Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

- பாவேந்தர் பாரதிதாசன்

 

விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று!

தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras"  என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்:

"The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily.

                The Tirukkural referring to these two forms of daily offering in the second and third Kural beginning with 'Illara Iyal', and Tenpulattar has these offerings in mind. This would show Valluvar is household, was no doubt listing these essential rituals of the Hindus so the view of modern scholars that Valluvar did not refer to any Hindu rituals is not correct.

The verse reads -

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தால் ஓம்பல் தலை.

(என்னும் குறளுக்கு, பின்வருமாறு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்கின்றார்.)

It means it is important to offer sacrifices to pitr, deivam(Gods), guests(athithi), okkal(all living beingsa, like man and Tan(one's own living)

This is a very important aspect of Hindu system, that has come down from Pre-Buddhist periods. The very fact that Valluvar emphasizes (ஓம்பல் தலை) the performance of these five sacrifices for the Grhasta is a pointer to the fact that Valluvar was a follower of the Hindu System. The Panca mahayajnas are mentioned in all the Dharma sastras of Manu, Yajnavalkya, Gautama, Apastamba, Bodhayana and others."

வருணத்திற்கு ஏற்ப மாறும் ஆரியச் சடங்கியல்!

ஆரியர்கள் இனத்திலேயே இவர் குறிப்பிடும் தர்ப்பணம், சிறுபான்மை எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு மட்டுமே முழுவதும் பொருந்துவது; பிராமணர்களைவிட எண்ணிக்கையில் உயர்ந்த சத்திரியர்களுக்கு சில பகுதிகளும், இவர் இருவரையும் விட எண்ணிக்கையில் உயர்ந்த வைசியர்களுக்கு மிகச்சில பகுதிகளுமே பொருந்தும். இம்மூவரையும்விட அதிக எண்ணிக்கையில் வாழும் ஆரிய தேச சூத்திரர்களுக்கு இவை எதுவுமே பொருந்தாது.

தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை!

தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள்.

ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர்

நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana'

திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது.

மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம்.

ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'பித்ருக்கடன்(?)' கழிக்க வேண்டும்?

வேதம் ஓதுதலோ, பூணூல் அணிதலோ செய்யாத 97 விழுக்காடு தமிழ் இல்லறத்தார்கள் பஞ்ச மகா யக்ஞங்களில் ஒன்றான இந்த 'பித்ருக்கடன்(?)' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம்! ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை.

'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை

பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரையாசிரியர்கள் பூணூலே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே! திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை.

தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார்?

இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம்.

தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே!). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும்  புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும்.

தலைச்சங்க நூற்கள்

இத்தலைக்கழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார்!

தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர்த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர்.

தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல்!

தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும்  பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல்  இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம்.

தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம்.

'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்'

தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில்

"மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்!" - சிலப்பதிகாரம்

"தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன்! என் ஆயுள் முடிந்துபோகட்டும்!"என்று ஆராயாமல் கோவலனைக் கொன்று கண்ணகிக்குச் செய்த தவறை தனது அரசவையில் இவ்வாறு கூறி ஆரியப்படை கடந்த  பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தான். இங்கு, பாண்டிய நாடே 'தென்புலம்' என்ற பெயரால் குறிக்கப்பட்டது வெளிப்படையாக விளங்கும்.

இனி, பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதாக வரும் சிறுபாணாற்றுப்படையில், கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் கொடைத்திறத்தைப் பாராட்டி, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சேர மன்னனைக் குறிக்க

'குடபுலங் காவலர்' மருமா னொன்னார் 

'வடபுல' விமயத்து வாங்குவிற் பொறித்த

எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்

வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று  - சிறுபாணாற்றுப்படை:47-50

என்று பாடுகின்றார். இப்பாடலில், பாட்டுடைத்தலைவன் தரும் கொடை, வளமிக்க 'குடபுலம்' என்னும் சேரநாட்டின் வளத்தைக் காட்டிலும் அதிகமான வளத்தைத் தருவதாகப் பாராட்டிப்பாடியது.  வளமிக்க 'குடபுலம்' காக்கும் மரபில் வந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், 'வடபுல'த்தில் உள்ள தன் பகைவர்களை அடக்கி, அவர்களது 'வடபுல' எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான்; கோட்டைக்கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்ற வலிய தோள் கொண்ட அந்தக் குட்டுவனின் வளம் மிக்க வஞ்சி நகரமே ஏழை-நகரம் என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான் என்று பாராட்டுகின்றார். இங்கு 'குடபுலம்' சேரநாட்டையும், 'வடபுலம்' வடநாட்டையும் குறிக்கின்றது. 

தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்

'தென்புலங் காவலர்' மருமா னொன்னார்

மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்

கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்       65

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று  - சிறுபாணாற்றுப்படை: 62-67

"கடலலை மோதும் கொற்கையைத் துறைமுகமாக, மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு   'தென்புலம்' காக்கும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. அவனது மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்." என்கின்றது இப்பகுதி.

தண்பணை தழீஇய தளரா இருக்கைக்

'குணபுலங் காவலர்' மருமா னொன்னா

ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந்.

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய

னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 78-83

குளிர்ந்த நீர் பாயும் வளவயல்களைக் (தண்பணை) கொண்ட உறையூரைத் தலைநகராகக் கொண்ட 'குணபுலம்' என்னும் சோழநாட்டின் மரபுரிமை மன்னன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். வானளாவ உயர்ந்து தொங்கிய கதவினைக் கொண்ட இவனது தூங்கெயில் கோட்டையில் மேகம் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும். அத்தகைய வளமிகு செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர்.

மேற்கண்ட மூன்று பகுதிகளில் வரும் 'வடபுலம்' வடநாட்டையும், 'குடபுலங் காவலர்' சேரநாட்டு மன்னனையும், 'தென்புலங் காவலர்' பாண்டியநாட்டு மன்னனையும், 'குணபுலங் காவலர்' சோழமன்னனையும் தெளிவாகச் சுட்டுகின்றன. எனவே, 'தென்புலம்' என்றால் தென்னாடு என்பதே இலக்கிய வழக்கு. இன்னும் தேடுவோம்.

தெற்கே உள்ள கடல் 'தென்கடல்' என்றும், அங்குள்ள குமரி தெய்வம் தென்குமரி' என்றும் வழங்கப்படுவதை அனைவரும் அறிவர். முத்தொள்ளாயிரம் 94-3ல் 'தென் கொற்கை' என்று கொற்கைத் துறைமுகம் சுட்டப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரமோ 'தென் தமிழ்', 'தென் தமிழ்நாடு', 'தென் தமிழ்ப்பாவை' என்று பரக்கப் பேசுகின்றது. மணிமேகலையோ 'தென்தமிழ் மதுரை', 'தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்' என்கின்றது.

'தென்புலம்' என்னும் சொல் குறுந்தொகை(317-7), அகநானூறு(24-8), புறநானூறு(35-7, 388-1), சிலப்பதிகாரம்(10-103, 20-76) ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் பரந்து கிடக்கின்றது.

தென்புலமருங்கு என்னும் சொல்லாட்சி மதுரைக்காஞ்சி(202), நெடுநல்வாடை(52), நற்றிணை(153-5), சிலப்பதிகாரம்(27-133) ஆகிய தொன்மையான இலக்கியங்களில் பயின்றுவரும் சாட்சியங்கள். தமிழ்ப்பெருவெளி எங்கும் பரக்கக் காணும் 'தென்றல்' என்னும் சொல்லாட்சி 'தென்' என்னும் அடையின் தமிழ் அடையாளத்தையும், பொருளையும் சுட்டி நிற்கின்றது.

மேற்கண்ட சான்றுகள் காட்டும் உண்மை 'புலம்' என்னும் சொல்லின் வெளிப்படையான, இயல்பான, எளிமையான பொருள் 'இடம்' என்பதே. ஆக, 'தென்புலத்தார்' என்பதற்கு 'தென்பகுதி நிலத்தவர்' என்னும் பொருளே மிகவும் சரியான பொருத்தமான ஒன்று. தென்பகுதி நிலத்தவர் தமிழ் இனத்தவர் என்பதும் தெளிவு.

'தென்புலத்தார்'  அறிவிக்கும் திருவள்ளுவரின் இனம்-மொழி

திருக்குறளாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'தென்புலத்தார்' என்னும் இவ்வொரு சொல்லே திருவள்ளுவரின் இனத்தையும், மொழியையும் குறிப்பால் அறிவிக்கும் சொல்லாக உள்ளது. திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேற்றினத்தவரான ஆரியர்கள் புகுந்து, அரசியல், சமுதாயம் என்பவற்றில் மேன்மையடைந்திருந்த தமிழரையும், அவர்கள் தாய் மொழியான தமிழையும், தமிழர்களின் உயர்மரபு வாழ்வியல் நலன்களையும், கலை, அறிவியல் பண்பாடுகளையும் சிறிது சிறிதாக அழிக்கவும், ஆரியர்தம் அரைச் செயற்கை மொழியாகிய சமஸ்கிருதத்தையும், ஆரியக் கருத்தியலையும் தமிழர்களிடம் புகுத்த முயன்ற காலம் என்பது தமிழின வரலாறு.

தமிழர் மூதாதையர் 'தென்புலத்தார்'

கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'குமரியாறு, பஃறுழியாறு' என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. பன்நெடுங்காலத்துக்குமுன், கடற்கோளால் மறைந்துபோன தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து மூதாதையரை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டுத் தமிழர்கள் நிகழ்த்திவந்த பயன்கருதா நன்றி செலுத்தும் வழிபாடே திருவள்ளுவர் காலத்துத் தமிழரின் தென்புலத்தார் வழிபாடு ஆகும்.

இல்லறத்தானின் ஐந்து தலையாய உறுப்புகள்

ஆக, வள்ளுவர் கூற்றுப்படி, இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐந்து தலையாய உறுப்புகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பன.

இவற்றுள், 'தான்' என்பது 'தலை'யாய் இருந்து பிற உறுப்புக்களைப் பேண வேண்டும் என்றே அறிவுறுத்துகிறார் வள்ளுவர். ஒக்கலை(தம்மோடு ஒத்த உறவினர்களை) 'உடம்பாக'வும், விருந்தைக் கைகளாகவும், தெய்வத்தை இதயமாகவும், தென்புலத்தாரைக் கால்களாகவும் உருவகித்துப் பேணவேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும்.

'தென்புலத்தார்' வழி நடக்கவேண்டும் என்பதால், அவர்களே இல்லறத்தானின் கால்கள்; தெய்வப்பண்புடன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதால், தெய்வமே இல்லறத்தானின் இதயம்; இருகைகளையும் ஒருசேரக்கொண்டு முழுநிறைவான ஈகையறம்மேற்கொள்ளவும், விருந்தினர்களைத் தம் கைகள்போல் உதவும் உறுதுணையாகக் கருதவேண்டும் என்பதால், விருந்தினரே இல்லறத்தானின் கைகள்; தம்மோடு ஒத்த உறவினர்களுடன் இணைந்து உழைத்து ஒருவருக்கொருவர் பயன்பட்டுக்கொள்ளவேண்டும் என்பதால் 'ஒக்கல்' இல்லறத்தானின் உடல்; காட்சி, கேள்வி, உயிர்ப்பு, மொழி, அறிவு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையான தலைபோல் 'தான்' இருந்து அனைவரையும் பேணி, அறவழியில் நடத்துதல் வேண்டும் என்பதால் இல்லறத்தானுக்கு அவனே தலை என்பதாக உருவகப்பொருள் கொண்டு வாழவேண்டும். இதுதான் இத்திருக்குறளுக்கு இயல்பான பொருளாக இருக்க இயலும்.

பஞ்சமகாப் பாதகம்

ஆரியப் பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பஞ்சமகாயக்ஞம் என்ற ஆரியப் பிராமண சமயவியல் சடங்குச் செயலை, தமிழரின் அறநெறிப் பண்பாட்டு அசைவுகளின் விளைவாகத் தோன்றிய இத்திருக்குறளுக்குப் பொருத்துதல் அறமன்று. ஆரியரின் மொழியில் சொல்வதானால், இது ஒரு பஞ்சமகாப் பாதகம்! பஞ்சமகாப் பாபம்!! ஆரியச்சார்பு கொண்ட பரிமேலழகர் முதல் இக்கால திரு.நாகசாமி வரை, தொடர்ந்து இட்டுக்கட்டிக் கூறும் இப்பொய்யுரை, ஆரிய வேதத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு மரபுகளை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் வாழும் ஆரியர்களும், ஆரிய வேதத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ப் பார்ப்பனர்களும் பஞ்சமகாயக்ஞம் செய்ய முழுஉரிமை பெற்றவர்கள். இவ்விரண்டு குழுக்களும் அல்லாத தமிழர்களின் பொதுமறை திருக்குறளுக்கு 'Hindu System' என்ற பெயரில் ஆரியப் பிராமணர்களின் சடங்கியல் முலாம் பூச முயல்வது கடும் கண்டனத்துக்குரியது.

 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குறள் பீடம் என மதுரைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டு, அதில் 3 நூல்களை எழுதியவர் பேராசிரியர்.காமாட்சி சீனிவாசன் எனும் இலங்கை சேர்ந்த சைவர், இவர் கிறிஸ்துவராய் மதம் மாறி' திருக்குறளும்- விவிலியமும் எனும் ஆய்வில் விவிலியக் கதைகளின் தன்மை உணர்ந்து சைவராய் இறந்தார். இவர் தெளிவாய் கூறியது திருக்குறளில் உள்ள அனைத்து சொற்களுக்கும் நாம் பொருள் காண, வள்ளுவருக்கு முந்தைய சங்கத் தொகை நூல்களையும், பின்னரான இரட்டை இலக்கியங்கள் ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளதோ அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தி உள்ளார், அதற்கு கா.சு.பிள்ளையோ, தேவநேயனோ, தெய்வநாயகமோ, ந.கிருஷ்ணனோ தன்னிச்சையாய் உளறீ பொருள் செய்தால் அது அவர்கள் கருத்து திருக்குறளின் உரை அல்ல.

puram%2Bthenpula.jpg
பேராசிரியர் ஏன் தன்னை கிறிஸ்துவ வேசித்தன மதமாற்றத்திற்காக இந்தியரைப் பிரித்து கெடுக்க செய்த கட்டுக் கதை ஆரியர் - திராவிடர் ஊகத்துள்ளே மூழ்கி திருக்குறளை சிதைக்கும் வேலையில் ஈடுபடுகிறார் தெரியவில்லை. கிறிஸ்துவ மதவெறி மெட்ராஸ் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியும், சாந்தோம் சர்ச்சும், தேவநேயன் பாவாணரும் விதைத்த நஞ்சுப் பொய்கள் கீழ்த்தரமானவை விலகி - பேராசிரியர் நேர்மையாய் செயல்படவேண்டும்.

தொன்ம கதை மூட நம்பிக்கை  முச்சங்கக் கதைகள், முழுதும் பொய் எனத் தெளிவாக்கப் பட்ட குமரிக் கண்டம் போன்றவற்றை இன்று வரலாற்று ஆய்வாளர் சிறிதும் ஏற்காதவற்றை குறளிற்கு உரை செய்ய தேவையில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வகையற்ற கருத்து வறட்சியுற்றவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் வசைமொழி. நும் வசைமொழி நீவிர் பிறந்த குலப்பெருமையைப் பறைசாற்றுகின்றது; உம் கைவசம் செறிவான பதிலுரைக்க எதுவும்  இல்லை என்பதும் புரிகின்றது.. யாம் எழுதுவது நும் போன்றோருக்கு அன்று. இனி நுமக்குப் மறுமொழி உரைக்கப் போவதில்லை. நற்றமிழ் அறிஞர்களும் அறவோர்களும் இவருரைக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என வேண்டுகின்றேன்.

 • Like 2
Link to post
Share on other sites
 • 1 year later...

https://ramanan50.wordpress.com/2018/01/30/twelve-castes-among-ancient-tamils/

2 minutes ago, ramanan50 said:

There have been concerted attempts to portray that the ancient Tamil Society did not have Caste system and Tamils did not have Caste system at all and all were treated equal.

A perusal of Ancient texts like Tholkappiyam and other Sangam Literature indicate that not only were there the the four Varnasrama of the Vedic period, Brahmana , Kshatriya, Vysya and Sudra, but there were seven castes.

The Tamil and Sanskrit Grammar are said to have been revealed simultaneously to Agasthya and Panini by Lord Shiva! Though the literary proof for this claim can be had only in the post 15th century AD period, it cannot be denied that both Tamil and Sanskrit grammar have commonality in many ways. Yet another information that I want the readers of this mail-chain to know is that this Tamil Grammar work does say that the 4 varnas were there among the Tamil speaking people and adds 3 more categories, making it a 7- class society. The additional three are – astrologers, sages andPorunar (kshatriya vratyas).There was a separate class of astrologer called by a generic term “ARivan” – which is a Tamil equivalent of Daivajna.

Jayashree Saranathan blog

 

‘ Greek Traveler and Historian Megasthanes records these seven castes in his book Indica.

The Link for the book. <a href=””>Ancient Indian History and Civilization by Surendranath Jain

‘ 1. Maruta makkal or tribes of ploughmen (ulavar) inhabiting fertile, well-
watered tracts (panai) and living in villages called ur,
2. Kuravar makkal (or hill people who are foresters, make charms, and tell
fortunes and may come out of the forest to work in the panai,
3. Mullai makkal (or pastoralists, also called ayar (cowmen), kovalar
(shepherds), and idaiyar (cowherd or shepherd),
4. Neytal makkal ( or fishing people living in large coastal villages called
pattinam or small ones called pakkam, and
5. Palai makkal or people of the dry plains called eyinar. maravar, and veIar
who are hunters of both the dry plains and the forest.’

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ramanan50 said:

 

வணக்கம் ரமணன், வாருங்கள்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
   ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
   ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
   கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
   இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
   இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

   கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
   அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
   அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
   அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
   “ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
   இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
   விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
   இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
   ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
   இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
   ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
   தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
   இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
   இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
   எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
   அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
   தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
   இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
   வாழ்க தமிழ்!
   வளர்க தமிழர்!!
   மலர்க தமிழீழம்!!!
   பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
   படம்: நன்றி மாவீரம்.
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்!
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன்
   ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது.
   ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்!
   வேண்டுவதை வேண்டியபடி எளிதில் தரும் அட்சய பாத்திரம் என்ற வகையில் திருக்குறளைப் புரட்டினேன். கல்வி குறித்தும், கற்றுக்கொள்வது குறித்தும் சிறப்பாகப் பேசும் திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர் அல்லது குரு என்பவனின் கடமை, தகுதி போன்றவற்றைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவலுடன் தேடிச்சென்றவனுக்குக் கிடைத்த விடையோ 'இன்னார்தான் என்று ஒன்றுமில்லை' என்பதுதான்!
   அறிவானும் அறிவிப்பானும்!
   கல்வி என்னும் கற்றல் என்பது தனி மனிதனின்  முயற்சியால் அடையப்படும் ஒன்று  என்பதே திருக்குறள் தரும் செய்தி.
   தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
   கற்றனைத் தூறும் அறிவு.
    தானே முயன்று கற்றுக்கொள்ளும் நிலை கை கூடாவிட்டால், கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டாவது அறிவு பெற வேண்டும் என்று சொல்கிறது குறள்.
    கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
   ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)
    அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும்.
    திருக்குறள் ஏன் தனி மனிதர் எவரையும் ஆசிரியனாக, குருவாகப் பேசவில்லை?
   ஆசிரியர் என்பவர் இன்னார்,  அவருக்கான இலக்கணம் இது என்று ஆசிரியரை வரையறை செய்யாமல், யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறது.
    கல்வியைக் குறித்தும்,  கல்வியால் விளையும் அறிவைக் குறித்தும்  விரிவாகப் பேசும் குறளாசான், கற்பித்து அறிவை வளர்க்கும்  ஆசிரியரைக் குறித்துச் சிறப்பாக ஒன்றும் பேசவில்லையே!
    சற்றே அயர்ச்சியுடன் நூல்களைப் புரட்டிக் கொண்டே மனம் அசைபோட, அந்திக்கருக்கல் வேளையில், பளீரென வயல்வெளியில் உலா வந்தார் கல்வியில் பெரிய கவிச்சக்கரவர்த்தி, கம்பநாடன் என்னும் பேராசான்!
    கம்பநாடனும் கண்முன் விரிந்த எசப்பாட்டும்!
   எங்கிருந்தோ வந்த ஏற்றப்பாட்டின் சந்தத்தில் ஈர்க்கப்பட்டு,   தம்மை அறியாமலேயே குரல் வந்த திசையில் நடக்கலானார் கம்பர். கமலை ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சிய உழவர்களின் பாட்டே அது!  
   “மூங்கில் இலைமேலே...” என்ற உழவனொருவனின் எசப்பாட்டுக்கு  
   “தூங்கும் பனி நீரே...” என்ற எதிர்ப்பாட்டை மற்றொரு உழவன் பாட,
   “தூங்கும் பனி நீரை...” என்ற மூன்றாமவன் எசப்பாட்டு நெட்டிசையில் கொள்ளை போனது கம்பனின் மனம்! கண்ணிமைக்கும் நேரத்தில், எசப்பாட்டுப் பாடிய உழவர்கள் மூவரையும் அங்கிருந்து கொத்திக்கொண்டு போனது "அப்பா! நம்ம வீட்டுப்பசு கன்னு போட்டாச்சு, கூப்புடுறாங்க!’ என்ற சிறுமியின் குரல்!
   கம்பனுக்கே கைவராத எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு! 
   இருள் கவிந்து சூழ்வதை உணராது, பாடலில் மனதை பறிகொடுத்த கம்பர் அங்கேயே நிற்கிறார். “தூங்கும் பனி நீரை...”  என்பதன் அடுத்த வரிக்கு கவிச் சக்கரவர்த்தி கவி புனைய எத்தனிக்கிறார்;  தம் கவித்திறம் விடைபெற்றுக் கொண்டதோ என்று கவலைகொள்ளுமாறு, கம்பநாடனின் நாவில் உதிக்க மறுக்கிறாள் தமிழன்னை!
    எதிர்ப்பாட்டை முடித்துவைத்த ஏற்றம்பாடும் உழவர்கள்!
   தம்மை மறந்து ஆற்றின் பாலக்கட்டையில் அப்படியே உட்காருகிறார். இரவும்,  நிலவும் மலர்ந்து உயர்வதை அறியாமலேயே  கம்பர் அந்த இடத்தை விட்டு அகலாமல் உறைந்து கண் அயர்ந்து விடுகிறார்.
   பொழுது புலர்கின்றது..! புள்ளினங்கள் சிலம்பும் ஓசையில் உறக்கம் கலைய,  உழவர்களின் கமலை இயங்கத் துவங்குகிறது!  ஏற்றப்பாட்டும் தொடர்கிறது!!
    தூங்கும் பனி நீரை”
   என்று மூன்றாமவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் பாட,
   வாங்கும் கதிரோனே!” என்று முதலாமவன் முடித்துவைக்கிறான். மீண்டும்,
   “மூங்கில் இலைமேலே...” என்று இரண்டாமவன் தொடங்க,  
   “தூங்கும் பனி நீரே...” என்று  மற்றொருவன் பாட,
   “தூங்கும் பனி நீரை... ... வாங்கும் கதிரோனே” என்று எசப்பாட்டும் கமலையும் இசை பெருக்கின.
    கம்பனுக்கே பேராசான்களான எசப்பாட்டு உழவர்கள்!
   தம்மால் இயற்ற முடியாத அற்புதக் கவிதையைக் கேட்ட கம்ப நாடனின் உள்ளம் பேருவகை அடைந்தது. பாட்டை இடைநிறுத்த மனமில்லாமல், தமக்குக் கவி கற்றுக்கொடுத்த உழவர்களாகிய பேராசான்களிடம் மனதால் நன்றி கூறி, பரந்த மனமும், தன்னடக்கமும் கொண்ட உள்ளம் வரப்பெற்றவராய் தம் வீட்டை நோக்கி நடக்கிறார் கம்பன் என்னும் பெருங்கவிக்கோ.
   'ஆசிரியன் வாழ்நாள் முழுவதும் மாணவனே' என்று உணர்த்திய கம்பன்!
    வள்ளுவனின் ஆளுமை கண்டு வியந்து போனேன்! அணுவைத் துளைத்து ஏழ்கடலைத் துளைத்துக் குறுகத் தரித்த குறள், எந்த தனி ஒரு ஆசிரியரின் தகுதிப்பாட்டையும், குணநலன்களையும் வெளிப்பட உரைக்காதது கற்றலும், கற்பித்தலும் ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதால் அல்லவா! ஆசிரியன் வாழ்நாள் முழுவதும் மாணவனே என்று உணர்த்தினார் கம்பன்;
   மனித வாசிப்பு, சமூக வாசிப்பு, ஏனைய உயிரினங்களும், இயற்கையும் தரும் பட்டறிவு உள்ளிட்ட பல ஆசிரியர்களையும் உள்ளடக்கிய வாழ்வியல் பாடம் திருக்குறள் முழுவதும்  சொல்லப்படுவதால், 'ஆசிரியர்' தனியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது புரிந்தது!
    அன்னை, தந்தை, குரு, தெய்வம் என்று இறைவனுக்கு முந்தைய படிநிலையில் உள்ள ஆசிரியர் என்பவரின் தகுதிப்பாடு திருக்குறள் நெடுகிலும் பரக்கப் பேசப்படும் பொருள் அல்லவா?
   தனிமனிதனுக்குள் ஆசிரியனைத் தேடிய மதியிலியானேன்!
   தனிமனிதனுக்குள் ஆசிரியனைத் தேடிய மதியிலியான எனக்கு, ஏற்றப்பாட்டு உழவர்கள் போல் எண்ணற்ற ஊனுடல்களில் ஒளிந்திருக்கும் ஆசிரியர்களின் தரிசனம் கிட்டியது!
   தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ?
   வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! 
   தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல
   ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!
   என்று
   திருமூலர் அருளிய திருமந்திரத்துக்குப் புதிய பொருள் விளங்கித் தோன்றிற்று!
   அறிவானும் அறிவிப்பானுமாகிய வாலறிவனே பேராசான்!
   மனிதர்களுக்கு பொறி-புலன்கள் கொண்ட உடல் மூலம் அறிவை அறிவிக்கும் இறைவன், மனிதர்களுடன் தானும் அறிகின்றான்; அறியப்படும் அறிவாகவும் இருப்பதும் இறைவனே! அவனே வானாகி, மண்ணாகி, வளியாகி,  ஒளியாகி, ஊனாகி, உயிராகி, அறிகின்ற மெய்ப்பொருள் உண்மையுமாய் நிற்பவன் என்று காரைக்கால் அம்மையின் பாடல் நன்கு விளங்கிற்று! 
   அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
   அறிவாய் அறிகின்றான் தானே - 
   அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே 
   விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்!  - 11ம் திருமுறை:அற்புதத் திருவந்தாதி-4:காரைக்காலம்மையார்.
   ஆசிரியன் இவன்தான் என்று நுட்பப் பொருளாக வள்ளுவன் என்னும் பேராசான் வழங்கிய
   கற்றதனால் ஆய பயன் என்கொல்! வாலறிவன்
   நற்றாள் தொழார் எனின்?
   குறள்வழி, அறிவானும், அறிவிப்பானும் தானேயாகிய வாலறிவனின் பேரருள் விளங்கிற்று!
   குருவின் திருவடிகளே சரணம்!
    
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார் 
   உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர்
   - குறள் ஆய்வு 8: பகுதி-1
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
    "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   -பாவேந்தர் பாரதிதாசன்
   மரபுச்சொற்கள் நம் நாட்டுடமையை நிலைநாட்டும் உரிமைப் பத்திரம்!
   வீடுகள், விவசாய நிலங்கள் போன்ற அசையாச் சொத்துக்களுக்கு உரியவர் இவர்/இவர்கள் என்பதை சார்பதிவாளர் அலுவலகங்களில் தக்க சான்றாவணங்கள் கொண்டு, உடைமைப் பத்திரங்கள் எழுதி, பதிவு செய்யப்பட்டு நிறுவப்படுகின்றது. இப்பத்திரங்களே சொத்துடைமையை ஒருவருக்கு உறுதி செய்யும் காப்பாக விளங்குகின்றன. சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது, தக்க உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்கறிஞர்கள் மூலம் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
   ஒரு இனமக்களுக்கு அவர்கள் வாழும் நாட்டின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவது அவர்தம் தாய்மொழியின் தொன்மை அம்மண்ணுக்குரியது என்பதை நிலைநாட்டுவதில்தான் அடங்கியுள்ளது.  தாய்மொழியின் தொன்மையை நிறுவும் சான்றாவணங்கள் அம்மொழியின் மரபுச்சொற்களே! மரபுச்சொற்கள் மொழி உரிமைக்கான மொழிப்பத்திரச் சான்றாவணங்கள். மரபுச்சொற்களை முறையாக மொழியியல் வழியில், அம்மொழிக்கானதுதான் என்று  நிறுவப்படும்போதுதான், அம்மொழி பேசும் மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டின் நாட்டுடைமை அவர்களுக்கானது என்பது நிலைநாட்டப்படும்.
   மரபுச் சொற்கள் நம் அறிவுசார் சொத்துக்களின் உரிமைப் பத்திரம்!
   தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியர்கள் இந்த உண்மையை மிக நன்றாக அறிந்திருந்தார்கள். தமிழர்களின் அறிவுச் சொத்தைத் தமிழர் அறியாமல் திருடிச்செல்ல, தமிழர்களின் மரபுச் சொற்களுக்கு ஆரியப் பொருள் உரைக்கும் தந்திரத்தை ஆரிய உரையாசிரியர்கள் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறார்கள். காலப்போக்கில், ஆரியப்பொருளில் வழங்கப்படும் தமிழ் மரபுச்சொற்களை ஆரியச்சொற்கள் என்றே சாதிக்க இத்தந்திரம் பயன்பட்டு வந்திருக்கிறது.
   திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர் !
   அண்மைக்காலத்தில், தொல்லியல் அறிஞர் என்னும் போர்வையில் வாழும் ஒரு ஆரியக் குள்ளநரியான திரு.நாகசாமி என்பவர், தமிழரின் அறிவுச் சொத்தான திருக்குறளை ஆரிய வேதசாத்திரங்களின் சுருக்கம் என்று சொல்லிக் களவாட முயற்சி செய்ததை தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். திரு.நாகசாமி போன்ற ஆரியக் குள்ளநரிகள், திருக்குறள் கோட்டைக்குள் நுழைய வசதியாக  திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட  ஆரிய முதற்கயவன் பரிமேலழகர் என்னும் திருக்குறள் உரையாசிரியர் என்பதை அறிதல் நலம். தமிழர்களின் வாழும் மரபுச் சொல் 'அங்கணம்'. தொன்றுதொட்டு, தமிழர்களின் வீடுகளில், அடுப்பங்கரையின் ஓர் ஓரம் சுமார் மூன்று அல்லது ஐந்து சதுரடியில் வாட்டமாக நீர்வடியும் வகையில் அமைக்கப்பட்ட அங்கணமே சமையல் பாத்திரங்களைக் கழுவவும், வீட்டுப் பெண்கள் குளிக்கவும் பயன்படுத்தும் இடமாகும்.  இச்சொல் இன்றும் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள சொல். செத்தமொழி சமற்கிருதத்தில், 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்று ஆரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர். இச்சொல்லுக்கு பரிமேலழகன்  ஆரியப் பொருள் உரைக்கும் தந்திரத்தை இப்போது காண்போம்.
   இன்றிலிருந்து ஏறத்தாழ 2050 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட
   அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
   அல்லார்முன் கோட்டிக் கொளல்.  - திருக்குறள்:720
   என்ற திருக்குறளை எடுத்துக்கொள்வோம்.
   இக்குறளுக்குப் பத்தாம் நூற்றாண்டின் உரையாசிரியர் மணக்குடவர் எழுதிய  உரை: "அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்." என்பது.  அங்கணம் என்பது என்ன என்று தமிழர்கள் அறிவார்கள் என்பதால், அங்கணத்தை அங்கணம் என்றே சொல்லிவிட்டுப் போகிறார் மணக்குடவர்.
   பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு அழகு தமிழில் சிறந்த உரைஎழுதிய பரிமேழகன், இத்திருக்குறளின் உரையில்
   "தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும்." என, 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்ற சமற்கிருதப் பொருள் கூறுவதன் மூலம், திருக்குறளின் தமிழ் மரபுச் சொல்லான 'அங்கணம்' என்பதை, தனது ஆரிய நஞ்சைச் செலுத்தி நீக்க முயல்கிறார்.
   திருக்குறளுக்கு பரிமேலழகர் வைத்த கண்ணிவெடி
   பரிமேலழகர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் எதிராக வைத்த ஆரியக் 'கண்ணிவெடி' 'இருபதாம் நூற்றாண்டில் பலமாக தன் வேலையைக் காட்டியது. திருக்குறள் உரை என்றால் பரிமேலழர் உரைதான் என்று ஏழு நூற்றாண்டுகள் மயங்கியிருந்த தமிழ்ச் சமூகத்தின் தாக்கம் பெரும் தமிழறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை.
   பரிமேலழகரிடம் ஏமார்ந்த கலைஞரும் மு.வ.வும்
   திருக்குறளுக்கு உரையெழுதிய புகழ்பெற்ற உரையாசிரியர்களான தமிழறிஞர்கள் முனைவர். மு.வரதராசனார், கலைஞர் கருணாநிதி போன்றவர்களும், பரிமேலழகர் உரையைப் பின்பற்றி, 'அங்கணம்' என்பதற்கு முற்றம் என்றே உரைஎழுதிச் சென்றார்கள் என்றால், தமிழ்ப் பகைவர்களான ஆரியர்களுக்குச் சொல்லவா வேண்டும்?
   'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியே! நாயினும் கடைப்பட்டோனே!' பரிமேலழகரைத் திட்டிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்!!
   கவிச்சக்கரவர்த்தி கம்பரும், பரிமேலழகரும் சம காலத்தவர்கள். கம்பர் எவ்வாறு தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பாட்டில் வைத்துப் புகழ்ந்தாரோ, அவ்வாறே, தமிழ்த் துரோகியான குள்ளநரி பரிமேலழகரையும் தம் பாட்டில் வைத்து இகழ்ந்து தள்ளியிருக்கிறார். வள்ளுவரின் 'அங்கணம்' என்ற சொல்லையே அப்பாட்டில் எடுத்தாண்டுள்ளார்.
   சீதாபிராட்டி இராவணனை 'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியுடன் வாழ்வதுண்டோ? நாயினும் கடைப்பட்டோனே!' என்று  திட்டித் தீர்ப்பதாக அமைத்த அப்பாடல், உண்மையில், 'அங்கணம்' என்பதற்கு 'முற்றம்' என்ற ஆரியப்பொருள் உரைத்த நயவஞ்சகப் பரிமேலழகனைக் குறிக்கவே பாடியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உள்ளது. வாசகர்களுக்காக கம்பனின் முழுக்கவிதையும் இங்கே தரப்பட்டுள்ளது:
   'வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
   எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
   அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
   நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! 68
    
   கவிச்சக்கரவர்த்தியல்லவா? கவி நயத்துக்குச் சொல்லவா வேண்டும்?
    
   தொல்லியல் நாகசாமியின் ஆரியக் குள்ளநரித் தொல்லையியல்!
   ஆரிய நச்சுப்பாம்பான திரு.நாகசாமி இப்போது திருக்குறள்: ஆரிய வேதசாத்திரங்களின் சுருக்கம்' 'Tirukkural: an Abridgement of Sastras' என்று புத்தகம் எழுதியே வெளியிட்டுவிட்டார். 'அங்கணம்' போன்ற வாழும் தமிழ் மரபுச் சொற்களே திருக்குறள் உள்ளிட்ட அழியாப் புகழ்பெற்ற நம் அறிவுச் சொத்துக்களைக் காக்க வல்லவை. ஆரியர்களின் குள்ளநரித்தனத்தை தமிழர்களுக்குத் தொடர்ந்து எழுதியும், பேசியும் விளக்கவேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. தக்க சான்றுகள் கைக்கொண்டே ஆரிய நச்சுப் பரப்புரையை எதிர்கொண்டு, நம் மொழியையும், மக்களையும் காக்க இயலும். தமிழகத்தை ஆள்பவர் தமிழ்ப்பற்றுள்ள தமிழனாக இருந்தால் மட்டுமே இது இயலும் என்பதைத் தமிழர்கள் உணர்தல் வேண்டும்.
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
   குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   - பாவேந்தர் பாரதிதாசன்
    
   புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் "மக்கள் வாசிப்பு" சார்ந்தவை. தமிழ் எழுத்துலகின் படைப்பாளிகளைக் குறித்து நாம் அறிந்திராத அரிய செய்திகளை, 'இவர்' 'அவர்'களை 'வாசித்ததன்' பின்புலத்தில் மண்ணின் மணம் கமழ, சுவையுடன் படைப்பது இவரின் தனித்துவம்.
   விளையும் பயிர்!
   மாணவப்பருவத்திலேயே தம் படைப்புகளைத் தொடங்கிவிட்ட  "எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை"ப் உயர்நிலைப்பள்ளி நாட்கள் தொட்டு வாசித்துவரும் எனக்கு அண்மையில் அவர் தமிழ் மரபு அறக்கட்டளையின் "மண்ணின் குரல்" வலைத்தளத்தில், "வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 1"ல் விரிவாகப் பேசியுள்ளதைத் தற்செயலாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது; வாசிப்பின் இறுதியில் வியப்பின் விளிம்புக்கே சென்றது என் மனம். ( http://voiceofthf.blogspot.com/2017/02/1.html)
   தமிழ் மரபை அழித்தே தீர்ப்பது என்ற தீராப்பகையுடன் வடமொழியும், சமற்கிருதமும் இடைவிடாமல் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தியும், அசராமல், இன்னும் தொன்மைத் தமிழ்மரபு மாசுபடாமல், நெல்லை மண்ணின் குரல் வியப்பூட்டும் வகையில் சங்ககாலத் தமிழ்மணம் கமழ உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை அவர் பேச்சு உணர்த்தியது.
   எழுத்தாளர் நாறும்பூநாதனின் பங்களிப்பு - நெல்லை மண்வாசனையில் வாழும் சங்கத்தமிழ்!   
   நெல்லை மண்வாசனை குறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் பதிவிட்டுள்ள செய்திகள் தமிழியல் மற்றும் தமிழ் மரபு ஆய்வாளர்களுக்கான மிக முக்கியமான ஆய்வுத் தரவுகளாகும். அதிலிருந்த 'அங்கணக் குழி' என்னும் சொல்லாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
   கம்பனைச் சாட்சிக்கு அழைத்துப் பரிமேலழகரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உதவிய எழுத்தாளர் நாறும்பூநாதன்!
   நாறும்பூநாதன் அவர்கள் 'அங்கணகுழி' குறித்துச் சொன்ன செய்திகள் மிகவும் தமிழக வரலாற்றுப் பார்வையில் மிக முக்கியத்துவம் கொண்டது! கம்பனைச் சாட்சிக்கு அழைத்துப் பரிமேலழகரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த எனக்கு மிகவும் உதவியது அவ்விளக்கமே! சரி, நேராக விஷயத்துக்கு வருவோம்.
   நெல்லையின் அங்கணாக்குழி!
   நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய வீடுகளில் கடைசி அறையாக இருப்பது சமையலறை. சமையல் அறையிலிருந்து புறவாசல் செல்ல ஒரு கதவு இருக்கும். சமையலறையின் ஓர் மூலையில் சுமார் இரண்டடி சதுர அளவுப் பரப்பு தாழ்வான வாட்டத்துடன்  சமையலறைக் கழிவுநீர் வெளியேறும்   துளையுடன் அமைந்திருக்கும் பகுதி 'அங்கணாக்குழி' அல்லது 'அங்கணக்குழி' என்றழைக்கப்படுகின்றது.
   ஏழைப்பெண்களின் குளியலறையாக அங்கணாக்குழி!
   தனியாகக் குளியலறை இல்லாத வீடுகளில், இந்த அங்கணக்குழிகளே பெண்களின் குளியலறை. காபி அல்லது டீ போட்டு முடித்தவுடன், காபித்தூள்-டீத்தூள் கழிவுகள் இந்த அங்கணாக் குழிகள் வழியாகவே சாக்கடையில் சங்கமிக்கும்.
   காபி நன்றாக இல்லை என்றால், 'அங்கணாக் குழில கொட்டறத என் வயிற்றில கொட்டக் குடுத்திருக்க!" என்று கோபமுகம் காட்டுவார் நெல்லை மண்ணின் குடும்பத் தலைவன்.
   திருக்குறளில் அங்கணாக்குழி!
   இருக்கட்டும். 'அங்கணம்' என்ற சொல்லை உவமையாகக் கொண்டு ஒரு திருக்குறள் படைத்துள்ளார் வள்ளுவர்.
   அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
   அல்லார்முன் கோட்டிக் கொளல். - திருக்குறள் 720
   கேட்கும் சான்றாண்மையற்றத் தகுதியற்றவர்கள் முன்பு அறிவார்ந்த நல்ல கருத்துக்களை விதைப்பது அங்கணத்துக்குள் அமிழ்தத்தை ஊற்றுவதைப் போன்றது என்று வள்ளுவர் சொல்லும் திருக்குறள், சங்கத் தமிழ் வாழும் நாற்றங்காலாக நெல்லை மாவட்டத்தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்று.
   பத்தாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரையெழுதிய மணக்குடவர், 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'அங்கணம்' என்றே பொருள் உரைத்துள்ளார் என்பது பத்தாம் நூற்றாண்டில் அச்சொல் தமிழகமெங்கும் பேச்சுவழக்கில் இருந்திருக்கிறது என்பதற்குச் சான்று.
   கம்பராமாயணத்தில் அங்கணாக்குழி!
   கி.பி. 1180-1250களில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் கம்பராமயணத்தில்
   வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
   எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
   அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
   நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! கம்பரா-யுத்தகாண்டம்-மாயாசனகப்படலம்-6"
   என்று சீதையின் கூற்றாக முழங்கியதிலும் 'அங்கணம்' என்ற சொல்லாடல் உண்டே! கம்பனுக்குப்பின் பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்\ தோன்றிய வைணவரான பரிமேலழகருக்கு கம்பனின் 'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரி' என்ற உவமை உறுதியாகத் தெரிந்திருக்கவே செய்யும்!
   பரிமேலழகர் ஏன் அங்கணாகுழியை மூடினார்?
   திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பின் ஏன் 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்று மாற்றுப் பொருள் ஏன் சொல்லவேண்டும்? வடமொழிப் பற்றாளரான பரிமேலழகர் தமிழர் மரபுகளும், தத்துவங்களும் தன்னகத்தே கொண்ட திருக்குறளிலிருந்து அவற்றை முற்றிலுமாக நீக்கி, திருக்குறளுக்கு ஆரியச் சாயம் பூசும் முழுமுனைப்பும் கொண்டவர் என்பதை 'அறம் என்பது மனுதருமம் சொல்வதை செய்வதும்,   மனுதருமம் மறுத்ததை விலக்குவதும்தான்' என்று சொல்லும் இடத்திலேயே தொடங்கிவிடுகின்றது.
   பரிமேலழகரைப் பின்பற்றியே, கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் மு.வரதராசனார் உள்ளிட்ட பல உரையாசிரியர்களும் இப் பொருளையே உரைத்துள்ளார்கள் என்பதுதான் வியப்பு.
   கூடுதல் கொசுறு: வண்ணநிலவன் எழுத்திலும் அங்கணாக்குழி!
   வண்ணநிலவன் கதைகள் தொகுப்பில் எட்டாவதாக வரும் "அழைக்கிறார்கள்" கதையில் பிரிவுறாத நெல்லை மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் என்ற ஊரில் நிகழ்வாக, அங்கணத்தைக் குறித்துப் பின்வரும் ஓர் உரையாடல் வருகின்றது:
   "குடும்பன் விசுவாசம் மிக்கவன். கஸ்தூரியின் வீடு இடிந்துவிட்டது தெரியும் அவர்களுக்கு. வீட்டடி மனையை வாங்கின குலசேகரப்பட்டணத்து சாயபு வீட்டை அடியோடு இடித்து மட்டமாக்கி புதுவீடு கட்ட ஆரம்பித்திருந்ததும் அப்போதுதான். குடும்பன் ஒதுங்கி நின்று சொன்னது வேதம். அவனும் கூலிக்கு வீடு இடித்தானாம். புறவாசல் அங்கணத்தை இடிக்கும்போது, அவர் போட்டுப் போட்டுத் துப்பின வெற்றிலை எச்சில் காவி இன்னும் அங்கணத்து மூலையில் இருந்ததைப் பார்த்தேஞ்சாமி என்றானே."
   மேற்கண்ட வரிகள் அழகாகச் சொல்லும் 'அங்கணம்' என்பது புறவாசலில் உள்ள ஒன்று என்று. பண்டையத் தமிழர்களின் இல்லங்களில் முற்றம் என்பது வீட்டின் முன்னேயுள்ள பகுதி என்பதால் அது எப்போதும் தூய்மையாக வைக்கப்படுவது அனைவரும் அறிந்த செய்தி. முற்றம் என்பது முன்றில் என்றும் அழைக்கப்பட்டது.
   சீரிளமைச் சங்கத்தமிழ் வாழும் நெல்லை!
   'ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையாத சீரிளமையோடு இன்றும் விளங்கும் தமிழ்மொழியின் தொன்மைப் பெயர்ச்சொல்லாடல்கள் இன்றும் தென்மாவட்ட மக்கள் மொழியாக செம்மையாக வாழ்ந்து வருகின்றது. அத்தகைய சொற்களைப் பாதுகாக்க நம்மிடையே மக்கள் வாசிப்பாளரரும், எழுத்தாளருமான நாறும்பூநாதன் போன்ற படைப்பாளிகளை எம் தமிழன்னை தொடர்ந்து பெறும் பேறு பெற்றவள்! அவளின் சீரிளமையும் குன்றாத வளமையுடனும் மாறாத செழுமையுடன் என்றும் பொலிந்து ஒளிரும்!
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
    
   புதையல் வேட்டை தொடரும்!
    
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   பெண்ணியம்: தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!- குறள் ஆய்வு-7, பகுதி-3
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   - பாவேந்தர் பாரதிதாசன்
    
   சமர்ப்பணம்!
   திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் யாழ் இணைய இதழில் எழுதிவரும் 'திருக்குறள் ஆய்வு' தொடர்கட்டுரைகளில் ஒன்றான "பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் கட்டுரைக்கு,  யாழ் இணையதளத்தில் அறிவார்ந்த பங்களிப்பைப் பின்னூட்டமாக நல்கிய திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
   எதற்காக என்று கேட்க மாட்டீர்களா? "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" என்று திருவள்ளுவர் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று  என்னைத் துளைத்தெடுத்த பெண்ணியவாதிகளின் நியாயமான கேள்வியை வசதியாக ஓரம் கட்டிவிட்டே "பெய்யெனப் பெய்யும் மழை!" என்ற ஒற்றைக் கருத்தை மையமாகக் கொண்டே முந்தைய கட்டுரை கட்டமைக்கப்பட்டது.
   சுவி அவர்களின் கவித்துவமான பின்னூட்டத்தைப் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளை,  திருவாளர் சோமசுந்தரனார் அவர்கள்,  திருவாளர் சுவியின் "அகத்துறை  உரைநடைக் கவிதை"க்கு, அருமையான "சீவக சிந்தாமணி" பார்வையில் உரையெழுதி பின்னூட்டம் இட்டாரோ இல்லையோ, நான் ஓரம் கட்டி வைத்திருந்த "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" கேள்விக்கான விடையின் கரு உதயமாகி,  நன்கு வளர்ந்து இப்போது முழுக்கட்டுரையாகிவிட்டது. 
    இத் திருக்குறளுக்கான மறைதிறவை (ரகசியத்தை) உணராமல்,  பல்லாண்டுகளாகப் பெண்ணியவாதிகளால் 'கொலைவெறி வெறுப்புடன்' இக்குறள் பார்க்கப்பட்ட வரலாற்றுப் பிழையை நேர் செய்யும் விடை கிடைத்துவிட்டது. நன்றி.
   இத்தொடரின் இக்கட்டுரை  திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் சமர்ப்பணம்!
   'தெய்வம் தொழாள்' என்பதன் மறைபொருள் என்ன?
   'கற்றதனால் ஆயபயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்!' என்று இரண்டாம் குறளிலேயே இறைவணக்கம் செய்யாதாரை இடித்துரைத்த வள்ளுவர், எதன்பொருட்டு "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்" என்ற தொடரைப் மனைவிக்குரிய சிறப்புப் பண்பாகத் தரவேண்டும்?
   இல்லறத்துக்குரிய பெண்  தெய்வத்தைத் தொழமாட்டாள் என்று வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தேவையென்ன? இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறிப்பிட்டது எல்லாம் வல்ல இறைவனை அன்று என்பதும், வேறு எதையோ மறைபொருளாகச் சொல்கிறார் என்பதும் மனதில்பட்டது; எதைக் குறிக்க வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்னும் மறைபொருளால் குறிப்பிட்டார் என்ற  வினாவிற்கான விடை காணாமல், மனம் நிலைகொள்ளவில்லை.  
   தமிழர் பண்பாட்டைச் சீர்கெடுக்க வந்த ஆரிய மணச்சடங்கியல்!
   வாழ்க்கைத்துணை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், 'மறை'வாகச் சுட்டப்பட்ட இத்தொடருக்கான மெய்ப்பொருள், வள்ளுவர் காலத்திலேயே தமிழரின் வாழ்வியலில் ஊடுருவத் தொடங்கிவிட்ட ஆரியவியலின் திருமணச் சடங்கியல் முறைகளின் மூலம் நேர்ந்துவிட்ட ஏதேனும் பண்பாட்டுச் சீர்கேடுகள் குறித்து இருக்கலாமோ என்ற ஐயம் மனதில் உதயமானது. (நன்றி:சுவி)
   நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், வேதாந்தம், மனுசாத்திரம் உள்ளிட்ட ஆரிய சாத்திரங்களின் கரைகண்டவரும், காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா அவர்களின் அணுக்கத் தொண்டருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய "எங்கே போகிறது இந்துமதம்" என்னும் நூலில் ஆரியவேதத் திருமண மந்திரங்களின் கீழ்த்தரமான பொருளைக் குறித்து  மிக விரிவாக எழுதியுள்ளது நினைவுக்கு வர, அந்நூலை மறுவாசிப்பு செய்தேன்.  
   ஆரியவியல் திருமணச் சடங்குகள் குறித்த  சமற்கிருத நூற்களில் உள்ள ஆரியவியல் திருமணச் சடங்கியலில் உள்ள ஒரு சமற்கிருத மந்திரம் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.
   மணமகளுக்கு நான்கு தெய்வங்களைத் திருமணம் செய்விக்கும் ஆரியமந்திரம்!
   திருமணச் சடங்கின்போது மணப்பெண்ணைத் தூய்மைப்படுத்த(?!?) ஆரியப் பிராமணப் புரோஹிதன் கூறும் ஒரு மந்திரம்:.
   "சோமஹ ப்ரதமோ
   விவிதே கந்தர்வ
   விவிதே உத்ரஹ
   த்ருதியோ அக்னிஸ்டே
   பதிஸ தூயஸ்தே
   மனுஷ்ய ஜாஹ" - ரிக்வேதம் -  10.85.40.41.
   மணப்பெண்ணான இவளை (புனிதப்படுத்துவதற்காக), திருமணத்தின் முதலாம் நாள் இரவு சோமன் (சந்திரன் என்னும் தெய்வமும்), இரண்டாம் நாள் இரவு கந்தர்வன் (என்னும் தெய்வமும்), மூன்றாம் நாள் இரவு உத்திர தேவன் (என்னும் தெய்வமும்), நான்காம் நாள் இரவு அக்னிதேவன் (என்னும் தெய்வமும்) மணந்து கலந்த பிறகு, ஐந்தாம் நாள் இரவு இவளை மணந்தவனான கணவன் கலக்க வேண்டும் என்பது இம்மந்திரத்தின் விரிவான பொருள்.
   இம்மந்திரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடைசி வரியான "மனுஷ்ய ஜாஹ" என்பதாகும். இக்கடைசி வரிக்கு, "இம்மந்திரத்தில் குறிப்பிட்ட தெய்வங்களெல்லாம், இரவு நேரத்தில், மனிதவடிவில்(பிராமண வடிவில் என்று வாசிக்கவும்) மணப்பெண் தங்கியிருக்கும் தனி அறைக்கு வருவார்கள்." என்று இம்மந்திரங்களுக்கு விளக்கம் தருவதுதான் பதுதான்  ஆரியப்பிராமணத் திருமணச் சடங்குகளின் முறைபிறழ்ந்த கயமைத்தனத்தின் உச்சகட்டமாகும்.
   இத்தகைய சடங்கின் மூலம்,  நான்கு ஆரியப் பிராமணர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்நான்கு நாட்களில் இரவுப் பொழுதில் 'தெய்வம்' என்னும் பெயரில் வருவதால், அவர்களை மணப்பெண்  'தொழ(?!)வேண்டும்' (ஆரியப் பிராமணனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்கான மறுப்புக் குறியீட்டை மனதில் கொண்டே இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறித்திருக்க வேண்டும்) என்ற கொடுவழக்கை திருமணச் சடங்கு என்ற பெயரால், மணப்பெண்ணின் 'நிறை'யை நான்கு ஆரியப் பிராமணர்கள் சூறையாடுவர்.
   மணமகளை விட்டு விலகுமாறு கந்தர்வனிடம் கணவன் கெஞ்சும் மந்திரங்கள்!
   இம்மந்திரத்துக்குச் சப்பைக்கட்டு கட்டும் ஆரிய அடிவருடித் தமிழர்கள் சிலர் 'பதி' என்றது  கணவன் என்ற பொருளில் சொல்லப்படுவது இல்லை; பதி என்றால் பாதுகாவலன் என்பதே பொருள் என்பார்கள். அப்படியானால்,
   "உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா
   அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ"
   விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுவாயாக!  உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனான என்னுடன் சேர்த்து வைப்பாயாக! என்ற மந்திரத்துக்குப் பொருள்தான் என்ன?
   "உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே
   அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி"
   "இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!" என்னும் மந்திரத்தின் பொருள்தான் என்ன?
   பித்தலாட்டப் பொருள் சொல்லும் ஆரியர்கள்!
   இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! ஆரியப்பிராமணர்கள் சப்பைக்கட்டு கட்டுவதுபோல, இந்தத் தேவர்கள் மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலர்களாக இருந்திருந்தால், இவர்களுக்கு மணப்பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?
   ஆரியத் தெய்வங்கள் பிராமணர்களின் உருவில் தோன்றுவார்களாம்!
   சோமன், அக்னி, கந்தர்வன் போன்ற தெய்வங்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட இழிவானது, மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் ஆரியப்பிராமணனுக்கு மனைவியாக்கி, இத்தனை கயமைத்தனத்துக்கும் மணமகனின் சம்மதம் பெற்று என்றெல்லாம் ஆரியப் பிராமணர்களின் வேதமந்திரங்கள் முழங்கப்படுகின்றன.  இம்மந்திரங்களில் சொல்லப்படும் வேத தெய்வங்கள் அனைவரும் ஆரியப்பிராமணர்கள் உருவில் வருவார்கள் என்னும் பித்தலாட்டம் வேறு!
   தமிழ் மணமகள் "தெய்வம் தொழாள்!" என்று வள்ளுவர் கூறியதன் காரணம் இதுதான்!
   இப்பழக்கத்தைக் கண்டு கொதித்துப்போன திருவள்ளுவர், மணமகளான தமிழ்ப் பெண், இத்தகைய ஆரியப் பிராமணத் 'தெய்வம் தொழாள்(புணராள்)"; அவள் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட 'கொழுநன் (மட்டுமே) தொழுதெழுவாள்'; கணவனுக்கு மனைவியாகக் கிடைத்த இத்தகைய நிறையுடைய பெண்ணரசி, பயன் கருதாது 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற அன்பின் திருவுருவம் (பெய்யெனப் பெய்யும் மழை)  என்று போற்றுகின்றார் வள்ளுவர்.
   தெய்வங்களின் பெயரால் நம் பெண்களின் 'நிறை' கெடுக்கும் ஆரியவியல் சடங்கியல்களை உடனே துரத்துங்கள் என்று வள்ளுவர் மறைமொழியாகச் சொன்னதுதான்  "தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!" என்னும் மறைபொருள் பொதிந்த மந்திரமாகும்! அவ்வாறு (தங்களைத்) "தெய்வம் (என்று பொய்யுரைக்கும் ஆரியப் பிராமணர்களைத்) தொழாள்! (தன்னை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொண்ட)கொழுநன் தொழுதெழுவாள்! "அத்தகைய பெண்ணே  தன் எல்லையற்ற அன்பை கொழுநனுக்கு வரையாது வழங்கும் 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற தேவதை!" என்னும் பொருளில் "பெய்யெனப் பெய்யும் மழை!" என்றும் முழங்கியது இத்திருக்குறள்!
   இங்கு 'தொழுதல்' என்பது 'கணவனுடன் கலத்தல்' என்னும் சொல்லுக்கான மங்கல வழக்காகவே திருவள்ளுவர் குறித்துள்ளார் என்ற மறைதிறவு (ரகசியம்) சுவி-சோமசுந்தரனார் விளக்கங்களினால் வெளிச்சம் பெற்ற என் சிற்றறிவுக்குப்படுகின்றது. இவ்விடத்தில் வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்ற சொல்லால் குறித்தது 'சாமி'யை அன்று; ஆசாமியான, நயவஞ்சக ஆரியப்பிராமணப் புரோகிதனையே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். திருமணச்சடங்கு என்ற பெயராலும், தெய்வம் என்ற பெயராலும் ஆரியப்பிராமணர்கள் நடத்திவந்த அடாவடித்தனத்தை எதிர்த்தே நேர்மறையில் இக்குறள் எழுதப்பட்டது என்பதை எண்ணும்போதுதான் வள்ளுவர் தந்த இமாலயப் பங்களிப்பின் உயரம் விளங்குகின்றது!
   சமற்கிருத வேதமந்திரத்தில்  சொல்லப்பட்டவாறு, இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளைத் தமிழகத்தில் ஆரியர்கள் நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பான்மையான தமிழர்கள் அறியாத ஆரியமொழியில் கீழ்த்தரமான பொருள்கொண்ட மந்திரங்கள் மறைவாக உள்ளன.
   இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்ய  ஆரியர்கள் முனைந்திருப்பார்களேயானால், புலியையே முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிகள் கொடுக்கும் அடிதாங்க முடியாமல் என்றோ தமிழகத்தைவிட்டு ஓடியிருப்பார்கள்.
   தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று ஆரியர்கள் சொல்வதால், தமிழர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டது. கீழ்த்தரமான செயல்களைப் புரியுமாறு கூறும் சமற்கிருத திருமணச் சடங்கியல் வேதமந்திரங்களுக்குப் பொருள் அறியாமல், 'வேதம் நல்லது'  என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்ட தமிழர்களுக்கு, மறைபொருளாக 'தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்" என்று வள்ளுவர் கூறியுள்ளார் என்பது தெளிவு.
   திருவள்ளுவர் ஏன் ஆரியவியலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை?
   ஒருவேளை திருவள்ளுவர் ஆரியவியல் சடங்கியல்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியிருந்தால், திருக்குறளே இவ்வுலகில் இல்லாமல் செய்திருப்பர் ஆரியப் பிராமணர்கள். மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த எல்லையற்ற செல்வாக்கு அதைச் சாதித்து இருக்கும்.
   திருக்குறளைச் செரித்து விழுங்க ஆரியர் முயல்வது ஏன்?
   எங்கும் ஆரியச் சடங்கியல்களை நேராக மறுக்காமல், மறைபொருளாக, ஆரியவியலுக்கு மாறான கருத்துக்களை நேர்மறை குறட்பாக்களில் அமைத்த வள்ளுவரின் கூரிய அறிவார்ந்த தொலைநோக்கு வியக்கத்தக்கது. இமாலய அளவுக்கு மாண்பில் உயர்ந்த உலகப்பொதுமறையான திருக்குறளை மறுக்க முடியாததால், திருக்குறளுக்கு, ஆரியவியல் பொருள் திணித்துச் செரித்து விழுங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்.
   திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேசரி போட்டார் என்று ஒருவனை முட்டாளாக்கும் நகைச்சுவையை ரசிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு, பரிமேல்அழகர்களும், நாகசாமிகளும் ஏன் திருக்குறளை ஆரிய சாத்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று நிலைநிறுத்தப் போராடுகிறார்கள் என்பது இப்போது நன்கு விளங்கும்.
   ஆரிய வேதமந்திரங்கள் ஓதி திருமணம் செய்விப்பது எத்துணை அவமானமான செயல்!
   நம் பெண்களை அவமானப்படுத்தும் சமற்கிருத ஆரிய வேதமந்திரங்களின் பொருள் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இம்மந்திரங்களைப் பெருமையுடன் ஓதி, திருமணம் செய்விப்பது எத்துணை மானக்கேடான செயல் என்பதை இனியாவது உணர்வோம்! 
   எத்தனை நூற்றாண்டுகளாக, நம்மை முட்டாளாக்கியிருக்கும் ஆரியச் சடங்கியல் அவமானத்திலிருந்து வள்ளுவர்வழி பற்றி, விரைந்து விடுதலை அடைவோம்.
   காற்றில் பறக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
   உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பெண்களை சபரிமலைக் கோவிலுக்குள் அனுமதிப்போம், தீர்ப்பை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, மற்ற அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மதவாதிகள் அரங்கேற்றிய பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிக்க இயலாமல் கேரள அரசு விழி பிதுங்குமானால், பண்டைக்கால ஆரியப் பிராமணர்களின் மதவாதக் கொடுங்கோன்மை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரலாம்.
   அரசியல்வாதிகளுக்குப் பெண்கள் பொது எதிரிகள்!
   மதவாத அரசியல்வாதிகளுக்கும், மதச்சார்பற்ற பொதுவுடைமை அரசியல்வாதிகளுக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பதை மக்களவை, மாநிலங்களவைகளில் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய நாடகத்தில் இருந்து வெட்ட வெளிச்சமாகியது.
   பரசுராமன் பூமியில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்!
   இப்போது சபரிமலை வழிபாட்டுரிமையை பெண்களுக்கு மறுக்கும் மதவாதிகளுடன், பொதுவுடமைவாதிகள் கைகோர்த்துக்கொண்டு நடத்திய நாடகம், இவர்கள் அனைவருக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
   பெண்களை அவமதிக்கும் ஆரியர்கள்!
   மாதவிலக்கு வரு பெண்கள் தூய்மையற்றவர்கள், நைஷ்டிக பிரமச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரமச்சரியம் இப்பெண்களைக் கோவிலுக்குள் அனுமதித்தால் திருக்கோயில் களங்கப்பட்டுவிடும் என்று கூக்குரலிடும் பரசுராமன் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆரியபிராமண நம்பூதிரிகளிடம் மண்டியிடும் கேரள அரசின் இரட்டைவேடம் அம்பலமாகியது.
   நைஷ்டிக பிரமச்சாரியான அனுமனைப் பெண்கள் இனி வணங்கக்கூடாது என இனி ஆரியப்பிராமணர்கள் உத்தரவு இடலாம்!
   இனி, இன்னொரு நைஷ்டிகப் பிரமச்சாரியான அனுமன் கோவிலிலும் விரைவில் மாதவிலக்கு வரும் பெண்களை அனுமதிக்கப் போவதில்லை என்ற புதிய முடிவை ஆரியப் பிராமணர்கள் எடுக்கலாம். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள தூண்களில் காட்சிதரும் நைஷ்டிக பிரமச்சாரியான அனுமன் சிலைகளை, வாஞ்சையோடு வெண்ணெய் சார்த்தி, வலம்வந்து வணங்கும் பெண் பக்தர்கள், இனி அத்தூண்கள் அருகில் செல்ல அநுமதிக்கப்பட மாட்டார்கள் என்னும் அறிவிப்பை ஆரியப் பிராமணர்கள் உலக நலம்கருதி எந்நேரமும் அறிவிக்கலாம்!
   'மார்புக்கச்சை' அணிய வரி விதித்த வன்கொடுமை ஆரிய நம்பூதிரிகள்!
   கடந்த ஆயிரம் ஆண்டுகளில், ஆரிய நம்பூதிரிப் பிராமணர்கள், திருவாங்கூர் மன்னர்களை, பத்மநாபக் கடவுளின் தாசன், மன்னன் இல்லை என்று அறிவித்து, கடவுளின் சார்பாகச் சொல்லுவதாகக் கூறி, நம்பூதிரிகள் மன்னனை ஆட்டிப்படைத்து நாட்டை ஆண்டனர். ஆரிய நம்பூதிரிகளே அரசை வலியுறுத்தி, ஏனைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் 'மார்புக்கச்சு அணிந்துகொள்ள' வரிவிதித்து வன்கொடுமை செய்தனர்.
   ஆரிய நம்பூதிரிகளின் வன்கொடுமையை எதிர்த்துப் போராடிய நாஞ்ஜெலா!
   இவ்வரி, அப்பெண்களின் மார்பகங்களின் அளவுகளைப் பொருத்து விதிக்கப்பட்டது. கேரளத்தின் ஆலப்புழையைச் சார்ந்த நாஞ்ஜெலா என்ற பெண்ணிடம் அடாவடியாக இருமடங்கு 'முலைவரி' வசூலிக்க வந்த திருவாங்கூர் அரசின் வரிவசூலிப்பவர்களிடம், தனது இரு மார்பகங்களையும் கத்தியால் அறுத்துக் கொடுத்துவிட்டு, உயிரை விட்டார். இச்சம்பவம் சேர்த்தலா என்னும் ஊரின் அருகே நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவ்வூர் மக்கள் இச்சம்பவம் நடந்த இடத்தை 'முலைச்சிப் பரம்பு அல்லது முலைச்சிபுரம்' என்றழைத்தனர். (காண்க காணொளி: https://www.youtube.com/watch?v=2hVwuToW-Y0 https://www.youtube.com/watch?v=NU44GI2l11Y). செல்வாக்குமிக்க ஆரியப் பிராமணர்கள், இப்பெயரை மாற்றிவிட்டார்கள்; இச்சம்பவம் வரலாற்று நூலில் இடம்பெறாமலும் பார்த்துக்கொண்டார்கள். கேரளாவில் ஸ்ரீநாராயணகுருவும், தமிழ்நாட்டில் அய்யா வைகுண்டரும் வீறுகொண்டு போராடி இம்முறையை ஒழித்தனர்.
   ஆரிய நம்பூதிரிகளின் சபரிமலை நாடகம்!
   'பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கலாம்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, கோயிலைப் பூட்டுவோம் என்று மிரட்டிய ஆரிய நம்பூதிரிப் பிராமணர்களின் சங்கம், இப்போது கேரள அரசை மண்டியிட வைத்ததோடு நில்லாமல், 'மறுசீராய்வு மனு'வையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
   திருமேனி என்னும் வெறும்மேனி அடாவடிகள்!
   அக்கால கட்டங்களில், திருமேனி என்றழைக்கப்படும் நம்பூதிரியின் முன்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களைச் சார்ந்த பெண்கள் மார்பகங்களைக் காட்டிக்கொண்டுதான் நிற்கவேண்டும். மார்பை மறைத்து நின்றால், நம்பூதிரிகளின் திருமேனியை அவமதித்ததாகக் கருதப்பட்டு, கொடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
   ஆரிய நம்பூதிரிப் பிராமணன் தான் விரும்பிய பெண்ணை அடையலாம்; அப்பெண்ணின் கணவன் தன் இல்லத்துக்கு வந்த நம்பூதிரியின் செருப்புக்குக் காவலாக இருக்கவேண்டும். நம்பூதிரி இல்லம்விட்டு நீங்கிய பிறகே, அப்பெண்ணின் கணவன் வீட்டுக்குள் செல்ல இயலும் என்ற விதியையும் உருவாக்கினார்கள்.
   திருமேனிகளின் 'தெய்வசம்பந்தம்'!
   இம்முறைக்குத் 'தெய்வசம்பந்தம்' என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு எத்தனை தெய்வசம்பந்தம் உள்ளது என்பதைப் பொருத்து, அப்பெண்ணின் கணவனுக்குப் பெருமை என்றும் மூளைச்சலவை செய்தனர் ஆரிய நம்பூதிரிகள். இவை அனைத்தும் சநாதன தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று சாதித்தனர் ஆரியப் பிராமண நம்பூதிரிகள்!
   கேரள ஆரிய நம்பூதிரிகளின் பாலியல் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வேற்று மதங்களுக்குப் பெருமளவில் மாறினார்கள். 
   சுவாமி விவேகானந்தா பெண்களை அவமானப்படுத்தும் கேரளத்தைக் கண்டு, "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று மனம் கொதித்துச் சாபமிட்டார்.
   அடிமைகளைக் கட்டுப்படுத்துவதைவிட எளிதானது, மூளைச்சலவை அவர்களை செய்வதுதான் என்ற தந்திரத்தை ஆரியப் பிராமணர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
   பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பெண்களை மூளைச்சலவை செய்த ஆரிய நம்பூதிரிகள்!
   பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்களைகொண்டே, "மாதவிடாய்வரும் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால், ஆகமக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலின் தூய்மை கெடும், நைஷ்டிக பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரம்மச்சரியம் கெடும்" என்று தொலைகாட்சி விவாதங்களில் ஆவேசமாகப் பேச வைக்கிறார்கள் ஆரியப் பிராமண நம்பூதிரிகள்.
   பெண்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ்  பெண்களும் இதே கருத்தை ஆவேசமாகக் கூறுகின்றனர். (தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட மதவாதிகள் சிலர் கூறியதுபோல், சபரிமலை ஐயப்பன் கோவில் ஆகமக்கோயில் அன்று; 'தாந்த்ரீகம்' என்னும் முறைக்கு உட்பட்டது. ஆகம விதிகளின்படி, எந்த ஒரு ஆரியப் பிராமணரும் திருக்கோயில் பூசகராக முடியாது என்பதை அறிதல் நலம்.)
   சநாதன தர்மத்தின் உண்மையான நிறத்தை அறிவோம்!
   'தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட பெண்களுக்கு, சநாதன தருமத்தின் பெயரால் 'முலைவரி' விதித்து வன்கொடுமை செய்த திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சார்ந்த திருவாங்கூர் அரசியார், சபரிமலையில் பெண்கள் நுழைவது "சநாதன தர்மத்துக்கு விடுக்கப்பட்ட சவால்" என்று இந்நாளில் கூறுவது "இந்தியக் குடியரசின் இறையாண்மைக்கும், பெண்களின் தன்மானத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்" என்பதைக் கேரள மக்கள் உணரவில்லை என்பது கவலைக்குரியது.
   தமிழக ஆகமக்கோயில்களில் ஆரியப்பிராமணர்கள் பூசைசெய்ய இயலாது!
   தமிழக 'ஆகமக் கோவில்'களில் ஆரியப்பார்ப்பனர்கள் பூசைசெய்வது ஆகமவிதிகளுக்குப் புறம்பானது என்பதை, திருமூலர் அருளிய தமிழாகமத் திருமுறையான 'திருமந்திரம்' தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் 'பார்ப்பனர்' என்ற சொல், திருக்கோயில் பூசகர்களான, சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள் என்றழைக்கப்படும் ஆதித்தமிழர்களைக மட்டுமே குறிக்கும்.
   ஆரியப் பிராமணர்களைத் திருமூலர் "பேர்கொண்ட பார்ப்பான்' என்றழைத்தார். இச்சொல்லின் பொருள், ஆரியப்பிராமணர்கள் பார்ப்பனர்கள் அல்லர்; ஆயினும், திருக்கோயில் பூசனை செய்வதன்மூலம், ஆன்மீகத்தலைமையைக் கைப்பற்றிவிடலாம் என்னும் பேராசையோடு, ஆரியப்பிராமணர்கள் தங்களையும் "பார்ப்பனர்கள்" என்று அழைக்கத் துணிந்தனர்.
   இத்தகைய ஆரியப் பிராமணர்களைத் திருக்கோயில் பூசனை செய்ய அனுமதித்தால், போர்புரிந்து நாட்டைக்காக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதி வரும்; நாட்டில் பெரும் பஞ்சம் வந்து சேரும் என்று சிவபெருமானின் அருள்பெற்ற நந்தியம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான். எனவே அத்தகைய தவறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது திருமூலர் அருளிய பத்தாம் திருமுறையாம் திருமந்திரம் ஆய்ந்து சொல்கின்றது.
   பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
   போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
   பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
   சீர்க்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே. : திருமந்திரம்-519.
   திருமூலர் போன்ற தமிழ்ப் பண்பாட்டுப் புரவலர்களின் வழிகாட்டுதல் மூலம் தமிழகக் கோயில்களும், தமிழர்களும் ஆரியப் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி அடிமைபடாமல் தப்பிவிட்டனர். எனவே, நம் அண்டை மாநிலமான கேரளம்போல அல்லாமல், தமிழக சமூக அரசியல், ஆரியப்பார்ப்பனர்களின் தாக்கத்தில் சில-பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியப்பார்ப்பனர்களால் செல்வாக்குடன் வாழ முடிந்ததே தவிர, தமிழர்களை முழுமையாக அடிமைகொள்ள இயலவில்லை.
   'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில்  பெண்ணியம்' குறித்து அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம்!
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
    
   குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
 • Topics

 • Posts

  • யாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா? சாகடிக்கப்படுகிறதா? ந.லோகதயாளன். November 29, 2020 2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்கு கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போதைய அரசினால் இரகசியமான முறையில் முழுமையாக மூடுவது கண்டும் அரசோடு ஒட்டி நிற்போர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர் . இலங்கையின் சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலைய 2019-10-17 மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பித்து வைக்கையில் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பெரும் முயற்சியின் அறுவடை ஒன்று அன்று பெறப்பட்ட மகழ்ச்சி நிச்சயம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா அப்போதைய இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கத்திடம் முதன் முதலாக கோரிக்கை விடுத்தார். குறித்த கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும் என கூறிய அவர் அந்த கோரிக்கையினை உரிய முறையில் இந்திய அரசுவரை கொண்டு சென்றார். அதன் பின்பு இந்தியப் பிரதமர்வரை குறித்த விடயம் கூட்டமைப்பால் கொண்டு செல்லப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்து அதற்கான உத்தேச செலவு மதிப்பீட்டினையும் மேற்கொண்டபோதும் அப் பணிகள் யாவும் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்றன. இந்த நிலையில் இரு அரசு தொடர்பு பட்ட பணிகள் என்பதனால் நீண்டகாலம் இரகசியம் காக்க முடியவில்லை. அதனால் 2015இன் இறுதியில் விடயம் வெளிவந்தமையும் அப்போதைய மைத்திரி அரசும் ஆரம்பத்தில் பச்சைக்கொடியே காட்டியது. இருப்பினும் குறித்த விடயம் கொழும்பு அதிகாரிகள் மட்டத்திற்கு சென்ற சமயம் பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டது. தெற்கில் முட்டுக்கட்டை இட்டதன் நோக்கம் தெற்கின் பொருளாதாரம் நலிவடைந்து வடக்கு பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் என்ற எண்ணப்பாட்டிலாகும்.அதனையே தற்போதைய அரசு மாறி எண்ணுகின்றது. அதாவது தெற்கின் பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு போட்டியாக வடக்கின் பொருளாதாரமும் வளரக்கூடாது என எண்ணுகின்றது. 2015இன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் விமான நிலைய அபிவிருத்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். இதற்கான முன்னெடுப்பு மாவை.சேனாதிராஜா மட்டுமன்றி எம்.ஏ.சுமந்திரனாலும் முன்கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்திய அரசு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து இந்தியா அதற்கான ஆயத்தப் பணிகளை முன்கொண்டு சென்றது. இவ்வாறு முன்னெடுத்த காலத்தில் யாழில் இருந்த இந்தியத் துணைத் தூதர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலாலி விமான நிலையத்தை 3 தடவைகள் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து அபிவிருத்திக்கான பணியை முன்னெடுத்து இந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்க எண்ணி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலமையில் ஓர் குழு பலாலி விமான நிலையம் வந்து ஆய்வில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட சமயம் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் ஓர் கருத்தினை வெளியட்டார். அதாவது விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் அப் பகுதி மக்களின் நிலம் முழுமையாக இராணுவம் அபகரிக்கும் சாத்தியமே உள்ளது என்றார். இருப்பினும் அருகில் உள்ள குறுகிய நிலத்துடன் மட்டும் இந்தியாவிற்கான சேவையே ஆரம்பிக்க முடியும் என தீபக் சாஸ்திரி தலமையிலான குழு அறிக்கையிட்டது. இந்த நிலையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. அதாவது பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து யாழில் இருந்து நேரடி சேவைகளை மேற்கொண்டால் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருமானத்தில் வீழ்ச்சியடைவதோடு அதனை அண்டித் தொழில் புரியும் தெற்கின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படும் என காரணம் காட்டி பணிக்கு தடை விதிக்கப்பட்டதோடு இந்தியா இதற்கான பணியை மேற்கொள்வதனால் முழுமையாக தமது வருமானம் இழக்கும் எனவும் தெரிவித்தனர். இதனால் குறித்த பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டும் நிறைவடைந்து 2018ஆம் ஆண்டிலும் பணி முன்னெடுக்கும் சாத்தியம் அற்றே கானப்பட்டது. இதனால் இலங்கை சிவில் விமான சேவை அதிகாரிகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை பிரதமர் தலமையிலான அரசிற்கு ஏற்பட்டது. ஏனெனில் பிரதமருக்கு ஆட்சியை தொடர கூட்டமைப்பு தேவைப்பட்டது. கூட்டமைப்போ பலாலி விமான நிலையம் வந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பிரதமர் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வாக்குறுதி வழங்கியதோடு பணியை தொடர அனுமதிக்குமாறு சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை கோரினார். இதனையடுத்து சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தாலும் இந்திய அரசின் நிதியில் முன்னெடுத்தால் தமது பிடி தளர்வடையும் எனக் கருதினர். இதனால் வேறு வழியின்றி முதல் கட்டமாக இலங்கை அரசின் பணத்திலேயே குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணியை ( அதாவது தற்போது இடம்பெற்றவை ) மேற்கொள்வது எனவும் இரண்டாம் கட்டமாக இடம்பெறும் பாரிய அபிவிருத்திக்கு இந்திய அரசின் உதவியை பெறவும் பிரமர் இணக்கம் தெரிவித்து அதற்கான ஆணையை வழங்கினார். அந்தளவிற்கு கூட்டமைப்பு ரணில் அரசிற்கு தேவைப்பட்டது. இலங்கையின் 5வது சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை யாழ்ப்பாணம் விமான நிலையம் பெற்றுக் கொண்டது. இதனையடுத்து 2019ம் ஆண்டு யூலை மாதம் முதல் 2.26 பில்லியன் ரூபா செலவில் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2019-10-17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்ட சமயம் உலகில் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்தபோது இலங்கையிலும் பரவியது இதனால் கடந்ந மார்ச் மாதம் சர்வதேச விமான நிலையங்கள் பூட்டப்படும்போது கட்டுநாயக்காவுடன் பலாலியும் மூடப்பட்டது. ஆனால் கட்டுநாயக்கா மெல்ல மெல்ல வழமைக்கு திரும்புகின்றது. யாழ்ப்பாண விமான நிலையமோ மெல்ல மெல்ல முழுமையாகவே கைவிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு விட்டனர். இங்கிருந்து பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும் மத்தளவிற்கும் நகர்த்தப்படுகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நிரந்தர மூடு விழா வைக்கப்படுகின்றது. இதனை மேலும் உறுதி செய்வதுபோல் கொரோனாவிற்காக மட்டுமே மூடியிருப்பின் பலாலி விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசு 300 கோடீ ரூபாவை வழங்க தயாரகவே உள்ளது. விமான சேவை இடம் பெறாத காலத்தில் பணியை இலகுவாக ஆரம்பிக்க முடயும் ஆனால் இலங்கை அதிகாரிகளோ இப் பணியை மேற்கொள்ள பின் அடிப்பதன் மூலம் விமான நிலையத்தை நிரந்தரமாக மூட இடம்பெறும் சதி நிரூபணம் ஆகன்றது. இந்த நேரத்தில்கூட தமிழ் மக்களின் வாக்கில் தேர்வாகி அரசிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். ஏனெனில் விமான நிலையத்தை கூட்டமைப்பு முயற்சித்து பெற்றதற்காகவா என்றே என்னத் தோன்றுகின்றது. #யாழ்சர்வதேசவிமானநிலையம் #பலாலிவிமானநிலை   https://globaltamilnews.net/2020/153718/      
  • சுமந்திரனின் மாற்றம்... -கபில் “ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்” மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015    ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி மாற்றத்துக்கு இடையில் கிடைத்த ஜனநாயக வெளிக்குள், மாவீரர்நாள் நிகழ்வுகள் பகிரங்கமாக- அரசபடைகளால் இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களிலேயே நடத்தப்பட்டன. அது தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு ஆறுதலை கொடுத்தது.  குறிப்பாக  உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது.   தோல்விச் சுமைக்குள் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு, அதிலிருந்து வெளியேறும் மிடுக்கையும் தந்தது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், மாவீரர் நாளை துயிலுமில்லங்களில் தலைமை தாங்கி நடத்த முயன்ற பின்னர் தான், எல்லோரும் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். அந்த இடத்தில்அவர்கள் அவ்வாறு முன்னேசெல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது. எனினும்,அப்போது கடும் விமர்சனங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னர், துயிலுமில்லங்களில் அவர்கள் பெரும்பாலும் ஒதுங்கி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்போது மீண்டும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தமுறை மாவீரர் நாள்நினைவேந்தல் செயற்பாடுகள் சார்ந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக அவதானிக்கப்படுவது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடு தான். இந்த நினைவேந்தல் விடயத்தில்,பொலிசாரும், இராணுவத்தினரும், அரசாங்கமும் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது நன்றாக அறியப்பட்ட விடயம் தான். நினைவேந்தலுக்கு எதிராக- அதனைத் தடுக்கின்ற வகையிலான நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்கள் என்பது உறுதியாகவே தெரிந்தது. ஆனால்,இதுவரையில், ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான். தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுக்க முடியாது, மக்கள் துணிந்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம் என்ற அறிக்கையுடன் அவர் ஒதுங்கியிருக்கவில்லை. தானாக வந்து, நீதிமன்றங்களில் முன்னிலையாகி தடைகளுக்கு எதிராக வாதிட்டார். ஆனாலும், அவரால், நீதிமன்றக் கட்டளைகளை மாற்ற முடியாமல்போனது.  இது அவர் ஒரு சட்டத்தரணியாக செய்த வேலைதான். சுமந்திரன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும், சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் போராளிகள் பலரையும் நீதிமன்றங்களில் வாதாடி விடுவித்திருக்கிறார்.  அதுபோன்று, தொழில்சார் முறையில்தான் அவர்,வழக்குகளின் முன்னிலையானாரே தவிர, உணர்வு ரீதியான விருப்புடன் வரவில்லை என்று கூறுபவர்களும் உள்ளனர். எது எவ்வாறாயினும், இத்தகைய விமர்சனங்களைக் கடக்கும் வகையில்தான், சுமந்திரன், கடந்த21ஆம் திகதி கப்டன் பண்டிதரின் இல்லத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். இது தமிழ் அரசியல் பரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுமந்திரன் அரசியலுக்கு வந்த பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் கூட, அவர் காணப்படவில்லை. அவ்வாறான ஒருவர் மாவீரர் ஒருவரின் இல்லத்துக்குச் சென்று, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்வை அவர் மறைக்க விரும்பவில்லை, அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார். இதன் ஊடாக அவர், ஏதோசில செய்திகளை கூற முனைந்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சுமந்திரனின் மீது வெறுப்படைந்திருந்த பலருக்கும், அவரது இந்த நடவடிக்கை இன்னும் சீற்றத்தை ஏற்படுத்தியது. வேறு சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர் இதனை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது. நினைவேந்தலுக்கான உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று சுமந்திரன் அறிக்கை வெளியிட்ட போது, அவர் அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒதுங்கியிருக்காமல், முன்னால் வந்துதானும் பங்கெடுத்து மக்களுக்கு தெம்பூட்டவேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார். ஆனால், கப்டன்பண்டிதரின் வீட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன், மாவீரரின் நினைவேந்தலுக்கு வந்ததை கேள்விக்குட்படுத்தினார். இதுபோன்ற அரசியல் தர்க்கங்களுக்கு மத்தியில் சுமந்திரனின் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியஒன்றுதான். அவர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும், தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்று, அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அந்த நிலையில் இருந்து பார்த்தால், அவர் இப்போது வந்திருப்பது அரசியல் நலனுக்கானதா என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரன், ஒரு முழுமையான தமிழ்த் தேசியவாதியாக இருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டவர்கள், இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கமுன்வந்து, அதனை நெருங்கி வரும்போது எட்டி உதைக்க முனைவதும் சரியானதா என்ற கேள்விகளும் உள்ளன. இந்த இடத்தில் அரசியல் நலன்களை சுமந்திரன் எதிர்பார்க்கவில்லை என்று கூறமுடியாது. கடந்தபொதுத்தேர்தலில் சுமந்திரன் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சிக்குள்ளேயும், கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்குப் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் கூட அவர், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருந்தார். ஆக, தேர்தல் பின்னடைவுகளின் விளைவாக அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என, கருதுவதற்கு இடமில்லை. திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர் நினைவேந்தலுக்கும் நீடிக்கப்பட்டதன் மூலம், தான் சுமந்திரன் இந்த அரங்கிற்குள் வரும்நிலை ஏற்பட்டது. சுமந்திரனின் வருகை தனியே, தமிழ் மக்களை கவருவதற்கானதாக மாத்திரம் எடுத்துக் கொள்ள முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி என்று சரத் பொன்சேகா அடையாளப்படுத்தியது போன்று, சுமந்திரனை அடையாளப்படுத்த முடியாது. காரணம் அவரது தனிப்பட்ட அரசியல் வழிமுறை அவ்வாறானது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடும்போக்கை வெளிப்படுத்துபவர், சுமந்திரன் மென்வலு அரசியல் செய்பவர். ஆனாலும், அவரையும் கடும்போக்கு அரசியலை நோக்கித்திரும்பும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம். இதுதான், ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையா?   https://www.virakesari.lk/article/95564    
  • Blue Mountainsற்கு கடந்தவருடம் ஊரிலிருந்து வந்திருந்த எனது சகோதரியுடன் எங்களைப்போல மூன்று சகோதரிகளாக ஆனால் குன்றுகளாக மாறிவிட்ட Three Sisters பார்க்க போயிருந்த போது, Echo point என்ற உயரமான இடத்திலிருந்து பார்த்த பொழுதான் காடுகளின் அடர்த்தியும் தொலைதூரம் வரை பரந்துவிரிந்து இருந்த Blue Mountainsம் தெரிந்து..  ஆனால் Ku-rin-gaiல் உயரமான இடத்திலிருந்து பார்க்க நேரம் போதாமையால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது அலுவலக நண்பர் Blue Mountainல்தான் இருக்கிறார்.. அவர் முன்பு ஒரு முறை கூறியிருந்தார் இந்த மாதிரி போகும் பொழுது ஒரு தடியை கொண்டு போகவேண்டும் என்று.. சறுக்கி விழந்து எழும்பாமல் ஊன்றி இறங்க ஏற வசதியாக இருக்கும் அதே நேரத்தில் தடியினால் தட்டிக்கொண்டு போனால் சத்தத்தில் இவைகள் ஓடிவிடும் என்று..  இங்கே கோடைகாலத்தில் காட்டுத்தீ பயம் இருப்பதால் குளிர்கால முடிவில் அல்லது இளவேனில் கால ஆரம்பத்தில்தான் போவதுண்டு..  
  • நினைவேந்தல் உள்ளதா உரிமை? -என்.கண்ணன்  “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்”  “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை”   தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினைவேந்தல் செய்வது உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை, அடிப்படை உரிமையும் கூட. எதிரியாக இருந்தாலும், இறந்த பின்னர் அவனது உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும், உடலத்தை மரியாதையாக கையாள வேண்டும், அதனை அடக்கம் செய்ய வேண்டும் என்கின்றன சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும், போர்ச் சட்டங்களும், இவ்வாறான நிலையில், போர் ஒன்றில் உயிர் நீத்தவர்களை நினைவில் கொள்ளுதல், அவர்களுக்காக தீபம் ஏற்றுதல், மலர் வளையம் வவைத்து அஞ்சலி செலுத்துதல் என்பன சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்நீத்தவர்களை நினைவில் கொள்ளும் சர்வதேச நிகழ்வுகள் இப்போதும் நடத்தப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில்  நவீன வரலாற்றுக்கு முன்னரே, போரில் உயிர் துறந்தவர்களை நினைவில் கொள்ளும் மரபு ஒன்று இருந்தது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனை, போரில் தோற்கடித்த துட்டகெமுனு, எல்லாளனின் சமாதியை அனைவரும் வணங்கி விட்டே செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். இவ்வாறான ஒரு மரபை பேணி வந்த இலங்கையில் தான், துட்டகெமுனுவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்கள், மாவீரர்களை நினைவு கூரும் மரபை தமிழர்களிடம் இருந்து அழிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் உரிமையை மறுத்து விட்டால், அதனை தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற தப்புக் கணக்கை அவர்கள் திரும்பத் திரும்பப் போட்டுக் கொள்கிறார்கள். அதேவேளை, நினைவேந்தல் உரிமை தொடர்பாக இந்தமுறையும், சர்ச்சைகள் எழுந்தபோது, அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், போரில் உயிரை இழந்த உறவுகளை நினைவு கூருகின்ற உரிமை தமிழர்களுக்கு உள்ளது என்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள். சர்வதேச சட்டங்களிலும், பிரகடனங்களிலும் இதற்கான உரிமைகள் உள்ளன என்ற இரா.சம்பந்தன் முதற்கொண்டு.எம்,ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் கூறியிருந்தார்கள். சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் கடந்த வாரம் கேசரி வார இதழில் எழுதியிருந்த பத்தியில், இந்த நினைவேந்தல் மறுப்பானது, ஒரு அடிப்படை உரிமை மீறல், கலாசார உரிமை மீறல், உள ஆற்றுப்படுத்தல் உரிமை மீறல், இணக்க அரசியல் மீறல்என பல மீறல்களை உள்ளடக்கியுள்ளதுஎன்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அதாவது. நினைவேந்தல் உரிமை மறுக்கப்படுவது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை மீறல் என்பது சட்டத்துறையில் விற்பன்னர்களான அரசியல் தலைவர்கள் பிரமுகர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனாலும், சட்டரீதியாக - சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையாக கூறப்படும், நினைவேந்தல் உரிமை, தமிழர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இந்த உரிமையை மறுப்பது இதுதான் முதல் முறையல்ல. இப்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பதவியில் இருந்த 2015ஆம் ஆண்டு வரையிலும் இவ்வாறான நிலை தான், காணப்பட்டது. கடந்தமுறை கூட பலத்த சந்தேகங்கள், கேள்விகளுடன் தான் நினைவேந்தலை நடத்தக் கூடிய நிலை இருந்தது. இந்தமுறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை போட்டது தொடக்கம், திலீபன் நினைவேந்தலைத் தடை செய்யும் கட்டளைகள் பெறப்பட்டது வரை – நடந்த சம்பவங்கள் எல்லாமே, மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியிருந்தன. ஆனாலும், திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை. நினைவேந்தலுக்கு சட்டரீதியான உரிமை உள்ளது என்றால், அதனை சட்டரீதியாக பெறுவதற்கு முயன்றிருக்க வேண்டும். நாட்டின் உயரிய நீதிமன்றங்களை நாடியிருக்க வேண்டும். நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்தும் கட்டளைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மாவீரர் நாள் நெருக்கும் வரை- இன்னும் சொல்லப் போனால், பொலிஸார் தடை ஆணை கேட்டு நீதிமன்றங்களை நெருங்கத் தயாராகும் வரை சட்டரீதியாக எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவேந்தும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதனை அறிக்கைககளின் ஊடாக தெரிவிப்பதை விட, சட்டரீதியாக உள்ள உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வது தான் முக்கியமானது.  அதுதான் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. ஆனால் தமிழ்த் தலைமைகளும், கட்சிகளும் அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. கடைசி நேரம் வரை அவர்கள், நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம், அவர்களின் கவனம் நினைவேந்தல்களில் இருந்து திருப்பப்பட்டு. நீதிமன்ற வழக்குகளின் மீது, கவனம் செலுத்தும்நிலைஉருவானது. இதனை அரசாங்கமும், பொலிஸாரும் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகின்றனர். அதனை தமிழ்த் தலைவர்கள் யாரும் உணர்வதாகவே தெரியவில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் இந்த உரிமையை அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். நினைவேந்தலுக்கான உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என சர்வதேச சட்டங்களை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்கள், அந்தச் சட்டங்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கு அந்த உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதன் முறையானது. இனப்படுகொலை நடந்ததா- இல்லையா என்று ஆதாரத்தை நிரூபிக்குமாறு கேட்பது போன்று இந்த விடயத்துக்கு பெரிதாக எந்த ஆதாரங்களும் தேவையில்லை. தமிழ் மக்களின் தொன்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் போன்று, இதற்கு ஆதாரங்களைள தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கமே இந்த உரிமை கிடையாது என்று கூறுகிறது. இதற்கு தடைவிதிக்குமாறு கோரி நீதிமன்றக் கட்டளைகளையும் பெற்றிருக்கிறது. ஆக அரசாங்கத்தினதும், நீதிமன்றங்களினதும் கட்டளைகள் உத்தரவுகளை வைத்துக் கொண்டே இந்த உரிமை மறக்கப்படுகிறது என்பதை சர்வதேச முறையீடுகளுக்கு கொண்டு செல்ல முடியும். வெறுமனே இந்த முறையீடுகளை அறிக்கைகளாக கொடுப்பதில் இருந்து விலகி, மாற்று வழிகளில் இந்த உரிமைகளை நிலைநாட்ட முனைய வேண்டும். அவ்வாறான முயற்சிகளில் ஏன் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் யாருமே சிந்திக்கவில்லை. எவ்வளவு காலத்துக்குத் தான் சர்வதேச சட்டங்களில் உள்ள உரிமை மறுக்கப்படுகிறது என்று அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அறிக்கை அரசியலில் இருந்து விலகி அவர்கள், வெளியே வர வேண்டும், ஏற்றுக் கொள்ளப்படட நியமங்களின்படி தமிழர்களுக்கு உரிமைகள் உள்ளனவென்றால், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது தான்தலைமைக்கு அழகு.   https://www.virakesari.lk/article/95543  
  • நீங்கள் எல்லாம் வசதிக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்கள். ஒரு வேளை சுமந்திரனை துரோகி என்பீர்கள். உங்களுக்கு வசதிப்படும்போது அவர் சொன்னதை கேளுங்கள் என்பீர்கள். இதெல்லாம் பச்சோந்தி செய்யும் வேலைகள். இத்தகு மேல் எழுத ஒன்றுமில்லை.😜 சிலருக்கு பதில் தெரியாவிடடாள் , புதுசு புதுசா யோசிப்பார்கள். உண்மை சுடத்தானே செய்யும். 😜
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.