கிருபன்

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ்

Recommended Posts

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ்

சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.”

“அவர் என்ன சொன்னார்?”

“அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதியாக தீர்மானித்திருந்தேன். இப்போ பிரிஞ்சு தனியா வந்திருக்கேன். டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன்.”

“அவருக்கு உங்களுடன் இருக்க விருப்பம் இருந்ததா?”

“ஆண்கள் என்றுமே மனைவியின் நலன், தேவை, பிரச்சனை பற்றி கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு நான் ஒரு உடைமை. ஓட்டையோ உடைசலோ இருக்கட்டுமே என்பது அவரது அணுகுமுறை. நீ பார்த்திருப்பாயே, ரெண்டு பெண்டாட்டி வைத்திருக்கிற ஆண்கள் இரண்டு பெண்களையும் தக்க வைக்கவே ஆசைப்படுவார்கள் – ஒருவரிடம் திருப்தி இல்லை என்றாலும் கூட. அது ஒரு டிப்பிக்கல் ஆண் நிலைப்பாடு.”

நான் மீளவும் கேட்டேன்,

“அவருக்கு உங்கள் மீது விருப்பமில்லையா?”

அவர் எரிச்சலானார், “ஏன் திரும்பத் திரும்ப கேட்குறே? அவருக்கு விருப்பமிருந்தா தான் என்ன? நான் சந்தோஷமா இல்ல. என் சந்தோஷம் முக்கியம் இல்லையா? ஏன் அவரோட வசதிக்காத இந்த உறவை நான் சகிச்சுக்கணும்?”

திருமண உறவில் தனிநபர் திருப்தி முக்கியம் என்கிற தரப்பே என்னுடையதும். ஆனால் அப்படி ஒருவருக்கு அதிருப்தி என்றால் அந்த உறவை காப்பாற்ற சிறிய முயற்சிகளையாவது அவர் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இன்று நாம் அத்தகைய சகிப்புத் தன்மையை இழந்து வருகிறோம் என்பது ஒரு பக்கம் என்றால், எதற்கு மணவாழ்வை முறிக்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தெள்வில்லை என்பது இன்னொரு பக்கம். நான் அத்தோழியிடம் கேட்டேன்,

“நீங்கள் சந்தோஷமாக இல்லைன்னு சொல்றீங்களா? இல்லை திருமண உறவில் நீங்கள் சந்தோஷமா இல்லைங்கிறீங்களா?”

“என்ன ஸ்டுப்பிட் கேள்வி. ரெண்டும் ஒண்ணு தானே?”

“ரெண்டும் ஒண்ணு இல்லீங்க. நீங்க தனிப்பட்ட முறையில் சந்தோஷமா இருக்கிறது வேறே, திருமணத்தில் சந்தோஷமா இருக்கிறது வேறே. ஒன்று இன்னொன்றுக்கு உதவலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.”

“என்ன தான் சொல்றே?”

“நீங்க திருமண வாழ்வில் சந்தோஷமா இல்லைன்னா அதை சரி செய்றதுக்கு முயற்சிக்கலாம். ஆனால் நீங்க உங்க வாழ்க்கையில் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்றால் அது வேறு பிரச்சனை. அதை மண முறிவு மூலம் சரி செய்ய முடியாது.”

“அவரோட நான் மகிழ்ச்சியால் இல்லைங்கிறதுனால தானே என் வாழ்க்கை நரகமாச்சு?”

“சரி இது உண்மைன்னா, அவரை விட்டு பிரிஞ்ச பிறகு ரொம்ப குதூகலமா இருக்கீங்களா?”

“இல்லை இப்பவும் அந்த பாதிப்பு என்னை விட்டுப் போகல”

“அந்த மனச்சோர்வை முழுக்க போயிடுச்சா?”

“இல்லை”

“இல்லைன்னா உங்க சோர்வோட காரணம் அவர் இல்லை தானே? இல்லை என்றால் அவரை பிரிந்த மறுகணம் உங்க வாழ்வே சொர்க்கமாக ஆகணுமே?”

அவர் கோபத்தில் போனை துண்டித்து விட்டார்.

 

இன்று நான் காணும் கணிசமான மணமுறிவுகள் இப்படி தெளிவற்ற காரணங்களால் தான் நிகழ்கின்றன.

 ஒன்று, இன்று முன்னளவுக்கு யாரும் மண உறவுகளை நம்பி இல்லை. தனியாக வாழ்வது இன்று பெரும் சவால் அல்ல. அடுத்து முக்கியமாய், இன்று பலரையும் சொல்லொண்ணா துக்கம், சோர்வு, அவநம்பிக்கை, கசப்பு ஆட்கொள்கிறது. இதன் காரணம் என்னவென துல்லியமாய் தெரியாத நிலையில் ஒவ்வொரு எளிய இலக்குகளையாய் பலி கொடுக்கிறார்கள்.

பேஸ்புக்கை டீ அக்டிவேட் செய்வார்கள், வாட் ஆப்பை, மெஸஞ்சரை போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வார்கள், சிலர் இந்த நடவடிக்கைகளை அடுத்து ஒரு சிறிய திருப்தியை உணர்வார்கள்; ஆனால் இதுவும் தற்காலிகமே. வருத்தமும் சோர்வும் மீண்டும் அவர்களை ஆட்கொள்ளும். இப்போது அவர்கள் நட்புறவுகளை துண்டிப்பார்கள். அடுத்து, வேலையில் இருந்து அடிக்கடி லீவ் எடுப்பார்கள். சிலர் நேர்மறையாக, புகைப்படக் கலை, இசை, ஓவியம் என எதிலாவது புதிதாக ஈடுபடுவார்கள். இதற்கு நடுவில் சிக்கி விபத்தாவது திருமண வாழ்வு. 

பேஸ்புக் நண்பர்கள், வாட்ஸ் ஆப் அரட்டைகள், மற்றும் நடைமுறை வாழ்வு நண்பர்களை விட்டு விலகிய பின்னரும் மனம் நிம்மதி கொள்ளவில்லை எனில் நிச்சயம் பிரச்சனை கணவன் / மனைவிடத்து தான் என நம்புவார்கள். 

திருமணத்தில் ஆண்களுக்கு பொதுவாய் அழுத்தம் குறைவு. ஆகையால் அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு தாமதமாய் திரும்புவார்கள். மனைவியுடன் உரையாடுவதை குறைத்துக் கொள்வார்கள். செக்ஸில் ஈடுபாடு இழப்பார்கள். ஒருவேளை புதிய பெண்ணுடல்களை நாடினால் செக்ஸில் கூடுதல் திருப்தி கிடைத்து அதனால் வாழ்வில் மகிழ்ச்சி மீளும் என நம்புவார்கள். பெண்களும் இப்படி முயற்சிக்கலாம், என்றாலும் அவர்கள் அதிகமாய் உறவை முறிப்பதிலேயே முனைப்பு கொள்கிறார்கள் என்பது என் கணிப்பு; ஏனெனில் குடும்ப வாழ்வில் பெண்களுக்கு நெருக்கடி அதிகம்.

சமீப காலங்களில் இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. தில்லியில் தினமும் நூறு விவாகரத்து வழக்குகளாவது தொடுக்கப்படுகின்றன என்கிறார்கள். 2003இல் இருந்து 2011 வரை கொல்கொத்தாவில் விவாகரத்தில் 350% அதிகரித்துள்ளன. 2010-14க்கு இடையிலான காலத்தில் மும்பையில் விவாகரத்துகள் இரட்டிப்பாயுள்ளன. இதற்கு பல நியாயமான காரணங்கள் உண்டு தாம். ஒரு நியாயமற்ற காரணம் நான் மேலே சுட்டிக் காட்டி உள்ளது.

இனிவரும் காலங்களில் நம் வாழ்வில் விளக்க இயலாத அதிருப்தியும் நிம்மதியின்மையும் கசப்பும் அதிகமாகப் போகிறது. இதைப் போக்க நாம் கீழ்வரும் அபத்த தீர்வுகளையே அதிகம் கையாளப் போகிறோம்.

(1)  பேஸ்புக் டீஆக்டிவேஷன்

(2)  வாட்ஸ் ஆப்பை விட்டு நீங்குதல்

(3)  ஒவ்வொரு சமூக உறவாடலாக கைவிடுதல்

(4)  பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் மூழ்குதல்

(5)  உளவியல் ஆலோசகரை அணுகுதல்

(6)  விவாகரத்துக்கு விண்ணப்பித்தல்

 

மேலும், இனிமேல் ஆண் பெண் உறவுகளில் எந்த நிலையான தன்மையும் இராது. தனிநபர்கள் உள்ளுக்குள் திருப்தியாக இருந்தால் ஒழிய திருமண / காதல் உறவுகள் இனி தப்பிக்காது. அதாவது, இனிமேல் உறவின் நன்மை மட்டுமே அதைக் காப்பாற்றாது.

இதற்கு சரியான தீர்வு?

நமது மனச்சோர்வுக்கு அடிப்படை காரணத்தை நமக்குள்ளே தான் தேட வேண்டும், அடுத்தவரிடம் அல்ல எனும் தெளிவு இருந்தாலே பாதி விவாகரத்துகளை தவிர்க்கலாம்.

http://thiruttusavi.blogspot.com/2018/07/1_23.html?m=1

http://thiruttusavi.blogspot.com/2018/07/2_23.html?m=1

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இதில் என் கருத்து வெறும் ஏட்டுச் சுரைக்காயாய்த் தோன்றலாம். அகவாழ்வில் உலகோர்க்கே நெறி வகுத்தவர் தமிழர். தமிழராய்ப் பிறந்தோர் அகப் பாடல்கள் சிலவற்றையாவது , குறிப்பாக வள்ளுவனின் இன்பத்துப்பாலைச் சிறிதளவாவது உட்கொள்ளுதல் மணவாழ்விலும் அதன் வாயிலாய் சமூக வாழ்விலும் ஏற்றம் தரும். வள்ளுவன் வாழ்ந்த உலகில் உளவியலாளர்களுக்கு வேலையில்லை. ஆனால் இங்கும் விவாகரத்து பெருகி வருதல் தமிழனின் அறிவுச் சருக்கல் அன்றி வேறென்ன ?

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தக்காலத்திலை புட்டுக்கு உப்பு காணாட்டிலும் உடனை விவாகரத்துத்தான் கண்டியளோ ❤️

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
On 7/25/2018 at 2:06 PM, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை புட்டுக்கு உப்பு காணாட்டிலும் உடனை விவாகரத்துத்தான் கண்டியளோ ❤️

குசா புட்டு அவித்தது கணவனா மனைவியா? தெளிவாக எழுதவேணும் கண்டியளோ!!!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now