யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

இராணுவ சீருடையில் ஜி- 3 யுடன் நின்ற பிரபாகரனும் யன்னலால் விடுப்புபார்த்தவரை சிங்களத்தில் அதட்டிய விக்டரும்

Recommended Posts

இராணுவ சீருடையில் ஜி- 3 யுடன் நின்ற பிரபாகரனும் யன்னலால் விடுப்புபார்த்தவரை சிங்களத்தில் அதட்டிய விக்டரும்

 

 

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் பெரியதாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுவது குறித்த தகவல் ஒன்று அப்போது யாழ்படைத்தளபதியாக இருந்த பிரிகேடியர் பல்தசாருக்கு கிடைத்திருந்தது.

இதனால் புலிகள் இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்த முன்னர் தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் பல்தசார் மற்றும் முனசிங்கா ஆகியோர் தமது தரப்பில் ஒரு கூட்டு ஏற்பாட்டு திட்டத்தை தயாராக்கினர். கோண்டாவில் பகுதியில் செல்லக்கிளியை இலக்கு வைத்து அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்துவது இவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால் இந்ததிட்டம் குறித்து முதலில் எதுவுமே நிலையில் மாதகல் இராணுவ முகாமின் அணி ஒன்று குருநகர் முகாமை இரவு 9 மணிக்குபின்னர் வந்தடைந்திருந்தது. இந்த அணியின் குறியீட்டு பெயர் 4-4 பிராவோ.( Four- Four- Bravo)இந்த அணியின் பொறுப்பாளர் வாஸ்குணவர்த்தனா.

குருநகருக்கு வந்த இந்த அணியின் பொறுப்பாளரான லெப்டினட் வாஸ் குணவர்த்தனாவை உடனடியாக சந்தித்த சரத்முனசிங்கா அன்றிரவு புலிகளின் குழு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் அதற்கு முன்னதாக தமது 4-4 சார்ளி அணி புலிகளின் மீது கோண்டாவில் பகுதியில் ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருப்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் நள்ளிரவுக்குமுன்னர் 4-4 பிராவோ அணியை மீண்டும் மாதகல் முகாமுக்கு திரும்புமாறு கோரினார். தன்னுடன் இணைந்து கொஞ்சம் மதுஅருந்திவிட்டு செல்லுமாறும் வாஸ் குணவர்த்தனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

சரத்முனசிங்கா கூறிய இந்தசெய்தியால்சற்றுபதற்றமடைந்த வாஸ் குணவர்த்தனா தனக்கு மதுஅருந்தும்மனநிலை இப்போது இல்லையெனவும் தாம் விரைவாக இரவுஉணவை முடித்து கிளம்பப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இதனையடுத்து வாஸ்குணவர்த்தனாவும் அவரது அணியும் விரைவாக மீண்டும் சுற்றுக்காவல் பணியுடன் மாதகல் முகாமுக்கு திரும்பத்தயாராகியது.

இதேசமகாலத்தில் புலிகளின் முகாமும் அன்று மிக இரகசியமாக ஆனால் பரபரப்பாக இயங்கியது.

வழமையை விட 23 ஆம் திகதி அதிகாலையே தூக்கத்திலிருந்து

விழித்த பிரபாகரன் அன்றையதாக்குதல் குறித்து செல்லக்கிளியுடனும் விக்டருடன் இறுதி ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

இந்ததாக்குதல் வெற்றியளிக்க வேண்டுமென்ற பதற்றத்தில் சந்தோசம் போன்ற சில போராளிகளுக்கு 22 ஆம் திகதி இரவு சரியாக தூக்கம் கூட வரவில்லை.

நேரம் மாலையாகி இரவுக்கு காத்திருந்தது. திட்டமிட்டபடி திருநெல்வேலி பலாலி வீதி தபால் பெட்டிச்சந்திக்கு அருகே வாகனமொன்றில் அடைந்த புலிகளின் அணி முன்னெச்சரிக்கையுடன் கண்ணிவெடிகளைப் புதைக்கும் இடத்தை அடைந்தது.

பிரபாகரன் உட்பட போராளிகள் அனைவரும் சிறிலங்கா படையினர் அணிவதை போன்ற ராணுவ சீருடைகளை அணிந்திருந்தனர்.

பிரபாகரன் தனக்கு பிரியமான ஜி திறி ரக துப்பாக்கியை வைத்திருந்தார்

மூத்தபோராளியான அப்பையாவின் மேற்பார்வையில் செல்லக்கிளியும் விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பித்தனர்.

தார்வீதி ஒன்றில் கண்ணிவெடிகளை புதைப்பது இலேசான வேலையல்ல. கரடுமுரடான தார் வீதியில் சந்தேகமேற்படாமல் பிக்கான் உபகரணம் ஒன்றினால் குழி வெட்டுவது மிகவும் கடினமானது.

ஆனால் மூத்தபோராளி அப்பைய்யா புலிகளின் ஆரம்பகால உள்ளுர் தயாரிப்பு வெடிபொறிமுறையில் ஒரு முக்கிய வெடிமருந்து நிபுணரென்பதால்இந்தப் பணியை அவர் மிகவும் வேகமாகவும் நிதானமாகவும் செய்துகொண்டிருந்தார்.

அப்பையா இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினராக இருந்தாலும் பெடியளுக்கு சளைக்காமல் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் இயங்குவதும் அவரது இயல்பு.

ஒருமுறை இந்தியாவுக்கு பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையாவும் ஒருவராக இருந்தார். எனினும் அவரது வயதைக்கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை பயிற்சிக்கு எடுக்க மறுப்புத்தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம்.

புலிகள் குழு அந்த இடத்தில் நிற்பதை மங்கிய வெளிச்சத்தில் சில வீட்டுக்காரர்கள் கண்டனர். ஆனால் புலிகளின் அணியை சிறிலங்கா படையினரென நினைத்து அச்சத்தில் தமது வீடுகளின் யன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருந்தனர்.

ஆயினும் ஒரு முதியவர் மட்டும் ஆர்வம் மிகுதியால் வெளியே நிற்பவர்களை பார்ப்பதற்காக தனது வீட்டு யன்னலை திறந்து எட்டிப்பார்த்தார்.

வெளியே நின்ற விக்டர் அவரை கண்டுவிட்டு சிங்களத்தால் யன்னலை முடும் சத்தமிட வெளியே நிற்பது படையினரென்ற அச்சத்தில் அவரும் தலையை உள்ளே இழுத்து பின்னர் தமது யன்னலை அவசரமாக மூடி வீட்டின் லைற்றுகளையும் அணைத்துவிட்;டார்.

2மீற்றர் இடைவெளியில் 2 கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுவிட்டன.

அவற்றுக்கான மின்இணைப்பு வயரும் வெடிப்பு கருவியொன்றுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

வயர்வெளியே தெரியாதவாறு உருமறைப்பு செய்யப்பட்டு வீட்டு முன்றலில் இருந்த மல்லிகைப் பந்தல் ஊடாக மேலே எடுக்கப்பட்டது.

செல்லக்கிளிக்கும் விக்டருக்கும் அருகில் சென்று நிலைமையை பார்வையிட்ட பிரபாகரன் சைகையால் திருப்தி தெரிவித்துவிட்டு மீண்டும் தனது நிலைக்குதிரும்பினார்.

வீடொன்றின் கூரையில் ஏறிய செல்லக்கிளியும் விக்டரும் படையினரின் வருகைக்குரிய அறிகுறிகள் ஏதாவது தெரிகின்றதா உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர்.

பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிலையெடுத்துக்காத்திருந்தனர்.

இந்தநிலையில் குருநகர் முகாமில் இருந்து லெப்டினட் வாஸ் குணவர்த்தனாவின் 4-4 பிராவோ அணி புறப்பட்டது.

புலிகளின் தாக்குதல் அச்சம்காரணமாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை குருநகர் முகாமுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் முடிவுடன் இந்த அணி தனத பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் இது ஒரு முடிவுறாத பயணமாக மாறப்போகும் நிலைமை அதற்குத் தெரியவில்லை.

வாஸ்குணவர்த்தனா தனது ஜீப்வண்டியின் முன் பக்கத்தில் ஏறி அமர்ந்தார். அதன் சாரதியாக மனதுங்கா இருந்தார். ஜீப்பின் பிற்பகுதியில் 2 படையினர் அமர்ந்திருந்தனர்.

ஜீப் வண்டியின் பின்னால் புறப்பட்ட ராரா ரக ரக் வண்டியில் அதன் சாரதியாக பெரேரா இருந்தார். அவருக்கு அருகில் சார்ஜன்ட் திலகரட்னாவும் பெர்னாண்டோவும் இருந்தனர். 10 படையினர் இருந்தனர்.

புலிகளின் கந்தகப்பொறியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது Four- Four- Bravo அணி. இலங்கைத்தீவின் விதியை எண்ணியோ என்னவோ வீதி விளக்குகளும் அழுது வடிந்துகொண்டிருந்தன….

தடங்கள் தொடரும்….

 

https://www.ibctamil.com/srilanka/80/103714?ref=rightsidebar

Share this post


Link to post
Share on other sites

கந்தகப்பொறியில் சிக்கிய 4-4 பிராவோவும்! செல்லக்கிளியை தேடிய கிட்டுவும் !!- கறுப்பு யூலை தடங்கள்…..

 

 
 

சரத்முனசிங்கா வழங்கிய பதற்றமான செய்திகளின் அடிப்படையில் நள்ளிரவுக்கு முன்னர் மீண்டும் மாதகல்முகாமைஅடையவேண்டியகட்டாயத்துக்கு தள்ளப்பட்டது 4-4 பிராவோ அணி.

இதனால் தனது சுற்றுக்காவலின் தூரத்தை சுருக்கிய அந்தஅணி குருநகர் முகாமில் இருந்து இரவு பத்துமணிக்குப்பின்னர் புறப்பட்டது.

முதலில் 4-4 பிராவோ அணி யாழ். நகரச்சந்தை மற்றும் நாகவிகாரை ஊடான சுற்று காவல் பணியை செய்தது. அதன்பின்னர் பின்னர் நல்லூர்-கோப்பாய் ஊடாக உரும்பிராய்க்கு சென்றது.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது போலவே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தமது பயணம் குறித்த தகவல்களையும் குருநகர் முகாமுக்கு வழங்கிக்கொண்டிருந்தது 4-4 பிராவோ.

தாம் சென்ற வழியில் எந்தவிதமான அசாதாரண நிலைகளையும் 4-4 பிராவோவின் பொறுப்பாளர் வாஸ் குணவர்த்தனாவால்,அவதானிக்க முடியவில்லை.

நாய்கள் குரைத்த ஓசையை தவிர பொதுவாக நிசப்தத்தில் வீதிகள்.

உறைந்து கிடந்தன. வீதியோர மின்குமிழ்கள் மட்டும் அழுது வடிந்துகொண்டிருந்தன.

உரும்பிராயில் சிறிதுநேரம் தனதுஅணியுடன் தரித்து நின்ற வாஸ்குணவர்த்தனா இரவு 11. 28 அளவில் தனது ரேடியோ தொடர்பாடல் கருவியை எடுத்து மீண்டும் குருநகர் முகாமை தொடர்பு கொண்டு பேசினார்.

தமது 4-4 பிராவோ சுற்றுக்காவல் நடத்திய சென்ற அனைத்து இடங்களிலும் நிலைமை வழமையாக இருப்பதாக அறிக்கையிட்டார். அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டதை போலவே நள்ளிரவுக்கு முன்னர் தாம் மீண்டும் மாதகல் முகாமுக்கு திரும்ப உள்ளதாகவும் வாஸ்குணவர்த்தனா குறிப்பிட்டார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

 

ஆனால் தனது மீண்டும் மாதகலுக்குதிரும்ப முடிவுசெய்த அதே மார்கத்தில்தான் செல்லக்கிளி எக்ஸ்புளோடரில் தனது கரங்களை வைத்து காத்திருப்பதோ அல்லது

தலைவர் பிரபாகரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின மூத்த உறுப்பினர்கள் பலரும் வீதியின் இரண்டு பக்கங்களிலும் தமக்காக காத்திருப்பதோ அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

வாஸ்குணவர்தனா தெரிவுசெய்த அந்தவழித்தடம் கோண்டாவில்-கொக்குவில்- திருநெல்வேலி ஊடான மார்க்கம்.

தமது அணிமீதான தாக்குதலை சாக்காக வைத்து இலங்கைத்தீவும் இன்னும்; சிலமணிநேரத்தில் பெரும்வன்முறைக்களமாக மாறப்போகும் நிலையை கூட 4-4 பிராவோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

அந்த அணி இப்போது கோண்டாவிலை கடந்து திருநெல்வேலியால் பயணித்து கொண்டிருந்தது. நிமிடங்கள் கரைந்து அதற்குரிய மரணக்கணங்கள் நெருங்கின.

4-4பிராவோ அணியில்முதலாவதாக வந்தவாகனத்தின் ஹெட்லைற் வெளிச்சமும் வாகனத்தின் ஓசையும் வீடொன்றின் மேலேயிருந்த செல்லக்கிளி விக்டர் ஆகியோரின் புலன்களை சுறுசுறுப்பாக்கின.

செல்லக்கிளி தனது கரங்களுக்கிடையில் இருந்த எக்ஸ்புளொடரை இன்னும் இறுக்கமாக பற்றிப்பிடித்தார்.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

 

 

4-4பிராவோஅணி நெருங்கியது. புலிகளின் அணியில் நடவடிக்கைக்கு தயாராவதை அறிவிக்கும்வகையில் சிறிய சீக்காயொலி சத்தம் ஒன்று பிறந்தது.

வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிலையெடுத்துக்காத்திருந்த தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப்போராளிகளும் உசாரடைந்தனர். 4-4 பிராவோஅணி தனக்கு வைக்கப்பட்ட கந்தகப்பொறியை மிக நெருக்கமாகிவிட்டது.

மிகச்சரியானதருணமொன்று தனக்கு முன்னால் உருவாகியிருப்பதை செல்லக்கிளி மிக துல்லியமாக உணர்ந்து கொண்டார். அவரது கரம் எக்ஸ்புளொடரின் செயலியில் அழுத்தியது.

யாழ்குடாநாடே அதிரும்ஓசையுடன் 2 கண்ணிவெடிகளும் தீப்பிழம்புடன் வெடித்து சிதறின. யாழ்குடாவாசிகள் தமது வாழ்வில் கேட்ட பாரிய வெடியோசை இது.

முதலாவது கண்ணிவெடியில் சிக்கிய ஐPப் ஏறக்குறைய ஒரு தென்னைமரத்தின் உயரத்திற்கு எழும்பி சிதிலப்பட்டு மீண்டும் வீதியில் வீழ்ந்தது. இரண்டாவதுகண்ணிவெடி பின்னால் வந்த றக் வண்டியின் முன்பகுதியை இலக்கு வைத்து வெடித்தது.

ஐPப்வண்டியில் பயணித்த அனைவருமே உடலங்களாக வீதி மருங்கில் தூக்கி வீசப்பட்டனர். எங்கும் தூசுமண்டலம்.

சாரதி மனதுங்க மற்றும் அணிப்பொறுப்பாளர் வாஸ்குணவர்த்தனா ஆகியோரின் உடலங்கள் பாளங்களாக சிதறிய வீதியின் ஓரங்களில் கிடந்தன.

கண்ணிவெடிகள் வெடித்தபின்னர் இதற்கெனவே காத்திருந்த புலிகளின்; துப்பாக்கிகள் றக் வண்டியை இலக்குவைத்து சடசடத்தன. பிரபாகரனின் ஜி-3யும் ரவைகளை உமிழ்ந்தது

துருப்புக்காவி வாகனத்தில் தப்பியிருந்த இருந்த படையினரும் பதிலுக்கு வேட்டுகளைத் தீர்த்து ஒய்ந்தனர்.

ஆம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையில் சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகிவிட்டது.

திருநெல்வேலியில் வெடித்த கண்ணிவெடிகளின் பாரிய ஓசை குருநகர் முகாமுக்கும் எட்டியது.

இரவுஉணவை முடித்து தனது அறைக்கு திரும்பிய சரத் முனசிங்கவுக்கு இந்த வெடியோசையை கேட்டதும் அவரது மூளை ஏதோ பிழை நடந்துவிட்டதென்பதை உணர்த்தியது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

இந்த நிலையில் அவரது அறைக்கதவை யாரோ தட்டியதும் அவர் இன்னும் பரபரப்பானார். ஏறக்குறைய சரத்முனசிங்க கொண்டிருந்த ஊகத்தை போலவே பிரிகேடியர் பல்தசாருக்கும் ஊகம் ஏற்பட்டதால் உடனடியாகவே சரத்முனசிங்கவின் அறைக்கு சென்று கதவைத்தட்டிய அவர் உடனடியாக சரத்முனசிங்காவை வெளியே வருமாறு அழைத்தார்.

பிரிகேடியர் அழைப்பதைக்கேட்டு அறைக்கு பரபரப்பாக வெளியே வந்தார் சரத் முனசிங்க.

இருவரும் உடனடியாகவே வானொலிதொலைத்தொடர்பு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்த கொமினிக்கேசன் அறையை நோக்கி ஓடி அவற்றை இயக்கி 4-4 பிராவோவுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிசெய்தனர்

ஆனால் 4-4 பிராவோவுக்குரிய மறுமுனையோ செயலற்றுக்கிடந்தது. கம’திக்கத்தி அழைத்தும் பலனில்லை. ஏதோ ஒரு பெரும்சிக்கல் ஏற்பட்டுவிட்டதென்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது

என்ன செய்வது? நேரமோ நள்ளிரவு வேறு வழியில்லை 4-4 பிராவோ வந்த வழியாக சென்று பார்க்கவேண்டியதுதான் என முடிவு எடுத்தனர். ஆனால்

இடை வழியில் புலிகள் தாக்கினால் என்னசெய்வது,

உடனடியாக குருநகர் முகாமை உசார்படுத்திய பிரிகேடியர் பல்தசார் இரண்டு மூன்று வாகனங்களில் படையினரை பின்தொடருமாறு பணித்துவிட்டு சரத் முனசிங்காவின் ஜீப் முன் ஆசனத்தில் தாவிஏறினார்.

யாழ் பலாலிவீதியூடாக திருநெல்வேலிப்பக்கமாக கடும்வேகத்துடன் சீறிக்கொண்டு சென்றது சரத்முனசிங்கா செலுத்திய வாகனம். அவரது வாகனத்துக்கு ஈடுகொடுத்தபடியே ஏனைய ராணுவ வாகனங்கள் தொடர்ந்தன.

இந்தநிலையில் தாக்குதல் நடந்த இடத்தில் புலிகளின் அணி மிகதுரிதமாக இயங்கியது. கொல்லப்பட்ட படையினரிடமிருந்த ஆயுதங்களை அவர்கள் விரைவாக சேகரித்துக்கொண்டிருந்த போது கிட்டுவுக்கு மட்டும் திடிரென ஒரு பொறிதட்டியது.

தன்னை மறந்த நிலையில் ஒரு வினாவை உரத்துஎழுப்பினார். செல்லக்கிளி அண்ணை எங்கே? கிட்டு உரத்து எழுப்பிய அந்தவினா தலைவர் பிரபாகரன் உட்பட அனைவரினதும் காதுகளை தாக்கியது.

ஆம்… செல்லக்கிளி எங்கே?

தடங்கள் தொடரும்….

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 25 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/103772?ref=rightsidebar

Share this post


Link to post
Share on other sites

குலுங்கி அழுத தலைவர் பிரபாகரனும்! விக்டரின் தோளில் செல்லக்கிளியும்!! கறுப்புயூலை தடங்கள்....

 

 
 

திருநெல்வேலியில் தாம் மேற்கொண்ட கண்ணி வெடித்தாக்குதல் இலங்கையின் வரலாற்றில் ஒரு பெரும் இரசாயன மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்தும் என்பதை விடுதலைப்புலிகள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அது தான் நடந்தது.

அதுபோலவே தமது ராணுவஅணி மீதான இந்த தாக்குதலைமையப்படுத்தி முழு இலங்கைத்தீவும்சிலமணிநேரத்தில்; பெரும் வன்முறைக்களமாக மாறப்போகின்றது என்பதை உணராமலேயே 4-4 பிராவோவின் பொறுப்பாளர் வாஸ்குணவர்த்தனா உட்பட்ட அணியில் இருந்த பலரும் கொல்லப்பட்டனர்.

2நிலக்கண்ணிவெடிகளும் ஏககாலத்தில் வெடித்துச்சிதறி 4-4 பிராவோ அணியிலிருந்த சிலபடையினரை பலியெடுக்க புலிகளின் சரமாரியாகத்தீர்த்த துப்பாக்கி வேட்டுகள் மிகுதி படையினரையும் பலிவாங்கியிருந்தன.

தாக்குதல் ஓய்ந்தபின்னர் படையினர் வசம் இருந்த ஆயுதங்களை புலிகள் பரபரப்பாகவும் விரைவாக சேகரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் செல்லக்கிளியின்; நடமாட்டம் அங்கு இல்லாத நிலையை கிட்டு அவதானித்துவிட்டார். இதன்பின்னர் செல்லக்கிளி அண்ணைஎங்கே? என்ற கேள்வியை அவர் சற்று உரத்துக்கத்தினார்.

கிட்டுஎழுப்பியஅந்தவினா தலைவர் பிரபாகரன் உட்பட அனைவரினதும்; காதுகளில் சென்றதும்; அந்த தாக்குலின் நாயகனான செல்லக்கிளி குறித்த நினைவை அது சடுதியாக கிளப்பியது.

உடனடியாக செல்லக்கிளியைத் தேடி ஓடிய விக்டர் தாக்குதலின்போது தாம் இருந்தவீட்டின் கூரைமீது மீண்டும் தாவி ஏறினார்.

செல்லக்கிளி இருந்த இடத்தை விக்டர் பார்த்தபோது மீண்டும் ஒரு அதிர்ச்சியளிக்கும் காட்சி ஒன்று அங்கே காத்திருந்தது.

நெஞ்சில் துப்பாக்கி ரவையொன்று துளைத்தஅறிகுறியுடன் உதிரவெள்ளத்தில் கிடந்தார் செல்லக்கிளி. அவரது உயிர் மூச்சு அடக்கியிருக்கும் அறிகுறியுடன் உடல் அசைவற்றுக்கிடந்தது.

செல்லக்கிளிக்கு என்ன நடந்தது?

கண்ணி வெடியில் முழுமையாக சிக்காத றக் வண்டியில் இருந்த படையினரை குறிவைத்து புலிகள் தமது துப்பாக்கிகளைத் திருப்பிய போது சில படையினரும் பதில் தாக்குதலை தொடுத்தனர்.

இதில் ஒரு படைஉறுப்பினர் மட்டும் துருப்புக்காவி வாகனத்தின் கீழே நிலையெடுத்து இருந்து தனது துப்பாக்கியிலிருந்து அதிகமான வேட்டுக்களை தீர்த்தார்.

அவ்வாறு சுடப்பட்ட ரவைகளில் ஒன்றே செல்லக்கிளியை தாக்கியதாகக் கருதப்படுகின்றது.

கூரைமீதேறிய விக்டர் தமக்குகொண்டுவரப்போகும் செய்திக்காக ஏனைய போராளிகள் பதற்றத்துடன் கீழே காத்திருந்தனர்.

விக்டர் தனது தோளில் செல்லக்கிளியை தூக்கிக்கொண்டு வருவதை கண்டதும் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியானது.

செல்லக்கிளியின் உடலில் உயிர்த்துடிப்பு இல்லாததால் சடுதியான நிலைமையொன்று உருவாகிவிட்டதை அனைத்துபோராளிகளும் உணர்ந்தனர்.

செல்லக்கிளியின் உடலத்துடன் போராளிகள் அனைவரும் தாம் வந்த மினி பஸ் நின்ற இடத்தை நோக்கி விரைவாக ஒடி வாகனத்தில் ஏறினர்.

தலைவர் பிரபாகரன் வழமைபோலவே தனது சோகத்தை அடக்கி இறுக்கமான முகத்துடன் மௌனம்காத்தார்.

சீலனுக்கு பின்னர் மீண்டும் ஒரு முக்கிய தோழனின் மறைவை சந்தித்த

தலைவரின் நிலையை கண்;ட ஏனைய போராளிகளும் மௌனம் காத்தனர்.

மினிபஸின் பின் ஆசனத்தில் செல்லக்கிளியின் உடலத்தை கிடத்திய விக்டர் மூடப்படாமல் வெறித்து பார்த்துக்கொண்டிருந்த செல்லக்கிளியின் விழிகளைவருடி அவற்றை மூடினார்.

செல்லக்கிளிக்கான உடனடி அஞ்சலியாக படையினரிடமிருந்த கைப்பற்ப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அவரது காலடியில் வைக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகால அடையாளங்களின் ஒன்றாகவும் புலிகளின்; கண்ணி வெடித்தாக்குதல் பொறுப்பாளருமாக இருந்த செல்லக்கிளியின் மரணம் மீண்டும் இறுக்கமாக ஒரு சூழலை தோற்றுவித்தது

ஆயினும்விரைவாக மறைவிடம் திரும்பவேண்டும் என்பதால் அச்சுவேலிப்குதியில் இருந்த ஒருமுக்கியமான மறைவிடத்தை நோக்கி மினிபஸ் விரைந்து ஓடிக்கொண்டிருந்தது.

வாகனம் முகாமையடைந்ததும் அதனை விட்டுமுதலில் இயங்கியவர் தலைவர் பிரபாகரன். வாகனத்தால் இறங்கிய அவர் உடனடியாக குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

தலைவர் பிரபாகரன் இப்படி குலுங்கி அழுததை இதற்குமுன்னர் போராளிகள் கண்டதில்லை.

சீலனின் மரண செய்தியை கேட்டபோது விம்மி வெடிக்ககூடிய ஒரு பெரும் சோகம் அவரது முகத்தை அப்பிக்கொண்டாலும் தனது அழுகையை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியிருந்தார்

ஆனால் செல்லக்கிளியின் மரணத்தை அடுத்து சீலனுக்கும் செல்லக்கிளிக்கும் சேர்த்து அவரது அழுகை பெரிதாக வெடித்தது. குலுங்கி குலுங்கி அழுதார்.

எப்போதும் வீறுகொண்ட புலியாக இருக்கும் தலைவர் பிரபாகரன் இப்படி குலுங்கி அழுவதை கண்டதும் இவ்வளவு நேரமும் தமது சோகத்தை அடக்கி வைத்த ஏனைய போராளிகளும் குமுறிஅழத்தொடங்கினர். வர்ணிக்கமுடியாத ஒரு பெரும் சோகம் புலிகளின் முகாமை அப்பிக்கொண்டது.

செல்லக்கிளியின் மரணம் 2 வாரகால இடைவெளியில் விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த இரண்டாவது பெரிய இழப்பு. யூலை 15 இல் சீலனின் மரணம் இடம்பெற்றது யூலை 23 இல் செல்லக்கிளியின் இழப்பு.

விடுதலைப்புலிகளின் தரப்பில் இவ்வாறு இருக்க படைத்தரப்பிலும் துரிதமான நகர்வுகள் இடம்பெற்றன.4-4 பிராவோவுடனான வானொலி தொடர்பு கிட்டாததால் அந்த அணி

வந்த வழியாக சென்றுபார்க்கும் முடிவுடன் பிரிகேடியர் பல்தசாரும் சரத் முனசிங்காவும் குருநகர் முகாமில் இருந்து ஒரு ஜீப் வண்டியில் புறப்பட்டனர்.

பலாலி வீதியால் விரைந்த இந்த ஜீப் வண்டிக்குப்பின்னால் ஏனைய ராணுவ வாகனங்கள் தொடர்ந்தன.

திருநெல்வேலி; தபால் பெட்டிச் சந்திக்கு அருகே அவர்கள் சென்றதும் தமது ராணுவவாழ்வில் அதுவரை காணாத சில காட்சிகளை கண்டனர்.

அந்தக்காட்சிகள்…

தடங்கள் தொடரும்….

https://www.ibctamil.com/srilanka/80/103828?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

ஆளாளுக்கு போட்டிக்கு எழுதி புலிகளை றோஸ் பாண் ரேஞ்சுக்கு கொண்டுவந்திட்டாங்கள். எவன் வேணும் என்றாலும் பிச்சு சாப்பிடலாம் என்று.

சரி வெளியிலை இருந்து நாங்கள் முடிஞ்சப்பிறகு சொல்லவேண்டியதை எழுதுங்கள் என்று பொட்டாம்மான் அனுப்பிய ரஜனி அக்கா, அமுதன் , இன்னும் பல எழுத்தாளர்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள் என்றாவது சொல்லமுடியுமா.?

சரி அண்ணை அன்றைக்கு சொன்னது தான் " எனக்குப் பிறகு நீங்கள் புலிகளை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்றுகொள்ளுங்கள்". அதையாவது  எல்லா ஊடகங்களும் எழுத்தாளர்களும் சரியாக செய்கிறார்கள்.

 • Like 3
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

தாக்குதலால் அதிர்ந்த திஸ்ஸவீரதுங்காவும்.... மனிதவேட்டைக்கு புறப்பட்ட ராணுவமும்.கறுப்புயூலை தடங்கள்…..

 

 

 
 

வானொலி தொடர்புதுண்டிக்கபட்ட நிலையில் இருந்த 4-4 பிராவோ அணியை தேடி குருநகரில் இருந்து ஒரு ராணுவஅணி புறப்பட்டது. அந்த அணியில் பிரிகேடியர் பல்தசாரும் சரத்முனசிங்காவும் இருந்தனர்.

இதற்கிடையே புலிகளின் மீது கோண்டாவில் பகுதியில் ஒரு அதிரடித்தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் அனுப்பட்ட 4-4 சார்ளி அணிக்கு அவசரமான வானொலி செய்தியை அனுப்பிய பல்தசார் அந்ததாக்குதல் திட்டத்தை உடனடியாக கைவிடும்படி பணித்துடன் அந்த அணியையும் திருநெல்வேலிப்பக்கமாக வரும்படி கூறினார்.

எங்கே 4-4 சார்ளி அணி புலிகள் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தப்போய் அதுவும் 4-4 பிராவோபோலஅதிரடியாக புலிகளிடம்மாட்டுப்பட்டுவிடுமோ என்ற அச்சமே இந்தபணிப்புக்குகாரணம்.

இவ்வாறான நகர்வுகளுடன் பிரிகேடியர் பல்தசாரும் சரத்முனசிங்காவும் தமது அணியுடன் திருநெல்வேலி தபால்பெட்டிச்சந்தியை அண்மித்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களின் ராணுவ வாழ்வில்அதுவரை கண்டிராத ஒரு அதிர்ச்சியான காட்சி.

சில மணிநேரத்திற்கு முன்னர் குருநகர் முகாமில் இரவு உணவை முடித்துக் கிளம்பிய அதே ராணுவ அணியை இப்படி ஒரு கோலத்தில் தாம்சந்திப்போமென அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.

சிதிலமாக கிடந்தது ஒரு ஜீப். அதற்கு சற்றுத்தள்ளி முற்பகுதி பிளந்து நின்றது ஒரு றக் அவற்றை சுற்றி ஆங்காங்கே படையினரின் உடலங்கள் சிதறிக்கிடந்தன.

அணிப்பொறுப்பாளர் வாஸ்குணவர்த்தனாவின்; உடலம் ஒரு இடத்தில் குப்புறக்கிடந்தது.

ஆங்காங்கே கிடந்த உடலங்களையும் சிதிலங்களையும் சுற்றிப்பார்த்தார் சரத் முனசிங்கா.

குப்புறக்கிடந்த வாஸ்குணவர்த்தனாவின் உடலத்தை புரட்டினார். அவரது முகத்தின் வலப்பக்கத்தில் பெரியதுவாரமொன்று காணப்பட்டது.

அந்தவேளை யாரோ முனகும் சத்தம் கேட்டது. பல்தசாரும் சரத்முனசிங்காவும் தமது காதுகளை கூர்மையாக்கினர். அந்தச்சத்தம் றக் வண்டியின் கீழேயிருந்து வருவதை அவதானித்து பரபரப்படைந்தனர்.

பரபரப்படைந்த அவர்கள் வாகனத்தின் கீழே சென்று பார்க்குமாறு படையினரை பணித்தனர். வண்டியின் கீழே நுழைந்த படையினர் சார்ஜன்ட் திலகரட்னவை மீட்டுவந்தனர். அவரது கையின் ஒரு பகுதியையும் காலின் ஒருபகுதியையும் காணவில்லை. ஆயினும் குற்றுயிராக கிடந்தார்.

அவரை உடனடியாக வாகனமொன்றில் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். ஆயினும் போகும் வழியில் அவர் மரணமடைந்தார்.

இந்த தாக்குல் இடம்பெற்ற போது அதிலிருந்து ராணுவத்தினர் இருவர் எப்படியோ தப்பியோடி இருந்தனர்.

ஒருவர் லான்ஸ் கோப்ரல் சுமதிபால. இரண்டாமவர் கோப்ரல் பெரேரா

தாக்குதலில் இரண்டு கால்களிலும் காயமடைந்த நிலையிலும் கோப்ரல் பெரேரா

கோண்டாவில் பேருந்துசாலை (டிப்போ) வரை ஒருவாறு சென்றுவிட்டார்.

அங்கிருந்து தான் தொலைபேசி ஊடாக பலாலி தளத்துக்கு இந்தத் தாக்குதல் குறித்து அறிவித்தார்.

அவர்தான் தாக்குதல் தப்பிய இன்னொரு படையினரான சுமதிபாலவுக்கும் இந்த இடத்தை அறிவித்தார்.

ஆயினும் கோப்ரல் பெரேரா பலாலி தளத்திற்கு அழைப்பை எடுப்பதற்கு முன்னரே தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்ற சரத்முனசிங்கா குழு துரிதமாக இயங்கியது

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களையும் உடல் பாகங்களையும் முதலில் சேகரித்த படைத்தரப்பு அவற்றை யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றது தாக்குதலில் சிக்கிய 2 வாகனங்களும்; குருநகர் முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டன

இந்த நகர்வுகள் இடம்பெற்ற பின்னர் இலங்கையின் வரலாற்றில் ஒரு பெரும் படுகொலைகளம் உருவாகும்வேளை ஆரம்பித்தது.

திருநெல்வேலியிலிருந்து திரும்பிய பிரிகேடியர் இந்த தாக்குதல் சம்பவத்தை கொழும்பு ராணுவ தலைமையகத்துக்கு அறிவித்ததும் இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கேட்டு அப்போதைய ராணுவத்தளபதியான லெப்டினட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்காவை உடனடியாக படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார்.

புல் அல்லது எருது என்ற வர்ணிப்பைபெற்ற படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கா அப்போதைய அரசதலைவர் ஜேயார் ஜெயவர்த்தனாவின் மருமகன் முறையானவர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தனது மாமனாரான ஜேயார் ஜெயவர்த்தனாவுக்கு அறிவித்தார் திஸ்ஸவீரதுங்கா மறுமுனையில் சீற்றப்பட்ட மாமனார் மருமகன் மீது ஏறிவிழுந்தர்.

சற்றுத்தளர்வடைந்த திஸ்ஸ வீரதுங்கா உடனடியாக மீண்டும் பிரிகேடியர் பல்தசாருக்கு தொடர்பை ஏற்படுத்தி தனது சீற்றத்தை அவர்மீது காட்டினார்.

திருநெல்வேலி தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஜேயார் ஜெயவர்தனாவுக்கு அறிவித்தபோது அவர் மீகவும் சீற்றமடைந்ததாக பல்தசாரிடம் வாய்விட்டுக்கூறினார் திஸ்ஸவீரதுங்கா.

இவ்வாறான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டுமென ஜேயார் ஜெயவர்த்தனா தன்னிடம் உத்தரவிட்டதாகவும் நாளை காலை தன்னை வந்து சந்திக்கும் படிபணித்தாகவும் திஸ்ஸ வீரதுங்கா

பல்தசாரிடம் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் குருநகர் முகாமில் பல்தசார் தலைமையில் அவசரமாக ஒரு கூட்டம் நடத்தப்பட்டது அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கபட்டன.

1தாக்குதலுக்கு பின்னான நிலைமையை கையாள்வது

2கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை ஒரு வியூகத்துடன் கையாளுவது.

3யாழ்நகரின் பாதுகாப்பை பலப்படுத்துவது

ஆகியனவே இந்த 3 முடிவுகள். இதனடிப்படையில் யாழ் வைத்தியசாலையிடம் ஒப்படைப்பட்ட படையினரின் உடலங்களை பொறுப்பேற்று கொழும்புக்கு அனுப்பும் பொறுப்பு ஏ. எவ் றேமன்ட் அந்திமகால சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்ட்டது.

அப்போது யாழில் பிரபலமாக இருந்தது ஏ. எவ் றேமன்ட அந்திமகால சேவை நிறுவனம்;. அத்துடன் யாழ்நகரின் பாதுகாப்பு என்ற போர்வையில் 24 ஆந்திகதி அதிகாலையில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டனர்.

பலாலி, மாதகல் மற்றும் வல்வெட்டித்துறை முகாம்களிலிருந்த சில படைஅணிகள் அப்பாவிகளை நரவேட்டையாடும் நோக்கில் புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை பொழுதில் வெறியுடன் புறப்பட்டனர்.

இந்த நிலையில் இரவு நடந்த சம்பவத்தை அறியாத வகையில் மாதல் யாழ் வழித்தடத்தின் 787 பேருந்து அதிகாலையின் முதல் பயணத்தை ஆரம்பித்தது

அது ஒரு வெறியாட்டத்தில் முடியப்போகும் பயணம் என்பது அதற்கு தெரியவில்லை….

தடங்கள் தொடரும்….

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 27 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/103873?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

விக்டரும்,செல்லக்கிளியும் ஒரே வீட்டுக் கூரை மேலே நின்றார்களாம்...செ.கிளியை குண்டு துளைத்து போனது கூட நின்ற விக்டருக்கே தெரியாதாம் 


 

Share this post


Link to post
Share on other sites

ஜே.யாரின் உத்தரவால் அதிர்ந்த உருத்திரா ராஜசிங்கம்! கறுப்பு யூலை தடங்கள்…

 

 

யாழ்நகரப்பக்கமாக 23 ஆம் திகதி இரவு பாரிய குண்டுச்சத்தம் ஒன்று மக்களுக்கு கேட்டது. ஆனால் இப்படி ஒரு பெரிய தாக்குதல் திருநெல்வெலியில் நடத்தப்பட்டமை குறித்து திருநெல்வேலிக்கு அப்பால் வசித்த மக்களுக்கு தெரியவில்லை.

இதனால் அதிகாலை வேளையில் தமது கடமைகளுக்கு புறப்பட்டவர்கள் முதலாவது பேருந்துக்கு வழமைபோல காத்திருந்தனர்.

அந்தவகையில் தான் மாதகலில் இருந்து மாதல்- யாழ் வழித்தடத்தில் இயக்கபடும் 787 இலக்க பேருந்து அதிகாலையில் புறப்பட்டது.அதன் சாரதிக்கோ அல்லது நடத்துனருக்கோ இரவு நடந்தசம்பவங்கள் குறித்து தெரியவரவில்லை.

அவ்வாறு இயக்கபட்ட பேருந்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்வி நிறுவனங்கள்;( விக்னாரியூட்டறி மாஸ்டர் இன்ஸ்ரிரியூட் போன்ற ரியூசன் சென்டர்கள்) காலைவேளையில் நடத்தும் க.பொ.த உயர்தரப்பரீட்சை (ஏ. எல்) பிரத்தியேக வகுப்புக்கு செல்லவேண்டிய மாணவர்களும் அதில் ஏறியிருந்தனர்.

அடுத்தமாதமான ஒகஸ்றில் பரீட்சை இடம்பெறுவதால் இறுதிநேர மீட்டல் வகுப்புக் இடம்பெற்ற மாதம் அது.

ஆனால் உயர்தரபரீட்சையில் சித்தியடையும் கனவுடன் இருந்த தம்முடன் கூடவே துர்விதி ஒன்றும் பயணஞ்செய்வதையோ அல்லது தம்மில் சிலரது வாழ்வை மாதகல் முகாம் படையினர் கொடுரமாக முடிக்கப்போவதையோ அவர்கள் அப்போது அறியவில்லை.

இந்த துர்விதிக்குரிய பேருந்து மானிப்பாய் ஊடாக சென்றபோது நல்லவெளிச்சம் பரவியிருந்தது. அந்தவேளை மானிப்பாய் மத்திய சந்தை பகுதியால் வந்த மாதகல் முகாம் படையினர் அதனை திடிரென வழிமறித்தனர்.

தமது முகாமில் இருந்து சென்ற 4-4 பிராவோ அணி கண்ணிவெடியில் சிக்கியதால் அப்பாவிகளை பழிவாங்கும் வன்மம் அந்த அணியில் குடிகொண்டிருந்தது.

படையினர் தமது வண்டியை மறித்தவுடன் அவர்கள் ஏதோ வழமைபோல சோதனை செய்வதற்குத்தான் அதனை வழிமறிப்பதாக பயணிகள் நினைத்தனர்.

ஆனால் வெறிகொண்ட படையினர் வண்டிக்குள் ஏறி அதில் இருந்தவர்களை இறக்கினர். அதில் இருந்த 9 மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து அவர்கள் மீது சரமாரியான துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டனர்.

தமக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிய முன்னரே அவர்கள் மீது சூடுகள் விழுந்தன. ஓடமுற்பட்ட அனைவரும்; ஒருவரோடு ஒருவர் பின்னிப்பிணைந்து விழுந்தனர்.

சந்தைக்கு முன்னாலிருந்த மல்லிகா ஸ்ரோர்ஸ் என்ற கடையின் முன்பக்க கதவுகளுடன் பின்னிப்பிணைந்த நிலையில் மேற்படி மாணவாகளின் உடலங்கள் மிக கோரமாக உதிர வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. (இந்தப்பத்தியாளர் தனது வாழ்வில் கண்ட முதலாவது பெரிய கோரக்காட்சியும் இதுதான்)

6பேர் அந்த இடத்தில் மிக குருரமாக கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்திருந்தனர். இந்தக்கொடுமையை செய்தபின்னர் அங்கிருந்து அகன்றது மாதகல்ராணுவஅணி.

இதேபோல பலாலி,படைத்தளத்தில் இருந்து வெளியேறிய ஒரு அணி படைத்தளத்தின் முன் தடுப்புக்கதவை தமது வாகனத்தால் உடைத்தெறிந்து விட்டு யாழ்.நகர்ப்பக்கமாக பயணித்தது

யாழ் நகர்ப்பக்கமாக வெறியுடன் சென்ற இந்த அணி கண்ணில் தென்பட்ட தமிழ்மக்களை சுட்டுக்கொன்றது.

இதன்பின்னர் கண்ணிவெடி வெடித்த இடத்துக்கு சென்று அங்கிருந்த வீடுகளில் இருந்தவர்களை சுட்டுக்கொன்றது. வீடுகளையும் ,வணிக நிறுவனங்களையும் அடித்து நொருக்கி தீயிட்டது

அங்கிருந்த வீடொன்றில்; வசித்த முதிய தம்பதியை கூட படைத்தரப்பு விட்டுவைக்கவி;லலை. இருவரையும் சுட்டுக்கொன்றது பின்னர் உடலங்களை உள்ளே போட்டு அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தியது.

பலாலி முகாமில் இருந்த படையினர் இந்த குருரமான படுகொலைகளை மேற்கொண்ட நிலையில் வல்வெட்டித்துறையிலும் பெரிய மனிதவேட்டையும் தீயிடல் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

கொழும்பில் தமிழ்மக்கள் மீது பெரும் வன்முறைகள் வெடிக்க முன்னரே யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே இடம்பெற்ற நர வேட்டைகள் இவை.

இந்தக்கொடுரங்களின் உச்சக்கட்டமாக ஒரு 10 வயது சிறுவன் ஒருவன் மிக கொடுரமாக தலையில் சுட்டுப்படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

கல்வியங்காட்டுப் பகுதியியை சேர்ந்த இந்த சிறுவன் பாண்வாங்குவதற்காக சென்றவன். பெரிய சைக்கிளை ஒடுவதற்கு அவனுக்கு கால்கள் எட்டாது. இதனால் சைக்கிளின் பார் பகுதிக்கு கீழால் தனது கால்களை செலுத்தி தத்தித்தத்தி ஓடியபடி பாண்வாங்கிக் கொண்டு சென்ற இவனை விதி மறித்தது.

10வயது சிறுவன் எனக்கூடப்பார்க்காமல் மிக கொடுரமாக தலையில் சுட்டுக்கொன்றனர். சின்னஞ்சிறு மூளைசிதறிய நிலையில் தான் வாங்கிக்கொண்டு சென்ற பாணுடன் அந்த சிறுவன் தனது சைக்கிளுடன் கிடந்தான்.

இவ்வாறான வெறியாட்டத்தில் சில மணிநேரங்களில் மட்டும் திருநெல்வேலி மானி;ப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் 51 பேர் இவ்வாறு படுகொலையுண்டனர்;. 100 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இதனைவிட 100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் வீடுகளும் தீயிடப்பட்டன. யாழ்ப்பாணம் இவ்வாறு 24 ஆம்திகதி காலைமுதல் கொலைக்களமாக மாறிய நிலையில்கொழும்பில் அதேதினம் காலை சிறிலங்காவின் உயர்மட்ட படைத்துறை அதிகாரிகளுடன் வோட் பிளேஸில் உள்ள தனது தனிப்பட்ட வதிவிடத்தில் அவசரமான பாதுகாப்பு மாநாடொன்றை கூட்டினார் அரச தலைவர் ஜேயார் ஜெயவர்த்தனா.

அந்த மாநாட்டில் தான் தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினை வழங்கப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் ஜேயார் சில உத்தரவுகளை பிறப்பித்தார் அந்த உத்தரவுகளில் ஒன்றே கறுப்பு யூலை படுகொலைகளின் நிகழ்ச்சிநிரலை தொழினுட்பரீதியில் தீவிரப்படுத்தியது.

அந்த உத்தரவு என்ன? …

தடங்கள் தொடரும்…..

https://www.ibctamil.com/articles/80/104009?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

ஜேயாரின் சீற்றத்தால் யாழ்விரைந்த வீரதுங்காவும் ரஜரட்டை ராணுவஅணி திட்டங்களும் கறுப்புயூலை தடங்கள்…..

 

 
 

திருநெல்வேலித்தாக்குதலுக்கு மறுநாள் சிறிலங்கா அரசதலைவர் ஜேயார் ஜெயவர்த்தனா தனது வோட் பிளேஸ் வதிவிடத்தில் ஒரு உயர்மட்ட ராணுவ மாநாட்டை கூட்டியிருந்தார்.

இந்த மாநாட்டுக்காக இராணுவத்தளபதி திஸ்ஸவீரதுங்க தலைமையில் கூடியிருந்த படைத்துறை உயரதிகாரிகளின் முகங்களில் ஜேயாரின் சீற்றத்துக்கு இலக்காகவேண்டிய அச்சம் தெரிந்தது.

அவர்களது ஊகம் ஏறக்குறைய சரிதான். அறையினுள் உள்ளே நுழைந்த ஜேயார் தனது மருமகனும் படைத்தளபதியுமான லெப்டினட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்காவை நோக்கி எடுத்த எடுப்பிலேயே சீற்றமான ஒரு வினாவை எறிந்தார்.

யாழில் என்ன நடந்து? என்பதே மாமனார் மருமகனை நோக்கித்தொடுத்தவினா. தன்னை நோக்கி எறிந்த இந்த வினாவின் அர்த்தத்தை புரிந்து கொண்டதாலேயோ என்னவோ தளபதி திஸ்ஸவீரதுங்கா ஒன்றுமே சொல்லாமல் மௌனம் காத்தார்.

திஸ்ஸ வீரதுங்கா இவ்வாறு மௌனம் காக்க… அவரது பதிலுக்கு மேலும் காத்திராத ஜேயார் இப்படிப்பட்ட தாக்குதல்கள் “என்னவிதப்பட்டும்” உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என உரத்துக்கத்தினார்

அத்துடன் உடனடியாகவே ராணுவத்தரப்புக்குரிய 2 உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினை வழங்கப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் ஜேயார் பிறப்பித்த அந்த உத்தரவுகளில் ஒன்றே கறுப்பு யூலை படுகொலைகளின் நிகழ்ச்சிநிரலை தொழினுட்பரீதியில் தீவிரப்படுத்தியிருந்தது.

ஜேயார் பிறப்பித்த முதலாவது உத்தரவு படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கா உடனடியாக மாநாடு முடிந்தவுடன் யாழ்ப்பாணத்துக்கு செல்லவேண்டுமென இருந்தது.

இரண்டாவது உத்தரவு திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிநிகழ்வுகள் முழுராணுவ மரியாதையுடன் கொழும்புகனத்தை மயானத்தில் நடாத்தப்பட வேண்டுமென்பதாக இருந்தது

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

 

படையினரின் இறுதிக்கிரிகைகளை ஒட்டுமொத்தமாக நடத்துவது சிங்களவர்களிடையே; சீற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை அந்தநேரத்தில் சில அதிகாரிகள் முன்வைக்க முனைந்தாலும் இதனை இறுதிநிகழ்வுகளை கொழும்பில் நடத்தியே தீர வேண்டுமென்பது ஜேயாரின் இறுக்கமான உத்தரவாக இருந்தது.

இந்த நிலையில் ஜேயார் கூட்டிய இந்தஅவசர பாதுகாப்பு மாநாட்டில் பங்கெடுக்க முடியாதநிலையில் சிறிலங்காவின் அப்போதைய காவற்துறை மாஅதிபர் ருத்திராராஜசிங்கம் நுவரெலியாவில் நின்றார்.

தமிழரான ருத்திராராஜசிங்கத்துக்கு ஜேயாரின் இந்த முடிவு அதிர்ச்சியளித்தது.பதற்றமான சூழ்நிலையில் படையினரின் இறுதிநிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக கொழும்பில் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால்

படையினரின் உடலங்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைத்து தனிப்பட்ட ரீதியில் இதனை நடாத்துவதே பொருத்தமானது என்பது அவரது நிலைப்பாடு

ஆனால் ஜேயாரின் இறுக்கமான முடிவுகளுக்கு முன்னால் ருத்திரா ராஜசிங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.

இவ்வாறான ஒரு பதற்றமான சூழலின் பின்னணியில ஜேயாரின் உத்தரவுப்படி படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கா உடனடியாக அன்று மதியமே விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டார்.

பிற்பகல் வேளையில் பலாலி விமானநிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து உடனடியாக உலங்குவானுர்தியில் குருநகர் முகாமுக்கு சென்றடைந்தார்.

திஸ்ஸ வீரதுங்கா குருநகர் முகாமை சென்றடைந்தவேளை பலாலி படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ராணுவ அணி திருநெல்வேலியில் வெளியாட்டம் ஆடியது.

உயரதிகாரிகளின் உத்தரவை மீறி பலாலிமுகாமின் முன் தடுப்புக் கதவை தமது வாகனத்தால் உடைத்தெறிந்து விட்டு இந்த அணி புறப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே கொழும்பு நாரஹேன்பிட்டியில் ராணுவ முகாமில் உள்ள ராணுவத்தின் ரஜரட்ட படைப்பிரிவு ஒரு திட்டத்தை போட்டது.

திருநெல்வேலி தாக்குதல் இடம்பெறுவதற்கு இரண்டுமாதங்களுக்கு முன்னர் அதாவது மே மாதம் 18 ஆந்திகதி உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்றபோது கந்தர்மடம் மற்றும் நல்லூர் வாக்களிப்பு நிலையஙகளின் மீ விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்குப்பின்னர் கந்தர்மடம் பகுதியில் பெரும் வன்முறைகளில் ரஜரட்டை பிரிவு ராணுவ அணிகளே ஈடுபட்டிருந்தன.

கந்தர்மட வெறியாட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மீளெடுக்கப்பட்ட ரஜரட்டை பிரிவு அனுராதபுரத்திலிருந்த அதன் தலைமையகத்துக்கு முதலில் மாற்றப்பட்டது.

அதன் பின்னர் அந்த பிரிவு பின்னர் கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள முகாமுக்கு அனுப்பட்டது.

ஏற்கனவே கந்தர்மடம் மற்றும் அனுராதபுர பகுதிகளில் தமிழக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட அதே ரஜரட்ட படைப்பிரிவு திருநெல்வேலி தாக்குதலை சாக்காக வைத்து கொழும்பில் தமிழமக்கள் மீது தாக்குல்களை மேற்கொள்வும் வியுகங்களை வகுத்தது.

இந்த நிலையில் தான் திஸ்ஸ வீரதுங்கா குருநகர் முகாமில் நின்றிருந்தார். அவர் யாழில் நிற்கும் போதே திருநெல்வேலி மானிப்பாய் வல்வெட்டித்துறை உட்பட்ட இடங்களில் படையினரால் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்ட்ட சம்பவங்களும் அவரது காதுகளுக்கு எட்டியே இருந்தது.

ஆயினும் ஒரு படைத்தளபதி என்ற முறையில் இறுக்கமான உத்தரவுகளை பிறப்பித்து இந்தப்படுகொலைகளை கட்டுப்படுத்துவதற்கு அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவி;ல்லை.

மாறாக ஜேயாரின் இறுக்கமான முடிவிற்கு அமைய கொல்லபட்ட படையினரின் உடலங்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதில்தான் அவர் தீவிர அக்கறை காட்டினார்.

படையினரின் உடலங்களை பலாலிக்கு அனுப்பும் நகர்வுகளை துரிதப்படுத்தும் படி பிரிகேடியர் பல்தசார் மற்றும் சரத்முனசிங்க ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பித்த திஸ்ஸவீரதுங்க மாலை 5 மணியளவில் மீண்டும் குருநகரிலிருந்து உலங்கு வானூர்தியில் பலாலிக்கு புறப்பட்டிருந்தார்.

தான்; மீண்டும் கொழும்புக்கு செல்லும்போது தன்னுடனேயே 13 படையினரின் உடலங்களும் கொண்டு செல்லப்படவேண்டுமென்பதே திஸ்ஸ வீரதுங்காவின் திட்டம்

ஆனால் திஸ்ஸவீரதுங்காவின் இந்தத்திட்டத்தை

சிறிலங்காவின் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் சேபால ஆட்டிக்கல ஊடறுக்கமுனைந்தார். திஸ்ஸவீரதுங்காவை அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குமாறு சேபால ஆட்டிக்கல கோரியிருந்தார்.

ஆனால்; அன்றிரவு யாழப்பாணத்தில் தங்குவதை திஸ்ஸவீரதுங்கா விரும்பவில்லை.

எனினும்பாதுகாப்புச்செயலாளர் சேபால ஆட்டிக்கலவால் பிறப்பிக்பட்ட உத்தரவையும் மீறவும் வழியில்லை.வேறுவழியின்றி தனது பயணத்திட்டத்தை சடுதியாக மாற்றிய அவர் மீண்டும் பலாலியில் இருந்து குருநகருக்கு திரும்பினார்.

அரைமணிநேரத்துக்கு முன்னர் குருநகரிலிருந்து பலாலிக்கு புறப்பட்ட திஸ்ஸவீரதுங்கா உடனடியாக அதே உலங்கு வானூர்த்தியில் குருநகருக்கு திரும்பிய கண்ட குருநகர் படையினர் ஆச்சரியப்பட்டனர்

ஆனால் திஸ்ஸ வீரதுங்கவின் முகத்தில் ஒரு கடுகடுப்பான தன்மை காணப்பட்டதால் ஏதோ ஒரு விடயம் அவருக்கு பிடிக்கவில்லையென்பதை பல்தசாரும் சரத்முனசிங்கவும் கண்டுகொண்டனர்.

திஸ்ஸவீரதுங்காவை அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்கவைக்க சேபால ஆட்டிக்கல முயற்சித்ததன் காரணம் என்ன?

தடங்கள் தொடரும்………

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 31 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/104056

Share this post


Link to post
Share on other sites

எனது நாயை கூட யாழில் புதைக்கமாட்டேன்! சீறிய திஸ்ஸவும் கனத்தை வன்முறைகளும்!! கறுப்புயூலை தடங்கள்…..

 

 
 

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் சேபால ஆட்டிக்கல தன்னை யாழ்ப்பாணத்தில் தங்குமாறு கோரியமை இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்காவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

24ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமையான அன்றுமாலையே படையினரின் உடலங்களுடன் கொழும்பு திரும்பவே அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால்தனது திட்டத்தை திட்டத்தை மாற்றும்வகையில் சேபால ஆட்டிக்கல நடந்தமை கோபத்தை ஏற்படுத்தியது.

சேபால ஆட்டிக்கல ஏன் இப்படி நடந்து கொண்டார்?

அதற்கு ஒரு காரணம் இருந்தது. படையினரின் இறுதிநிகழ்வுகள் நடத்தப்பட் இருந்த பொரளைபகுதியில் உள்ள கனத்தை மயானத்தை பார்வையிட்ட பின்னர்தான் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.

கனத்தை மயானத்தில் இறுதி நிகழ்வுகளுக்குரிய தயார்படுத்தல் நகர்வுகளை பார்வையிட சென்ற சேபால ஆட்டிக்கல அந்தஇடத்தை சூழ தீவிரமான ஒரு செயற்கை பதற்றம் நிலவுவதை அவதானிக்கத் தவறவில்லை.

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக தானிருந்த போதும் தனக்கு அப்பாற்பட்ட ஒரு வலையமைப்பு வெகுகச்சிதமான முறையில் வன்முறைகளுக்கு தயாராகி வருவதும் புரிந்தது.

இதனைவிட இன்னொருதரப்பு கடுமையாக அரசஎதிர்ப்புஉணர்வுடன் அங்கு நிலவியதையும் அவரால் அவதானிக்கமுடிந்தது.

இவ்வாறான ஒரு கொந்தளிப்புநிலை இருக்கும் போது படையினரின் உடலங்களுக்கு கொழும்பில் இறுதிநிகழ்வுகளை செய்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்பது அவருக்கு புரிந்தது

இதனால் படையினரின் உடலங்களை கொழும்புக்கு கொண்டு வருவதை தவிர்த்தால் என்ன என்பதை கூட சேபால ஆட்டிக்கல சிந்தித்தன் அடிப்படையில்;; மேலதிக நடவடிக்கைகளுக்காக தளபதி திஸ்ஸவீரதுங்காவை யாழ்ப்பாணத்தில் தங்குமாறு அவர்கோரினார்.

இதன்பின்னர் குருநகர் முகாமில் தங்கியிருந்த திஸ்ஸவீரதுங்காவை தொடர்புகொண்ட சேபாலஆட்டிக்கல கொழும்பில் நிலவும் அரச எதிர்ப்பு உணர்வை சமாளிப்பதற்காக படையினர் உடலங்களை யாழ்ப்பாணத்தில் புதைத்தால் அல்லது வவுனியாவில் எரியூட்டினால் என்ன என்பதில் திஸ்ஸ வீரதுங்காவின் கருத்தைக் கூட கேட்டிருந்தார்.

சேபாலஆட்டிக்கலவின் இந்த வினாவை கேட்டு சீற்றமடைந்த திஸ்ஸவீரதுங்கா தனது நாய் செத்தால் கூட யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் புதைக்கமாட்டேன் என்றார்.

திஸ்ஸவீரதுங்கா இவ்வாறு சீற்றப்பட்டதால் இதுகுறித்து நிச்சயமாக தனது மாமனாரான ஜேயாரிடம் அவர் வத்திவைப்பார் என்பதால் சேபாலஆட்டிக்கல தனது எண்ணத்தை கைவிட்டார்.

இதனைவிட கொழும்பில் தான் இறுதிநிகழ்வுகளை நடத்துவது என்ற விடயத்தில் ஆரம்பம் முதலே ஜேயார் உறுதியாகவும் இருந்தார்.

இதனால் படையினரின் உடலங்களை அன்றே கொழும்புக்கு கொண்டு செல்லும் நகர்வுகள் மீண்டும் துரிதமடைந்ததால் ஏ. எவ் றேமன்ட் அந்திமகாலச்சேவை நிறுவன பணியாளர்கள் அவற்றை பலாலிக்கு கொண்டுசென்றனர்.

உடலங்களை இரத்தமலானைக்கு காவிப்பறப்பதற்கு சிறிலங்கா வான்படையின் அவ்ரோ விமானமும் தயாராகவே நின்றது. எனினும் அவற்றை கொழும்புக்கு அனுப்புவதில் மீண்டும் ஒரிருமணிநேர தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் முதலில் வனாத்தமுல்ல சேரிப்பகுதியில் இருந்து திரண்ட சுமார் 3000 பேர் கனத்தையில் இறுதிநிகழ்வுகள் நடாத்தப்பட ஒதுக்கப்ட்ட இடத்தை சென்றடைந்து காடையர்களாக அவதாரம் எடுத்தனர். நாரஹேன்பிட்டி படைமுகாமுகாமில் இருந்து சாதாரண உடைகளில் புறப்பட்ட ரஜரட்ட பிரிவினரும் காடையர்களுடன் கலந்து நின்றனர்

அரசதரப்பை பொறுத்த வரை மாலை 5 மணிக்குத்தான் கனத்தையில இறுதிநிகழவுகளை நடத்த அது திட்டமிட்டிருந்தது.

ஆனால் பலாலியிலிருந்து இரத்தமலானைக்கு படையினரின் உடலங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட ஏற்பட கனத்தையை சுற்றி நின்ற

காடையர்களின் வெறி தீவிரமடைந்தது

படையினரின் உடலங்கள் அவர்களது உறவினர்களிடம் தனித்தனியாக ஒப்படைக்கபடவேண்டுமென அவர்கள் ஆக்ரோசமாக கத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவற்துறை உதவி ஆணையாளர் கபூரை அங்கு வெட்டப்பட்டிருந்த ஈமக்குழி ஒன்றை நோக்கித்தள்ளினர். அத்துடன் அந்திமகாலச்சேவை நிறுவனம் கொண்டுவந்த இறுதிகிரியை பொருட்களை அடித்து நொருக்கினர்.

காடையர்களின் ஆக்ரோசம் பின்னர் வெறியாக மாறியதால் இறுதிக்கிரிகைகளில் கலந்துகொள்ள வந்த படையினரின் உறவினர்களும் மதச்சடங்குகளை நடத்த வந்திருந்த பிக்குகளும் சிதறி ஓடினர்.

காடையர்களை கட்டுப்படுத்துவதற்கு கண்ணீர்புகை குண்டு பிரயோகங்களும தடியடிகளும்,சாட்டுக்கு நடத்தப்பட்டன.

இதற்கிடையே யாழில் படையினர் மீது இன்னொரு கண்ணிவெடித்தாக்குதல் நடத்தப்பட்டதான வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. இதனால் காடையர்களின் திரட்சி 8 ஆயிரம் பத்தாயிரம் என கிடுகிடுவென உயர்ந்தது. காடையர்களின் ஆக்ரோசம் கண்டு காவற்துறையினரும் பின்வாங்கினர்.

இந்தநிலையில் பலாலியில் இருந்து படையினரின் உடலங்களுடன் புறப்பட்ட அவ்ரோ விமானம் இரவு 7 மணிக்குப்பின்னர் இரத்தமலானை விமானநிலையத்தில் தரையிறங்கியது.

ஆனால் கனத்தை கொதிநிலை கைமீறிப்போனதால் இறுதிக்கிரியை நிகழ்வுகளை மீளெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஜேயார் ஜெயவர்த்தனா படையினரின் உடலங்களை அவர்களின் உறவினர்களிடமே கையளி;ப்பதென்ற முடிவை இறுதியில் எடுத்தார்.

இதனால் இரத்தமலானை விமானநிலையத்தில் இருந்து இரவு 8. 30 மணிக்குப் பின்னர் மயானத்தை நோக்கி புறப்பட்ட உடலவாகனங்கள் அனைத்தையும் இராணுவத்தலைமையகத்துக்கு கொண்டுசெல்லும் படி பணிப்பு விடுக்கப்பட்டது.

இதற்குப்பின்னரே ஜேயார் கனத்தையில் இறுதிக்கிரியை நிகழ்வுகளை மீளெடுத்த செய்தி மயானசுற்றாடலில் திரண்டிருந்த கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் வேறென்ன? இரவு 10 மணியளவில் அங்கிருந்து கலைந் காடையர் கூட்டம் தமிழ்மக்களின் வணிக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை நோக்கி ஆக்ரோசமாக நகர்ந்து தமது திட்டமிட்ட வன்முறைகளை கச்சிதமாக திரும்பியது

கறுப்பு யூலை குருரங்கள் கொழும்பில் மிகத்தீவிரமாக வெடிக்க ஆரம்பித்தன.

இதேபோல யாழில் படைத்தளபதி திஸ்ஸவீரதுங்கா தங்கியிருந்த நிலையில் அங்கு படைத்தரப்பின் வெறியாட்டம் தீவிரமானது.

தடங்கள் தொடரும்….

000000000

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 01 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/104112?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

வெடியோசையால் புலிகள்குறித்து பதறிய தளபதியும் ஊரடங்கை பிறப்பிக்காத ஜேயாரும் கறுப்புயூலை தடங்கள்…..

 

 

 

யாழ்ப்பாணத்தில் படைத்தளபதி திஸ்ஸவீரதுங்கா தங்கியிருக்கும் போதே படைத்தரப்பின் வெறியாட்டம் தீவிரமானது. தமிழ்மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் மீது படையினர் ஆக்ரோசமாக தமது வன்முறைகளை அவிழ்த்துவிட்டனர்.

திருநெல்வெலியில் கண்ணி வெடி தாக்குதல் இடத்தை பார்வையிடுவதற்கு யூலை 25 ஆந் திகதியன்று தளபதி திஸ்ஸவீரதுங்க சரத்முனசிங்க சகிதம் சென்றவேளை ஏற்கனவே படையினர் அந்தப்பகுதியில் செய்த கொடுரங்களின் சாட்சியங்களை வெளிப்படையாகவே அவர் கண்டார்.

ஆனால் அது குறித்து அவர் எந்தவித கரிசனையை அல்லது இவ்வாறான கொடுரங்களை உடனடியாக நிறுத்துவதற்கு எந்தவிதமான நகர்வுகளை அவர் எடுக்க முனையவுமில்லை.

இதற்கிடையே திஸ்ஸவீரதுங்கவின் ராணுவகுழு திருநெல்வேலி சந்திக்கு அருகே நின்றபோது இன்னொரு சம்பவம் அங்கு இடம்பெற்றது.

அந்தப்பகுதியில்; இன்னமும் தமது வெறியை கட்டுப்படுத்த முடியாமல் படையினர் அட்டகாசங்களை செய்வது திஸ்ஸவீரதுங்க குழுவுக்கு தெரியவில்லை.

இந்தநிலையில் திருநெல்வேலி சந்திக்கு அருகில் உள்ள சில இடங்களிலிருந்து வெடியோசைகள் கேட்டன. இந்தவெடியோசைகளை கேட்டு பதற்றமடைந்த திஸ்ஸவீரதுங்க விடுதலைப்புலிகள் தான் தாக்குதலை தொடுக்க வந்துவிட்டதாக அஞ்சினார்.

ஆனால் இது புலிகளின் வேலையல்ல தமதுதரப்பின் வேலை என்பதை அறிந்த சரத்முனசிங்க தம்முடன் நின்ற படையினர் சிலரை அந்தப்பகுதியின் நாலாபுறமும் அனுப்பி அதிகாரிகள் வந்திருப்பதாக சிங்களத்தில் உரத்துக்கத்துமாறு அவர்களை பணித்தார்.

உயரதிகாரிகளின் பணிப்பின் படியே அருகிலுள்ள இடங்களுக்கு ஓடிச்சென்ற படையினர் இதனை சிங்களத்தில் உரத்துக்கத்திக்கூறினார்.

இதனையடுத்து வெடியோசைகள் தணிந்தன. இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் இலகுகாலாட்படையின் பிளற்ருன்தரஅதிகாரியாக ரஜீவவீரசிங்கவுடன் இணைந்து சரத் முனசிங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரமொன்றின் பின்னால் பதுங்கியிருந்த படைஉறுப்பினர் ஒருவர் இந்த இருவரையும் இலக்குவைத்து தனது துப்பாக்கியை திருப்ப முனைந்தார்.

இதனை ரஜீவ வீரசிங்கவும் சரத்முனசிங்கவும் அவதானித்துவிட்டனர்.

வளர்த்தகடா ஒன்று தமது மார்பிலேலே துப்பாக்கி ரவையை பாச்சப்போகும் நிலையை சடுதியாக உணர்ந்த அவர்களும் தத்தமது கைத்துப்பாக்கிகளை உருவினர்.

இதற்கிடையே அதிகாரி ரஜீவவீரசிங்க அந்தபடை உறுப்பினரை யாரென இனங்கண்டுவிட்டார். இதனையடுத்து அவரது பெயரை உரத்து கூறி அதட்டி உடனடியாக மரத்துக்குப்பின்னால் இருந்து வீதிக்கு வருமாறு உத்தரவிட்டார்.

வேறு வழியின்றி மேற்படி படை உறுப்பினர் வெளியே வந்தார். அவர் தனித்து நிற்கவில்லை மேலும் சிலபடையினரும் அங்கு நின்றனர்.

உடனடியாக இவர்கள் அனைவரையும் கைது செய்யுமாறு பணித்த தளபதி திஸ்ஸ வீரதுங்க அவர்களின் இராணுவத்தகுதி நிலைகளை உடனடியாக நீக்குவதாக அந்த இடத்தில்வைத்து அறிவித்தார்.

அத்துடன் அவர்கள் அனைவரையும் இராணுவகாவற்துறையிடம் ஒப்படைத்து அநுராதபுரத்திலுள்ள இராணுவ காவற்துறை தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவின் எடுத்த இந்த நகர்வில் ஒரு விடயத்தை அவதானிக்கலாம்.

இதே படையினர் திருநெல்வேலிப்பகுதியில் தமிழ்மக்கள் மீது வெறியாட்டம் ஆடியிருந்தனர். ஆனால் அதற்காக அல்லாமல் மாறாக தம் மீது துப்பாக்கிகளை திருப்பமுனைந்தார்களே என்ற சீற்றத்தால் மட்டும் இந்த நகர்வு இடம்பெற்றது

இதேபோலவே மாதகல் மற்றும் வல்வெட்டித்துறை முகாம்களில் இருந்து புறப்பட்டு தமிழின வேட்டையை நடத்திய படையினர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாறாக அவ்வாறானவர்கள் மறைமுகமாக உயர் மட்டத்தினால் ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொழும்பு நிலவரங்களை நோக்கினால்

கனத்தை மயானத்தில் இருந்து புறப்பட்ட சுமார் பத்தாயிரம் காடையர்கள் பொரளை பகுதியிலுள்ள தமிழர்களின் வணிக நிலையங்களையும் வதிவிடங்களையும சூறையாடியதுடன் அவற்றுக்கு தீமுட்டினர்.

கொழும்பில் வெடித்த கறுப்புயூலை வன்முறையின் முதலாவது தீயிடல்களுக்கு பொரளை சந்தியை அண்மித்திருந்த தமிழர்களின் வணிகநிலையங்களே முதலில் இலக்காகின. துடுப்பாட்ட மற்றும் தடகள தமிழ் ஒன்றியமும் தப்பவில்லை.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

பொரளையில் வெறியாட்டதை முடித்தபின்னர் இந்த காடையர் குழு அணிகளாக பிரிந்து மருதானை தெமட்டகொட திம்பிரிகாசய கிருலப்பனை வெள்ளவத்தை பம்பலப்பிட்டி என கொழும்பில் தமிழர்கள் வசித்த இடங்களை நோக்கிப்பாய்ந்தது.

கட்சி மற்றும் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி சிங்கள இனவாதத்தின் அனைத்து தரப்புகளும் பாதாள உலக கும்பல்களும் தமிழ்மக்களை குறிவைத்து பாய்ந்தன. சிறிலங்காவின் முக்கிய தொழிற்சங்கமான ஜாதிக சேவகசங்கமயவின் உறுப்பினர்களும் பரவலாக வன்முறைகளில் ஈடுபட்டனர்.

ஆனால் இவ்வாறு தமிழர்கள்மிக குருரமாக குறிவைக்கப்பட ஜேயாரோ ஊரடங்கு சட்டம் எதனையும் உடனடியாக பிறப்பிக்காது வழமை போல தமிழ் மக்கள் மீதான இனச்சங்காரத்துக்கு ஆதரவளிக்க வன்முறைகள் மிகத்தீவிரமடைந்தன.

இந்த நிலையில் தான் அப்போதைய தொழிற்துறையமைச்சரும் இனவாதியுமான சிறில்மத்யூ கொழும்பு கோட்டைப்பகுதியை நோக்கி தனது காடையர் அணியுடன் விரைந்தார்.

அவரது கும்பல்செய்த அந்த அழிவு….

தடங்கள் தொடரும்…

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 02 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/104157?ref=rightsidebar

Share this post


Link to post
Share on other sites

குமாரசூரியரை கொளுத்தமுயன்றகும்பலும்- தமிழ் சாமினியை மீட்டஜேயாரும்! கறுப்பு யூலை தடங்கள்…..

 

 
 

திருநெல்வேலிகண்ணிவெடித்தாக்குதலுக்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் மக்கள் மீது சிறிலங்காப் படையினர்நடத்திய வெறியாட்டம் குறித்து ஜேயார் ஜெயவர்த்தனாவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் படுகொலைகளை நிறுத்தும் வகையில் அவர் எந்த ஒரு கடுமையாக உத்தரவையும் படைத் தலைமைக்குபிறப்பிக்கவில்லை.

ஜேயாரின்வேண்டுமென எடுத்த இந்தத்தாமதம் குறித்து பிரித்தானியாவின் கார்டியன் இதழ் செய்தியாளர்டேவிட் பிரெஸ்போட் 83 ஓகஸ்றில் அவரிடமே வினவினார். ஆனால் அதற்கு ஜேயார் அளித்த பதில் அதிர்ச்சிகரமானதாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில்இவ்வாறான சில சம்பவங்கள் இடம்பெற்றமை குறித்து தனக்கு 2 வாரங்கள் கழித்தே தெரியவந்ததாககுறிப்பிட்ட அவர், யாழ்ப்பாண சம்பவங்களில்20 பேருக்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டார்.

ஊரடங்குசட்டம் எதனையும் உடனடியாக பிறப்பிக்காமல் ஜேயார் ஜெயவர்த்தனா தாமதிக்க தாமதிக்க வன்முறைகள்மிகத் தீவிரமடைந்தன.

ஐக்கியதேசியக்கட்சி மற்றும்; சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும்தமிழ்மக்களின் வீடுகளை தேடித்தேடி அலைந்து சூறையாடினர்.

பின்னர்அவற்றுக்கு தீ மூட்டினர். வீதிகளால் சென்ற தமிழ்மக்களின் வாகனங்களையும் தாக்கி வாகனங்களுடன்அவர்களையும் சேர்த்து தீயிட்டனர்.

கறுப்புயூலைவன்முறைகள் மிக துல்லியமாக திட்டமிடப்பட்ட வன்முறைகள் என்பதற்கு ஜேயாரின் முக்கிய அமைச்சர்கள்சிலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தமது காடையர்களுடன் முன்னின்று நடத்தியமைசாட்சியானது.

அப்போதையதொழிற்துறையமைச்சரும் இனவாதியுமான சிறில் மத்யூவின் தலைமையில் நின்ற காடையர்கள் கொழும்புகோட்டைப்பகுதியில் இருந்த தமிழர்களின் வணிக நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்

அன்றையதலைமையமைச்சர் பிரேமதாசாவுக்கு கையாட்களாக இருந்த சண்டியர்கள் புறக்கோட்டை பகுதியில்தமதுதாக்குதல்களை மேற்கொண்டனர்.

கொழும்புமாநகர முதல்வர் ஆதரவு காடையர்களும் மாநகர சபையில் பணிபுரிந்த கீழ்நிலைத்தொழிலாளர்களும்ஆங்காகங்கே பரவலாக தாக்குதல்களை தொடுத்தனர். ஒரு முஸ்லிமாக இருந்தாலும் போக்குவரத்துஅமைச்சர் எம். எச் முகமட்டின் ஆதரவு காடையர்கள்கூட தாக்குதல்களை நடத்தினர்.

மாவட்டஅமைச்சராகஇருந்த மல்லவாராச்சியின் காடையர்கள் கொழும்பு வடக்கில் தமது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட பிரதியமைச்சர் அனுரபஸ்ரியனின் காடையர்கள் கொழும்பு தெற்கில் தமது கைவரிசையை காட்டினர்.

இவ்வாறுதமிழர்கள் மீது எங்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால்

உடனடியாகஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்து வன்முறைகளை தடுக்குமாறு சிலர் ஜேயார் ஜெயவர்த்தனாவுக்குஆலோசனை கூறினர். எனினும அவ்வாறான கோரிக்ககைகளுக்கு உடனடியாக் ஜேயார் எந்தவிதமான சாதகமாகபதிலையும் கூறவில்லை.

தமிழ்மக்களுக்குஒரு படிப்பினை வழங்கப்படவேண்டுமென்ற நோக்கத்துடனேயே அவர் இவ்வாறு தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால்அவ்வாறு வன்முறைகள் இடம்பெற்றபோது தனக்குப் பிரியப்பட்ட ஒரு சில தமிழர்களை காப்பாற்றுவதில்ஜேயார் அக்கறை காட்டியிருந்தார்

அந்தவகையில் தனது புதல்வனான ரவியின் முதல் மனைவியும் தமிழ்பெண்ணான சார்மினியின் குடும்பத்தைமீட்டு வர படைத்துறை வாகனத்தை அனுப்பியிருந்தார்.

இதேபோலஇன்னொரு படைத்துறை வாகனத்தை அனுப்பி முன்னாள் அமைச்சர் குமார சூரியரையும் பாதுகாக்கமுனைந்திருந்தார்.

சிறிமாவின்ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் குமாரசூரியர்

வன்முறைகள்வெடித்தபோது அவரது வீட்டிற்குள் புகுந்த ஐக்கிய தேசியக்கட்சி காடையர்கள் குமாரசூரியரின்கைகளை கட்டி அவரது வீட்டிற்கு அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இழுத்துவந்திருந்தனர்.

அங்குவைத்துஅவர்கள் குமாரசூரியரை தாக்கி கொல்ல முனைந்த போது ஜேயார் அனுப்பிய படையினரால் பாதுகாக்கப்பட்டார்.கொழும்பிலுள்ள தமிழர்கள் அரசதரப்பு காடையர்களால் மிக கொடுரமான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டநிலையில் ஜேயார் செய்த நகர்வுகள் இவை மட்டுமே

கலவரம்இடம்பெற்ற நேரம் தனது குடும்பஉறுப்பினர்கள் எல்லாம் ஒரே இடத்தில் பாதுகாப்பாக இருப்பதில்அக்கறை காட்டியிருந்தார்ஜேயார்.

தமிழர்மீதான இனச்சங்காரம் இடம்பெற்ற போது , மண்நிறத்தில் இருந்த மிகவும் ஆடம்பரமான உடையொன்றைஅணிந்தபடி அவர் மிக சாவகாசமாக சாய்மனை நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததை தான் கண்டதாக அப்போதைய பிரதி காவற்துறை மாஅதிபர் எட்வேட் குணவர்த்தனாதனது பிளட்(இரத்தம்) அன்ட் சயனைட் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின்பல மாவட்டங்களின் அரச அதிகாரிகள் தமது பகுதிகளில் இடம்பெறும் தமிழர் மீதான இனச்சங்காரம்குறித்து ஜேயாருக்கு அறிவித்த போதிலும் அவர் அந்த செய்திகளை காதில் வாங்கிக்கொண்டதாககாட்டிக்கொள்ளவில்லை.

மறுபுறத்தேவாக்காளர் பதிவு மற்றும் தமிழ் வணிக நிறுவனங்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டுதமக்கான இலக்குகளை தேடி வன்முறை கும்பல்கள் அலைந்து கொண்டிருந்தன.

தடங்கள்தொடரும்….

https://www.ibctamil.com/articles/80/104488

Share this post


Link to post
Share on other sites

“அப்பி சுத்தகாறா”!- கொட்டொலிகளுடன் அலைந்த காடையர்கள்!! கறுப்பு யூலை தடங்கள்…..

 

 
 

விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட திருநெல்வேலி கண்ணி வெடித்தாக்குதலை அடுத்தே கறுப்பு யூலை கலவரங்கள் ஆரம்பித்ததாக பலராலும் கூறப்படுகிறது.

ஆயினும் இந்தத் தாக்குதல் இடம் பெறாவிட்டாலும் கூட சிங்களப் பகுதிகளில் தமிழ்மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் என்பதற்கு கறுப்பு யூலையின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் நிருபித்திருந்தன.

ஏனெனில் கறுப்பு யூலை வன்முறைகள் ஆரம்பிக்க முன்னரே கொழும்பு நகரில் தமிழ் மக்களையும் தமிழ் வணிக நிறுவனங்களையும் இனங்காணும் வகையில் வாக்காளர் பதிவுகள்; நிறுவன பதிவு பட்டியல்கள் அரச நிறுலனங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

இதனை விட கறுப்பு யூலை வன்முறைகள் இடம்பெற்றவேளை ஜேயாரிடம் காணப்பட்ட அசாதாரண நடத்தையும் அரசின் உயர்மட்டத்துகிருந்த தொடர்புகளை அம்பலப்படுத்தியது

தமிழமக்களுக்கு எதிரான தீவிரமான வன்முறைகள்; இடம்பெற்றவேளை ஜேயார் மிகவும் சாதரணமாக தனது குடும்பத்துடன் பொழுதைக்களித்த ஆதாரங்கள் உள்ளன.

அந்த நேரம் நாட்டின் பல மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் அதிகாரிகள் தமது பகுதிகளில் வெடித்த வன்முறைகள் குறித்து ஜேயாருக்கு அறிவித்த போதிலும் அவர் அந்த செய்திகளை காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை.

23 ஆந்திகதி ஞாயிறு இரவு ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி சில உயரதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஜெயவர்த்தனாவால் கணக்கில் எடுக்கப்படவில்லை.

23 ஆந் திகதி இரவு மற்றும் மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் வன்முறை தாண்டவமாடிய நிலையில் பிற்பகல் 2 மணியளவிலேயே; ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்கும்படி ஜெயவர்த்தனா உத்தரவிட்டிருந்தார்.

அன்று காலை 6.30 மணியளவில் சிறிலங்கா காவற்துறை தலைமையகத்தின் 3ஆம் மாடியில் அவசர மாநாட்டை கூட்டிய காவற்துறை மா அதிபர் உருத்திராராஜசிங்கம் இந்த வன்முறைகளில் அரச உயர் மட்டத்தின் கரங்கள்இருப்பதை புரிந்து கொண்டார்

இதனால் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படவேண்டுமென ஜெயவர்த்தனாவுக்கு பரிந்துரைத்திருந்தார். எனினும் அவரது பரிந்துரையையும் உடனடியாக ஜேயார் உள்வாங்கவில்லை.

வன்முறைகள் அதிகளவு தலைவிரித்தாடுவதை கண்ட அமைச்சர்களான தொண்டமான், தேவநாயகம் ரொனி டி மெல் மற்றும் பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் ஜெயவர்த்தனாவை தொடர்பு கொண்டு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அழுத்தத்தை வழங்கினர்.

ஆயினும், பிற்பகல் 2 மணிவரை ஜெயவர்த்தனா அசைந்து கொடுக்கவில்லை.

இந்தநிலையில்,தமிழ்மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த செய்திகள்

அனைத்துலக ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்தன. இதனையடுத்து ஒப்புக்காகவேனும் ஒரு ஊரடங்குச்சட்டத்தை பிறப்பிக்க ஜெயவர்த்தனா பிற்பகல் 2 மணியளவில் உத்தரவிட்டார்.

ஆனால் வன்முறையாளர்களை கண்ட இடத்தில் சுடும் அளவுக்கு ஊரடங்கு சட்டத்தை அதிதீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டாமென்ற உள்ளக உத்தரவுகளும் இரகசியமாக வழங்கப்பட்டன

இதனால் தமிழ்மக்கள் மீதான வன்முறைகள் தெகிவளை. கொகுவல.. கோட்டே… நாவல.. பேலியகொட உட்பட்ட புறநகர் பகுதிகளில் மிக தீவிரமாக பரவியது.

தீயிடப்பட்ட தமிழ்மக்களின் வீடுகள் மற்றும்; வணிக நிலையங்களிலிருந்து எழுந்த புகை மூட்டம் கொழும்பு மாவவட்ட வான்பரப்பை நிறைத்தது.

“அப்பி சுத்தக்கறா” அதாவது நாங்கள் (தமிழ்மக்களை) சுத்தப்படுத்திவிட்டோம்… மற்றும் சிங்கள கமுதாவட்ட ஜெயவேவா (சிஙகளப்படையினருக்கு வெற்றி) போன்ற குருரத்தனமான கொட்டொலிகளுடன்; சிங்கள காடையர்கள் வீதிகளால் கொண்டிருந்தனர்.

தமிழ்மக்களோ பருந்துக்கு அஞ்சும் கோழிக்;குஞ்சுகளை போல தமது உயிரை காத்துக்கொள்ள பதுங்கி நடுங்கிக்கொண்டிருந்தனர்.

நல்ல உள்ளம் படைத்த சில சிங்களக் குடு;ம்பங்களிடம் பல தமிழ்குடும்பங்கள் தஞ்சமடைந்து உயிரைகாத்துக்கொண்டனர்.

ஆயினும் பலருக்கு அவ்வாறான வாய்ப்பு கிட்டவி;ல்லை. வீதிகளிலும் வீடுகளிலும் அவர்களின் உடலங்கள் புகைந்து கொண்டிருந்தன.

முதல்நாள் வரை தமக்கு மீன்வியாபாரிகளாகவும் காய்கறி விற்பனையாளர்களாவும் பரீட்சயமாக இருந்த சிங்கள தொழிலாளர்கள் காடையர்களாக மாறி தாம் பொருட்கள் விற்கும் தமிழ் வீடுகளை இனங்காட்டிக்கொண்டிருந்தனர்.

டிக்மன் வீதியில் சிங்களக்காடையர்களின் கொலைவெறிக்கு அஞ்சி தப்பியோட முனைந்த 6 தமிழர்களை அங்கு வந்த சிறிலங்கா படையினரே சுட்டுகொன்றனர்.

அவர்களின் உடலங்கள் தீயில் வீசி எறியப்பட்டன.இந்திய நிறுவனங்களும் தப்பவில்லை. இந்தியன் ஒவசீஸ் வங்கி மற்றும் ஓமான் வங்கி ஆகியனவும் தீயிட்ப்பட்டிருந்தன.

இலங்கையிலேயே உலக வங்கியின் கடனுதவியை பெற்ற ஒரேயொரு நிறுவனமான ஏ.வை ஞானத்தின் பல தொழிலகங்களும் தீயில் சங்கமமாகின. இதனைவிட சுமார் 4000 சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி இலங்கையில் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஹைதராமஸ் நிறுவனமும் தாக்கப்பட்டது.

யாழ்ப்பான பூர்வீகத்தை கொண்ட தொழிலதிபரான கே.ஜி என அழைக்கப்டும் கே. குணரத்தினத்தின் திரையரங்குகளும் கொழும்பில் தீயிடப்பட்டன.

அன்றைய கால கட்டத்தில் இலங்கையில் துணி, மற்றும் திரைப்பட விநியோகம், போக்குவரத்து துறைகளில் குணரத்தினம் முதன்மையாக இருந்தார். இது சிங்கள உயர்மட்டத்துக்கு உறுத்தலை ஏற்படுத்தியதால் சில மணிநேரத்தில் கே.ஜி வணிக சாம்ராஜ்யம் அழிக்கப்ட்டது.

இதனைவிட ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்ட இராஜமகேந்திர ராஜாவின் மகாராஜா நிறுவனம் மற்றும் இலங்கையில் பல ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா போன்ற நிறுவனங்களும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்ட

இதில் 10,000 பேர் பணிபுரிந்த செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் புனரமைக்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது

காலை 10 மணி முதல் பிற்பக்ல 2 மணிக்கிடையில் பாரிய துடைத்தழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென காடையர் குழு தலைர்களுககு உத்தரவிடப்பட்டதால் மிக உச்சக்கட்ட வன்முறைகள் ஜெயவர்த்தனா ஊரடங்குச்சட்டத்தை பிறப்பித்த பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றன

இதன் பின்னர் அதாவது ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கபட்டு சுமார் அரைமணிநேரத்தில் வெலிக்கடை சிறையில் பெரும்பச்சை படுகொலைகள் இடம்பெறும் திட்டம் உருவாகியது

சிறை அதிகாரிகளின் பங்களிப்புடன் தமிழ் அரசியல் கைதிகள் மீதான தமது படுகொலை திட்டத்தை மிகவும் நுட்பமாக நகர்த்த சிங்கள கைதிகள் ஆயத்தமானார்கள்.

தடங்கள் தொடரும்…..

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 15 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/104785

Share this post


Link to post
Share on other sites

தமிழ்கைதிகளை கொல்ல அதிகாரி ரெஜஸ் போட்ட திட்டம்! கறுப்பு யூலை தடங்கள்…..

 

யூலை 24 ஆம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிக்கிடையில் பாரிய துடைத்தழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென காடையர் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனால் மிக உச்சக்கட்ட வன்முறைகள் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றன

அதற்குப்பின்னர் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தான் வெலிக்கடை சிறையில் பச்சைக்குருதி படுகொலைகளை நடத்தும் திட்டம் உருவாகியது.

அன்றைய நாட்களில் வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ்கைதிகளுக்கு கொழும்பில் வன்முறைகள் இடம்பெறுவது குறித்து ஒரளவு தெரிந்திருந்தது.

இந்தநிலையில் 24 ஆந்திகதி நள்ளிரவுக்குப்பின்னர் சிறையின் பிரதான வாயில் பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து காடையர்கள் கூச்சலிடும் சத்தத்தை கேட்டு தமிழ்கைதிகள் தூக்கத்திலிருந்து எழும்பியிருந்தனர்.

தூக்கத்திலிருந்து கண்விழித்த தமிழ்கைதிகள்; சிறைகாவலாளி ஒருவரை அழைத்து வெளியே“என்ன சத்தம்” என வினவினர். அதற்குப் பதிலளித்த காவலாளி ஒன்றும் இல்லை என கூறிவிட்டு நழுவியிருந்தார்.

காடையர்களின் எழுப்பிய ஒலியை அடுத்து வெளியே சில துப்பாக்கி வேட்டுக்களும் கேட்டன. இதனை கேட்டு தமிழ்கைதிகள் சற்று பதற்றமடைந்தனர்.

இதேசமகாலத்தில் தீயிடப்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் மற்றும் வாகன்களில் இருந்து எழுந்த புகைமூட்டம் 25 ஆம் திகதி காலை பத்து மணியளவில் சிறை ஜன்னல்கள் ஊடாக தெரிய ஆரம்பித்தது. இதன் பின்னர் தமிழ்கைதிகள் மேலும்; பரபரப்படைந்தனர்.

வெலிக்கடை சிறையின் சப்பல் கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டது.

கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது

சப்பல் வாட் (உhயிநட றயசன) என அழைக்கப்பட்ட தரைத்தளத்தின் “பி” பிரிவில் போராளிகளாக இருந்த 27பேர் இருந்தனர். “டி” பிரிவில் தண்டிக்கப்பட்ட மற்றும் விசாரணை முடிவடையாத 35 தமிழ்கைதிகள் இருந்தனர். இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 52 தமிழ் அரசியல் கைதிகள்; அடைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையில் மிகப்பெரிய சிறைச்சாலை வெலிக்கடை சிறைச்சாலைதான். கண்டியில் உள்ள போகம்பர சிறைச்சாலையைவிட அது பலமடங்கு பிரம்மாண்டமானது. கடும்பாதுகாப்பும் கொண்டது.

சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி இருந்த இந்த சிறைச்சாலையின் கட்டிடம்; பிரித்தானியர் காலத்தில் 1843-இல் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சிலுவை வடிவ கட்டிடமாகும்.

அன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை சிறையின் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளரின் வதிவிடம் இருந்தது. அதன் வெளிவாசலின் வலது பக்கத்தில் பெண்களின் சிறை இருந்தது. முன்பக்கத்தில் சிறைச்சாலை பணியகம்; உள்ளது. அதன் பின்பக்கத்தில் விசாரணைக் கைதிகளின் சிறைக்கூடம் அமைந்துள்ளது

சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய வீதியில் சிறைசாலை பணியாளர்கள் மற்றும் காவலர்களின் வதிவிடங்கள் இருந்தன.

சிறைச்சாலையின் வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது.

வெலிக்கடை சிறையில் அன்றையகாலத்தில் இருந்த தமிழ் போராளிகள் அதிக நேரம் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பதே வழக்கம்.

சிறைச்சாலையிலுள்ள ஏனைய சிங்களக் கைதிகளைப் போல போராளி கைதிகளுக்கு பத்திரிகைகளை வாசிக்க அல்லது வானொலி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை. சிறைச்சாலை நூலகத்தை பயன்படுத்தும் வசதியும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை

அத்துடன் பெற்றோர் துணைவியர் வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்தான் தமிழர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சிங்கள கைதிகள். கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல்வன்முறை, தீவைப்பு, போன்ற குற்றங்களில் தண்டிக்கபட்ட இவர்களே தமிழ் கைதிகளைக்கொல்வதற்கு அதிகாரிகளால் ஏவிவிடப்பட்டவர்கள்

சிறைச்சாலையின் கீழ் பகுதியில் இருந்த விசேட நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசுதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் வேறு சில சிங்களக்கைதிகளுடன் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமிலிருந்து கொண்டுவரப்பட்ட 28 தமிழ்கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த அறைகள் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகள்.

டி-3 பிரிவில் 29 தமிழ்கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிந்தனர். ஏ-3 பிரிவில் சிங்களக் கைதிகள் இருந்தனர்.

பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பெரும் பூட்டுக்களால் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்த நேரமும் வைக்கப்பட்டிருக்கும்.

சிறைச்சாலையின் இந்த பிரிவை யாராவது ஒருவர் திறந்து விட்டாலன்றி அதிகாரிகள் உள்பட யாரும் உள்ளே செல்ல முடியாது.

டி-3 பிரிவைப் பொறுத்த வரை அதற்கு பொருத்தப்பட்டது கதவு மரக்கதவாக இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு ஒன்றினால் பூட்டப்பட்ட நிலையிலேயே அந்த கதவு எந்த நேரமும் காணப்படும்.

சிறைச்சாலையின் இந்த நான்கு விசேட பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு சிறை அதிகாரியும், ஒரு பொறுப்பதிகாரியும் இருந்தனர்.

இதனைவிட இந்த நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

சிறைச்சாலை கட்டிடத்தைச் சுற்றி இரண்டு வரிசையில் முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன வெளியே பலத்த ராணுவக்காவல் போடப்பட்டிருந்தம்.

இதுவே வெலிக்கடை சிறைச்சாலையின் அப்போதைய நிலைமையாகும்.

இந்தப் பின்னணியில் 25 ஆம் திகதியன்று துணைசிறைஅதிகாரி ரெஜஸ். சிறைஅதிகாரி சமிதரத்ன காவலதிகாரி பாலித. ஆகிய மூன்று அதிகாரிகளும் தமது படுகொலைத்திட்டத்தை மிக நுட்பமாக தீட்டினார்கள.;

அவர்களின் திட்டமிடலில் இருந்த அந்த நுட்பம் என்ன?

தடங்கள் தொடரும்…..

https://www.ibctamil.com/uk/80/104836?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

மூர்க்கமாக பாய்ந்த சிங்களக்கைதிகளும் குட்டிமணியின் அறை கொடுரமும்….

 

 

வெலிக்கடை சிறை படுகொலைக்கு திட்டமிட்ட சிறைஅதிகாரி ரெஜஸ். சிறைஅதிகாரி சமிதரட்ன> காவலதிகாரி பாலித ஆகிய மூவரும் தமது திடடமிடல் வியூகத்தில் மிக நுட்பமாக ஒரு திட்டத்தைப் புகுத்தியிருந்தனர்.

சிறைச்சாலையிள் உயரதிகாரிகள் மதியஉணவுக்காக தமது விடுதிகளுக்குச் சென்றபோது அவர்கள் இல்லாத போது நடந்த சம்பவம் எனக்காட்டும் நுட்பம் இது.

இந்த திட்டமிடலில் பின்னர்தான் இவர்கள் மூவரும் தமது நடவடிக்கைக்கு தோதானவர்கள் என கருதிய சில கடுமையான சிறைக்கைதிகளை தெரிவுசெய்தனர்.

அவர்களுக்கு சாராயம் கசிப்பு போன்ற மது வகைகளை தாராளமாக கொடுத்து, உற்சாகப்படுத்தி கொலைவெறியைத்தூண்டினர்.

வெலிக்கடை சிறையின் அன்றைய நடைமுறையின்படி

தமிழ் அரசியல் கைதிகளை தினமும் காலை பத்தரை மணியளவில் அரைமணிநேரம் வெளிப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

கைதிகள் மீது சூரியவெளிச்சம் படவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் நகர்வு இது.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் கைதிகள் பத்து அடி உயரமுடைய முள்கம்பிவேலி ஒன்றினால் அடைக்கபட்ட பகுதி ஒன்றுக்கே அழைத்துச்செல்லப்படுவார்கள்.

ஆனால் ஜூலை 25ம் திகதி காலை இந்த நடவடிக்கையில் ஒரு அசாதாரண நிலைமை இருந்தது.

வழமையைவிட அரைமணிநேரம் முன்னதாக காலை பத்துமணிக்கே “D” பிரிவில் இருந்த தமிழ்அரசியல் கைதிகளை(போராளிகளை) அழைத்துச் சென்ற அதிகாரிகள் சிறிதுநேரத்தில் அவசர அவசரமாக மீண்டும்; அவர்களை அறைகளுக்கு திருப்பி அழைத்துச்சென்றனர்.

அதிகாரிகள். எதற்காக தம்மை இவ்வாறு அவசரப்படுத்துகிறார்கள் என்பதை தமிழ்கைதிகளால் புரிந்து கொள்ள இயலவில்லை.

சிறையின் மதில்களுக்கு அப்பால் நாற்புறமும் புகை மண்டலமாக காட்சியளித்தமை தமிழ்கைதிகளுக்கு தொடர்ந்தும் பதற்றத்தை கொடுத்தது

இந்தவேளைதான் தனது தடுப்புபிரிவில் இருந்த சக கைதிகளுக்கு யாழ்ப்பாணத்தில் 13 படையினர் கொல்லப்பட்ட விடயத்தை குட்டிமணி மெதுவாக கூறியிருந்தார்.

இதன் பின்னர்தான்; சிறையின் “B” பகுதியிலிருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெளியில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஓரளவு ஊகிக்கமுடிந்தது

நேரம் மெல்லக் கடந்தது பிற்பகல் இரண்டுமணியை தாண்டிய நிலையில் பெருந்திரளான காடையர் கூட்டம் ஒன்று சிறைவளாகத்தில் கூடி நின்று கூச்சலிடும் சத்தம் தமிழ்கைதிகளுக்கு கேட்டது.

இந்தச் சத்தத்தைக் கேட்ட அவர்கள் திகைத்து எழுந்து தமது காதுகளைக் கூர்மையாக்கினர்.

தமது சிறைக்கதவுகளில் இருந்த இரும்புக்கம்பிகளினூடாக தமது பார்வையை செலுத்தினர்.

ஏதோ ஒரு விபரீதசம்பவம் இடம்பெறப்போகின்றது என்பதையும்; அவர்களின் உள்ளுணர்வு உணர்த்தியது.

இந்தநிலையில் சிறையில் உள்ள பெரும்பாலான சிங்களக்கைதிகள் ஆவேசத்துடன் தமிழ்கைதிகளின் சிறைப்பகுதியை நோக்கி மூர்க்கமாக நகரஆரம்பித்தனர்.

சிங்களக்கைதிகளின் இந்த ஆவேசம் நிலை அடுத்தகணம் நடக்கப்போகும் விபரீதத்தை தமிழ்கைதிகளுக்கு ஓரளவு உணர்த்தியது.

ஆதற்கிடையில் வெறித்தனமான முழங்கிக் கொண்டு வந்த சிங்களக்கைதிகள் குட்டிமணி ஜெகன் ஆகியோர் தங்கியிருந்த பிரிவுக்குள் ஆவேசமாக நுழைந்தனர்.

அவர்களின் கைகளில் பலவிதமான கொலைக் கருவிகள் காணப்பட்டன.

ஏவ்வாறு இந்த கருவிகள் வந்தன?

சிறைக்குள் கைதிகள் வேலைசெய்வதற்கென பலதரப்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன.

அந்த தொழிற்சாலைகளுக்குள் பெரிய பற்கள் கொண்ட கோடாலி> கத்தி> அலவாங்கு> சுத்தியல்> இரும்பிக் கம்பிகள்> நீளமான சாவிகள்> மரக்கட்டைகள்> மரமறுக்கும் வாள்கள் போன்ற கருவிகள் இருந்தன.

இந்தக்கருவிகள் தான் கொலைகார கைதிகளின் கரங்களில் இருந்தன இதனைவிட சிறைச்சமையல் அறையில் அடுப்பெரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய விறகு கட்டைகளும் அவர்களின் கைகளில் காணப்படடன.

குட்டிமணி தங்கியிருந்த பகுதிக்குள் புகுந்த காடையர் கூட்டம் ஒவ்வொரு அறையாகத் திறந்து, அதற்குள்ளே புகுந்து, தமது கரங்களிலிருந்த ஆயுதங்களால் கொடுரமாக தமிழ் கைதிகளை தாக்கியது.

காடையர்களின் கைகளில் இருந்த ஒவ்வொரு ஆயுதமும் “டி” பிரிவிலிருந்த தமிழர்கள் 35 பேரையும் தாக்கியது.

இறந்து கிடந்தவர்களையும் காடையர்கள மேலும் மேலும் குருரமாகத்தாக்கினர். மதியம் 2 மணி முதல் மாலை 4.45 வரை இவர்கள் அனைவரும்தமிழ் கைதிகளின் உடல்களை கழுகுகள் போல பிய்த்தெடுத்தனர்.

இறுதியாக மாலை ஐந்து மணியளவில் முதற் கட்டப்படுகொலைகள் ஓய்ந்தன.

அந்தநிலையில் ஜெயில் சுப்ரின்டென்ட் எனப்படும் சிறைஅதிபர் சப்பல் வாட் எனப்படும் மத்திய பகுதிக்கு வந்து அதன் முதலாவது மாடியில் ஏறி நின்று சிங்களக் கைதிகளை நோக்கி உரை ஒன்றை நிகழ்த்த ஆரம்பித்தார்

அவரது உரையில் என்ன சொல்லப்பட்டது?

தடங்கள் தொடரும்….

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 23 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/105131

Share this post


Link to post
Share on other sites

சிறுவனை குத்திக்கொன்ற காவலாளியும்! தமிழ்கைதிகளின் உடல்களுடன் சென்ற வாகனமும்!!

 

 
 

வெலிக்கட சிறையின் முதற்கட்டப்படுகொலை முடிந்தவுடன் சிறையின் சப்பல் வாட் எனப்படும் மத்திய பகுதிக்கு சென்ற சிறைதலைமை அதிகாரி முதலாவது மாடியில் ஏறி நின்று சிங்களக் கைதிகளை நோக்கி உரை ஒன்றை நிகழ்த்தினார்.

அவரது உரையின் தமிழாக்கம் இதுதான்.நீங்கள்(தமிழ்கைதிகளை கொன்ற சிங்களக்ககைதிகள்) எங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தீர்கள். எங்கள் இராணுவம் திருநெல்வேலியில் கொல்லப்பட்டதுக்கு சரியான பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம்.

குட்டிமணி போன்ற கொலைகாரர்கள், எங்கள் இனத்தவரைக் கொன்றாலும், இராணுவத்தினரைக் கொன்றாலும் நாங்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.

இன்றைய தினம் எங்கள் சரித்திரத்தில் முக்கியமான நாள், எங்கள் இனமும் இளைஞர்களும் நினைத்ததை நீங்கள் செய்து முடித்தீர்கள். உங்களது இந்த உணர்வுபூர்வமான நிலைக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த நாடு சிங்கள இனத்துக்கு உரியது என்பதனை நீங்கள் ஏனையோருக்கு உணர்த்தியுள்ளீர்கள்.

ஆயினும் நீங்கள் இதுவரை செய்தது போதும், ஆதலால் நீங்கள் அனைவரும் அமைதியாக உங்கள் உங்கள் பகுதிகளுக்குச் செல்லுங்கள் என அவர் கூறி முடித்தார்.

ஒரு சிறைக்கூடத்தின் தலைமை பொறுப்பாளரே இவ்வாறு பச்;சை இனவாதத்துடன் உரையாற்றியிருப்பாரா என நீங்கள் ஐயப்படுவீர்கள். ஆனால் இதுதான் அன்று நடந்தது.

சிறைஅதிகாரி தனது உரையை முடித்ததும்

தணியாத கொலைவெறியுடன் ஆயுதங்களுடன கூடி நின்ற சிங்களக் கைதிகள்; முதற்கட்டப் படுகொலையில் தப்பிப் பிழைத்த தமிழக்;கைதிகள் இருந்த அறைகளைப்பார்த்து முறைத்தனர்.

அதன்பின்னர் சிறைவளாகத்தில் இருந்த அரச மரத்தடியை நோக்கி நகர்ந்து சென்றனர்.

சிறிது நேரத்தில் சிறையின் பிரதான வாசல் கதவு திறக்கப்பட்டு ஒரு இசுசு ரக பாரஉந்து(லொறி)உள்ளே நுழைந்தது. அந்தவாகனம் தமிழ் கைதிகள் இருந்த சப்பல் வாட்டுக்கு அருகே அரச மரத்தின் கீழ் நின்றது.

இந்தநிலையில் சிறைஅதிகாரிகளின் உத்தரவுடன் மீண்டும் தமிழ் கைதிகள்இருந்த பகுதிக்குள் நுழைந்த சிலசிங்களக் கைதிகள் கொல்லபட்ட தமிழ் கைதிகளின் உடலங்களை நான்கு நான்கு பேர் வீதம் தூக்கிக்கொண்டு வந்து பாரஉந்துக்கு உள்ளே வீசி எறிந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் வாகனத்தில் வீசி எறியப்பட்டபோது அவர்களில் ஒருவர் குற்றுயிருடன் எழுந்திருக்க முயற்சிப்பதை சிங்கள கைதிஒருவர் கண்டுவிட்டார்.

இதனையடுத்து அவசரமாக வாகனத்துக்குள்; ஏறிய அவர் அங்கு கிடந்த ஏனைய உடலங்;கள் மீது நின்றபடி எழுந்திருக்க முயற்சித்த அந்ததமிழ் கைதியின்; தலையில் தன் கையிலிருந்த கோடாலியினால் ஓங்கி கொத்தினார்.

அந்த தமிழ் கைதியின் தலை குருரமாக இரண்டாகப் பிளந்து அவரது உடலம் மீண்டும் சரிந்தது.

இந்த வேளை இன்னொரு குருரமும் இடம்பெற்றது. இந்த குருரத்தில் சிக்கிய மயில்வாகனன் என்ற 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி மிக அவலமானது

குட்டிமணி தடுத்து வைக்கப்ட்ட அதே “டி” பகுதியில் அடைக்கப்பட்டிருந்த மயில்வாகனன் தமிழீழ விடுதலைக்கழகம் எனப்படும் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்

இவரும் பயங்கரவாத தடைத்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்ட்டிருந்தவர்.

சிறையில் முதற்கட்டப் படுகொலை இட்ப்பெற்ற பின்னர் சிறைக்கதவு கதவு திறக்கப்பட்டவேளை மறைந்து நின்று கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்த மயில்வாகனன் அரச மரத்தடியில் பீதியுடன்; நின்று கொண்டிருந்தான்.

சிங்களக்கைதிகள் அவனை கவனிக்கவில்லை.

எனினும் “டி” பகுதியில் காவலுக்கு நின்ற சிறை அதிகாரி ஒருவர் மயில்வாகனனைக் கண்டுவிட்டார்.

ஓடிச்சென்ற அந்தக்காவலாளி சிங்களக்கைதி ஒருவரின் கையிலிருந்த கத்தி ஒன்றினைப் பறித்து சென்று மயில்வாகனனது தலைமயிரைப் பிடித்து முன்னோக்கி இழுத்து அவனது வயிற்றில் பல முறை வெறியுடன்; குத்தினார்.

16வயதேயான மயில்வாகனன் தரையில் வீழுந்தான். அவனை குருரமாக குத்திய காவலாளியை சிங்களக் கைதிகள தமது தோள்மீது தூக்கி “ஜெயவேவா” என கோசமிட்டனர். இதன்பின்னர் மயில்வாகனது உடலமும வாகனத்துக்குள் தூக்கி வீசப்பட்டது

இதன்பின்னர் நீண்ட நேரம் அங்கு நின்ற இந்தவாகனம் இரவு ஏழு மணியளவில் தமிழ்கைதிகளின் உடலங்களுடன் வெளியேறியது.

சில மணிநேரத்தில் தமக்கு முன்னால் நடந்து முடிந்த சம்பவங்களால் பெரும் அச்சத்தையும் பிரமையையும் கொண்ட தமிழ் கைதிகள்

அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில்; இருந்தனர்.

நேரம் இரவு ஒன்பது முப்பது மணியை தாண்டிய போது சிறைக்கூடத்தின் பி பகுதி கதவு திறக்கப்பட்டது. இரண்டு மூன்று கறுத்த அங்கி அணிந்தவர்கள் சிறை அதிகாரிகளுடன் உள்ளே பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர்.

யார் இவர்கள்?

தடங்கள் தொடரும்….

https://www.ibctamil.com/history/80/105174?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

படுகொலைவேளை சிறைமேல் உலங்குவானூர்தி ! நிர்வாணமாக வீசப்பட்ட குட்டிமணி உடலம்!!

 

 
 

வெலிக்கடை சிறையில் படுகொலைகள் இடம்பெற முன்னர் இன்னொரு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கொழும்பில் வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்களில் சுமார் இருநூறு பேர் வெலிக்கடைச் சிறை முன்றலுக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்லவேண்டும் என ஆக்ரோசமாக கோஷமிட்டனர். பின்னர் சிறைக்கதவை தகர்க்க முற்பட்டனர்.

சிறையின் பிரதான வாசலிலும், ஏனைய நாற்புறங்களிலும் சிறிலங்கா படையினர்; காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காடையர்களின் இந்த அட்டகாசங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் முதன்மை சிறை அதிகாரியும் ,சிறைகாவற்துறை காவல் அதிகாரியும் காடையர் கூட்டத்தை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு உத்தரவாதத்தை வழங்கினர் .

நீங்கள் உள்ளே வந்துதான் இதனைசெய்யவேண்டியதில்லை. நாங்களே நாளை நல்ல செய்தி ஒன்றினை உங்களுக்கு தருவோம் என்பது அந்த உறுதிமொழி

சிறைஅதிகாரிகள் அளித்த இந்த உறுதிமொழியை அடுத்து காடையர்கள் திருப்பிச் சென்றனர்.

சிறையின் முக்கிய அதிகாரிகள் காடையர்களிடம் இந்த உறுதியை வழங்கிய போது சிறைக்கு வெளியே காவலுக்கு நின்ற தமிழ்காவல் அதிகாரி ஒருவரும் அதனை கவனித்து விட்டார்.

இதனையடுத்து சிறை காவல் பணியில் இருந்த தமிழ் பணியாளர்கள் அனைவரும் சிறையின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எல்லா தமிழ் பணியார்;களுக்கும் வெளிவேலைகளே வழங்கப்பட்டன. காடையர்களுக்கு சிறைஅதிகாரிகள் அளித்த உறுதிமொழியை நேரடியாக கண்ட

இந்த தமிழ்அதிகாரி பின்னர் இந்த செய்தியை மட்டக்களப்புச் சிறையில் காவல்பணியில் இருந்த தமிழ் அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் முதற் கட்டமாக வெலிக்கடை படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது போல இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்தன

இதனால் தான் சடுதியாக பாய்ந்த கைதிக்காடையர்களின் ஆயுதங்கள் தமிழ் இளைஞர்களின் தலைகளைப் பிளந்தன. கண்களைத்தோண்டின. இதயங்களை கிழித்தன. குடல்களை உருவின. குரல்வளைகளை அறுத்தன. கை, கால்களைத் துண்டித்தன.

முதற்கட்டப்படுகொலைகள் முடிக்கப்பட்டவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்றபடையினர் உள்ளே அழைக்கப்பட்டனர்.

முதற்கட்ட சிறை படுகொலைகள் இடம்பெற்றபோது உலங்கு வானூர்தி ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கண்காணிப்பை மேற்கொண்டது.

உலங்கு வானூர்தியின் இந்த கண்காணிப்பு நடவடிக்கையானது வெலிக்கடை படுகொலைக்கும் அரச உயர் மட்டத்துக்கும் இருந்த தொடர்பை வெளிப்படையாகவே உறுதிப்படுத்தியது.

குட்டிமணி, ஜெகன் ஆகிய இருவருக்கும் அவர்கள் மீதான வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்ட போது அவர்கள் இருவரும் ஒரு வேண்டுகோள் விடுத்தமை அனைவரும் அறிந்த செய்தி.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

 

தமக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின்னர் தமது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் தமிழீழத்தை தாம் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

இவ்வாறான ஒரு கோரிக்கையை குட்டிமணி விடுத்தார் என்பதற்காக அவர் குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார்.

ஆதன்பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய குருரம். கைதிகாடையர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்து ஜெயவேவா கொட்டொலியை எழுப்பிய குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.

குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் ஏனைய கைதிகள் கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.

குட்டிமணியின் கண்களைத் தோண்டியவர் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டு வீரனாகக் கொண்டாடப்பட்டான்.

ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் உறுப்புகளை வெட்டினர். இறுதியாக குட்டிமணியின் உடலத்தை நிர்வாணமாக போட்டார்கள்.

இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு அவரது உறுப்புகள் வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாக வீசப்பட்டது. முதல்நாள் மட்டும் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் மொத்தம் 29 பேர் பலியெடுக்கப்பட்டனர்.

அன்றிரவு இந்தப் படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டது.

அதேவேளையில் சிறைச்சாலையின் இன்னொரு மூலையில் இரண்டாவது படுகொலை தாக்குதலுக்கான திட்டங்கள் மும்முரமாக தீட்டப்;பட்டுக்கொண்டிருந்தன.

முதற்கட்டப்படுகொலைகள் இடம்பெற்ற அன்று இரவு முப்பது மணியை தாண்டிவேளையில் சிறைக்கூடத்தின் பி பகுதியால்

இரண்டு மூன்று பேர் சிறை அதிகாரிகளுடன் உள்ளே பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர்.

கறுத்த அங்கிகளை அணிந்திருந்த இவர்கள் 28 அறைகள் கொண்ட பி; பகுதியை ஒரு நோட்டம் விட்டனர்.

அந்த கறுத்த அங்கி குழுவில் இருந்த ஒருவர் ஞானசேகரன் என்ற கைதி தடுத்துவைக்கபட்டிருந்த அறையின் முன்னார் வந்துநின்றார்.

அன்றைய காலகட்டத்தில் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை தொடர்பாக கைதுசெய்யபட்டு அந்த வழக்கில் முதலாம் எதிரியாக பதிவு செய்யப்பட்ட புளொட் உறுப்பினர் தான் இந்த ஞானசேகரன்

இவர்தான் பின்னாளில் ஈ என். டி .எல். எப் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர். ஞானசேகரனின் அறையின் முன்னால்; வந்து நின்ற இந்த கறுத்த அங்கி உருவம்சிறிலங்காவின் முதன்மை நீதிபதி என தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியது.

அதன்பின்னர் இங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீங்கள் சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என அவர் ஞானசேகரனிடம் வினவினார்.

தடங்கள் தொடரும்…..

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 28 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/105332?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

தமிழர் உடல்களை 2 மணிநேரமாக குதறிய சிங்களக் காடையர்கள்! தலையிட மறுத்த காவற்துறை!!

 

 
 

வெலிக்கடை சிறைப்படுகொலைகள் இடம்பெற்றவேளை சிறிலங்காகாவற்துறை தலைமையகத்துக்கு இவ்வாறான ஒரு படுகொலை சிறையில் இடம்பெறுவது நன்றாகத் தெரிந்திருந்தது.

இதுகுறித்து சிறிலங்கா காவற்துறையின் தொலை தொடர்புசேவையில் பதிவு இருந்தமைக்கான ஆதாரம் பின்னர் வெளி;ப்பட்டிருந்தது.

சவுத்-2 என்ற தொடர்பாடல் முனை சவுத் 1 என்ற தொடர்பாடல் முனையுடன் பேசிய செய்தி இதனை பகிரங்கமாக்கியது.படுகொலை இடம்பெற்றபோது நடந்த உரையாடலின் தமிழாக்கமஇதுதான்;….

சவுத்2 இல் இருந்து சவுத் 1 க்கு … வெலிக்கடை சிறையில்கடுமையான சம்பவங்கள் இடம்பெறுவதாகதகவல் வந்துள்ளது!... என்ன செய்யலாம்?

சவுத்1 …இல் இருந்து சவுத் 2 க்கு (பதில்) ….. வெலிக்கடை சிறை படையினரின் கட்டுப்பாட்டுக்குள்வருவதால் இதில் தலையிடத்தேவையில்லை. தலையிட்டதால்பின்னர் இதில் சிக்கல் வரும்!

சவுத்2 இல் இருந்து சவுத் 1 க்கு…. அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது…ரொஜர்.. ஒவர்!

சிறிலங்காகாவற்துறை வானொலி தொடர்பு சேவையில் பதிவில் இருந்த இந்த ஆதாரம் பின்னர் அழிக்கப்பட்டதாகவும்தகவல்

இந்தநிலையில் தான் சிறையின் முதற்கட்டப்படுகொலைகள் குறித்த வாக்கு மூலங்களை பதிவு செய்வதற்குசிறிலங்காவின் முதன்மை நீதிபதி அன்றிரவே சிறைக்குச்சென்றிருந்தார்.

ஆனால்அதேசமகாலத்தில்தான் சிறையின் இன்னொரு பகுதியில் இரண்டாவது கட்ட படுகொலைக்கான திட்டங்கள்தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்தநிலையில் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை வழக்கின் முதலாம் எதிரியான

ஞானசேகரனின் அறையின் முன்னால்; வந்து நின்ற நீதிபதி சிறையில் அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து;சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என அவரிடம் வினவினார்.

இந்தஞானசேகரன்தான்; பின்னாளில் ஈ. என.; டி .எல். எப் இயக்கத்தின் முக்கிய தலைவராகமாறியவர்.சிறிலங்கா படையினரால் சுட்டு காயப்படுத்தப்பட்டே

ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். படையினர் சுட்ட ரவை ஒன்று அவரது முள்ளந்தண்டில்; காயத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரது கால் சரிவர இயங்கவில்லை.

பின்னர்அவரை பரிசோதித்த இராணுவ மருத்துவர் அவரது வலது கால் இயங்காது என உறுதிப்படுத்தி மருத்துவ சான்றிதழை வழங்கியிருந்ததால் அதனைப் பயன்படுத்தி சிறிய ஊன்று கோல் ஒன்றை அவர் பெற்றிருந்தார்.

சிறை படுகொலைகள் குறித்து சாட்சி சொல்ல விரும்புவதாக

ஞானசேகரன் கூறியதும் அவரது அறையை திறக்கும்படி சிறை அதிகாரிக்கு சைகை காட்டினார் நீதிபதி.

அதன்பின்னர் தமிழ்கைதிகள் இருந்த ஒவ்வொரு அறையாகச் சென்று அவர்களும் சாட்சி சொல்ல விரும்புகிறார்களாஎன்பதை வினவிவிட்டு வந்தார்.

ஞானசேகரனின்அறை திறக்கப்பட்டது. அவர் தனது ஊன்றுகோலின் உதவியுடன் வெளியில் வந்தார். இந்த நகர்வுகளைஇதனைக்கண்ட இன்னொரு கைதியான தம்பாபிள்ளை மகேஸ்வரன்; தானும் சாட்சியம் சொல்ல விரும்புவதாகதாமதமாக கூறினார்.

தம்பாபிள்ளைமகேஸ்வரன் சாட்சியமளிக்க முன்வந்ததும் சிறைஅதிகாரிக்கு சீற்றம் வந்தது. முதலில் கேட்டவேளை பேசாமல் இருந்துவிட்டு இப்போதுஎதற்காக சாட்சிசொல்ல விரும்புகிறாய்? என தம்பாபிள்ளை மகேஸ்வரனை நோக்கி சீறினார் அவர்.எனினும் மகேஸ்வரனையும்; அழைத்து வரும்படி உத்தரவிட்டார் நீதிபதி.

இதனையடுத்துஞானசேகரன் மற்றும் மகேஸ்வரன் ஆகிய இருவருடனும் முதன்மை சிறைஅதிகாரியின் பணியகத்துக்குசென்றார் நீதிபதி.

வாசலில்போடப்பட்டிருந்த வாங்கில் இவரையும் அமரும்படி கூறிய அதிகாரிகள் இரவு பத்து முப்பதுமணியளவில் ஞானசேகரனின் பெயரைச் சொல்லி உள்ளே அழைத்தனர்.

உள்ளேபெரிய மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. ஆதில் ஒருபக்கம் முனையில் முதன்மை நீதிபதியும்தட்டெழுத்தாளரும் இருந்தனர். மற்றப்பக்கம் ஒரு ஒரு கதிரை போடப்பட்டு இருந்தது

அந்தகதிரையை சைகை மூலம் காட்டிய நீதிபதி அதில் அமரும்படி ஞானசேகரனுக்கு கூறினார்.

அந்தஅறையில்அரசு தரப்பின் சட்டவாளராக திலக் மாரப்பன இருந்தார்.

இவர் வேறுயாருமல்ல தற்போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் இதே திலக் மாரப்பனதான்அவர். அன்று அவர் சிறிலங்காவின் சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பிரதி சட்டமா அதிபர்களின்ஒருவராக பணியாற்றியவர்.

 

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

குட்டிமணிக்கும் தங்கத்துரைக்கு தூக்குத் தண்டனை வழங்கவேண்டும் என அரசு தரப்பின் சட்டவாளராக சுற்றிச்சுழன்று அன்று நீதிமன்றத்தில் மும்முரமாக வாதாடியவர் திலக் மாரப்பன.

இந்த சந்தர்ப்பத்தில் ஞானசேகரனைப் பார்த்த நீதிபதி வாக்கு மூலத்தின் பதிவை ஆரம்பிக்கலாமா? என வினவினார்.

இந்தசந்தர்ப்பத்தில் திலக் மாரப்பனவை சுட்டிக்காட்டிய ஞானசேகரன் அவரை அறையிலிருந்து வெளியே அனுப்பினால் மட்டுமே தான்வாக்கு மூல பதிவை வழங்குவேனென நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஞானசேகரனின் இந்த கோரிக்கையை நீதிபதி எதிர்பார்க்கவில்லை. அவர் திலக் மாரப்பனவின் முகத்தைப்பார்த்தார் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றார் திலக்மாரப்பன.

மீண்டும் ஞானசேகரன் அறையில் இருந்த சிறைஅதிகாரகளைப்பார்க்க அதனை. விளங்கிக்கொண்ட நீதிபதி, அவர்களையும்வெளியே செல்லும்படி பணித்தார்

அவர்களும் வெளியேறினர் நீதிபதியும் தட்டெழுத்தாளரும் மட்டும் அந்த அறையில் இருந்தனர். மீண்டும் ஞானசேகரனை நோக்கிய நீதிபதி இப்போது ஆரம்பிக்கலாமா, என்றார்.

மீண்டும் ஒரு பிரச்சனையை சொன்னார் ஞானசேகரன். தான் சாட்சியமளித்துவிட்டு அதே சிறைஅறைக்குச் சென்றால் கொலையாளிகள் மீண்டும் தன்னை படுகொலை செய்யலாமென்றஅச்சத்தை வெளியிட்டார் அவர்.

அத்துடன் தமிழ் அரசியல்; கைதிகள் அனைவரையும் வேறு சிறைச்சாலைக்கு மாற்றினால் மட்டுமே தான் சாட்சியம் சொல்வதாகவும் ஞானசேகரன் கூறினார்.

ஞானசேகரின் இந்த கோரிக்கையையும் நீதிபதி எதிர்பார்க்கவில்லைசற்று யோசித்தார். ஆதன்பின்னர்

சிறைச்சாலைமாற்றம் குறித்து தன்னால் ஒன்றுசெய்ய முடியாதென்றவர் வேண்டுமானால் இந்தப் பிரச்சினையைஅரச தலைவர் ஜெயவர்த்தனாவிடம் எடுத்துச் சொல்வதாக கூறினார்.

பின்னர்எழுந்து வெளியே சென்ற நீதிபதி முதன்மை சிறை அதிகாரியை மீண்டும் உள்ளே அழைத்தார்.

உள்ளேவந்த அவரிடம் பேசிய நீதிபதி சிறைவளாகத்தில் வேறு தனியான இடம் ஏதாவது இருக்கிறதா எனவிசாரித்தார்.

நீதிபதியின்வினாவுக்குப் பதிலளித்த முதன்மை சிறை அதிகாரி செக்கிறிகேசன் (Segregation) பகுதி மட்டும்அவ்வாறு தனியாக இருப்பதால் வேண்டுமானால் அதனை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார்.

ஆனால் அதே செக்கிறிகேசன் பகுதிதான் மறுநாள் பெரும்படுகொலைக் களமாக மாறப்போவதை நீதிபதி அப்போது அறிந்திருக்கமாட்டார்.

இதனையடுத்து ஞானசேகரனைநோக்கிய நீதிபதி, தற்போது இருக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இன்று இரவே அவரை மாற்ற உடன்பட்டதுடன் சாட்சியம் தரவேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஞானசேகரனின் பெயர் முகவரி ஆகியன தட்டச்சில் பதிவு செய்யப்பட்டவுடன் அன்று நடந்த சம்பவங்களை நேரில்பார்த்தீர்களா? என்ற முதல் வினாவுடன் வாக்குமூலப்பதிவை ஆரம்பித்தார் நீதிபதி.

அவர்கேட்டது என்ன? ஞானசேகரன் சொன்னது என்ன?

தடங்கள்தொடரும்….

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 29 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/105388?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

அருட்தந்தை சிங்கராயரின் கட்டிடத்தில் புதியவர்கள்! குழம்புக்கறியை ஆயுதமாக்க தமிழ்கைதிகள் திட்டம்!!

 

 

வெலிக்கடை சிறையில் முதலாம்கட்டப் படுகொலைகள் இடம்பெற்ற அன்றிரவே இரண்டாவது கட்ட படுகொலைக்கான திட்டங்கள்தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்தவேளையில் தான் முதற் கட்டப்படுகொலைகள் குறித்த வாக்கு மூலங்களை பதிவுசெய்ய என சிறிலங்காவின் முதன்மை நீதிபதி சிறைக்குச்சென்றிருந்தார்.

நீதிபதியிடம் வாக்குமூலங்களை வழங்க அப்போதைய புளொட் உறுப்பினரான ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) மற்றும் தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸவரன்) ஆகியோர் முன்வந்தனர்

நடந்த சம்பவங்களை நீங்கள் நேரில் பார்த்தீர்களா? ஏன ஞானசேகரனிடம் தனது முதல் வினாவைதொடுத்தார் நீதிபதி. அதன்பின்னர் கேள்விகளும் பதில்களும் மாறி மாறி இடம்பெற்றன

அதிகளவான சிங்களக்கைதிகள் தமது கைகளில் ஆயுதங்களை காவியபடி குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் தங்கியிருந்த -டி- பகுதியினுள் ஆவேசமாக புகுந்ததை தான் நேரில் பார்த்ததாக குறிப்பிட்ட ஞானசேகரன்

அவ்வாறு சென்ற கைதிகள் பலரை தன்னால் அடையாளம் காட்ட முடியுமெனவும் குறிப்பிட்டார்.

ஆயுதங்களுடன் சென்றவர்கள் ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக உள்ளே தாக்குதலை நடாத்தினார்கள். அதன்பின்னர் பின்னர் உதிரம் தோய்ந்த ஆயுதங்களுடன் வெளியே வந்த அவர்கள் வெளியே காத்திருந்த காடையர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்தனர்.

அவர்களும் தமிழ் கைதிகளின் உடலங்களை தாக்கிவிட்டு வெளியேறியதை தான் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவை அனைத்தும் தற்செயலாக நடந்த சம்பவங்கள் தானே? ஏன நீதிபதி வினவியபோது அதற்கு பதிலளித்த ஞானசேகரன் அவை அனைத்தும் திட்டமிடப்பட்டே நடந்தவை என குறிப்பிட்டார்.

எப்படிச் சொல்கிறீர்கள் என பதில் வினாவைத் தொடுத்தார் நீதிபதி

மதிய உணவுக்குப்பின்னர் கைதிகள் அனைவரும் அவரவர் அறைகளில் அடைக்கப்படும் நடைமுறை வழக்கமாக இருக்கும். ஆனால் இன்று மட்டும் அவ்வாறு இடம்பெறாமல் கைதிகள் எல்லோரும் சிறையில் இருந்த அரசமரத்தின் கீழ் கூடிநின்றதை தான் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் கைதிகளும் காவலாளிகளும் இணைந்து செய்த செயல் என கூறுகிறீர்களா? என பதில வினாவைத் தொடுத்தார்.

இதற்கு ஆம் என பதிலளித்த ஞானசேகரனின் மேலதிகாரிகளும் சேர்ந்து செய்ததாக குறிப்பிட்டதும் எப்படிச் சொல்கிறீர்கள்? என வினாவினார் நீதிபதி.

மேலதிகாரிகள் அனுமதியின்றி சிறைக்காவலர்கள் தாங்களாகவே கைதிகளின அறை கதவுகளை திறந்துவிட முடியாதெனவும்; சம்பவங்கள் இடம்பெற்ற போது மொத்தச் சிறைக்கைதிகளும் சிறை மைதானத்திலும், அரச மரத்தடியிலும் கூடியிருந்ததை கூட்டிக்காட்டினார்.

இறுதியாக அதிகாலை சுமார் இரண்டு மணியளவில்

ஞானசேகரன் வழங்கிய வாக்குமூலத்தின் கீழ் அவரது கையொப்பத்தை பெற்றுக் கொண்ட நீதிபதி பின்னர் சிறை அதிகாரிகளை அழைத்து ஞானசேகரனை ஒப்படைத்தார்.

ஞானசேகரன் மீண்டும் அவரது அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டவேளை அவரைக் கண்ட சிங்களக் கைதிகள் சாட்சியா சொல்லிவிட்டு வருகிறாய் என ஆக்ரோசமாக கத்தினர் அதன்பின்னர் உங்கள் அனைவரையும் கொல்வோம் என ஒன்றா குரல் கொடுத்தனர்.

சிங்களக்கைதிகளின் இந்த ஆக்ரோச நிலையை கண்ட தமிழ்கைதிகளுக்கு மீண்டும் தம்மீது புதிய தாக்குதல் நடத்தப்படுமென்ற அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறைக் காவலாளிகள் மிகவும் அவரச அவசரமாக வந்து சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 27 பேரையும் வேறு கட்டிடத்துக்கு மாற்ற முனைந்தனர்.

இந்தக் கட்டிடம் சப்பல் கட்டிடத்துக்கு அருகில் இருந்த புத்த விகாரைக்குப் பின்னால் அதாவது சிறையின் மத்திய பகுதியில் அமைந்திருந்தது.

பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய இந்த கட்டிடத்தின் மேல்மாடியில் கிறிஸ்தவ அருட்தந்தையர்களான சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா ஆகியோரும் அவர்களுடன் வைத்தியர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீயத் தலைவர் டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் வைத்தியர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலைஅணித்தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த கட்டிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்கைதிகள் அங்கிருந்த எட்டு அறைகளிலும் ஒவ்வொரு அறையிலும் மூன்று பேராக அனுமதித்தனர்.

மிகுதி மூன்று பேரையும் மேலதிகமாக 3 அறைகளில் அடைத்தனர்

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அன்று இரவு முழுவதும் யாருக்குமே உறக்கம் வரவில்லை.

புதிதாக அங்கு கொண்டுவரப்பட்ட 27 பேரும் அதிகாலையில் ஐந்து மணிக்குத்தான் ஓரளவு உறங்க ஆரம்பித்தனர். எனினும் பதற்றம் காரணமாக அவர்களால் காலை ஒன்பது மணிக்கு மேல்தூங்க முடியவில்லை.

ஒவ்வொருவராக உறக்கம் கலைந்து இன்றும்

காடையர்கள் வந்தால் என்ன செய்வது? என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இனி ஒரு தாக்குதல் நடந்தால் எப்படி நடக்கவேண்டும் என்பது குறித்து அறைகளில் இருந்த சக கைதிகளுக்கு உரத்த குரலில் ஞானசேகரன் கூறத்தொடங்கினார்

இன்று மதிய உணவுக்கு வழங்கப்படும் குழம்பு கறியை உண்ணாமல் அனைவரும் குவழையில் வைத்திருக்கும்படி ஞானசேகரன் ஆலோசனை கூறினார்.

பொதுவாக வெலிக்கட சிறையில் மதிய உணவுக்கு சோற்றுடன் மரக்கறியும் குழம்பும் வழங்கப்படும் அவ்வாறு வழங்கப்படும் குழம்புகறியை தமிழ் கைதிகள் சிறிய குவளையில் பெற்றுக் கொள்வது வழக்கம்.

அதற்கு காரணமும் உண்டு. சிறையில் வழங்கப்டும்; சோற்றில் அதிககற்கள் கடிபடும். இதனால் அந்தசோற்றை தண்ணீரில்போட்டு அதனை பிளிந்தெடுத்துத்தான் அவர்கள் உண்பது வழக்கம்.

இதற்காக சோற்றுடன் குழம்பு கறியை பெறாமல் அதனை சிறிய குவளையில் முன்னேற்பாடாக பெற்றுக் கொள்வார்கள்.

இந்தநடைமுறையில் இன்று அவ்வாறு வழங்கப்படும் குழம்புகறியை உண்ணாமல் அனைவரும் குவழையிலேயே வைத்திருக்கும்படி ஞானசேகரன் ஆலோசனை கூறினார்

அவரது திட்டப்படி கைதிகள்சிறுநீர் கழிப்பதற்கென வழங்கப்ட்ட வாளியில் தண்ணீர் விட்டு அதனுடன்; இந்தக் குழம்பையும் ஊற்றி கலக்கி வைத்திருந்து ஒருவேளை காடையர்கள் தம்மை தாக்கவந்தால் அவர்களின் முகங்களில் அதனை ஊற்றலாம் என்பது திட்டம்.

அவர்களிடம் ஆயுதங்கள் என அப்போது இருந்தவை சிறு நீர்கழிக்கும் வாளியும், உணவுக்கான அலுமனியத்தட்டு மட்டுமே. இதனை விட புளொட் ஞானசேகரனிடமிருந்த ஊன்றுகோல்

அந்தத் தடிதான் மறுநாள் அவரது அறையிலிருந்த மூவரின் உயிரையும் காக்க உதவியது.

மதிய வேளை வந்தது. ஒரு மணியளவில் உணவு வந்தது ஆனால் தமிழ் கைதிகள் எதிர்பார்த்ததை போல உணவுவழங்கியவர்கள் குழம்பை குவழையில் ஊற்ற மறுத்தனர். மாறாக உணவுத்தட்டுகளிலேயே குழம்பை ஊற்றினர்.

எனினும் சோற்றில் ஊற்றப்பட்ட குழம்பை குவழையில வடித்துவைத்தனர் தமிழ்கைதிகள். மதிய உணவுக்குப்பின்னர் தமிழ்க்கைதிகளிடம் முன்னை நாள் பாதி உறக்கம் தொற்றிக்கொண்டது கொஞ்சம் அயர்ந்துவிட்டனர்.

திடீரென எழுந்த மனித இரைச்சல் அவர்களின் பாதி உறக்கத்தைக் சடுதியாக குலைத்தது. மீண்டும் கொலை வெறியுடன் தமிழ்கைதிகள் இருந்த கட்டிடத்தை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர் சிங்களக்கைதிகள்.

தடங்கள் தொடரும்…..

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 30 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/105437?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வு விடுத்த எச்சரிக்கையை சிறி லங்கா பாதுகாப்பு துறையும் நல்ல கற்பனை என்று தான் நினைத்து இருக்க வேண்டும்.அல்லாவிட்டால் எச்சரிக்கை ஆவது செய்து இருப்பார்கள். 
  • வெள்ளவத்தை சவோய் முன்னாள் 10வது குண்டு  அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசீலித்த போலீசார், அதனை சோதித்தபோது, சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டு சென்று வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். அது முடியாததால் வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். முன்னெச்சரிக்கையோடு, பாதுகாப்பாக இதை செய்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது, மூன்றாவது நாளில் கண்டுபிடிக்கப் பட்ட  10வது வெடிகுண்டு ஆகும். இது மக்களிடேயே பெரும் பயத்தினை அதிகரித்துள்ளது. இலங்கையில் மக்கள் கூடும், இன்னும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  
  • உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஏப்ரல் 24 புதன்கிழமை, மு.ப. 02:28 Comments - 0 சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.    தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், நாட்டு மக்களைப் பெரும் சோகத்துக்குள்ளும், சந்தேகப் பீதிக்குள்ளும் தள்ளியிருக்கின்றது.   தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஐத் தாண்டிவிட்டது; காயமடைந்த 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்தோடு, தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் இருந்த பலரும் காணாமற்போயிருக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.   பேரிழப்புகளுக்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கின்ற அரசாங்கம், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தவிர்த்திருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் கூறுகின்றது.    பேரிழப்பொன்று நிகழ்வதற்கு முன்னரேயே, அதனைத் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும், அதைத் தவறவிட்டுவிட்டு, அரசாங்கம் தற்போது கோரும் ‘மன்னிப்பு’ உண்மையிலேயே அதற்கான தார்மீகத்தைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகின்றது.    அரசாங்கத்துக்கும் அரச தலைவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது, தேசிய பாதுகாப்பை ஒரு கிள்ளுக்கீரை விடயமாகக் கையாள வைத்துவிட்டதோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகின்றது.   ஒக்டோபர் 26 சதிப்புரட்சிக் காலத்துக்குப் பின்னர், தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு பிரதமரோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரோ அழைக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போதுதான் வெளிவந்திருக்கின்றது.    ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான தன்முனைப்பு (ஈகோ) பிரச்சினையில், நாட்டின் பாதுகாப்பு விலையாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதம், நான்காம் திகதியே சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக, அறிவுறுத்தி இருக்கின்றன. அது தொடர்பில் இலங்கைப் புலனாய்வுத் தரப்பும், அறிக்கையொன்றைத் தேசியப் பாதுகாப்புத் தரப்புகளிடம் கையளித்திருக்கின்றது.    ஆனால், அந்த அறிக்கை குறித்தோ, அதிலுள்ள விடயங்கள் குறித்தோ, நாட்டின் பிரதமருக்கே தெரிந்திருக்கவில்லை என்பது, எவ்வளவு மோசமான அரசியல்- தலைமைத்துவ கலாசாரம், நாட்டில் நீடிக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இவ்வாறான அறமற்ற அரசியலே, மக்களைத் தொடர்ந்தும் பலிக்களங்களில் நிறுத்துகின்றது.   இன்னொரு பக்கம், தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு, பொலிஸ்மா அதிபரே அழைக்கப்படுவதில்லை என்ற விடயம் மேலெழுகின்றது. தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் அரசாங்கத்தின் இரண்டாவது தலைவரான பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சினைத் தன்னகத்தே வைத்திருக்கின்ற ஜனாதிபதியால் அழைக்கப்படுவதில்லை என்கிற விடயம் பாரதூரமானது.    தான் நாட்டில் இல்லாத சமயங்களில், அதுசார்ந்த பொறுப்புகளைப் பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பகிர்ந்தளிக்க வேண்டிய கடப்பாடும் ஜனாதிபதிக்கு உண்டு. நாட்டின் தலைவரான ஜனாதிபதி, நாட்டில் இல்லாத சமயங்களில், சம்பிரதாயபூர்வமாகப் பிரதமரே நாட்டின் தலைவராகச் செயற்பட வேண்டும்.   ஆனால், பெரும் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்த பின்னரும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை பிரதமரால் உடனடியாகக் கூட்ட முடியாமல் போகும் அளவுக்குத்தான், நிலைமை இருக்கின்றது என்பது என்றைக்குமே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை.   மக்களே நாடொன்றின் இறைமையைக் கட்டமைக்கிறார்கள். அந்த இறைமையின் அடிப்படையிலேயே அரசுகள் தோற்றம் பெறுகின்றன. அந்த அரசுகளின் தலைமை என்பது, மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.    ஆனால், தற்போது நிகழ்ந்திருப்பது, பொறுப்பின்மை மற்றும் சின்னப்பிள்ளைத்தனங்களில் உச்சம்.    தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள், ஏற்கெனவே கிடைக்கப்பெற்ற நிலையில், அந்தத் தகவல்கள் குறித்தோ, அதுசார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ ஜனாதிபதியோ, பாதுகாப்புச் சபையோ அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.    விடுமுறையைக் கழிப்பதற்காக ஜனாதிபதி வெளிநாடு சென்றிருக்கின்றார். நாட்டின் தலைவருக்கான ஆணையை மக்களிடம் கோரும் போதும், அந்தப் பொறுப்பை ஏற்கும் போதும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புத் தொடர்பில் உறுதியை வெளிப்படுத்துவது கடப்பாடாகும்.    ஆனால், அந்தக் கடப்பாடுகளுக்கு அப்பால் நின்று, மைத்திரி விடயங்களைக் கையாண்டிருக்கிறார் என்பதுதான், அவரின் அசண்டையீனங்களில் வெளிப்படுவதாகும்.   அரச இயந்திரமும், அரசாங்கமும் நாடு எதிர்கொண்டிருக்கின்ற அச்சுறுத்தல்களை ஒருமித்து நின்று எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. ஆனால், இன்னமும் முரண்பாடுகளின் கட்டத்தில் நின்று, விடயங்கள் அணுகப்படுகின்றன. பேரழிவுக்குப் பின்னராக, ஊடகங்களை எதிர்கொள்ளும் அமைச்சர்களின் முகங்களில் வெளிப்பட்ட புன்னகையும் இன்னொரு தரப்பைக் குற்றம் சாட்டுவதில் காட்டிய முனைப்பும் உண்மையிலேயே தார்மீக அடிப்படைகளைக் கொண்டவையா?   எல்லா விடயங்களும், தேர்தல் அரசியல் என்கிற கட்டங்களை நோக்கி நகர்த்தப்படும் சூழல் என்பது சாபக்கேடு. இலங்கையின் அனைத்து இன மக்களும் இப்போது அதனை எதிர்கொண்டிருக்கிறார்கள். கடந்த நாள்களில் இடம்பெறும் சம்பவங்களும் அதற்குச் சான்று பகர்கின்றன.   இன்னொரு பக்கம் இன, மத, மார்க்க, உருவ அடையாளங்களின் வழி, மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு நோக்க ஆரம்பிப்பது என்பது, பல்லின சமூகங்கள் வாழும் சூழலில் பெரும் அச்சுறுத்தலானது.    இலங்கை போன்ற எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இன, மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்ற நாட்டுக்கு, அது புதிதில்லைத்தான். ஆனால், சந்தேகத்தின் அளவு, கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்திருந்த நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதல்களும், அதன் பின்னரான காட்சிகளும் அவ்வாறான கட்டத்தை நோக்கி நாட்டை வெகுவேகமாகத் தள்ளிவருகின்றது.   தொடர்ச்சியாக, இன- மத- மார்க்க அடிப்படைவாத சிந்தனைகளின் வழி, அரசியலை எதிர்கொண்டிருக்கின்ற இலங்கையில், அடிப்படைவாதச் சிந்தனைகளின் பரவலும், நிலைபெறுகையும் இலகுவானதுதான்.    ஒரு தரப்பு, தங்களது தேவைக்கான மத அடிப்படைவாதச் சக்திகளைத் தோற்றுவித்து, முரண்பாடுகளைத் தூண்டும்போது, அதற்கு எதிராக இன்னோர் அடிப்படைவாத சிந்தனை தோற்றம் பெறுவது தவிர்க்க முடியாதது.    இன்றைக்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. சாதாரண மக்களை நோக்கி, வேகமாகவே தங்களது அடிப்படைவாத நிலைப்பாடுகளைச் செலுத்தி வருகின்றன. அவ்வாறான நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு, புறச் சக்திகள் உள்நுழைந்து, தமது தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.   இலங்கை மீது தொடுக்கப்பட்டிருக்கின்ற இந்தத் தீவிரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டு முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அடிப்படைகளோடு மாத்திரமல்ல, பிராந்திய, மத, மார்க்க ஆதிக்கத்தோடும் தொடர்புடையவை. மக்களை முரண்பாடான முனைகளை நோக்கித் தள்ளி, அதில் சிலமுனைகளில் அடிப்படைவாதம் என்கிற சிந்தனையை விதைத்து, அதிகாரங்களை அடைவதே, உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கின்ற தீவிரவாதம்.    அது, எந்த மத, மார்க்க அடையாளத்தோடும் வரலாம். ஆனால், அந்தத் தீவிரவாதத்தின் வேரில், வெந்நீரை ஊற்றும் பொறுப்பு என்பது, அரசுகள் சார்ந்தது மட்டுமல்ல, மதச் சுதந்திரம், அடையாள சுயாதீனம், அடிப்படையில் மனிதம் குறித்துச் சிந்திக்கின்ற அனைத்துத் தரப்புகளினதும் பொறுப்பாகும்.   தீவிரவாதிகளின் இனம், மதம், நிறம் குறித்து மாத்திரம் சிந்தித்துக் கொண்டு, சக மனிதன் மீதான அச்சத்தை வெளிப்படுத்துவது அவசியமற்றது. அந்த அச்ச மனநிலையைத்தான், அந்தத் தீவிரவாதிகள் எதிர்பார்க்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு, இலாப நட்டக் கணக்கை அவர்கள் போடுகிறார்கள்.   அப்படியான நிலையில்தான், சக மனிதன் மீதான சந்தேக உணர்வுகளைத் தாண்டி ஒருமித்து, தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்றது.   இன்னொரு பக்கம், தீவிரவாதத் தாக்குதல்களைக் காரணம் காட்டிக் கொண்டு, மீண்டும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தலுக்குள் தள்ளும் பேரினவாதச் சிந்தனைகளை, அவசரகாலச் சட்டம் என்கிற போர்வையில் அரசும், அதன் சக்திகளும் செய்யாமல் இருக்க வேண்டும்.    நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை எவ்வளவு வேகமாக உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றதோ, அதேயளவுக்கு நாட்டு மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களைக் களைய வேண்டியதும் கடமையாகும்.    அதனை, தன்முனைப்பு, சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று மைத்திரியும் அரசாங்கமும் செய்ய வேண்டும். இல்லையென்றால், நாடு இன்னும் மோசமான கட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உயிர்த்த-ஞாயிறை-கறுப்பு-ஞாயிறாக்கிச்-சிதைத்த-தீவிரவாதம்/91-232303  
  • இலங்கைத் தாக்குதல்கள் விசாரணைக்கு FBI – INTERPOL உதவி… April 24, 2019 கடந்த உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க தூதரம் அறிவித்துள்ளது.  இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை நாட்டில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறப்பு சர்வதேச காவற்துறைக் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு சென்றுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச பொலிஸ்குழுவே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் தெரிவித்தார். இந் நிலையில் இந்த தற்கொலை தாக்குதலுடனான சர்வதேச தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக, தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்பு தொடர்பான ஆவணங்கள், அவர்களது பயண நகர்வுகளை ஆராயும் நடவடிக்கை தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் சுட்டிக்காட்டினார்.   http://globaltamilnews.net/2019/119195/