Jump to content

முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!!


Recommended Posts

முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!!

 

 

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

20180802105520_IMG_5814.JPG

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு பொது சந்தை வழியாக நகரை அடைந்து அங்கிருந்து மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது.

20180802115340_IMG_5935.JPG

நீரியல் வள திணைக்கத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் சட்டவிரோத மீன் பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.

20180802105528_IMG_5818.JPG

அத்தோடு நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என நீண்ட நேரமாக திணைக்களத்தின் முன்னால் கோஷங்களை எழுப்பியவாறு காத்திருந்தனர்.

நீண்ட நேரமாக காத்திருந்தும் உதவி பணிப்பாளரோ அல்லது ஏனைய திணைக்கள அதிகாரிகளோ தங்களை வந்து சந்திக்காமையினால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குல் நடத்தினர்.

20180802105349_IMG_5808.JPG

தாக்கதலில் திணைக்கள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதோடு சுற்று வேலியும் முற்றாக உடைந்தது.

20180802110601_IMG_5831.JPG

20180802110725_IMG_5838.JPG

20180802114411_IMG_5911.JPG

IMG_20180802_115157.jpg

இதனைத் தொடர்ந்து அதிகளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் திணைக்களத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

20180802114855_IMG_5924.JPG

20180802114850_IMG_5923.JPG

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்த ராசா, மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் நீரியல் வள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

20180802113216_IMG_5889.JPG

ஆர்ப்பாட்டக்காரர்கள் திணைக்களத்தின் முன்னால் பந்தல் அமைத்து தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

20180802114909_IMG_5931.JPG

 

 

http://www.virakesari.lk/article/37709

Link to comment
Share on other sites

சுருக்குவலையை தற்காலிகமாக தடைசெய்யுமாறு உத்தரவு!

 

 

முல்லைத்தீவு மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

vavuniya.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் குறிப்பாக சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய கடற்தொழிலாளர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சனைகள் குறித்து எதிர்வரும் 08.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலக மண்டத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்கூட்டத்திற்கு கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் மீனவ அமைப்புக்களை சார்ந்த 10 பிரதிநிதிகளை கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்று உரிய தீர்மானம் எடுக்கும் வரை மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/37727

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களம் மீது தாக்குதல் ; விசாரணைகள் ஆரம்பம் 

 

 

முல்லைத்தீவு கடற்கரைவீதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

IMG_5843.JPG

சட்டவிரோத கடற்தொழிலை தடைசெய்யுமாறும் முல்லைத்தீவு கடற்பரப்பில்  சுருக்குவலைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை இரத்துசெய்யுமாறுகோரியும் நேற்றையதினம் முல்லைத்தீவு நகரில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

IMG_5868.JPG

மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தினை முற்றுகையிட்டு தமதுகோரிக்கையினை ஏற்று நடவடிக்கையை எடுக்குமாறு கோஷங்களை எழுப்பினர். தம்மை நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் சந்திக்கவேண்டும் என திணைக்கள வாயிலில் காத்திருந்த நிலையில் பலமணிநேரமாக எவரும் சந்திக்காதநிலையில் ஆத்திரமடைந்த மீனவர்கள் சுற்றுவேலிகளை உடைத்துக்கொண்டு உள்ளேசென்று திணைக்களம் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் .இதனால் திணைக்களத்தின் சொத்துக்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

IMG_5909.JPG

இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளரால் முல்லைத்தீவு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

IMG_6001.JPG

இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் . இதன்பிரகாரம் நேற்று மாலை கிளிநொச்சியில் இருந்து வருகைதந்த தடயவியல் பொலிஸார் திணைக்கள கட்டடத்தை பார்வையிட்டு விசாரணைக்கான தடயங்களை பதிவுசெய்துள்ளனர்.

IMG_6005.JPG

http://www.virakesari.lk/article/37745

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.