Jump to content

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்


Recommended Posts

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 

 
 

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

38660584_260950761172804_151977958934839

இம்மாதம் 15 ஆம் திகதி மடுமாதா திருவிழா பக்தி உணர்வு மேலிட நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார். 

போர்க்காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்குள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 

38738350_450771595401367_239956270889566

இருப்பினும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மடு பிரதேசத்தில் இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின் போது மடு தேவாலயமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பகுதியில் தஞ்சமடைந்த பலர் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள். 

இறுதி நேரம் வரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அபயமளித்து அடைக்கலம் வழங்கிய மடு அன்னையும் தீவிரமடைந்த யுத்த மோதல்கள் காரணமாக பாதுகாப்புக்காக இடம்பெயர நேர்ந்தது.

அந்தநேரம் பாதுகாப்பை முன்னிட்டு மடு அன்னையின் சொரூபத்தை வடமேற்குக் கரையோரக் கிராமமாக்கிய தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்ல நேர்ந்ததாக அந்த வேளையில் மடு பரிபாலகாராகப் பணியாற்றிய அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடு ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு, மடு மாதா ஆலயம் சிறப்புற செயற்படத் தொடங்கியது. 

யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மற்றும் இந்து சமய மக்களும் மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுவதாகவும் அவர் கூறினார். 

38655891_849441291927707_695250103507196

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவின்போது 9 நாட்களும் ஆலயத்தில் கூடித் தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் பாம்பு போன்ற விஷம் தோய்ந்த உயிரினங்களினாலோ அல்லது வன விலங்குகளினாலோ பக்தர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதில்லை என்பது அன்னையின் அருளுக்கு அடையாளமாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இத்தகைய சிறப்பு மிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவின் கொடியேற்ற வைபவத்தில் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளையிடம் இருந்து மடு பரிபாலகர் பொறுப்பை ஏற்கவுள்ள அருட்தந்தை பெப்பிசோசை உள்ளிட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவான பக்தர்களும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

http://www.virakesari.lk/article/37984

Link to post
Share on other sites

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா

 

 
 

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

39070702_333928890481914_849034952606482

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கின்றனர்.

39127253_246561082660902_300927629200562

இன்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஆரம்பமாகி ஒப்பக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

39177572_885407088318114_161672971432230

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

39266583_219380078739133_494351480516929

மடுத் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான அனைத்து இன பக்தர்களும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/38493

Link to post
Share on other sites

மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு 

 

 

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

ma.jpg

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இன்று புதன் கிழமை காலை 6.30 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் கெரல்ட் அன்ரனி பெர்னாண்டோ , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

ee.jpg

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்டது. மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக போது மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,ரவி கருநாநாயக்க உற்பட அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நீதிபதிகள், வைத்தியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

r.jpg

a.jpg

மேலும் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மன்னார் ஆயரிடம் கையளித்தார்.

இதேவேளை மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் அறிவிப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று  புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38515

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தோஷம் முதல் நீக்கின் குற்றம் நடு நீக்கின் வறுமை
    • இரணைதீவில் கடற்படையினர் தோண்டிய குழியை இன்று மூடினர் அப்பகுதி மக்கள்.!   இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கடற்படையினர் தோண்டிய குழியை அங்குள்ள மக்கள் இணைந்து இன்று மூடினர். கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவை அரசு தெரிவு செய்துள்ளமைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் அரசின் இந்த முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர். கொரோனாவால் மரணிப்போரின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் அரசின் இனவெறிச் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விமர்சித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு ஏடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. இது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/03/02/23219/
    • இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கையை ஆதரிக்க வேண்டும் - கெஹலியவும் கோரிக்கை.! ஐ.நா. விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை தொடர்பான பிரேரணையில் இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அரசால் ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். http://aruvi.com/article/tam/2021/03/02/23223/
    • மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்தி தனித்தமிழீழம் உருவாக இடமளிக்க வேண்டாம்! - சரத் வீரசேகர வலியுறுத்து.! பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசு வழங்கக்கூடாது; தனித்தமிழீழம் உருவாக இடமளிக்கக்கூடாது." - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் அதில் தெரிவிக்கப்படும் பரிந்துரைக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். இது ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கும் பணிவான வேண்டுகோள். நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தலொன்று தேவையற்ற விடயம். இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சி இலங்கையில் அவசரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது என்ற செய்தி வெளியில் வரக்கூடாது. இதைக் கவனத்தில்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசு செயற்பட வேண்டும்" - என்றார். http://aruvi.com/article/tam/2021/03/03/23226/
    • சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி: ஈழத்தமிழ்ச் சிறுமியின் தமிழின அடக்குமுறையை பிரதிபலிக்கும் ஓவியம் முதலிடம்.! சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று அதன் 19ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இவ்வாறு போட்டியில் பங்கேற்றிருந்த ஆயிரம் பேரில் ஒருவராக ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு என்ற புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமியும் பங்கேற்று ஓவியத்தை வரைந்திருந்தார். ஈழத்தில் தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறைகளையும் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனவழிப்பு செயற்பாடுகளையும் தனது ஓவியத்தின் ஊடாக சிறந்த முறையில் வெளிப்படுத்தி பார்ப்போரது மனங்களில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தை வரைந்துள்ளார் அபிர்சனா தயாளகுரு. குருந்தூர்மலையில் ஆதிகாலம் முதல் இருந்த ஆதிசிவனை அப்புறப்படுத்திவிட்டு புத்தர் சிலையை நிறுவியுள்ள காட்சியை தத்ரூபமாக வரைந்து இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறலையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் நடத்தும் நீதிகோரிய போராட்டத்தை வெளிப்படுத்தியும், போரின் இறுதிக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்வது உள்ளிட்ட தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் காட்சி, போரின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி என ஈழத் தமிழினம் சந்தித்த, சந்தித்து வரும் அடக்குமுறைகளையும், அழித்தொழிப்புகளையும் உயிரோட்டமாக தனது ஓவியத்தில் கொண்டு வந்திருந்தார் சுவிட்சர்லாந்து வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமி அபிர்சனா தயாளகுரு. ஆயிரம் போட்டியாளர்களின் ஓவியங்களுக்கு மத்தியில் அபிர்சனாவின் குறித்த ஓவியம் முதலாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/03/03/23227/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.