Jump to content

பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும்


Recommended Posts

பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும்

 

ரொபட் அன்­டனி

குடும்­ப­மொன்று சமூ­கத்தில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்க்­கைத்­த­ரத்­திலும் முன்­னே­றிச்­செல்­வ­தற்­காக தமது முழு முயற்­சி­யையும் மேற்­கொண்டு நகர்­வு­களை முன்­னெ­டுக்கும். அதில் வெற்­றி­பெ­று­கின்ற குடும்­பங்­களும் உள்­ளன. முன்­னேற்­ற­ம­டை­யாத குடும்­பங்­களும் உள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் ஒரு குடும்பம் சமூ­கத்தில் ஒரு நல்ல வாழ்க்­கைத்­த­ரத்தை அடை­ய­வேண்­டு­மென்றால் கடின உழைப்­புடன்கூடிய அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ்­வாறு அந்தக் குடும்­பத்­தினால் தனித்து அதனை செய்ய முடி­யாது.

அதற்கு மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற அர­சாங்­கமும் பக்­க­ப­ல­மாக இருக்­க­வேண்டும். அதே­போன்று பொரு­ளா­தார ரீதி­யிலும் சமூக பாது­காப்பு ரீதி­யிலும் கடின உழைப்பின் மூலம் முன்­னேற்­ற­ம­டைந்து வரு­கின்ற குடும்­பங்கள் இயற்கை அனர்த்­தங்கள் மற்றும் வேறு கார­ணங்­க­ளினால் பாதிக்­கப்­பட்டால் அர­சாங்கம் உடனடி­யாக உதவி செய்து அவர்­களை தூக்­கி­வி­டு­கின்­றது. அது அவ்­வாறு செய்­யப்­ப­ட­வேண்டும். மக்­க­ளுக்கு இது­போன்ற சவால்கள் வரும்­போது அவர்­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜன­நா­யக ரீதியில் மக்­களால் அர­சாங்கம் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்­றது.

உதா­ர­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு செய்­ய­வேண்­டிய உத­விகள், சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் செய்­ய­வேண்­டிய உத­விகள், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உத­விகள் என்­பன­வற்றை இதில் குறிப்­பி­டலாம். எனினும் இவ்­வா­றா­ன­தொரு அனர்த்­தத்­திற்கு முகம்­கொ­டுத்து 9 வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் இது­வரை நிவா­ர­ணங்­களைப் பெற முடி­யாது துன்­பங்­களை எதிர்­கொள்­கின்ற மக்கள் வடக்கு, கிழக்கில் உள்­ளனர் என்­பதே இங்கு குறிப்­பி­டப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.

கடந்த 30 வரு­ட­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பகு­திகள் பாரிய இழப்­புக்­க­ளையும் பின்­ன­டை­வு­க­ளையும் சந்­தித்­தன. கிட்­டத்­தட்ட 30 வரு­டங்கள் பொரு­ளா­தா­ரத்­திலும் சமூக வளர்ச்­சி­யிலும் நாம் பின்ன­டை­வுக்கு சென்றோம். எனினும் யுத்தம் முடி­வ­டைந்து 9 வரு­டங்கள் முடிந்­து­விட்ட நிலை­யிலும் எம்மால் மீண்டு வரு­வ­தற்கு கடி­ன­மா­கவே உள்­ளது. யுத்­தத்தின் வடுக்­க­ளி­லி­ருந்து இன்னும் மக்கள் மீள­மு­டி­யாது தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். யுத்­தத்தின் கோர வடுக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை வாட்­டி­வ­தைப்­ப­துடன் அவர்­களை மீள்­ எழவிடாமல் தடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த சூழலில் பொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற வகையில் யுத்­தத்தின் வடுக்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களை அந்த வடுக்­க­ளி­லி­ருந்து மீளக்­கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை சரி­யான முறையில் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வேண்டும். குறிப்­பாக அவர்­க­ளது சமூகப் பாது­காப்பு மற்றும் வாழ்­வா­தா­ரப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் விரைந்து தீர்வை வழங்­கி­யி­ருக்­க­வேண்டும். ஆனால் இது­வரை அதற்­கான முயற்சி ஒரு பொறி­மு­றையின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். யுத்தம் முடி­வ­டைந்து 9 வரு­டங்கள் கடந்­துள்ள இந்த சூழலில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண இழப்­பீட்டை வழங்­கு­வ­தற்­கான இழப்­பீட்டு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த இழப்­பீட்டு அலு­வ­லக சட்­ட­மூலம் தொடர்பில் எதிர்­வரும் நாட்­களில் விவாதம் நடத்­தப்­பட்டு அது சட்­ட­மா­கி­ய­பின்னர் இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­படும். தொடர்ந்து காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­லகம் உள்­ளிட்ட அமைப்­புக்கள் முன்­வைக்கும் பரிந்­து­ரை­களின் அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்­கப்­படும். இது தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டா­வான அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்­க­வினால் கடந்த செவ்­வாய்க்­கிழமை முன்­வைக்­கப்­பட்­டது.

யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இவ்­வா­றான நிவா­ர­ணங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. அவர்கள் யாரென அடை­யாளம் காண முயற்­சித்தல் அவ­சி­ய­மாகும். யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் மற்றும் அதன் பின்­னரும் காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வுகள் இன்று நிவா­ரண இழப்­பீட்டை பெற­வேண்­டிய சூழலில் பாரிய துன்ப துய­ரங்­களை எதிர்­கொண்டு வாழ்ந்து வரு­கின்­றனர்.

அதே­போன்று யுத்­தத்­தின்­போது கண­வனை இழந்த பெண்கள், குடும்­பத்­த­லை­வி­க­ளாக இன்று தமது குடும்­பத்தை கொண்­டு­ந­டத்­து­வதில் பாரிய இன்­னல்­களை சந்­தித்து வரு­கின்­றனர். அத்­துடன் தமது உற­வு­களை இழந்த குடும்­பங்கள் வாழ்க்­கையை கொண்­டு­செல்­வ­திலும் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இந்­தநி­லையில் ஏன் யுத்தம் முடி­வ­டைந்து 9 வரு­டங்கள் கடந்­த­போ­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வில்லை என்ற கேள்வி எழு­கின்­றது. இதற்கு நாம் இதன் பின்­ன­ணியை ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

 யுத்தம் 2009ஆம் ஆண்டு முடி­வ­டைந்­தது. அதன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்­கா­கவும் இதன்­பின்னர் இது­போன்ற ஒரு­மோதல் நிலைமை இந்­த­நாட்டில் உரு­வா­காமல் இருப்­ப­தற்­காக பரிந்­து­ரை­களை முன்­வைக்கும் நோக்­கிலும் கற்­றறிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது. சுமார் 6 ­மா­தங்கள் நாடு­மு­ழு­வதும் அமர்­வு­களை நடத்தி மக்­க­ளி­ட­மி­ருந்தும் சாட்­சி­யங்­களை பெற்­றுக்­கொண்ட இந்த ஆணைக்­குழு 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதமளவில் தனது பரந்­து­பட்ட அறிக்­கையை வெளி­யிட்­டது. அதில் ஆக்­க­பூர்­வ­மான பரிந்­து­ரைகள் காணப்­பட்­டன. எனினும் இது­வரை காலமும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் சரி­யான முறையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் அனைத்­துப்­பக்­க­ங்களிலும் இருக்­கின்­றன.

எப்­ப­டி­யி­ருப்­பினும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விட­யத்தில் மிகவும் அக்­க­றை­யாக செயற்­பட்டு வந்­தது. குறிப்­பாக 2012 ஆம் ஆண்டு முத­லா­வது பிரே­ர­ணையை ஐ.நா. மனித உரி­மைப்­பே­ரவை இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றி­யது. அதில்கூட பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் 2013, 2014 ஆம் ஆண்­டு­க­ளிலும் ஜெனி­வாவில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. அவற்­றிலும் இந்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன. எனினும் அது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கக்­கூ­டிய வகையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

அதன்­பின்னர் 2015ஆம் ஆண்டு இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து ஜெனிவா மனித உரி­மை­ப்பே­ர­வையில் மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதில் இழப்­பீடு வழங்­கு­வ­தற்­கான அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று ஒரு பரிந்­து­ரை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­லகம் ஒன்றும் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அந்த அலு­வ­ல­கத்தின் பரிந்­து­ரை­களின் பிர­காரம் இழப்­பீடு வழங்கும் நட­வ­டிக்கைகள் இடம்­பெ­ற­வேண்டும் என்றும் அதற்­காக இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னாலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த நிலை­யி­லேயே தற்­போது இழப்­பீட்டு அலு­வ­லகம் தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்­வரை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக 2019ஆம் ஆண்­டு­வரை மீண்டும் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அந்தக் கால­அ­வ­காசம் முடி­வ­தற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலை­யி­லேயே தற்­போது இழப்­பீட்டு அலு­வ­லகம் தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை விரை­வாக விவா­தத்­திற்குட்­ப­டுத்தி நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் ஆவ­ன­செய்­ய­வேண்டும். ஏற்­க­னவே 9 வரு­ட­கா­ல­மாக இந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் வாழ்க்­கையை கொண்­டு­ந­டத்­து­வ­தற்கு போராடி வரு­கின்­றனர். அவர்­களை மேலும் வாட்­டி­வ­தைக்­காமல் விரை­வாக இழப்­பீட்டு அலு­வ­ல­கத்தை நிறுவி அந்த மக்­க­ளுக்கு நிவா­ர­ணத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.

இழப்­பீட்டு அலு­வ­ல­கத்தின் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண இழப்­பீட்டை பெற்­றுக்­கொ­டுப்­பதில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் அலு­வல­கத்தின் பரிந்­து­ரைகள் மிக முக்­கி­யத்­துவ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கின்­றன. இந்த பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வா­கவே காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் அடை­யாளம் காணப்­பட்டு இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

ஒரு­முறை இந்த இழப்­பீட்டு விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த முன்­னைய அர­சாங்­கத்தின் காணா­மல்­போனோர் குறித்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வல் பர­ண­கம இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட ஒரு குடும்­பத்­திற்கு 5 இலட்சம் ரூபா­வ­ரையில் நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் யுத்­தத்தின் வடுக்­களில் சிக்கி பாரிய இழப்­புக்­களை சந்­தித்­தி­ருந்­தனர். உற­வுகள் மற்றும் உட­மை­களை இழந்த இந்த மக்கள் யுத்தம் முடிந்­ததன் பின்னர் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொண்­டி­ருந்­தனர். எனவே அவர்­க­ளுக்கு ஒரு­கு­றிப்­பி­டத்­தக்க அளவு நிவா­ரண நிதியை பெற்­றுக்­கொ­டுப்­பதன் ஊடாக அவர்­களின் இழப்­பு­களை ஈடு­செய்ய முடி­யாது. ஆனால் அந்த மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கொண்­டு­ந­டத்­து­வ­தற்கு நிவா­ரண இழப்­பீடு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். அது தொடர்பில் சரி­யான முறையில் அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் எதிர்­கொண்­டு­வரும் சிர­மங்கள் குறித்து கவனம் செலுத்­த ­வேண்டும். யுத்தம் முடிந்­த­வு­ட­னேயே கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­ வேண்­டிய இந்த நிவா­ரண இழப்­பீட்­டு­ வி­டயம் இது­வ­ரை­காலம் தாம­த­ம­டைந்­துள்­ளமை தொடர்­பிலும் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­து­வது அவ­சியம். எனவே தாம­த­மின்றி இழப்­பீட்டு அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது கட்­டா­ய­மாகும்.

யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் எந்­த­வொரு விட­யமும் இது­வரை முழு­மை­யாக செய்­யப்­ப­ட­வில்லை. விசே­ட­மாக காணா­மல்­போனோர் விவ­காரம் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளது. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. உண்­மை­யைக்­கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணமும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு யுத்­தத்தின் பின்னர் கடந்த 9 வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சாத­க­மான விட­யங்கள் எதுவும் முழு­மை­யாக இடம்­பெற்­ற­தாக கூற முடி­யாது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் இந்த விட­யங்கள் விரை­வாக இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் காணி விடு­விப்பில் மாத்­திரம் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டதே தவிர ஏனைய விட­யங்கள் தாம­த­மா­கிக்­கொண்டே செல்­கின்­றன. தமக்கு நேர்ந்த அநீ­திக்கு நீதி நிவா­ரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் தென்­னி­லங்­கையில் ஏற்­ப­டு­கின்ற அர­சியல் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப காய்­ந­கர்த்­தலில் ஆர்வம் காட்டும் நல்­லாட்சி அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான விட­யங்­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் ஆர்வம்காட்­டு­வ­தில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

 தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்த இழப்பீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கையை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு இழப்பீட்டு அலுவலகம் உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டியது அவசியம் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டும். அரசாங்கம் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தையும் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நிறுவியது.

எனவே இழப்பீட்டு அலுவலக விடயத்தில் அரசாங்கம் அதன் தேவை குறித்து தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகும். சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த இழப்பீட்டு அலுவலகம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. எனவே தாமதப்படுத்தாமல் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். மக்கள் 9 வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் இந்த அவலநிலைக்கு விடிவு காணவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இன்னும் காலத்தை கடத்தாமல் விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டி எதிர்காலம் தொடர்பில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இந்த இழப்பீடு வழங்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகமே இந்த இழப்பீட்டு அலுவலக விடயதானத்துக்கு பொறுப்பாக இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த அலுவலகம் இழப்பீடு வழங்கும் விடயத்தில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-21#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.