யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
நவீனன்

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

Recommended Posts

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/spiritual/01/189020?ref=home-latest

Edited by நவீனன்

Share this post

Link to post
Share on other sites

என்னாடா பறைமேளத்தை காணேல்லை எண்டு பார்த்தன்.........சரி அதுவும் வந்திட்டுது.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்........இருந்தும் தமிழினம் பின்னோக்கி போகின்றதோ என்றொரு மனவருத்தம் என் அடிமனதை வருடுகின்றது.

Share this post

Link to post
Share on other sites

கவலைக்குரிய விடயம் ஒன்றும் செய்யமுடியாது.

Share this post

Link to post
Share on other sites

இவர்கள் தீ மிதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை. யருக்கும் பிரயோசனம இல்லாத ஒரு வேலையை செய்வதால் கடவுள் அருள் புரிவார் என்று நம்பும் கூட்டம் முட்டாள்கள் கூட்டமே. உலகிலே நாங்கள் தான் அதி முட்டாள்கள் என்பதை தமிழ் பக்தர்கள் ஐரோப்பிய நமரங்களில் கோவில் திருவிழாக்களில் நிரூபித்து வருகிறார்கள். வருடம் முழுவதும் குளிரிலும், பனியலும்உழைக்கும் பணத்தை கொண்டு கோடை கால விடுமுறையை சந்தோசமாக அனுபவிக்காமல் கோவில் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை நிரப்பும் முட்டாள்கள் கூட்டம். 

 • Like 3
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

ஐரோப்பாவில் ஒரு நாட்டில் தைபொங்கலன்று வெளியே பானை வைத்து பொங்கல் செய்தார்கள் ஒரு குடும்பம், விறைக்கும் குளிரில் மேலங்கியின்றி வேட்டி மட்டும் அணிந்தபடி..

நெருப்பும் புகையும் எழுந்ததை பார்த்து பக்கத்துவீட்டு வெள்ளை பொலிசுக்கு அடிக்க ,தீயணைப்பு வாகனம் கூவிகொண்டுவந்து ஒரே அடி, வீட்டு காரருக்கு இன்னொருமுறை இப்படி நடந்துகொள்ளக்கூடாது எனும் எச்சரிக்கையும் தண்டப்பணமும் அறவிடப்பட்டது...

அதேபோல் இன்னொரு நாட்டில் வயதானவர் தூக்கத்திலயே இறந்துவிட்டார் ,வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் திரைகளைமூடி தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி அழுதுகொண்டிருக்க...அதே சட்ட நடவடிக்கைகள் ,அம்புலன்ஸுகள்,எச்சரிக்கைகள்...

தீ மிதிக்கும் இந்த நடவடிக்கைபற்றி எவரும் காவல்துறையிடம் புகார் கொடுக்காதவரை  மத சம்பிரதாயங்கள் வாழும், அப்படியில்லாம யாரும் புகார் கொடுத்தால் ஆக குறைந்தது தீயணைப்பு துறைக்கு அறிவித்து தயார் நிலையில் ஒரு வண்டி நிறுத்தி வைக்கப்படாததற்குகூட  சட்டம் தண்டிக்கலாம்...

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரியது...ஆனால் பொதுவெளியில் பகிரப்பட்ட செய்தியென்பதால் ஏதோ சொல்ல தோன்றிச்சு..

 • Like 7
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
46 minutes ago, valavan said:

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

47 minutes ago, valavan said:

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரிய

இப்படியான கூட்டங்களை நம்பித்தான் ஐயர்மார் சொந்தச்செலவில் கோவில்கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

 வீடியோவைப் பார்த்தேன். முதலிலே உரு வந்து ஓடுபட்டுத் திரிந்தவர் தீமிதிக்காமல் ஓடிவிடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் சிங்கன் கடைசியில ஏறிவிட்டார். இல்லாட்டி யாரும் ஏத்திவிட்டாங்களோ தெரியவில்லை.

கரி போடும் மஞ்சள் வேட்டிக்காரரின் கோமணத்தை வீடியோக்காரன் காட்டாமல் வெட்டி  வெட்டிருக்கலாம்??

நம்ம நண்பர் ஒருவரும் அங்கப்பிரதட்சணம் செய்திருக்கின்றார்?

எங்கள் பண்பாடு என்று சொல்லி இப்படிப் படம் காட்டுவதைவிட்டுவிட்டு இந்து ஞான மரபை அதன் ஆன்மீகத்தை வளர்க்க கோயில்கள் முன்வரவேண்டும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

பக்தி பண்பாடு எனும் பெயரில் பகட்டு பந்தாவை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கோவில்கள் கேளிக்கை கூடாரமாகிக்கொண்டு வருகின்றது.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

இந்த கோவிலுக்கு போவது விட அமைதியான ஏரிக்கரையில் உள்ள ரெஸ்ரராண்டில் அமர்ந்து பியர் அருந்துவதால்  மன மகிழ்வும் மன அமைதியும் அதிகமாக கிடைக்கும். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, புங்கையூரன் said:

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

Share this post

Link to post
Share on other sites

இப்ப இந்த கோவில் தொடக்கத்தில் ஆகா ஓகோ என்று செய்வினம் இரண்டு மூன்று வருடங்கள் போன பின் தமிழனுக்கு என்ற சொறிக்குனம் வெளிய எட்டி பார்க்கும் பிறகென்ன மாறி மாறி போலீசுக்கும் கவுன்சிலுக்கும் பெட்டிசம் போகும் தானாகவே இந்த தீ மிதி விளயாட்டு நின்றுவிடும் .

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விருப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை வெளிக் காட்டுவதில் (குறிப்பாக அந்நிய நாட்டில்) பக்குவம் வேண்டும். தமிழரின் பக்தி இலக்கியங்களின் வாயிலாக மெய்ஞ்ஞானத்தைப் பரப்பலாம். சிவனைப் போற்றிய திருவாசகத்தில் ஜி.யு.போப்பை உருக வைத்த தமிழர் மாண்பு இவர்கள் அறிந்திலரோ ? தமிழரின் தலைசிறந்த சங்க நாகரிக காலத்தில் இன்றைய பெரும்பாலான ஐரோப்பியர் காட்டுவாசிகளாய்த் திரிந்திருக்க வேண்டும். இன்று அவர்கள் நாகரிகமடைந்து நம்மவர் அவர் முன் காட்டுவாசிகளாய் நடந்து கொள்வது என்ன ஒரு நகை முரண் ! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

அந்த டிரெஸ்ஸிங் கவுண் ..போட்டவா...என்னத்தையோ...ஒரு நாளும் காணாத ஒண்டைக்கண்டது போல...உத்துப் பார்க்கிறா!

இப்படி நிர்வாணமாகத் திரியிறது....ஜெயின்..சமண சமயங்களின் வழக்கமாகும்!

இவருக்கு ஏதோ....ஒரு விதமான நரம்பியல் பிரச்சனை இருக்குப் போல கிடக்கு!

அல்லது...நல்ல..நுழம்புக் கடியோ தெரியாது!

மேலதிக படங்கள்....இருந்தால் இணைக்கவும்!

Share this post

Link to post
Share on other sites

அவரவருக்கு வாழ்க்கையில் என்ன பிரச்சனைகளோ. நானும் இங்குள்ள கருத்துக்களை வாசித்தபின்னர் காணொலியை பார்த்தேன். நாதஸ்வர வித்துவானும் தீயை மிதித்தார். எது எப்படியோ...

இறந்தபிறகு தீ எங்களை மிதிக்கப்போகின்றது. எங்கள் உடல் தீயில் தகனம் ஆகப்போகின்றது. இப்போ என்ன அவசரம். 

Share this post

Link to post
Share on other sites
On 7/25/2018 at 9:35 PM, சுப.சோமசுந்தரம் said:

! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

Share this post

Link to post
Share on other sites
On 7/26/2018 at 6:30 AM, நந்தன் said:

இப்பிடி தீ மிதிச்சா சூடு ஏறாதா

பலர் அப்படி  ஒன்றும் தெரிவதில்லை, என்று சொன்னாலும்... 
வேறு இடங்களில்... சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு, மருத்துவ மனையில்... அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள்,  இப்படியான வேலைகளில் இறங்குவதை தவிர்ப்பதே... புத்திசாலித் தனமானது.

1) இங்கு நாம் எப்போதும் சப்பாத்துடன்,  நடமாடுவதால்... எமது பாதங்கள், ஊரில் இருப்பவர்களை விட மென்மையானது. உடனே.. தீ கொப்பளங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

2) அப்படி தீக்காயம் ஏற்பட்டு... மருத்துவ மனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்...
அதற்குரிய வைத்திய செலவுகளை... அவரது,  மருத்துவ காப்புறுதி  நிறுவனம் ஏற்றுக்  கொள்ள மாட்டாது. 

3) அதன் பின்.. வேலையிடத்தில், மருத்துவ விடுமுறை எடுத்தமைக்கான  காரணங்கள் தெரிய வரும் போது... வரும் பிரச்சினைகளையும்  எதிர் கொள்ள வேண்டி வரலாம்.  

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, valavan said:

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

பெரியார் தமது பெயரில் ராமசாமியை நீக்கவில்லை. Rationalist Association of Sri Lanka வின் உலகப் புகழ்பெற்ற தலைவராய் விளங்கிய ஆபிரகாம் கோவூர் தமது பெயரில் ஆபிரகாமை நீக்கவில்லை.

Edited by சுப.சோமசுந்தரம்
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

ஒரு நாத்திகர்,  தலைமுறை என்று வரும்போது ஆத்திகத்தையும் மதிக்கணும் எங்கிற உங்கள் கருத்தை வரவேற்கிறேன் சார்.:)

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

அறிவு கம்மி என்றாலும் 
ஜாதியில் எவ்வளவு உயர்வானவர்கள் 
இது தெரியாமல் இங்கே சிலர் காழ்ப்புனர்வு கருத்து எழுதுகிறார்கள். 

Share this post

Link to post
Share on other sites

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

Share this post

Link to post
Share on other sites
On 7/29/2018 at 6:37 PM, தனிக்காட்டு ராஜா said:

இறைவனுக்கு நேர்த்திகடன் என்றால் என்ன? முட்டாள்த்தனமாக பறவைக்காவடி எடுப்பதும் தீயில்   இறங்குவதும் அறிவு வளர்ச்சி அடையாத காலங்களில் மக்களால் நம்பப்பட்ட மூடப் பழக்கங்கள். இதை தற்போதைய காலங்களில்  ஜரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல எங்கு செய்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளே. கடவுள் என்று ஒருவர் இருந்து அவர்  மனிதர்தாகளைப் படைத்திருந்தால் தான்  படைத்த மனிதர்கள் அறிவுடைய நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும. என்று தான் விரும்புவரே யொழிய  தன்பெயரில் காட்டு மிராண்டி மூடத்தனங்களை செய்யும், பரப்பும் மூடர்களாக இருப்பதை விரும்ப மாட்டார். 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு