Sign in to follow this  
நவீனன்

இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் ஜுலை நினைவுகள்!

Recommended Posts

இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் ஜுலை நினைவுகள்!

 
Black-July-1983-VNS500.jpg

83 ஜுலை இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை என்றோ கூற முடியாது. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஓர் இன அழிப்பு. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்தும் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கிருந்த பொருளாதாரப் பலத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு.

அதில் அப்போதிருந்த அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வன்முறைகளிற்கு முன் பின்னாக அப்போதைய அரசுத்தலைவர் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் தாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்புத் தருபவைகளாக இருக்கவில்லை. அதற்கு முன்னரும் தென்னிலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அதுதான் பெரிய அழிவு.

அது மட்டுமல்ல இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் வெளியாரின் நேரடித் தலையீட்டிற்கு அது வாசலைத் திறந்து விட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் 2009 மேயைப் போலவே 83 ஜுலையும் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் திருப்பகரமான மாதமாகும்.

83 ஜுலை பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவது அது இலங்கைத்தீவு ஒரு பல்லினத்தன்மை மிக்க நாடாக மேலெழுவதில் தோல்வி அடைந்து விட்டதை நிரூபித்தது. வன்முறைகளிற்கு முன் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்களிலும் அது வெளிப்படையாகத் தெரிந்தது. இரண்டாவது இலங்கைத் தீவை அது அனைத்துலக அளவில் அம்பலப்படுத்தியது. அவமானப்படுத்தியது.

மூன்றாவது தமிழ் புலப்பெயர்ச்சியின் இரண்டாவது பேரலையையை அது தொடக்கி வைத்தது. தமிழ் பெரு வணிகர்களும் உயர் குழாமும் இலங்கைத் தீவிற்கு வெளியே பாதுகாப்பைத் தேடும் ஒரு சூழலை ஏற்படுத்தியது. ஐந்தாவது ஆயுதப் போராட்டத்திற்கான ஆட்சேர்ப்புத் தளத்தை திடீரென்று பெருப்பித்தது. அதனால் ஆயுதப் போராட்டம் திடீரென்று வீங்கியது. ஆறாவது இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கு வாசலைத் திறந்து விட்டது.

இதில் கடைசியாகக் கூறப்பட்ட விளைவு. அதாவது இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கு அது வாசலைத் திறந்து விட்டது என்பது இப்போதுள்ள அரசியற் சூழலில் ஆழமாக வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்போதிருந்த பனிப்போர்ச் சூழலில் இலங்கை அரசாங்கம் மேற்கிற்கு விசுவாசமாகக் காணப்பட்டது. அதே சமயம் பிராந்தியப் பேரசாகிய இந்தியா, சோவியத் யூனியனுக்கு விசுவாசமாகக் காணப்பட்டது. ஒரு பிராந்தியப் பேரரசை மீறி அதன் தெற்கு மூலையில் ஒரு தண்ணீர்த்துளி அளவில் காணப்பட்ட ஒரு சிறிய தீவு அமெரிக்காவை ஆதரித்தது. இதனால் பிராந்திய மட்டத்தில் அது பனிப்போரை ஊக்குவித்தது.

ஜயவர்த்தனா அரசாங்கத்தை பணிய வைப்பதற்காக தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை இந்தியா கையில் எடுத்தது. ஜுலை இன அழிப்பு அதற்கொரு சாட்டாக அமைந்தது. எனவே பேரரசுகளின் பனிப்போரை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நிஜப் போராக முன்னெடுத்தனர். இந்த நிஜப் போர் இன அழிப்பை மேலும் புதிய கட்டங்களுக்கு விஸ்தரித்தது. அதன் உச்சக்கட்டமே நந்திக் கடற்கரையில் இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையை அரங்கேற்றியது.

ஜுலை 83ற்காக மனம் வருந்திய சில சிங்களப் படைப்பாளிகளும், புத்திஜீவிகளும் உண்டு. ஆனால் பொறுப்பு மிக்க எந்தவோர் அரசியல்வாதியும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை. ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்று வரையிலும் யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஜுலை 83ற்காக மன்னிப்புக் கேட்பது என்பது பல்லினத் தன்மை மிக்க ஓர் இலங்கைத் தீவை கட்டியெழுப்பத் தவறியமைக்காக மன்னிப்பு கேட்பதுதான்.

ஆனால் அவ்வாறு மன்னிப்புக் கேட்பதற்குத் தேவையான குற்ற உணர்ச்சியை சிங்கள அரசியற்பரப்பில் காண முடியவில்லை. இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தத்தால் அப்படியொரு குற்றவுணர்ச்சியை தோற்றுவிக்க முடியவில்லை. இலங்கைத் தீவு தன்னை ஒரு தேரவாத பௌத்த நாடாக பெருமையோடு காட்டிக்கொள்கிறது. தனது எல்லா ஒலிபரப்புக்களையும், ஒளிபரப்புக்களையும் தொடங்கும் பொழுது மத அனுஸ்டானங்களோடேயே தொடங்குகிறது. இலவசக் கல்வியை இப்பொழுதும் கைவிடவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால் இலங்கைத் தீவின் பௌத்தமும், இலவசக் கல்வியும் ஓர் இனப்படுகொலையைத் தான் உற்பத்தி செய்தனவா? இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் இலவசக் கல்வி முறைமையானது தோற்றுவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?

சிங்களப் பொது உளவியலில் அப்படியொரு குற்றவுணர்ச்சி தோன்றியிருந்திருந்திருந்தால் 2009ம் ஆண்டு மே மாதம் நாற்பதினாயிரத்திற்கும் அறுபதினாயிரத்திற்கும் இடைப்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்படும் ஒரு நிலை தோன்றியிருக்காது. அந்த வெற்றியை பாற்சோறு பொங்கி கொண்டாடும் ஒரு நிலமை தோன்றியிருக்காது. 83 ஜுலையிலிருந்து பாடங்களைக் கற்றிருந்திருந்தால் 2009 மே இடம்பெற்றிருக்காது. 2009 மேயிலிருந்து பாடங்களைக் கற்றிருந்திருந்தால் சில மாதங்களுக்கு முன்பு அம்பாறையில், திகனவில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்திருக்காது. அதாவது இறந்த காலத்திலிருந்து இலங்கைத் தீவு பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.

83 ஜுலை இன அழிப்பின் போது தமிழ் மக்களின் பொருளாதாரம் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது. ஆனால் அதனால் தமிழ் மக்கள் துவண்டு வீழ்ந்து விடவில்லை. கொழும்பில் அவர்களுடைய தொழிற் துறைகளும் முதலீடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவாக அவர்கள் உலகம் முழுதும் பரந்து போனார்கள். ரூபாய்களால் சிந்தித்த முதலாளிகள் இப்பொழுது டொலர்களால் சிந்திக்கும் கோப்பரேற் பெரு முதலாளிகளாக மாறி வருகிறார்கள். தமிழ் டயஸ்பொறாவிற்குள் தோற்றம் பெற்றுள்ள தமிழ்க் கோப்பரேற் நிறுவனங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பெருநகரங்களில் தம்மைப் பலமாக ஸ்தாபித்து வருகின்றன.

அது மட்டுமல்ல. கொழும்பில் வங்குறோத்து நிலையை அடைந்த சிங்களப் பெரு நிறுவனங்களையும் அவை விலைக்கு வாங்க முற்படுகின்றன. அது மட்டுமல்ல எந்தக் கொழும்பு மாநகரிலிருந்து தமிழ் மக்களை அகதிகளாக்கி துரத்த முற்பட்டார்களோ அதே கொழும்பு மாநகரில் தமிழ் பெரு நிறுவனங்கள் காணிகளை வாங்கி அடுக்கு மாடிகளைக் கட்டி வருகின்றன.

35 ஆண்டுகளுக்கு முன்பு எந்தத் தமிழ்ப் பொருளாதாரத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டதோ அதே தமிழ்ப் பொருளாதாரம் உலகம் முழுவதும் பரந்து பெரு வணிக நிறுவனங்களாக எழுச்சி பெற்று வருகிறது. அதாவது 83 ஜுலை இனஅழிப்பிற்குப் பின்னாலிருந்த அந்தப் பொருளாதாரத் திட்டம் வெற்றி பெறவில்லை. அது தமிழ்ப் பொருளாதாரத்தை உலகப் பரப்பிற்கு உயர்த்தி விட்டிருக்கிறது. ஜுலை 83 ஏற்படுத்திய பொருளாதார பின்விளைவுகள் இவை. அவ்வாறே 2009 மேயும் அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

83 ஜுலைக்கும் 2009 மேக்கும் ஓர் அடிப்படையான ஒற்றுமையுண்டு. 83 ஜுலையானது இந்தியத் தலையீட்டிற்கு வழிவகுத்தது. 2009 மேயானது சீன, மேற்கத்தைய, இந்தியத் தலையீட்டிற்கு வழிவகுத்திருக்கிறது. இந்திய அமைதிப் படையையும் புலிகள் இயக்கத்தையும் ஜயவர்த்தன மோத விட்டார். அதன் மூலம் இந்தியத் தலையீட்டை வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக அவர் நம்பியிருக்கக்கூடும். ஆனால் அதற்குப் பின்னரும் யுத்தம் தொடர்ந்தது. புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்தியாவும் உட்பட உலகப் பேரரசுகள் எல்லாவற்றையும் இணைத்து மகிந்த வெற்றி பெற்றார். தமிழ் மக்களுக்கு எதிராக முழு உலகத்தையும் ஓரணியில் திரட்டியதால் பெற்ற வெற்றி அதுவென்று அவர் இறுமாந்திருக்கக்கூடும்.

ஆனால் அந்த வெற்றியே அவருக்கு பொறியாக மாறியது. யுத்த வெற்றி வாதத்தின் மீது அவர் கட்டியெழுப்பிய அரசாட்சியை அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து கவிழ்த்தன. அதற்கு தமிழ் மக்களையே மறுபடியும் கருவிகளாகக் கையாண்டன. 2009 மே மாதம் நிகழ்ந்த படுகொலைகளை வைத்து ராஜபக்சக்களை மேற்கு நாடுகள் சுற்றிவளைக்க முற்படுகின்றன. 83 ஜுலை மாதம் நிகழ்ந்த அதே நாடகம் புதிய நடிகர்களோடு மறுபடியும் மேடையேற்றப்படுகிறது. தமிழ் மக்களைக் கருவிகளாகக் கையாண்டு ஐ.நாவும், மேற்கு நாடுகளும் மகிந்தவை மிரட்டுகின்றன.

2009 மே மாதம் பெற்ற வெற்றியை இறுதி வெற்றி என்று பெரும்பாலான சிங்களத் தலைவர்களும் கருத்துருவாக்கிகளும் மகா சங்கத்தினரும் நம்புவதாகத் தெரிகிறது. அந்த வெற்றி மூலம் இலங்கைத் தீவின் இறைமை பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்த பின்னரும் சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதைத்தான் ராஜபக்சக்களின் ஆட்சி நிரூபித்தது. தமிழ் மக்களைத் தோற்கடித்ததன் மூலம் இச் சிறிய தீவின் இறைமை பாதுகாக்கப்படவில்லை.

அது பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பமாக மாறிவிட்டது என்பதனை 2015 ஜனவரியில் நடந்த ஆட்சி மாற்றம் நிரூபித்தது. அதிலிருந்து தொடங்கி இன்று வரையிலும் ஐ.நாவும், மேற்கு நாடுகளும், இந்தியாவும் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கைத் தீவை பங்கு பிரிக்க முயற்சிக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம் யாருக்கு? எண்ணெய்க்குதங்கள் யாருக்கு? மத்தள விமான நிலையம் யாருக்கு? பலாலி விமான நிலையம் யாருக்கு? என்று இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமது கால்களை ஊன்றுவதற்காக எல்லாப் பேரரசுகளும் இச்சிறிய தீவின் மீது வட்டமிடுகின்றன.

83 ஜுலைக்குப் பின்னிருந்து பேரரசுகளின் பனிப்போரை நிஜப்போராக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நடத்தினார்கள். இப்பொழுதும் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பேரரசுகளின் மோதல் களத்தின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களே பொம்மைகளாக ஆட்டப்படுகிறார்கள். இதுதானா 2009 மே மாதம் பெற்ற வெற்றி?

நிச்சயமாக இல்லை. இதற்குப் பெயர் இறைமை அல்ல. அண்மையில் விடை பெற்றுச் சென்ற அமெரிக்கத் தூதுவர் அடுத்த ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதனை மறைமுகமாகத் தீர்மானிப்பதற்குப் பெயர் இறைமையா? நியூயோர்க் ரைம்ஸ் கூறுவது போல இலங்கைத்தீவின் தேர்தல் களத்தில் சீனா தனது பல கோடிகளை முதலீடு செய்வதற்குப் பெயர் இறைமையா? அல்லது இச்சிறிய தீவை பல்லினத் தன்மை மிக்கதாகக் கட்டியெழுப்புவதன் மூலம் பாதுகாக்கப்படும் அந்தப் புனிதமான பேறுதான் இறைமையா?

சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இச்சிறிய தீவின் சக நிர்மாணிகள் என்பதனை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கிடையே இச்சிறிய தீவைப் பங்கிடும் பொழுதே இலங்கைத் தீவின் இறைமையானது அதன் முழு அர்த்தத்தைப் பெறுகிறது. மாறாக தமிழ் மக்களை நசுக்குவதற்காக வெளிச் சக்திகளின் உதவிகளைப் பெறும் பொழுதும் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோத விடும் பொழுதும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறி வைத்துத் தாக்கும் பொழுதும் இலங்கைத் தீவின் இறைமையானது வெளிச்சக்திகளால் பங்கிடப்படும் ஓர் அப்பமாக மாறுகிறது. 83 ஜுலையின் விளைவாக இந்தியா உள் நுழைந்தது.

2009 மேயின் விளைவாக முதலில் சீனா உள்நுழைந்தது. அதன் விளைவாக இப்பொழுது அமெரிக்காவும், இந்தியாவும் உள்நுழைந்துள்ளன. தமிழ் மக்களைத் தோற்கடிக்க வேண்டும், அதற்கு எந்தப் பிசாசோடும் கூட்டுச் சேரத் தயார் என்று சிங்களத் தலைவர்கள் சிந்திக்கும் வரையிலும் இலங்கைத்தீவு ஓர் இறைமையுள்ள தீவாக இருக்கவே முடியாது.

-நிலாந்தன்-

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

Share this post


Link to post
Share on other sites

தமி­ழர் வாழ்­வில்- குரு­தித்­து­யர் படிந்த கறுப்பு ஜூலை இன்று!!

Share this post


Link to post
Share on other sites

படித்து பாஸ் பண்ணினால் தாங்களும் அறிவாளிகள் எனும் மமதை கூட்டம் இல்லாமல் போகும்மட்டும் தீவு அழிவை நோக்கியே இருக்கும் .

Share this post


Link to post
Share on other sites
கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?
 

“....(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த நாட்டின் கட்டமைப்புக்குள் சக பிரஜைகளாக (நாங்கள்), பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது, மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பதிலாக, தமிழர்களாகிய நாங்கள், மற்றவர்களின் தயாள குணத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இது, ஒரு நாடு தன்னுடைய பிரஜைகளின் மீது செலுத்தும் மிகப்பெரிய அவமானமாகும்...” இவ்வாறு, கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குள் அகப்பட்டுத் தப்பிய எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்.   

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ‘கலவரங்கள்’ எவையும் உண்மையிலேயே கலவரங்கள் என்கிற வரையறைகளுக்குள் அடக்க முடியாதவை. மாறாக, ‘திட்டமிட்ட அரச வன்முறைகள்’ என்கிற வடிவத்துக்குள் வருபவை.   

1956 தொடக்கம், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கண்டி, திகன வன்முறைகள் வரையில், அனைத்து வன்முறைகளும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்டவை. அதுபோலவே, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகளும் அரச தலையீட்டுடன் நடாத்தி முடிக்கப்பட்டவை.   

இரண்டு குழுக்களுக்கிடையிலோ, சமூகங்களுக்கிடையிலோ எழுந்த முறுகல்களின் வழி, ஏற்பட்டிருந்தால் கலவரம் என்கிற அடையாளத்தைக் கொடுக்கலாம். ஆனால், இங்கு, திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி, குண்டர்களையும் ஏவல் படைகளையும் கொண்டு, வன்முறைகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.  

 மஹிந்த காலத்து அளுத்கம- பேருவளை வன்முறைகளும், அண்மைய நல்லாட்சி காலத்து திகன வன்முறைகளும் அதன் வடிவங்களே.   

இலங்கை அரசாங்கமும், அதன் பாதுகாப்புத் தரப்பும் செய்த ஒவ்வொரு திட்டமிட்ட வன்முறைகளுக்குப் பின்னாலும், பேரினவாத- இன அழிப்புச் சிந்தனை இருந்தது. சுதந்திர இலங்கையில், பௌத்த சிங்களப் பேரினவாதம் கோலோச்ச ஆரம்பித்தது முதல், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட ஆக்கிரமிப்பும் அழிப்பும் வலுப்பெற்றன.   

அதன், முதல் கட்டமாக ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தினூடாக, அரச சேவையிலிருந்த தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். அதன்பின்னரான ஒவ்வொரு கட்டத்திலும், தமிழ் மக்களின் நிலம், கல்வி, பொருளாதாரம் என்கிற அடிப்படைகள் இலக்கு வைத்துத் தகர்க்கப்பட்டன.   

2009களுக்குப் பின்னரும் கூட, நில ஆக்கிரமிப்பு என்பது, திட்டமிட்ட வழிகளில் வடக்கு, கிழக்கு பூராவும் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவ முகாம்களாகவும் பௌத்த விகாரைகளாகவும் தொல்லியல் திணைக்களத்தின் வடிவத்திலும் ஆக்கிரமிப்பின் கூறுகள் நீள்கின்றன.   

கறுப்பு ஜூலை வன்முறைகளின் 35ஆவது ஆண்டு நிறைவு கடந்த திங்கட்கிழமை (23) நினைவு கூரப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுதான், ஜூலை வன்முறைகளுக்கான காரணம், என்கிற உணர்வு நிலையொன்று, இன்னமும் தென்னிலங்கை மக்களிடம் தக்க வைக்கப்படுகின்றது. அதுபோல, விடுதலைப் புலிகளின் உருவாக்கம்தான், இன முரண்பாடுகளுக்கான காரணம் என்று திரும்பத் திரும்ப போதிக்கப்படுகின்றது.   

2009 மே 18ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அதையே தெரிவித்திருந்தார்.   

உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதை, தென்னிலங்கை எப்போதுமே தவிர்த்து வந்திருக்கின்றது. மாறாக, விளைவுகள் பற்றியே பேசி விடயங்களைக் கடக்க நினைத்திருக்கின்றது.   

தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிராக எழுந்த ஒன்றல்ல. அது, பௌத்த, சிங்களப் பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த ஒன்று. பௌத்த, சிங்களப் பேரினவாதம் தன்னுடைய கொடுங்கரங்களை ஒவ்வொரு கட்டத்திலும் இன அழிப்பை முன்னிறுத்தி நீட்டும் போதும், தமிழ்த் தேசியவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எழுந்திருக்கின்றது.   

அதன்வழியே, தமிழ்த் தேசியப் போராட்டங்கள், அஹிம்சை வழி தொடங்கி, ஆயுத வழி வரை சென்று சேர்ந்தது.    

தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றத்துக்கும் நிலைபெறுகைக்கும் தக்க காரணங்கள் உண்டு. அப்படியான நிலையில், தமிழ்த் தேசியவாதத்தையே, பயங்கரவாத சிந்தனையாகத் தென்னிலங்கையில் மீளமீளப் பதிவு செய்யும் தன்மையானது, அதிக நேரங்களில், ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒன்றாகவே இருந்து வருகின்றது.   

தவறுகளைத் திருத்துவதும், கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படித்து முன்னேறுவதுமே முன்னேற்றகரமான சமூகங்களுக்கு அவசியமானது.   

ஆனால், ஒரு நாட்டின் அரசமைப்பு உள்ளிட்ட அரச கட்டுமானங்களில் அத்துணை ஏற்றதாழ்வுகளையும் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான அடங்குமுறையையும் வைத்துக் கொண்டு, சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் பேசுவது அல்லது புகட்டுவது என்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்.   சுமந்திரன் சொல்வது போல, “மற்றவர்களின் தயாள குணத்தால் அல்லது பச்சாத்தாபத்தால் நாங்கள் காப்பாற்றப்படுகின்றோம் என்கிற உணர்வு, எங்கள் மீதான அதிகபட்ச வன்முறையாகும்”. 

இலங்கையின் அரசமைப்பில் இருந்து, பௌத்தத்துக்கு முதலிடம் என்கிற விடயத்தையே மாற்ற முடியவில்லை என்கிற போது, அதிகாரங்களின் பகிர்வு என்பது, எந்த வகையில் சாத்தியமாகும்.   

இந்த நாட்டிலுள்ள அனைவரும் சமமானவர்கள் என்கிற சாதாரண எண்ணத்தை, அனைத்து மதங்களுக்கும் சம அந்தஸ்து என்கிற விடயத்தை அரசமைப்பில் உறுதி செய்வதிலிருந்தும் தொடங்கலாம்.   

ஆனால், அந்தக் கட்டத்தைத் தென்னிலங்கையின் அதிகார பீடங்கள் அனுமதிக்காத போது, எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புச் சிந்தனை தென்னிலங்கை கொண்டிருக்கவில்லை என்று கொள்ள முடியும்?   

“நாங்கள் முதலிடத்துக்கு உரியவர்கள்; எங்களுக்கு கீழேயே நீங்கள்” என்று திரும்பத் திரும்ப ஒரு சனக்கூட்டத்தை நோக்கிச் சொல்லும் போது, அதற்கு எதிரான எழுவது என்பது மனித சுதந்திரத்தின் அடிப்படையாகும்.   

நாடொன்று தன்னுடைய பிரஜைகளில் ஒரு தொகுதியினரை முதன்மையானவர்களாகவும் இன்னொரு தொகுதியினரை கீழானவர்களாகவும் அரசமைப்பினூடு பேண முயலும் போதும், அதனை உணராது, பாதிக்கப்பட்ட மக்களிடம் வந்து, ஜனநாயக வகுப்பு எடுக்கும் தன்மை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.   

அதிக தருணங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கொழும்பு லிபரல்வாதிகளும் இந்தச் சிந்தனையோடு தமிழ் மக்களை நோக்கி வருகின்றார்கள்.   

அவர்கள் பொத்தம் பொதுவாக, அரசாங்கமும் குற்றமிழைத்திருக்கின்றது; புலிகளும் குற்றமிழைத்திருக்கின்றார்கள், ஆகவே குற்றங்களை மறந்து மன்னித்து அடுத்த கட்டத்துக்கு போவோம் என்கிறார்கள்.   

தவறுகளை மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்புதான், ஆனால், திட்டமிட்ட வன்முறைகளையோ, திட்டமிட்ட அடக்குமுறையையோ, இன அழிப்பையோ மறப்பதும், மன்னிப்பதும் அறமல்ல. அது, அடிமைத்தனத்துக்கு ஒத்திசைவது.   

சிங்கள மக்களோடு இணக்கமாக வாழ்வது தொடர்பில் தமிழ் மக்களுக்கு என்றைக்குமே பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்டமைப்புக்குள் அடங்கி ஒடுங்கி வாழ்வது தொடர்பில் பெரும் பிரச்சினையுண்டு. ஏனெனில், அது என்றைக்குமே அச்சுறுத்தலானது.  

கறுப்பு ஜூலை வன்முறைகள் உள்ளிட்ட கடந்த காலத் திட்டமிட்ட வன்முறைகளை, இனக்கலவரமாகச் சிந்திப்பதிலிருந்து விலகி நின்று, ‘பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்டமைப்பின் இன அழிப்புச் சிந்தனை’ என்பதாக உணரப்படும் போது, தெளிவு கிட்டும். 

அப்போதுதான், நாட்டின் சமாதானம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் அனைவராலும் சிந்திக்க முடியும். அது இல்லாமல், பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களுக்கு வெளியில் நின்று சிந்திப்பதானது, பிரச்சினைகளின் அளவை அப்போதைக்கு வேண்டுமானால் மடை மாற்றுவதற்கு உதவும்.   

ஆனால், பிரச்சினைகளை உண்மையாகத் தீர்ப்பதற்கான எந்தவொரு கட்டத்தையும் அடைய உதவாது. கறுப்பு ஜூலை வன்முறைகள் பற்றிய அண்மைய உரையாடல்களிலும் அதையே அதிகமாகக் காண முடிந்தது.    

  •  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-எதைப்-பேச-வேண்டும்/91-219493

Share this post


Link to post
Share on other sites

கறுப்பு ஜூலை -கலவர நினைவுகள்!!

gggu.jpg
 
 
 

இலங்­கை­யின் இன­வா­தத்­தில் இருண்ட நாள்­க­ளாக கரு­தப்­ப­டு­வது. 1983ஆம் ஆண்­டின் ஜூலை மாதத்து கடைசி வாரத்­தில் நடந்­தே­றிய தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­கள்.

இதற்கு முன்­ன­ரும்­கூட 1956, 1958, 1977 மற்­றும் 1981 ஆகிய வரு­டங்­க­ளி­லும் இலங்­கை­யில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­ற­ போ­தி­ லும் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த வன்­செ­யல்­கள்­தான் இவையாவற்­றி­லும் மிகக்­கொ­டூர­ மான ஒன்­றா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்று தற்போது 35வரு­டங்­கள் கடந்­து­விட்ட நிலை­யி­லும் கூட, இன்­றும்­கூட அதன் சுவ­டு­கள் 1983ஆம் ஆண்­டின் கறுப்பு ஜூலை என்ற அடை­மொ­ழி­யு­டன் சக­ல­ரின் நினை­வு­க­ளி­லும் பதிந்­துள்­ளன.

 

கறுப்பு ஜூலை எனக்­கு­றிப்­பி­டும்­போதே, அந்த நிறம் பற்­றிய ஒரு எண்­ண­மும் குறுக்­கி­டு ­கி­றது. கறுப்பு என்­பது ஒரு கெட்ட அல்­லது பாவ­மான நிற­மா­க­ வும், வௌ்ளைநி­றம் என்­பது நல்ல தூய்­மை­யான நிற­மா­க­ வும் கரு­தப்­ப­டு­கின்­றன. இந்­தக்­கால சரி­யான அர­சி­ய­லில் கறுப்பு வௌ்ளை என்ற சொற்­கள், உள்­ளூர எஞ்­சி­யுள்ள தவ­ றான இன­வா­தச் சிந்­த­னையை மாற்­று­வ­தற்கு சவா­லா­க­வுள்­ளன.

விரும்­பியோ விரும்­பா­மலோ குறிப்­பிட்ட இந்த இரண்டு சொற்­க­ளின் பாவனை ஒரே மாதி­ரி­யான இன­வா­தத்தை வளர்க்­கி­றது. ஆனா­லும் அர­சி­யல் ரீதி­யான சரி­யான நிலைப்­பாட்டை, இன்­றைய நாட்­டின் சூழ்­நி­லை­யில் கறுப்பு ஜூலை என விப­ரிக்­கப்­படு ­வது தேசிய உணர்­வு­டன் கலந்­து­விட்­டது. இவற்­றைத் தவிர்த்து, கறுப்பு ஜூலை பற்றி, 1983இல் நடந்த சம்­ப­வங்­களை விவ­ரிப்­பது இய­லாத காரி­யம்.

35வரு­டங்­க­ளுக்கு முன்­னர், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி ஒரு சனிக்கிழமையன்று வடக்­கில் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் தலை­மை­யில், அவ­ரு­டைய பிர­தித்­த­லை­வர் செல்­லக்­கிளி அம்­மா­னு­டன் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளால், இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக, யாழ்்ப்­பா­ணத்­தின், திரு­நெல்­வே­லி­யில் தபால்­பெட்டி சந்­தி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லில் லெப்–­­­­­வாஸ் குண­வர்த்­த­ன­வு­டன் மேலும் 12 இரா­ணு­வத்­தி­னர் கொல்­லப்­பட்­ட­னர்.

விடு­த­லைப் புலி­க­ளது தாக்­கு­தலே
இனக் கல­வ­ரத்­துக்கு வித்­திட்­டது
இந்த சம்­ப­வத்­தின் எதி­ரொ­லி­யாக இலங்கை முழு­வ­தி­லும் தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­கள் இனக்­க­ல­வ­ர­மாக வெடித்­தன. இரா­ணு­வத்­தி­னர் யாழ்ப்்­பா­ணத்­தில் வெறி­யாட்­டம் ஆடத்­தொ­டங்­கி­னர். பர­வ­லாக 51பொது­மக்­கள் பல இடங்­க­ளி­லு­மாக இரா­ணு­வத்­தி­ன­ரின் வெறித்­த­ன­மான தாக்­கு­த­லில் சாவடைந்தனர். இதில் மானிப்­பா­யில் தனி­யார் பய­ணி­கள் வாக­ன­மொன்­றில் பய­ணித்­த­வேளை கொல்­லப்­பட்ட பய­ணி­கள் 7பேரும் அதன் சார­தி­யும் அடங்­கு­வர்.

அந்த வேளை­யில் வட­ப­கு­திக்கு பொறுப்­பாக இருந்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் டபிள்யூ.டி.ராஜ­குரு, அப்­போது பொலிஸ்மா அதி­ப­ராக இருந்த ருத்ரா ராஜ­சிங்­கத்­திற்கு தக­வல் தெரி­விக்­கும்­போது, இரா­ணு­வத்­தி­ன­ரின் வன்­முறை அதி­க­மா­கி­விட்­டது. பொலி­சா­ரால் இரா­ணு­வத்­தி­ன­ரைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை எனக் கூறி­யுள்­ளார். இந்­தச் செய்தி அந்த வேளைய அர­ச­த­லை­வர் ஜே.ஆர்.ெஜய­வர்­த­ன­விற்­குத் தெரி­விக்­கப்­பட்ட பொழுது, ஜெய­வர்த்­தன, அந்­தக் காலப்­ப­கு­தி­யில் இரா­ணுவ அதி­கா­ரி­யாக இருந்த புல் வீர­துங்­கவை நில­மையை கட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­காக உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்பி வைத்­தார்.

அப்­போ­தும் நிலமை சீர­டை­ய­வில்லை என்­ப­தால், அர­ச­த­லை­வர் ஜே.ஆர், அப்­போது பாது­காப்பு செய­ ­ல­ராக இருந்த ஜென­ரல் சேபால ஆடிகல­விற்கு, இறந்த 13பேரது சட­லங்­க­ளை­யும் இரா­ணுவ மரி­யா­தை­யு­டன் பலாலி இரா­ணுவ முகாம் வளா­கத்­தில் புதைக்­கும்­படி பணித்­துள்­ளார். இந்த செய்தி புல் வீர­துங்­க­வி­டம் சொல்­லப்­பட்­ட­போது, வீர­துங்க, சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த அந்த இரா­ணுவ வீரர்­க­ளது சட­லங்­களை பலாலி இரா­ணுவ முகாம் வளா­கத்­தில் புதைத்­தால்­தான் இங்­குள்ள இரா­ணு­வத்­தி­னர் தன்­னை­யும் உயி­ரு­டன் இங்­கேயே புதைத்­து­வி­டு­வர் என்று கூறி, இறந்த அந்த இரா­ணு­வத்­தி­ன­ரின் சட­லங்­களை கூடி­ய­வி­ரை­வில் அவர்­க­ளின் சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­யு­மாறு கூறி­னார்.

அதன்­பின்­னர் தேசிய பாது­காப்பு கவுன்­சில் கூடி ஆராய்ந்து, குறிப்­பிட்ட 13 இரா­ணு­வத்­தி­ன­ரின் சட­லங்­க­ளை­யும் கட்டு நாயக விமான படைத்­த­ளத்­திற்கு அனுப்பி வைத்து அதன்­பின்­னர் அங்­கி­ருந்து தனித்­த­னி­யாக இறந்­த­வர்­க­ளின் சொந்த ஊர்­க­ளுக்கு இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்­காக அனுப்பி வைப்­ப­தென முடிவு செய்­தது.

13குளி­ரூட்­டப்­பட்ட வாக­னங்­களை சம்­ப­வத்­தில் கொல்­லப்­பட்ட 13பேரின் சட­லங்­க­ளை­யும் கொண்டு செல்­வ­தற்­காக ஏற்­பா­டு­ செய்­யும்­படி பொலி­சா­ருக்­குக் கூறப்­பட்­ட­போ­தி­லும், இந்­தத் திட்­டத்­திற்கு ஆரம்­பத்­தில் அர­ச­த­லை­வர் சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தா­லும், பின்­னர் திடீ­ரென்று அந்­தத்­திட்­டம் மாற்­றப்­பட்டு 13சட­லங்­க­ளும், இரத்­ம­லா­னைக்­குக் கொண்டு செல்லப்பட்டு பின்­னர் பொரளை களத்தை மயா­னத்­தில் ஒரே தட­வை­யில் அடக்­கம் செய்­யப்­பட்­டன.

அர­ச­த­லை­வர் தமது முன்­னைய முடிவை திடீ­ரென மாற்­றி­ய­மைக்­கான கார­ணம், விஞ்­ஞான விவ­கார அமைச்­சர் என்ற பெய­ரில் தமி­ழ­ருக்கு எதி­ரா­கச் செயற்­பட்டு வந்­த அமைச்­ச­ரான சிரில் மெத்­தி­யூ­வின் பரிந்­து­ரையே. அத்­து­டன் கொழும்­பில் சகல பத்­தி­ரி­கை­க­ளும், தொலைக்­காட்சி, வானொலி என சகல ஊட­கங்­க­ளும் இந்த 13 இரா­ணு­வத்­தி­ன­ரும் கொல்­லப்­பட்­ட­மை­பற்றி மட்­டுமே பரப்­புரை செய்­த­னவே தவிர, இரா­ணு­வம் வடக்­கில் நடத்­திய வெறி­யாட்­டம் பற்­றிய விப­ரங்­கள் இருட்­டிப்­புச் செய்­யப்­பட்­டு­விட்­டன.

கல­வ­ரத்தை உரு­வாக்க
திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட
இரா­ணு­வத்­தி­ன­ரது இறு­திச் சடங்கு
மேலும் எரி­கிற நெருப்­பில் எண்­ணெய் ஊற்­று­வ­து­போல, இறந்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பெரிய அள­வி­லான சாவுச் சடங்­கு­ நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­து­டன், அரச வாக­னங்­க­ளில் பெரு­ம­ள­வி­லான மக்­கள் இறு­திச் சடங்­கு­க­ளில் கலந்து கொள்­வ­தற்­காக கொண்டு வரப்­பட்­ட­து­டன் நிலமை மிக மோச­மாக மாறத் தொடங்­கி­யது.

பௌத்த மத­கு­ரு­மா­ரின் உரை­க­ளால் நிலமை மேலும் மோச­மா­கத் தொடங்­கி­யது. பொலிஸ்மா அதி­பர் ருத்ரா ராஜ­சிங்­கம் பிரதிப் பொலிஸ்மா அதி­பர்­க­ளான ஏர்னி பெரேரா மற்­றும் ஆர்.சுந்­த­ர­லிங்­கம் ஆகி­யோ­ரு­டன் கனத்­தைக்­குச் சென்­ற­போது, நிலமை கட்­டுக்­க­டங்­கா­மற்­போ­வதை உணர்ந்­தார். பொலிஸ்மா அதி­பர் நேர­டி­யாக அர­ச­த­லை­வ­ரின் இல்­லத்­திற்­குச் சென்று ஞாயிறு இரவு ஊர­டங்­குச் சட்­டம் நடை முறைப்ப டுத்­தப்­ப­ட­வேண்­டும் என கோரிக்கை விடுத்­த­போ­தும், அவ­ரது அந்­தக் கோரிக்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

எசல முழு­நி­லவு நாள்
ஞாயிறு மாலை­யா­ன­போது நிலமை தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­ய­லாக மாறத்­தொ­டங்­கி­யது. காடை­யர்­கள் பொர­ளையை நோக்­கி­யும் திம்­பி­ரி­ கஸ்­யா­யவை நோக்­கி­யும் நக­ரத் தொடங்­கி­னர். தமி­ழர்­க­ளின் வீடு­க­ளும், வியா­பார நிலை­யங்­க­ளும் காடை­யர்­க­ளால் தாக்­கப்­பட்டு தீயி­டப்­பட்­டன. அன்று பௌர்­ணமி நிலவு மேகங்­க­ளூ­டாக வர­வில்லை. தமி­ழர்­க­ளின் வீடு­க­ளும், வியா­பார நிலை­யங்­க­ளும் சுவா­லை­விட்டு எரிந்த தீயி­னால் வௌியான புகைக் கூட்­டத்­தி­ னூ­டா­கவே நிலவு மலர்ந்­தது.

25ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை காட்­டுத்­தீ­போல பர­வத்­தொ­டங்­கி­யது. மலை­ய­கத் தமி­ழர்­க­ளின் தனிப்­பெ­ரும் தலை­வ­ரான சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மான், பின்­னர் ஒரு சந்­தர்ப்­பத்­தில் ‘‘அந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்­குப் பின்­னர் வந்த திங்­க­ளன்­று­தான் இந்­தப் படு­கொ­லை­கள் நிகழ்ந்­துள்­ளள் ளன’’ அதா­வது ‘‘சண்டே சில், மண்டே கில்’’ என்­ப­தன் விளக்­கம், ஞாயிறு அன்று பௌத்­தர்­கள் விகா­ரைக்­குச் சென்று மத வழி­பா­டு­களை (சில்) மேற்­கொண்ட பின்­னர் திங்­க­ளில் (கில்) கொலை­கள் செய்­த­னர்’’ என விமர்­சித்­தி­ருந்­தார்.
பொலிஸ்மா அதி­பர் ரூத்ரா ராஜ­சிங்­கம் தொடர்ந்­தும் ஊர­டங்­குச் சட்­டத்தை நடைமுறைப்ப­டுத்­தும்­படி அர­ச­த­லை­வர் ஜய­வர்­த­னவை வற்­பு­றுத்­தி­ய­போ­தி­லும், திங்­கள் பிற்­ப­க­லில் தான் ஊர­டங்­குச் சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஊர­டங்­குச் சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்ட போதி­லும் வன்­செ­யல்­கள் 27ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யும் தொடர்ந்­தன. 28ஆம் திகதி, இந்­திய தலைமை அமைச்­சர் இந்­திராகாந்தி தம்­மு­டைய விசேட தூது­வ­ராக இந்­தி­யா­வின் வௌிவி­வ­கார அமைச்­சர் நர­சிம்ம ராவை இலங்­கைக்கு அனுப்­பி­வைத்­தி­ருந்­தார்.

29ஆம் திகதி வௌ்ளிக்­கி­ழமை தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் கொழும்பு நக­ரத்­துக்கு வந்­து­விட்­டார்­கள் என்ற வதந்தி திட்­ட­மிட்­டுப் பரப்­பப்­பட, சக­ல­ரும் அரண்டு போய்­விட்­ட­னர். ஆயி­னும் அது பொய்­யான தக­வல் என அறிந்­த­வு­டன் மீண்­டும் குண்­டர்­கள் தங்­கள் கைவ­ரி­சையை தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக காட்­டத் தொ­டங்­கி­னார்­கள். ஜூலை 30மற்­றும் 31ஆம் திக­தி­க­ளில் வன்­செ­யல்­கள் படிப்­ப­டி­யாக குறை­யத்­தொ­டங்­கின.

ஆகஸ்ட் மாதம் தொடக்­கம் பன்­னாட்டு அழுத்­தங்­கள் அர­ச­த­லை­வர் ஜே.ஆர்.ஜய­வர்த்­த­னவை நில­மையை சீராக்­கும்­படி வற்­பு­றுத்­தின. அந்த காலக்­கட்­டத்­தில் அதி­கா­ரத்­தில் இருந்த ஐக்­கிய தேசிய கட்­சி­யும், அர­ச­த­லை­வர் ஜய­வர்த்­த­ன­வும் யாழ்ப்­பா­ணத்­தி­ல் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் தங்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரைக் கொலை செய்­த­தன் எதி­ரொ­லி­யா­கவே சிங்­கள மக்­கள் இந்­தத் தாக்­கு­தல்களை மேற்­கொண்­ட­னர் என விளக்­கம் கொடுத்­த­னர்.

ஆத்­தி­ரம் கொண்ட சிங்­கள மக்­கள்
தாமாக தாக்­கு­தல்­களை
மேற்­கொண்­ட­தாக அரசு தெரி­விப்பு
முழு­சிங்­கள சமூ­கத்­தின் மீதும் அர­ச­த­லை­வ­ரும் அவ­ரு­டைய அர­சும் பழி­போட்­டு­விட்­டுத் தாங்­கள் குறை கூறப்­ப­டு­வ­தைத் தவி­ர்த்­துக் கொண்­டு­விட்­டனர். கறுப்பு ஜூலை 83 என்ற சம்­ப­வத்துக்கான பொறுப்பு முழு­மை­யாக சிங்­கள மக்­கள் மீது சுமத்­தப்­பட்­டது. உண்­மை­தான். தாக்­கி­ய­வர்­கள் சிங்­கள மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தமி­ழர்­கள். சகல சிங்­கள மக்­க­ளும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளல்ல. சகல சிங்­கள மக்­க­ளும் தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ராக திரும்­பி­யி­ருந்­தால் இந்த நாட்­டில் தமி­ழர்­க­ளது நிலை படு­மோ­ச­மா­கப் போயி­ருந்­தி­ருக்­கும்.

சாதா­ரண சிங்­க­ளப் பொது மக்­க­ளில்
பல­ரும் கலவ­ரத்­தைக் கண்டு
மனம் வருந்­தி­னர்
ஒரு சிறு தொகை­யி­ன­ரான சிங்­கள இன­வா­தி­கள் நாட்­டுக்­கா­க­வும் தங்­கள் இனத்­துக்­கா­க­வும் செயற்ப­டு­வ­தாக கூறி ஆடிய வெறி­யாட்­டத்தை பெரும்­பா­லான சிங்­கள மக்­கள் செய்­வ­த­றி­யாது அந்த வன்­செ­யல்­களை அச்­சத்­து­டன் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­னர். சிங்­கள காடை­யர்­க­ளுக்கு இந்த வன்­செ­யல் ஒரு களி­யாட்­ட­விழா போன்­ற­தா­க­வே­யி­ருந்­தது. ‘‘நாட்­டை­யும் இனத்­தை­யும் காப்­பாற்ற பெற்­றோல் கொஞ்­சம் தாருங்­கள்’’ என பொருள்­பட எரி­பொ­ருளை தேடிச் சென்­றுள்­ள­னர்.

சிங்­கள மக்­க­ளின் ஒரு சார­ார் இந்த வன்­செ­யல்­க­ளில் பங்­கு­கொள்­ளா­விட்­டா­லும்­கூட, அமை­தி­யாக இருப்­ப­த­னூ­டாக தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான தங்­கள் நிலைப்­பாட்டை வௌிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்­கள்.
ஆயி­னும் அதி­க­மான சிங்­கள மக்­கள் இந்த வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளா­கவே இருந்­துள்­ள­னர். அநே­க­மான சிங்­கள மக்­கள் தங்­கள் உயி­ரைக்­கூடப் பண­யம் வைத்­துத் பல தமி­ழர்­க­ளைக் காப்­பாற்­றி­யுள்­ள­னர் என்ற உண்­மையை மறக்­கவோ மறுக்­கவோ இய­லாது. பல முஸ்­லீம் மக்­க­ளும்­கூட தங்­கள் அயல்­க­ளில் இருந்த தமி­ழர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய இன்­னொரு விட­யம், இந்த 1983ஆம் ஆண்டு ஜூலை வன்­செ­யல்­கள் என்­பது திடீ­ரென்று உரு­வா­ன­தல்ல. இவை ஏற்­க­னவே அடிப்­ப­டை­யாக திட்­ட­மி­டப்­பட்டு இருந்த விட­யம். இதில் சம்­பந்­தப்­பட்ட ஒரு சிலர் திடீ­ரென இந்­தக் கல­வ­ரத்­தில் இறங்­கி­யி­ருந்­தா­லும், பல இடங்­க­ளில் இவை சரி­யாக திட்­ட­மி­டப்­பட்ட விதத்­தி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பது தௌிவா­கப் புரிந்­தது.

குறிப்­பிட்ட இந்­தக் காடை­யர்­குழு அந்­தக் கால­கட்­டத்­தில் ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசிய கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பின்­ன­ணி­யு­டன், அந்த உறுப்­பி­னர்­க­ளது முழு­மை­யான பக்கபலத்­து­டன் எந்­த­வித தண்­ட­னை­யு­மின்றி நட­மா­டி­யது.

குறிப்­பிட்ட இந்த காடை­யர்­கள் குழு­வி­டம் தமி­ழர்­க­ளின் இருப்­பி­டங்­க­ளும் அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான வியா­பார நிலை­யங்­கள் போன்ற விப­ரங்­க­ள­டங்­கிய பட்­டி­யல் இருந்­தது. அத்­து ­டன் சிங்­கள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான கட்­டி­டங்­க­ளில் இயங்­கிய தமி­ழர்­க­ளின் வர்த்­தக நிலை­யங்­க­ளில் அந்­தக் கட்­டி­டங்­க­ளுக்கு எது­வித பாதிப்­பும் ஏற்­ப­டுத்­தப்­ப­டா­மல் அங்­குள்ள பொருள் கள் மட்­டுமே அடித்து நொருக்­கப்­பட்டு தீவைக்­கப்­பட்­டன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குச் சார்­பான தொழிற்­சங்­க­மான ஜாதிக சேவை­யா­ளர் சங்க உறுப்­பி­னர்­க­ளின் தலை­மை­யி­லேயே இந்­தக் காடை­யர்­கள் இயங்­கி­னர். அத்­து­டன் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மாந­க­ர­சபை, நக­ர­சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் அமைச்­சர்­க­ளின் நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளும் இந்த வன்­மு­றை­க­ளு­டன் தொடர்பு கொண்­டி­ருந்­த­னர். இந்த வன்­மு­றை­யா­ளர்­களை கைது செய்­ய­வேண்­டா­மென ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அர­சி­யல்­வா­தி­கள் பலர பொலி­சா­ருக்கு அறி­வித்­தி­ருந்­த­னர்.

காடை­யர்­க­ளும் குண்­டர்­க­ளும்
அநே­க­மான சந்­தர்ப்­பங்­க­ளில் பெரும் அள­வி­லான காடை­யர்­க­ளும் குண்­டர்­க­ளும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் வாக­னங்­க­ளில் அல்­லது அரச நிறு­வ­னங்­க­ளது வாக­னங்­க­ளி­லுமே ஏற்­றிச் செல்­லப்­பட்­டார்­கள். அது மட்­டு­மல்­லாது உண­வுப் பொதி­க­ளும், மது­பா­ன­மும்­கூட இந்­தக் காடை­யர்­க­ளுக்கு குறை­வின்றி வழங்­கப்­பட்­டுள்­ளன.
இந்த இனக்­க­ல­வ­ரத்­தின்­போது கடும் இன­வா­தப் போக்­கு­டைய அமைச்­சர் சிரில் மத்­தி­யூ­வும் அவ­ரு­டைய அர­சி­யல் கையாட்­க­ளும் நடந்து கொண்­ட­வி­தம் பற்றி சக­ல­ரும் அறி­வார்­கள். அன்று இந்த வன்­செ­ய­லில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இன்­றும் கூட அர­சி­ய­லில் முக்­கிய புள்­ளி­க­ளாக திகழ்­கி­றார்­கள்.

ஏற்­க­னவே குறிப்­பி­டப்­பட்­ட­து­போல 1983 ஜூலைக் கல­வ­ரம் திடீ­ரென உரு­வா­ன­தல்ல. அது திட்­ட­மி­டப்­பட்ட படு­கொ­லை­யா­கும். திட்­ட­மி­டப்­பட்ட படு­கொலை எனக்­கூ­றும்­போது அது வன்­செ­ய­லாக இரு்­க­க­லாம், காடை­யர்­க­ளின் தாக்­கு­த­லாக இருக்­க­லாம், அது அர­சின் அனு­ச­ர­ணை­யு­டன் அல்­லது இரா­ணு­வத்­தின் பின்­பு­லத்­து­டன், ஒரு குறிப்­பிட்ட இனத்­த­வர்­கள் அல்­லது மதத்­தி­ன­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளின்­போது கொலை, கொள்ளை போன்ற வன்­செ­யல்­க­ளு­டன் அந்த குறிப்­பிட்ட பகு­தி­யி­ன­ரின் வீடு­கள், சொத்­துக்­கள், சம­யத்­த­லங்­கள் சக­ல­வற்­றை­யும் தாக்­கு­வ­து­தான் இந்­தத் திட்­டத்­தின் நோக்­க­மா­கும். பொக்­ரம் (POGROM) என்ற ஆங்­கி­லத்­தில் வழங்­கும் சொல் உண்­மை­யில் ஒரு ரஷ்ய மொழிச் சொல்­லா­கும். அதன் பொருள் அழித்­து­விடு; வன்­மு­றை­யால் இல்­லா­மற் செய், நாசம் செய் என்­ப­தா­கும்.

தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான ஒரு வன்­செ­யல் ஏற்­க­னவே முறை­யா­கத் திட்­ட­மி­டப்­பட்டு, தமி­ழர்­களை அழித்து, அவர்­க­ளின் சொத்­துக்­களை பெரிய அள­வில் முடக்­கு­வ­தற்­கான திட்­டம் வகுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தமி­ழ­ருக்கு எதி­ரான தாக்­கு­தலை ஆரம்­பிப்­ப­தற்கு வலு­வா­ன­தொரு கார­ணம் தேவைப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வே­லி­யில் 13இரா­ணு­வத்­தி­னர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தாக்கி அழிக்­கப்­பட்ட சம்­ப­வம், தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த வன்­செ­ய­லுக்கு ஒரு நல்ல பல­மான கார­ண­மாக அமைந்­து­விட்­டது.

அது மட்­டு­மல்­லாது 1983ஜூலை கல­வ­ர­மா­னது வவு­னியா, திரு­கோ­ண­மலை மற்­றும் பேரா­தெ­னியா பல்­க­லைக்­க­ழ­கம் போன்ற தமி­ழர்­க­ளும் சிங்­க­ள­வர்­க­ளும் கலந்து வாழ்ந்த பகு­தி­கள் வரை­யில் விரி­வ­டைந்­தது.
ஜே.ஆர் இது இயற்­கை­யான ஒரு விட­யம் என சிங்­கள மக்­கள் மேல் பழியை போட்­டு­விட்­டார். பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளை­யிட்டு கவ­லைப்­ப­டா­மல் அர­ச­த­லை­வர் பிரி­வினவாதத்தை தடை செய்­யும் சட்­ட­மொன்று நிறை­வேற்­றப்­ப­டும் என்­றார்.

1983ஆம் ஆண்­டின் ஜூலை மாத வன்­மு­றை­யில் 4 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். இதில் தவ­று­த­லாக கொல்­லப்­பட்ட முஸ்­லீம்­க­ ளும் அடங்­கு­வர். ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் காய­முற்­ற­னர். காயப்­பட்டு மருத்­து­வ­ம­னை­க­ளில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­கள் அங்கு கொல்­லப்­பட்­ட­னர். இந்த வன்­மு­றை­கள் கார­ண­மாக இரண்டு இலட்­சத்­துக்­கும் மேற்­பட்ட தமி­ழர் மக்­கள் இடம்­பெ­யர்ந்­த­னர். ஒரு இலட்­சத்து 30ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தமிழ் மக்­கள் தற்­கால அக­தி­மு­காம்­க­ளில் ­தங்க வைக்­கப்­பட்­ட­னர்.

2ஆயி­ரத்து ஐந்­நூறு வியா­பா­ரத் தலங்­கள், தொழிற்­சா­லை­கள், பெட்­டிக்­க­டை­கள் என உடைத்து நொறுக்­கப்­பட்­டன. அழிக்­க­வும் பட்­டன. உடைத்து நொறுக்கி அழிக்­கப்­பட்ட வீடு­கள், வாசஸ்­த­லங்­க­ளின் எண்­ணிக்கை கணிக்­கப்­ப­ட­வில்லை.

பெரிய அள­வி­லான இழப்­பீ­டு­கள் கொலை­கள், உயி­ரி­ழப்­புக்­கள், இடப்­பெயர்வுகள், மறுக்­கப்­பட்ட உரி­மை­கள் இவற்­றி­னால் பாதிக்­கப்­பட்ட இலங்கை மற்­றும் இந்­தி­யத் தமி­ழர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஜூலை மாதம் என்­பது ஒரு துக்க தின­மா­கவே என்­றும் நினை­வில் நிற்­கும்.
சகல இலங்­கை­யர்­க­ளும் 1983 ஜூலை மாத சம்­ப­வத்தை ஒரு பைத்­தி­ய­கார நிகழ்­வாக எண்ணி மறந்து, நல்ல மனி­தா­பி­மான எதிர்­கா­லத்தை எதிர்­பார்க்­கி­றார்­கள். ஆயி­னும் ஒரு நிலை­யான சுதந்­திர வாழ்­வுக்கு நிரந்­த­ரப் பாது­காப்­புத் தேவை. அடிக்­கடி ஞாப­கத்­திற்கு வரும் 1983ஆம் ஆண்டு ஜூலை மாத பயங்­கர நிலமை, மீண்­டும் உரு­வா­கா­மற் தடுப்­பது அவ­சி­ய­மா­கி­றது.

http://newuthayan.com/story/10/கறுப்பு-ஜூலை-கலவர-நினைவுகள்.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this