Jump to content

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்


Recommended Posts

மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதிஊர்வலம் - தி.மு.க தலைமைக்கழகம் அறிவிப்பு! #Karunanidhi

 

தயார்நிலையில் சந்தனப்பேழை

19_13338.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை தயார்நிலையில் உள்ளது. அதில், ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்

9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.

16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது 
கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை 
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் 
அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் 
அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் 
கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 
வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, 
பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் 
கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று 
(இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே 
தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் 
கொலைபழியை சுமந்தது கலைஞர்.

76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னபோது, கழகத்தின் 
மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் கலைஞர்

76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்.

77. உழவர் சந்தை தந்தது கலைஞர் .

78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !

79. தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டுவந்தவர் கலைஞர் !

80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர் !

81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர் !

82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு 
மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் !

83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது 
கலைஞர்.

84. திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை 
அழித்தவர் ஜெயலலிதா)

85. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் 
தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் 
படுத்தியவர் கலைஞர் !

86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie 
University) 

87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம். 

89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)

90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் 
ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.

91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)

93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம். 

94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை 
மற்றும் ஆராய்ச்சி மையம்.

95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், 
துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் 
போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின... 

96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம். 

97. 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை """"சூப்பர் 
ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.

98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று  இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் 
சாலைக்கான துவக்கம்.

100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம். 

101. 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
 
102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக 
மாற்றிட அனுமதி. 

103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி. 

104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம். 

105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 

106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய 
குளிர் உருட்டாலை உருவாக்கம்.

108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் 
செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், 
நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..

109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 
கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.

111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில் 
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..

113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன 

114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி 
செயல்படுத்தியது கலைஞர்

115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் "பவானி 
அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்

116. சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம், 
நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம், 
அண்ணா நூற்றாண்டு நூலகம்.... இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..

117. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா.... 
இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...

118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய 
நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள் 
துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...

119. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், 
நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை 
கொண்டுவந்ததும் திமுகதான்...

120. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில் 
வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் 
உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..

121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை 
மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..

122. தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்... 
தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக 
ஆட்சி.. அதின் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு.. 
GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு 
முன்னிலை வகிக்கிறது..

123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது 
திமுக ஆட்சியில்..

124. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று 
குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..

125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம் 
ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு 
பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..  

இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...  

உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 1960 
இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது...

 

கலைஞரில் எமக்கு 100முரண்பாடுகள் இருக்கலாம் அவரால் தமிழக மக்களும் தமிழகமும் கண்ட நன்மைகள் ஆயிரம்....

இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ்தலைவரான அவரிற்கான பிரியாவிடையை சிறந்த முறையில் கொடுத்து எங்களிடமும் மனிதம் இருக்கிறது என்பதை காட்டுவோம் 

இவை  அனைத்தும்  கலைஞர்  இல்லாதுவிட்டாலும் கிடைத்துத்தானிருக்கும்

இன்னும் அதிகமாக...

கீழே  உள்ளவற்றையும் சேர்த்து....

2 hours ago, kanneer said:

திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .

1f449.png? இன்னும் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் திமுகவுக்கு

1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு

14. பண்ணை வீடு

15. எழிலரசி பண்ணை வீடு

16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு

17. மெட்ராஸ் போட் க்ளப்

18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்

19. ராயல் கேபில் விஷன்

20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்

21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\

22. சிஐடி காலனி வீடு

23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்

24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்

25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்

26. கோரமென்டல் சிமென்ட்

27. பெங்களூருவில் உள்ள வீடு

28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு

29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு

30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு

31. ரெயின்போ இன்டஸ்ட்ரி

32. முக.தமிழரசு பண்ணை வீடு

33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்

34. வெனரேடஷன் பப்ளிகேஷன்

35. டன்டாரா நிறுவனம்

36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்

37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்

38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்

39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்

40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்

41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்

42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு

43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்

44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்

48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்

49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்

50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்

51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்

52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்

53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்

54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்

55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு

56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்

58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்

59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.

60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்

61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு

62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி

63. தயா சைபர் பார்க்

64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.

65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு

66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்

67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்

68. நீலகிரி டீ தோட்டம்

69. ஊட்டி தேயிலை தோட்டம்

70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்

71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்

72. சினிமா தியேட்டர்கள்

73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.

75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்

76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்

77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்

78. எஸ்டி கொரியர்

79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்

80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்

82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்

85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்

86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்

87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்

89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்

90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்

91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்

92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்

94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்

95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்

97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்

99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்

100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்

101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்

102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்

103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்

106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.

107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்

108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்

109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை

110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்

111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்

112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்

113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்

114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு

115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்

117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்

119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்

120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்

121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்

122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்

123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்

128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்

129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்

130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.

131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.

132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.

133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்

134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்

135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்

136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்

137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்

138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்

139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்

140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை

141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை

142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை

143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)

144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்

145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி

146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்

147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்

148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்

149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்

150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்

151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்

152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்

153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்

154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்

155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்

156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்

157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்

158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்

159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு

160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு

161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு

162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு

163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்

164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு

165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி

166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்

167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்

168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்

169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்

170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி

171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்

172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்

173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்

174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி

175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்

176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்

177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்

178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு

179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance

180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்

181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்

182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1

183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3

184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A

185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்

186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்

187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்

188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்

189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்

190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்

191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்

192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்

193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்

194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்

195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்

199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்

201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்

202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்

203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்

204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது

205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி

207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி

209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி

210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி

212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி

213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்

216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு

218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு

219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்

220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656

221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023

222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்

223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்

224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்

225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு

226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்

227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்

228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி

229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்

230.

231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்

232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்

233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்

234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்

235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்

236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்

237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு

238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்

239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்

240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்

241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்

242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று

243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது

244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து

245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது

246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு

247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று

248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு

249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்

250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்

256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது

257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று

258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது

259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு

260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்

261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்

262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்

263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்

264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்

265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்

266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று

267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்

268. ப்ரியா தயாநிதிமாறன் ப?

உண்மையைச்சொன்னால்  ஏதோ  தமிழகத்துக்கு செய்கிறார்  என்று  தான்  தமிழகமும்  படுத்திருந்தது

ஈழத்தமிழருக்கு நாடகம் வைத்து பேரம்  நடந்த போது தான்

விழிப்புற்று

தோண்ட ஆரம்பித்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகங்கள் இவரைப் பற்றி கொஞ்சம்.. உசத்தலாக வாசிக்க.. மேற்குலக ஊடகம் பிபிசி.. இவர் பள்ளிக்கூடம் போகாதவர் என்பதை சொல்லுது. ஒரு பள்ளிக்கூடம் போகாத சுயநலக்காரர் கையில் ஆட்சி போனால்.. அந்த மண்ணும் மக்களும் என்னாவார்கள்.. என்பதற்கு தமிழகம்.. முள்ளிவாய்க்கால் பெரும் இன அழிப்பு சாட்சியமாகும்...

Karunanidhi (L) with his mentor CN Annadurai

  • Born on 3 June 1924 in a village in Thiruvarur district
  • A school dropout, he made a name as a screenwriter in Tamil films
  • Served as the chief minister of the southern state of Tamil Nadu five times between 1969 and 2011
  • A founding member of the DMK when the party was formed in 1949
  • Contested Tamil Nadu state assembly elections for the first time in 1957
  • Contested 13 assembly elections in total and won a seat in all of them
  • Besides film scripts, wrote stories, plays and poems
  • Popularly called Kalaingar, the Tamil word for artist, for his contribution to cinema and literature.
  • https://www.bbc.co.uk/news/world-asia-india-45108372
Link to comment
Share on other sites

`இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்' - ராஜாஜி ஹாலுக்கு முப்படை வீரர்கள் வருகை! #Karunanidhi

 

சரத்பவார், கபில்சிபில் இறுதி மரியாதை 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் மற்றும் முன்னாள் அமைச்சர் கபில்சிபில் உள்ளிட்டோர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இன்னும் சில மணித்துளிகளில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்படவுள்ளது. 

குடும்பத்தினர் கதறல் 

 

 

28_15323.jpg

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்னும் சில நொடிகளில் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி என குடும்ப உறுப்பினர்கள் கருணாநிதி உடல்முன் கண்ணீர் மல்க கதறி அழுதனர். 

 

 

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

தி.மு.க தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வாகனத்தில் அவரது உடலை வைப்பதற்காக மலர் அலங்காரங்கள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முப்படை வீரர்கள் அவரது உடலை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது.

முழுவீச்சில் கட்டட பணிகள்

25_15392.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்வதற்காக அண்ணா சமாதியில் கட்டடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமாதி கட்டடம் கட்டும் பணிகளை தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் பார்வையிடுகிறார்.

ராணுவ வாகனம் வருகை 

24_15040.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் எடுத்து செல்லப்படவுள்ள ராணுவ வாகனம் ராஜாஜி ஹாலுக்கு வந்துள்ளது.  மலர் அலங்காரத்துடன் வாகனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி 

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி டெல்லி சட்டப்பேரவையில் அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

கேரள முதல்வர், ஆளுநர் அஞ்சலி 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அஞ்சலி செலுத்தினார்.

26_15035.jpg

அஞ்சலிக்குப் பின் பேசிய கேரள ஆளுநர் சதாசிவம், ``விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களை முன்னேற்றமடையச் செய்தவர் கருணாநிதி. அவரின் இழப்பு தமிழகத்த்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே பேரிழப்பு" என்றார்.

கருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால் அஞ்சலி

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தியப் பின் பேசிய குலாம் நபி ஆசாத், ``நாட்டின் சிறந்த தலைவர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கருணாநிதி. நாடு முழுவதும் அறியப்பட்ட அவர் தற்போது நம்முடன் இல்லை. அவரின் மறைவு நாட்டுக்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய இழப்பு'' என்றார்.

ஒத்திகையில் ராணுவ வீரர்கள்

22_14463.jpg

கருணாநிதிக்கு இறுதிமரியாதை செலுத்துவதற்கான ஒத்திகையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் இதற்கான ஒத்திகையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி உடல் எடுத்து செல்லப்படவுள்ள ராணுவ வாகனம் தயார் நிலையில் உள்ளது. 

டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் திடீர் வழக்கு!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்திவைக்க உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் திடீரென மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்த முடியாது என்றும் மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளதோடு, தலைமை நீதிபதி அமர்வில் முறையிட கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

ராகுல் காந்தி, அகிலேஷ் அஞ்சலி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி ஆகியோர் மலர்வளையம் வைத்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராகுல் காந்தி- அகிலேஷ்

கூட்ட நெரிசலில் இருவர் பலி?

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

21_14498.jpg

குமாரசாமி அஞ்சலி

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க ஸ்டாலின்

20_13316.jpg

ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தொண்டர்கள் முன் ஸ்டாலின் பேசினார். அப்போது, ``இடஒதுக்கீட்டிற்காக போராடிய கருணாநிதி இறந்தபிறகும் இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றுள்ளார். முதல்வரை நேரில் சந்தித்து இடம் ஒதுக்க கோரியும் அவர் செவிசாய்க்கவில்லை. அரசு மறுத்தபோதும் நீதிமன்றம் சென்று அதனை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். கருணாநிதியின் உணர்வை நாம் வென்றெடுத்திருக்கிறோம். தொண்டர்கள் கலைந்து சென்றால் தான் திட்டமிட்டபடி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடக்கும். உங்கள் சகோதரனாக இதனை கேட்கிறேன். தயவு செய்து கலைந்துசெல்லுங்கள். அஞ்சலி செலுத்துவற்காக சுவர் ஏறி வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்" என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

ரணிலின் இரங்கல் செய்தியுடன் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய அரசியல்வாதிகள்

 

 
 

மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கையின்  முக்கிய அரசியல்  தலைவர்கள் பலர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Photo__17_.jpg

அந்த வகையில் இலங்கை அரசின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Photo__15_.jpg

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Photo__13_.jpg

அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்,

Photo__11_.jpg

அத்தோடு இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க அனுப்பிய இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி தங்களது அனுதாபங்களை தெரிவித்தனர்.

Photo__3_.jpg

 

http://www.virakesari.lk/article/38085

Link to comment
Share on other sites

கலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்

 

 
karunajpg

ஒரு பெருவாழ்வு தன் மூச்சை நிறுத்திக்கொண்டுவிட்டது! அவரது பெயர் மு.கருணாநிதி என்றாலும் மக்களுக்கு அவர் கலைஞர்தான். திருக்குவளையில் தொடங்கிய அவரின் நெடும் பயணம் அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்வது அவருக்குச் செய்யும் அவமரியாதையே.

தனது பெயரையே ஒரு போராட்ட வடிவமாக்கித் தன் பயணத்தை என்றென்றும் தொடரும் வகையில் விட்டுச்சென்றிருப்பவர் கலைஞர். அதனால்தான், அவர் செயல்பாட்டில் இல்லாத கடந்த சில ஆண்டுகளிலும் கூட திமுகவின் தலைவராக அவரையே அதிகாரபூர்வமாகவும் இதயபூர்வமாகவும் தொண்டர்கள் வைத்திருந்தார்கள்.

 

இனிமேலும்கூட அவரைத்தான் தங்கள் முழுமையான தலைவராக திமுக தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

12 வயதில் தொடங்கிய பயணம்

கடந்த ஜூன் மாதம் 95-ம் வயதில் அடியெடுத்துவைத்த கருணாநிதி அரசியலில் அடியெடுத்துவைத்து 82 ஆண்டுகள் ஆகின்றன.

ஆம்! 1936-ல் 12 வயதுச் சிறுவனாக திருவாரூரில் உள்ள பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பில் அவரைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தலைமையாசிரியர் கஸ்தூரி ஐயங்கார் கூறியபோது, “பள்ளியில் சேர்த்துக் கொள்ளவில்லையென்றால் திருவாரூர் கமலாலயம் குளத்தில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்வேன்” என்றாரே அப்போதிலிருந்து தொடங்குகிறது அவரது அரசியல்வாழ்க்கை.

10 வயதுவரை சாமி கும்பிட்டுக் கொண் டிருந்த கருணாநிதி, பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார் ஆகியோரின் தீப்பறக்கும் பேச்சுகளைக் கேட்டபின் சிறு வயதிலேயே நாத்திகர் ஆனார்! 1938-ல் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சமடைந்திருந்த கட்டத்தில் தன் வயதையொத்த சிறுவர்களைத் திரட்டிக்கொண்டு, “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்” என்றெல்லாம் முழக்கமிட்டுச் சென்றார். அந்த உணர்வுதான் தனது இறுதி மூச்சுவரை தமிழுக்கு ஆதரவாகவும், வடக்கின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் விடாமல் கொடி பிடிக்கக் கரு ணாநிதியைத் தூண்டிக்கொண்டிருந்தது. 

சமூகம் முழுமைக்குமான போராட்டம்

 “பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்று பராசக்தி படத்தில் சிவாஜி பேசிய வசனத்தைத் தன் வாழ்க்கையிலிருந்துதான் கருணாநிதி தொட்டு எழுதினார்.

வசனம் எழுதிய காலகட்டத்துக்குப் பிறகு அவர் தென்றலைத் தீண்டியிருக்கிறார். எனினும் மரணம் வரை தனது பாதையில் தீயையும் தாண்டிக்கொண்டுதான் இருந்தார். அந்தப் போராட்டம் அவருக்கான போராட்டமாக மட்டுமல்ல; ஒரு சமூகம் முழுமைக்குமான போராட்டமாகவும் இருந்திருக்கிறது.

ஒருங்கிணைந்த தஞ்சை வட்டாரத்தில் சாதிரீதியில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த சமூகங்களுள் ஒன்றைச் சேர்ந்த கருணாநிதி அரசியலுக்குள் நுழைந்ததே ஒரு அடையாள வெற்றி. அதன்பின் கட்சிக்குள்ளும் முக்கியத் தலைவராக உருவெடுத்து, அண்ணாவுக்குப் பிறகு ஆட்சியதிகாரத்தின் தலைமையில் அமர்ந்தது நம் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு செய்தி.

இன்னும், தெற்கில் இருந்துகொண்டு இந்திய அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராக, வடக்கின் ஆதிக்கத்துக்கு எதிர் எடை வைப்பவராக கருணாநிதி உருவெடுத்தது போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் அவர் எப்படிப்பட்ட அரசியல் நம்பிக்கையை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

நெருக்கடியில் நீந்தியவர்!

உச்சபட்ச அதிகாரத்தையும் பதவி களையும் அவர் தன் வாழ்க்கையில் அடைந்திருந்தாலும் இறுதிக்காலம் வரை அவர் ஏதோ ஒருவிதத்தில் போராடிக் கொண்டுதான் இருந்தார். பெரும்பான்மை இந்தியாவும் நெருக்கடி நிலையின்போது மண்டியிட்டுக்கொண்டிருந்தபோது, தன் ஆட்சி கலைக்கப்பட்ட சூழலிலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தவர் கருணாநிதி.

அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு, கண்காணிப்பும் கிடுக்குப்பிடியும் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் தனது பேனாவால் புத்திசாலித்தனமாக எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தார் கருணாநிதி.

நெருக்கடி நிலையின்போது ஏராளமான திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டனர். ‘திமுகவைச் சேர்ந்த இன்னின்ன நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்று முரசொலியில் செய்தி வெளியிட்டால் அது தணிக்கை செய்யப்படும் என்பதால் அண்ணா பிறந்த நாள் அன்று இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார்:

“அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்”! மேலும்,‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் முரசொலியில் தலைப்புச் செய்தி போட்டு தணிக்கை அதிகாரிகளையும், அரசையும் நக்கலடித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி.

நெருக்கடி நிலை காலகட்டம் தந்த நெருக்கடிக்கு அடுத்ததாக எம்.ஜி.ஆர். ஆட்சியைச் சொல்ல வேண்டும். 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதில் தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் திமுக ஆட்சியதிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறது. அத்தனை ஆண்டுகள் தானும் நம்பிக்கை இழக்காமல் தனது தொண்டர்களும் நம்பிக்கை இழக்க நேரிடாமல் திமுகவை கருணாநிதி வழி நடத்தியது பெரும் சாதனைதான். இதுவே வேறொரு தலைவராக இருந்திருந்தால் கட்சியைக் கலைத்துவிட்டு அரசியல் வனவாசம் போயிருப்பார்; அல்லது கட்சி சுக்குநூறாக உடைந்திருக்கும்.

கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தியது மட்டுமல்லாமல் ஆளுங்கட்சிக்கும் அழுத்தம் கொடுத்து மக்கள் நலனிலிருந்து அது திசை திரும்பிவிடாமல் பார்த்துக்கொண்டவர் கருணாநிதி.திராவிட இயக்கம் தனது நூற்றாண் டைச் சமீபத்தில்தான் கொண்டாடியது. கூடவே, சட்டப்பேரவையில் கருணாநிதி 60 ஆண்டுகளை நிறைவுசெய்தது, திமுக ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்தது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் நினைவுகூரப்பட்டன.

கருணாநிதி ஆட்சிக்கு வந்து 49 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் 18 ஆண்டுகள் மட்டுமே அவர் முதல்வராக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. என்றாலும், கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த வளர்ச்சியில் கருணாநிதிக்குப் பெரும் பங்கிருக்கிறது என்றால் அவர் முதல்வராக ஆற்றிய பணிகளால் மட்டுமல்ல, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய பணிகளாலும்தான்.

எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இரு வரும் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்தாலும் கருணாநிதி போட்டுவைத்த பாதையை நிராகரித்துவிட்டு அரசியல் செய்துவிட முடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்தி வைத்திருந்தார். கருணாநிதி அளவுக்கு சமூக நீதியிலும் மதச்சார்பின்மையிலும் அக்கறை கொண்டவர்கள் என்று எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் கூறிவிட முடியாது. ஆனால், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி அம்சங்களில் மேற்கண்ட இருவரும் செய்த நல்ல காரியங்களில் கருணாநிதியின் பங்கும் இருக்கிறது.

சமூக நீதியைப் புறக்கணித்துவிட்டுத் தமிழகத்தில் மக்கள் ஆதரவைப் பெற முடியாது என்று கருணாநிதி ஏற்படுத்தி வைத்திருந்த அழுத்தமே அவர்களையும் அதே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது.

karuna%202jpg

தலைசிறந்த ஜனநாயகவாதி!

ஊடகங்களை ஒரு முதல்வர் அணுகும் விதத்தை வைத்தே அவர் எவ்வளவு ஜனநாயகவாதி என்பதைச் சொல்லிவிடலாம். அந்த வகையில் கருணாநிதி மிகப் பெரிய ஜனநாயகவாதி! அவருக்கு உவப்பான கேள்விகளையல்ல, காட்டமான கேள்விகளையே ஊடகங்களிடமிருந்து எதிர்கொண்டார். அந்தக் கேள்விகளுக்குப் புன்சிரிப்பு மாறாமல் பதிலளித்தார். முதல்வராக ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பாக இல்லாமல் விமான நிலையத்தில், ரயில் நிலையங்களில், பொது நிகழ்ச்சிகளில் என்று வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னைச் சந்திக்க அவர் அனுமதித்தார்.

அடிப்படையில் அவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதும் இதற்கு ஒரு காரணம்! இப்படி ஊடகங்களால் எளிதில் அணுகும்படியாக இருந்த அவரைத்தான் ஊடகங்கள் அதிகம் விமர்சித்தன என்பது ஒரு நகை முரண்!

மாநில சுயாட்சி

சமூகநீதி விஷயங்களுக்காகத் தன் அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி காட்டிய ஈடுபாடுகளுக்குச் சற்றும் குறையாதது மாநிலங்களின் சுயாட்சிக்காக அவர் போராடியது. மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பது பிராந்தியக் கட்சிகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் போன்றவற்றை முற்றிலும் புறந்தள்ளிவிடும் என்று கருணாநிதி தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

‘எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் திமுக கூட்டணி வைத்துவிடும்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நக்கலாகச் சொல்லப்பட்டதுண்டு. எந்த வகையிலும் தமிழ்நாட்டின் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் இதைக் காணலாம். இதனால்தான், திமுகவின் சித்தாந்தத்துக்கு நேரெதிரான பாஜகவுடனான கூட்டணி ஏற்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு சற்று மென்போக்கைக் கடைப்பிடித்ததற்கு, திமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்ததும் ஒரு காரணம்.

இன்று மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தங்கள் சுய அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முழக்கத்தைத் தீவிரமான அரசியல் செயல்பாடாக கருணாநிதி மேற்கொண்டு வருகிறார். அண்ணா காலமான பிறகு பதவியேற்ற கருணாநிதி மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக 1969-ல் ராஜமன்னார் கமிட்டியை நியமித்தார். இந்த கமிட்டி 1971-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும், மாநிலங்களுக்கான வருவாயை அதிகப்படுத்த வேண்டும், மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் போன்ற மிக முக்கியமானபரிந்துரைகளை அந்த கமிட்டி வழங்கியிருந்தது.

இன்று இந்தியாவில்  மாநில சுயாட்சி பற்றி பேசுமிடங்களிலெல்லாம் ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கையே துணைநிற்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் கருணாநிதியைத் தமிழகத்துக்கு மட்டும் சொந்தமான தலைவராக அல்லாமல் இந்தியா முழுமைக்குமான தலைவராகவும் பார்க்க வேண்டி யிருக்கிறது.

சமத்துவப் போராளி

உண்மையில் இந்தியா முழுமைக்குமான தலைவர் கருணாநிதி என்றாலும் இந்தியா முழுவதும் அவர் அப்படிப் பார்க்கப்படுகிறாரா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அவருக்கு மட்டுமல்ல, பாரதியார், வ.உ.சி., பெரியார், அண்ணா உள்ளிட்ட பலருக்கும் இதே நிலைதான். இந்தியர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட ஒருவர் விந்திய மலைக்கு மேலே பிறந்திருக்க வேண்டும்! இந்த நிலைமையை எதிர்த்துதான் கருணாநிதி போராடினார்.

வடக்கைக் கீழிறக்க அல்ல, வடக்குக்கு இணையாகத் தெற்கும் கருதப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். இனவெறி, சாதிவெறி போன்றவற்றுக்கு எதிராக நடத்தப்படுவதைப் போன்றே சமத்துவத்துக்கான போராட்டம்தான் இது. பெரியார் அளித்த சுயமரியாதை என்ற சொல்லில் கருணாநிதிக்குக் கிடைத்த உத்வேகம்தான் இறுதிவரை இந்தப் போராட்டத்தை நடத்தும் துணிவை அளித்திருக்கிறது.

ஒரு பேட்டியில், “கருணாநிதி சிறு குறிப்பு வரைக” என்று அவரிடமே கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார்: “மானமிகு சுயமரியாதைக்காரன்”. இந்தச் சுயமரியாதைக்காரர் நம் அனைவருக்காகவும் போராடிவிட்டு இப்போது மரணமெனும் நிரந்தர ஓய்வுக்குள் மூழ்கிவிட்டார். சமத்துவத்துக்கான எல்லாப் போராட்டங்களும் சுயமரியாதைக்கான போராட்டங்களே.

அந்த வகையில் கருணாநிதி, நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும் சமத்துவப் போராளியும்கூட!

 

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article24629604.ece

Link to comment
Share on other sites

`கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது' - தொண்டர்கள் கண்ணீர்! #Karunanidhi

 

அண்ணா சமாதிக்கு வைகோ, திருமாவளவன் வருகை

30_16340.jpg

இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் அண்ணா சமாதிக்கு வந்துள்ளனர். 
 

 

 

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

29_15348.jpg

குடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. முப்படை வீரர்கள் அணிவகுக்க ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பெரியாரையும், அண்ணாவையும் கடந்து காயிதே மில்லத் சாலையில் பயணித்து, காமராஜர் சாலையை அடைந்து எம்ஜிஆர் சதுக்கத்தை கடந்து அண்ணனின் அருகில் உறங்கச்செல்கிறார் கருணாநிதி.
 

 

 

கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில்....

குடும்பத்தினர் இறுதி மரியாதைக்கு பின் கருணாநிதியின் உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் முப்படை வீரர்கள் எடுத்துச் சென்றனர். கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து எடுக்கப்பட்டவுடன் `தலைவா, தலைவா' என தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

 

Link to comment
Share on other sites

தன் கதையைத் தானே எழுதிக்கொண்ட கதாசிரியர்: திருக்குவளையிலிருந்து ஒரு முதல்வர்!

 

 
karunajpg

அது 1936-ம் ஆண்டு. தனக்குப் பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொன்ன அந்தச் சிறுவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார். அவரால் அச்சிறுவன் சொன்னதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை; தன்னை அனுமதிக்காத எந்தச் சட்டகத்தையும் உடைத்து உள்ளே செல்ல ஒரே வழி போராட்டம் என்பதைத் தன்னுடைய 12 வயதிலேயே உணர்ந்து, அதை வெற்றிகரமாக நடத்தி, ஐந்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, கருணாநிதிதான்.

திருவாரூர் பக்கத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர்-அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி. முன்னதாகப் பிறந்த இருவரும் பெண் பிள்ளைகள் - பெரியநாயகம், சண்முகசுந்தரம் (இவர்களில் சண்முகசுந்தரத்தின் புதல்வர்களே முரசொலி மாறனும், செல்வமும். பெரியநாயகத்தின் மகன் இயக்குநர் அமிர்தம்). எளிய குடும்பம் என்றாலும், கஷ்டப்பட்டுதான் சம்பாதிக்க வேண்டும் என்கிற சூழல் இல்லை. விவசாயியான தந்தை முத்துவேலரோ ஏரால் உழுததுபோலவே சொல்லாலும் உழுத கவிஞர்; வித்வான்; பண்டிதரைவிட அழகாய்க் கதை சொல்லக் கூடியவர். தந்தையிடமிருந்துதான் நிறையக் கற்றார் கருணாநிதி.

 

பள்ளியில் படித்தபோது ‘பனகல் அரசர்’ என்ற சுமார் 50 பக்கங்கள் கொண்ட துணைப் பாட நூல் அவரை ஈர்த்தது. பிராமணரல்லாதார்க்கு அரசியல், பணிகளில் இடஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், கோயில்களைத் தனியாரிடமிருந்து மீட்டது என்ற ஏராளமான நன்மைகளைச் செய்திருந்தது நீதிக் கட்சி. உயர்சாதி ஆதிக்கம் ஓங்கி வளர்ந்திருந்த தஞ்சை மண்ணில் ஒரு வைதீக, ஆனால் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் மனதில் பனகல் அரசரும், திராவிடர்களின் முதல் இயக்கமும் இடம்பிடித்ததில் ஆச்சரியம் என்ன! ஆனால், கருணாநிதியின் நெஞ்சில் நிரந்தர இடத்தைப் பிடித்தது பெரியாரும் அண்ணாவும்தான். பள்ளிப் பாடங்களைவிட பெரியாரின் ‘குடி அரசு’ பதிப்பக வெளியீடுகளே கருணாநிதியை வசப்படுத்தின. பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார் 14 வயது கருணாநிதி. தனது தோழர்களோடு நாள்தோறும் மாலைப் பொழுதுகளில் “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்” என்று முழக்கமிட்டு, ஊர்வலத்துக்குத் தலைமையேற்று நடத்துவது வழக்கம். இந்தி எதிர்ப்புத் துண்டறிக்கையை இந்தி ஆசிரியரிடத்திலேயே கொண்டுசென்று கொடுக்கும் துடுக்கும், “இந்தி வீழ்க! தமிழ் வாழ்க!’’ என முழங்கும் துணிச்சலும் கருணாநிதிக்கே உரியவை.

அண்ணாவின் அறிமுகம்

அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் 1942-ல் கருணாநிதி எழுதிய ‘இளமைப்பலி’ கட்டுரை வெளியானபோது அவருக்கு வயது 18. திருவாரூர் வந்த அண்ணா, கட்டுரையாளர் என்ற பெயரில் எதிரே இப்படி ஒரு மாணவப் பிராயத்தனை எதிர்பார்க்கவில்லை. கட்டுரைகள் எழுதுவதை விட்டுவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார் அண்ணா. ஆனால், கலை, இலக்கியம், அரசியல் என்று பொது வாழ்க்கையிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டார் கருணாநிதி. இதற்கிடையே காதல் வந்தது; ஆனால் கைகூடவில்லை. ‘சுயமரியாதைக்காரனுக்குப் பெண் இல்லை’ என்றனர் காதலியின் பெற்றோர். சீர்திருத்தத் திருமணத்துக்கு வீட்டில் பார்த்த பெண் இல்லத்தார் ஒப்புக்கொண்டதையடுத்து, 1944-ல் கருணாநிதி - பத்மா திருமணம் நடந்தது. அடுத்த வாரமே 10 நாள் சொற்பொழிவாற்றப் புறப்பட்டுவிட்டார் கருணாநிதி. பத்மாவதி முத்துவைப் பெற்றுவிட்டு 1948-ல் மறைந்துவிட, செப் 15, 1948-ல் தயாளுவைத் திருமணம் செய்துகொண்டார் கருணாநிதி. இவர்களின் பிள்ளைகளே அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு (துணைவி ராஜாத்தியின் மகள் கனிமொழி). 1948-ல் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் முதல் நாள் கலவரத்தில் முடிந்தது. அதற்குப் பின்னர் நடந்த தாக்குதலில் சுயநினைவு இழந்து, சாக்கடையோரத்தில் வீசப்பட்ட கருணாநிதியை ஒரு மூதாட்டி காப்பாற்றியிருந்தார். பெரியாரே அடிபட்ட இடங்களில் மருந்து தடவியது அவர் நெஞ்சை நெகிழ்த்தியது.

பெரியாரிடத்தில் ‘குடி அரசு’ துணையாசிரியராய் ஓராண்டு பயின்று முடிந்த நேரத்தில் ‘ராஜகுமாரி’ படத்துக்கு எழுத அழைப்பு வந்தது. படத்தின் நாயகன் எம்ஜிஆர். கருணாநிதி- எம்ஜிஆர் என்ற இரு ஆளுமைகளும் திராவிட இயக்கத்தை சினிமா மூலம் பட்டிதொட்டிகளிலெல்லாம் கொண்டுசென்றனர். ஆனால், கருணாநிதி எழுதி வெளிவந்த ‘அபிமன்யு’ (1948) படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, திருவாரூருக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி. அதுவும் நல்லதாகவே போயிற்று. முன்னதாக துண்டுத் தாளில் வந்துகொண்டிருந்த ‘முரசொலி’ வார இதழாய் உருவெடுத்தது. இதற்கிடையில் தான் மனைவி பத்மா மு.க.முத்துவைப் பெற்றுத் தந்துவிட்டு மறைந்துவிட்டார். வீட்டில் இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். திருமண நாள் செப்டம்பர் 15, 1948. அண்ணாவின் பிறந்த நாள். தலைமைச் சொற்பொழிவாளராகவும் அண்ணாவின் பெயரே அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது. திருமணமான கையோடு புது மணப்பெண் தயாளுவை விட்டுவிட்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார் கருணாநிதி.

‘கலைஞர்’ கருணாநிதி

தலைவர் பெரியாரோடான பிணக்குக்குப் பிறகு திகவிலிருந்து பிரிந்து, 1949-ல் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று திமுகவை அண்ணா உருவாக்கியபோது கருணாநிதி உற்ற துணையாகியிருந்தார். வெள்ளையனை வெளியேற்றிய காங்கிரஸை எதிர்ப்பதென்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாய் இருந்த காலம். இப்போது காங்கிரஸோடு பெரியாரும், திமுகவைக் கடுமையாக எதிர்த்தார். 25 வயது கருணாநிதியை கட்சியின் பிரச்சாரக் குழு உறுப்பினராக்கியிருந்தார் அண்ணா.

அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’, ‘நல்லதம்பி’, ‘ஓர் இரவு’ போன்ற திரைப்படங்கள் சாதி மறுப்பு, ஏழை பணக்காரன் பேதம் ஒழிப்பு, மூடநம்பிக்கை மீதான சாடல், சமதர்ம சமுதாயத்தின் தேவை போன்றவற்றை முழங்கின. ஆனால், கருணாநிதியின் எழுத்தோ இவற்றோடு அன்றைய அரசியலை விமர்சித்ததுடன் காங்கிரஸையும் வம்புக்கிழுத்தது. இன்னொருபுறத்தில் கருணாநிதி - எம்ஜிஆர் இணையில் வெளியான ‘ராஜகுமாரி’, ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ‘பராசக்தி’ படத்தில் சமூக அநீதிகளை எதிர்த்து நெருப்பைக் கக்கிய கருணாநிதியின் வசனங்கள் அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டுபோனது. அப்போதைய காங்கிரஸ் அரசு நெளிந்தது. “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே!” என்ற பகுத்தறிவுப் பிரச்சாரம், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களையும் வசீகரித்தது. இசைத்தட்டுக்கள் ஒலித்த இடங்களில் ‘பராசக்தி’யின் வசன ஒலித்தட்டுக்கள் ஒலிக்கத் தொடங்கின. கருணாநிதியையும் ‘பராசக்தி’யையும் எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் காங்கிரஸார்.

அண்ணாவைப் போலவே பேச்சால் தன்வயப்படுத்தும் வித்தையையும் கருணாநிதி கற்றிருந்தார். அமைப்புரீதியான ஆற்றலும் கொண்டவர் என்பதால், கட்சியில் குழு மனப்பான்மை, கட்சி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சரிசெய்ய அவரையே அனுப்பினார் அண்ணா.

கல்லக்குடி போராட்டம்

1953-ல் மும்முனைப் போராட்டத்தில், ஒரு முனைக்கு கருணாநிதியைத் தலைவராக அமர்த்தியிருந்தார் அண்ணா. டால்மியாபுரம் ரயில் நிலையப் பெயர்ப் பலகையின் மீது தமிழில் கல்லக்குடி என்ற பெயர் தாங்கிய சுவரொட்டியை ஒட்டுவதே போராட்டத் திட்டம். போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும் வகையில், நான்கு பேருடன் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார் கருணாநிதி. ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்றாலும், கட்சிக்குள்ளும் வெளியிலும் கருணாநிதியின் துணிச்சலைப் பற்றி எல்லோரிடமும் பேச்சு எழுந்தது.

திராவிட இயக்கம் தன்னுடைய வருங்காலத்துக்கு ஊறு விளைவிக்குமோ என்று அஞ்சி 1944-45-ல் அண்ணாவின், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்திலிருந்து எம்ஜிஆர் விலகிக்கொண்டதும், அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்த கணேசன், பின்னர் சிவாஜி கணேசனாக உருவெடுத்ததும் வரலாறு. அதே எம்ஜிஆர் தன்னைத் திராவிட இயக்கத்தோடும் கருணாநிதியோடும் இறுக இணைத்துக்கொண்ட வித்தையும் நடந்தது.

இருவரும் இணைந்து உருவாக்கிய ‘மலைக்கள்ளன்’ (1954) அவர்களின் கூட்டுறவைப் பறைசாற்றியது. ‘உலகத்தில் எல்லாவற்றுக்குமே இலக்கணம் உள்ளது. பிறப்பைப் பொறுத்து அல்ல; சிறப்பைப் பொறுத்து’ எனும் வசனம் புகழ்பெற்றது. அவ்வாண்டு ஒரு நாடக நிகழ்ச்சியில் ‘புரட்சி நடிகர்’ என்று எம்ஜிஆருக்குப் பட்டம் சூட்டினார் கருணாநிதி.

1954-லிருந்து ‘முரசொலி’யும் எம்ஜிஆரின் பிம்பத்தை வடித்துத் தர உதவியது. அவ்வாண்டு ‘மனோகரா’வில் சிவாஜி, கருணாநிதியின் வசனங்களைக் கர்ஜித்தார். ‘‘வசந்த சேனை... வட்டமிடும் கழுகு! வாய்பிளந்து நிற்கும் ஓநாய், நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு. அவளுக்கு இரக்கமா? முடியாது... கூடாது!’’

முதல் தேர்தல் வெற்றி

1957 தேர்தலில் திமுக போட்டியிட்டது. கருணாநிதி குளித்தலையில் நின்று வென்றார். அப்போது தொடங்கிய வெற்றி 13-வது முறையாக 2016-ல் திருவாரூர் வரை தொடர்ந்துவருகிறது. சட்ட மன்றக் கன்னிப் பேச்சில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகக் குரல்கொடுத்தார். 1957 ஆகஸ்ட் 23-ல் தொடங்கி 1957 செப்டம்பர் 9 வரை சுமார் 20 நாட்கள் போராட்டம் நடத்தி அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார்.

1959-ல் சென்னை மாநகராட்சி திமுக வசமானது. அண்ணாவிடம் பிடிவாதமாய் 100-ல் 90 இடங்களில் கழக வேட்பாளர்களை நிறுத்தி 45 இடங்களில் வென்று பரிசாய், அவர் கையாலேயே ‘கணையாழி’ பெற்றுக்கொண்டார் கருணாநிதி. முந்தைய ஆண்டு ‘நாடோடி மன்னன்’ எம்ஜிஆரைப் புதிய உச்சத்துக்குக் கொண்டுசென்றிருந்தது. 1960-ல் உட்கட்சிப் பூசல்கள் இடையே அண்ணாவே பொதுச்செயலாளர் ஆனார். ஈ.வெ.கி.சம்பத் அவைத் தலைவர். கருணாநிதி பொருளாளர். சம்பத்தின் குடும்பப் பின்னணி இல்லாமலும், நாவலரின் உயர் கல்வி இல்லாமலும் தனது ஆற்றலால், உழைப்பால் பத்தே ஆண்டுகளில் கட்சியின் மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தார் கருணாநிதி. அடுத்த ஆண்டு சம்பத் கட்சியிலிருந்து வெளியேறினார். கட்சியில் திரைத் துறையினரின் ஆதிக்கம் அதிகரித்துவருவதையும் வெளியேற்றத்துக்கு அவர் ஒரு காரணமாய்ச் சொன்னார்.

தேர்தல் நிதி 11 லட்சம்

1962-ல் 50 சட்ட மன்ற இடங்களை திமுக பிடிக்க, ‘திராவிட நாடு’ முழக்கம் மேலும் அதிகரித்தது. அடுத்த ஆண்டு பிரிவினை பேசும் கட்சிகளுக்குத் தடை போடும் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது நேரு அரசு. கட்சி முடக்கப்படுவதைத் தடுக்க அண்ணா ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்றார். தமிழகத்தின் நலன்களுக்காக இப்போது மாநில சுயாட்சி முழக்கத்தை அவர் கையில் எடுத்தார். 1965-ல் இந்தி ஆட்சி மொழியாக இருந்த பேராபத்தைத் தடுக்கவும், 1967 தேர்தலைச் சந்திக்கவும் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டது திமுக.

1963 ஜூலை 7-ல் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் கருணாநிதியே, 1967 தேர்தலுக்கான வியூகத்தின் ஒரு பகுதியை வகுத்துத்தந்தார். 200 தொகுதிகளில் போட்டி, ஒரு தொகுதிக்கு ரூ.5,000 செலவுத்தொகை; ஆக மொத்தம் ரூ.10 லட்சம். அவரே அந்தத் தொகையைத் திரட்டும் பணியையும் ஏற்றுக்கொண்டார்.

1963-லிருந்து இந்தி எதிர்ப்புப் போர், கழகத்தைப் பம்பரமாய்ச் சுழல வைத்தது. 1965 ஜனவரி 26-ஐத் துக்க நாளாகக் கொண்டாட முடிவெடுத்தது திமுக. மாணவர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 1965 பிப்ரவரி 16 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் கருணாநிதி. 1965 மார்ச் 25-ல் சிறையில் கருணாநிதியைப் பார்த்துவிட்டு பின் அன்று மாலை நெல்லையில் சொன்னார் அண்ணா: “என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் கிடக்கும் இந்த இடம்தான், யாத்திரை செய்ய வேண்டிய புண்ணிய பூமி”.

முதல்வர் கருணாநிதி!

1966 டிசம்பர் 29-ல் விருகம்பாக்கம் திமுக தேர்தல் சிறப்பு மாநாட்டில் ரூ.11 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட அண்ணா சொன்னார்: “உன் தாயார் உனக்கு நிதி என்று பெயரிட்டார்களே, உன்னை நாட்டு மக்கள் நிதியாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்றுதான்”. வேட்பாளர்களை அறிவிக்கும்போது சைதாப்பேட்டை என்று நிறுத்தி “11 லட்சம்” என்றார் அண்ணா. பெரும் ஆரவாரம்! பரங்கிமலை தொகுதிக்கு எம்ஜிஆர் நிறுத்தப்பட்டிருந்தார். அந்தத் தேர்தலில் திமுக வென்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார்.

1967-ல் நாவலருக்கு அடுத்து அண்ணா அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்ற கருணாநிதி, பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் வீராணம் திட்டத்துக்கு வித்திட்டதும் முக்கியமான செயல்பாடுகளாகப் பேசப்பட்டன.

1969-ல் அண்ணா மறைவுக்குப் பிறகு, “அண்ணாவுக்குப் பிறகு யார்?” என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதியே முன்னால் நின்றார். எம்ஜிஆரின் உதவியும் சேர்ந்துகொள்ள 45 வயதிலேயே முதல்வரானார் கருணாநிதி.

https://tamil.thehindu.com/opinion/columns/article24629447.ece

 

Link to comment
Share on other sites

பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்: சம்பந்தன் உருக்கம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முதுபெரும் தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்.

கடுஞ்சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த கடந்த சில நாட்களாக அவர் பற்றிய கரிசனையோடு நான் இருந்த அதேவேளை, அவர் சுகம் அடைந்து உலகத் தமிழர்களுக்குத் தலைவனாகத் தொடர வேண்டுமென்ற பிரார்த்தனையே என் மனதில் இருந்தது.

ஆயினும் காலம் அவர் உயிரைக் கவர்ந்து சென்று விட்டது. அவர் இயற்கையெய்தி விட்டார்.

மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

 

 

http://www.tamilwin.com/statements/01/190231?ref=home-latest

 
Link to comment
Share on other sites

தொண்டர்களின் முழக்கத்துக்கிடையே கருணாநிதியின் இறுதி ஊர்வலம் - பெரியார் சிலையை கடந்தது! #Karunanidhi

 

பெரியார் சிலையை கடந்தது இறுதி ஊர்வலம்

பெரியார் சிலையை கடந்து அவரது அன்பு தொண்டர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்கிறது. தொண்டர்களின் `எழுந்து வா தலைவா' கோஷத்துக்கு இடையே மெரினாவை நோக்கி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இருமருங்கிலும் நின்று தொண்டர்கள் பூக்களை தூவி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

நடந்து செல்லும் ஸ்டாலின்

 

 

33_16003.jpg

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராணுவ வாகனத்துக்கு பின்பு ஸ்டாலின், தயாநிதி மாறன் முத்தரசன் உள்ளிட்டோர் நடந்து செல்கின்றனர்.

மெரினா வந்தார்கள் குடும்ப உறுப்பினர்கள் 

32_16586.jpg

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் சிவானந்த சாலை கடந்துள்ளது. சாலையின் இருமருங்கிலும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, ராஜாத்தியம்மாள், அழகிரி, அவரது மனைவி, க.அன்பழகன் உள்ளிட்ட குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மெரினா வந்துள்ளனர். இதேபோல், பொன்.ராதாகிருஷ்னன், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ உள்ளிட்டோர் மெரினா வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி இடத்தில் அனைவரும் அமர்ந்துள்ளனர்.

 

 

அண்ணா சாலை நோக்கி கருணாநிதியின் இறுதி ஊர்வலம்

தேசியக்கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. சிவானந்தா சாலையை கடந்து அண்ணா சாலை நோக்கி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. 

 

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் ராகுல்காந்தி - மெரினாவை நெருங்கும் ஊர்வலம்! #Karunanidhi

 

சந்திரபாபு நாயுடு, பன்வாரிலால் புரோகித் வருகை 

36_17338.jpg

கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வந்துள்ளார். இதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் அண்ணா சமாதி வந்துள்ளனர். 

 

 

அண்ணா சிலையை கடந்தது

அண்ணா சிலையை கடந்தது வாலாஜா சாலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்கிறது. தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே மெதுவாக ஊர்ந்தபடி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்கிறது. இறுதி ஊர்வலத்தைக் காண பொதுமக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளன.

 

 

மெரினா வந்தடைந்தது சந்தனப்பேழை

35_17318.jpg

கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை மெரினா வந்தடைந்தது. ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" எனப் பொறிக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையில் வைத்து கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 

இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் ராகுல்காந்தி

34_16349.jpg

கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மெரினா கடற்கரை வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, திருநாவுக்கரசர் மற்றும் குஷ்பு, தங்கபாலு ஆகியோர் வந்துள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

அண்ணா நினைவிடம் வந்தது கருணாநிதி உடல் - குடும்ப உறுப்பினர்களும் வருகை! #Karunanidhi

 

அண்ணா நினைவிடம் வந்தார் முக ஸ்டாலின்

இறுதிச் சடங்கு நடைபெறும் அண்ணா நினைவிடத்துக்கு முக ஸ்டாலின் வந்தார். அவருக்கு முன்னாள் பிரதமர் தேவ கௌடா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். முன்னாஹ்தாக ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். 

காமராஜர் சாலை வந்தடைந்தது

 

 

38_18394.jpg

கருணாநிதியின்  இறுதி ஊர்வலம் காமராஜர் சாலை வந்தடைந்தது. மெரினா முழுவதும் உள்ள மக்கள் கூட்டத்தில் கருணாநிதியின் உடல் செல்கிறது. 
 

மெரினா வந்தடைந்தார் கனிமொழி 

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கனிமொழி அண்ணா நினைவிடம் வந்தார். உதயநிதி, அருள்நிதி போன்ற குடும்ப உறுப்பினர்களும் அண்ணா நினைவிடம் வந்தனர்.

தயார் நிலையில் முப்படைகள் 

37_17482.jpg

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் கலைவாணர் அரங்கத்தை தாண்டி மெரினாவை நெருங்கி சென்றுகொண்டிருக்கிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் மெரினாவில் குவிந்துள்ளனர். இதற்கிடையே, அவருக்கு ராணுவ மரியாதை செய்வதற்காக முப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

 

கருணாநிதி மறைவு - இறுதி ஊர்வலம் தொடங்கியது

18.21: கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை

18.15: ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

18.10: மெரினா வந்தது கருணாநிதி உடல்

18.05: இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நெருங்கவுள்ளது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்.

கருணாநிதி உடல் மெரினா வந்தடைந்ததுபடத்தின் காப்புரிமைFACEBOOK

17.54: இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் தேவகெளடா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மெரினா வருகை

17.41: மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மெரினாவுக்கு வருகை.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK

17.30: சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயகுமார், திருநாவுக்கரசர் ஆகியோர் மெரினா வருகை.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK

17.20: இறுதி ஊர்வலத்தில், ஸ்டாலின், தயாநிதி மாறன், மு.க.தமிழரசு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர், இராணுவ வாகனத்தைவிட்டு இறங்கி நடந்து செல்கின்றனர்.

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

17.10: அண்ணா சமாதி வந்த அமைச்சர் ஜெயகுமார் கார் கண்ணாடி உடைப்பு.

16.59: கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மெரினாவுக்கு ராகுல்காந்தி வருகை.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/THIRUMAVELAN

 

https://www.bbc.com/tamil/india-45107942

Link to comment
Share on other sites

மூவர்ணக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைப்பு - குடும்பத்தினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி! #Karunanidhi

 

குடும்ப உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி!

41_18253.jpg

மூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அழகிரி மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ராஜாத்தியம்மாள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து செல்வி, கனிமொழி, முக தமிழரசு, துர்கா ஸ்டாலின், உதயநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மலர்தூவி இறுதி ஞ்சலி செலுத்தினர்

 

 

மூவர்ணக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது

தலைவர்கள் அஞ்சலிக்கு பின் முப்படை வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்து கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதன்பின் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது

 

40_18372.jpg

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

மூவர்ணக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைப்பு - குடும்பத்தினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி! #Karunanidhi

 

பேராசிரியர் க.அன்பழகன் அஞ்சலி

குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலிக்கு பின் கருணாநிதியின் நண்பரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 

குடும்ப உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி!

 

 

43_18422.jpg

44_18221.jpg

மூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அழகிரி மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ராஜாத்தியம்மாள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து செல்வி, கனிமொழி, முக தமிழரசு, துர்கா ஸ்டாலின், உதயநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

மெரினாவில் விதைக்கப்பட்டார் கலைஞர்! #Karunanidhi

 

மெரினாவில் விதைக்கப்பட்டார் கலைஞர்!

48_19514.jpg

குடும்ப உறுப்பினர்கள் மரியாதைக்கு பின் ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணா சமாதி அருகே கருணாநிதி புதைக்கப்பட்டார். பிறகு அனைவரும் மணல் தூவி உடலை நல்லடக்கம் செய்தனர்.

 

 

45_18455.jpg

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தியபின் சந்தனப்பேழையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டது. ஸ்டாலின், தமிழரசு, அழகிரி மூவரும் சேர்ந்து கருணாநிதியின் உடலை சந்தனப்பேழையில் வைத்தனர். அப்போது ஸ்டாலின், அழகிரி ஆகியோர் கதறி அழுதனர். பின்னர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையில் குடும்ப உறுப்பினர்கள் உப்பு வைத்தனர். அதன்பிறகு சந்தனப்பேழை மூடப்பட்டது. இதனையடுத்து ராணுவ வீரர்களின் 26 குண்டுகள் முழங்க கருணாநிதி புதைக்கப்பட்டார். 

 

 

62_19226.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது .....
தி மு க  கட்சியை என்றாலும் 
குடும்ப சொத்தாக்கி வைத்திருக்காது 
அதுக்காக உழைப்பவன் தொண்டனுக்கு கொடுங்கள்!

Link to comment
Share on other sites

அரசியல் குடைக்குக் கீழே மழைத் தமிழ்: கருணாநிதி 25

 

 
102719670karunanidhi9jpg

பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணாவுடன் கருணாநிதி   -  BBC

திமுக தலைவர் கருணாநிதி வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு.

* கருணாநிதி தலைமையில் ஒரு கவியரங்கம். அதில் கவிக்கோ அப்துல் ரகுமான் உட்பட பிரபலமான ஏழெட்டு கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். கவியரங்கின் நிறைவு கவிதையை வாசித்த கருணாநிதி இப்படி முடித்தார்:

       
 

‘‘வெற்றி பல பெற்று

விருது பெற நான் வரும்போது

வெகுமானம் எதுவேண்டும்

எனக் கேட்டால்...

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’

* கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த டாக்டர் “மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” என்று சொல்லியுள்ளார். உடனே கலைஞர் மூச்சை இழுத்துப் பிடித்துள்ளார்.

அடுத்து டாக்டர் “இப்போ மூச்சை விடுங்க” என்று சொல்லியுள்ளார்.

உடனே கலைஞர் சொன்னாராம் இப்படி: “மூச்சை விடக்கூடதுன்னுதானே டாக்டர் நான் உங்கள்ட்ட வந்திருக்கேன்!”

* வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர் கருணாநிதியிட, ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார்.

‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார்.

‘‘அப்படி ஒரு படிப்பா?’’

‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார் கருணாநிதி.

* கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கலைஞர் அவரிடம் “தேர்தலில் இந்த தடவை எங்கே நிற்கப் போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணதாசன் ” எந்தத் தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறீர்கள். நான் இந்தத் தடவை தமிழ்நாட்டில் நிற்கப் போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்” என்று சொன்ன அடுத்த நொடியே கலைஞர் சிரித்தபடியே ” பாண்டிச்சேரியில் உன்னால நிற்க முடியாதேய்யா!” சொல்ல, அதன் அர்த்தம் புரிந்த கவியரசர் வெடுத்து சிரித்தாராம்.

* ஒரு தடவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் கருணாநிதியிடம் அப்துல் லத்தீப் ‘’ கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?’’ என்று கேள்வி தொடுத்துள்ளார். அதற்கு முதல்வர் க ருணாநிதி சொன்ன பதில்: ’’ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது!’’

* கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்’. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த இப்படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இப்படத்தில் இடம்பெற்ற ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என்ற பாடலை எழுதியவர் வாலி.பாடல் கம்போஸிங்கின்போது ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என்கிற பல்லவியின் முதல் வரியை எழுதிய வாலிக்கு அடுத்த வரி அவ்வளவு எளிதாக பிடிபடவில்லை, மண்டையைப் போட்டு பிய்த்துக்கொண்டு இருந்த அந்த சமயத்தில் அங்கே கருணாநிதி வந்துள்ளார்.

அப்போது வாலியைப் பார்த்து கருணாநிதி ‘’என்ன வாலியாரே... என்ன கலக்கமாக இருக்கிறீர்?’’ என்று கேட்டுள்ளார்..

‘’நான் அளவோடு ரசிப்பவன்னு பல்லவியோட முதல் வரியை எழுதிட்டேன். அடுத்த வரி சிக்க மாட்டேங்குது’’ என்று சொல்லியுள்ளார் வாலி. அதைக் கேட்டவுடனேயே கருணாநிதி சொன்னாராம்: ‘’நான் அளவின்றி கொடுப்பவன்’ன்னு போடுய்யா!’’ என்றாராம்.

11jpg

கருணாநிதி | கோப்புப் படம் உதவி: முகநூல் பக்கம்.

 

* சட்டப்பேரவையில் சோனையா என்பவர் ’’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது? அதில் தண்டிக்கப்பட்டவர்கள் யார் யார் என்கிற விவரத்தை தெரிந்த்துகொள்ள விரும்புகிறேன்!’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கருணாநிதி பதில் சொன்னார்: ’’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களை எல்லாம் விளக்கமாகக் கூறி, சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே... அந்த ஆபாசப் படங்களை வாங்கிப் பார்க்க வேண்டும், ஆபாசப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்ட விரும்பவில்லை!’’ என்றார்

* ஒரு ஹாக்கிப் போட்டி. போட்டியைக் கண்டுகளித்து, அப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு கருணாநிதி பரிசளிக்க வந்திருந்தார். அவ்விளையாட்டில் இரண்டு அணிகளுமே சமமான கோல் போட்டிருந்தன, எனவே, டாஸ் போட்டுப் பார்க்கப்பட்டது. அவ்வாறு டாஸ் போட்டுப் பார்த்தபோது தலை கேட்ட அணி தோற்றுப்போனது. பூ கேட்ட அணி வெற்றிபெற்றது.

பரிசளிக்க வந்த கருணாநிதி பேசினார் இப்படி:

“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. தலை கேட்டவர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள். ஏனெனில் - ’தலை’ கேட்பது வன்முறை அல்லவா?’’

mgr
 

* ஒரு தடவை சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. துரைசாமி: ’’ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’ என்கிற கேள்வியை முன் வைத்தார். அதற்கு கருணாநிதி சொன்ன பதில் இது: ‘’அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!

* எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார்.

‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார் கருணாநிதி.

*’’திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?’’ என்று கருணாநிதியிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.

அதற்கு அவர் சொன்ன பதில்:

24.03.1960 அன்று சட்டப் பேரவையில் ’அஞ்சல் தலைகளுக்கு என்று ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு உண்டா?’ என்று நான் கேட்டேன். என்னுடைய கேள்விக்கு - பெரியவர் பக்தவத்சலனார், ’சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள்’ என்று பதில் கூறினார். அந்த பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்களை வைக்கத் தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அய்யன் வள்ளுவர் சிலை வைக்கும் அளவு வளர்ந்தது!’’ என்றார்

karunanidhijpg

கருணாநிதி | கோப்புப் படம்.

* திருவாரூரில் கருணாநிதி படித்த பள்ளிக்கூடத்தில் அவரோடு படித்தவர்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எல்லாம் இணைந்து ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்துகொண்ட கருணாநிதிக்கு விழா குழுவினர் ஒரு சின்னஞ் சிறு தஞ்சாவூர் தட்டை பரிசாக அளித்தார்கள்.

அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அதில் திமுக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தது. ஏற்புரையில் பேசும்போது கருணாநிதி சொன்னார்: இவ்வளவு சிறிய அளவு தஞ்சாவூர் தட்டை எங்கிருந்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. தஞ்சாவூர் இடைத் தேர்தலில் நமது கழக வெற்றிவாய்ப்பை ஒரு தட்டு தட்டிப் போனதற்காக இந்தத் தட்டை பரிசளித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்தாலும் இது சின்னத் தட்டுதான்!’’ என்றபோது அரங்கம் அதிர்ந்தது.

* கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு மூன்று பேரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் ஏறி உட்கார்ந்தபோது வைரமுத்துவின் ஜிப்பா மேல் டி.ஆர்.பாலு உட்கார்ந்துவிட்டார். இது இருவருக்குமே தெரியாது. இறங்கும்போது வைரமுத்துவின் ஜிப்பா சிறிது கிழிந்துவிட்டதாம். அதை பார்த்த கருணாநிதி அடித்த கமெண்ட் இது: ‘’மத்திய மந்திரி டி.ஆர்.பாலு என்னத்த கிழிச்சார்னு இனிமே யாரும் கேள்வி கேட்க முடியாது!’’

* ஒரு தமிழ் விழாவில் கவியரங்கம் நடைபெற்றது. கருணாநிதி தலைமை கவிஞராக இருந்து அந்தக் கவியரங்கத்தை வழிநடத்தினார். அந்தக் கவியரங்கத்தில் இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கவிதை பாடிய கவிஞர் ஒருவர், கருணாநிதியைப் பார்த்து கலைஞர் அவர்களே எனக்கொரு துப்பாக்கித் தாருங்கள்’’ என்று ஆவேசத்துடன் முடித்தார். அப்போது கருணாநிதிவசம்தான் காவல்துறை இருந்தது. உடனே அவர் சொன்னார்: ’’கவிஞரே வேறு ஏதாவது பாக்கி இருந்தால் கேளுங்கள். துப்பாக்கி மட்டும் என்னால் தர இயலாது!’’

karuna1
 

* சட்ட சபையில் மீன் வளத்துறையை பற்றிய ஒரு விவாதத்தில் அந்தத் துறையைச் சேர்ந்த அமைச்சர் எழுந்து பேச ஆரம்பித்தார். மீன் வளத் துறை அமைச்ச எங்கே நீண்ட கருணாநிதியிடம் இருந்து ஒரு துண்டு சீட்டு அந்த அமைச்சருக்கு வந்தது. அதில் கருணாநிதி எழுதியிருந்தார் இப்படி: ’அயிரை மீன் அளவுக்குப் பேசவும்!’

* ஒருமுறை கலைஞருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் “ஆளூயர மாலை நீங்கள் அணிவித்திருக்கிறீர்கள் ” என்று இரண்டுமுறை சொன்னார்.

“ஆள் உயர சைஸில் நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும், ஆள் உயர்வதற்காக (வாழ்க்கையில்) நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும் இருபொருள்படும்படி அவர் பேசியதை சுற்றிலும் இருந்தவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

* சட்டமன்றத்தில் ஒரு முறை டி.என். அனந்தநாயகி “என்னை சிஐடி. வைத்து அரசு வேவு பார்க்கிறது. சிஐடி போலீஸார் என்னைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி “உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டு அவரது வாயை அடைத்தார்.

mgr
 

* கருணாநிதி எழுதிய வசனத் தெறிப்புகளில் இதோ சில:

“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.

“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.

“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.

“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.

“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு நாவை கடன் வாங்க வேண்டும்” - இது ‘ புதுமைப்பித்தன்’

* நடிகர் ராதா ரவி, தன் தந்தை எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக் கண்ணீர் நாடகத்தை நடத்த முன் வந்து , கருணாநிதியை அதற்கு தலைமைதாங்க அழைத்திருந்தார். கருணாநிதி ராதாரவி நடித்த அந்த நாடகத்தை முழுமையாக இருந்து பார்த்துவிட்டு, தனது பாராட்டுரையில் இப்படி பேசினார்:

‘‘நாடகத்தில் ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என்றார்>

* ‘சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடகத்தின் ஒரு வசனம் எழுதியிருந்தார் கருணாநிதி. அந்த வசனம் திராவிட இயக்கத் தலைவர்களுக்கெல்லாம் கிரீடம் சூட்டும் வகையில் அமைந்தது.. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ். இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ். கிருஷ்ணன், இராம.அரங்கண்ணல் போன்ற அத்தனை தலைவர்களையும் ஒரே வசனத்தில் உள்ளடக்கியிருந்தார் கலைஞர்.

அந்த வசனம்: “சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள். ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”

* முதன்முதலாக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததுஇப்படி: வெரி குட் ஸ்பீச் .

கருணாநிதி முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்கிற தலைப்பில் நங்கவரம் விவசாயிகள் பிரச்னையை பற்றிப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம்தான் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ்.

* “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக் கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்றார் கருணாநிதி.

mgr%203

* சட்டமன்றத்தில் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே. இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அப்படிக் கேட்டுவிட்டு அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

* தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். அதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடனே எழுந்து ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்றார்.

* எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் புகைப் படத்தை தன்னுடைய முரசொலியில் வெளியிட்டு, அதன் கீழே

‘‘பரவாயில்லை தம்பி...

என் முதுகிலே குத்தவில்லை..

நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார்.

தொகுப்பு: மானா பாஸ்கரன்

https://tamil.thehindu.com/opinion/blogs/article24632710.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_102879043_c476fe3c-fdf2-462d-b91c-7d826 

"ஈழத்தை மறக்க மாட்டேன் "  

ரைட்டு .. உபி'ஸ் உறுதி மொழி எடுக்கினம் .  ஒண்டும் கதைப்பதற்கு இல்லை ..

22 minutes ago, Maruthankerny said:

இனியாவது .....
தி மு க  கட்சியை என்றாலும் 
குடும்ப சொத்தாக்கி வைத்திருக்காது 
அதுக்காக உழைப்பவன் தொண்டனுக்கு கொடுங்கள்!

தோழருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் .. ஒரே டமாஸ்தான் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இனியாவது .....
தி மு க  கட்சியை என்றாலும் 
குடும்ப சொத்தாக்கி வைத்திருக்காது 
அதுக்காக உழைப்பவன் தொண்டனுக்கு கொடுங்கள்!

அமெரிக்க அரசியல்கூட குடும்ப சொத்தாகத்தான் தலையெடுக்குது....:cool:

Link to comment
Share on other sites

In

இரங்கல் புறக்கணிப்புப் போராட்டம்!

இங்கு சில, "நல்லவர்கள்" "நாகரிகம் தெரிந்தவர்கள்" "வரலாறு அறிந்தவர்கள்" "தமிழ் மொழிக் காதலர்கள்" "தகவல் தெரிந்தவர்கள்"...

கலைஞரின் மறைவுக்கு ஈழத் தமிழர்கள் "இரங்கல் புறக்கணிப்பு" செய்வதையிட்டு விசனப்படுகிறார்கள்.

தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற இலங்கை அரசின் அறிவிப்பைக் கேட்டு தண்ணியடிச்சு மகிழ்ந்தவர்கள், உள்ளூற பூரித்தவர்கள், மண்டை பிளக்கப்பட்ட அந்த படத்தை எவ்வித இங்கிதமும் இன்றி முகநூலிலும் உள்பெட்டி வழியாகவும் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் கூட...

எவரின் மரணத்தையும் கொண்டாடுவது ஈனச் செயல், இழிசெயல் என நல்லறம் போதிக்கிறார்கள்.

அட பாலகன் பாலச்சந்திரனின் படுகொலொயைக் கூட நக்கலாகக் கதைத்தவர்கள் கூட நாகரீகம் கற்பிக்கிறார்கள்.

காலம் பூரா கருணாநிதியின் மக்கள் விரோத அரசியலை  எதிர்த்த "முற்போக்கு" சக்திகள் கூட திடீரென கருணாதியின் முற்போக்குப் பண்புகளை தேடிப்பிடித்து பட்டியலிட்டுக் காட்டுகின்றனர்.

பகுத்தறிவாளர்கள் கூட இறந்தவரின் ஆத்மாவை புண்படுத்தக் கூடாதென கருத்துமுதல்வாதம் கதைக்கின்றனர்.

இவையனைத்தையும் தாண்டி... 

பெரும்பாலான ஈழத் தமிழர்கள் கருணாநிதியின் மரணத்துக்கு "இரங்கல் புறகணிப்பு" செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரங்கல் புறகணிப்பின் அவசியம் என்ன?  இதன் பின்னால் உள்ள "அறம்" என்ன? 

சுருக்கமாகச் சொல்லின் இதுவும் எமது ஒரு போராட்ட வடிவமே.

எமது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் ஆயுதங்கள் இன்றி எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் பலப்படுத்துவசற்கும் நெறிப்படுத்துவதற்குமான சகல சாத்தியங்களையும் பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

கலைஞர் ஈழத் தமிழர் பிரச்சினையை தனது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தினார்

அவ்வாறு இலாபம் காண முற்பட்டவர், "ஈழத்தமிரா? சொந்தக் குடும்பமா?" எனும் நிலை வந்த போது "குடும்பந்தான் முக்கியம் எனக் கொண்டு இலங்கை, இந்திய இனவழிப்பு அரசுகளுக்கு துணை போனார்.

ஆம்! இதை விட வேறு காரணங்கள் தேவையில்லை கலைஞரின் மரணத்துக்கு நாம் இரங்கல் புறக்கணிப்பு செய்வதற்கு.

உண்மையச் சொன்னால் இது ஒரு இரங்கல் புறக்கணிப்பு அல்ல!

இது எஞ்சியுள்ள தலைவர்களுக்கான எச்சரிப்பு.

எமது தேசவிடுதலைப் போராட்டத்தை தம் அரசியல் பிழைப்புக்கு பயன்படுத்தும் அனைத்து தமிழ் தலைவளுக்குமான எச்சரிப்பு.

அங்குள்ள வை.கோ, சீமான் முதல் இங்குள்ள சம்பந்தன், கஜேந்திரன் வரை...

அனைவருக்குமான எச்சரிக்கை!

பொறுத்த நேரத்தில் தகுந்த முடிவெடுக்க தவறின்...

உங்கள் மரணத்தை நாம் கொண்டாடி மகிழ்வோம்!

ஏனெனில் விலைமதிப்பற்ற உயிர்களை விடுதலைக்கான விதையாக்கிய பூமி இது. உங்கள் அற்ப உயிர்கள் எமக்கு பொருட்டல்ல!   

இதுதான் எமது அறம்.

கேளுங்கள் நல்லவர்களே, பகுத்தறிவாளர்களே, 

இந்த இரங்கல் புறக்கணிப்பு கலைஞரை ஒன்றும் செய்யாது. ஏனெனிவ் இறந்தவரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. இது யாரையும் கொல்லாது. எவர் உடமைகளையும் நாசம் செய்யாது.

உண்மையில் இதைவிட சிறந்த அகிம்சை போராட்டமோ ஜனநாயகப் போராட்டமோ இருக்க முடியாது.. ஏனெனில் இதில் யாருக்கும் துளியளவு கூட தொந்தரவு இல்லை.

ஆகையினால், 

இனவழிப்பு அரசுகளுக்கு விலை போனவர்களின் மரணங்களுக்கு,

எவ்வித அறம்சார் அச்சமும் இன்றி,

 "இரங்கல் புறக்கணிப்பு" செய்வோம்!

 

நண்பர் ஞான தாசின் பதிவு. நானும் புறக்கணிக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் செய்திகளை தொடர்ந்து “கருத்துக்களாக” பக்கம் பக்கமாக ஒட்டுவதால்தான் பலர் “இரங்கல் புறக்கணிப்பு” செய்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லையென்று தெரிகின்றது.

புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்டதற்கும், இறுதிப்போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணத்தை எமக்குள்ளே தேடாமல் எல்லா அழிவுக்கும் “வெளியார்”தான் காரணம் என்று இலகுவாக பிறர்தலையில் ஏற்றிவைத்துவிட்டு,  படுகொலைகளை தடுக்க கலைஞர் உதவவில்லை என்று அவரையும் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாகக் காட்ட ஒரு கூட்டம் இருக்கின்றது. தமது வங்குரோத்தை மறைக்க இப்படியான சந்தர்ப்பத்தை நழுவவிடுவார்களா என்ன!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றவர். பலகோடி தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அம்மக்களை இழிவுசெய்யாமல் இருக்கவேண்டியது சில இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்யும்.

Link to comment
Share on other sites

ஈழப் போரில் வெளியார் உதவி இன்றி சிறிலங்காவால் வென்றிருக்க மடியாது என்று ராசபக்களே ஒப்பு தல்  வாக்குமூலம் வழங்கி உள்ளனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறக நடந்து கொண்டது. பிரணாப் முகர்ஜி யும் நாராயணனும் மிரட்டி மாணவர் போராட்டதை முடக்கினார்கள். கலைஞர் தெரிந்தே உண்ணா நோன்பு நாடகமாடினார். சிதம்பரம் இது பற்றி எழுதி உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் எங்களைக் காப்பார் என்று 2009 ஜனவரியில் யாழ் களமூடாக சிலருடன் சேர்ந்து “கடதாசி” எழுதும்போதுகூட நான் நம்பவில்லை. அவர் உண்ணாவிரத நாடகம் ஆடியபோதும் நம்பவில்லை. 

வெளியார் எல்லாரும் சேர்ந்து ஈழப்போரை முடிவுக்குக்கொண்டுவர எடுத்த முடிவை மாற்ற கலைஞரால் முடிந்திருக்காது. ஆனால்  வெளியார் எல்லாரும் ஏன் ஈழப்போரை முடிக்க மகிந்தவுக்கு உதவ முடிவெடுத்தார்கள் என்பதற்கான காரணமும் இருக்கு.

 

கலைஞருக்கான “இரங்கல் புறக்கணிப்பு” தமிழகத்தில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது. ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் ஒரு சில தார்மீக ஆதரவாளர்களையும் விலகிப்போகச் செய்யத்தான் உதவும்.

Link to comment
Share on other sites

மரினாவில் கூடிய மக்கள் திரள் மத்திய அரசின் கொள்கையை மாற்றியது கண்டோம். உலகத் தமிழரின் போர ட்டம் மேற்குலக வல்லரசுகளை போரை நிறுத்தச் சொல்லும் வரை செய்தது. ஆனாாால் இந்்திிிய அரசு அதனைத்் தடுுத்து. தமிழ் நாட்டில் மக்கள் போராட்்டங்களை அடக்்கி கலைஞர் உதவினார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.