Jump to content

தமிழ் இன அழிப்பில் கருணாநிதி ? – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி வடக்கு முதல்வரின் அஞ்சலிக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமானகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்திகேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும்,தமிழக அரசியலிலும்,தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மனநிலைக்கு எம்மை ஆழ்த்தியுள்ளன.

கலைஞர் கருணாநிதி அவர்கள் சுமார் 60ஆண்டு காலம் தொடர்ந்துமக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தவர். 5 தடவைகள் முதலமைச்சராகப் பதவிவகித்துள்ளார். இது சாதாரணமான ஒரு நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒருவரலாறு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் சமூகரீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கிக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று நம்புகின்றேன். இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர் அவர்கள். தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைகொள்ளவிடாது தடுப்பதற்காக அவர் உழைத்தார். தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய–மாநில–தனியார் கூட்டு முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநிலஅரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்.

தமிழ் மொழி மீது தீராப் பற்றுமிக்க கலைஞர் கருணாநிதி அவர்கள்,தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததோடு,செம்மொழித் தமிழ் ஆய்வுக்காகச் சென்னையில் மத்தியநிறுவனம் ஒன்றையும் உருவாக்கவழிவகுத்தார். இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க விதைபோடும் நிகழ்ச்சியாக உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கூட்டினார். கேட்கும் தோறும் உணர்வுமுறுக்கேறும் “நீராடும் கடலுடுத்த”என்ற மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கியவரும் இவரே.

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1956இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் “இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்”என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்தார். அன்றில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.எனினும்,முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்றஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு.

தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவுசெய்துவிட்டுமறைந்துள்ளகலைஞர் மு. கருணாநிதிஅவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவரது இலட்சோப இலட்சம் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரியில் வானுயர அமைந்திருக்குந் திருவள்ளுவர் சிலைபோன்று அவர் பெயரும் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.thaarakam.com/2018/08/08/தமிழ்-இன-அழிப்பில்-கருணா/

 

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் உள்ளடக்கம் கலைஞர் கருணாநிதிக்கு புகழ்பாடுகின்றது. ஆனால் தலைப்பு விக்கி ஐயா சொன்னதை திரிக்கின்றது. இப்படியான நம்பகத்தன்மையில்லாத உள்நோக்கம் கொண்ட “இணைய ஊடகங்கள்”  வெளியிடும் செய்திகளை யாழில் இணைப்பதால் போலி ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்தான் முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை வாசிக்காமல் தலைப்பை மட்டும் படிக்கும் வேகமான உலகில் இருப்பதால்தான் போலியான செய்திகள் பரவுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில என்ன பிழை..? கேள்விக்குறி தானே போட்டிருக்கினம்.

நமக்கு சரிப்படாத தலைப்பு என்றவுடன்.. மனசு சங்கடப்படுகுதோ என்னவோ..??!

கருணாநிதி.. ஈழத்தில் இனப்படுகொலையில்.. துணை நின்றார் என்பது வெளிப்படை உண்மை தானே. இல்ல ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தி எதுக்கு கருணாநிதியின் இறுதிச் சடங்களில் முன்னுக்கு நிற்கனும்..????????! ?

Link to comment
Share on other sites

போராட்டதோல்விக்கும் அழிவுகளுக்கும் பல காரணங்கள் இருக்கின்றது.  கருணாநிதி அக்கறையற்று இருந்தது என்பது அதில் மிகவும் சிறிய பங்கே.

முக்கிய பங்கு எம்மில் தான் உள்ளது. அதை மறைக்க அடுத்தவன் மீது பாயும் தமிழரின் குணம் எமது எதிரகால போராட்டங்களையும் தோல்வி அடையவே வைக்கும். எங்களுக்குள் அதாவது போராட்டத்தை கொண்டு நடத்தியவர்களின் தவறுகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால் அவை புனிதமானவை விமரசனத்துக்கு அப்பாற்பட்டவை என்று நினைப்போர் தான் எப்போதும் அடுத்தவர் மீது முழுப் பழியையும் போடுவது கெட்டித்தனம் என்று நினைக்கிறார்கள்.

அதன் வெளிப்பாடுதான் கருணாநிதியை திட்டுவது, எரிக் சோல்கைமை திட்டுவது, நேர்வேயை திட்டுவது, அமெரிக்காவை திட்டுவது, பிரிட்டனை திட்டுவது,. போராட்ட தோல்விகளுக்கும் அழிவுகளுக்குமான் மூல காரணிகளை மட்டும் ஆராயவும் மாட்டார்கள். ஏன் அதை பற்றி பேச கூட மாட்டார்கள் . 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைப் போராட்டத்தில்.. எம் ஜி ஆர் காலத்தில் கருணாநிதி.. போட்டி தமிழ் ஆயுதக் குழுக்களை பலப்படுத்த பாவிக்கப்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டம் முழுவதும் கருணாநிதி.. தமிழீழமே தமிழ் மக்களுக்கு தீர்வு என்றதில் ஆரம்பித்து.. பின்னர் முள்ளிவாய்க்காலில்.. இன அழிப்பில் கொண்டு வந்து விடும் வரை.. ஏதோ ஒரு தொடர்பில் இருந்தார்.

ஆகவே ஈழ விடுதலைப் போராட்டப் பின்னடைவில்.. வெறும் உள்ளகக் காரணிகளை விட.. வெளியகக் காரணிகள் தான் அதிகம் செல்வாக்குச் செய்துள்ளன. அதில் கருணாநிதி என்பதும்.. முக்கியமான ஒன்று. சிறியது என்று புறக்கணிக்கவோ.. மன்னிக்கப்படவோ கூடிய ஒன்றல்ல. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

செய்தியின் உள்ளடக்கம் கலைஞர் கருணாநிதிக்கு புகழ்பாடுகின்றது. ஆனால் தலைப்பு விக்கி ஐயா சொன்னதை திரிக்கின்றது. இப்படியான நம்பகத்தன்மையில்லாத உள்நோக்கம் கொண்ட “இணைய ஊடகங்கள்”  வெளியிடும் செய்திகளை யாழில் இணைப்பதால் போலி ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்தான் முடியும். 

 

கருணாநிதி  சார்ந்து

ஈழத்தவரிடமுள்ள கவலையை 

விக்கி ஐயா (தமிழரின்  வடக்கு முதல்வர்) தெரிவித்திருப்பது தெரிந்தது

அதனால் தான் பதிந்தேன்.

செய்தியில்  அது பற்றி  இல்லாதுவிட்டால்  நீங்கள்  சொல்வது சரியே.

மேலும்  இணைக்கும் போதே இந்த இணையம்  யாழில் பதிய  தகுதியானதா என்பதை  நானும் யோசித்தேன்

சரியாக  தெரியாதபோது

நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும் என்ற நிலையில்  பதிந்தேன்

 

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

ஈழ விடுதலைப் போராட்டத்தில்.. எம் ஜி ஆர் காலத்தில் கருணாநிதி.. போட்டி தமிழ் ஆயுதக் குழுக்களை பலப்படுத்த பாவிக்கப்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டம் முழுவதும் கருணாநிதி.. தமிழீழமே தமிழ் மக்களுக்கு தீர்வு என்றதில் ஆரம்பித்து.. பின்னர் முள்ளிவாய்க்காலில்.. இன அழிப்பில் கொண்டு வந்து விடும் வரை.. ஏதோ ஒரு தொடர்பில் இருந்தார்.

ஆகவே ஈழ விடுதலைப் போராட்டப் பின்னடைவில்.. வெறும் உள்ளகக் காரணிகளை விட.. வெளியகக் காரணிகள் தான் அதிகம் செல்வாக்குச் செய்துள்ளன. அதில் கருணாநிதி என்பதும்.. முக்கியமான ஒன்று. சிறியது என்று புறக்கணிக்கவோ.. மன்னிக்கப்படவோ கூடிய ஒன்றல்ல. ?

உணமை தான் நெடுக்கர். என்னில் தவறில்லை. எல்லாத்தவறும் அடுத்தவன் மீது தான் என்று கூறுவது Komfortable  ஆன சிறந்த அணுகுமுறை தான். ஜாலியா எல்லா தவறுகளையும் அடுத்தவன் மீது போட்டு விட்டு தப்பிப்பது என்ன சுகமான என்ஜோய்மென்ற்.  நன்றி.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களான எங்களை  பொறுத்தவரை தோல்வியை எளிதில் ஜீரணிக்க மாட்டோம் வெற்றி  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த எமக்கு  2009 தோல்வி தாங்க முடியாத அடி..எனவே அந்த
 தோல்விக்கு  நாம் பொறுப்பாளிகள் இல்லை என கைகழுவி அத்துடன் யாரோ ஒருவரை பலிக்கடாவாக்க பார்த்து கொண்டிருந்த எமக்கு சரியாக மாட்டினார் கலைஞர், அவரை துரோகியாக்கியதன் மூலம் நாம் தோற்கவில்லை தோற்கடிக்கபட்டோம் என எமக்கு நாமே சொல்லி  ஆறுதல் சொல்லி கொண்டோம்.....
 இப்போது 95வயசு பெரியவரின் சாவினை  கொண்டாடுவதெல்லாம் எங்களுக்கு கிடைத்த தோல்வியினால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மையுடன் கூடிய  கருணாநிதிபோபியா என்கிற மன நோய் அது வந்து கிட்டத்தட்ட 10 வருடம் ஆகிவிட்டது குணப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் ?

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

கருணாநிதி  சார்ந்து

ஈழத்தவரிடமுள்ள கவலையை 

விக்கி ஐயா (தமிழரின்  வடக்கு முதல்வர்) தெரிவித்திருப்பது தெரிந்தது

அதனால் தான் பதிந்தேன்.

செய்தியில்  அது பற்றி  இல்லாதுவிட்டால்  நீங்கள்  சொல்வது சரியே.

மேலும்  இணைக்கும் போதே இந்த இணையம்  யாழில் பதிய  தகுதியானதா என்பதை  நானும் யோசித்தேன்

சரியாக  தெரியாதபோது

நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும் ன்ற நிலையில்  பதிந்தேன்

பதிவு செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை ; சரியான பதிவு என்றே எண்ணுகிறேன் தோழர்களே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். ஏனென்றால் மற்றய எல்லா முதலமைச்சர்களையும் விட பல நல்ல திட்டங்களை ஏழை எளியவர்களுக்காகவும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கும் செய்தவர் அவர்.

ஆனால் ஈழத்தமிழர்கள் அவருக்காக கண்ணீர்வடிக்கத்தேவையில்லை.ஏனென்றால் MGR காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால்  வரை அவர் ஈழ விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

ஈழத்தமிழர்களான எங்களை  பொறுத்தவரை தோல்வியை எளிதில் ஜீரணிக்க மாட்டோம் வெற்றி  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த எமக்கு  2009 தோல்வி தாங்க முடியாத அடி..எனவே அந்த
 தோல்விக்கு  நாம் பொறுப்பாளிகள் இல்லை என கைகழுவி அத்துடன் யாரோ ஒருவரை பலிக்கடாவாக்க பார்த்து கொண்டிருந்த எமக்கு சரியாக மாட்டினார் கலைஞர், அவரை துரோகியாக்கியதன் மூலம் நாம் தோற்கவில்லை தோற்கடிக்கபட்டோம் என எமக்கு நாமே சொல்லி  ஆறுதல் சொல்லி கொண்டோம்.....
 இப்போது 95வயசு பெரியவரின் சாவினை  கொண்டாடுவதெல்லாம் எங்களுக்கு கிடைத்த தோல்வியினால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மையுடன் கூடிய  கருணாநிதிபோபியா என்கிற மன நோய் அது வந்து கிட்டத்தட்ட 10 வருடம் ஆகிவிட்டது குணப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் ?

?

நோய்  என  எம்மை  சொல்லியபடி  நீங்கள்  பல விடயங்களை மறைத்துவிட  நினைக்கிறீர்கள்

கருணாநிதிக்கும் ஈழவிடுதலை  இயக்கங்களுமான தொடர்பாடல்களை  ஆதியிலிருந்து வாசியுங்கள்

தமிழினத்தின் தலைவன்  என்ற  மகுடத்தை ஏற்றவர்

ஆகக்குறைந்தது செய்யவேண்டியது என்ன?

செய்திருக்கவேண்டியது என்ன?  என்பது ஈழத்தவரின்  கவலையே  தவிர

போர் தோல்விக்கு கருணாநிதியை யாரும் முன்னுக்கு நிறுத்தவில்லை.

ஆகக்குறைந்தது 3 மணி  நேர  நாடகத்தையாவது  தவிர்த்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

 

மக்களை உசுப்பேற்ற சீமான் சொன்ன அத்தனையும் வேத வாக்காக நம்புகின்றீர்றீர்களா?  கலைஞர் பதவி ஏற்ற 1989/90 காலப்பகுதியில் போராளிகள் சுதந்திரமாக செயற்பட தாராள அனுமதியை கலைஞர் அளித்ததை மறந்து விட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

மக்களை உசுப்பேற்ற சீமான் சொன்ன அத்தனையும் வேத வாக்காக நம்புகின்றீர்றீர்களா?  கலைஞர் பதவி ஏற்ற 1989/90 காலப்பகுதியில் போராளிகள் சுதந்திரமாக செயற்பட தாராள அனுமதியை கலைஞர் அளித்ததை மறந்து விட்டீர்களா? 

பேச்சைக்கேட்டீர்களா?

அவர்  சொல்வதில்  எது நடக்கவில்லை??

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா முகநூலாக இருப்பின் உங்களை நேற்றே un friend பண்ணிட்டு தான் மறுவேலை பார்த்திருப்பேன்,சீமானின் half boil தனமான கருத்துகளை வைத்து என்னை quote பண்ணாதீங்க, ஆதாரப்பூர்வமாக  இருக்கா அதை வைத்து கருத்து சொல்லுங்க, உலகத்தில்  உள்ள நாம்தமிழர் கட்சி காரங்க கூட எல்லாம் முகநூலில் நட்பாக இருக்கிற  அவங்கள் பகிர்கிற எல்லாவற்றையும்  உண்மை என நம்பி கருத்தாடுற... அப்படி  எனில் சீமான் சொன்ன ஆமை இறைச்சி கதை ,ஆமை ஓட்டில் கடலில் பயணம்  ஏ.கே 74 ,அரிசி கப்பலில் ரெயினிங் எல்லாவற்றையும் நம்புறீங்க  அப்படிதானே?

நான் தலைவனாக  ஏற்றுகொண்டவர் இன்னொரு தமிழனின் சாவை கொண்டாட சொல்லி தரவில்லை, பிரபாகரன் என் தலைவன் இல்லை சீமான் தான் என் தலைவன் என்று சொல்லிவிட்டு வெடி கொளுத்தி கொண்டாடுங்கள்

என்னை வரலாற்றை படிக்க சொல்வதை விட்டு விட்டு முடிந்தால் கலைஞரின் ஒரு நூலின் பெயர் சொல்லுங்க 

Link to comment
Share on other sites

5 hours ago, Eppothum Thamizhan said:

கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். ஏனென்றால் மற்றய எல்லா முதலமைச்சர்களையும் விட பல நல்ல திட்டங்களை ஏழை எளியவர்களுக்காகவும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கும் செய்தவர் அவர்.

ஆனால் ஈழத்தமிழர்கள் அவருக்காக கண்ணீர்வடிக்கத்தேவையில்லை.ஏனென்றால் MGR காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால்  வரை அவர் ஈழ விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் அழ தேவையில்லை சாவை கொண்டாடாமல் இருக்கலாம்

 

இது நான் பார்த்த முதலாவது எதிர்வினை நேற்று 

கலைஞர் இறந்ததை சில ** ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்

அட பதர்களா

யாழ்பாணம் நாறிகொண்டிருக்கின்றது, நடக்கும் அழிவுகளுக்கும் அசிங்களுக்கும் கட்டுகடங்கா கொள்ளைகளுக்கும் அளவே இல்லை

அதை பற்றி கவலைபடுவதை விட்டு, அடுத்த நாட்டில் ஒரு மாநில தலைவன் சாவதையா பார்த்துகொண்டிருப்பீர்கள்?

கேட்டால் பிரபாகரன் தாயை கலைஞர் பார்க்கவில்லையாம்

ஏண்டா *******, நீங்கள்தான் லண்டன், பிரான்ஸ், கனடா என இருக்கின்றீர்கள் அல்லவா? அழைத்து வைத்து பார்த்தால் என்ன ****** கூட்டமே

நன்றி கெட்ட ** கூட்டமே

1983ல் கொழும்பு எரிய இங்கு ஊர்வலம் நடத்தி உங்களை காத்தது எவன்?

அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது ஓடோடி சென்று கலந்து பேசி ஆறுதலையும் தைரியத்தையும் சொன்னவன் எவன்?

லட்சகணக்கான ஈழமக்கள் அகதிகளாய் வந்தபொழுது இங்கு அகதி முகாம் அமைத்து, சோறுபோட்டு காத்த தலைவனடா அவன்

உங்களால் ஒரு ஈழத்தவனை ஆதரிக்க முடியுமா **** ***** ******

அன்றெல்லாம் உங்களை அரவணைத்தது யார்? அமைதிபடையினை திரும்ப பெற்றது யார்?

உங்களுக்காக இருமுறை ஆட்சி இழந்தவர் யார்?

ராஜிவ் கொலைக்காக கட்சியினை பறிகொடுக்கும் நிலைக்கு சென்றது யார்? 

கொலைகார கூட்டமே, 

செய்யகூடா படுகொலைகளை செய்து அழிந்தான் பிரபாகரன், அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை ****

உலகிலே நன்றிகெட்ட இனம் ஈழதமிழினம் என்பதில் இனி மாற்று கருத்தே இல்லை

ஈழம் இனி ம‌....குள்ள இருந்து மலரும், ஒரு நாளும் ஒரு முடிவும் பெற்று கொள்ளமாட்டீர்கள்

காலத்துக்கும் அடிவாங்கி சாவுங்கள்

உங்களுக்கு தமிழில் பேசினால் புரியாது, காரணம் நீங்கள் மனிதர்களுமில்லை தமிழர்களுமில்லை

உங்களுக்கு புரிய கூடிய பாஷை அடித்து துவைப்பது, அது ஒன்றுதான் உங்களுக்கு புரியும்

சிங்களன் அதில்தான் உங்களிடம் பேசமுடியும், பேசிகொண்டும் இருக்கின்றான்

ஆயிரம் உதவிகள் பெற்றும் கலைஞரை சாடும் உங்களை விட, பகை இனம் என்றாலும் இன்று இரங்கலை தெரிவித்த இலங்கை அதிபர் மகா உத்தமானவர்

உங்களை விட மகிந்த ராஜபக்சே ஆயிரம் மடங்கு நல்லவன்

அடேய் ***மக்களே, ஒன்றை நினைவில் வையுங்கள்

புதைக்கபட போவது கலைஞர் உடல் மட்டுமல்ல, இந்த ஈழம், இனவிடுதலை, இனதுரோகம் , பிரபாகரன் புனிதன் அது இது போன்ற இம்சைகளும்

கலைஞரோடு எல்லாம் முடிந்தது

இனிதான் இருக்கின்றது உங்களுக்கு அடி, தாங்கமாட்டீர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அபராஜிதன் said:

விசுகு அண்ணா முகநூலாக இருப்பின் உங்களை நேற்றே un friend பண்ணிட்டு தான் மறுவேலை பார்த்திருப்பேன்,சீமானின் half boil தனமான கருத்துகளை வைத்து என்னை quote பண்ணாதீங்க, ஆதாரப்பூர்வமாக  இருக்கா அதை வைத்து கருத்து சொல்லுங்க, உலகத்தில்  உள்ள நாம்தமிழர் கட்சி காரங்க கூட எல்லாம் முகநூலில் நட்பாக இருக்கிற  அவங்கள் பகிர்கிற எல்லாவற்றையும்  உண்மை என நம்பி கருத்தாடுற... அப்படி  எனில் சீமான் சொன்ன ஆமை இறைச்சி கதை ,ஆமை ஓட்டில் கடலில் பயணம்  ஏ.கே 74 ,அரிசி கப்பலில் ரெயினிங் எல்லாவற்றையும் நம்புறீங்க  அப்படிதானே?

நான் தலைவனாக  ஏற்றுகொண்டவர் இன்னொரு தமிழனின் சாவை கொண்டாட சொல்லி தரவில்லை, பிரபாகரன் என் தலைவன் இல்லை சீமான் தான் என் தலைவன் என்று சொல்லிவிட்டு வெடி கொளுத்தி கொண்டாடுங்கள்

என்னை வரலாற்றை படிக்க சொல்வதை விட்டு விட்டு முடிந்தால் கலைஞரின் ஒரு நூலின் பெயர் சொல்லுங்க 

ஈழ  வரலாறு  பற்றியும்

கருணாநிதியின் துரோகங்கள் மற்றும் வரலாற்றில் எமது இயக்கங்களை அவர் எவ்வாறு பிரித்தாண்டார் என்பதனையும் 

கருணாநிதி  எழுதிய  நூலை  வாசித்து அறியவேண்டிய  தேவை  எனக்கில்லை சகோ

முகநூலில் தவறான பதிவுகள்  வருகின்றன  என்றபடி அடுத்த பகுதியில் யாரோ கொட்டியதைத்தான்  நீங்களும் தருகின்றீர்கள்

உங்களுக்கொரு பார்வை

எங்களுக்கொரு பார்வை

எம் தலைவரே  இறுதிக்கணம் வரை நம்பினார்

ஏமாற்றப்பட்டார் என்பது தான்  எம்  கண் முன்னால்  நடந்த வரலாறு

அதைத்தான் மேலே சீமானும் சொல்கிறார்

இதில் அவர்  பொய்  சொல்லவில்லை

சொன்னால் சுட்டிக்காட்டுங்கள்

எமக்குச்செய்த துரோகம்  சார்ந்து தான் எனது வருத்தமே  அன்றி

அவரது எழுத்து இலக்கியம் சார்ந்து அல்ல.

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

ஈழ  வரலாறு  பற்றியும்

கருணாநிதியின் துரோகங்கள் மற்றும் வரலாற்றில் எமது இயக்கங்களை அவர் எவ்வாறு பிரித்தாண்டார் என்பதனையும் 

கருணாநிதி  எழுதிய  நூலை  வாசித்து அறியவேண்டிய  தேவை  எனக்கில்லை சகோ

முகநூலில் தவறான பதிவுகள்  வருகின்றன  என்றபடி அடுத்த பகுதியில் யாரோ கொட்டியதைத்தான்  நீங்களும் தருகின்றீர்கள்

உங்களுக்கொரு பார்வை

எங்களுக்கொரு பார்வை

எம் தலைவரே  இறுதிக்கணம் வரை நம்பினார்

ஏமாற்றப்பட்டார் என்பது தான்  எம்  கண் முன்னால்  நடந்த வரலாறு

அதைத்தான் மேலே சீமானும் சொல்கிறார்

இதில் அவர்  பொய்  சொல்லவில்லை

சொன்னால் சுட்டிக்காட்டுங்கள்

 

இதில் நீங்கள் அவமானப்படுத்துவது தலைவர் பிரபாகரனை தான். பிரபாகரன் எப்போதுமே மற்றவர்கள் நம்பி தனது போராட்டத்தை நடத்தியதில்லை. அதை அனுபவபூர்வமாக பார்த்தவர்கள் தமிழர்கள். எப்போதுமே தன்னம்பிக்கையுடன் கொள்கை பற்றுடன் போராடும் போராளி. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை போல அவரது இராணுவ அரசியல் கணக்குகள் தவறியதால்  எம‍க்கு தோல்வி கிடைத்த‍து என்பதே உண்மை.  தமிழர்களின் வரலாற்றில் தமிழர்களுகளின் விடுதலைக்கு போராடி மடிந்த உண்மை போராளி பிரபாகரனுக்கும் முக்கிய இடம் உண்டு. அது வேறு விடயம்.

ஆனால் கலைஞர் தன்னால் முடிந்த அளவுக்கு புலிகள் உட்பட ஈழ போராளிகளுக்கு  உதவி புரிந்த‍தற்கான சாட்சியமான விடுதலை புலி தலைவர்கள் உயிருடன் இல்லை என்பதற்காக சில சுயநலமிகளின் பொய் உண்மையாகி விடாது. அதை நம்பி சிலர் தமது கவிதை திறனைக்காட்ட முகநூலில் கவி பாடுவதை ஆதாரமாக நினைக்காதீர்கள்.   இந்திய ராணுவத்துடனான உக்கிர யுத்த‍த்தின் பின்னர் 1989 / 90  காலப்பகுதியிலான கலைஞர் ஆட்சி  புலிகள் மீள பலம் பெற  மிகப்பெரிய வரபிரசாதமாக இருந்ததாக அவ்வேளையில் விடுதலைப்புலி உறுப்பினர்களுடனான தனிப்பட்ட உரையாடலிலை அவர்களே தெரிவித்திருந்தார்கள்.  தமிழகத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினரான எனது நண்பனுடன் நான் உரையாடும் போது இந்தியாவில் இருப்பது உனக்கு ஆபத்தில்லையா என்ற கேட்டதற்கு ஈழத்தை விட இங்கு பாதுகாப்பாக உள்ளோம். நடப்பது திமுக ஆட்சி தானே என்று பதிலளித்திருந்தார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

இதில் நீங்கள் அவமானப்படுத்துவது தலைவர் பிரபாகரனை தான். பிரபாகரன் எப்போதுமே மற்றவர்கள் நம்பி தனது போராட்டத்தை நடத்தியதில்லை. அதை அனுபவபூர்வமாக பார்த்தவர்கள் தமிழர்கள். எப்போதுமே தன்னம்பிக்கையுடன் கொள்கை பற்றுடன் போராடும் போராளி. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை போல அவரது இராணுவ அரசியல் கணக்குகள் தவறியதால்  எம‍க்கு தோல்வி கிடைத்த‍து என்பதே உண்மை.  தமிழர்களின் வரலாற்றில் தமிழர்களுகளின் விடுதலைக்கு போராடி மடிந்த உண்மை போராளி பிரபாகரனுக்கும் முக்கிய இடம் உண்டு. அது வேறு விடயம்.

ஆனால் கலைஞர் தன்னால் முடிந்த அளவுக்கு புலிகள் உட்பட ஈழ போராளிகளுக்கு  உதவி புரிந்த‍தற்கான சாட்சியமான விடுதலை புலி தலைவர்கள் உயிருடன் இல்லை என்பதற்காக சில சுயநலமிகளின் பொய் உண்மையாகி விடாது. அதை நம்பி சிலர் தமது கவிதை திறனைக்காட்ட முகநூலில் கவி பாடுவதை ஆதாரமாக நினைக்காதீர்கள்.   இந்திய ராணுவத்துடனான உக்கிர யுத்த‍த்தின் பின்னர் 1989 / 90  காலப்பகுதியிலான கலைஞர் ஆட்சி  புலிகள் மீள பலம் பெற  மிகப்பெரிய வரபிரசாதமாக இருந்ததாக அவ்வேளையில் விடுதலைப்புலி உறுப்பினர்களுடனான தனிப்பட்ட உரையாடலிலை அவர்களே தெரிவித்திருந்தார்கள்.  தமிழகத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினரான எனது நண்பனுடன் நான் உரையாடும் போது இந்தியாவில் இருப்பது உனக்கு ஆபத்தில்லையா என்ற கேட்டதற்கு ஈழத்தை விட இங்கு பாதுகாப்பாக உள்ளோம். நடப்பது திமுக ஆட்சி தானே என்று பதிலளித்திருந்தார். 

உங்கள்  கருத்துக்கும்  நம்பிக்கைக்கும்  நன்றி சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். 

 

2 hours ago, Eppothum Thamizhan said:

ஆனால் ஈழத்தமிழர்கள் அவருக்கா கண்ணீர்வடிக்கத்தேவையில்லை

 

2 hours ago, Eppothum Thamizhan said:

அவர் ஈழ விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்.

தமிழருக்கு எங்கு இன்னல் நேரிடினும் , அது உலகத் தமிழர் அனைவருக்கும் வலிக்க வேண்டும். எனவே ' உனக்கு நல்லவன், எனக்குக் கெட்டவன் ' என்றில்லை ; இருக்கக் கூடாது , சகோதரா !  " நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன்; தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன் " (உன்னைப் பகைத்தவன் என்னைப் பகைத்தான் ; தீயவனேயாயினும் உனக்கு வேண்டியவன் எனக்கும் வேண்டியவன்) என ஏதோ பிறவியில் நம்மிடையே நிகழ்ந்த உரையாடலைத்தானே கம்பன் பதிவு செய்தான் ? நினைவில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலஞைரை விடுவோம்.யாழில் நடக்கும் வன்முறைகளுக்கு முழுப் பொறுப்பையும் இராணுவம் மற்றும் சிங்கள புலாய்வுத்துறையை கை காட்டி எமது பிள்ளைகளை காப்பாற்றவோரிடம் வேறு எதை எதிர் பாக்க முடியும்.அவங்கள் எதிரி.நாம தான் எம்மை திருத்த வேணும்.எமக்குத்தானே ஆயிரம் பிரச்சனைகள் இங்கு இருக்கு.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

தலைப்பில என்ன பிழை..? கேள்விக்குறி தானே போட்டிருக்கினம்.

நமக்கு சரிப்படாத தலைப்பு என்றவுடன்.. மனசு சங்கடப்படுகுதோ என்னவோ..??!

கருணாநிதி.. ஈழத்தில் இனப்படுகொலையில்.. துணை நின்றார் என்பது வெளிப்படை உண்மை தானே. இல்ல ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தி எதுக்கு கருணாநிதியின் இறுதிச் சடங்களில் முன்னுக்கு நிற்கனும்..????????! ?

 

“முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்றஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு.”

இதுதான் செய்தியில் விக்கி ஐயா சொன்னதாக உள்ளது. தலைப்பு கேள்விக்குறியோடு இருந்தாலும் தமிழின அழிப்பில் கருணாநிதி என்று தொனிப்பட விக்கி ஐயா சொன்னமாதிரி திரித்துச் சொல்லியிருக்கு. அதாவது இந்த அநாமேதய இணையக்காரர்கள் தங்களுக்கு விரும்பியதை விக்கி ஐயாவின் பெயரில் சொல்லியுள்ளார்கள். இது உங்களுக்கும் புரியும். ஆனால் ஏற்றுக்கொள்ளவா போகின்றீர்கள்!

9 hours ago, விசுகு said:

 

கருணாநிதி  சார்ந்து

ஈழத்தவரிடமுள்ள கவலையை 

விக்கி ஐயா (தமிழரின்  வடக்கு முதல்வர்) தெரிவித்திருப்பது தெரிந்தது

அதனால் தான் பதிந்தேன்.

செய்தியில்  அது பற்றி  இல்லாதுவிட்டால்  நீங்கள்  சொல்வது சரியே.

மேலும்  இணைக்கும் போதே இந்த இணையம்  யாழில் பதிய  தகுதியானதா என்பதை  நானும் யோசித்தேன்

சரியாக  தெரியாதபோது

நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும் என்ற நிலையில்  பதிந்தேன்

 

செய்தியை முழுமையாக வாசித்திருந்தால் தலைப்பில் திரிப்பை விளங்கியிருப்பீர்கள். ஆனால் அதுக்கெல்லாம் நேரம் எங்கே? கலைஞர்  கருணாநிதியை சேறடிக்க கிடைக்கும் வாய்ப்பை விடமுடியுமா என்ன! அதுவும் விக்கி ஐயா பேரில்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.