Jump to content

உடல் எடையைக் குறைக்க நடவுங்கோ


Recommended Posts

உடல் எடையைக் குறைக்க நடவுங்கோ

உப்பினை குறைத்து சாப்பிடுங்கோ, விடிய எழும்பி நடவுங்கோ

பெரும்பாலானவர்கள் உடல் எடையைக் குறைக்க பெரும் முயற்சிகளில் ஈடுபடுலிறார்கள். ஆனால் சிம்பிளான மெதேட் ஒன்று இருக்கு ஒருதரும் அதை பின்பற்றுவதே இல்லை.

அதாவது உணவில் உப்பை மட்டும் குறைத்து தினமும் 2 கி.மீ தூரம் "ஸ்பீட் வாக்" நடப்பதின் மூலம்மாக 10 கிலோ எடை குறைந்த தோடல்லாமல் , மிகவும் இளமையான தோற்றத்தினை பெற்றிருக்கிறார்கள். நீங்களும் முயற்ச்சித்துப்பாருங்களேன்.

-தினசரி அரைமணி நேரம் வாக்கிங் போய் வந்தால் போதும். சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவை வெகு சீக்கிரம் கட்டுக்குள் வந்து விடும். மன இறுக்கமும் தளரும். அதுவும் அதிகாலை நேர வாக்கிங் ஒரு வித தியானம் போன்ற பலனைத்தரும்.

தொடரும்...

Link to comment
Share on other sites

முன்பெல்லாம் நம் வீட்டுப்பெரியவர்கள், குறிப்பாக பெண்கள் ஏகாதசி, சிவராத்திரி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என்று மாதத்தில் பல் நாட்கள் விரதம் இருந்து தம் சமய வாழ்க்கையினை தம் தேகாரோக்கிய நலம் கருதி, மனோபலத்தினை உயர்த்தபாடுபடுவார்கள். வெளிநாடு என்று வந்து விட்டு எல்லாத்தையும் விட்டு விட்டு அலட்சியமாக் இருக்கிறார்கள்.

அப்போ உபவாசம் என்றாலும் சுத்தப்பட்டினி இருந்து வீட்டை சும்மா இருக்காது, வீட்டு வேலைகளினை வழமை போல செய்வார்கள். இப்போதய தலைமுறையினர் ஒரு வேளை கொஞ்சம் லேட்டாக சாப்பாடு என்றாலே நடுக்கம் அடைந்து , விரதம் என்றாலே மயக்கம் அடைய பார்ப்பார்கள். அதோடு எப்ப பார்த்தாலும் ஏதோ ஒன்றை கொரித்தபடி இருப்பார்கள். எல்லாத்துக்கும் வேற பார்ட்டி.

இப்படி நாங்கள் எல்லாம் தின்று, திணித்து குஸியாக இருக்கும் போது வேலைப்பளுவில் திக்கித்திணரும் ஒன்றைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதே இல்லை. அதுதாங்க நம்மட வயிறு.

பொதுவாக நாம் வாயில் போடும் எந்த உணவும், பல், நாக்கு, உமிழ்நீர், என்று தொடங்கி எல்லா ஜீரண உறுப்புகளுக்கும் வெலை பார்க்க வைக்கிறது. இதில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச்சத்து, இனிப்புச்சத்து, ஸ்டார்ச் எல்லாம் சாப்பிட்டால் பாவமுங்க.

தேவைக்கு அதிகமா சாப்பிட்டா முதலில் வெயிட் ஏறும். வயிறு அதிகமாகி உடலும், மனசும் மந்தமாகும். நம்முடைய ஜீவரண உறுப்புகளுக்கு அதிகம் உனவினைத்திணித்தால் அவைகளுக்கு வேலை அதிகமாகும். அதிக உணவை செறிக்க அதிக எரிபொருள் சக்தி தேவைப்படும். இதனால் தான் சோர்வும் களைப்பும் வருகின்றன. மேலும் அதிகப்படியான் கழிவுப்பொருட்கள் சேர்ந்து போய் கக்கா வெளியேறுவதும் கஸ்டமாகி போய் அதன் பின்பு அது மூல வியதியாக்கி விடும்.

இதனால் ஜீவரண உறுப்புகளுக்கு அவ்வப்போது ஓய்வு தேவை.வேலை செய்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு தானே? ஐஸ் கட்டி பிடிபட்ட பிறிஜ்ஜினை துப்பரவு செய்வதில்லையா? ஸ்ரோர் ரூமினை அப்பப்ப சுத்தம் செய்கிறோம் இல்லையா?ந்வ்

இந்த விலங்கினங்களை பாருங்கள். உடம்பு சரியில்லையென்றால் சுத்தமாக பட்டினி கிடக்கும். 'லங்கணம் பரம் ஔசதம்" பட்டினியை விட சிறந்த மருந்து இல்லை. சில சமயம் பூணை, நாய் எல்லாம் புல்லைத்திண்டு விட்டு வாந்தி எடுப்பதைக்கவனிக்கிறோம். அஜீரணமான உணவை வாந்தி எடுத்து ஓய்வு தருவதற்காக இயற்கை கொடுத்த அறிவு அதுகளுக்கு.

எங்களுக்கு எங்க போச்சு இந்த அறிவு. நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு மருந்தெண்டு விசத்தினை வேண்டிக்குடிக்கிறோம்.

போக போக அவை உங்களுக்கு கேடுதல் செய்யும் எண்ணா விசம்தாங்க.ஆக்வே ரொம்ப பிஸியாகிவிட்ட இநதக்காலத்திலே சுத்தப்பட்டினி இருப்பது நடவாத காரீயம் என்று நீங்க நினைக்கிறது எனக்கு விளங்குதுங்க. ஏதாவது சாப்பிட்டே ஆகவேணும்.சரி சாப்பிட்டுதுளையுங்க, அதே சமயம் வயிற்றுக்கு அதிக வேலையும் கொடுக்காமலும், உள்ளேயிருக்கும் நஞ்சுப்பொருள்களையும் அகற்ற வேண்டும். என்ன வழி.

அதுதான் இரண்டு நாட்களுக்கு கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்ட டயற் பிளான். இதன் அடிப்படைத்தத்துவம்- பச்சைக்காய்கறிகள், பழங்கள், உதவியுடன் உடலில் அதிகப்படியாகச் சேர்ந்துவிட்ட நஞ்சுப்பொருட்களை வெளியேற்றுவது.

உடலுறுப்புகள் சுத்தமாவதோடு முயற்ச்சி,உழைப்பு நேர்மையாக இருந்தால் 3 கிலோ ஒரு கிழமையில் குறைக்கலாம். பட்டினி இருக்கத்தேவை இல்லை. நல்லா கண்டதையும் சாப்பிடுங்கோ, குடியுங்கோ அனா கடைசி இரண்டு நாளுமிதை கட்டாயம் கடைப்பிடித்தால். இந்த உலகம் உங்கள் கைகளில்.

இப்பசொன்னா பிரகு வாசிச்சுப்போட்டு என்னை மறந்து விடுவீயாள் பிரகு இங்கால வரமாட்டீயள் அதனால பிறகு

சொல்லிக்கிறன். :D

தொடரும்.

Link to comment
Share on other sites

இப்பசொன்னா பிரகு வாசிச்சுப்போட்டு என்னை மறந்து விடுவீயாள் பிரகு இங்கால வரமாட்டீயள் அதனால பிறகு

சொல்லிக்கிறன். :lol:

தொடரும்.

அப்ப முன் ஜாக்கிரதையா தான் இருக்கிறீங்கள்

:o:o

Link to comment
Share on other sites

சிவாஜி படமண்ணா எவ்வளவு காலம் வெயிற்பண்ணுற உங்களுக்கு காசு செலவு ஒழிய உங்களுக்கு ஏதேம் பலன் கிடைக்குமா? இல்லை ஆனா இரண்டு வருடங்களாவது இருக்கிறீர்கள். ஆகவே வெயிற்பண்ணினா தான் எதிலையும் திரில் விட்டு ரஜினி உங்களுக்கு அல்லவா தாரார்.

அப்படி இல்லையிங்க நான் என் கைகளுக்கு கட்டுப்போட்டு என்னை ஒரு பிசியான் ஆளா இதில் வைக்கிறதுக்காக கனக்க தலைப்பு தொடங்கி விட்டிருக்கிறேன். எப்படியோ என் நேரத்தினை மிச்சம் பிடித்து செய்ய பார்ப்பன். சும்மா அங்கால கால் வைத்து அரசியல் கதைக்காம இருக்கிறதுக்கு எனக்கே நான் போட்ட பூட்டு.

இன்றிரவு மீண்டும் தொடரும்.

Link to comment
Share on other sites

ஸ்பெஸல் டயட் தேவையான் பொருட்கள். வேண்டி வையுங்கள். எனது மற்றய ஆக்கங்கள் எல்லாம் ஒரு சந்தியில் வரும் போது தான் இதனை சொல்வது சிறப்பாக இருக்கும் என்று நினைத்து இதை ஆமை வேகத்தில் நகர்த்துகிறேன்.

இது உடம்பினை காக்க:

1. எலுமிச்சை சாறு, காரட், உள்ளி, கேல்பல் டீ பக்கட்

இவை கல்லீரலில் சேர்ந்திருக்கும் நச்சௌப்பொருள்களை, பித்த நீர் இவற்றை வெளியில் கொண்டு வர உபயோகிக்கப்போகின்றோம்.

2. தேன்

உடலின் தசைகளை ஈரப்பத்தில் வைத்திருக்க உதவப்போகிறது.

3. தண்ணீர்

உடல் ஊத முக்கிய காரணமாக காரணமான கெட்ட நீரையும் அதிகப்படியான உப்பினையும் வெளியேற்றப்போகிரது.

4. காரட், வெள்ளரி, சீலரி, பார்சலி கீரை, ஏலப்பொடி

சிறுநீரகத்தினை வேகமாக இயக்கி சிறுநீரை வெளியேற்றுவது, இயற்கையான் கார்போகைதரேட்டை தருவது, குடல் உள் சுவரையும், நரம்பு மண்டலத்தினையும் காரச் சத்தால் பலமாக்க பயன்பட போகிறது.

5. ஏலப்பொடி, உள்ளி, கேர்பல் டீ

குடலில் உள்ள வாயுவினை வெளியேற்றியும், ஜீரண சக்தியினையும் அதிகரிப்பது.

6. லெட்யூஸ் கீரை, மற்றய எல்லா காய்கறிகள், புரோகோலி, முளைக்கீரை, குடமிளகாய்

நிறைய நார்ச்சத்து இருப்பதால், சீரணத்துக்கு உதவி, மலச்சிக்கல் நீங்க உதவுகிறது.( வானவில் கவனிக்க உமக்கு கக்கா போவதில்லை ஆகவே தான் சீண்டு பண்ணிக்கொண்டு திரியிறீர்)

7. தக்காளி, வெள்ளரி

நிறைய நீர் இருப்பதால் ரத்த ஓட்டத்தினை சீர் செய்து உடல் உஸ்னத்தினை குறைக்கிறது.

8. ஆப்பிள், பிசேஸ், அன்னாசி

நிறைய பெக்டீன் இருப்பதால் ஒரு பசை போல குடலிலுள்ள நஞ்சுப்பொருள்களினை ஒற்றி வெளியேற்றுகிரது.( சிகரட் பிடிப்பவர்கள், தண்ணி அடிப்பவர்கள் இதனை கட்டாயம் சாப்பிட வேண்டும்)

9. தயிர்

உயிருள்ள நல்ல பக்றீரியாக்களினை குடலில் உள்ள அமிலத்தை சமன் செய்து சீரணத்துக்கு உதவுகிறது.

10. உள்ளி

கொலஸ்ட்ராலைக்குறைக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.