Sign in to follow this  
நவீனன்

பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்

Recommended Posts

பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்

 
 
அரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டாபடத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD Image captionஅரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டா

"நீயே உந்தன் சிறகு, வானமாக மாறு, உயரமாக பற

நாளைக்கு அல்ல, இன்றைக்கே, உயரமாக பற"

மேற்கண்ட வரிகளை பாடிக்கொண்டே 23 வயதாகும் கீதர் மிஸ்கிட்டா, 21 வயதாகும் அரோஹி பண்டிட் ஆகிய இரண்டு இளம்பெண்களும் விமானத்தில் உலகை வலம்வரும் தங்களது பயணத்தை பஞ்சாபிலுள்ள பாட்டியாலா விமான தளத்திலிருந்து கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர்.

பொதுவாக தரையிலிருந்து வானத்தை பார்க்கும்போது மக்கள் விண்மீன் கூட்டத்தை பற்றி நினைப்பார்கள்.

ஆனால், இந்த இரண்டு இளம்பெண்களும் தலைகீழாக அதாவது, வானத்திலிருந்து பூமியை அதுவும் 100 நாட்களில் பார்ப்பதற்கு புறப்பட்டுள்ளார்கள்.

அரோஹி மற்றும் கீதர் ஆகியோர் தங்களது பயணத்தை இலகுரக விளையாட்டு விமானத்தில் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தங்களது பயணத்தின்போது, உலகின் பல்வேறு இடங்களில் விமானத்தை நிறுத்துவார்கள். இவர்களது தங்கும் திட்டம், விமான நிறுத்துமிடம் மற்றும் அடுத்த இடத்தை நோக்கிய பயணம் குறித்து தரையில் இருக்கும் குழுவினர் திட்டமிடுவார்கள்.

இதில் மிக முக்கியமான விடயமே, இந்த திட்டத்திலுள்ள அனைத்து தரை ஊழியர்களுமே பெண்கள்தான்.

அரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டாபடத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD Image captionஅரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டா

திட்டமிட்டபடி அனைத்தும் நடக்கும்பட்சத்தில், இலகுரக விமானத்தில் உலகையே சுற்றிவந்த முதல் இந்திய பெண்கள் என்று இவர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.

இதுபோன்றதொரு முயற்சிகள் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதில்லை.

'மஹி' என்பது என்ன?

இந்த சுற்றுப்பயணத்துக்கு தாங்கள் பயன்படுத்தும் விமானத்துக்கு 'மஹி' என்று இந்த இளம்பெண்கள் பெயரிட்டுள்ளனர்.

தங்களது விமானத்திற்கு இவர்கள் மஹி என்று பெயரிட்டதிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீதான ஆர்வம் காரணமா என்று இந்த திட்டத்தின் இயக்குனர் தேவ்கன்யா தாரிடம் கேட்டபோது, "இந்த விமானத்தின் பெயருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சம்ஸ்கிருத வார்த்தையான இதற்கு, பூமி என்று பொருள்" என்று அவர் கூறுகிறார்.

மாருதி நிறுவனத்தின் பலேனோ காரின் இன்ஜினுக்கு சமமான அளவு திறன் கொண்ட இந்த விமானம், ஒரு மணிநேரத்திற்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.

இந்த விமானத்தில் அதிகபட்சம் 60 லிட்டர் எரிபொருளை மட்டுமே நிரப்ப முடியும் என்பதால், ஒரே சமயத்தில் நான்கரை மணிநேரம் மட்டுந்தான் பறக்க முடியும்.

பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் இரண்டு இளம் பெண்கள்படத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD

இலகுரக விளையாட்டு விமானமான மஹியில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். அதாவது, ஒரே ஆட்டோவின் இருக்கை போன்றே இதன் அளவும் இருக்கும்.

மேலும், எதிர்பாராத சம்பவம் ஏதாவது நிகழும் பட்சத்தில் விமானத்திலிருந்து குதித்து தப்புவதற்கு இதில் பாராசூட் உள்ளது.

அரோஹி மற்றும் கீதரின் வாழ்க்கைப்போக்கு

திட்டமிட்டபடி இந்த சுற்றுப்பயணம் நடக்கும்பட்சத்தில், இவர்கள் இருவரும் மூன்று கண்டத்திலுள்ள 23 நாடுகளை 100 நாட்களில் சுற்றிவிட்டு நாடு திரும்புவார்கள்.

பாட்டியாலாவிலிருந்து கிளம்பிய இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், ரஷ்யா, கனடா, அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஐரோப்பா வழியாக பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் இரண்டு இளம் பெண்கள்படத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD

இந்தியாவில் இலகுரக விளையாட்டு விமானத்தை இயக்குவதற்கான உரிமத்தை பெற்ற முதல் இருவர் இவர்கள்தான். இவர்கள் இருவருமே மும்பை பிளையிங் கிளப்பில் விமான போக்குவரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

தற்போது 22 வயதாகும் அரோஹி தனக்கு நான்கு வயது ஆகியிருக்கும்போதே விமானியாக வேண்டுமென்று கனவு கண்டார்.

நான்கு சகோதரிகளில் மூத்தவரான கீதர் தொழில் செய்து வருகிறார். கீதர்தான் அவரது குடும்பத்தின் முதல் விமானி ஆவார்.

இருவரும் தங்களது சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடல்களை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினர்.

பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் இரண்டு இளம் பெண்கள்படத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD

'வீ'' என்னும் குறிக்கோள்

இந்த ஒட்டுமொத்த சுற்றுப்பயணத்துக்கு 'வீ' அல்லது 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சாதனை பயணத்துக்கு 'பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ' என்ற திட்டத்தின்கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆதரவு வழங்கியுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்த சுற்றுப்பயணத்தின் இயக்குனரான தேவ்கன்யா தார், "பெண்களது சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை பறந்துகொண்டே பறைசாற்றுவதைவிட வேறு சிறந்த வழி இருக்காது" என்றும் அவர்கள் செல்லும் நாடெல்லாம் 'பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ' திட்டம் குறித்து பிரசாரம் செய்வார்கள் என்றும் கூறினார்

பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் இரண்டு இளம் பெண்கள்படத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD

இந்த சுற்றுப்பயணத்தினால் சாதிக்கப்போவது என்ன?

"இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இளம்பெண்களின் வாழ்க்கையே ஊக்கமளிக்கக்கூடியதுதான். இவர்களிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு இந்தியா முழுவதுமுள்ள 110 நகரங்களை சேர்ந்த இளம்பெண்களுக்கு விமானப்போக்குவரது குறித்து பயிற்சி அளிக்கப்படும்" என்று தேவ்கன்யா மேலும் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-45036150

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this