இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான்
நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி
இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது.
ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும்
இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம்
அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில்
ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன்.
நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது
அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின்
அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்?
ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும்
கேட்க்க முடியாது போகிறது?
ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்
அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும்
மூலிகை பெட்ரோல் மாதிரி
பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள்
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, ஆடி, 2007
இரு துணைப்படைக் கூலிக் குழுக்களிடையே மோதல் - கொம்மாதுறை ராணுவ முகாமில் சம்பவம்
கடந்த புதனன்று, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொம்மாதுறை ராணுவ முகாமில் இருந்து இயங்கிவரும் துணைப்படைக் கூலிக் குழுக்களான கருணா குழுவினருக்கும் ஈ பீ டி பி யினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு கருணா துணைப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதோடு இரு ஈ பி டி பி துணைப்படையுறுப்பினர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கும் ஒரே துணைப்படைக் கூலிக் குழுவான ஈ பி டி பியினருக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் கருணா துணைப்படைக் கூலிகள் கொம்மாதுறை முகாமினுள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணைப்படைக் கூலிகள் ஈ பி டி பியினரின் செயற்பாடுகளுக்கு தடங்கலாக இருந்து வருகின்றனர்.
சம்பவ தினம் கொம்மாதுறை முகாமில் ஈ பி டி பியினர் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 5 கருணா துணைப்படைக் கூலிகள் கிர்னேட்டுக்கள் கொண்டும், தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டும் உள்ளிருந்தவர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் சிவஞானம் சுதாகரன் மற்றும் கோவிந்தன் விஷ்ணு ஆகிய ஈ பீ டி பி துணைப்படையினர் காயமடைந்தனர்.
இவ்விரு துணைப்படையினருக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் இலங்கை ராணுவம், சண்டையினை முடிவிற்குக் கொண்டுவர தாக்குதலாளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே கருணா துணைப்படைக் கூலியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அத்துடன் சண்டை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், காயப்பட்டவர்களை இராணுவம் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றது.
மட்டக்களப்பு வாழைச்சேனை நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் ராணுவ முகாம்களில் கொம்மாதுறை ராணுவமுகாமே மிகவும் பெரியது என்பதுடன், இம்முகாமின் இருவேறு பகுதிகளில் இவ்விரு துணைப்படைக் கூலிக்குழுக்களும் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகள் தமது தளங்களை வன்னிக்கு நகர்த்தியிருக்கும் வேளையில், அரசு மட்டக்களப்பில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டு வரும் பின்னணியிலேயே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழுக்களுக்கிடையேயான மோதல் வெடித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களை கருணா துணைப்படைக் கூலிகள் கிழக்கில் தடைசெய்துள்ள நிலையில், கருணா குழுவும் ஈ பி டி பி யினரும் தமது சொந்தப் பிரச்சாரப் பத்திரிக்கைகளை இப்பகுதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக விநியோகித்து வருவது நடக்கிறது.
வாதங்களில் எனக்கு இப்போது இஷடம் பெரிதாக இல்லை
நான் கடந்த காலங்களை இப்படி வீண் செய்து இருக்கிறேன் என்பதை
நினைத்து இப்போ வெட்கப்படுகிறேன்.
உங்களின் கருத்தை எதிர்ப்பதோ மறுப்பதோ எனது எண்ணம் இல்லை
எனது கருத்தை பகிர்வதே நோக்கம்.
நான் இந்த ஓவியம் பற்றியும் மனிதர்களின் கடந்த கால ஆய்வுகள் பற்றியும் மட்டுமே
சிந்திக்கிறேன் இந்த காலப்பகுதியில் இப்படி ஓவியம் வரைய கூடிய அறிவு அளவில் மனிதர்கள்
வாழ்ந்தார்கள் என்று இதற்கு முன்பு யாரும் எங்கும் கூறவில்லை.
வேறு திரியில் என்ன பேசுகிறார்கள்
யார் ஆமையில் பயணம் செய்கிறார்கள் என்பதுக்குள் நாம் மையம் கொள்ள தேவை இல்லை என்று எண்ணுகிறேன். நான் கூறிய கொலம்பஸ் உதாரணம் அமரிக்க வரலாறு பற்றியது. மனித குழுமம்
கொலம்பஸில் தொங்கும்போது அதற்கு முந்திய அமரிக்க வாழ் மனிதர்களின் வரலாறு என்பது இருளாகவே
இருக்கும் யார் அந்த இருளுக்குள்ளும் பயணிக்கிறார்கள் என்பதே உண்மைக்கு வலி சமைக்கும்
நான் மகாபாரதத்தை நம்பவில்லை அதுக்கு போதுமான அளவு அறிவு எனக்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம் ஆனால் அது எழுதப்பட்ட காலம் அதுக்கு முந்திய காலம் எனும்போது வேத காலத்துக்கு முந்திய
காலமாக அது பத்து ஆயிரம் ஆண்டு தாண்டுகிறது. அந்த புள்ளியில் இப்போது இவர்கள் முன்வைக்கும் முசுப்பேத்திய நாகரீகத்தை தொடக்கமாக கொள்வது என்பது கேள்வி குறியானதே.
நான் வாசித்த அளவில் மனித நாகரீகம் பத்து ஆயிரம் வருடம் முன்னதாகவே இருக்கிறது
அதை யாருக்கும் திணிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்
அதில் எனக்கு அக்கறை இல்லை
இதை பற்றி எங்கோ வாசித்த/பார்த்த நினைவு எனக்கும் உண்டு. காபன் டேடிங் போல, ஒலி அலைகளை வைத்து செய்ய முடியுமா என்பதை ஒரு கேள்வியா எழுப்பி இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கும் போதிய விளக்கம்/நியாபகம் இல்லை.
Recommended Posts