Sign in to follow this  
நவீனன்

தமிழ் மக்கள் பேரவையில் நானாக களமிறங்கினால் ஆதரவு தர பலர் தயார்

Recommended Posts

தமிழ் மக்கள் பேரவையில் நானாக களமிறங்கினால் ஆதரவு தர பலர் தயார்

 

(எம்.எம்.மின்ஹாஜ், நா.தினுஷா)

தேர்தல் குறித்து கூட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக எதுவும் பேசவில்லை என்கிறார் சி.வி.

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு வரவே மாட்டாது. மேலும் தேர்தல் குறித்து கூட்டமைப்பினர் என்னுடன் அதிகாரபூர்வமாக எதுவும் பேச வில்லை. இதுவரை ஒரு சிலர் குறிப்பிட்ட விடயங்கள்தான் எனக்கு தெரியுமே ஒழிய வேறொன்றும் தெரியாது.  

தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக எனது பணி களை நானாக தொடங்கினால் ஆதரவு தருவதற்கு பலர் தயாராக உள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

சமஷ்டி கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் சமஷ்டி கோரிக்கை கிடைக்காது என்று எனது கட்சியினர் கருதுவதினால் என்னை ஒரம் கட்ட பார்கின்றார்களோ தெரியவில்லை. மேலும் வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஆளுநர் கைகளுக்கு ஆட்சி சென்றால் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை சட்ட கல்லூரி சட்ட மாணவர்களின் இந்து மகா சபையின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற கலை விழா மற்றும் நக்கீரம் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,

கேள்வி - அடுத்த வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? 

பதில் - இதுவரையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

கேள்வி - அரசியலமைப்பு சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை சம்பந்தமாக ஜயம்பதி விக்கிரமரத்ன,எம்.ஏ சுமந்திரன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது கருத்து என்ன? 

பதில் - அது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது.

கேள்வி - தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றும் போது சமஷ்டி கோரிக்கை முன்வைக்கும் போது என்னுடைய கட்சியே தன்னை ஒரம் கட்டுவதாக கூறினீர்களே. என்ன காரணம்?

பதில் - சமஷ்டி கோரிக்கை கிடைக்காது என்று அவர்கள் நினைக்கும் படியினால்தான் என்னை ஒரம் கட்ட பார்க்கின்றார்கள்.

கேள்வி - எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்புடனான பயணம் எந்தளவு நம்பிக்கை தருவதாக உள்ளது?

பதில் - இருந்துதான் பார்க்க வேண்டும். அவர்களை மாற்ற முடியுமா? அல்லது அவர்கள் என்னை மாற்றுவார்களா? என்பதனை இருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி - வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏதும் நடக்கின்றதா?

பதில் - தேர்தல் குறித்து என்னுடன் யாரும் பேசவில்லை. ஒரு சிலர் வெளியில் தெரிவிக்கும் கருத்துகளை மாத்திரமே நான் அறிந்து வைத்துள்ளேன்.

கேள்வி - வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேறு கட்சிகள் ஏதும் உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதா?

பதில் - அப்படி ஒன்றும் இல்லை. என்னுடன் வந்து இணைவதாகவே ஒரு சில கட்சிகள் கூறியுள்ளன. குறிப்பாக நேற்று முன் தினம் ரெலோ போன்ற கட்சிகள் அவ்வாறு கூறியுள்ளன.

கேள்வி - வட மாகாண முதல்வராக நீண்ட காலம் செயற்பட்டமை திருப்தி அளிக்கின்றதா?

பதில் - அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் எமக்கு இருக்கும் அதிகாரங்கள் மிக குறைவாகும். அது எமக்கு நன்றாகவே தெரியும். குறைந்த அதிகாரம் காரணமாக ஒரு காலத்தில் தேர்தலை பகிஷ்கரித்தனர். எனினும் அந்த குறை பாடுகளுடன் எமது பயணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த குறை பாடுகளுக்கு மத்தியில் செய்ய முடிந்தமை பெருமையை தருகின்றது. வடக்கில் என்ன என்ன செய்தோம் என்ற ஆவணத்தை விரைவில் நாம் வெளியிடுவோம்.

கேள்வி - தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய்ப்பு தரவில்லை என்றால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?

பதில் - இதுவரை சிலர் குறிப்பிட்ட விடயங்கள்தான் தெரியுமே தவிர எதுவுமே என்னுடன் உத்தியோகபூர்வமாக பேசப்படவில்லை.

கேள்வி - வாய்ப்பு கிட்டாவிட்டால் தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக தேர்தலின் ஊடாக களமிறங்குவீர்களா?

பதில் - தமிழ் பேரவையின் ஊடாக நானாக இந்த செயலை தொடங்கினால் ஆதரவு தருவதாக பலர் கூறி இருக்கின்றார்கள்.

கேள்வி - ஆறு மாத காலமே இன்னும் உள்ளதே ?

பதில் - ஆறு மாதம் தாராளமாக போதும். ஆறு மாதத்துடன் இன்னும் மூன்று மாதம் என்றால் குழந்தையே பிறந்து விடும். ஆறு மாதம் பரவாயில்லை.

கேள்வி - கிளிநொச்சியில் விகாரை அமைப்பது தொடர்பாக கூறினீர்களே?

பதில் - அப்படி செய்யவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே நான் கூறி வருகின்றேன். மாகாண சபை கலைத்த பின்னர் ஆளுநரின் கீழ் அதிகாரம் வந்தால் பல விடயங்கள் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கிளிநொச்சியில் விகாரை திறக்க போவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்தே எனக்கு இந்த தகவல்கள் கிடைக்பெற்றன. ஆளுநர் அதனை நிராகரித்தால் அது எமக்கு சந்தோஷம்.

கேள்வி - வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு வருமா?

பதில் - வரவே மாட்டாது.

கேள்வி - வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவம் தொடர்பாக உங்களை அழைத்ததாகவும் அந்த கூட்டத்தை நீங்கள் நிராகரித்ததாகவும் அதற்கு உங்களுக்கு கூட்டமைப்பு அழுத்தம் பிரயோகம் செய்யததாகவு் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.அது உண்மையா?

பதில் - அதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படி எனக்கு அழைப்பு வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் போக முடியவில்லையோ தெரியாது. எனினும் 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பில் பத்து கோரிக்கைகளை முன்வைத்தோம். எனினும் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. இவைகளை பேசி பிரயோசனமில்லை என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-30#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this