Sign in to follow this  
நவீனன்

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்

Recommended Posts

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் இன்று சிலாபம் - சின்னவத்தையில் உள்ள சரத் ஹேமச்சந்திரவின் இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், ஹேமச்சந்திரவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் இளஞ்செழியன் சென்று அஞ்சலியை செலுத்தியுள்ளார். அவரின் இந்த செயற்பாடுகள் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

சரத் ஹேமச்சந்திரவின் உயிரிழப்பிற்கு பின் அவரின் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகிறார்.

இதேவேளை ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்திருக்கும் சின்னவத்தை பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வந்ததையடுத்து இளஞ்செழியன் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

பல அரசியல்வாதிகள் கூட தம்முடைய மெய்ப்பாதுகாவலர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால் தேவையான உதவிகளை செய்து விட்டு அத்துடன் மறந்து விடுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

ஆனால் நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்களாக தன்னுடனிருந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் உதவியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இளஞ்செழியனின் இந்த செயற்பாடுகளானது இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், இதனை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலம் நீதிபதி இளஞ்செழியன் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது தென்னிலங்கை உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/188760?ref=home-imp-parsely

Share this post

Link to post
Share on other sites

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, valavan said:

தனது குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு இருந்து பதினேழு வருடமாக தன்னை பாதுகாத்த ஒருவர் மீது இனவேறுபாடுபாட்டுக்கு அப்பால் உருவாகும் நட்பு அது. நீங்கள் அதை இனவெறியோடு பார்க்கிறீர்கள். 

நீங்கள் அபரீதமான சுயலாபம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை போலும். உங்களை போலவே மற்றவர்களும் என்று நினைத்து எழுதுவது தெரிகிறது. உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு நீங்கள் எது செய்தாலும் நிச்சயமாக உங்களுக்கு அபரீதமான இலாபம் வைத்து தான் செய்கிறீர்கள் இல்லையா? நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

Edited by Jude

மனச்சாட்சி அதிகம் உள்ள மனிதராய் இருப்பாரோ 

Share this post

Link to post
Share on other sites
On 7/22/2018 at 12:30 PM, Jude said:

ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு  காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்...

அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்...

வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?

கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை!

On 7/22/2018 at 12:30 PM, Jude said:

நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும், பலகோடி மக்களை சுற்றி வாழும் நாங்கள் எல்லாம் ஒருவரின் கருத்துக்கு பதில் சொல்லும் சகிப்பு தன்மை இன்றி வாழ்பவர்களாய் இருந்தால் நாங்கள் தூர விலகி இருக்க வேண்டியதில்லை...நம்மை சூழ இருக்கும் சமூகமே எங்களை தூர விலக்கி வைக்கும்,!

சமூக தளத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது என்னால் புரிந்துகொள்ளகூடியதாகவே உள்ளது...

ஆனால் உங்களை தூரவிலக்கி வைக்கும் ஐடியா எனக்கு இல்லை, நீங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம்!

On 7/22/2018 at 12:37 PM, ரதி said:

மனச்சாட்சி அதிகம் உள்ள மனிதராய் இருப்பாரோ

மனசாட்சிக்கு ஊடக வெளிச்சம் ஏன் தேவைபடுகிறது என்பதற்கு உங்களிடம் ஏதாவது விளக்கம் இருக்குமா? அறிந்துகொள்ள ஆசை அவ்வளவுதான்!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, valavan said:

ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு  காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்...

அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்...

வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?

கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை!

அதிக சந்தேகத்தோடு சிந்திக்கிறீர்கள். பெரும்பாலான ஊடகங்களின் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்தால் தான் அவர்களுக்கு வருமானம். இந்த நீதிபதியை பற்றிய செய்தியை முன்னர் வெளியிட்ட செய்தியாளர்கள் அவரை தொடர்ந்தும் அவதானித்து வருவதும் அவர் பற்றிய செய்திகளை சேகரித்து வெளியிடுவதும், செய்திக்கான தகவல்களை தரக்கூடியவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதும் செய்தி வழங்கும் துறையில் சாதாரணமான செயற்பாடுகள். இந்த வகையில் நீதிபதி இளம்செழியனின் மறைந்து போன மெய்ப்பாதுகாவலரின் குடும்பம் பற்றிய செய்தியை வெளியிட்ட செய்தியாளர் அந்த குடும்பத்து உறவினர் ஒருவருடன் தொடர்புகளை பேணி தனக்கு மட்டும் உடன் செய்தி தர வேண்டும் என்று உடன்பாடு செய்து இருக்கலாம்.  குடும்பத்துக்கு புகைப்படம் எடுத்தவர் இந்த புகைப்படங்களை செய்தியாளருக்கு விற்றிருக்கலாம். 

இன்று போரும் பயங்கரவாதமும் இல்லாத நிலையில், சிங்கள பகுதியில், ஒரு சிங்கள குடும்ப நிகழ்வில், ஒரு சிங்கள செய்தியாளர், இவ்வாறன செய்தி சேகரிப்பதை அரசு தடுக்க முனையாது. சம்பவம் முடிந்து நீதிபதி வீடு திரும்பிய பின் செய்தியை வெளியிடுவதால் நீதிபதிக்கு ஆபத்து இல்லை.

ஆனால் அதை நீதிபதி இளம்செழியனே ஒரு அரசியல்வாதியாக கமராக்களை ஏற்பாடு செய்து பகிரங்க படுத்தினார் என்று நீங்கள் சொல்லும் போது அது ஆதாரம் இல்லாத, ஆனால் குறைந்த அளவில் சாத்தியமான நிகழ்வு பற்றிய ஒரு கருத்தாகும். போர்க்காலத்திலேயே கிருஷாந்தி குமாரசாமி வழக்கு முதல் வேறு வழக்குகளில் கூட குற்றவாளிகளான இராணுவ வீரருக்கு நீண்ட தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கியவர் இளம்செழியன். இவரது துணிச்சலான செயற்பாடுகளை மெச்சி அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இவரது வீடு தேடிச் சென்று இவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கினார்கள். ஆனால் அவர் இலங்கையிலேயே தனது பயனுள்ளது என்று கூறி அங்கே இருக்கிறார். அரசியல் பழிவாங்கலுக்கு  அஞ்சாமல் வித்தியா கொலைவழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனில் பங்கு பற்றி தீர்ப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். அவர் இன்றுவரை அரசியலில் நாட்டம் காட்டவில்லை.  இவர் போன்றவர்கள் அங்கே மக்களுக்கு இன்று மிகவும் தேவையானவர்கள். எதுவித ஆதாரங்களும் இல்லாமல் இவர் போன்றவர்களை வெறுத்து ஒதுங்க செய்வதால் மக்களின் அழிவு மேலும் அதிகரிக்குமே அன்றி குறையாது. நீங்களுமா அதற்கு பங்களிக்கிறீர்கள்?

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, Jude said:

மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்...

இளஞ்செழியன் மரண தண்டனை தீர்ப்பு வழங்கினார் என்றால் அது என்ன அவரின் தனிப்பட்ட முடிவா?

இலங்கையின் நீதி நிர்வாக சட்ட பிரிவுகளின் அடிப்படையில் அவர் வழங்கிய தீர்ப்பு...

அங்கே தனிப்பட்ட முடிவுகளுக்கு இடமில்லை...அதுபோக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் வேண்டுமென்று இப்போதான்  மைத்திரி முயற்சிக்கிறார்...அதுக்கு பலமான தடை போடுகிறது  EU & US ...

அதுபோக ஒரு நாட்டின் நீதிபதியாய் நிகழ்காலத்தில்  இருப்பவருக்கு அமெரிக்கா வந்து எங்க நாட்டுக்கு வாருங்கள் என்று குடியுரிமை கொடுக்குமா? ஆச்சரியமாக இருக்கிறது, அந்த முயற்சிபாடின் இணைப்புகள் ஏதாவது உங்கள் கைவசம் இருக்கிறதா? தயவு செய்து தாருங்கள்...

பலர் அந்த... அரசுகளின் நிர்வாகத்திலிருப்பவர்களுக்கு அமெரிக்கா சிற்றிசன் கொடுக்க விளைவதை அறிய ஆவலாய் இருப்பார்கள்...

Share this post

Link to post
Share on other sites
On 7/22/2018 at 6:33 PM, valavan said:

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டலாம் காட்டாமலும் போகலாம்  ஐயா விக்கியரும் நீதி அரசர் தானே:34_rolling_eyes: 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, valavan said:

மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்...

செய்தி எப்படி வெளிவந்தது என்பது தான் உங்கள் கேள்வி. அதற்கான உங்கள் எதிர்வு கூறல், இந்த செய்தியை நீதிபதி இளஞ்செழியனே தான் அரசியலில் ஈடுபடும் நோக்கத்துடன் காமராக்களுக்கு முன் நின்று வெளிவிட்டு இருக்கலாம் என்பதாகும். அதற்கு ஆதாரமாக, இளஞ்செழியனுக்கு உள்ள பாதுகாப்பையும் அதை மீறி செய்தியாளர்கள் செய்தியை சேகரித்து இருக்கமுடியாது என்ற வாதத்தை முன் வைத்தீர்கள். எனது வாதம், இந்த நிகழ்வு முடிந்த பின் செய்தி வருவதால் நீதிபதி  இளஞ்செழியனுக்கு ஆபத்து இல்லை என்பாதாலும், முன்னர்  இளஞ்செழியன் பற்றி செய்தி சேகரித்தவர்கள் தமக்கு செய்தி வழங்குபவருடன் செய்த உடன்பாட்டின் படி செய்தியை பெற்று வெளிவிட்டு இருக்கலாம் என்பதே.

அதற்கு உங்கள் எதிர் வாதம் எங்கே? மேலே உள்ள "மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்..." என்பதா உங்கள் எதிர்வாதம்?

நீதிபதி இளஞ்செழியன் தனது அமெரிக்க குடியுரிமை பற்றி சொன்ன வாசங்கள்:

“Recognition of his contribution to judicial independence. Recalling the award, Ilancheliyan said: “When I was told by US officials that I could stay back in the US as a citizen, I said I would like to continue to serve the Lankan judiciary. Thereupon, a State Department official remarked that their choice was right!”

கீழே உள்ள இணைப்புகளில் இதை கண்டேன்.

https://www.ipetitions.com/petition/requesting-legal-action-against-to-jaffna-high
http://www.newjaffna.net/?p=30313

நாங்கள் இங்கே நீதிபதி இளஞ்செழியனின் அமெரிக்க குடியுரிமை பற்றி விவாதிக்கவில்லை. அவரின் சிறப்பான பணி பற்றி விபரிக்கவே அதை குறிப்ப்ட்டேன். மேலும் நீதித்துறை, சட்டங்கள், இலங்கையில் மரணதண்டனை பற்றிய விடயங்களையும் நாம் இங்கு விவாதிக்கவில்லை. மரணதண்டனை இலங்கையில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் நிறைவேற்ற படுவதில்லை. இப்போது நிறைவேற்ற விரும்புகிறார்கள். நீதித்துறை, சட்டங்கள், இலங்கையில் மரணதண்டனை பற்றிய விபரங்களை நான் தேடி உங்களுக்கு தருவதிலும் பார்க்க நீங்களே தேடி அறிந்து கொண்டால் அந்த அறிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டலாம் காட்டாமலும் போகலாம்  ஐயா விக்கியரும் நீதி அரசர் தானே:34_rolling_eyes: 

அரசியல்வாதிகள் இல்லாமல் ஒரு ஜனநாயக நாடான இலங்கை இயங்க முடியாது. கொலைகாரர், பயங்கரவாதிகள், கொள்ளையர், மற்றும் சண்டியர்கள் அரசியல்வாதிகளாக இருந்து இலங்கையை ஆள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு ஆபத்தான ஆவா கும்பல் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர் என்று பெயர் எடுத்த ஒரு நீதிபதி அரசியலுக்கு வருவது எம்மில் சிலருக்கு பிடிக்கவில்லை. இது முட்டாள்தனமாக படவில்லையா? நாட்டை ஆளும் சட்டத்தை உருவாக்குவதற்கு நல்ல நீதிபதி என்று பெயர் எடுத்தவர் வேண்டாம், பலரையும் கொன்ற முன்னாள் கொலைகாரர் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு வாக்கும் போட்டு அவர்களை தெரிவு செய்து அந்த ஆட்சியில் தொடர்ந்து அழிந்து போகும் மக்கள் வாழத்தக்க இனமாக தெரியவில்லை. ?

Share this post

Link to post
Share on other sites
On 7/28/2018 at 12:19 AM, Jude said:

பாவம் மக்கள் இது தெரியாமல் அவர்களையே இன்னமும் விரும்புகிறது 

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this