Sign in to follow this  
நவீனன்

யாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது!

Recommended Posts

யாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது!

 

 

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரையே, குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 48 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், கைதுசெய்யப்பட்டுள்ள ஆசிரியரை இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/யாழில்-மாணவிகள்-இருவர்-த/

Share this post


Link to post
Share on other sites

இப்படியானவர்கள் எந்த வேலையிலும் சேர முடியாது என்ற நிலை வரணும். மேலும் பாலியல் துஷ்பிரயோகங்கள் கடும் குற்றங்களாக இனங்காணப்பட்டு.. அதி உச்ச தண்டனைகள் வழங்கப்படுதல் அவசியம். இன்றேல்.. இக்குற்றங்களை கட்டுப்படுத்துவது சாதாரணமாக அமையாது. 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாலி­யல் குற்­றம் சாட்­டப்­பட்ட-ஆசி­ரி­ய­ருக்கு நீதிமன்று பிணை!!

 

 

பதின்ம வயது மாண­வி­கள் இரு­வரை பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கி­ னார் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட ஆசி­ரி­யர் நீதி­மன்­றால் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார்.

பாட­சா­லை­யின் அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­றி­ய­வர் மோச­டி­க­ளில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டார். அவ­ரது பணி நீக்­கத்­து­டன் இந்த ஆசி­ரி­ய­ரும் தொடர்­பு­பட்­டுள்­ளார் என்ற கார­ணத்­தைக் காட்­டியே இவர் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளார்.

சந்­தே­க­ந­ப­ரான ஆசி­ரி­யர் வன்­னிப் பகு­தி­யில் நீண்­ட­கா­லம் பணி­யாற்றி அங்­குள்ள மாண­வர்­க­ளின் கல்வி வளர்ச்­சிக்கு பங்­காற்­றி­ய­வர். இவர் ஒழுக்­க­மு­டை­ய­வர். நிர்­வாக ரீதி­யான பழி­வாங்­க­லுக்­குள்­ளான இவரை பிணை­யில் விடு­விக்­க­வேண்­டும் என்று சந்­தே­க­ந­ப­ரின் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி மன்­றில் விண்­ணப்பம் செய்­தார்.

 

வழக்கை தாக்­கல் செய்த யாழ்ப்­பாண சிறு­வர் பெண்­கள் பிரிவு பொலி­ஸா­ரும் சந்­தேக நப­ருக்­குப் பிணை வழங்­கு­வ­தற்கு ஆட்­சே­பனை தெரி­விக்­க­வில்லை.

இரு தரப்பு விண்­ணப்­பங்­க­ளை­யும் ஆராய்ந்த யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­த­ரன் சந்­தே­க­ந­பரை ஆள் பிணை­யில் விடு­வித்து உத்­த­ர­விட்­டார். யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றின் ஆசி­ரி­யர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

தரம் 7 இல் கற்­கும் மாண­வி­கள் இரு­வ­ருக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­தார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

யாழ்ப்­பாண மாவட்ட சிறு­வர் பாது­காப்பு பிரி­வி­ன­ரால் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் பதிவு செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ர­ணை­களை மேற்­கொண்ட யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் ஆசி­ரி­ய­ரைக் கைது செய்­த­னர்.

ஆசி­ரி­யர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நேற்று நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டார். விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நீதி­மன்று சந்­தே­க­ந­ப­ரைப் பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தது.

http://newuthayan.com/story/09/பாலி­யல்-குற்­றம்-சாட்­டப்­பட்ட-ஆசி­ரி­ய­ருக்கு-நீதிமன்று-பிணை.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this