வணக்கம் தாய்நாடு.... யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!!
யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!!
வடக்கு கிழக்கில் தமிழரின் மிகப்பெரிய சொத்தாக நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த வாழைச்சேனை காகித ஆலை திட்டமிட்டமுறையில் மூடப்படபட்டுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் இருந்து உதயமாகின்ற மற்றொரு தொழிற்சாலை இது.
வடக்கு கிழக்கில் சேகரிக்கப்படும் கழிவுக் கடதாசிகளை மூலப்பொருட்களாகக்கொண்டு இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் காகித உற்பத்திகள் வடக்கு கிழக்கிற்கான முழு காகிதத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையிலும், பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் வகையிலும் எதிர்காலத் திட்டமிடல்களுடன் இந்த காகித ஆலை மிளிர இருக்கிறது.
யாழ் மண்ணில் சுமார் 50 வருடங்களாக இருந்து வந்த கனவு இன்னும் ஓரிருதினங்களில் நனவாக இருக்கின்றது
IBC தமிழின் முதலீட்டில் யாழ்பாணத்தின் இந்த முதலாவது காகித உற்பத்தித் தொழிற்சாலை எதிர்வரும் ஆகஸ்ட் மதம் 22ம் திகதி திறந்துவைக்கப்பட இருக்கிறது.