஏனெனில் 2014 தொடரில் இந்தியாவுக்கு எதிராக மொயீன் அலி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (வி.கீ), பிராட், பட்லர், அலிஸ்டர் குக், சாம் கரன், கீட்டன் ஜெனிங்ஸ், டேவிட் மலான், ஜேமி போர்ட்டர், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ்.

https://tamil.thehindu.com/sports/article24521247.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

டெஸ்ட் அணியில் அடில் ரஷீத் ‘முட்டாள்தனமான தேர்வு’- பாயும் முன்னாள் வீரர்கள்

rashid2

அடில் ரஷீத். | ராய்ட்டர்ஸ்.

சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று யார்க்‌ஷயர் அணியுடன் குறைந்த ஓவர் கிரிக்கெட் ஒப்பந்தம் பெற்றவர் அடில் ரஷீத். இந்நிலையில் இந்தியா போன்ற ஸ்பின் ஸ்பெஷலிஸ்ட் பேட்டிங் வரிசைக்கு எதிராக அடில் ரஷீத்துக்கு திரும்பவும் வாய்ப்பளித்திருப்பது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்தில் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.

மைக்கேல் வான்: 4 நாள் கிரிக்கெட் ஆடாதவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நாம் தேர்வு செய்துள்ளோம்!! அவர் சிறப்பாக ஆடுவாரா மாட்டாரா என்பதை விட்டுத்தள்ளுவோம், இந்த முடிவு முட்டாள்தனமானது, என்று கூற அதற்கு முன்னால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப், ‘100% உண்மை’ என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
 
 

யார்க்‌ஷயர் கிளப் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஆர்தர்: இந்த சீசனில் சிகப்புப் பந்தில் கிரிக்கெட் ஆடாத ரஷீத்தைத் தேர்வு செய்தது எங்களுக்கு ஆச்சரியமே. அவரும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்துக்கு நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் சரி, என்று கூறியுள்ளார்.

அடில் ரஷீத், மொயின் அலியை தேர்வு செய்ததால் சோமர்செட் ஸ்பின்னர்களான ஜாக் லீச், டோமினிக் பெஸ் ஆகியோர் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சோமர்செட் கிரிக்கெட் தனது ட்விட்டரில், “வீ ஆர் சோமர்செட்” என்று அதிருப்தி பதிவு வெளியிட்டுள்ளது.

டேவிட் லாய்ட்: கடைசியில் அவர் சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்குத் திரும்பியதை நான் சவுகரியமாகவே உணர்கிறேன்

முன்னாள் வீரர் ஜொனாதன் ஆக்னியு: “ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் அடில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், ஆனால் இது யார்க்‌ஷயருக்கும் அடில் ரஷீத்துக்குமான பிரச்சினையே” என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்ஷா போக்ளே: இங்கிலாந்து ஸ்பின்னர்கள் அலமாரி எப்படி வெறுமையாகக் கிடக்கிறது என்பதையே ரஷீத் தேர்வு அறிவுறுத்துகிறது. மேலும் இங்கிலாந்தின் பிட்ச்கள் பற்றியும் எனக்கு இப்போது ஐயம் எழுகிறது. இங்கிலாந்து 2 ஸ்பின்னர்களுடன் ஆடினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஸ்கைல்ட் பெரி: இந்தியா டெஸ்ட் போட்டிகளில் ரஷீத் மீது வைத்திருக்கும் ம

https://tamil.thehindu.com/sports/article24521740.ece

Share this post


Link to post
Share on other sites

நான் என்னைத்தவிர யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ‘அவுட் ஆஃப் பார்ம்’ புஜாரா திட்டவட்டம்

 

 

 
TH03PUJARA

இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடினாலும் பெரிய அளவில் அதில் சோபிக்காமல் பயிற்சி ஆட்டத்திலும் சோபிக்க முடியாமல் தவித்து வரும் ‘இந்தியாவின் அடுத்த திராவிட்’ என்று விதந்தோதப்பட்ட செடேஸ்வர் புஜாரா தான் தன்னைத் தவிர வேறு யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் தி கிரிக்கெட் மந்த்லிக்கு அவர் அளித்த நீண்ட பேட்டியில் அவர் இது குறித்து கூறியதாவது:

 
 

இங்கிலாந்தில் ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் உங்களது சராசரி 22 இது உங்களது மனநிலையையும் நீங்கள் இருக்கும் பார்மையும் பிரதிபலிக்கிறதா?

புஜாரா: இல்லை. சிலவேளைகளில் சோபிக்க முடிவதில்லை. ஒரு தனி நபராக என் மீதே நான் அதிக அழுத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது, நான் என்னைத் தவிர எதையும் யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்கிறேன்.

கவுண்ட்டி கிரிக்கெட்டிலும் இந்தியா ஏவுக்காகவும் போதுமான ரன்கள் எடுத்தேன் என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன். பெரிய பெரிய சதங்களை எடுப்பது என்பதல்ல. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க எப்போதும் விரும்புவேன். இங்கிலாந்தில் சராசரி ஸ்கோரைப் பார்த்தீர்களானால் இந்தியா போல் இருக்காது. இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-4 சதங்களை எடுக்கலாம், ஆனால் இங்கிலாந்தில் டாப் வீரர்கள் கூட 2 சதங்கள் ஓரிரு அரைசதங்களையே எடுக்க முடிகிறது. ஆகவே சராசரி ஸ்கோர் என்பது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் வேறுபடும்.

ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்: பிட்ச்கள் சவாலானவை, அவுட் ஆகும் தருணங்கள் அதிகம். உத்தியில் சிறுசிறு மாற்றங்கள் தேவை.

எனக்கு அதற்கான பொறுமை இருக்கிறது என்றே கருதுகிறேன். சவாலான சில பிட்ச்களில் ஆடியுள்ளேன். தென் ஆப்பிரிக்காவில் ஜோஹான்னஸ்பர்கில் ஆடும்போது மிகமிகக் கடினமான பிட்ச். ஆனாலும் அதில் அரைசதம் எடுத்தேன். ஆகவே இங்கிலாந்திலும் ரன்கள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இங்கிலாந்து தொடரில் இவ்வளவு ரன்கள் எடுப்பேன் என்ற ரீதியில் நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு கூறியுள்ளார் புஜாரா.

https://tamil.thehindu.com/sports/article24530544.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவுக்கு அடுத்த பின்னடைவு?: இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா?

 

 

 
ASHWIN-SA

அஸ்வின் : கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அஸ்வினுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில்கூட பந்துவீசவில்லை. இந்தக் காயம் குணமடையாவிட்டால், முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பிடிப்பது கேள்விக்குறியாகும்.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இந்திய அணி பறிகொடுத்தது.

இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக, கெம்ஸ்போர்ட் நகரில் எசெக்ஸ் அணியுடன் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இங்கிலாந்துடன் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் இதில் பந்துவீசியும் பேட்டிங் செய்தும் பயிற்சி எடுத்து வருகின்றனர். டெஸ்ட் போட்டிக்கான அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப்பின் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம்பிடிக்கத் தீவிரமாக போராடி வந்த அஸ்வின், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அஸ்வினுக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்காமல், வலை பயிற்சியில் மட்டுமே பந்துவீசி வருகிறார்.

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று பந்துவீச வரவில்லை. காயம் சிறியதாக இருக்கும்போது போதுமான ஓய்வு எடுத்தால், போட்டி தொடங்குவதற்கு காயம் முழுமையாக குணமடைய வாய்ப்பு உண்டு என அறிவுறுத்தப்பட்டதால், அஸ்வினை பயிற்சிப்போட்டியில் களமிறக்கவில்லை.

காயத்தின் தன்மை, காயம் ஆறுவதைப் பொருத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில்விளையாடுவார் எனவும் அணிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே காயம் காரணமாக புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில், இப்போது அஸ்வினும் காயம் காரணமாக விளையாடாவிட்டால் அது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துவிடும். இதன் காரணமாகவே அஸ்வினை பயிற்சிப்போட்டியில் களமிறக்காமல் அணி நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது என்று கூறப்படுகிறது

https://tamil.thehindu.com/sports/article24531562.ece?utm_source=HP&utm_medium=hp-sports

Share this post


Link to post
Share on other sites

‘என்னவோ ஆ.. ஊ.. என்று குதிக்கிறார்கள்...மைக்கேல் வான் கருத்தெல்லாம் யாருக்கு வேண்டும்? - பதிலடியில் அடில் ரஷீத் காட்டம்

 

 

 
rashid

ரஷீத். | ராய்ட்டர்ஸ்.

சிகப்புப் பந்து கிரிக்கெட்டே வேண்டாம் என்று ஒதுங்கிய அடில் ரஷீத்தை ஸ்பின்னுக்கு எதிராக பலம் மிகுந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்தில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அந்த விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிய அடில் ரஷீத், குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வைத்த ‘முட்டாள்தனமானது’ என்று விமர்சனத்தை எதிர்த்துக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

 

பிபிசி ஸ்போர்ட்டில் அடில் ரஷீத் கூறும்போது, “என்னவோ ஆ... ஊ.. என்று கத்துகிறார்கள். இது என்ன பெரிய விஷயமா? நான் ஓய்வு பெற்று விட்டேன் என்று கூறினேனா, சில பண்டிட்கள் அவ்வாறு எழுதினர் பேசினர், ஆனால் நாடு என்னை வேண்டுமென்று தேர்வு செய்யும்போது, இல்லையில்லை நான் வரமாட்டேன் என்று கூற முடியாது.

மைக்கேல் வான் கருத்தெல்லாம் யாருக்கு வேண்டும், ஒருவருக்கும் அவர் கருத்தெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. நான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிகப்புப் பந்து கிரிக்கெட் ஆடமாட்டேன் என்றவுடன் அவர் ட்வீட் செய்தார். அவர் எப்போதும் சர்ச்சைக்கருத்துகளை வெளியிடுபவர், அப்போதும் முட்டாள்தனமாக எதையோ கூறினார்.

அவர் கூறுவதையெல்லாம் யாரும் ஆர்வமாகப் பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக ஏதோ திட்டம்போட்டு செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவர் கேப்டன்சியில் ஆடியிருக்கிறேன், அவருடன் ஆடியிருக்கிறேன், ஆனால் ஓய்வு பெற்ற சில வீரர்கள் நடப்பு வீரர்களைப் பற்றி சில வேளைகளில் அர்த்தமற்ற முட்டாள்தனமான கருத்துகளை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

எதையும் உருப்படியாகக் கூற முடியாமல் அவருக்கே ஏற்பட்ட சோர்வில் இப்படியெல்லாம் கூறுகிறார். என்னை வெறுப்பவர்கள் இருக்கின்றனர், பண்டிட்கள் என் தேர்வை இழிவானது என்கின்றனர், ஆனால் இது என் தவறல்லவே.

யார்க்‌ஷயர் அணி நிர்வாகம் என் மீது கோபமடைவதில் நியாயம் இருந்தாலும், ‘நல்லது இங்கிலாந்து அணியில் தேர்வாகியிருக்கிறாய் வாழ்த்துக்கள்’ என்று கூறுவதுதான் முறை. அவர்களுக்கு 4 நாள் போட்டியில் ஆடவில்லை என்பதில் கோபமடைந்து பயனில்லை. நான் அணிக்காக 100% அர்ப்பணிக்கிறேன். நன்றாகச் சென்றால் மகிழ்ச்சி, நன்றாகச் செல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே” இவ்வாறு கூறினார் ரஷீத்.

https://tamil.thehindu.com/sports/article24530850.ece

Share this post


Link to post
Share on other sites

பயிற்சிப்போட்டியில் 2 இன்னிங்ஸிலும் தவண் டக்அவுட்: முதல் டெஸ்டில் கழற்றிவிடப்படுவாரா?- முரளிவிஜய்- ராகுல் களமிறங்க வாய்ப்பு?

 

 
tam

புஜாரா, முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவண் : கோப்புப்படம்

இங்கிலாந்து எசெக்ஸ் அணியுடனான 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் 2 இன்னிங்ஸிலும் டக் அவுட் அடித்த ஷிகர் தவண் முதல் டெஸ்ட்டில் கழற்றிவிடப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவருக்குப் பதிலாக முரளி விஜயுடன் இணைந்து, கே.எல்.ராகுல் களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது, ஆனால், ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் பறிகொடுத்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி சவுத்தாம்டனில் நடக்கிறது.

அதற்கு முன்பாக, எசெக்ஸ் அணியுடன் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஷிகர் தவண் இரு இன்னிங்ஸிலும் ரன் ஏதும் சேர்க்காமல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஷிகர் தவண் டக் அவுட் அடித்து ஆட்டமிழந்து இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தவணின் மோசமான ஃபார்ம்

இங்கிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவணின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. கத்துக்குட்டி அயர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே ஷிகர் தவண் நன்றாக பேட் செய்தார். அதன்பின் இங்கிலாந்து அணியுடனான டி20, ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் தவண் சொதப்பிவிட்டார். எந்தப் போட்டியிலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ரன் ஏதும் சேர்க்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும், 40, 36,44 ரன்கள் மட்டுமே தவண் சேர்த்தார். 3 டி20 போட்டிகளில் 4, 10,5 ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஷிகர் தவண் 2,153 ரன்கள் சேர்த்துள்ளார். 43.93 ரன்கள் சராசரி வைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டியில் 550 ரன்கள் சேர்த்துள்ளார். இரு சதங்கள் இலங்கை அணிக்கு எதிராகச் சேர்த்துள்ளார்.

2018-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் 16, 16 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகச் சதமும் அடித்துள்ளார். கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராகச் சதம் அடித்து தனது புஜபலத்தைக் காட்டும் ஷிகர் தவண் ஆசியக் கண்டத்தைவிட்டு வெளியே விளையாடச் செல்லும்போது பேட்டிங்கில் சொதப்பிவிடுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவண், 5 டெஸ்ட் போட்டிகளிலும் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தவண், 12, 29, 7, 31, 6, 37 ரன்கள் மட்டுமே கடந்த இங்கிலாந்து தொடரில் சேர்த்தார்.

இப்போது எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பொறுப்பற்ற முறையில் பேட் செய்து இரு இன்னிங்ஸ்களிலும் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்கத் தெரியாமல் டக்அவுட் ஆகிய உள்ளார். முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளநிலையில், பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத தவணை களமிறக்குவது எந்தவிதத்தில் சரியாக இருக்கும். அவருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் அளிக்க வேண்டுமா

கே.எல் ராகுல்

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கே.எல்ராகுல். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சதம் அடித்து தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஆனால், ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

கே.எல்ராகுலின் டெஸ்ட் வரலாற்றைப் ஆய்வு செய்தால், வெளிநாடுகளில் பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் சதம், அரைசதம் அடித்து தனது பேட்டிங் நிலைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் சதம் அடித்துள்ளார். ஷிகர் தவணுடன் ஒப்பிடும்போது வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடக்கூடியவராக ராகுல் இருந்துவருகிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ராகுல் 90சதவீத போட்டிகளில் அரைசதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்துள்ளார்.

ஆனால், இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் தவண் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியத் தொடர்ந்து கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது ஆனால், அதில் ராகுல் 10, 4, 0,16 என சொதப்பினார். இதனால், ஆப்கானிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இங்கிலாந்து தொடருக்கு தேர்வுசெய்யப்பட்ட ராகுல், எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாகவே பேட் செய்தார். 12 பவுண்டரிகள் உள்ளிட்ட 58 ரன்களும், 36 ரன்கள் என இரு இன்னிங்ஸிலும் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைச் சமாளித்துவிளையாடக்கூடிய அளவுக்கு ராகுல் திறமையாக இருப்பதால், முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியல் ராகுலைத் தேர்வு செய்யலாம்.

சத்தீஸ்வர் புஜாரா

டெஸ்ட் போட்டி என்றாலே புஜாராவுக்கு தனி இடம் என்ற அளவில் டெஸ்ட் வீரராக மாறிவிட்டார். இன்னும் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார் புஜாரா. அணியில் 3-வது இடத்தில் களமிறங்க புஜாரா சிறந்த வீரர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே இங்கிலாந்தில் கவுண்டி அணியில் விளையாடி புஜாரா தயாராகி வந்தார். புஜாரா தான் விளையாடிய கவுண்டி போட்டியில், 172 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஆனால், சசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் புஜாரா எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. 35 பந்துகளைச் சந்தித்த புஜாரா 23 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியில் தவிர்க்க முடியாத வீரராகவும், அதேசமயம், 3-வது இடத்துக்குபொருத்தமானராக இருக்கிறார் என்பதால், புஜாரா முதல் போட்டியில் இடம் பெறலாம்.

முரளி விஜய்

இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய். கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஓரளவுக்கு விளையாடினார். கடந்த ஆண்டு உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடர் பெரும்பாலானவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் தென் ஆப்பிரிக்கத் தொடரில் குறிப்பிட்ட பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 104 ரன்கள் சேர்த்தார். சசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 53 ரன்கள் சேர்த்து தனது பார்மை நிரூபித்துள்ளார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக, பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத ஷிகர் தவணை, முரளி விஜயடன் களமிறக்குவதற்குப் பதிலாக, கே.எல்ராகுலை களமிறக்கலாம். தவணுக்கு ஓய்வு அளிக்கலாம். புஜரா 3-ம் இடத்தில் நிலைத்து விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கக்கூடியவர் என்பதால், அவர் அணியில் தொடரலாம்.தவணின் பேட்டிங் ஃபார்மை கருத்தில் கொண்டு முதல் போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்படுவாரா என்பது விரைவில் தெரியும்.

https://tamil.thehindu.com/sports/article24540091.ece

Share this post


Link to post
Share on other sites

`இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது சவாலானது!’ - டெஸ்ட் தொடரை எதிர்நோக்கும் தினேஷ் கார்த்திக்

 
 

இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது சவாலானது என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

தினேஷ் கார்த்திக்

Photo Credit: BCCI

 

 

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துவிட்டு, டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2007ம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்ற விராட் கோலி படைத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. 

 

 

இந்தநிலையில், டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார். ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, கடந்த 2007ம் ஆண்டில் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டுமே தற்போதைய இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். அவர் கூறுகையில், ``டெஸ்ட் தொடர் குறித்து எண்ணுகையில் பதற்றமும், உற்சாகத்தையும் நான் உணர்கிறேன். நீண்ட நாள்களுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறேன். அந்த அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால். அணியின் மற்ற வீரர்களைப் போலவே, நானும் உற்சாகத்துடன் அதை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.  

கேப்டன்  விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரைப் புகழ்ந்துள்ள தினேஷ் கார்த்தில், ஒரு அணியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நாங்கள் எதிர்க்கொள்ள ஆயத்தமாகி விட்டோம். நேர்மறை எண்ணங்களுடன் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் முன்னின்று வழிநடத்தத் தயாராகி இருக்கின்றன. வீரர்களிடம் நம்பிக்கை தெரிகிறது’’ என்று கூறினார். 

https://www.vikatan.com/news/sports/132363-dinesh-karthik-speaks-about-england-test-series.html

Share this post


Link to post
Share on other sites

களப்போராட்டத்தில் ஐபிஎல் நட்பையெல்லாம் பாராட்ட முடியாது: ஜோஸ் பட்லர் அதிரடி

 

 

 
buttler

களத்தில் ஐபிஎல் நட்புக்கெல்லாம் வேலையில்லை. | ஜோஸ் பட்லர். | கெட்டி இமேஜஸ்.

ஐபில் தொடரில் இங்கிலாந்து, இந்திய வீரர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் டெஸ்ட் போட்டியின் உஷ்ணத்தில் களத்தில் அதையெல்லாம் பாராட்ட முடியாது என்று இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் வோக்ஸ், மொயின் அலிக்கு ஐபிஎல்-ல் கேப்டனாக இருந்த விராட் கோலி இங்கிலாந்து வீரர்களுடன் களத்தில் முன்னேற்றமடைந்த நட்பு ஏற்படும் என்று நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், ஜோஸ் பட்லரோ ஐபிஎல் நட்பெல்லாம் களத்தின் உஷ்ணத்தில் பறந்து விடும் என்று கூறியுள்ளார்.

 

“சில இந்திய வீரர்களுடன் ஆடியுள்ளேன். ஆனால் களத்தில் அவை மறக்கப்படும். அனைவரும் போட்டி மனப்பான்மையுடன் தான் ஆடுவார்கள். பழகிய முகங்கள் இருக்கலாம், கிரிக்கெட்டை விடவும் கூடுதலாக சிலருடன் பழகியிருக்கலாம், இது நடப்பு கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விஷயமே. முன்னெப்போதையும் விட இப்போது எதிரணி வீரர்கள் நம்மிடையே பிரசித்தமாக உள்ளனர்.

ஆனால் களத்தில் நட்பு இல்லை. பயிற்சி நாட்கள், உணவு மேஜை என்று நட்பு இருக்கலாம். மொயின் அலி, விராட் மற்றும் சாஹலுடன் ஆடியுள்ளார். அவர்கள் நன்றாகப் பழகியது எனக்குத் தெரியும். ஹர்திக் பாண்டியாவுடன் நான் ஆடியிருக்கிறேன். எனவே சிலபல வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளலாம்.

ஆனால் களத்தில் சில கணங்களில் டெஸ்ட் போட்டியின் உஷ்ணத்தில் அவையெல்லாம் மறக்கப்படும். நிச்சயம் போட்டி அதிகமிருக்கும். நட்புடன் பழகலாம் ஆனால் களத்தில் இறங்கும்போது அனைவருமே வெற்றிக்குத்தான் ஆடுவர். களத்துக்கு வெளியே சிறிது நட்பு இருக்கலாம்.

ஐபிஎல் ஆடியதில் நான் கற்றுக் கொண்டதில் சிறந்தது என்னவெனில் ஏன் அவர்கள் சிறந்த வீரர்களாக இருக்கிறார்கள் என்பதையே. அவர்கள் மனநிலையே வேறு. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மன நிலை. சீராக இதனைச் செய்வதற்கான முனைப்பு ஆகியவற்றை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

குறிப்பாக விராட் கோலி, மிகவும் ஆழமான திறமை கொண்ட வீரர், அவர் ஆடும்போது பார்த்ததை வைத்துக் கூறினால் ஆதிக்கம் செலுத்தும் அந்த மனநிலை நன்றாகத் தெரிந்தது. கோலி, ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரையும் இம்மாதிரி நான் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் சதத்தை எடுக்க ஆவலோடு இந்தியத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்” இவ்வாறு கூறினார் பட்லர்.

https://tamil.thehindu.com/sports/article24546244.ece

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்து அணி இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழக்க வாய்ப்பு- ஏன்? : ஓர் அலசல்

 

 

 
cook

இங்கிலாந்தின் தூண்கள்: குக், ஆண்டர்சன், ஜோ ரூட்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

இந்திய அணி இங்கிலாந்தில் சரியாக ஆடியதில்லை என்பது ஒருபுறமிருக்க சமீபமாக இங்கிலாந்து அணியே இங்கிலாந்தில் சரியாக ஆடாமல் தோல்விகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

2010-13 காலக்கட்டத்தில் தங்கள் நாட்டில் 26 டெஸ்ட் போட்டிகளில் 17-ல் வென்று டாப் ரேங்க் அணியாக இருந்தது, ஆனால் அதன் பிறகு டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 5 இடத்துக்குச் சென்றது. 2014 முதல் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் 1-0 என்று தோற்றது. இதனுடன் சேர்த்து 30 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் 10 போட்டிகளில் உதைவாங்கியுள்ளது. இதற்குச் சில காரணங்களைக் கூற முடியும், தொடக்க வீரர்கள் புதிய பந்து தேயும் வரை நிற்பதில்லை இதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சடுதியில் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

   
 
 
 
 

புதிய பந்தின் முதல் 15 ஓவர்களில் விக்கெட்டுகள் விழாமால் தொடக்க வீரர்கள் ஆடும்போதெல்லாம் பெரும்பாலும் 350 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக இருக்கும் போது இங்கிலாந்து வெற்றி பெறுகிறது, அல்லது குறைந்தது தோற்காமல் இருந்துள்ளது.

கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் விக்கெட் இழக்காமல் 15 ஓவர்களை பேட் செய்ததில்லை. தொடக்க வீரர்கள் சொதப்பி, மிடில் ஆர்டர் விரைவில் புதிய பந்தை எதிர்கொள்ள நேரிடும் போது வெற்றிபெறத் தேவையான, அல்லது பாதுகாப்பான 350 ரன்களை அது எட்ட முடியவில்லை.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 2012-ல் ஓய்வு பெற்ற பிறகே அலிஸ்டர் குக்குடன் நிறைய பேர் தொடக்கத்தில் இறங்கிவிட்டனர். அலிஸ்டர் குக்கே கூட மே.இ.தீவுகளுக்கு எதிராக அடித்த 243 ரன்களுக்குப் பிறகு சரியாக ஆடவில்லை. தொடங்குகிறார் ஆனால் கைவிட்டு விடுகிறார். அவரது பேட்டிங் உத்தியிலும் நிறைய மாற்றங்கள் செய்து கொண்டுள்ளார், இந்த இடத்தில் இந்திய அணி சரியாகத் திட்டமிட்டால் அலிஸ்டர் குக்கைக் காலி செய்யலாம், இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அலிஸ்டர் குக்கை முதலில் தூக்கி வெளியே அனுப்ப வேண்டும். இதற்கான உத்திகளை வகுக்க வேண்டும். அவர் சமீபமாக நிறைய எல்.பி.க்கள் ஆகிறார் இதையும் இந்திய பவுலர்கள் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்னொரு பெரிய வீரர் ஜோ ரூட், இவர் புதிய பந்தை எதிர்கொள்ள அடிக்கடி நேரிட்டாலும், போராடி அரைசதங்களை எடுத்து அணியை மீட்கிறார், ஆனால் அரைசதங்கள் சதமாவதில்லை, இந்த ஒரு இடத்தையும் இந்திய அணி கவனிக்க வேண்டும், ஜோ ரூட்டை மிஞ்சிப் போனால் அரைசதம் என்ற அளவோடு நிறுத்தி விட்டால் நிச்சயம் இந்திய அணி இங்கிலாந்தை 250 ரன்களுக்குக் குறுக்கலாம். அரைசதத்தை சதமாக மாற்றுவதில் இவருக்கு சமீபத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, ஆகவே இந்திய அணி இப்பகுதியையும் கவனம் செலுத்தி திட்டமிட வேண்டும்.

பந்துவீச்சில் மொயின் அலி 2014 தொடரில் இந்திய அணியைப் படுத்தி எடுத்தாலும், சமீபமாக அவரது பந்து வீச்சு சோபிக்கவில்லை, இவரை பம்மிப் பம்மி ஆடக்கூடாது, இந்திய அணியின் பழைய மிடில் ஆர்டரான திராவிட், சச்சின், லஷ்மண் போல் இவரை வெளுத்து வாங்க வேண்டும்.

woakesjpg

வோக்ஸ். | கெட்டி இமேஜஸ்.

 

அதே போல் இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீங்கலாக 3வது வேகப்பந்து வீச்சாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏகப்பட்ட 3வது பவுலர்கள் வந்தனர். கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ஸ்டீவ் ஃபின், ஜேக் பால், ஓவர்டன், ரோலண்ட் ஜோன்ஸ் என்று அனைவரும் அடியும் வாங்கினர் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர் இதில் ரோலண்ட் ஜோன்ஸ் காயத்தினால் போனது இங்கிலாந்துக்கு பின்னடைவு, இவர் மட்டுமல்ல இந்த 3வது பவுலர்கள் அனைவருமே காயத்தினால் அணியில் இடம்பெற முடியவில்லை.

3வது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட 4 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆட முடிந்ததில்லை. எனவே இந்த 3வது வேகப்பந்து வீச்சாளரைக் குறிவைத்து இந்திய பேட்ஸ்மென்கள் திட்டமிட்டால் இங்கிலாந்து ஆடிப்போய்விடும். ஆண்டர்சன், பிராட் ஓவர்களை நிதானமாக ஆடிப் பார்த்து ஓரங்கட்டி விட்டு 3வது வேகப்பந்து மற்றும் ஸ்பின்னர்களைத் தாக்கினால் இங்கிலாந்து நிச்சய ஆடிப்போய்விடும்.

மிகப்பெரிய பிரச்சினை இங்கிலாந்தின் பீல்டிங்; தவறவிடும் கேட்ச்கள்

rashid%20dropjpg

விராட் கோலிக்கு கேட்சை விடும் ஆதில் ரஷீத். | கே.ஆர்.தீபக்.

 

இங்கிலாந்தின் நிரந்தரப் பிரச்சினை அதன் பீல்டிங். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 ஆண்டுகளில் 25 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 71 கேட்ச்களை விட்டுள்ளது.

இதில் தங்கள் நாட்டில் விளையாடிய போட்டிகளில் விட்ட கேட்ச்கள் அதிகம் இவையெல்லாம் இங்கிலாந்தின் சமீபத்திய தோல்விக்குக் காரணங்கள் இதனை இந்தியா சரிவர புரிந்து கொண்டு இலக்கு நிர்ணயித்து, திட்டமிட்டு ஆடினால் இங்கிலாந்து தோற்பதைத் தவிர வேறு வழியில்லை. அதே வேளையில் இந்தத் தவறுகளை இந்திய அணியும் செய்யாமல் இருப்பது அவசியம்.

https://tamil.thehindu.com/sports/article24554038.ece

Share this post


Link to post
Share on other sites

தோற்ற கோபத்தில் மீண்டெழுந்து பாகிஸ்தானை வீழ்த்தியது போல் கோலி படையைக் காலி செய்க: இங்கிலாந்துக்கு மைக்கேல் வான் முழக்க ஆலோசனை

 

 
KOHLI-SHASTRI

படம். | ராய்ட்டர்ஸ்.

கோபமாகச் செயல்பட்டு விராட் கோலிக்கு சவால் அளியுங்கள் என்று இங்கிலாந்து அணிக்கு முழக்க ஆலோசனை வழங்கியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான்.

இது குறித்து அவர் கூறியதாவது:

 
 

ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெடிங்லீயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றது போல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபாவேசமாக ஆட வேண்டும். உங்கள் வீரர்களிடம் இப்படிக் கூறுங்கள்: ஹெடிங்லீயில் முதல் நாள் குறித்து என்ன நினைத்தீர்கள்?

சில வேளைகளில் அணி கூட்டத்தில் இப்படிச் செய்ய முடியாது. வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் இவ்வாறு உசுப்பேற்றி பேசலாம். ஒவ்வொரு வீரரிடம் போய், ‘லீட்ஸில் ஏன் இத்தனை தீவிரமுடன் இறங்கினீர்கள்?’ என்று கேட்க வேண்டும். உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷீத் விவகாரம் இதற்கு உதவும்.

இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது, அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் மனநிலையில் இதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

ஜோ ரூட் 16 டெஸ்ட்களில் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார், அவர் இதனைச் செய்திருக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் பார்முக்கு வந்தார், ஆனால் வேறொருவர் போல் பேட் செய்ய முயல்கிறார், அவர் தன்னை நம்ப வேண்டும். இந்திய பவுலர்களை களைப்படையச் செய்ய வேண்டும்.

vaughanjpg

மைக்கேல் வான். | ஏ.எப்.பி.

 

இது ஒரு கிரேட் சீரிஸ், பிட்ச்கள் அருமையாக இருக்கும். ஜோ ரூட் ஸ்பின் பந்துவீச்சை நன்றாக ஆடக்கூடியவர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைக் களைப்படையச் செய்ய வேண்டும், காரணம் அவர்கள் அவ்வளவு கட்டுக்கோப்பாக வீசக்கூடியவர்கள் கிடையாது.

அலிஸ்டர் குக் சீராக ஆட வேண்டும், ஒரு பெரிய ஸ்கோர் பிறகு குறைந்த ஸ்கோர்கள் வேலைக்கு ஆகாது

இங்கிலாந்து அணி 6 பவுலர்களுடன் இறங்கினால் அது அதிகம். என்னைப்பொறுத்தவரை பேட்டிங்கை வலுவாகவைத்துக் க்கொண்டு 5 சிறந்த பவுலர்களைத் தேர்வு செய்க. ரூட் 6வது பகுதி நேர வீச்சாளராக செயல்படட்டும்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரச்சினை பெரிய ரன் எண்ணிக்கையான 400-550 என்று எடுப்பதில்லை.

பிராட், ஆண்டர்சன், கோலி:

கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை உள்ளே நேராகக் கொண்டு வந்து அவரை அக்ராஸாக ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப்ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும் அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம். ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. காற்றில் பந்துகள் மூவ் ஆனால் ஆண்டர்சன், பிராட் இருவரும் அபாயகரமானவர்கள்” என்றார் மைக்கேல் வான்.

https://tamil.thehindu.com/sports/article24554646.ece

Share this post


Link to post
Share on other sites

மொயின் அலி அதிர்ச்சி நீக்கம்: ஆதில் ரஷீத் அணியில்; இங்கிலாந்து லெவன் அறிவிப்பு

 

 
moeen

ஆதில் ரஷீத், மொயின் அலி. | கெட்டி இமேஜஸ்.

புதனன்று இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் 11 வீரர்கள் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இந்த அணியில் ஆல்ரவுண்டர் மொயின் அலி நீக்கப்பட்டு, தேர்வில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஸ்பின்னுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்காது, தண்ணீர் விட்டு பிட்சை வளர்த்தெடுத்துள்ளது எட்ஜ்பாஸ்டன் மைதான நிர்வாகக் குழு, ஆனாலும் மொயின் அலியின் அனுபவத்துக்கு முன்னால் சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் தலைவைத்துப் படுக்காத ஆதில் ரஷீத்துக்கு இங்கிலாந்து அணி விளையாடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான ஆல்ரவுண்டர் சாம் கரன் வேகப்பந்து வீச்சு தெரிவாக அணியில் களமிறங்குகிறார்.

விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:

அலிஸ்டர் குக், ஜெனிங்ஸ், ரூட், மலான், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர், சாம் கரன், ஆதில் ரஷீத், பிராட், ஆண்டர்சன்.

https://tamil.thehindu.com/sports/article24565232.ece

Share this post


Link to post
Share on other sites

எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை: 1000-ஆவது டெஸ்டில் கால்பதிக்கிறது ஜோ ரூட் குழு

 

 
05abb634P1445342mrjpg

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற குறுகிய வடிவிலான தொடர்களில் இந்திய அணி டி 20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றன. இந்நிலையில் இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

 

மோசமான சுற்றுப்பயணாளர்கள் என்ற கருத்தை உடைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உள்ளூரில் சமீபகாலமாக கண்டுள்ள சரிவில் இருந்து மீளும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் இந்த டெஸ்ட் தொடரை அணுகுகின்றன. எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு 1000-ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் காலடி எடுத்து வைக்கும் முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து தட்டிச் செல்கிறது.

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து மண்ணில் கடந்த 2007-ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின்னர் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில், தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரை முறையே 4-0, 3-1 என இழந்திருந்தது. இம்முறையும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி காண்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பெற்ற 6 வெற்றிகளில் மூன்று 2002-ம் ஆண்டில் இருந்து கிடைத்தவைதான். 2002-ம் ஆண்டு லீட்ஸ் டெஸ்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றிருந்த போது, தற்போதைய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அணியில் இடம் பெற்றிருந்தார். இதேபோல் 2007-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி வெற்றி கண்ட போது தினேஷ் கார்த்திக் அணியில் ஒரு அங்கமாக இருந்தார்.

2011 மற்றும் 2014-ம் ஆண்டு தொடர்களில் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா விளையாடியிருந்தனர். மேலும் கடந்த முறை சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற 7 வீரர்கள் தற்போதைய அணியிலும் தொடர்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. இதனால் இந்திய அணி வெற்றிக்கான உகந்த அணியை தேர்வு செய்வது அவசியம். மேலும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அணித் தேர்வில் செய்த தவறுகளை இம்முறை தவிர்ப்பதிலும் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும்.

அந்த சுற்றுப்பயணத்தில் அஜிங்க்ய ரஹானேவைவிட சமீபத்திய பார்மை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு முன்னிலை கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிர்மறையான விஷயங்களே கிடைக்கப் பெற்றது. இம்முறை சிறந்த பார்மில் உள்ள கே.எல்.ராகுல் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.   கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கே.எல்.ராகுலை 3-வது தொடக்க வீரராகவே கருதி வருகின்றனர்.

எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராகுல் முதல் இன்னிங்ஸில் 58 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 36* ரன்களும் சேர்த்து கவனத்தை ஈர்த்திருந்தார். இதனை இந்திய அணி நிர்வாகம் கருத்தில் கொள்ளக்கூடும். அதேவேளையில் இதற்கு முரணாக தொடக்க வீரரான ஷிகர் தவணின் பார்மும், சேதேஷ்வர் புஜாராவின் பார்மும் அணியை கவலையடையச் செய்துள்ளது. பயிற்சி ஆட்டத்தில் ஷிகர் தவண் இரு இன்னிங்ஸையும் சேர்த்து வெறும் 4 பந்துகளை மட்டுமே சேர்த்த நிலையில் ரன்கள் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.

2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது நன்கு நகரும் டியூக் பந்துகளுக்கு எதிராக ரன்கள் சேர்க்கத் திணறிய இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவண், 3 டெஸ்ட் போட்டிகளில் 122 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அணியில் தனக்கான இடத்தை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதனால் தனது பேட்டிங் யுக்தியில் ஷிகர் தவண் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

இதேபோன்று புஜாராவும் தடுமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளார். கவுண்டி கிளப்பில் யார்க் ஷையர் அணிக்காக விளையாடிய அவர், 6 ஆட்டங்களில் ஒரு அரை சதத்தை கூட எட்டாத நிலையில் 14.33 சராசரியுடன் வெறும் 172 ரன்களை மட்டுமே சேர்த்தார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் கூட புஜாரா சிறப்பாக பேட் செய்யவில்லை. பெங்களூருவில் நடைபெற்ற அந்த டெஸ்டில் அவர் 35 ரன்களே எடுத்தார். மேலும் எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா முறையே 1 மற்றும் 23 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.

2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் புஜாரா 5 ஆட்டங்களில் 22.20 சராசரியுடன் 222 ரன்களே எடுத்தார். இது பலரது கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனெனில் இது விராட் கோலி சேர்த்த (134) ரன்களை விட சற்று அதிகமானதுதான். இம்முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமானால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்முக்கு திரும்புவது மிக அவசியம். அதேவேளையில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், முரளி விஜய் ஜோடியை இந்திய அணி நிர்வாகம் களமிறக்க முடிவு செய்தால் 3-வது இடத்தில் புஜாராவுக்கு பதிலாக கே.எல்.ராகுலை கொண்டு வருவது குறித்து சற்று ஆலோசிக்கலாம்.

ஆனால் புஜாராவை நீக்கும் முடிவை அணி நிர்வாகம் எடுக்குமா என்பது சந்தேகம்தான். ஒருவேளை கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அணி நிர்வாகம் நினைத்தால் முரளி விஜய் இடம்தான் காவு வாங்கப்படக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவு தான். அதேவேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி போட்டிகளில் விளையாடியதன் மூலம் இங்கிலாந்து தொடருக்கு சிறப்பான வகையில் தயாராகி உள்ளனர். இவர்களுடன் உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பர்மிங்ஹாமில் வறண்ட வானிலை மாறி தற்போது அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆடுகளம் ஈரப்பதத்துடன், புற்கள் நிறைந்தே காணப்படக்கூடும். குளிர்ந்த வானிலையும், காற்றில் காணப்படும் ஈரப்பதமும் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமான விஷயம் என்பதால் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அஸ்வினை களமிறக்குவதா? அல்லது குறுகிய வடிவிலான தொடர்களில் திறம்பட செயல்பட்ட குல்தீப் யாதவை களமிறக்குவதா? என்பதில் விராட் கோலிக்கு சற்று குழப்பம் ஏற்படக்கூடும்.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனினும் இங்கிலாந்து அணியின் சமீபகால பார்ம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்பது தற்போதைக்கு இந்திய அணிக்கு சாதகமான விஷயம். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

அதிலும் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இரு முறை எதிரணிகளால் (பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள்) தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தினர். இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பெரும்பாலும் கேப்டன் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், அலாஸ்டர் குக் ஆகியோரை நம்பியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இவர்களுடன் பேட்டிங்கில் கீட்டன் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜாஸ் பட்லர் ஆகியோரும் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸூம் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு ஆகியோர் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் கொடுக்க காத்திருக்கின்றனர். இவர்களுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேம் குர்ரனும் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் 18 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள அடில் ரஷித் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரஷித் களமிறங்குவதால் 2014-ம் ஆண்டு தொடரில் 19 விக்கெட்கள் கைப்பற்றிய மொயின் அலி தனது இடத்தை இழந்துள்ளார்

இது வரலாறு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதன்முறையாக 1932-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் மோதின. இதுவரை இரு அணிகளும் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து 43 வெற்றிகளைக் குவித்துள்ளது. 25-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. 49 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இங்கிலாந்தில் மட்டும் 57 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து 30-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியா 6 டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி கண்டது. 21 டெஸ்ட் போட்டிகள்  டிராவில் முடிவடைந்தன.

எட்ஜ்பாஸ்டன் ராசி

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மட்டும் இந்தியாவும், இங்கிலாந்தும் 6 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5-ல் இங்கிலாந்து வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இங்கிலாந்தும் எட்ஜ்பாஸ்டனும்

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  தனது 50-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து விளையாடுகிறது. 1902-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி இந்த மைதானத் தில்தான் விளையாடியது. இந்த மைதானத்தில் 27 டெஸ்ட் போட்டி களில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவையும் பெற்றுள்ளது.

1000-வது டெஸ்ட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 357 வெற்றிகளையும், 297 தோல்விகளையும்  பெற்றுள்ளது.   345 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

தோனியின் வீழ்ச்சிக்கு வித்திட்ட பயணம்

1971-ல் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது. இதன் பின்னர் 1986-ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்று சாதித்தது. இதைத் தொடர்ந்து 21 வருடங்களுக்குப்பிறகு 2007-ல் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

கடைசியாக 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என இழந்தது. அப்போது முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த போதும் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தோனியின் வீழ்ச்சிக்கு இந்தத் தொடர் பிரதான காரணமாக அமைந்தது

https://tamil.thehindu.com/sports/article24569253.ece

Share this post


Link to post
Share on other sites

டாஸ் வென்றது இங்கிலாந்து: இந்திய அணியில் என்ன மாற்றம்?

 

 

 
eng%20ind

இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோப்பையுடன் போஸ் கொடுத்த காட்சி   -  படம் உதவி: ஐசிசி ட்விட்டர்

பர்மிங்ஹாமில் தொடங்கியுள்ள இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

 

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு டிராவிட் தலைமையில் பெற்ற வெற்றிக்கு பின், கடந்த 2011, 2014-ம் ஆண்டுகளில் இன்னும் இந்திய அணி வெற்றி பெறவில்லை. ஆதலால், இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.

பர்மிங்ஹாமில் தொடங்கியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்துள்ளது. இந்திய அணியில் யாரை பெஞ்சில் அமரவைப் போகிறார்கள், யார் விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார். ஷிகார் தவண் அமர வைக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால், ஏனோ அவர் வாய்ப்பு பெற்றுள்ளார் எனத் தெரியவில்லை.

அதேபோல பந்து வீச்சில் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வின் மட்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இசாந்த் சர்மா.

இங்கிலாந்து அணி விவரம்

அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ், ஜோய் ரூட், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஆதில் ராஷித், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்ஸன்.

https://tamil.thehindu.com/sports/article24572246.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

“இது என்னுடைய கேட்ச்”: 6-வது ஓவரில் கேட்சை நழுவ ரஹானேவிடம் கோலி கோபம்: அஸ்வின் அசத்தல்

 

 

 
pho

அலிஸ்டார் குக் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினை பாராட்டும் கேப்டன் கோலி   -  படம் உதவி: ட்விட்டர்

 பர்மிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 6-வது ஓவரிலேயே இந்திய வீரர்கள் புரிதல் இல்லாமல் கேட்சை கோட்டைவிட்டுச் சொதப்பினர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

 

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. பர்மிங்ஹாமில் தொடங்கியுள்ள இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். உமேஷ் யாதவும், இசாந்த் சர்மாவும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். இருவரும் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்கோப்பாகவே பந்துவீசினார்கள்.

ஆனால், இங்கிலாந்தின் இரு இடது கை பேட்ஸ்மேன்களான குக், ஜென்னிங்ஸை திணறவைக்கும் அளவுக்கு உமேஷ் யாதவால் “இன் ஸ்விங்”குகளை வீச முடியவில்லை.

இதனால், இசாந்த் சர்மா பந்துவீச்சை மிகவும் சிரமத்துடன் எதிர்கொண்ட இருவரும், உமேஷ் யாதவ் பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்டனர். இதனால், உமேஷ் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார் குக்.

6-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். ஜென்னிங்ஸ் பந்தை எதிர்கொண்டார். 3-வது பந்தில் ஸ்லிப் திசையில் ஜென்னிங்ஸ் அடிக்க, அது கோலியின் கைகளைத் தேடி பந்து கேட்சுக்காகச் சென்றது

ஆனால், ரஹானே குறுக்கே பாய்ந்து, அந்த கேட்சை பிடிக்க முற்பட்டு நழுவவிட்டார்.

அப்போது விராட் கோலி, சற்று கோபத்துடன் இது என்னுடைய கேட்ச் (ஆங்கிலத்தில் இட்ஸ் மை கேட்ச்) என்று குரல் எழுப்பியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக ஒலித்தது.

ஸ்லிப் திசையில் இருக்கும் பீல்டர்கள் கேட்ச் வரும் போது புரிதலுடன், ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டு கேட்சுகளை பிடித்தால்தான் எளிதாக இருக்கும். அதைவிடுத்து 2-வது ஸ்லிப்பில் இருக்கும் வீரரின் 3-வது வீரர் பிடிக்க முற்பட்டால் எத்திரணிக்குத்தான் சாதகமாகும். இந்த கேட்சை பிடித்திருந்தால், 6-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.

aswinpng

அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய குக் : படம்உதவி பிசிசிஐ ட்விட்டர்

 

அதுமட்டுமல்லாமல், உமேஷ் யாதவுக்கு இடதுகை பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் அளவுக்கு இன்ஸ்விங் வீச முடியவில்லை. இதனால், வேறுவழியின்றி, அனுபவ வீரர் அஸ்வினை 7-வது ஓவரிலேயே கோலி பந்துவீச அழைத்தார்.

ஆனால், அஸ்வினை அழைத்தது சிறிதுகூட வீண்போகவில்லை. அஸ்வின்வீசிய 5-வது பந்தில் அலிஸ்டார் குக் 13 ரன்களில் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார். இங்கிலாந்து அணி 26 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

https://tamil.thehindu.com/sports/article24572884.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

 

1.png&h=42&w=42

243/6 * (73.4 ov)
 

 

 

இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் அஸ்வின்- வார்னர்-9, குக்-8

 
அ-அ+

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடது கை பந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்து வருகிறார். #Ashwin

 
 
 
 
இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் அஸ்வின்- வார்னர்-9, குக்-8
 
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்தது.

ஆனால், குல்தீப் யாதவை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பிடித்தார். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் சாதகமாக இல்லை. இதனால் அஸ்வினை 7-வது ஓவரிலேயே இந்தியா அறிமுகப்படுத்தியது. அஸ்வினும் சிறப்பாக பந்து வீசினார்.

9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் குக் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர் பந்தை எதிர்கொள்ள குக் மிகவும் திணறினார். இன்றைய போட்டியின் மூலம் 8 முறை குக்கை வீழ்த்தியுள்ளார்.

201808012030313713_1_Ashwin002-s._L_styvpf.jpg

அஸ்வினை எதிர்த்து குக் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 8 முறை குக்கை அஸ்வின் அவுட்டாக்கி அசத்தியுள்ளார். இரண்டு முறை போல்டு, 1 முறை ஸ்டம்பிங், 3 முறை விக்கெட் கீப்பர் கேட்ச், இரண்டு முறை பீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

வார்னர் 9 முறை அவுட்டாகி முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கோவன் 7 போட்டியில் 7 முறை ஆட்டமிழந்துள்ளார். டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், மோர்னே மோர்கல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 6 முறை ஆட்டமிழந்துள்ளனர்.

201808012030313713_2_Capture001-s._L_styvpf.jpg

இதில் பெரும்பாலானோர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/01203031/1181024/Ashwin-most-dismissed-Left-handed-Batsmen-warner-9.vpf

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஷமி, அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

 

 

 
ind

இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட் விக்கெட்டை வீழ்த்திய பின் மகிழ்சியில் இந்திய அணி வீரர்கள்   -  படம்உதவி: ட்விட்டர்

பர்மிங்ஹாமில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின், ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

73 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும், சாம் குர்ரன் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

     
 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். உமேஷ் யாதவும், இசாந்த் சர்மாவும் பந்துவீச்சைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

ஆனால், இங்கிலாந்தின் இரு இடது கை பேட்ஸ்மேன்களான குக், ஜென்னிங்ஸை திணறவைக்கும் அளவுக்கு உமேஷ் யாதவால் 'இன்ஸ்விங்'குகளை வீச முடியவில்லை.

இதனால், இசாந்த் சர்மா பந்துவீச்சை மிகவும் சிரமத்துடன் எதிர்கொண்ட இருவரும், உமேஷ் யாதவ் பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்டனர். இதனால், உமேஷ் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார் குக்.

6-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். ஜென்னிங்ஸ் பந்தை எதிர்கொண்டார். 3-வது பந்தில் ஸ்லிப் திசையில் ஜென்னிங்ஸ் அடிக்க, கோலியின் கைகளைத் தேடி பந்து கேட்சுக்காகச் சென்றது. ஆனால், ரஹானே குறுக்கே பாய்ந்து, அந்த கேட்சைப் பிடிக்க முற்பட்டு நழுவவிட்டார்.

உமேஷ் யாதவுக்கு இடதுகை பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் அளவுக்கு இன்ஸ்விங் வீச முடியவில்லை. இதனால், வேறு வழியின்றி, அனுபவ வீரர் அஸ்வினை 7-வது ஓவரிலேயே கோலி பந்துவீச அழைத்தார்.

aswinpng
 

ஆனால், அஸ்வினை அழைத்தது சிறிதுகூட வீண்போகவில்லை. அஸ்வின் வீசிய 5-வது பந்தில் அலிஸ்டார் குக் 13 ரன்களில் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார். இங்கிலாந்து அணி 26 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அடுத்து ஜென்னிங்ஸ், ரூட்டுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடர்ந்து காலூன்றும் நேரத்தில் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். ஷமி தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்களை மிரட்டும் வகையில் வீசினார்.

உணவு இடைவேளையின்போது 83 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜென்னிங்ஸ், ஷமி வேகத்தில் போல்டாகினார். இதை போல்டு என்று கூற முடியாது. ஷமி வீசிய 36-வது ஓவரின் முதல் பந்தை ஜென்னிங்ஸ் தடுத்து ஆட, அது பேட்டிலும், காலிலும் பட்டு ஸ்டெம்பில் விழுந்ததால் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

shamijpg

முகமது ஷமி

 

அடுத்து வந்த டேவிட் மாலனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷமி வீசிய 40-வது ஓவரில் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மான் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஷமியின் அருமையான இன்ஸ்விங்கில் கால் கேப்பில் வாங்கினாலும், மாலன் டிஆர்எஸ் முறையை நாடினார். ஆனால், டிஆர்எஸ் முறையில் எந்தவிதமான சந்தேகமும் இன்றி, எல்பிடபிள்யு என்று உறுதியானதால், நடுவர் அவுட் அளித்தார்.

இங்கிலாந்து அணி 100 ரன்களை 36-வது ஓவரில் எட்டியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோய் ரூட்டுடன், பேர்ஸ்டோ இணைந்தார். இருவரும் ஓரளவு நிதானமாக பேட் செய்து ரன்களை குவிக்கத் தொடங்கினார்கள்.

107 பந்துகளில் ரூட் அரை சதம் அடித்தார். பேர்ஸ்டோ ஓரளவுக்கு அடித்து ஆட, 72 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜோய் ரூட் அரைசதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார்.

இந்தச் சாதனையை எட்ட 5 ஆண்டுகள் 231 நாட்கள் எடுத்துக்கொண்டார் ரூட். ஆனால், அலிஸ்டார் குக் 5 ஆண்டுகள் 339 நாட்கள் எடுத்துக்கொண்டார்.

அணியின் எண்ணிக்கை 219 ரன்கள் எட்டியபோது, விராட் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்ட  ரூட் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

rootjpg

அரைசதம் அடித்த ஜோய் ரூட்

 

பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப் பின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பேர்ஸ்டோ 70 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஷமி வேகத்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துக் களமிறங்கிய ஜோஸ் பட்லர் ரன் ஏதும் சேர்க்காமல், அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்,

73 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும், சாம் குர்ரன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

https://tamil.thehindu.com/sports/article24575215.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

அஸ்வினின் 4 முக்கிய விக்கெட்டுகள், ஜோ ரூட்டைக் காலி செய்த கோலி: முடங்கிய இங்கிலாந்து

 

 

 
ashwin-kohli

முதல்நாள் நாயகர்கள். அஸ்வின், கோலி. | ஏ.பி.

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்தையும் சரியாகச் செய்ய இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.

அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக விராட் கோலி, தைரியமாக புஜாராவை உட்கார வைத்து ராகுலை அவருக்குப் பதில் தேர்வு செய்துள்ளார். அதே போல் இந்திய தொடக்க வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா நன்றாக வீச உமேஷ் யாதவ் சொதப்பினார் இதனையடுத்து 7வது ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டு வந்தார். பிறகு ஜோ ரூட் அருமையாக ஆடி 80 ரன்களில் சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அருமையாக விராட் கோலி அவரை ரன் அவுட் செய்து ஆக்ரோஷம் காட்டினார். ஜோ ரூட்டின் 11வது தொடர் அரைசதம். மீண்டும் சதமாக மாற்ற முடியவில்லை.

   
 

பந்தை மிட்விக்கெட்டில் அடித்தார் ஜோ ரூட், பந்தை விரட்டியது விராட் கோலி சறுக்கிக் கொண்டு பந்தை பிடித்த விராட் கோலி ரன்னர் முனைக்கு அடித்தார், நேரடியாக ஸ்டம்பைத் தாக்கியது, அருமையான சமயோசிதம், துல்லியமான த்ரோ. அதன் பிறகு ஒருநாள் போட்டியில் வென்ற பிறகு சதமடித்த ஜோ ரூட் அன்று செய்ததைப் போலவே விராட் கோலியும் வாயில் கையை வைத்து உஷ் கூறிவிட்டு சில சென்சார் வார்த்தைகளை உதிர்த்தார். ஜோ ரூட் ஆட்டமிழக்கும் தறுவாயில் 216/3 என்று இருந்த இங்கிலாந்து 285/9 என்று சரிவு கண்டது. இந்த ரன் அவுட் ஜானி பேர்ஸ்டோ (70)வுக்கும் இவருக்கும் இடையிலான 104 ரன் கூட்டணியை உடைத்தது. பேர்ஸ்டோதான் 2வது ரன்னுக்கு அழைத்தார். தவறான அழைப்பு, நேர் த்ரோவாக இல்லாவிட்டாலும் கூட ஜோ ரூட் தேறியிருப்பது கடினம்.

அலிஸ்டர் குக் 13 ரன்களில் இருந்த போது அஸ்வின் பந்துகளை வாசிக்க முடியாமல் வீழ்ந்தார், காற்றில் உள்ளே வந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியே திரும்பி குக் மட்டையின் வெளிவிளிம்பைக் கடந்து ஸ்டம்புகளைட் தொந்தரவு செய்தது, ஆஃப் ஸ்பின்னர்களின் கனவுப்பந்து அது.

cook%20bowledjpg

அஸ்வின் பந்தில் குக் பவுல்டு. | ராய்ட்டர்ஸ்.

 

கீட்டன் ஜெனிங்ஸ் கொடுத்த ஸ்லிப் கேட்ச் நேராக கோலியிடம் செல்ல குறுக்கே டைவ் அடித்து ரஹானே கேட்சை விட க் காரணமாக அமைந்தார். குக் ஆட்டமிழந்த பிறகு ஜோ ரூட், ஜெனிங்ஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 72 ரன்களைச் சேர்த்தனர். 42 ரன்களில் இருந்த ஜெனிங்ஸ், ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசிய பந்தை தன் காலுக்குக் கீழேயே தடுத்து ஆடினார். பந்து ஸ்டம்புக்கு உருண்டு சென்று கில்லியைத் தட்டிவிட்டது.

டேவிட் மலான் 8 ரன்களில் இருந்த போது மொகமது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தில் பின் காலில் வாங்கினார். கொஞ்சம் மேலாகப் பட்டது போல் தெரிந்தது, நடுவர் கையை உயர்த்தினார், ரிவியூ கேட்டார் மலான் பலனில்லை. ஷமி 2வது விக்கெட்டை வீழ்த்த 112/3 என்று இங்கிலாந்து அல்லாடியது.

அப்போது ஜோ ரூட், அபாய வீரர் ஜானி பேர்ஸ்டோ இணைந்தனர். ஷமியின் பந்து வீச்சில் வேகம் குறைந்தது, அஸ்வின் பந்துகளை பேர்ஸ்டோ நன்றாக ஆடினார். ரூட்டும், பேர்ஸ்டோவும் இஷ்டத்துக்கு ரன்களை எடுக்கத் தொடங்கினர். கோலி தடுப்பு களவியூகம் அமைத்தும் பயனில்லை. பேர்ஸ்டோ 9 பவுண்டரிகளுடன் 88 பந்துகளில் 70 என்று அபாயகரமாகத் திகழ்ந்தார். ஜோ ரூட் 156 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து கோலியின் அபார நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, சிறிது நேரத்துக்கெல்லாம் ஜானி பேர்ஸ்டோ 70 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை பின்னால் சென்று நேர் மட்டையில் ஆடுவதற்குப் பதிலாக குறுக்கு மட்டை வீசினார் பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது.

joejpg

ரூட் ரன் அவுட். | கோலி த்ரோ. | ராய்ட்டர்ஸ்.

 

அபாய வீரர் ஜோஸ் பட்லர் ரன் எடுப்பதற்கு முன்பே அஸ்வினின் நேர் பந்தை அக்ராசாக ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், இந்தப் பந்து அவ்வளவாகத் திரும்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் 21 ரன்கள் எடுத்து மெதுவே ஆடிக்கொண்டிருந்த போது மிடில் அண்ட் லெக்கில் வந்த அஸ்வின் பந்து ஒன்றை நன்றாக இவர் அடித்திருந்தால் பவுண்டரிக்குக் கூட சென்றிருக்கும் ஆனால் அரைகுறை மனதுடன் சற்றே கூடுதலாக எழும்பிய பந்தை என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோ செய்ய அது அஸ்வினிடமே கேட்ச் ஆனது. 216/3லிருந்து 243/7 என்று ஆனது, சாம் கரன் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க அடில் ரஷீத் 13 ரன்களில் இஷாந்தின் இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 1 ரன்னில் அஸ்வினின் ‘வேகப்பந்து’ வீச்சு போன்ற பந்துக்கு எல்.பி ஆகி வெளியேறினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் எடுக்காமல் களத்தில் உள்ளார்.

அஸ்வின் குக், ஸ்டோக்ஸ், பட்லர், பிராட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி 2 விக்கெட்டுகளையும் உமேஷ், இஷாந்த் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

https://tamil.thehindu.com/sports/article24578965.ece

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • சடுதியாக ஒரு பிரதேசத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக ஏற்படும் மேற்காவுகை (Convection)காரணமாக பெய்யும் மேற் காவுகை மழையில் ஒரு வகையே இந்த Hagel என்று அழைக்கப்படும் ஆலங்கட்டி மழை. பொதுவாக  வெப்ப நாட்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இவ்வாறான மேற்காவுகை மழை பெய்வது வழமை.  
  • ( இங்கேதான் உள்ளுறைந்த ஆணாதிக்க சிந்தனை தலை தூக்குகிறது..!  தான் எப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் எல்லாவிதத்திலும் சுத்த பத்துமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்களின் அப்பட்டமான சுயநல நினைப்பை என்னவென்று சொல்வது..?    கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! )   Empfehlung an Parimalam:    "அம்மாடி பரிமளம், உந்தாள் உமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ..?  கொப்பர் பார்க்கும் பெடியனையே கட்டிக்கொள்ளம்மா..! " 
  • ஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா   2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்திலும், அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன. கடைசி 180 ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளது. அதனுடன் கடைசி இடங்களில்  வடகொரியா, எரித்ரியா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.   http://www.puthinappalakai.net/2019/04/19/news/37409
  • அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும்,  போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance  என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket  என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்றும் சமுத்ர ஆகிய போர்க்கப்பல்களுடன் இணைந்து அமெரிக்க போர்க்கப்பல்கள், கரையோர மற்றும் ஆழ்கடல் பயிற்சிகள் என, இரண்டு கட்டங்களாக CARAT-2019 கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சியின் அடிப்படை நோக்கம், கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதாகும். சிறிய படகுகளை கையாளுதல்,  சுழியோடும் பயிற்சிகள், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சமூக நலன்புரி செயற்பாடுகள், விளையாட்டு, போன்றவற்றின் மூலம், இருதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. 103 மீற்றர் நீளம் கொண்ட USNS Millinocket என்ற, மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிவேக போக்குவரத்துக் கப்பல், 2362 தொன் எடையுள்ளது. Arleigh Burke வகையைச் சேர்ந்த நாசகாரி போர்க்கப்பலான, USS Spruance  ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அதி நவீன போர்க்கப்பலாகும். 160 மீற்றர் நீளமும் 9580 தொன் எடையும் கொண்ட இந்த நாசகாரியில் 260 அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளனர். http://www.puthinappalakai.net/2019/04/19/news/37415
  • கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். ”கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார். கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். சிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார்.  அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். உள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. பொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/04/19/news/37411