Jump to content

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப்பிழைகள் கூட்டிக்கொண்டு செல்கிறது.....

பி.கு: நாங்கள் முற்றத்தில் தான் பொங்குவது

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாள் காசு பேசாமல் கிடக்கும். சில்லறையள்தான் துள்ளிக் குதிக்கிறது? -பொஸிற்றிவ் பொன்னம்பலம்

January 24, 2019

Positive-ponnar01.png?resize=683%2C800

இஞ்சை பல காரியம் புலம்பெயந்து போன ஆக்களாலைதான் நடக்கிது.இல்லை எண்ணேல்லை. ஆனால் அவையின்ரை பேரைக் கெடுக்கிறமாதிரி அலுவல் பாக்கிறதுக்கும் ஆக்கள் இருக்கினம்.கீழை எழுதியிருக்கிறதை வாசியுங்கோ அப்ப தெரியும்.

எல்லாருக்கும் கதிரையிலை ஆசையாக் கிடக்கு. எட இஞ்சை இருக்கிறவைக்குத்தான் உந்த வியாதி எண்டால் வெளிநாட்டிலை உள்ளவைக்கும் இப்ப உந்த வியாதி தொத்திப்போட்டுது எண்டுதான் சொல்ல வேணும். சண்டையோடை வெளிநாட்டுக்குப் போன கன பேர் சண்டை நடந்த அந்தக் காலத்திலை இஞ்சை வர ஏலாமை நிண்டவை. அப்ப புலியளும் இஞ்சை நிர்வாகம் செய்து கொண்டிருந்தபடியால் வந்தாலும் தங்களிட்டைக் காசு கழஞ்சி இல்லை எண்ணுற மாதிரிக் காட்டி நடந்திட்டுத்தான் போனவை. கண்டால் அவங்கள் காசைக் கீசைக் கேட்டுப் போடுவாங்கள் எண்டு பயம். பிறகு மகிந்தா இருந்த காலத்திலையும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிச்சவை.அப்ப கோத்தாவும் கொம்பேறிமூக்கனைப் போல இருந்து அவையை இவையை விட்டு கடத்திப் பறிச்சவரெல்லே?ஆனால் இப்ப இஞ்சை  ஒரு பயமுமில்லை. வந்து அவை எடுக்கிற படமும், பாட்டும், கூத்தும் சொல்லி மாளாது. அங்கை நிண்டு ஏதோ செய்து காசைச் சேத்துப் போட்டாங்கள். அதை அங்கை காட்டி ஒண்டும் நடவாது. ஆனபடியால் காசை இஞ்சை கொண்டு வந்து வைச்சுக் கொண்டு கோயிலுக்கை புகுந்து விறுசா காட்டுறது. இல்லாட்டி அரசியல்வாதியளின்ரை பின்னாலை வால் பிடிச்சுக் கொண்டு அவைக்குத் தாளம் போடுறது. தன்னா காட்டுறது. பிறகு அவைக்குக் கொஞ்ச நஞ்சத்தைக் குடுத்து மெல்ல அதுக்கை உள்ளிடுறது.இல்லாட்டி பள்ளிக்கூடங்களுக்கை உள்ளிட்டுச் சேட்டை. வாசிகசாலையளுக்கை போய் குழப்படி எண்டு அவையின்ரை காசு பலதையும் செய்யும்.

அப்பிடி ஒராள் வந்து மெல்லப் பொதுச் சேவை செய்யப்போறன் எண்டு ஒரு புவண்டேசன் தொடங்கினார். மலை நாட்டிலை துவங்கி மெள்ள மெள்ள வடக்குக்கும் வந்து தான் ஏழை எளியதுகளுக்கு நல்லது செய்யிறன் எண்டு துவங்கி கொஞ்சம் தலையை வெளியிலை காட்டிப் போட்டு , அடுத்த றவுண்டிலை அரசு அதிகாரியளோடை சிநேகிதமாகி அதுக்குள்ளாலை அதைச் செய்யிறன் இதைச் செய்யிறன் எண்டு பப்படா காட்டுறதே ஒழிய அந்தளவுக்குச் செய்யிறதில்லை. அவர் கிட்டடியிலை ஒரு விளையாட்டைக் காட்டினவர்.வட மாகாணத்தின்ரை பழைய கவர்னரை அரசாங்கம் மாத்திப் புது கவர்னரை  அறிவிச்சவுடனை இந்த ஆள் பழைய ஆளின்ரை சிநேகிதன்.உடனை “அவரைத் திருப்பி ஆளுநராக நியமிக்க வேண்டும். புதிய ஆளுநர் வேண்டாம் ” எண்டு கொடி பிடிச்சு ஆர்ப்பாட்டம் செய்தவர். மைத்திரியை உங்களுக்குத் தெரியுந்தானே? தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு ஒற்றைக் காலிலை நிக்கிறவர். அவர் உதுக்கெல்லாம் மசியேல்லை. புது கவர்னரைப் போட்டாச்சு. பிறகு புது கவர்னர் வாற அண்டு பலாலியிலை வரவேற்கப் போய் மாலையோடை நிண்ட ஆக்களுக்கை உவர்தான் முதல் ஆள். எப்பிடி இருக்கும்?  அப்ப உந்தப் புலம் பெயந்ததைப் பற்றி என்ன நிளைக்கிறியள்?

அப்ப உதைப்பாத்தால் உங்களிலை பலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு வாறியளே ஒழிய நீங்கள் எங்களிலை உருகி வரேல்லை எண்டதுதான் என்ரை கணிப்பு. வெள்ளைக்காரன் காசை உழைச்சுப் போட்டான் எண்டால் அவன் ஒரு திட்டத்தைப் போட்டு முதுகிலை ஒரு பையையும் கொளுவிக் கொண்டு ஊர் உலகம் பாக்க எண்டு வெளிக்கிட்டிடுவன். தனியாவும் போவன். குடும்பத்தோடையும் போவன். இல்லாட்டித் தனக்கிசைவான ஒரு பெடிச்சியைப் பிடிப்பன் வடிவாச் சுத்துவன். அதாலை மற்றவனுக்கு ஒரு கேடும் இல்லை.இது என்னெடா எண்டால் உங்களிலை நான் எல்லாரையும் சொல்லேல்லை, பப்படாகாட்டுற கொஞ்சப்பேரைச் சொல்லுறன். நீங்கள் காசை உழைச்சுப்போட்டியள் எண்டால். மற்றவனைக் குழப்புறதுக்கு அந்தக் காசைப் பாவியாதையுங்கோ. பூனைக்கு விளையாட்டு. சுண்டெலிக்கு உயிர் போனதாம். எண்டமாதிரி அலுவலைப்பாராதையுங்கோ. மக்கள் சேவை எண்டால் மக்கள் சேவையோடை நில்லுங்கோ. அரசியலுக்கை போறதெண்டால் வந்து நேரை அரசியலுக்கை போங்கோ. மக்கள் சேவையை அரசியலின்ரை கதவா நினைக்காதையுங்கோ. அப்பிடி நினைச்சால் நீங்கள் சனத்தைப் பேக்காட்டுறதா அர்த்தம்.

உங்கை எனக்குத் தெரிஞ்ச எத்தினை சனம் வந்து தன்ரை மற்றக் கையுக்குத் தெரியாமல் தன்ரை அலுவலைப்பாத்திட்டுப் போகுதுகள். ஏழை எழியதுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுத்திட்டுப் போறான். வீடு திருத்தக் காசு குடுத்திட்டுப்போறான். சாமான் சக்கட்டுக் குடுத்திட்டுப் போறான்.படிக்க உதவி செய்திட்டுப் போறான். இது ஒண்டும் வெளியிலை தெரியாது. சில்லறைத்தனமானவைதான் துள்ளிக் குதிக்கிறது.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2019/110956/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

யாராயிருக்கும் ஜீவன்சிவாவாக இருக்குமோ ?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.