Sign in to follow this  
நவீனன்

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது

Recommended Posts

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது

NAAM THAMIZHARபடத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR Image captionசீமான்

சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நாம் தமிழார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யுனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஒன்பது பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் - சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்த நிலையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் பாரப்பட்டி அருகே உள்ள ஊமாங்காடு பகுதியில் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினர்.

அப்போது அங்கு வந்த மல்லூர் போலீசார், அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்து பேசக்கூடாது என்று கூறி அவரை கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது அங்கிருந்த விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 11 பேரை கைதுசெய்து அழைத்து சென்றனர். மல்லூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எட்டு வழிச்சாலை

அதேபோல் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தித்து பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட 11 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிருக்கு மதிப்பு தரும் அரசு இல்லை என பொதுமக்களிடம் கூறிய சீமான் , தலைவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு லட்சம் மரங்கள் நட்டதாக அரசு சொன்னாலும் தாங்கள் எந்த மரத்தையும் பார்க்கவில்லை என்றார்.

ஆக்கிரமிப்பு செய்யப்படும் இரண்டரை ஏக்கர் நிலங்களில் குறைந்தது 70 மரங்கள் இருக்கும் என்று பொதுமக்கள் தங்கள் குறைகளை நம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தங்கள் தரப்பு நியாங்களை எடுத்துரைத்த வண்ணம் இருந்தனர். அப்போது நடைபெற்ற இக்கைது நடவடிக்கையை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எட்டு வழிச்சாலை

"தங்களின் குறைகளை சீமானிடம் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக அமர்ந்து கருத்துகளை பரிமாறிக்கொண்டு இருக்கும் போது , மக்களை தள்ளிவிட்டு காவல்துறையினர் சீமானை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது எவ்விதத்தில் நியாயம்," என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

தங்களை பாதுகாக்கும் பொருட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகள் முன்வராதபட்சத்தில், மக்களின் நலன் கருதி பேசுபவர்களை பேசும்போதே ஒவ்வொருமுறையும் சுற்றிவளைத்து கைது செய்தததாக மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்கள், கட்சியின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்விதத்தில் நியாயம் கிடைக்கும், ஆளும் அரசு தங்கள் வாழ்க்கையை காப்பற்றி எங்களுக்கு நிலம் வழங்கும் என பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

https://www.bbc.com/tamil/india-44873770

Share this post


Link to post
Share on other sites

`போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!’ - சேலத்தில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஜாமீன்

 

சேலத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஜாமீன் வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்

சீமான்சேலம் டு சென்னை 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்பு நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய தொண்டர்கள் யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்ச்செல்வன், சிவக்குமார், தமிழரசன், மணி, ஆதிதீபக், அழகரசன் ஆகியோர் பாரப்பட்டி கூமாங்காடு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

 

 

அங்கு விரைந்து வந்த மல்லூர் காவல்துறையினர் சீமான் உட்பட 11 பேரை கைது செய்து மல்லூர் வெங்கடேஷ்வரா மண்டபத்தில் வைத்திருந்தார்கள். இரவு சீமான் உட்பட 11 பேர் மீது பொதுமக்களை திரட்டியது, பொது மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டது, அரசுக்கு எதிராக செயல்படுவது என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 2 பெண்களுக்கு தன் சொந்த ஜாமீனில் செல்ல அனுமதித்தார். மற்ற 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

 

 

இந்நிலையில் சீமானின் வழக்கறிஞர் சேலம் நீதிமன்றம் என் 6 மாஜிஸ்ட்ரேட் மோகன்ராம் முன்னிலையில் ஆஜராகி சீமானுக்கு தங்கதுரைவருகின்ற 22-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். அதை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் மோகன்ராம் காவல்துறை விசாரணைக்கு அழைக்கும்போது சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஜாமீன் வழங்க மாலையில் உத்தரவிட்டார். அதையடுத்து, நாளை காலை சீமான்  ஜாமீனில் வெளியே வர இருக்கிறார். இதனால், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடக்குத் தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை, ''அண்ணன் சீமான் மீதும் எங்க கட்சி தோழர்கள் மீதும் மல்லூர் காவல்துறை பொய் வழக்கு போட்டிருக்கிறது. இந்த அடக்கு முறைக்கு நாங்கள் ஒரு கனமும் அஞ்ச மாட்டோம். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது. எங்களை அலைக்கழிப்பதற்காகவே வழக்குகள் போட்டிருக்கிறார்கள். நீதிபதி இதை விசாரித்து, எங்க அண்ணனுக்கு ஜாமீன் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் அண்ணன் சீமான் விடுவிக்கப்படுவார்'' என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/131387-salem-court-grands-bail-to-seeman.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this